Nov 9, 2018

ஈடிணையற்ற இறைவா!

(மூலம்: ஆயத்துல் குர்ஸி /அல் குர்ஆன்: 2:255)
அல்லாஹ்!
ஊனுருகி, உடல் குறுகி,
உயிரொடுங்கி, உளம் நடுங்கி,
வணங்கிட ஒருவன்...
அவனைத் தவிர யாருமில்லை !

உயிர்த்திருக்கும் அவன்
என்றும் நிலைத்திருப்பவன்;
உணர்வுகளில் நித்தம்
மிகைத்திருப்பவன்!

சிறு துயிலோ
மடியோ
மதியழிக்கும் மயக்கமோ;
சுணக்கமோ
சுயமிழக்கும் சோம்பலோ
அவனை அணுகா!

வானங்களில், பூமியினில்
வளி மண்டல நிரப்பிடத்தில்
விண்வெளியில், வெற்றிடத்தில்
சிந்தைக்கு எட்டாத
அண்ட சராசரத்தில்
உள்ளவை யாவும்
உரியன அவனுக்கே!

அவன் ...
ஆட்சி அதிகாரத்தில்
அகிலம் காக்கும் ஆளுமையில்
படைப்பதில், பரிபாலிப்பதில்
விதிப்பதில், கொடுப்பதில்
காப்பதில், கற்பிப்பதில்
அவன் அனுமதியின்றி
பரிந்துரை செய்வோர்
பாருலகில், வேறுலகில் யாருளரோ?

ஒவ்வோர் உயிரும்
உருவாகு முன்னரும்
உயிர் வாழ்ந்த பின்னரும்
இரண்டின்
இடைப்பட்ட
எல்லா அசைவிலும்
யாவையுமறிந்த
ஞானமிக்கவன்

கணித்தறிந்துவிட முடியாத
அவன் தன்
அளப்பரிய ஞானத்திலிருந்து
அணுவளவேனும் யாரும்
அவன் நாட்டமின்றி
அறிந்திடல் இயலாது!

எப்பரிமாணம் கொண்டும்
எடுத்தியம்பிட இயலாத
எல்லைகளுள் அடங்காத
இறையாசனம்
வானங்களுக்கும் பூமிக்குமாய்
வியாபித்திருப்பதாகும்!

வானங்களும் பூமியும்
அவ்விரண்டினையும்
இன்னும்
எவருக்கும் எட்டாத
ஏகாந்த இருப்புகளையும்
எடுத்தாள்வது
எம்மிறையாம் அவனுக்கு
யாதொரு பொருட்டுமில்லை
எந்தவொரு சிரமமுமில்லை

அவன் ...
கற்பனைகளுக்கோ
காட்சிகளுக்கோ எட்டா
உயர்ந்தவன்;
கணக்கீடுகளுக்குள்ளோ குறிப்பேடுகளுக்குள்ளோ அடங்காப்
புகழுக்குரிய அவன்...
மாண்பு மிக்கவன்!

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

Feb 3, 2018

சிரியாவில் அமெரிக்காவின் திட்டத்தை நடைமுறைபடுத்துவதில் எர்டோகனின் எரிச்சல்

அமெரிக்கா சிரியாவில் அதன் திட்டத்தை செயல்படுத்த எர்டோகனை (துருக்கியை) கொண்டுவருவதில் வெற்றி கண்டுள்ளது. எர்டோகன், அமெரிக்கா சிரியாவில் குருதிஸ்களுக்கு ஆதரவாக உள்ளதால் அதன் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெள்ளியன்று சிரியாவின் ஆப்ரின்(Afrin) பிராந்தியத்தில் துருக்கியின் பீரங்கிகள் மற்றும் இராணுவ தடவாளங்கள் தரைமட்டமாக்கபட்டன. துருக்கி உள்துறை அமைச்சர் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் போராளிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஒன்றை அறிவித்தார். அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக ஏழு ஆண்டுகால யுத்தத்தால் சிதைக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தை இன்னும் நிலைகுலைய செய்ய அது அச்சுறுத்தியது.
சிரியாவில் அஸ்ஸாதின் தலைமையால் முழு சிரியாவையும் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. எனவே அமெரிக்கா மீண்டும் ஒரு திட்டத்தை தீட்டுகிறது. சிரியாவின் வடமேற்கு பகுதியில் அஸ்ஸாதிற்கு எதிராக போராடும் குழுக்களை கட்டுபடுத்துவதற்கு அமெரிக்காவிற்கு துருக்கியின் உதவி தேவைப்படுகிறது, ஏற்கனவே அலப்போவில் முஸ்லிம் போராளிகளை துருக்கி இராணுவம் அடக்கி ஒடுக்கி கொன்று குவித்ததால் இம்முறையும் அவ்வாறு செயல்பட அமெரிக்கா துருக்கியை உதவிக்கு அழைக்கிறது.
சிரியாவில் அஸ்ஸாதின் திறனற்ற செயலற்ற தன்மையால் ஈரானும் ரஷ்யாவும் அவர்களை(முஸ்லிம்களை) இடமாற்றம் செய்தது. குப்ரை தலைமையாக ஏற்றாலோ அல்லது குப்ர்க்கு ஆதரவாக செயல்படும்வரை முஸ்லிம்கள் ஒரு போதும் வெற்றி அடைய மாட்டார்கள். முஸ்லிம்கள் தங்கள் நாடுகளிலுள்ள காபிர்களுக்கு எதிராகவும் குப்ர்க்கு ஆதரவாக செயல்படும் அட்சியாளர்களை எதிராக உறுதியாக தீரத்துடன் போராட வேண்டும்.
இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மட்டுமே உலக முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து அவர்களை அமைதியாக வாழ வைக்கும். அத்தகைய அறிவார்ந்த தலைமைக்கு சத்திய பிரமாணம் செய்வதின் மூலம் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

அப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்

இழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து


பாலஸ்தீன மத்தியக் குழுவின் கூட்டம் 15/1/2018, திங்களன்று முடிவுற்றது, அதன் இறுதி தீர்மானமானது சர்வதேச சட்டம் மற்றும் அமைதிக்கான அரபு நாடுகளின் முயற்சியின் அடிப்படையில் 1967ல் வரையப்பட்ட எல்லைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாமல் பாலஸ்தீன அரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அதன் தலைநகரம் கிழக்கு ஜெரூசலேமாக இருக்க வேண்டும் எனவும் சர்வதேச தலைமையில் அமைதிக்காக வேண்டி உண்மையாக நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ள வேண்டும் என கோரியது. அது ஓஸ்லோ உடன்படிக்கையின் காலம் முடிந்துவிட்டது எனக் கருதி பி.எல்.ஓ மூலமாக இந்த யூத அரசாங்கத்தின் (சட்டவிரோத) அங்கீகாரத்தை ரத்து செய்யவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை ரத்து செய்யவும் மற்றும் இந்த ஆக்கிரமப்பாளருடனான பொருளாதார சார்பு நிலையை துண்டித்து விடவும் பரிந்துரை செய்தது.


பாலஸ்தீனத்திலுள்ள ஹிஸ்புத்தஹ்ரீரில் உள்ள நாங்கள் பாலஸ்தீன அரசின் தலைவர் என்ன பேசினாரோ அதனையும் பாலஸ்தீனத்தையும், அதன் மக்களையும் அதன் கண்ணியத்தையும் இழக்க வைத்த இந்த துரோகமிழைக்கும் அணுகுமுறையை பாலஸ்தீன அரசும் அதன் நிறுவனங்களும் தொடர்ந்து கடைபிடிக்கும் போக்கை வலியுறுத்தும் இந்த மசோதாவையும் கண்டிக்கிறோம். இந்த தீர்மானமானது பாலஸ்தீனர்களின் எதிர்காலத்தை உம்மத் மீதும் பாலஸ்தீன மக்களின் மீதும் பகைமையை கொண்டுள்ள பெரும் சக்திகளிடம் பிணையாக ஆக்கியுள்ளது. இந்த யூத அரசை (சட்டவிரோத) அங்கு நிர்மாணித்து, நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கி மற்றும் அநீதமான சர்வதேச தீர்மானங்கள் நிறைவேற்றுவதன் மூலம் அதற்கு ஆதரவளித்து வந்தது இந்த சக்திகள் தான். அதேசமயம் பாலஸ்தீன அரசாங்கம் பாலஸ்தீனத்தின் விடுதலை குறித்தான கோரிக்கையை முழுமையாக கைவிட்டுவிட்டு உம்மத்தையும் அதன் ராணுவங்களையும் அவ்வாறே செய்யுமாறு கோருகிறது.


இவ்விஷயத்தில் கீழ்வருனவற்றை நாம் வலியுறுத்துகிறோம்:


ஜெரூசலேத்தின் விஷயத்தில் அமெரிக்கா தனது தீர்மானத்தை நிறைவேற்றி ஓங்கி அறைந்து மற்றும் இந்த நூற்றாண்டின் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்கு பின்னர் பாலஸ்தீன அரசாங்கத்தின் தீர்மானங்கள் அவர்கள் அமெரிக்க எதிர்ப்பு வாக்கு வன்மையிலிருந்து விலகிச் சென்றுள்ளதை தெளிவாகக் காட்டுகிறது. இந்த தீர்மானங்கள் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மற்றும் விருப்பங்களுக்கு அடிபணிந்துள்ளதாக இருக்கின்றது, அது இந்த அரசு ஓஸ்லோவை புதைப்பதிலிருந்தும் யூத அரசாங்கத்தை (சட்டவிரோத) அங்கீகரிக்க மறுத்த நிலையிலிருந்தும் பின்வாங்கச் செய்தது, மற்றும் ஓஸ்லோ நிருவப்பட்ட இடைநிலை கால அவகாசம் முடிவுற்றதை மட்டுமே அறிவித்தது மற்றும் இந்நிறுவனத்திடம் அதன் அங்கீகாரத்தை நிறுத்திவைக்குமாறு பரிந்துரைத்தது. இந்த தீர்மானங்களானது இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பாலஸ்தீன மக்கள் மீது விரோதத்தை கொண்டிருக்கும் நாடுகள் ஏற்படுத்திய அமைதிக்கான தீர்மானங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் மாநாடுகளை பின்பற்றியதாக இருந்தது. இந்த அமைதி நடவடிக்கை மற்றும் துரோகமிழைக்கும் ஒப்பந்தங்களானது பாலஸ்தீன மக்களுக்கு பேரழிவையும் குற்றங்களையும் இழைப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது அது மேற்கு ஜெரூசலேம் உட்பட பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை முழுவதுமாக யூதர்களுக்கு உரியதாக ஆக்கியுள்ளது அதேவேளையில் மீதமுள்ளவை (நிலப்பரப்பு) குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்றும் அது பாலஸ்தீன அரசாங்கத்தையும் அதன் பாதுகாப்பு அமைப்புகளையும் யூத அரசுடைய (சட்டவிரோத) பாதுகாவலராக ஆக்கியுள்ளது; எவ்விதமான பாதுகாவலர் என்றால் இந்த ஆக்கிரமிப்பின் பாதுகாப்பு, நிதி, பொருளாதார மற்றும் அரசியல் பலுவை சுமந்ததாகவும் பாலஸ்தீன அரசாங்கத்தின் தலைவர்கள் இதை அங்கீகரித்ததன் மூலம் இந்த ஆக்கிரமிப்பை வரலாற்றின் மலிவான ஆக்கிரமிப்பாக ஆக்கியுள்ளது, தினசரி உயர்ந்து வரும் வரிகளுக்கு பாலஸ்தீன மக்கள் தங்களுடைய உதிரங்களை கொண்டும் தங்களுடைய குழந்தைகளின் வாழ்வாதாரத்தை விலையாகவும் கொடுத்து வருகின்றனர்….


இருநாடு உருவாக்கம் எனும் தீர்வை கடைபிடிப்பது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கும் அவர்களுடைய உதிரங்களுக்கும் தியாகங்களுக்கும் இழைக்கும் துரோகமாகும். இத்தீர்வானது ஆக்கிரமிப்பாளருக்கு ஜெரூசலேத்தின் பெரும்பகுதி உட்பட 80% நிலப்பரப்பை வழங்கி பலப்படுத்துவதாகவும், பாலஸ்தீன அரசாங்கத்துக்கு “கிழக்கு ஜெரூசலேம்” என்று அவர்களால் அழைக்கப்படுவது உட்பட சிரிய அளவிலான 20% நிலப்பரப்பை வழங்குவதாக இருக்கின்றது”; சந்தேகமில்லாமல் அவர்கள் தீர்மானித்திருப்பது தீங்கை விளைவிக்கக்கூடியதை தான்! பாலஸ்தீன அரசாங்கமும், மத்தியக் குழுவும், பாலஸ்தீன விடுதலை இயக்கமும் அதன் பிரிவுகளும் விடுதலை அடைவது (பாலஸ்தீனத்தின்) எனும் கருத்தை முழுமையாக கைவிட்டுள்ளன மற்றும் அதன் அகராதி மற்றும் சொல்லகராதியிலிருந்து நீக்கியுள்ளன. அது விடுதலை அடைவதற்கான ஒரே வழியை அதாவது உம்மத்துடைய இராணுவங்களை அணிதிரட்டி அதன் அனைத்து சக்தி மற்றும் திறன்களை இந்த யூத அரசை வேரோடு அழிப்பதற்காக வேண்டி தீர்க்கமான போர் ஒன்றை புரிவதை நோக்கி இயக்க வேண்டும் என்பதை அகற்றியுள்ளது. மாறாக அது குற்றம் புரிந்த நாடுகளின் நரிகள் அதற்கு சர்வதேச அளவிலான பாதுகாப்பைத் தரவேண்டும் என கோரிக்கையை கொண்டுள்ளது; ஆக, பாலஸ்தீனம் மீதான யூத ஆக்கிரமிப்புக்கு கூடுதலாக சர்வதேச ஆக்கிரமிப்பு ஒன்றையும் சேர்த்துள்ளது. சந்தேகமே இல்லாமல் அவர்கள் தீங்கை தான் தீர்மானித்திருக்கிறார்கள்! இஸ்லாமிய உமமத்தின் உதிரமானது அதன் நரம்புகளில் கொதித்துக் கொண்டிருக்கிறது என்பதை பாலஸ்தீன அரசாங்கம், அமெரக்கா, ஐரோப்பா மற்றும் யூத அரசாங்கம் (சட்டவிரோத) ஆகியோருக்கு நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்.


நீங்கள் சார்ந்திருக்கும் ஆட்சியாளர்களையும் அவர்களுடைய கீழ்படுதலையும் மற்றும் உங்கள் மீதான அவர்களது விசுவாசத்தையும் துடைத்தெரியும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உம்மத் அல்லாஹ்வின் ஆணையைக் கொண்டு வெகுவிரைவில் இவர்களை தூக்கியெறிந்து நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபா ராஷிதாவை நிறுவும்; அது இவர்களை வேரோடு தூக்கி எறிந்து ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் அனைத்து முஸ்லிம் தேசம் என முழுவதையும் விடுவித்து மற்றும் அமெரிக்காவையும் மேற்கத்திய நாடுகளையும் அவர்களுடைய உறைவிடத்திற்கு துரத்திவிடும் மற்றும் துரோகமிழைத்த அனைவருக்கும் தண்டனை வழங்கும்.


அந்நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்போருக்கு அந்நாள் வெகு அருகில் உள்ளது.


“நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.) (அல்குர்ஆன் : 65:3)

Jan 30, 2018

பதிவுகள் தொடரும்...!!

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே...!!!


முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்டுரைகள், ஆய்வுகள், கண்ணோட்டம் என்று அனைத்து பதிவுகளும் ஒரே தளத்தில்
விரைவில் தொடர இருக்கிறது. தொடர்ந்து வந்து வசித்து செல்லும் அன்பு சகோதர்களே உங்கள் ஆதர்வுகளே தந்து இங்கு நீங்கள் படிக்கும் செய்திகளை மற்றவர்க்கும் பகிருங்கள்.

இன்ஷா அல்லாஹ்
என்றும் அன்புடன்
அபு நுஸைபா

Sep 10, 2016

எனது ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்கினிய சகோதரர்களே!

நமது இஸ்லாமிய மறுமலர்ச்சி இணையதளம் 7 ஆண்டு பணியை நிறைவு செய்து, 8 ஆம் ஆண்டு இணையப் பணியில் கால் எடுத்து வைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.


இன்ஷா அல்லாஹ்... விரைவில் islamicuprising.blogspot.com என்ற முகவரியில் செயல்படும் இந்த இணையதளம் www.islamicuprising.com என்று செயல்பட இருக்கிறது.

ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாளை கொண்டாட இருக்கும் உறவுகளை ISLAMIC UPRISING BLOG வாழ்த்துகிறது: ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் இறைத் தூதர்களான இப்றாஹிம் (அலை), அவரது மனைவி ஹாஜரா (அலை), இவர்களது மகனான இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் நாளாகும். அதேவேளை ஹஜ் கடமையானது ஒரு சர்வதேச மாநாடாகவும் அமைந்திருக்கின்றது.

ஹஜ் என்ற சர்வதேச மாநாட்டில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் முஸ்லிம் உம்மாவின் உறுப்பினர்கள் மக்காவில் ஒன்றுகூடி ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றனர். இன , மொழி, நிற , பிரதேச , தேச வேறுபாடுகள் புறக்கணித்து ஒரே விதமாக ஒரேநேர காலத்தில் வெள்ளை நிற ஆடை அணிந்தபடி தம் கடமையை நிறைவேற்றுகின்றார்கள். இவைகள் முஸ்லிம் உம்மாவிற்கு ஒன்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் கற்றுகொடுக்கின்றது. இவற்றை நினைவில் கொண்டு ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட உங்கள் அனைவரையும் Islamicuprising.blogspot.com
வாழ்த்துகின்றது.

Sep 7, 2016

10 லட்சத்திற்கும் மேலான பெல்லட் குண்டுகள் கஷ்மீர் மக்கள் மீ்து பிரியோகித்துள்ளது

கஷ்மீரில் 10 லட்சத்திற்கும் மேலான பெல்லட் குண்டுகளை மக்கள் மீ்து பிரியோகித்துள்ளதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
 
உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு ஆறு லட்சம் ராணுவ படையை இரக்கி இந்திய அரசு கஷ்மீரை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அது மட்டுமின்றி கஷ்மீர் மக்களின் மீது ஆயுதங்கள் பிரயோகிப்பதும் எப்போதையும் வீட கடந்த மாதங்களில் அதிகரித்துள்ளது (பாகிஸ்தான் செய்தி நிறுவனம் – தி நியூஸ்)
 
கடந்த 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட் குண்டுகளை சாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரயோகப்படுத்தியதாக இந்திய துணை ராணுவம் ஜம்மு-கஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன் ஒப்புக் கொண்டுள்ளது.
 
மேலும் அந்த அறிக்கையில் 8000 கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் 2000 பிளாஸ்டிக் பெல்லட் குண்டுகளும் பிரயோகித்துள்ளதாக  குறிப்பிடபட்டுள்ளது.
 
சாமானிய முஸ்லிம்கள் உலகெங்கிலும் பல நாடுகளில் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் பலபயங்கர இன்னல்களையும், அச்சுருத்தல்களையும் சந்தித்து வரிகின்றனர் எனினும் முஸ்லீம் நாடுகளின் ராணுவம் தங்களது இருப்பிடங்களைவிட்டு  நகருவதில்லை..
 
 
 
செய்தி பார்வை 20.08.16

ஏமன் மீதான போர்

ஏமன் மீதான போரில், சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைப்பதாக அறிவித்துள்ளது.
 
ஒபாமாவின் யுக்தியை அமெரிக்கா தொடர்கிறது, தொலைவிலிருந்து போர்களை இயக்கும் அந்த யுக்தியின் அடிப்படையில் சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களை அமெரிக்கா குறைத்துள்ளது. (செய்தி – ரியுடர்ஸ்)
 
கூட்டுப்படை போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புதல், உளவு செயதிகள் பரிமாற்றம் போன்றவற்றை சவுதி அரேபியாவோடு ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்காக அமெரிக்கா கடந்த ஆண்டு “ஜாயின்ட் கம்பைன்ட் பிளானிங் செல்” என்ற செயல்திட்டதை தொடங்கியது, இதில் தற்போது ஐந்திற்கும் குறைவானவர்களே பனியமர்த்தபட்டுள்ளார்கள் என்று அமெரிக்காவின் கடற்படையின் செயதிதொடர்பாளர் லெஃப்டினன்ட்  இயன் மேக் கன்னகெய் பஹ்ரைனில் ரியுடர்ஸ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
இந்த பணிக்காக சவூதி தலைநகர் ரியாத் உட்பட பல இடங்களில் ஆமாரத்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 45 லிருந்து 5 ஆகா குறைக்கப்படுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இவ்வாறு அமெரிக்க ராணுவத்தினர்களின்ண் எண்ணிக்கை குறைக்கப்பட்டும் ஏமனில் தொடுக்கப்படும் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. இது தொடர்பாக குவைத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தீர்வின்றி முறிவுற்றதால் ஏமன் மீதான சவுதியின் தாக்குதல் தீவிரமடயக்கூடும்.
 
முஸ்லீம் நாடுகளில் அமெரிக்கா நேரடியாக் இறங்கி போர் புரியும் நம்பிக்கையை இழந்துவிட்டது, அதனால் மற்ற தோழமை நாடுகளின் உதவியின் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்று வருகிறது. அமெரிக்காவின் இந்த நிலமையை எப்போது உலகம் கண்டறிந்து புரிந்துகொள்ளும்?
 
 
செய்தி பார்வை 20.08.16

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பு

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பை அமெரிக்கா வழங்குகிறது.
 
இஸ்லாம் மற்றும் முஸ்லிம் மகளுக்கு எதிராக சிரியாவில் நடந்துவரும் போரில் அமெரிக்கா தனது திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது, ஏதாவது ஒரு வகையில் தனது அதிகார வரம்பை மீறி செயல்கள் போகும் பட்சத்தில் அமெரிக்கா தனது படையை உபயோகிக்க தயராகவுள்ளது. ( செய்தி – 19/8/2016  தி நியூயார்க் டைம்ஸ்)
 
குர்து போராளிகள் சிரியாவின் வடகிழக்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இவர்கள் அமெரிக்காவுடன் இனைந்து ISIS ஐ எதிர்த்துவருகிறார்கள். சிரியாவின் பஷார் அல் அசாத் அரசின் விமானம் குர்து போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தாக்கியதை கண்டித்து அமெரிக்கா உடனடியாக தனது விமானத்தை அந்த நிலப்பரப்பின் மேல் பரக்க செய்து குர்துகள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பென்டகன் செய்தி தெரிவித்துள்ளது. சிரியாவின் பஷார் அரசுக்கும், குர்து போராளிகளுக்கும் இடையே அவ்வப்போது சில சிறிய மோதல்கள் நடந்துள்ளதே தவிர இவ்விருவருக்கும் இடையே பெரிய அளவிலான போர் நடைபெறாத நிலையில் இந்த விமான தாக்குதலை சிரியா அரசு குர்துகள் மேல் தொடுத்துள்ளது.
 
அமெரிக்கா இது போன்ற உதவிகளை சிரியாவில் உள்ள மற்ற எந்த போராட்ட குழூக்களுக்கும் வழங்கவில்லை, இஸ்லாமிய போராட்ட குழூக்கள் அமெரிக்காவின் செயல் திட்டங்களை ஏற்கமருப்பதாலும் இஸ்லாத்தைமையமாக வைத்து செயல்படுவதாலும் அந்த போராட்ட குழுக்களுக்கு எதிராகவே அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
 
 
செய்தி பார்வை 20.08.16

சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வி

 
சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வியை அடுத்து  ரஷ்யா, முஸ்லிம்களுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது .
 
 ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிரியா மற்றும் ரஷ்ய ராணுவதாள் அலெப்போவில் ஏற்படுத்தப்பட்ட முற்றுகையை அங்குள்ள பல இஸ்லாமிய போராட்ட குழுக்கள் இனைந்து உடைத்தார்கள். இதில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து ரஷ்யா மதியதரைகடலில் நிறுதிவைத்துள்ள போர்க்கப்பல் மூலமாகவும், ஈரனிலுள்ள விமானதளத்தை பயன்படுத்தி  விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும் தனது தாக்குதலை சிரியாவிலுள்ள முஸ்லிம்கள் மீது தீவிரப்படுத்தியுள்ளது.
 
சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்காக போராடும் முஸ்லிம்களை எதிர்த்து முதல் முறையாக ரஷ்யா போற்கப்பல் மூலம் ஏவுகணை தாக்குதலை தெடுத்துள்ளது.
 
இது போன்ற பலமுனை தாக்குதல் நடவடிக்கையை  மேற்கொள்வதன் மூலம் ரஷ்யா தனது ராணுவ திறனை நிரூபித்து சிரியாவில் தனது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்த முயல்கிறது. இதற்கு முன் சிரியாவில் லடாகியவில் உள்ள தனது ராணுவதளத்திலிருந்தும், காஸ்பியன் கடலில் நிறுத்தி வைத்துள்ள போர்க் கப்பல்கள் மூலமும் சிரியாவின் கொடுங்கோல் அரசுக்கு ஆதரவாக அங்குள்ள முஸ்லிம்கள் மீது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது கூடுதலாக மத்திய தரைகடலில் நிறுதிவைத்துள்ள  போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகள் மூலமும், ஈரானின் விமான தளங்கலில் இருந்து போர் விமானங்களை பயன்படுத்தி குண்டுமலைகலை பொழிந்தும் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவின் முழு அனுமதியின் பெயரில் நடந்துவருகிறது, சிரியாவில் இஸ்லாத்திற்கு ஆதரவான போராட்டத்தை ஒடுக்க ஈரானின் ராணுவதளத்தை ரஷ்யா பயன்படுத்தும் அளவிற்கான ஒரு சுமூக போக்கையும் அமெரிக்கா அனுமதித்துள்ளது.
 
சிரியாவில் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யா ஒருபுறம் அமெரிக்காவின் கொள்கைக்கு இணங்க செயல்படுவதால். கிரிமியா தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு வழிவிட்டுள்ளது
 
 உக்ரைனுடைய எல்லைகளுக்கு அருகில் பத்தாயிரம் வீரர்களை உள்ளடக்கிய ரஷ்யபடை நகர்த்தப்பட்டிருப்பதை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை, மேலும் பென்டகனோரஷ்யாவின் இந்த நகர்வை வழக்கமான பயிற்சி நடவடிக்கை தான், அதனால் உக்ரைனின் இறையாண்மைக்கும், எல்லைக்கும் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளது.
 
 
செய்தி பார்வை 20.08.16

Sep 6, 2016

கிலாஃபத் ஜனநாயக அமைப்பையோ அல்லது சர்வாதிகார அமைப்பையோ கொண்டதாக இருக்குமா?

இஸ்லாமிய அரசு இவை இரண்டையும் கொண்டிருக்காது.  மேற்கத்திய காலனியாதிக்க சக்திகள் தேர்தல் முறைதான் ஜனநாயகம் என்று தொடர்பு படுத்திவிட்டார்கள், ஆனால் இந்த விஷயத்தின் உண்மை நிலை அதுவல்ல. கிலாஃபத்தில் கலீஃபா உட்பட பல்வேறு பதவிகளுக்கு நபர்களை தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெறும், ஆனால் இவர்களில் ஒருவருக்கு கூட ஜனநாயகத்தில் இருப்பது போன்று தனி நபராகவோ அல்லது ஓரு கூட்டாகவோ சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்காது. அஃதாவது இது மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அதே சமயம் அவர்களால் ஷரீ’ஆவிற்கு மாறுபட்டு ஆட்சியாளர்கள் எவ்வித விசாரணைக்கும் தண்டனைக்கும் ஆளாவதிலருந்து விடுவிப்பது போன்ற கறைபடிந்த சட்டங்களை அவர்களால் இயற்ற முடியாது என்பதை விளக்குகின்றது. 6
நடைமுறை உபயோகத்தில், சர்வாதிகார ஆட்சி அமைப்பு என்பது அதன் தலைமையை சட்டமோ, அரசியல் அமைப்போ அல்லது இதர உள்நாட்டிலுள்ள சமூக மற்றும் அரசியல் காரணங்களும் அதன் வரையறைக்கு  கட்டுப்படுத்தாத ஒரு ஏகாதிபத்திய தன்மையுடையதை குறிக்கின்றது. இது இஸ்லாமிய சட்டத்திற்கு மாற்றமானதாக இருக்கின்றது ஏனெனில் கலீஃபா தனது செயல்பாடுகளை சில வரையறைக்குள் அமைத்து கொள்ளும்படியும் அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதை சரிகாணும் செயல்பாட்டை கொண்டிருக்கும் அது அவரின் அதிகாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும். கலீஃபா சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார், அவரும் மற்ற எல்லா குடிமக்களை போன்று அதற்கு கட்டுப்பட்டவராகவே இருப்பார்.
 
http://sindhanai.org/

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குறை கூறியதால் பாகிஸ்தான் அதிர்ப்தி

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குற்றம் சாட்டியதால் பாகிஸ்தான் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய அரசை நிலைபெரச்செய்வது குறித்த பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த குற்றச்சாட்டால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் உள்ள அதிகாரிகள் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தனது அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை மற்றும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொல்வதாகவும், மற்ற தீவிரவாத அமைப்புகளான ஹக்கானி குழு உட்பட பல குழுக்களுக்கு அது அடைக்கலம் அளிப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. (செய்தி – வாய்ஸ் ஆப் அமெரிக்கா)
ஒபாமா அரசு, மாணிய அடிப்படையில் பாகிஸ்தானுக்கு விற்கவிருந்த F 16 போர் விமான ஒப்பந்தத்திற்கும் அமெரிக்க பாராளுமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
அண்மையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் “பாகிஸ்தான் நட்பு நாடா அல்லது எதிரி நாடா” என்ற தலைப்பில் நடந்த விவாதம் பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசுகையில், அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய ஆப்கனிஸ்தான் அரசுக்கு எதிராக இயங்கிவரும் ஹாக்கணி, தாலிபான் போன்ற குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. ஆகையால் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்துவரும் பொருளாதாரம் மற்றும் இராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை பதிவுசெய்தனர்.
ஆப்கனிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதரான ஸல்மே கலில்ஜாத் அமெரிக்கா, வட கொரியாவை கையாளுவதை போல் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் ஆப்கனிஸ்தானில் தனக்கு சாதகமான நாடவடிக்கைகளை சாதித்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
எனினும் பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த பாகிஸ்தானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிறிய பிரிவினரால் எழுப்பப்பட்ட அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறிவிட்டனர். (செய்தி – பிஸ்னஸ் ரேகார்டர்)
செய்தி கண்ணோட்டம்:
அமெரிக்காவின் குற்றச்சாட்டால் பாகிஸ்தான் ஆச்சரியபடவோ, அதிருப்தி அடையவோ ஒன்றும் இல்லை. அமெரிக்காவை பொறுத்தவரை, ஆசியாவில் தனது முதன்மை ஏஜென்டாக இந்தியாவை நிலைநிறுத்த பாகிஸ்தானை பணயமாகவே பயன்படுத்துகிறது. மேலும் பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் நாடு என்பதால் அங்கு எப்போது வேண்டுமானாலும் இஸ்லாமிய அரசான கிலாபா நிறுவப்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டவாறே அமெரிக்கா செயல்படுகிறது.
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்

“மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்”
மாட்டு இறைச்சி வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தால் இரண்டு முஸ்லிம் பெண்கள் மத்திய பிரதேசத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அப்பெண்களிடம் அதிக அளவிலான மாட்டு இறைச்சி இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பெண்களை கைது செய்யும் தருணத்தில் ஒரு கும்பல் அவ்விரு பெண்களையும் “கோமாதா வாழ்க” என்ற குரலோடு காவல் துறை முன்னிலையில் தாக்கினார்கள் (NDTV செய்தி அறிக்கை).
மத்திய பிரதேசத்தில் உள்ள மண்ட்ஸுர் ரயில் நிலையத்தில் முஸ்லீம் பெண்கள் தாக்கப்பட்ட வீடியோ காட்சி உள்ளூர் தொலைக்காட்சியிலும், NDTV செய்தியிலும் ஒளிபரப்பானது . காவல் துறையினர் அந்த பெண்களிடம் பறிமுதல் செய்த இறைச்சியை சோதனை செய்ததில் அது பசு இறைச்சி அல்ல எருமை மாட்டின் இறைச்சி என்றும் தெரிய வந்தது . ( இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி)
ஆனாலும் அப்பெண்களிடம் தகுந்த உரிமம் இல்லாததால் அவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் இந்து மக்கள் பசு மாட்டை புனிதமாக கருதுகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் பசுவை அறுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
சென்ற மாதம் பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் பசுவை அறுத்ததாக கூறி 4 தலித் இனத்தை சேர்ந்தவர்களை ஆடைகளை அவிழ்த்து காரில் கட்டிவைத்து ஒரு இந்து கும்பல் கடுமையாக தாக்கியதால் தலித் மக்கள் போராட்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி கண்ணோட்டம்:
இந்திய அரசியல் வாதிகள் இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறி பெருமை கொள்கின்றனர். ஆனால் உண்மையோ இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மூன்றாம் தர குடிமக்களாக தான் கருத படுகின்றனர். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்து வெறியர்களால் தாக்கப்படுவது மட்டுமின்றி, அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கையால் முஸ்லிம்கள் வரிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் 14.4% சதவிகிதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் இருகின்றனர், ஸச்சார் அறிக்கை படி 31% சதவிகித முஸ்லிம்கள் அதாவது மூன்று முஸ்லிம்களில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக கூறுகின்றது..
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர் வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக் கூடாது

“ஐரோப்பாவிற்கு முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர்வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக்கூடாது என்று டச்சு (நெதர்லாண்டு) வலதுசாரி தலைவர் கீர்ட் வில்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்”.

சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்த அகதிகளின் ஒருவர் ISISயின் பெயரால்- அண்மையில் ஜெர்மனியிலுள்ள அன்ஸ்பாக் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலையொட்டி, நெதர்லாண்டின் சுதந்திர கட்சியின் தலைவரான கீர்ட் வில்டர்ஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருப்பது தீவிரவாதிகள் நுழைவதற்கு வழிவகுக்கக் கூடியதாக இருக்கிறது என்று கூறி நெதர்லாண்டின் பிரதமர் மார்க் ரூட் மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சென்ற மாதம் அமெரிக்க ஊடகத்தில் (Breitbart) வெளிவந்த கட்டுரை ஒன்றில் வில்டர்ஸ் கூறுகையில், முஸ்லிம்கள் இஸ்லாத்தை புறம் தள்ளுமாறும், மேற்குலகின் சுதந்திரப்போக்கை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவர் அக்கட்டுரையில் குறிப்பிடுகையில் ‘இஸ்லாம் சர்வாதிகார போக்கை கொண்ட மார்க்கம், அதன் தாக்கத்தால் பாதிப்பிற்குள்ளானவர்கள் தான் முஸ்லிம்கள்.

மேலும் அக்கட்டுரையில் அவர் எழுதுகையில், முஸ்லிம் குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரின சேர்க்கையாளராக மாறுவதை பற்றி சிந்திக்க வேண்டும். முஸ்லிம் பெண், முஸ்லிம் அல்லாத ஆண்களை திருமணம் செய்ய முன் வருவதற்கு கற்பனை செய்ய வேண்டும். முஸ்லிம்கள், கிறிஸ்துவத்திற்கோ, வேறு மதத்திற்கோ அல்லது இறைமறுப்பாளராகவோ மாற முன் வர வேண்டும்.

இது போன்று முஸ்லிம்கள் சிந்திக்க தொடங்கினால் அது அவர்களுக்கு மட்டுமன்றி மேற்கத்திய கலாச்சாரத்தின் நலனிற்கும் உகந்ததாகும்.

முஸ்லிம்கள் தங்களது இஸ்லாமிய மார்க்கத்திற்கு புறமுதுகு காட்டி விட்டு, கிறிஸ்துவராகவோ, இறை மறுப்பாளராகவோ அல்லது வேறு கொள்கைகளை நோக்கி விரைய வலியுறுத்துகிறோம்.

முஸ்லிம்கள் தங்களை இஸ்லாம் மற்றும் முஹம்மதின் கடிவாளத்திலிருந்து விடுவித்து கொள்வதே அவர்களுக்கு சிறந்ததாகும். இவ்வாறு வில்டர்ஸ் தனது கட்டுரையில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான கருத்தை பதிவு செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு நெதர்லாண்டில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான தேர்தலுக்கான கருத்து கணிப்பில் இவர் முன்னிலையில் உள்ளார். இவர் வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி மற்றும் வலதுசாரிகளின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான போக்கை கையாளுபவர் என்பது பலரும் அறிந்ததே.

வில்டர்ஸ்யின் எழுத்தில் 2008 ஆம் ஆண்டு ‘பித்னா” எனும் ஆவணப்படம் வெளிவந்தது அதில் இஸ்லாத்தையும், குர்ஆனையும் தவறான கண்ணோட்டத்தில் சித்தரித்தது முஸ்லிம்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

செய்தி கண்ணோட்டம்:

முஸ்லிம்கள் இஸ்லாத்தை முழுமையாக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்ற முயல்வதும், அதை நிலைநிறுத்தும் உண்மையான இஸ்லாமிய அரசான கிலாபாவை நோக்கி முயற்சிகள் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாததால் இஸ்லாத்திற்கெதிரான இவர்களது கருத்துக்களும், செயல்பாடுகளும் அப்பட்டமாக வெளிபடுவதை காணமுடிகிறது. போர் காரணமாக முஸ்லிம்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதை தடுக்கும் வகையிலான இவரது கருத்துக்கு ஐரோப்பியர்களிடையே ஆதரவு கிடைத்து வருகிறது.

http://sindhanai.org

செய்தி பார்வை 29.07.16



அலெப்போவின் விளக்கம் தரும் தருணம்

2012 ல் சிரியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக நகரத்தை புரடசி படைகள் வெற்றி பெற்று கைப்பற்றியது, இத்தருணத்தில் அது ஒரு தூரத்து கனவாக இருக்கின்றது. அலெப்போ மாகானத்தின் பெரும் பகுதியையும் அதே பெயரை கொண்ட அதன் தலைநகரத்தையும் கைப்பற்றியது அசாதிற்கு மாற்று சக்தியாக விளங்கும் ஒரு எதிர்ப்பை நிறுவ எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இது மேலும் அரசாங்கத்தின் பின்னடைவை வேகப்படுத்தியுள்ளதோடு அதன் வசமிருந்த பகுதிகளை இழக்க செய்துள்ளது இதன் காரணத்தா் அல்-அசாத் சிரியாவின் வட பகுதியை மீளும் முயற்சியை கைவிடும் நிலையை ஏற்படுத்தியது. ஆனால் இன்று இந்நாட்டில் நடைபெற்று வரும் போர்களில், அலெப்போவிற்கான போரே மிகப்பெரியதும் மற்றும் வெற்றியை முடிவு செய்யும் ஆற்றலுடைய உறுதியான போராகும் அது இப்போது விளக்கும் தருணத்தை அடையும் நிலையை எட்டியுள்ளது. அசாத் மற்றும் புரட்சியாளர்கள் இவ்விரு தரப்பினரும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர் ஒரு தீர்க்கமான ராணுவ வெற்றியின் மூலம் அசாத் தனது நிலையை உறுதி படுத்த விழைகிறார். அதே வேளையில் புரட்சியாளர்கள் தங்களது நோக்கம் நிலைத்திருக்க போராடுகிறார்கள். ஒரு வேளை அலெப்போவை இழந்து விட்டால் அதன் பிறகு அல்-அசாதிற்கு எதிராக எந்தவொரு ராணுவ வெற்றியை பெறுவது என்பது புரட்சியாளர்களுக்கும் சிரிய மக்களுக்கும் ஒரு நெடிய கனவாக ஆக்கிவிடும். அதே சமயம் அல்-அசாதிற்கு 10 மாதத்திற்கு முன்பு கவிழும் நிலையிலிருந்த தனது ஆட்சிக்கு புத்துயிர் ஊட்டியது போல் ஆகிவிடும்.


2016 ஜூலை 17ம் நாள் அன்று அசாதின் படைகள், ஈரானிய படைகள், ஹிஸ்புல்லாவின் வீரர்கள் ரஷ்ய விமானப்படை மற்றும் இதர புரட்சிப்படைகளின் உதவியோடு புரட்சியாளர்களின் கட்டுப்படாட்டில் இருந்த அலெப்போவின் கிழக்கு பகுதியில் இருக்கும் கடைசி தொடர்பு சாலையான கேஸ்டெலோ சாலையை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் இச்சாலை 2012ம் ஆண்டு முதல் புரட்சியீளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதுவே ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை கொண்டு செல்ல மீதமிருந்த ஒரூ பாதையாகும்.[1] அல்-அசாதின் படைகள் இப்போது புரட்சியாளர்கள் கடைசியாக தங்கள் கைவசம் வைத்திருந்த பலம் பொருந்திய பகுதயான அலெப்போ நகரத்தின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டு சுற்றி வளைத்துள்ளனர், அந்த மக்களுக்கு உணவு கிடைக்காமல் செய்தும் அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் செயலை செய்து அவர்களை தண்டிக்க ஆரம்பித்துள்ளனர். அலெப்போ நகரத்ரிற்கு எதிரான அல்-அசாதின் ராணுவ நடவடிக்கை 2015 அக்டோபர் மாதம் தொடங்கியது இது ரஷ்ய தலையீடு நிறுத்தப்பட்ட பின்னரும் லட்டாக்கியா மற்றும் இத்லிபிலிருந்து புரட்சியாளர்களை பின்னோக்கி செலுத்தியதை அடுத்து நிகழ்ந்தது. ரஷ்ய ஆகாய சக்தி மற்றும் ஈரானிய தலைமை மற்றும் ஷிஆ புரட்சிப்படைகளின் உதவியை கொண்டு அலெப்போ மற்றும் இத்லிப் மாகாணங்களில் பன்முனை தாக்குதல் நடத்தியதில் எதிரணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியதோடு அவர்களை அளவுக்கு அதிகமாக தங்களது எல்லைகளுக்கு அப்பால் இழுக்க முடிந்தது. எதிர் படையினரை நகரப்பகுதிகளில் இருந்து வெளியேற்றி ஒரு தீர்க்கமான முடிவு தரக்கூடிய நடவடிக்கையை மேற்கொண்டு அந்நகரை சுற்றி வளைக்க சூழ்நிலைகளை தோதுவாக அமைக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கில் உள்ள அலெப்போ நகரத்தில் உள்ள கிராம பகுதிகளில் நடைபெற்றது. ரஷ்ய விமானப்படையும் ஈரானின் மனித வளமும் பஷார் அல்-அசாத் அலெப்போ நகரத்தை அனைத்து புரத்திலும் முழுமையாக சுற்றி வளைக்க வைத்தது.

சர்வதேச சக்திகள், இவர்கள் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல, இவர்களும் புரட்சியாளர்களை பணிய வைக்க அதே போன்று தாக்குதல் நடத்தி படுகொலைகள் செய்தனர். ஜூலை 18ம் நாள் அமெரிக்க போர் விமானங்கள் மன்பிஜ் நகரத்தை அடுத்து ரத்தம் வழியச்செய்யும் ஒரு படுகொலையை நிகழ்த்தியது, இதில் 20 அப்பாவி குடிமக்கள் உயிரிழந்தனர் மேலும் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் காயம் அடைந்தனர்.[2] அதற்கு அடுத்த நாள் பிரஞ்சு போர் விமானங்கள் நீஸில் நடந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக மன்பிஜ் நகரின் வடக்கே உள்ள டவ்கான் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தியது, இந்த உதிரம் வழியும் படுகொலை தாக்குதலில் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர் சில இடங்களில் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர்.[3] ஜூலை 23ம் நாள் ரஷ்யாவும் அலெப்போவை சுற்றி பல இடங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்தி குழந்தைகள் உட்பட 70 நபர்களை கொன்று குவித்தது. அனைத்து பயங்கர தாக்குதல்களும் பல உயிர்களை பலி கொண்டும், பெருமளவிலான உடமைகள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தியும் இதன் காரணமாக இடர்பாடுகளுக்கு மத்தியில் சிக்கி இருந்த பிரேதங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டெடுக்கும் பணியை சிரமமாக்கியது. புரட்சி்ப்படையினரின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அலெப்போவின் கிழக்கு பகுதியில் அவர்களை சுற்றி வளைத்து அவர்களின் மீது தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

பலதரப்பட்ட எதிராளிகள் மற்றும் புரட்சிப்படையினருடன் அரசு கொண்ட அமைதி ஒப்பந்தம் அலெப்போவில் துவம்சம் செய்வதற்கான ஒரு முன் ஏற்பாடாக அரசு சரியாக பயன்படுத்தி கொண்டது. அனைத்து போர் நிறுத்த ஒப்பந்தங்களும் சிரிய பிரட்சியின் ஆரம்பத்திலிருந்து அரசு அதை பயன்படுத்தி தனது ஆதிக்கத்தை விரிவாக்க செய்தது பின்பு அந்த ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை முழுமையாக உதாசீனப்படுத்தியது. ஏப்ரல் 2012ல் நடைபெற்ற கோஃபி அன்னன் போர் நிறுத்த ஒப்பந்தம், அக்டோபர் 2012ல் ஈத் அல்-அழ்ஹாவில் நடைபெற்ற லக்தார் பிராஹிமி போர் நிறுத்த ஒப்பந்தம், ஜனவரி 2014ல் நடைபெற்ற பர்ஃஜா சுற்றுவட்டார போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் செப்டம்பர் 2014ல் நடைபெற்ற காபூன் சுற்றுவட்டார போர் நிறுத்த ஒப்பந்தம் போன்று 2011லிருந்து அல்-அசாத் பல்வேறு போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பின்பு அதை மீறி உள்ளார். ஜபாதானி போர் நிறுத்த ஒப்பந்தமானது அதில் கையொப்பமிட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி இத்லிபிற்கு செல்ல வேண்டும் என்று நிபந்தனை கொண்டிருந்தது மற்றும் அல்-வார் போர் நிறுத்த ஒப்பந்தமும் அவர்களை இத்லிபிற்கு செல்ல வேண்டும் என்கிற நிபந்தனை கொண்டிருந்தது. இதேபோல் ஃஜபாதானி மற்றும் மதாயா போர் நிறுத்த ஒப்பந்தங்களின் படி மக்கள் இத்லிபிற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. டிசாம்பர் 2015ல் நடைபெற்ற அல்-வார் போர் நிறுத்த ஒப்பந்தம், எதிர்ப்பாளர்களின் துப்பாக்கி ஏந்திய வீரர்களை அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேறி இத்லிப் நோக்கி செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதக்கப்பட்டது, இதன் மூலம் ஹோம்சில் சண்டையிடுவதை நிறுத்தி புரட்சியின் தொட்டிலை முழுமையாக மீண்டும் அசாதிடம் ஒப்படைக்கும் விதமாக இருந்தது. எதிர்ப்பாளர்கள் மற்றும் பல அமைப்புகள் இத்லிபில் இருந்த காரணத்தினால் இந்த பகுதியில் ரஷ்ய விமானப்படைகளால் பலமாக தாக்கப்பட்டு அல்-அசாத் அரசு அந்த புரட்சியாளர்களுக்கு மரண அடி கொடுக்கவும் அலெப்பாவிற்கான பாதையை திறந்து வைக்கவும் வழிவகை செய்தது, இதன் மூலம் அரசை அந்த மக்களை சுற்றி வளைக்க செய்தது. இந்த அமைதி ஒப்பந்தம் என்பது புரட்சியாளர்கள் தரப்பிலிருந்து நிகழ்ந்தப்பட்ட ஒரு பெரிய தவறாகும் இது இறுதியில் அரசுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது.

ஜூலை 31ம் தேதி கிட்டத்தட்ட 20 பெரிய புரடசி குழுவினர், அலெப்போவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முற்றுகையை முறிக்கும் எண்ணத்தில் தாக்குதலை தொடங்கினார்கள். அது அதன் நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றாலும், இந்த தாக்குதல் ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது மேலும் இதன் மூலம் போராட்டக்குழுவினர் இடையே உள்ளுக்குள் ஒற்றுமையாக இருப்பது இன்றியமையாதது என்ற கண்ணோட்டத்தை உறுதிபடுத்தும். அனால் வெளிப்புற உதவி இல்லாதது கூடுதல் படைகள் இல்லாதது அலெப்போவில் தங்கள் உயிருக்காக போராடுபவர்கள் அந்த கணக்கிடும் தருணத்தை அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது. சில அமைப்புகள் துருக்கி, சவூதி அரேபியா, கத்தர் மற்றும் அமெரிக்காவிடம் இருந்தும் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகள் பெற்றிருந்தாலும் இந்த உதவிகள் அரசுக்கு எதிரான போரில் ஒரு நல்ல மாற்றத்தை தரக்கூடிய அளவிலான ஆயுத உதவி அவர்களுக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை. புரட்சியாளர்களின் தற்காப்பை பலவீனப்படுத்துவதிலும் அலெப்போவில் தற்பொதைய சுற்றி வளைப்பிற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ. ம் முக்கிய பங்கு வகித்தது. புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அலெப்போவை கைப்பற்றவும் இத்லிபில் முன்னேற்றம் அடையவும் ஐ.எஸ்.ஐ.எஸ். பலமுறை முயன்றது. அதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்ந்து தோற்றிருந்தாலும் புரட்சியாளர்களுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது, 7000 வீரர்களை அது இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.[4] சிரியாவின் வட பகுதியில் உள்ள போராட்ட குழுவினர் கிழக்கிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் தாக்குதலையும், தெற்கிலருந்து நடத்தப்படும் அரசின் தாக்குதல்களையும் மற்றும் நாட்டின் அனைத்து திசையிலிருந்து ஈரானிய புரட்சிப்படையினருடன் சேர்ந்து ரஷ்யா தொடுக்கும் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது இங்கு நடத்தப்பட்ட முற்றுகையின் காரணமாக ஒரு மாதம் காலம் தொடர்ந்து நடந்த போரினால் அவர்களின் தாக்குதல் திறனில் பலவீனத்தை ஏற்படுத்தியது.

அலெப்போவிற்கான போராட்டம் மற்றும் அதன் விளைவு சிரிய புரட்சியில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். அல்-அசாதின் படைகள் கடந்த 5 ஆண்டுகளில் பல நகரங்களை கைப்பற்றியுள்ளது, ஆனால் அதற்கு அந்நகரங்களை தக்க வைத்துக்கொள்ளவதை விட அதற்கு அந்நகரங்களை கைப்படுத்துவது எளிதாக இருந்தது மேலும் அது கைப்பற்றிய அலெப்போ நகரை தக்கவைத்துக் கொள்ள அதற்கு ஒரு நகரத்தில் பிரச்சினை இருப்பது அதற்கு தேவை படுகிறது, அது புரட்சியாளர்களை வலுப்படுத்துவதற்காக வேண்டி பாடுபடும. இந்த புரட்சி ரஷ்யாவில் நடந்தது போன்று ஸ்டாலின்கார்ட் stalinguard தருணத்தை அடைந்துள்ள காரணத்தால் அலெப்போவிற்கான போராட்டம் நிச்சயமாக சிரியாவிலுள்ள மக்கள் ஒரு உண்மையான மாற்றத்தை கோரும் வண்ணம் நிச்சயமாக ஒரு தீர்வை தரும் வண்ணம் அமைந்திருக்கும்.

Reference : http://www.revolutionobserver.com/2016/08/aleppos-moment-of-reckoning.html



http://sindhanai.org/

Aug 8, 2016

இஜ்திஹாத்தின் பெயரால் இஸ்லாத்தை புதிதாக பொதி செய்ய முயற்சி!


இஜ்திஹாதின் பொருளை சிதைப்பதற்கான முயற்சிகள் இன்று நிறையவே நடக்கின்றன. மார்க்கத் தீர்ப்பளிக்கின்ற உரிமையை ஒரு சில அரச அங்கீகாரம் பெற்ற அறிஞர்களிடமும், நிலையங்களிடமும் மாத்திரம் சுருக்கி மக்களின் அறிவு தேடும் வழிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் அத்ல் (நீதி) ஆனது எல்லாம் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்களே (தீர்ப்புக்களே) என இறைச்சட்டங்களுக்கு மீள வரைவிலக்கணம் வழங்குதல் என்பன இந்த முயற்சியில் முக்கியமான கைங்கரியங்களாகும்.

இந்த தீய முனைப்பில் சில இயல்புகள் அடிக்கடி பளிச்சிடுகின்றன:

1. அறிவு தேடுதலை கட்டுப்படுத்தல். (பெரும்பாலும் அரசுகளால்) அங்கீகாரம் பெற்ற அறிஞர்கள் சிலரைக் கொண்டு அல்குர்ஆன், அஸ்ஸுன்ஆவை நேரடியாக அணுகுவது ஆபத்தானது என்ற மனப்பதிவை முஸ்லிம்களின் மனதில் ஏற்படுத்தல். இந்த அழுத்தம் எந்தளவிற்கு பிரயோகிக்கபடுகிறது என்றால் சில சமயங்களில் ஒரு மார்க்கத் தீர்ப்பு மிகத் தெளிவான இஸ்லாமிய ஆதாரங்களுடன் முரண்படுவதாகத் தெரிந்தாலும், முஸ்லிம்கள் அது சம்பந்தமாக மௌனம் காத்து அவ்விடயத்தை அறிஞர்களின் கைகளில் மாத்திரம் விட்டுவிட வேண்டும் என்ற சிந்தனை வளர்க்கப்படுகிறது. இந்நிலை முன்னைய யூத, கிருஸ்தவ சமூகங்கள் அறிவை மத அறிஞர்களின் ஏகபோக உரிமையாக சுருக்கிவிட்டதன் விளைவால், மார்க்க அறிஞர்கள் வழி பிறழ்ந்த மக்களினதும், ஆட்சியாளர்களினதும் மனோ இச்சையை திருப்திப்படுத்தும் வண்ணம் வேத வெளிப்பாடுகளுக்கு வியாக்கியானம் செய்ததையொத்த கவலைக்கிடமான நிலையாகும்.

2. இஜ்திஹாத், என்ற தூய வழிமுறை இன்று “மார்க்கம் மௌனம் காக்கின்ற” விடயங்களில் “மனிதன் இயற்றுகின்ற சட்டங்கள்” என்ற பொருளை எட்டியிருக்கிறது.சில விடயங்களில் மார்க்கம் மௌனம் சாதிக்கிறது என்ற மிகப்பிழையான எடுகோளின் படி, தவறாகப் பயன்படுத்தப்படும் இஜ்திஹாத் வழிமுறை இன்றைய உலகை ஆள்கின்ற மனிதச் சட்டவாக்க பொறிமுறையுடன் நன்றாகவே ஒத்துப் போகின்றது. “எங்கெல்லாம் நீதி(அத்ல்) நிலைத்திருக்கிறதோ அதுதான் அல்லாஹ்(சுபு)வின் சட்டமாகும்” என்ற ஒரு புதுமையான வரைவிலக்கணத்தை அண்மையில் ஒரு ஷரீஆ துறை அறிஞர் என்னிடம் சொன்னது இங்கே ஞாபகத்திற்கு வருகிறது. இஸ்லாமல்லாத குப்ர் தேசங்களில் மில்லியன் கணக்கான இஸ்லாமியச் சட்டங்கள் அமூல்படுத்தப்படுகின்றன என அவர் கூறிய பொழுது, அதிர்ச்சியோடு இல்லை...அவையெல்லாம் குப்ர் தேசங்களல்லவா... என்று நான் சுட்டிக்காட்ட, அவர் என்னை வியந்து பார்த்து “இத்தக்கில்லாஹ்” (அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்) என்று எச்சரித்ததையும் இங்கே நினைவு கூறுகின்றேன்.

3. இஜ்திஹாத் என்பது “அத்தரூரா - இன்றியமையாத நிலை” மற்றும் “ஹஃபத் தரரைன் - தீயதில் சிறியது” என்ற இரு அடிப்படைகளை மாத்திரம் சுற்றிச் சுழலும் ஒரு பொறிமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது. நவீன கால பிரச்சனைகள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்வாக்களில் ஏறத்தாழ அனைத்துமே நலன்களையும் (மஸ்லஹா), தீங்குகளையும் ஆராய்வதை மையம் கொண்டு தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அத்தீர்ப்புகளுக்குள் ஒரு திருமறை வசனமோ அல்லது நபிமொழியோ சொல்லப்பட்டால் அது இந்த நலன் VS தீங்கு கணக்கை தீர்க்க முன்வைக்கப்படும் ஆதாரமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தை மறுபொதி பண்ண எடுக்கப்பட்ட முயற்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை இலகுவாக காலணித்துவம் செய்வதற்காக அவர்களை அமைதிப்படுத்தி, இயங்காது வைத்துக்கொள்ள கடுமையான பிரயத்தனம் எடுத்தனர். குலாம் அஹ்மத் போன்றோர்களை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை அமைதிகாக்க கற்றுக்கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அதில் படு தோல்வியடைந்தனர். இதே நிகழ்ச்சி நிரலை “இஸ்மாயீலி” களைப் பயன்படுத்தி நிறைவேற்ற நினைத்தனர். அங்கேயும் மூக்குடைபட்டனர். காந்தியை பயன்படுத்தி அகிம்சையை போதித்த போது சில காலம் அது கைகூடினாலும் மேற்குலக மேலாதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் உம்மத்தை இயங்காது வைத்திருப்பதற்கு, எதிர்வினையாற்றாது அமைதி காக்கச் செய்வதற்கு அதுவும் நீண்ட காலம் வெற்றியளிக்கவில்லை. மேலும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும், பொருள் கொள்ளலுக்கும் ஏற்ப அல்குர்ஆனை மொழியாக்கம் செய்து முஸ்லிம்களின் கைகளில் தவழவிட்டுப் பார்த்தனர். எனினும் மூல அரபு மொழி குர்ஆனுடன் உம்மத்திற்கு இருந்த தொடர்பால் அவர்களின் சூழ்ச்சி பழிக்கவில்லை. ஹதீத்களை இஸ்லாத்திலிருந்து தொடர்பறுத்து இஸ்லாத்தை நடைமுறை ரீதியாக அமூலாக்கம் செய்வதை தடுக்க முயன்றனர். ஹதீத் கலையின் ஏற்புடமை பற்றி மக்களின் மனதில் ஐயப்பாடுகளை விதைக்கும் வண்ணம் தமது பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளை ஏற்படுத்தி அதனைச் சாதிக்க நினைத்தனர். எனினும் ஒரு சிலரைத்தவிர ஏனையோரை அந்த முயற்சி வழிகெடுக்கவில்லை. இன்றும் பாகிஸ்தானிலே அல் கம்தி போன்ற தனிநபர்கள் இந்த நிகழ்ச்சி நிரலில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தகைய ஆழமான முயற்சிகள் எல்லாம் பயனளிக்காத நிலையில் அவர்கள் பாவிக்கும் அண்மைக்கால யுக்திகளை இவ்வாறு சுருங்கக் கூறலாம்.

1) அறிவை குறித்த “அங்கீகாரம் பெற்ற அறிஞர்” களுக்கு மாத்திரம் மொத்தமாக குத்தகைக்கு வழங்குதல். அந்த அறிஞர்கள் கைமாறாக அரசாங்கங்களுக்கு கட்டுப்படும்படியும், தற்போதுள்ள (குஃப்ரான) வாழ்வொழுங்குடன் இரண்டரறக் கலந்து வாழும்படியும் மக்களுக்கு போதனை செய்தல்.

2) இஜ்திஹாத்தின் பொருளை “பலன்களையும், தீங்குகளையும் நிறுத்துப்பாக்கும் மனித மதிப்பீடு” என்பதாக மாற்றுதல்

3) “ஹுக்ம் ஷரீய்” இன் பொருளை அனைத்து “நீதி” ஆன சட்டங்களும் ஹுக்ம் ஷரீய்தான் என்பதாக மறுவிளக்கம் அளித்தல். அதன்படி மனிதன் இயற்றுகின்ற எத்தகைய நீதியான சட்டங்களும் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்கள்தான் என்ற நிலைப்பாட்டுக்கு வருதல்.

எனவே இன்றைய சூழலில் உலகில் எந்த எல்லையில் ஒருவர் அழைப்புப் பணியில் ஈடுபட்டாலும் அவர் இத்தகையதொரு ஆபத்தான திசை நோக்கி உம்மத்தை தள்ளுகின்ற முயற்சி இடம்பெற்று வருவதை கருத்தில் கொள்ள வேண்டும். உம்மத்தை சரியான சிந்தனை நோக்கி தொடர்ந்து விழிப்பூட்ட வேண்டும்.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில் கல்வி என்பது அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அது முன்னமே அங்கீகாரம் பெற்ற அறிஞர்களுக்கு மாத்திரம் தனியுரிமையாக வழங்கப்பட்டதல்ல. அதேபோல சத்தியத்தை உரைப்பதும், ஆட்சியாளர்களை தட்டிக்கேட்பதும் இஸ்லாத்தின் முக்கிய அங்கங்களாகும். அதன்படி குப்ர் சிந்தனைகள் அனைத்தையும், அதனை கட்டிப்பாதுகாக்கின்ற அரசுகள், முறைமைகள் அனைத்தையும் நாங்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும். மேலும் நாங்கள் எங்களை நோக்கி வருகின்ற அனைத்து பத்வாக்களையும் கண்மூடிப் பின்பற்றக்கூடாது. அவற்றிலிருக்கும் குறைகளை, தவறுகளை கண்டு மௌனம் காக்கக் கூடாது. குறிப்பாக இன்றைய உலகை வழிநடாத்துகின்ற குப்ர் முறைமைகளுக்குள் இரண்டரறக் கலந்துவிடுவதற்காக அரசியல் நோக்கங்களுடன் வெளிவருகின்ற பத்வாக்களை ஒன்றுக்கு பலமுறை அவதானமாக அணுக வேண்டும்.

அல்குர்ஆனும், அஸ்ஸுன்ஆவும் சொல்கின்ற மிக நெருக்கமான பொருள் அல்லது சட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும் என்பதை புரிந்து கொள்வதற்காக எடுக்கப்படும் அதிகூடிய முயற்சியே இஜ்திஹாத் ஆகும். மாறாக முதலாளித்துவ, சடவாத, தாராண்மைவாத சட்டவாக்கப் பொறிமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சில பரிதாபமான இலாப – நஷ்ட ஆராய்ச்சி அல்ல. இஜ்திஹாத்திலிருந்து எட்டப்படுகின்ற தீர்ப்புக்கள் அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்புக்கு மிக அண்மித்த தீர்ப்புகளாகும். மாறாக மனித மூளையை நீதிபதியாக்கி “நன்மை, தீமைகளை தர்க்க ரீதியாக அளந்து பார்த்து” எடுக்கப்படும் தீர்ப்புகளல்ல. இத்தீய முயற்சி இன்னொரு வடிவில் “மனோ இச்சையை” பின்பற்றுவது கூடும் என சொல்வதை ஒத்ததே.

அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்பு என்பது அல்லது சட்டம் என்பது குர்ஆன், ஸுன்ஆவிலிருந்து மாத்திரம் யாக்கப்படுவதாகும். அதுதவிர வேறு எங்கேனும் இருந்து எட்டப்படும் முடிவுகள் - அது அல்லாஹ்வின் முடிவுக்கு ஒத்ததாக தெரிந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நபி(ஸல்) நவின்ற இந்த நபிமொழியை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் கூட அது இதற்கு சான்று பகரப் போதுமானதாகும்.

“எமது கட்டளையில் இல்லாத ஒரு செயலை ஒருவர் செய்வாரானால் அது நிராகரிக்கப்பட்டதாகும்.”

எனவே உலகை நீதியின் நிழலில் வழிநடாத்த இருக்கின்ற உம்மத்தின் எழுச்சியில் தாமதத்தை ஏற்படுத்த ஏவப்படும் இத்தகைய தீய அம்புகளிலிருந்து அல்லாஹ்(சுபு) எம்மைப் பாதுகாப்பானாக. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாது, சித்தாந்தத்தை சித்தாந்தத்தால் முறியடிக்க முடியாது அற்பத்தனமான காரியங்களினூடாக உம்மத்தை குழப்பத்தில் ஆழ்த்த நினைக்கின்ற குப்பார்களினதும், முனாபிக்களினதும் முகத்தில் அவன் முன்புபோலவே இம்முறையும் கறியைப் பூசுவானாக!

DARUL AMAN

துருக்கி அரசை கவிழ்க்க நடந்த ராணுவ சதிப்புரட்சியின் அரசியல்


ஜூலை 17 ஞாயிறு அன்று ராணுவ சதிப்புரட்சியானது அதிகாரப்பூர்வமாக துருக்கி நேரப்படி மாலை 4.30 மணிக்கு முடிவுற்றது என துருக்கி ராணுவப்படை ஒரு செய்தி வெளியிட்டது. இந்த ராணுவ சதிப்புரட்சியை செயலிழக்க செய்ய உதவி புரிந்த மக்களின் ஒத்துழைப்பிற்கு இந்த செய்தி குறிப்பின் மூலம் நன்றியையும் தெரிவித்தது. 

ரெசெப் தாய்யிப் எர்துகான் அரசை கவிழ்க்கும் முயற்சியில் இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில் ராணுவ பீரங்கிகள் மற்றும் ராணுவ விமானங்கள் சீறி பாய்ந்ததை பார்த்து பெருவாரியான உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. தங்களின் தரப்பிலிருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ராணுவ சதிப்புரட்சியை மேற்கொண்டவர்கள் முக்கிய நகரங்களில் படையெடுப்பு நடத்தி அதை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றனர். 

ஆனால் எர்துகான் கைப்பேசி மூலம் தனது ஆதரவாளர்களை நோக்கி தெருக்களில் இறங்கி நாட்டை மீட்டெடுங்கள் என்று செய்தி அனுப்பிய உடன் பெருங்கூட்டத்தினர் வீதிகளில் பொங்கி எழுந்ததால் இந்த புரட்சியாளர்களை தடுத்து நிறுத்த முடிந்தது எர்துகான் அதிலிருந்து போர் புரியும் வண்ணமாக வெளிவந்து ராணுவ சதிப்புரட்சியாளர்களை நோக்கி தெளிவாக குறிப்பிட்டார் “இவ்விஷயத்திற்காக அவர்கள் பெரும் விலை கொடுக்கப்போகிறார்கள்” [1] என்று நேரடியாக ஒரு பெரும் தேடுதல் வேட்டை நடத்த தொடங்கியது, 34 ஜெனரல்கள் மற்றும் இன்சிர்லிக் விமானத்தளத்தின் கமான்டர் உட்பட பல்வேறுபட்ட நிலையிலுள்ள 6000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர், 
ஆனால் இதன் களையெடுப்பு இதைவிட மிக ஆழமானது: 

 இந்த ராணுவ புரட்சியை தொடர்ந்து 2,745 துருக்கிய நீதிபதிகள் தங்களது கடமைநிலருந்து நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளனர்.[2] இந்த ராணுவ புரட்சி தோல்வி அடைந்த உடன் எர்துகான் அவரது ஆதரவாளர்களை கொண்ட ஒரு பெரும் கூட்டத்தாருக்கு தனது செயற்திட்டம் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் போக்கு குறித்து விளக்குகையில் இவ்வாறு கூறினார்: “இந்த புரட்சி நமக்கு இறைவனிடமிருந்து வந்த அன்பளிப்பாகும் ஏனெனில் இது நமது ராணுவத்தை தூய்மையாக்க காரணமாக விளங்கும். [3]

1923 ல் துருக்கிய குடியரசு உண்டான போது ராணுவ அதிகாரியான முஸ்தஃபா கமால் உண்மையான ஆட்சியாளராக செயல்பட்டார் அவர் கிலாஃபத்தை நிர்மூலமாக்கிய பின்னர் ராணுவ படையிலிருந்த இஸ்லாமிய ஆதரவாளர்களை அப்புறப்படுத்த தொடங்கினார். முஸ்தஃபா கமாலின் காலத்தில் துருக்கிய ராணுவம் தனது துப்பாக்கிகளை ஐரோப்பிய எதிரிகளை நோக்கி இருந்த நிலையை மாற்றி சொந்த மக்களை நோக்கி திருப்பியது, அவர்களை அவர் அடிப்படைவாதிகளாக நாட்டின் மதசார்பின்மையை எதிர்ப்பவர்களாக கருதினார்.

ராணுவத்தினரை மதசார்பின்மையை முன்னெடுத்து செல்பவர்களாக ஆக்குவதே அவரது நோக்கமாகும். அவரது மரணத்திற்கு பின்னர், ராணுவம் அரசாங்கம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறையிலுள்ள இதர மதசார்பின்மை வாதிகள் எந்த விலை கொடுத்தேனும் மதசார்மையை பாதுகாப்பது தங்களது தலையாய பொறுப்பாக கருதினர். மிக குறிப்பாக ராணுவம் மதசார்பற்ற துருக்கியின் பாதுகாவலராக தன்னை கருதியது. 

மதசார்பின்மை அல்லது ராணுவத்தின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் எழுந்த அச்சமயங்களில் உதாரணமாக 1960, 1971 மற்றும் 1980 களில் அவர்கள் ராணுவ சதிப்புரட்சி மேற்கொண்டு அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்து கொண்டனர். 1997 ல் ராணுவம் அரசிடம் ஒரு நீண்ட கோரிக்கை வைத்தது அந்த கோரிக்கைகளை ஏற்று கொள்வதை தவிர அரசிற்கு வேறு வழி இல்லாமல் இருந்தது. அதன் பிரதம மந்திரி, நெக்மெட்டின் எர்பாகன், பல்கலைகழகங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பதற்கு சம்மதித்தார் பின்னர் அது தளர்த்தப்பட்டது, அவரது கட்சி 1998ல் முடக்கப்பட்டது, மேலும் எர்பாகன் அரசியலில் ஈடுபடவதிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. துருக்கி அரசியல் நிலப்பரப்பில் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வந்தது மேலும் அது உருவாகிய மதசார்பின்மை அடித்தளத்திற்கும் நாட்டில் அது கொண்டிருக்கும் அதிகப்படியான நிலைக்கும் எந்தவொரு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பார்த்து கொள்கிறது.

1998ல் தடைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், எர்பாகனின் வெல்ஃபேர் கட்சியின் முன்னால் உறுப்பினர்கள் ஏ.கே.பி கட்சியை உருவாக்கினர் அதன் பின்னர் 2002 பொது தேர்தலில் இஸ்தான்புல்லின் முன்னால் மேயரான ரெசெப் தாய்யிப் எர்துகான் தலைமை ஏற்று பெறும் வெற்றிக்கு இட்டு சென்றார். 

21ம் நூற்றாண்டில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஏ.கே.பி பெரும்பான்மை வாக்கு பெற்று வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து எர்துகானிற்கு ராணுவம் துருக்கியில் வழக்கமாக கொண்டிருக்கும் பங்கை எதிர்க்கும் தைரியத்தை அளித்தது. (2015 ஜூன் மாதம் நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெறுவதில் ஏற்பட்ட இழப்பு 2015 நவம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஏ.கே.பி மீண்டும் வெற்றி பெற்றது). 

பனிப்போரில் துருக்கி ஈடுபட்டிருந்த போதும், அதன் ராணுவம் பிரித்தானியருடன் நெருங்கிய உறவை மேற்கொண்டு வந்தது மேலும் ஐரோப்பிய கண்டத்துடன் நெருங்கிய உறவை மேற்கொண்டு அது எதிர்காலத்தில் தன்னை ஒரு ஐரோப்பிய நாடாக அடையாளம் காண விரும்பியது, ஆனால் எர்துகான் அமெரிக்காவுடன் உறவை மேற்கொள்ள ஆரம்பித்தார் அது ‘Shared Vision Document’ என்ற பெயரில் துருக்கி மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு இடையே அப்துல்லாஹ் குல் மற்றும் கான்டொலீசா ரைஸ் ஆகிய இருவரும் 2006 ல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம் உச்ச நிலையை அடைந்தது. 

இந்த ஒப்பந்தம் ஒரு பரந்த உலகளாவிய, பிராந்திய, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கிய விஷயங்களில் அமெரிக்காவும் துருக்கியும் ஒத்துழைப்பு நல்கும் விதத்தில் அமைந்தது. [4] எர்துகானின் ஆட்சி காலத்தில் அவர் அமெரிக்கா மற்றும் துருக்கி இடையேயான உறவை பலப்படுத்தினார் அது ஈராக்கை நிலைபெற செய்வதாக இருப்பினும், குர்திஸ்தான் பிராந்திய அரசுக்கு (KRG) நிதியுதவி அளிப்பதாக இருப்பினும், இரண்டு நாடுகள் அமைத்து தீர்வு காண்பது எனும் அடிப்படையில் பாலஸ்தீன குழுக்களை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாகினும் மற்றும் சிரிய எதிர்ப்பு படைகளில் ஊடுருவது போன்று எர்துகான் அமெரிக்காவின் திட்டங்களுக்கு அடிமட்ட அளவிற்கு உதவி புரிந்துள்ளார். 

ஏ.கே.பி யின் ஒரு குழு ஒன்று கூடுதலில் அமெரிக்காவுடனான தனது செயலை சுட்டிக்காட்டினார்: “உலகெங்கும் உள்ள நாடுகளில் இன்று அமெரிக்கா கொண்டிருக்கும் விருப்பங்களில் துருக்கியும் அதன் பெரும்பாலான விஷயங்களில் விருப்பம் கொண்டுள்ளது. நாம் அப்கானிஸ்தானிலிருந்து ஈராக், பாலஸ்தீனம் மற்றும் பால்கன் நாடுகள் போன்று பரந்த விஷயங்களில் பொதுவான பார்வையை கொண்டுள்ளோம். ஆனால் மிக முக்கியமாக ஒரு வலுவான ஒத்துழைப்பில் நாம் இருக்கின்றோம். மிஸ்டர் ஒபாமா இங்கு வருகை தந்த போது கூறியது போன்று நாம் ஒரு மாதிரி பங்கு கொள்ளும் படி நிலையில் நுழைந்திருக்கிறோம் மேலும் நாம் அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இதில் சில விஷயங்கள் நாம் வெளியே கூறும் வண்ணமும் சில விஷயங்கள் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாததாகவும் இருக்கின்றது.

துருக்கி மற்றும் அமெரிக்க உறவை துண்டாட நினைப்பவர்கள் இந்த உறவின் பல்முனை தரம் மற்றும் ஆழத்தை உதாசீன படுத்துகிறார்கள்.” எர்துகானின் தேர்தல் வெற்றி மற்றும் பிரித்தானிய வட்ட பாதையிலிருந்து துருக்கியை நீக்குவதற்கான துணிவான நகர்த்தல்கள் ராணுவத்தை கவலைக்குள்ளாக்கியது ஏனெனில் அவர்கள் அதுவரை எப்போதும் ஒரு ராணுவத்தை சாராத ஒரு ஆட்சியாளர் இவ்வளவு பொது ஜன ஆதரவை பெற்றிருந்த நிலையை எதிர் கொண்டதில்லை. குர்திய பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக எர்துகான் தொடங்கிய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் குர்திய பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ராணுவம் முன்வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கியின் அதிகார பலத்தை மாற்றும் முயற்சியில் எர்துகான் ஈடுபட்டார். அவர் அரசில் தலையிடும் உச்ச ராணுவ மன்றத்தின் சட்ட அதிகாரத்தை சுருக்கலானார். இந்த மன்றத்தின் அமைப்பில் ராணுவத்தினர் அல்லாதவரும் பங்கு பெறும் வகையில் எரதுகான் மாற்றி அமைத்தார். உச்ச ராணுவ மன்றம் ராணுவ தளபதி, அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் மற்றும் குடியரசின் ஜனாதிபதி – இவரே ராணுவ தளபதியும் ஆவார் போன்றவர்களை உள்ளடக்கியதாக உள்ளது. 

இந்த மன்றம் ஒரு பாதுகாப்பு மன்றம் என்பதிலிருந்து வெறுமெனே அலோசனை மன்றமாக மாறியது. அதன் வருடாந்திர கூட்டம் பணி உயர்வு, பணி நியமனம், பணி காலத்தை நீன்டிப்பது மற்றும் ராணுவ வீரர்களை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்வது போன்றவற்றிற்காக ஒப்புதல் பெறுவதற்காக வேண்டி சமர்பிக்க படுகிறது. மூத்த படைத்தளபதிகளை ஓய்வில் அனுப்பவும் மற்றும் சிறையில் அடைக்கவும் 2007ல் அரசை ராணுவத்தை கொண்டு வெளியேற்றும் ’எர்கெனெகான்’ எனும் சூழ்ச்சியை எர்துகான் பயன் படுத்தி கொண்டார். 

அதேபோல் 2010ல் ’Sledgehammer’ எனும் சூழ்ச்சியை பணியிலிருக்கும் மூத்த ராணுவ அதிகாரிகளை ஒய்வு பெற்ற அதிகாரிகளுடன் சேர்த்து வழக்குகளில் சிக்க வைக்க உபயோகப்படுத்தப்பட்டது. துருக்கி வரலாற்றில் முதன் முறையாக ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படுவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் மேலும் இது நாட்டில் ராணுவத்தின் பிடி பெருமளவில் தளர்ந்திருப்பதை காட்டுகிறது. இறுதியில் இரு விசாரணைகளிலும் அனைத்து பிரதிவாதிகளும் விடுவிக்கப்பட்டனர் இருப்பினும் அதற்கு சேதம் ஏற்படுத்தியாகிவிட்டது. 

எர்துகான் வெற்றிகரமாக ராணுவத்திலுள்ள மதசார்பின்மை அடிப்படைகளை நலிவடைய செய்து தனக்கு விசுவாசமாக உள்ளவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினார். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அதாவது 2015 நவம்பர் மாதத்தில் விமானப்படை தன்னிச்சையாக சிரியாவில் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது, ராணுவத்தின் விசுவாசம் எர்துகான் நம்பிக்கை கொள்ள முடியாத வேறு எங்கோ இருப்பதை உணர்த்துகிறது. இது சிரயாவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் துருக்கி உள்ளிட்ட அனைவரும் ஒரே குறிக்கோளை கொண்டிருக்கும் வேலையில் நடந்தேரியுள்ளது.

ஆகஸ்து மாதம் 1ம் தேதி உச்ச ராணுவ மன்றத்தின் வருடாந்திர ஒன்று கூடல் நடக்க வேண்டியுள்ளது இதனூடே இராணுவத்தின் ஒரு பிரிவினருக்கும் எர்துகானுக்கும் இடையே பதற்றம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் இருப்பதை காண முடிகிறது. இதன் காரணமாக மூத்த ராணுவ வீரர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்களின் பணிக்காலம் விரைவில் முடித்து வைக்கக்கூடும் என்ற காரணத்தால் எர்துகானை எதிர்கொள்ள தன்னிச்சையாக இந்த ராணுவ புரட்சியை மேற்கொண்டுள்ளனர்.

கேனி டோருன் எனும் ஏ.கே.பி எம.பி கூறுகையில், இந்த குழுவினர் மீது தேச துரோகம் மற்றும் ஸ்லெட்ஜ் ஹேமர் வழக்குகளின் தொடர்ச்சியாக விசாரணை தொடங்கப்பட்டது. ராணுவ புரட்சி மேற்கொள்வதற்கு சற்று முன்னர் தான் குற்றவாளிகள் பிராசிக்யூடர்களால் அழைக்கப்பட்டு நீதிமன்றத்தால் கைது செய்யப்படுவதாக இருந்தது,“ என டோருன் அல் ஜசீராவிடம் கூறனார்.[6] “அவர்கள் இந்த முன்னேற்றத்தை அறிந்த காரணத்தால் வழக்கமாக இது போன்ற ராணுவ புரட்சியை நடத்தும் நேரத்திற்கு மாற்றமாக இரவு 10 மணிக்கு மேற்கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம். அவர்கள் திட்டமிட்டதை போன்று அதை காலை பொழுதி்ல் செயல்படுத்தி இருப்பார்களேயானால் அவர்கள் பெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும்”. ராணுவத்திற்குள் ராணுவ புரட்சி மேற்கொள்ள திட்டமிடும் நபர்களை கடந்த பல மாதங்களாக துருக்கி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர் என மற்றுமொரு ஏ.கே.பி அதிகாரி குறிப்பிட்டார். “தாங்கள் புலனாய்வுக்கு உட்பட்டு இருக்கிறோம் என உணர்ந்ததன் காரணமாகவே இந்த குழு ஒரு அவசரத்தில் செயல்பட்டதாகவே கருதுகிறோம்.”[7]

விமானப்படை, ராணுவ புலனாய்வுத்துறை மற்றும் தளவாடப்படையில் உள்ள சிறு குழு ஈடுபட்டது. இந்த ராணுவ சதிப்புரட்சியை ஒரு சிறு குழுவினரே மேற்கொண்டுள்ளனர் இதில் ராணுவ தளபதியின் பங்கு சற்றும் இல்லாமல் இருந்தது, ராணுவ தளபதி சூழ்ச்சியாளர்களால் சிறை பிடிக்கப்பட்டார் மற்றும் சிலர் ஊடகத்தின் வாயிலாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ராணுவ தலைமையிடத்தில் இருந்து ஆதரவு கிடைக்காதது தான் இந்த ராணுவ சதிப்பரட்சி தோற்று போனதற்கான முக்கிய காரணமாகும்.

இந்த தோல்வியுற்ற ராணுவ சதிப்புரட்சி குறிப்பாக இந்த ராணுவ சதிப்புரட்சியில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மக்கள் திரண்டு வந்தது எர்துகானை மேலும் வலுவடைய செய்துள்ளது, இப்போது எர்துகான் ஒரு ஆழமான சுத்தகரிப்பை செய்ய போகிறார் இது நம்பகத்தன்மையை இழந்த தங்களது விசுவாசத்தை வேறு இடத்தில் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை பலவீனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் இந்த தோல்வியுற்ற ராணுவ புரட்சியை காரணம் காட்டி எர்துகான் சர்வாதிகார போக்குடையவராக மாறி வருகிறார் என குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்து வருவதை காண முடிகிறது. அவரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதும், ஐரோப்பா தங்களுடைய நிலையை எர்துகான் மற்றும் அவருடைய செயல்களை நோக்கியே கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கு இன்னொரு பக்கம் அமெரிக்காவுடைய நிலையானது இந்த ராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் சட்டத்தின் விதிகளை மதிக்குமாறு கோரிக்கை விடும் வண்ணம் இருந்தது, இது கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எர்துகானுக்கு ஆதரவான நிலையாகும்.

Reference: http://www.revolutionobserver.com/2016/07/the-politics-of-turkeys-coup.html


[1] http://www.nytimes.com/live/turkey-coup-erdogan/erdogan-they-will-pay-a-heavy-price-for-their-treason-to-turkey/

[2] http://in.reuters.com/article/turkey-security-judges-idINKCN0ZW0OZ

[3] https://www.rt.com/news/351630-erdogan-turkish-military-relationships/

[4] http://www.hurriyetdailynews.com/turkey-us-invest-hopes-in-shared-vision-document.aspx?pageID=438&n=turkey-us-invest-hopes-in-shared-vision-document-2006–07-07

[5] AK Party Group Meet­ing, Jus­tice and Devel­op­ment Party web­site, June 29 2010,http://www.akparti.org.tr/english/haberler/ak-party-group-meeting-june-29–2010/25721

[6] http://www.aljazeera.com/news/2016/07/turkish-putschists-acted-early-fear-arrests-160718131344577.html

[7] http://www.aljazeera.com/news/2016/07/turkish-putschists-acted-early-fear-arrests-160718131344577.html
http://sindhanai.org/

இன்றைய துருக்கியில் நடைபெறும் ஆட்சி கிலாஃபத் கிடையாதா?


இன்றைய துருக்கியானது இஸ்லாமிய கட்சியால் ஆளப்பட்டு வருகிறது என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அது தன்னகத்தே நிச்சயமாக ஒரு இஸ்லாமியரை அதிபராகவும் இன்னொரு இஸ்லாமியரை பிரதம அமைச்சராகவும் கொண்டுள்ளது. 

இதன் காரணத்தால் இந்த துருக்கிய மாதிரி அரசாங்கம் பொருமளவில் பிரபல்யம் அடைந்துள்ளது மற்றும் மக்களது பார்வையையும் ஈர்த்துள்ளது. இந்த மாதிரியை கொண்ட அரசாங்கமானது அதாவது சில இஸ்லாமிய சட்டங்கள் மதசார்பின்மையோடு கலந்திருப்பதை விரும்பும் பல மேற்கத்திய அரசியல்வாதிகள் மற்றும் மதசார்பின்மை வாதிகளின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது ஏனெனில் அவர்கள் தாங்கள் இது மாதிரியான அரசாங்கத்துடன் எளிதில் உறவு கொள்ள முடியும் என்பதோடு இது போன்ற நிலையை ஏனைய முஸ்லிம் உலகில் பார்க்க விரும்புகின்றனர். 

முஸ்லிம் உலகில் பெரும்பாலோர் துருக்கி என்பது கிலாஃபத்தின் ஆட்சி முறையை கொண்டதாகவே அறிந்து வைத்திருக்கின்றனர் – இந்த கிலாஃபத்தானது ஒரு போர் குழுவை உலகின் சக்ரவர்த்திகளாக மாற்றியது. தாங்கள் இஸ்லாமிய ஆட்சி முறை படி ஆட்சி செய்கிறோம் என்ற ஏ.கே.பி கட்சியின் கூற்றினை ஆராய்ந்து பார்க்கையில் அதன் திட்டங்களில் இஸ்லாம் எவ்வகையிலும் பங்கு பெற்றிருக்கவில்லை என்றும் அது பொது மக்களிடம் அளித்து வரும் வெறும் வாய்ஜாலமே அன்றி வேறெதுவும் இல்லை. பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கைகள் ஏ.கே.பியின் பிரதான அடையாளங்கள் ஆகும் இரண்டுமே இஸ்லாம் அல்லாத பிற அடிப்படைகளை கொண்டு செயல்படுவதாக உள்ளது.

ஏ.கே.பி விற்கு ஆதரவு திரட்டுவதற்காக எர்துகான் சில பெரு வியாபாரிகள் பயன் பெரும் வகையில் துருக்கிக்கு உள்ளே பணம் கொண்டு வரும் வகையில் பொருளாதார கொள்கைகளை வகுத்துள்ளார். இஸ்லாம் இதை தடுத்துள்ளது மற்றும் அது சில பெரு முதலைகளிடம் சொத்துக்கள் சேரும் வகையிலான மேற்கத்திய மாதிரியிலான பொருளாதார விநியோக முறையிலிருந்து விலகி செல்லும். அதே போன்று துருக்கியின் வெளியுறவு கொள்கையில் இஸ்லாம் எந்த வகையிலும் பங்கு பெறவில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக எர்துகானின் துருக்கி் அரசாங்கம் இஸ்ரேலுடனான உறவை தொடர்ந்து நீடித்து வருவது இதை இஸ்லாம் முற்றிலுமாக தடுக்கின்றது. ஏ.கே.பி தன்னுடைய வெளியுறவு கொள்கையில் இஸ்லாமை எந்த விதத்திலும் உபயோகிக்கவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் ஆட்சியாளர்களை ஒன்று திரட்டுவதற்கு பதிலாக (சலாஹுதீன் அய்யூபி செய்தது போன்று) அல்லது அல் குத்ஸை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கவும் இல்லை இதை செய்யும் ஆற்றல் துருக்கிக்கு இருந்த போதும், எர்துகான் வாய் சவடால் விடும் ஒரு குறுகிய சந்தர்ப்பவாத கொள்கையை இஸ்லாமிய வார்த்தைகள் பூசி தொடர்ந்து பேசி வருகிறார். துருக்கி ஒரு இஸ்லாமிய மாதிரி அரசாங்கத்தை பிரதிநிதித்துவ படுத்தவில்லை, அது உண்மையில் மேற்குலக நாடுகளை போன்று மதசார்பின்மை மற்றும் தேச நலன் அடிப்படையை கொண்டதாகும்.

http://sindhanai.org/

Jul 27, 2016

துருக்கிய சதிப்புரட்சி - இவர் சொல்வது உண்மையானால்...?

- உஸ்தாத் சஈத் ரித்வான் !


தற்போது அஷ்ஷாமினுடைய நிலத்தில் நடந்தேறி வருகின்ற நிகழ்வுகள் சர்வதேச சக்திகளினதும், பிராந்திய சக்திகளினதும் அதிமுக்கிய கவனத்தை ஈர்த்துள்ள விடங்களாகும். ஏனெனில் அஷ்ஷாமிலே தொடருகின்ற போராட்டம் முதலில் முஸ்லிம்களுக்கும், இரண்டாவது ஐரோப்பாவுக்கும். மூன்றாவது அமெரிக்காவுக்கும், பின்பு ஏனைய தரப்பினர்களுக்கும் வாழ்வா சாவா போராட்டம் எனக்கருதும் அளவிற்கு கனதியானதாகும். அந்தப் போராட்டத்தின் முடிவிலே வெற்றியோடும், இலாபத்தோடும் திரும்புபவரே தோன்றவிருக்கும் அடுத்த யுகத்தின் அதிபதியாக வெளியேறுவதுடன், அதிலே தோற்கடிக்கப்படுவர் சர்வதேச அரங்கில் மதிப்பிழந்த செல்லாக்காசாகி விடும் சூழல் தோன்றிவிடும்.


சிரியாவில் புரட்சி வெடித்த சந்தர்ப்பத்திலிருந்து இன்றுவரை ஏனைய சர்வதேச சக்திகள் சிரிய விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை தடுப்பதற்காக அமெரிக்கா கடுமையான பிரயத்தனத்தை எடுத்து வருகிறது. இதுவரை காலமும் எவரேனும் அதற்குள் தலையிட்டு இருப்பார்களேயானால் அது அமெரிக்காவின் அனுமதியுடனோ அல்லது கடைசியாக ரஸ்யா தலையிட்டதைப்போல அமெரிக்காவில் வேண்டுதலின் பேரிலோதான் அவை இடம்பெறுகின்றன.


பேச்சுவார்த்தைகள் போன்ற அரசியல் வழிமுறைகளினூடாக, அல்லது ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டிப் படுகொலைகளினூடாக சிரியப் புரட்சியில் பாரிய அலுத்தத்தை பிரயோகித்து அமெரிக்கா வழங்குகின்ற தீர்வுக்கு இணங்கச் செய்யும் அமெரிக்காவின் அனைத்து முயற்சிகளும் படு தோல்வியில் முடிந்துள்ளன.


சிரியப்புரட்சி அனைத்து பிரதான தரப்புக்களையும் கதிகலங்கும் ஓர் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. குறிப்பாக யாருடைய கையில் களத்தின் கயிறுகள் இருக்கின்றனவோ அந்த அமெரிக்காவையே அது விழிபிதுங்கச் செய்துள்ளது.


பாவித்த அனைத்து துரும்புகளும் கை கொடுக்காத நிலையில் இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெறியேறும் பாதையாக துருக்கியை பயன்படுத்த அமெரிக்கா கண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அதன்படி அதனது நாசத்திட்டத்தை தனது முக்கிய முகவரான அர்துகானின் கரங்களால் அமூல்படுத்த அது காத்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய பிரபல்யத்தை தன்னகப்படுத்தியிருக்கும் அர்துகானுக்கு சிரியாவுக்குள் இயங்கும் சில குழுக்களிடையே காணப்படும் ஏற்பு நிலையை அது பயன்படுத்த நினைத்திருக்கிறது. குறிப்பாக சிரியாவுக்குள் ஈரானிய வகிபாகம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விடயமாக தோற்றம் பெற்றுள்ள நிலையிலும், சிரியாவுக்குள் ரஸ்ய - ஈரானிய கூட்டணி முயற்சி இனி பலிக்க போவதில்லை என்ற நிலை உருவாகியிருக்கின்ற நிலையிலும் அமெரிக்காவின் கவனம் துருக்கி மீது குவிந்துள்ளமை தவிர்க்கப்பட முடியாததே.


எனவே அது வரவிருக்கின்ற அரங்கிற்கு ஏற்றவாறு அனைத்தையும் தயார்படுத்த களத்திற்குள் குதித்துள்ளது. அவற்றில் முக்கியமானவை,


1. எதிர்கால சிரியா இஸ்ரேலுடன் விரோதத்தைப் பேண மாட்டாது என்பதற்கான உத்தரவாத்தை வழங்குவதற்காக துருக்கியின் சியோனிச யூதர்களுடனான உறவை சுமூகப்படுத்துவது.



2. “அஷ்ஷாமின் கொடுங்கோலன் பஷாரின் முழுமையான வெளியேற்றமே சிரியாவின் தீர்வுக்கான நிபந்தனை” என இதுவரை காலமும் பேரளவுக்காவது முன்வைத்து வந்த அர்துகானின் உறவை பஷாருடன் சுமூகப்படுத்தி பலப்படுத்துவது.



3 சிரியாவில் துருக்கியின் தலையீட்டால் ஈரானுக்கும் அதன் நலன்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தி ஈரானுடனான உறவை மேம்மடுத்துவது.



4. துருக்கியின் தலையீட்டால் ஈராக்கின் உள்ளரங்கில்; ஏற்படக்கூடிய பாதிப்பை விளக்கி ஈராக்குடனான உறவை மேம்படுத்துவது.



5. திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் அதனுடன் ஒருங்கிணைப்புடன் செயற்படவும், ஐரோப்பியத் தலையீட்டை தொடர்ந்து தள்ளி வைத்துக் கொள்வதற்கும் ரஸ்யாவுடனான உறவை சுமூகப்படுத்துவது



6. அண்மையில் இஸ்ரேலுடன் சமூகமான நல்லுறவை ஏற்படுத்திய கேவலமான செயலினால் அர்துகானின் பிரபல்யம் துருக்கிக்குள் சரிவடைந்து செல்வதை தடுத்து நிறுத்துவது. துருக்கிய இராணுவத்திற்குள் அர்துகானுக்கு எதிராக உருவாகி வரும் எதிர் சக்திகளின் விவகாரத்தை தீர்;த்து வைப்பது...


தமது அரசியல் தீர்மானப் பொறிமுறைக்கு வெளியே இடம்பெற்றதாக அர்துகானே ஏற்றுக்கொண்ட சம்பவமான ரஸ்ய தாக்குதல் விமானத்தை துருக்கிய விமானப்படை சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்த எதிர் சக்திகளின் வளர்ச்சியை தெளிவாகக் காட்டியது துருக்கிய நிகழ்வுகளை அவதானிப்போர் அறிந்த விடயமே.


7. சிரியக் களத்துக்குள் அர்துகான் முழுமையான நுழைவதாக இருந்தால் உள்நாட்டுக்குள் அவரை புறமுகுகில் குத்துகின்ற எந்தவொரு உறைவாளையும்; விட்டு வைக்க முடியாத நிலை உருவாகும். இத்தகைய உறைவாட்கள் இராணுவத்துக்குள் அவரை எதிர்க்கின்ற அணிகளில் பிரதிபலிக்கத் தொடங்கியிருந்ததால் அவற்றை முற்றாக அகற்றுவது.



மேலும் முக்கிய சில அவதானங்கள்...


முறியடிக்கப்பட்ட சதிப்புரட்சி, மக்கள் ஆதரவைத் திரட்டக்கூடிய விதத்தில் மக்களை விழித்து ஆற்றப்பட்ட எத்தகைய உரையையும் தாங்கி வராமலும், அர்துகானுக்கு எதிராக மக்களை தூண்டிவிடக்கூடிய விதத்தில் அவரது கொள்கைகளை அம்பலப்படுத்தாமலும், இன்னும் சொல்லப்போனால் சதியினை மேற்கொண்டவர்களின் இலக்குகளை சுட்டிக்காட்டக்கூடிய அல்லது சதிப்புரட்சியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய நலனை சுட்டிக்காட்டக்கூடிய எத்தகைய சைக்கினையைக் கொண்டிராத வெறுமையாக ஒன்றாகவே காட்சியளிக்கிறது.


அதற்கும் மேலாக சதிப்புரட்சியின் இரு மருங்கிலுள்ளவர்களும் ஒரே திசையை பின்பற்றுபவர்கள். அர்துகானும், அவரது எதிராளிகளான பத்ஹ}ல்லாஹ் குலனும் அமெரிக்காவை பின்பற்றுவர்கள்!


மேலும் சதிப்புரட்சியினால் இராணுவத்துக்குள் தமக்கு இருக்கின்ற செல்வாக்கிற்கு என்னவாகும் என்பது பற்றி பிரித்தானியர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சதிப்புரட்சி தொடர்பாக பேசிய அமெரிக்க பேச்சாளர்களின் பேச்சுக்களில் சஞ்சலமற்ற நிலை தெரிகிறது.


மேலும்...

இந்த சதிப்புரட்சி அர்துகானினதும், அவரது அரசாங்கத்தினதும் பிரபல்யத்தை அதிகரிக்கும்.
மேலும் இராணுவத்தின் மீதான அவரது இறுங்குப்பிடியை உறுதிப்படுத்தும்.
அத்துடன் அவரது அரசியல் எதிராளிகளை மென்மேலும் பலகீனப்படுத்தும்.


இவை அனைத்தும் அர்துகானுக்கு கைகூடி வருமானால், சிரியாவில் அமெரிக்காவுக்காக சேவகம் செய்யும் துருக்கியின் வகிபாகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வலிமையை அது அர்துகானுக்கு வழங்கும்.

முடிவாக,



சிரியா மீது துருக்கி செய்ய இருக்கின்ற தலையீடு சிரியப்புரட்சி தொடர்பான அமெரிக்காவின் அதிமுக்கியமானதும் ஆபத்தானதுமான செயற்திட்டங்களில் ஒன்றாகவே இருக்கப் போகிறது.


இந்தப் புரட்சிக்கு பலியாகிய துருக்கிய இராணுவம் அமெரிக்காவின் பலிக்கடாக்களாகியிருக்கின்ற அதேவேளை அரங்கேற்றப்பட்ட துருக்கிய சதிப்புரட்சியானது கொடியதொரு எதிர்காலத்திட்டத்திற்காக, காணப்படும் நிலைமைகளை கட்டுப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வாகவே தெரிகிறது. மாறாக அது ஏற்கனவே நடந்துகொண்டிருந்த முரண்பாடுகளின் ஒரு பகுதியாக தென்படவில்லை.


எனவே நிகழ்வுகள் எதை நோக்கி? எந்தளவு தூரத்திற்கு? எவ்வளவு காலத்திற்கு? நீளப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Source : Darulaman.net