இஸ்லாமிய மறுமலர்ச்சி

“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)

Apr 9, 2013

இது சிரியாவின் முகவரியில் இருந்து உலக முஸ்லீம் உம்மாவின் உள்ளத்தை நோக்கி……

இது சிரியாவின் முகவரியில் இருந்து உலக முஸ்லீம் உம்மாவின் உள்ளத்தை நோக்கி……

மரத்துப் போன மனதில் இருந்து
விறைத்துப்போன விரலுக்கு
வரும் வாத்தைகள் இந்த 'உம்மாவின்'
சோகங்களால் கண்ணீர் வடிப்பினும்
மீண்டும் இஸ்லாம் சக்தியாய் மாறி
கிலாபாத்தின் கேடயத்தில்
விடுதலைக்கதவுகளை
தட்டித்திறக்கும் நாள் வெகுதூரமில்லை
ஓ சபிக்கப்பட்ட சமூகமே !
ஓ வழிதவறிய சமூகமே !
சமரசத்தின் பெயரில் மனித அடிமை
நீ தரும் சாசனம் தான் நீ தரும் ஜனநாயகம் !
பூகோள மய பூச்சாண்டியில்
முஸ்லிம் பூமிகளை மயானமாக்க
எம்மவரைக்கொண்டே எம் நிலத்திலே
எமக்கான கபுறு தோண்டி நீ
சாதிக்க நினைக்கும் சாத்தானிய இராஜ்ஜியம்
உன் நிரந்தரக் கனவுதான் !!
சத்திய வாசனையும் ஜாஹிலிய துர்நாற்றமும்
ஒன்றாகிவிட்ட எம் கழுதைகள்
சற்று அரசியல் கொட்டமடிக்கட்டும்!
விரைவில் இஸ்லாத்தின் கட்டுத்தறியில்
கட்டுண்டு விடும் !
ஆதிக்க கதிரை காக்க துவக்கு குதிரைகளை
தட்டுவது உன் வரலாற்று வழிமுறைதான்
உன் ஈனத்தனமான ஈயங்கள்
எமக்கு முடிவுரை எழுதிடாது !!
இனி நீ சந்திக்கப்போவது எம் கிலாபாத்தின்
உதயத்தில் சஹாதத்தின் வேட்கையில்
தோல்வியின் சமாதியில் துயரத்தின்
அழிவினைத்தான்!!
மீண்டும் நாம் உனக்கு கைபரை நினைவு கூர்வோம் !!
ஸ்பெயினை நினைவு கூர்வோம் !!
உங்களிருவருக்கும் சமாதியா
அல்லது "ஜிஸ்யா" வா அது உங்கள் தெரிவு !
என்னென்றால் சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது !
இனியும் சத்தியம் உள்ளதால் அசத்தியம்
அழிந்தே தீரும் !
on April 09, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: 'அஷ் ஷாமில்' (சிரியா), முஸ்லிம் உம்மாஹ்

ஜனநாயக நிழலில் முஸ்லிம்!!??


ஜனநாயக நிழலில் முஸ்லிம்!!??

ஆட்சியாளர்களை தேர்ந்த்தேடுக்கும் உரிமை ,தட்டிக் கேட்கும் உரிமை ,போன்ற சில பண்புகளை அது சுமந்திருப்பதால் "ஜனநாயகம்" (Democracy ) சத்தியமாகிவிடாது!! அதன் தோற்றம் ,நோக்கம் என்பன இஸ்லாத்தின் அரசியலான மக்களுக்கு நன்மை செய்தல் என்ற விடையத்தை அடிப்படையாககொண்டதுமல்ல. .மாறாக 'குப்ரிய'ஆளும் வர்க்கத்தின் ஒரு எமாற்றுக்கருவி ; அதை இஸ்லாத்திற்கு எடுக்கும் தேவை ஏன்?

ஆன்மீக வாழ்வையும் ,உலக வாழ்வையும் பிரிப்பது ! எனும் அடிப்படையில் கிறிஸ்தவ உலகம் இந்த ஜனநாயகத்தை தனது கட்டாயத்தேவையாகபண்டைய கிரேக்கரின் பின் மத்திய ஐரோப்பாவின் மதகுரு சர்வாதிகாரத்தை எதிர்க்க பயன்படுத்தி கடவுளுக்குரியதைகடவுளுக்கும் ,அரசருக்குறியதை அரசருக்கும். எனும் விதியின் கீழ் மதச்சார்பின்மை கோட்பாட்டை நோக்கியதாக திசை மாற்றி ஜனநாயகத்தின் நவீன பயண்பாடு ஆரம்பிக்கின்றது என்பதுதான் வரலாறு.

முஸ்லிம் சமூகம் இதன்பக்கம் வழிகாட்டப்படும்நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் . இஸ்லாத்த்தினில் பிரத்தியோகமானதும் நிலையானதுமான ஒரு அரசியல் வழிகாட்டல் இல்லையா ?!! 'வஹி' இந்தவிடையத்தில்குறைபாடு செய்துவிட்டதா ?!! அல்லாஹ் (சுபு ) எம்மை பாதுகாக்க வேண்டும் .

அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் நிராகரிப்பாளர்கள் ! (TMQ 5:44)

அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் அநியாயக்காரர்கள் ! (TMQ 5:45)

அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் பாவிகள் ! (TMQ 5:47)

(நபியே !)"நிச்சயமாக அல்லாஹ்விற்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி
உரித்தானதென்பதை நீர் அறியவில்லையா? ... (TMQ 5:40)

போன்ற அல்குர் ஆன் வசனங்களும் இன்னும் பல ஏராளமான அல்குர் ஆன் வசனங்களும் தெளிவாக இருக்க முஸ்லிம்' உம்மாவை ' தவறான ஒரு படு பாவத்தை நோக்கி இந்த ஜனநாயகம் இட்டுச்செல்கின்றது என்பது ஒரு வெளிப்படையுண்மை.

இதோ உதாரணம் துருக்கி ,எகிப்து ,பாகிஸ்தான் ,போன்ற முஸ்லிம் நிலங்களில் கூட இஸ்லாமிய 'ஷரியாவை ' அமுல் படுத்த 51% வாக்குகளை எதிர் பார்த்து நிற்கின்றது !!ஒரு முஸ்லிமின் முன் இஸ்லாமிய 'ஷரியா' வும் ஒரு தெரிவு !!!??? அவ்வளவுதான்.

இந்த ஜனநாயகத்தை பயன்படுத்தி இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையவைக்கமுடியும்
எனும் வாதமே நகைப்புக்கிடமானது ! ஏனெனில் இதனோடு இணைவு என்பதே முதலாளித்துவத்தை தலுவச்சொல்லும் 'கலிமா ' தான் ஏனெனில் அது தனக்கென பிரத்தியோகமான ஓர் அரசியல் ,பொருளாதார, சமூகவியல் வழிமுறைகளை கொண்டது .

அதனூடாக பயணிக்க நிணைப்பவர்களுக்கு தனது சிந்தனைகளோடும் , வழிமுறைகளோடும் முரண்படாத வரை ஒரு செயல் சுதந்திரத்தை தாராளமாக அள்ளிவழங்கும் அமெரிக்காவின் வாசிங்க்டன் முதல் இஸ்ரேலின் டெல்அவிவ் வரை இதில் தடையே இருக்காது ! அதன் கொள்கை சார் சுயரூபத்தை புலப்படுத்துமிடம் என்று அவர்கள் தனிமனித சுதந்திரமாக கருதுமிடங்களில் இஸ்லாம் தனது சட்டங்களை சொல்லவரும்போதுதான் ஆட்கள் தொகையே வாழ்வின் சட்டங்களையும் , அரசியலையும் ,அதிகாரத்தையும் தீர்மானிப்பதாக அது கூறும் !

இன ,மத, குல, நிற ,வர்க்க, பிரிவுகளை மறைமுகமாகவோ ,வெளிப்படையாகவோஅங்கீகரித்து அது மனித உரிமையாகவும் ,தனி மனித சுதந்திரமாகவும் வரையறுக்கும் ! தேச, தேசிய எல்லைகளை இயல்பாக்கி கீழ்த்தரமான இன, மத, சாதி மோதல்களை தூண்டிவிடும் .இதுதான் ஜனநாயகத்தின் சுயரூபம் !!!! மேலே தந்த சுருக்கமான ஜனநாயகத்தின் விளைவுப்பொருட்கள் எந்த அடிப்படையில் இஸ்லாத்தோடு ஒத்துப்போகும் ! சற்று இது பற்றி சிந்திப்போமா?
Like·Comment·Share·Follow
on April 09, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Dangerous Concepts, ஜனநாயகம்

ஓ என் சமூகமே !!

ஓ என் சமூகமே !!

“நபி (ஸல்) அவர்கள் கஃபாவை சுற்றி வரும் போது அதனைப் பார்த்து கூறினார்கள், உனது (கஃபா) சிறப்பு எத்தகையது! உனது (கஃபா) நறுமணமும், புனிதமும் எத்தகையது! ஆனால் எவனுடைய கரத்தில் இந்த முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒரு விசுவாசியின் ஒரு துளி இரத்தமும், அவனது உடமைகளும் அல்லாஹ்(சுபு) முன்னிலையில் உன்னை (கஃபா) விட புனிதமானது. நல்லதைக்கொண்டல்லாமல் ஒரு விசுவாசியை கருத வேண்டாம்” (அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), இப்னு மாஜா)


இன்று நடந்து கொண்டிருப்பது என்ன ? உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு முஸ்லிமின் உடல்,உயிர்,உணர்வு,உடைமைகள் எல்லாமே குப்பார்களின் கையில் ஒரு விளையாட்டுப்பொருள் போல இருக்கும் ஒரு நெருக்கடியான சுழல் !!!!
வேட்டைப் பொருளான மியன்மார் சகோதரர்களின் தொடர் துயரம் !!சிரியாவின் அவலம்!! காஸ்மீர் , இலங்கை என அவமானமும் , அவலமும் தொடர்கிறது!

மௌனிகளாக ஒவ்வொன்றையும் அவதானித்துக்கொண்டிருக்கிறோம் ! நேற்று பாலஸ்தீனிலும் ,ஈராக்கிலும் நிகழ்ந்த போது எமது குறைந்தபட்ச சகோதரத்துவ உணர்வை காட்டினோம் ;இன்று உறக்கமா அச்சமா ? எது எப்படியோ நாம் உலகில் ஒரு சிறந்த சமூகம் எம்பதை மறந்துவிட முடியாது . சகோதரத்துவம் ,சத்தியம் நீதி இதற்காக தனி மனிதனாகவேனும் நாம் போராடியே ஆகவேண்டியது எமது கடமை .

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காதிருப்பது கோழைத்தனம்! ஒரு முஸ்லிம் கோழை என்பதை விட அவமானமான விடயம் வேறொன்றுமில்லை !

மேலும் இது ஈமானோடு மோதும் விடயம்
தீமையை கண்டும் மனத்தால் வெறுத்து ஒதுங்கும் நிலை ஈமானின் இறுதி நிலை !அதன் அர்த்தம் அதற்கு அப்பால் ஈமான் இல்லை என்பதுதான் . இப்போது இந்த
விடயம் எமது அகீதாவோடு மோதுகின்றதல்லவா !! எமது மறுமை வாழ்விலும் கேள்வி ஏற்படுத்தும் இந்த பலவீனத்தை உடைத்தெறிந்து சத்தியத்தின் காவலர்களாக எமக்கு அல்லாஹ் (சுப்) அளித்துள்ள காலத்தின் கடமை நோக்கி நகர்வது மட்டும் தான் எமது இம்மை மறுமை வெற்றி என்பதை மறந்துவிட வேண்டாம் .

இந்த இடத்தில் எது காலத்தின் கடமை
என்பதையும் சொல்லவேண்டியுள்ளது . நிச்சயமாக அது வன்முறை கலந்த உணர்வுக்கு மட்டும் வேலை கொடுக்கும் போராட்டம் அல்ல;
மாறாக எமக்கான கேடயத்தை அமைப்பது அது அரசியல் இராஜதந்திர ரீதியில் எம்மை பாதுகாக்கும் . அதன் பலம் நீங்கள் அறிந்ததுதான் ஒரு பெண்ணின்
அவலக் குரலுக்காக பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி இந்தியா வரை அது கேடயமாக வந்தது .

ஒரு கிறிஸ்தவ சமூகத்தின் அவலக்குரலுக்காக அசாதாரணமாக ஸ்பெயினிலும் நுழைந்து அவர்களை காத்தது . அதுதான்' கிலாபா 'எனும் அரசியல்
பலமும் எமது ஒரே தலைவரான அதன் கலீபாவினாலும் தான் சாத்தியமானது .இதுதான் இஸ்லாம் சொல்லும் ஒரே நிரந்தரத்தீர்வு .

"ஓ எனது உம்மாவே ! முஸ்லீம்களாகிய எமது உயிர்,உடமை ,உணர்வு அனைத்தும்
பாதுகாக்கப்பட்டு அதற்கான கண்ணியமும் வழங்கப்படுவதற்கான ஒரே வழியும்
இதுதான் .முஸ்லிம்கள் மீது 'காபீர்கள் ' எந்நிலையிலும் அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விடும் இழிவுகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஒரே வழியும்
இதுதான். இதனையே 'அல்குர் ஆனில் ' அல்லாஹ்(சுப்) பின்வருமாறு குறிப்பிடுகிறான் ;"
"முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான். "(அந்நிஸா :141)
on April 09, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கிலாபத்

இலங்கை முஸ்லிமும் கிலாஃபா தொடர்பான கோட்பாடும்.


இலங்கை முஸ்லிமும் கிலாஃபா தொடர்பான கோட்பாடும்.

கிலாஃபா பற்றிய தேவை பற்றி சில இயக்கங்கள் மிக நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே கருத்தியல் ரீதியான அறிமுகத்தை சொல்லிவிட்டன. ஆனால் அதை அடைவதட்கான பாதை தொடர்பில் சுன்னாவை மிகச் சரியாக வரையறுக்கவில்லை. ஒரு தெளிவான இஜிதிஹாதின் அடிப்படையில் கிலாஃபா நோக்கிய இலக்கும் அடிப்படை வரைபும் இடப்படவில்லை . வெறும் உணர்வு ரீதியாக வேலைத் திட்டங்கள் செயல் படுத்தப் பட்டன.

சூழ்நிலை வாதங்களால் அடிப்படை இலட்சியங்கள் பின் தள்ளப் பட்டன. பின்னர் அந்த சூழ்நிலை
நிகழ்வுகலுக்கான தீர்வுகள் அடிப்படை இலட்சியங்கள் ஆகின காலத்தால் கிலாஃபாவுக்கு முன்னர்
அடைய வேண்டிய சில, பல படித்தரங்கள் என சில முன்னுரிமை பெற்றன. அது ஒரு ய்தார்த்தப் போலியான சக்கரமாகி அவர்களை ஏற்றி சுற்றிக் கொண்டே உள்ளது. அதில் அவர்கள் கிலாஃபா தொடர்பாக மிக குழப்பமான கருத்துக்களையே முன்வைக்கின்றனர்.

இஸ்லாமிய ஜனநாயகம் எனும் குப்ரியக் கலவை ஒரு சிறந்த நிகழ்கால அரசியலாக செக்கியூளரிச சிந்தனையின் ஆதிக்கத்தோடு கற்ற முஸ்லீம்களும் , பட்டதாரி ஆலிம்களும் முன்மொழிய கிலாஃபா சிந்தனை இப்போது காலம் கடந்த ஒரு பழமை வாதம் ! என
ஏறத்தாள சொல்லாமல் சொல்லப் படுகிறது.

அண்மையில் ரிசானா நஃபீக் விவகாரத்தில் கூட ஒரு பட்டதாரி+ஆலிம் இஸ்லாத்தின் குற்றவியல் தண்டனை முறையை ஒரு மனித உரிமை மீரளாக விமர்சித்து , சரீயாவின்இயங்கியல் காலத்தால் சிலதை இல்லாமல் ஆக்குவதே என வஹி இன்றைய உலகுக்கு
ஆபத்தான ஒரு தீர்வு என சொல்லாமல் சொன்னார்!

அதி உயர் பாதுகாப்பு மேட்கின் ஜனநாயகவிழுமியங்களில் உண்டு என ஒவ்வொரு முஸ்லீம் பாமரனும் அழைத்துச் செல்லப் படுகிறான்!ஆனால் இந்த அழைப்பு ஹம்து சலவாத்தோடு, குப்ருக்கு தொப்பி போட்டு உலகத்தை போலவே கலப்பட இஸ்லாம் ஒரு கலர் பிலிமாக முஸ்லீம்கள் முன் ஓட்டப்பட இலங்கை முஸ்லீம்
ஏன் கிலாஃபா பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும்!?
on April 09, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Sri Lanka

எம் முன்னோர்கள் பெற்ற துன்பங்களை அடையாமல் சுவனம் செல்ல இலகு வழி என்ன?


Abdur Raheem
எம் முன்னோர்கள் பெற்ற துன்பங்களை அடையாமல் சுவனம் செல்ல இலகு வழி என்ன?

சிறுபான்மை வாழ்விட்கான ஃபிக்ஹ் பற்றிய வாதங்களும், நியாயங்களும் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்துக்கு மத்தியில் இப்போது அதிகம் பேசப் படுகிறது. இந்த 'ஃபிக்ஹுல்' அகல்லியாத் ' எனும் விடயம் நேரடியாக அதன் விளக்கங்களுடன் மக்கள் மத்தியில் முன்வைக்கப் படாத நிலையிலும் அதன் பரீட்சார்த்த பிரயோக வடிவங்கள் சிறுபான்மை நிலங்களில் பிரயோகிக்கப் படுவதையும் எம்மால் அவதானிக்க முடிகிறது.

இஸ்லாத்தில் ஃபிக்ஹ் துறை என்பது ஒரு பாரிய துறை அதன் வளர்ச்சிப் படிகள் , அதன் நன்மைகள் என்பன மறுக்க முடியாத உண்மைகள். ஆனால் ஃபிக்ஹ் துறை தொடர்பான நிகழ்கால நடத்தை மாற்றங்கள் இஸ்லாமிய சமூகத்தை எவ்வாறான நடத்தை
நோக்கி இட்டுச் செல்கின்றது ? என்ற வகையில் நவீன இமாம்களின் தீர்வுகளை உள்ளடக்கிய
இந்த ஃபிக்ஹுல் அகல்லியாத் ஆழமான பல கோணங்களில் ஆரயப் படவேண்டியது.

முதலில் இந்த பிக்ஹுல் அகல்லியாத் என்ற விடயத்தின் பிரயோக வடிவம் இஸ்லாமிய
வரலாற்றில் எந்த காலப்பகுதியில் யாருக்காக இமாம்கள் முன் மொழிந்தார்கள்? என்ற வினாவில் இருந்து விடயத்தை நாம் ஆராய முட்படுவோமானால்அது இஸ்லாமிய அதிகார அரசியலின் கீழ் இஸ்லாமிய சிவில் , கிரிமீனள் சட்டங்களை ஏற்றவர்களாக வாழ்ந்த இஸ்லாத்தை ஏட்காத திம்மிகள் விடயத்தில் முன்மொழியப்பட்டு பிரயோகிக்கப் பட்டதாகும்.
எனும் ஒரு அடிப்படை உண்மையை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்

சிறுபான்மைக்கான பிக்ஹ் எனும் சிந்தனா வாத மூலவேர் இஸ்லாம் பலம் பொருந்திய
அரசியல் இராஜ தந்திர சக்தி மிக்க நிலையில் , வஹி காட்டிய வாழ்க்கைப் பாதையை
சுதந்திரமாகவும் எவ்வித தொந்தரவும் இன்றி பிரயோகிக்கக் கூடிய சூழலில் அதன்
ஆதிக்கப் பிடியின் கீழ் விரும்பி அல்லது விரும்பாத நிலையில் உள் நுழைந்து தாமும் இஸ்லாமிய சரீயாவின் நிழலில் வாழ தவிர்க்க முடியாமல் தமது முரண்பாடான வாழ்வியலை கைவிட்டு , சிலதை தளர்த்தி , சிலதை மாற்றி , தமது முரண்பாடற்ற புதிய
நடத்தை மூலம் இஸ்லாத்தின் சுதந்திரமான இயங்கியலுக்கு தடையாக அமைய மாட்டோம்
என்ற எடுகோளை அடிப்படையாகக் கொண்ட வரைபு தான் இந்த பிக்ஹுல் அகல்லியாத் சொல்லும் பிரயோக வடிவமாகும்

எனவே ஏதோ ஒரு ஆதிக்க அதிகாரத்தின் கீழ் அதன் நாகரீக ,பண்பாடு ,வழிமுறை என்பவைகளோடு முரண்பாடான நிலையில் தனது வாழ்வியலுக்கான நடத்தை தொடர்பாக அந்த அதிகாரம் அங்கீகரிக்கும் ஒரு வழிமுறை தொடர்பாக பலவீனமான ஒரு சிறுபான்மை மட்டுமல்ல ஆட்கள் தொகையில் அதிகமாக இருந்த இந்தியா அந்தாலூசியா , போன்ற பகுதிகளிலும் ,இன்னும் இஸ்லாம் தனது ஆதிக்கப் பகுதியாய்
அதிகாரம் செலுத்திய எல்லாப் பகுதிகளிலும் ஒரு இஜ்திஹாதை அடிப்படையாக கொண்ட
ஒரு பிக்ஹ் தேவைப்பாடுடையததாக இருந்ததை மறுக்க முடியாது.

இந்த நியாயங்களை மனதில் கொண்டவர்களாக இன்று பேசப்படும் பிக்ஹுல் அகல்லியாத் சொல்லும் எடுகோள்கலை ஒப்பீடு செய்யும் போது 1. குப்ரின் மேலாதிக்க நிலையை முஸ்லீம் விரும்பி அல்லது விரும்பாத நிலையில் அங்கீகரிக்க வேண்டும். 2. குப்ர்
அங்கீகரிக்கக் கூடிய ஒரு மாற்றீடு இஸ்லாத்தில் செய்யப்படவேண்டும். 3. குப்ரின் கலாச்சார நாகரீக நடத்தைகளில் சில அடையாளங்களோடு ஒன்றிய வாழ்வு. இதுதானா நவீன இமாம்கள் சொல்லும் பிக்ஹுல் அகல்லியாத் !?

அதாவது இன்று அரசியல் இராஜ தந்திர ரீதியில் பலவீனமாவர்கள். என்ற நியாயத்தின் கீழ்
முஸ்லீம் தவிர்க்க முடியாத ஒரு சரணாடைவு அரசியலை நோக்கி தள்ளப் படுகிறான்!
ஏட்கனவே உள்ள நிலையும் அதுதானே! குப்ரிய அரசியல் மேலாதிக்கத்தின் கீழ் முஸ்லீம்
இஸ்லாத்தை ஒரு மதமாக்கி அதன் மார்க்க தரத்தை மலை ஏற்றிய பின் அதட்கு மாலை
போட்டு புதுச் சடங்கு செய்வதா!? எனும் கேள்வியை கேட்கச் சொல்கிறது இந்த பிக்ஹுல் அகல்லியாத்!

on April 09, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Sri Lanka

சிந்திக்க ஒரு நிமிடம்.

சிந்திக்க ஒரு நிமிடம்.


நிர்வாண நியாயங்களில் மஸ்ஜிதில் தேசியக் கொடியும் பறக்க விட்டோம்!! அவமானங்கள் சாணாக்கியமாக மொழி பெயர்க்கப் பட கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஆமா சாமிகளாகி ! அல்லாஹ்வை 'ரிஸவ்வில்' ஒழித்தும் வைத்தோம்! கொல்லப் படுவோம் என்பதட்காக எம் உயிரினும் மேலான அகீதாவை தேசியப் படுகுழியில் போட்டு எம் இமாம்கள் இரகசியமாக இகாமத் சொல்லச் சொன்னார்கள்! குனூத் ஓதி குப்ரை வெற்றி கொள்வோம்! எனும் விளாங்கு மீன் வடிவில் எம்முன் ஆச்சரியமான 'தவக்குளுடன் 'நின்றார்கள் !! இங்கு 'சிட்டிசன் ஸிப் 'யதார்த்தத்தில்! 'ஹலால் சீலை' ஸீப்பாக்கி ' எக்ஸ்‌போர்ட் எகநமியில்' அந்த 'பொது பிழை சேனாக்களின்' மூத்த தளபதிகளின் அரசியல் அகம் பாவத்துக்கு புதுப் பொழிவு கொடுத்து ! போதாக்குறைக்கு ஹுதைபியா சம்பவத்தை கோமாளிக் கூத்துக்கு ஆதாரமும் காட்டினார்கள்! இப்போது முஸ்லீம்களுக்கு தீர்வு ? எமது அகால மரணம் தவிர்க்க இலவசமாக வீட்டுக் கொடுக்கப்படும் எதிரியின் இலாபம் நோக்கிய இஸ்லாத்தின் அளவா!? புத்தியை தீட்டுவதாக நினைத்து எம்மிடம் மிஞ்சிய 'கச்சையையும்' கழட்டி தலைப்பாகை காட்டினால் எல்லாம் சரியாம்!?
on April 09, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Sri Lanka

புனித பூமி விவகாரத்தில் இலங்கையில் யாரும் இனி ஆதாரம் கேட்க முடியாது!?

புனித பூமி விவகாரத்தில் இலங்கையில் யாரும் இனி ஆதாரம் கேட்க முடியாது!?
கௌதம புத்தர் எங்கு பிறந்தார் ? என்பது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் சர்ச்சைக்குறிய
விடாயமாக இருந்து வரும் நிலையில் இப்போது அவர் இலங்கையில் பிறந்ததட்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக இலங்கையின் ரத்மாலானையில் அமைந்துள்ள பௌத்த தர்ம ஆய்வகப் பணிப்பாளர் 'ஹேகொட விபஸ்ஸி தேரர்' தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தேரர்களுக்கு மத்தியில் பலத்த சர்ச்சைகளும் விவாதங்களும் இருந்து வந்தாலும் எமது கவனத்தை கவரும் ஒரு பார தூரமான அரசியல் இருப்பதே இந்த விடயத்தை நான் பதிய வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.


யார் இந்த 'ஹேகொட விபஸ்ஸி தேரர்' ? என்ற வினாவில் இருந்து விடயத்தை ஆராய வந்தால் எதிர்காலம் பேச இருக்கும் தொடரான அண்டப் புழுகு அரசியலுக்கு அத்திவாரமான இந்த ஆகாசப் புழுகு இதிகாச திரிபு ஏன் ? என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.

இவர் தேசிய ஹெல உருமைய அமைப்பின் சார்பில் போட்டியிட்டு இலங்கை
பாராளுமன்றத்தில் உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டவர் . பழுத்த அனுபவம் மிக்க இனவாதி.
தட்போது இந்த ஹெல உருமைய அமைப்பு அரசியல் ரீதியில் இலங்கையின் ஆளும் கட்சியினால் உள் வாங்கப் பட்டும் உள்ளது. இந்த அமைப்பின் தலைவர் உட்பட பலர் முக்கிய அமைச்சு மற்றும் இதர பதவிகளில் அரசினுள் இருக்கின்றனர்.

1980 களில் அன்று ஆளும் கட்சியாக இருந்த யூ. என்.பி அரசியலில் ஒரு இதிகாச திரிபு சம்பவம் தமிழர்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியல், வன்முறை நோக்கமாக முன்வைக்கப் பட்டது. அப்போது ஆளும் தரப்பின் அமைச்சர்களாக இருந்த லலித் அதுலத் முதலி , மற்றும் காமினி திஸ்ஸ நாயக ஆகிய இருவரும் இந்த அரசியல் நோக்கம் கருதிய இதிகாச திரிப்பை தொல் பொருள் ஆய்வின் ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக கூறி முன் வைத்தனர் .

அதாவது தென் இந்தியாவில் இருந்து இலங்கை வந்து அநுராத புரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த எள்ளாலன் எனும் மன்னனுக்கும் அவனுக்கு எதிராக அதிகார நோக்கில் போரிட்டதாக குறிப்பிடும் சிங்கள மன்னனான துட்ட கைமுணு எனும் அரசனுக்கும் இடையில் நிகழ்ந்த போரில் கொல்லப்பட்ட எள்ளாலனின் வீரத்தை மதித்து அவனது சமாதியில் துட்ட கைமுணு கட்டிய நினைவு தூபி என வரலாறு குறிப்பிடும் சம்பவத்தை மறுத்து குறித்த தூபி , சமாதி என்பன துட்ட கைமுணுவுக்கு சொந்தமானது
என பேசினர்!

ஆரம்பத்தில் சர்ச்சைகளும் , விவாதங்களும் அவர்களுக்கு மத்தியில் இருந்து எழுந்தாலும் இன்றைய சந்ததி அந்த பெரும்பான்மை கவர்சிக்கான குரோத அரசியலை ஜீரணித்வர்களாகவே வாழ்ந்து வருவது தெளிவான உண்மை. அடல்ப் ஹிட்லரின் வலது கையான கோயா பல்சூ குறிப்பிடுவது போல் "ஒரு பொய்யை திரும்ப , திரும்ப சொல்லும் போது காலத்தால் அது உண்மையாகி விடும்" எனும் கருத்தின் அடிப்படையில் இலங்கை அரசியல் பக்குவமாக படியேறி உள்ளது என்பதை புரிய இந்த ஆதாரங்கள் போதும் என்று நினைக்கிறேன்.

இப்போது இந்த தேரர் சொல்லும் கௌதமரின் பிறப்பு விடயமும் காலத்தால் முழு இலங்கையையும் புனித பூமியாக்கும் ஒரு கோட்பாட்டு அரசியலின் அடிக்கல்லாக அமையலாம்! இதே போல இந்தியாவின் அயோத்தி பாபர் மஸ்ஜித் விவகாரமும் ஒரு தெளிவான இதிகாச
திரிப்புடன் சொல்லப்பட்டதும், காலத்தால் பக்குவமாக இந்துப் பெரும்பான்மை மத்தியில் அது உண்மையாகி போனதும் நாம் கண்ட உண்மைகள் .
on April 09, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Sri Lanka

இலங்கையின் முஸ்லீம் சகோதரியே ! சூரா அல் புரூஜில் நீயும் பங்காளி ஆகலாம்!


Sources from....  Abdur Raheem
இலங்கையின் முஸ்லீம் சகோதரியே ! சூரா அல் புரூஜில் நீயும் பங்காளி ஆகலாம்!

முஸ்லீம் உம்மா முழு உலகிலும் வன்முறைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருக்கும் ஒரு சமூகம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குப்ரியத்தின் மேலோங்கிய அரசியல் மேலாதிக்கத்தின் கீழ் ஏறத்தாள அவர்களால் காலத்துக்கு காலம் குப்ரிய இலாபங்களுக்காக உழைக்கும் தரத்திலும் ,அத்துமீறப்படும் பலவீண வடிவத்திலும் ஒரு
அரசியல் கைதியின் தரத்தில் தான் பார்க்கப் படுகிறான் என்பது ஒரு மிகைப்படுத்திய கருத்தும் அல்ல.

ஆனால் 1.5 பில்லியன் மக்கள் தொகையையும் பாரிய நிலப்பரப்பையும், ஏராளமான கனிய வளங்களையும் கொண்ட இந்த உம்மா தேசியம், மன்னாராட்சி எனும் தவறான சிந்தனா வாதத்தின் கீழ் பலவீணப் படுத்தப் பட்டுள்ளது. இந்த அவலமான அரசியல் முஸ்லீம் உம்மா பெரும்பான்மையாக வாழும் நிலங்களில் தொடரும் அதே நேரத்தில் குப்ரியத்தின் நேரடி மேலாதிக்கத்தின் கீழ் இழிவான ஒரு பார்வையோடு கூடிய சிறுபான்மை வாழ்வு எனும் அரசியலின் கீழும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்ப்பந்த அரசியலின் கீழ் குப்ரிய சிந்தனா வாத தாக்கம் தவிர்க்க முடியாமல் இந்த
உம்மாவை தாக்க அதன் இயல்பான வடிவமான இஸ்லாமியம் காட்டிய வாழ்வியல் நோக்கிய
போராட்ட ஒழுங்கை கைவிட்டு தனது உலகியல் இருப்புக்கான குப்ரிய சிந்தனா சார்
அரசியலில் இருந்து தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடவும் தலைப்பட்டது.

ஜனநாயகம், மனித உரிமை , மற்றும் ஜாஹிலீய நிர்வாக ஒழுங்குகளின் கீழ் நிகழ்கால பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் வரிசையில் இஸ்லாம் ஒரு தனித்துவமான மதமாக மட்டும் குப்பார்களால் காட்டப்பட்டு வெறும் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்ற மமதையில்
இஸ்லாமிய சித்தாந்த வடிவம் காலம் கடந்த ஒன்றாக நம்ப வைக்கப்பட்டது.

சில பல இயல்பான பாரிய சிந்தனைத் தவறுகளுடன் முஸ்லீம் உம்மா இருந்தாலும் , இஸ்லாமிய வாழ்வியலின் சில பகுதிகள் அதனோடு ஒட்டி நின்று குப்ரிய வாழ்வியலின் முன் எட்டிப் பார்த்த போது குப்ரியத் அதை ஒரு மத அந்தஸ்தில் பார்க்கவில்லை; மாறாக தனது அரசியல் சமூக வாழ்வியல் மீதான எதிர் வடிவமாகவே நோக்கியது. விளைவு குறித்த விடயத்தை விட்டும் முஸ்லீம் உம்மத்தை திருப்ப தனது சுய ரூபத்தை காட்டியது.

இந்த சுயரூபம் வன்முறை வடிவங்களையும் , சமரச பேரங்களையும் கொண்ட ஜாஹிலீயத்தின்
இயல்பான பாரம்பரிய வழிமுறைகளையும் கொண்டது . இந்த ஜாஹிலீய வடிவமான அரசியலின் ஒரு வடிவமே இலங்கையின் பொது பல சேனா எனும் மதவாத அமைப்பு சொல்லும் அரசியலும் ஆகும். அரச சார்பு அற்ற எனும் வடிவத்தை அது கொண்டிருந்தாலும் பகிரங்கமான அரச சார்பு அதன் நடவடிக்கைகளில் காணப்படுவதை யாராலும் மறுக்க முடியாது.


இங்கும் இராஜ தந்திர பாதுகாப்பற்ற அரசியல் அனாதை தனமே 1.5 பில்லியனுக்கு முன் தனித்து நோக்கப்படும் கீழான தரத்துக்கு காரணமாகும். உண்மையில் ஹறாம் , ஹலால் என்பது தான் முஸ்லீம் உம்மாவின் வாழ்வு அதிலும் வலுக்கட்டாயமாக சமரச பேறத்தை
முன்னிறுத்தி வெற்றி பெற்ற அந்த பொது பல சேனா அடுத்து ஹிஜாப் தடை விவகாரத்தை
போராட்டமாக முன் வைக்கப் போவதாகவும் சவால் விட்டு இந்த முஸ்லீம் உம்மாவின் சூனிய அரசியலை மீண்டும் ஒருமுறை சொல்லிக் காட்டியுள்ளது.

இந்த இடத்தில் 'இப்னு கல்தூண்' எனும் வரலாற்று ஆசிரியர் சொல்லும் ஒரு விடயத்தை
முஸ்லீம் உம்மத் புரிந்து கொள்ள வேண்டும். " தன் இறந்த கால வரலாற்றையும் நிகழ் கால
வரலாற்றையும் புரிந்து கொள்ளாத சமூகத்துக்கு எதிர் காலமே கிடையாது" எனும் வார்த்தைகள் பல உண்மைகளை எமக்கு உணர்த்திச் செல்கிறது.

அது உமய கிலாஃபா ஆட்சியில் இருந்த காலம் அப்போது இன்றைய இந்தியா, பாகிஸ்தான்,
ஆப்கான் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியதே சிந்து என அழைக்கப் படுகிறது அக்காலத்தில் சிந்துவின் ஒரு மன்னனின் கேவலமான நடத்தை ,மமதை என்பன ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த களீபாவிடம் முறையீடு செய்யப்படுகிறது. 'உபைதுல்லாஹ் ' எனும் தூதுவர் அனுப்பப் பட்ட போது அவரும் அந்த மன்னன் கொலை செய்தும் விடுகிறான். இப்படி தொல்லைகள் தொடர்ந்தன.

கடல் கொள்ளை , கைதிகளை தான் விரும்பியவாறு நடத்துதல் போன்ற இழிவான செயல்களை செய்து வந்த இவன் ஒரு முஸ்லீம் பெண்ணை கைதியாக்கி தனது அநியாயத்தை தொடர்ந்த போது இஸ்லாமிய கிலாஃபா அரசிடம் உதவி வேண்டிய அவளது கூக்குரல் ஒரு பாரிய வரலாற்று மாற்றத்தை தந்தது. முஹம்மது பின் காசிம் தளமையில் அந்த அநீதியை தட்டிக் கேட்க ஒரு படையே அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின் சிந்து கிலாஃபாவின் கீழ் வந்த கதை ஒரு தனி வரலாறு.

இன்று ஆப்கானில் ,காஸ்மீரில் , மியன்மாரில் , பல்வேறு துன்பங்களை கண்டு வரும் எம் சகோதரிகளின் அவலக் குரல் வரிசையில் இலங்கையின் சகோதரிகளும் தமது பங்கை செலுத்த தயாராகி விட்டார்கள். முஸ்லீம் உம்மாவே ! நீ சிந்திக்க வேண்டிய தருணம் கிலாஃபா
வந்தால் இந்த அநீதியாளர்கள் பதில் சொல்ல வேண்டியது கட்டாயம் . ஆனால் இப்போது இஸ்லாம் எனும் உனது கொள்கையா ? அதில் விட்டுக் கொடுப்போடு வாழ்வா ? எனும் கேள்விக்கு முன் உனது பதில் என்ன?

முஸ்லீம் சகோதரிகளே! சிரியாவில் ஒரு பல்கலைக்கழக மாணவி இடம் ஒரு பத்திரிகை யாளன் கேட்ட கேள்வி "இந்த கடும் சூடான காலத்திலும் நீங்கள் அணிந்துள்ள ஹிஜாப் ஒரு தொல்லையாக இல்லையா?" என்பதே அதட்கு அந்த முஸ்லீம் பெண் சொன்ன பதில் "நரக நெருப்பு மிகக் கடுமையான வெப்பம் உடையது" (9: 81) எனும் வஹி இன்
வார்த்தைகளே! 'அல்ஹம்து லில்லாஹ்' இன்னும் இந்த உம்மாவின் மிகச் சரியான உயிர் ஓட்டம் அழிக்கப் படவில்லை! இலங்கையின் சகோதரிகளே ! சுவனத்தின் உங்கள் பங்கை பெற நெருப்பில் நீராடவும் தயாரா? சூரா அல் புரூஜில் நீயும் பங்காளி ஆகலாம்.
Mar 27 · Sent from Web
on April 09, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Sri Lanka

கிலாபா ஒரு சாம்ராட்சியக்கனவா ?!!!



கிலாபா ஒரு சாம்ராட்சியக்கனவா ?!!!

இன்றைய உலகம் எனும் அப்பட்டமான "ஹோலி வூட்" தனத்தில் சிக்கியிருக்கும் இந்த முஸ்லீம் உம்மாவின் கருவில் உதித்த ஒரு சகோதர இரத்தத்தின் கேள்வியும் அதற்கான பதிலும் காலத்தின் தேவை
கருதி இங்கு வெளியிடுகின்றேன் . மிகை இராணுவ,பொருளாதார தொழில்நுட்ப பூச்சாண்டியும் , GPS தொழில்நுட்ப கண்காணிப்பு தரமும் இவர்களின் மேட்கத்தேயம் தொடர்பான அதீத கவர்ச்சிக்கு காரணமாகும்.

எனவே இவர்கள் அந்த மேட்கத்தேயத்தின் அரசியல் தரத்தில் இருந்து முஸ்லீம் உம்மாவை சிந்திக்க அழைக்கின்றார்கள் ! ஆனால் இது ஒரு ஆபத்தான அழைப்பு மட்டுமல்ல குப்ரிய ஏகாதிபத்தியம் முலீம்களிடம் எதிபார்ப்பதும் இதைத்தான் !!! இந்த நரகத்தின் அழைப்பு மதச்சார்பற்ற குப்ரிய கல்வியின் பட்டதாரிகளாக பவணி வந்துகொண்டிருக்கும் அநேகரை அதிகமாக தாக்கியுள்ளது .

கேள்வி :- எனது கருத்துப்படி, ஆட்சிமுறை எந்த வடிவத்தைப் பெருகின்றது என்பதனை விடவும் அம்முறைக்குக் கீழ் வாழும் மக்களின் அங்கீகாரமும் அங்கு பேணப்பட வேண்டிய விழுமியங்களுமே நாம் கவனம் செலுத்த வேண்டிய அடிப்படைகள்.
இன்று கிலாபா என்ற ஒழுங்கில் யாராவது ஒரு சாம்ராஜியக் கனவை வைத்திருந்தால் இன்றைய உலக ஒழுங்கில் அது வெறும் கனவாகவே இருக்கும் .

எனது பதில் :-
இங்கு எனது பதில் சற்று வித்தியாசமானது . எனது பதிலில் உள்ள நியாயம் புரியப்படா விட்டால் , நான் வெறும் வரலாற்று வாதியாகவோ அல்லது கட்பனாவாதத்தின்உச்சத்தில் நின்று பேசும் ஒருவனாகவும் தான் இனம் காட்டப்படுவேன் . எனக்குப்புரிந்த வரை யதார் த்தவாதம் ,யதார்த்தப்போலி இரண்டின் வித்தியாசமும் எம்மால் உணரப்படும் போது சில உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும் .அது ரசூல் (ஸல் )அவர்களின் சீராவை நாம் ஆராயும்போதுஅந்தஉண்மைபுரியும். .
அதாவது ஜாஹிலீயா என்பது நிறுவன மாக்கப்பட்ட கவர்ச்சி கரமான ஒழுங்கு என்றவகையில் இன்று எம்மை கட்டுப்படுத்த நினைக்கும் அதிகாரமாகும் . இங்கு வடிவு ,விளைவு எனும் வகையில் அதே ரசூல் (ஸல் ) அவர்கள் கண்டவைகள்தாம். எந்த வஹி அவர்களுக்கு உதவியதோ அதே வஹி எம்மிடமும் இருக்கின்றது . குப்ர் என்பதன் அர்த்தம் அல்லாஹ் (சுப) வின் ஏவல் விலக்கல் களில் மனோஇச்சைக்கு கட்டுப்படல் என்பதுதான் .இது எல்லா காலத்துக்கும் பொருந்தும்.

அசாதாரணமான சூழ்நிலையும் , மிக கடுமையான நிர்ப்பந்தமும் ரசூல் (ஸல் ) அவர்களின் மனோபாவத்தை, அன்றைய சூழ்நிலையில் வாழ்ந்த முஸ்லீம்களின் மனோபாவத்தை சற்று தளர்வடைய செய்யும் போது ;இஸ்லாத்தின் எதிரிகள் நகைப்புக்கிடமாக்கும் முன்னறிவிப்புகளை வஹி செய்தது .

அந்த முன்னறிவிப்புகள் வஹியின் வழி காட்டலோடு மட்டும் மிக தீவிரமாக முயற்சிசெய்து அந்த தலை கீழ் புரட்சியை செய்தார்கள் . எமக்கும் இவ்வாறான முன்னறிவிப்புகள் உண்டு ! வஹிவழியிலான. எமது முயற்சிதான் எம்மிடம் மிகச்சரியாக இல்லை . இது சாத்தியமா ?!! எனும் சந்தேகம் கூட எமது பலவீனம்தான்.

நான் ஒரு உண்மையை சொல்லவா ? அது முஸ்லீம்கள் வாழும் பட்டி தொட்டி எங்கும் இஸ்லாத்தின் தேடல் அதிகரித்துள்ளது . இது ஒரு நல்ல செய்தியாக உங்களுக்கு படவில்லையா ? காலம் கணிந்து வருகின்றது என்பதற்கு என்னை பொறுத்தவரை இதுசிறந்தஆதாரம்இஸ்லாத்தின் பொது எதிரியான யூத ,கிறிஸ்தவர்களின் அச்சம் கலந்த அரவணைப்பு எம்மை விட கிலாபா தொடர்பில் அவர்களின் எதிர்பார்ப்புடனான அச்சத்தைபிரதிபளிக்கிறது.
நான் இனி குறிப்பிட வரும் விடயங்களை சற்று அவதானமாக கவனியுங்கள் . நேற்றுவரை நாம் வேட்டையாடப்பட்டோம் .பயங்கரவாதம் தீவிரவாதம் ,அடிப்படைவாதம் எனும் சொற்களின் சொந்தக்காரர்களாக இனம் காட்டப்பட்டோம் .இன்று ஓர் திடீர் மாற்றம் .அது உலகின் புதுக்கதை வில்லனை சம்பந்தியாக்கி விருந்து கொடுக்கும் "ஹோலி வூட்டின் " புதிய திரைக்கதை .

hyper reality என்ற சினிமாத் துறையோடு சம்மந்தப்பட்ட விடயம் பற்றி நீங்கள் அறிவீர்களா?அதன் அர்த்தம் அதீதப் படுத்தப் பட்ட பல்வகை யதார்த்தங்களின் தொகுப்பு நிலை என்பதாகும் .அதேபோல similation என்பது நிகழ்வு ,அசல் ,ஆதாரம் என்பவற்றோடு தொடபற்ற நகல் என்பதாக அதைக் குறிப்பிடலாம் . simulacra என்பது படத்தொகுப்பின்போது உருவாக்கப்பட்ட நகலின் மீது சார்ந்திருக்கின்ற நகல் போலி என்பதாகும் .இது போலியின் தன்மையை கூட கொண்டிருப்பதில்லை .

மொத்தத்தில் இந்த யதார்த்தம் காலம் ,இடம் ,வரலாறு போன்றவை வழங்கும் ஆதாரமான யதார்த்தங்களை முற்றிலும் மறுத்த நிலையாகும் . உங்களுக்கு ஓர் உதாரணம் சொன்னால் "சினா "= திருமணம் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா ? இங்கு "சினா " எனும் சொல்லாடல் மறைக்கப்பட்டு இரண்டுக்கும் இடையில் உள்ள விளைவுப்பொருள் யதார்த்தமாக இனம் காட்டப்பட ( "சினா "= திருமணம் ) எனும் யதார்த்தப்போலியில் நாம் புதைந்து போய்விடுவோம் . இந்த "ஹோலி வூட் " தனம் குப்பார்களின் சினிமாக்களில் மட்டுமல்ல ;அவர்களின் அரசியல் உறவுகளிலும் பேணப்படும் . இப்போது வெளிப்படையான தன்மையும் விளைவுப்பொருளும்
இஸ்லாத்தின் ஒப்பீட்டிற்கு தகுதியானது தானா என்பது பற்றி நீங்கள் முடிவு செய்யுங்கள்.

U.N.O, I.M.F , NATO , போன்றவை அவர்களின் அரசியல் "ஹோலி வூட்டின் " கதாநாயகன் வில்லனை எதிர்க்க பயணிக்கும் குதிரைகள் . மத்திய கிழக்கில் அந்த முதலாளித்துவ ஏகாதிபத்திய கதாநாயகனை சுமந்த குதிரைகளின் குழம்படிச்சத்தம் தாராளமாகவே கேட்கிறது . இஸ்லாமிய ஜனநாயகம் எனும் அவனின் நவீன ஆயுதம் இன்னும் புரியப்படா விட்டால் ; அதன் விளைவான பிரித்தாளும் முற்றுகையில் மீண்டும் சிக்கிவிடுவோம் .
on April 09, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கிலாபத்

பொது பல சேனாவின் தயவில் இலங்கையில் புதிய 'பிக்ஹ்'!

பொது பல சேனாவின் தயவில் இலங்கையில் புதிய 'பிக்ஹ்'!


"இஸ்லாம் தரும் தீர்வும் தெளிவானது; குப்ரின் மேலாதிக்கமும் தெளிவானது முஸ்லீம் சிறுபான்மையாக வாழும் நாட்டில் இவற்றுக்கு இடைப் பட்டதும் உண்டு! அப்படி வாழும்
நிலை வந்தால் "வஹ்ன்" கலந்த நடுத் துண்டை பற்றிப் பிடித்துக் கொள் ! அல்லாது
விடின் அழிக்கப் பட்டு விடுவாய். "இது தான் இலங்கையில் தீர்வாம்!!

நேற்று "தீணே இலாஹியை " தந்த "அக்பரை" மகா அநியாயக்காரன் என்று மார் தட்டி
சொன்ன சில பேர் அந்த அக்பர் வீட்டு கொல்லைப்புற வேலியில் தம்மை அறியாமல் புகுந்து
புதிய ஒரு'உசூலுல் பிக்ஹை ' சிறுபான்மை வாழ்வுக்கு என 'நியூ வேர்சன் ' பண்ணியது சற்று அநியாயமாக படுகிறது. 


Sources from Bro..Abdur Raheem via Facebook
on April 09, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Sri Lanka

இலங்கையில் முஸ்லீம் எதிர்ப்பு ஏன்? (இது இன்னொரு பார்வை )




" இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை செய்யவே ஜெனீவா முயல்கிறது ." என இராணுவத் தளபதி லெப்ட். ஜெனரல் ஜகத் ஜயசூரிய கிளிநொச்சியில் எதிர் வரும் சிங்கள , தமிழ் புது வருடத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இராணுவத்தினர் முன் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

ஒன்றுக் கொன்று முரண்பட்ட சம்பவங்களை இணைத்து பார்க்கும் போது தான் சில அரசியல் தர நிகழ்வுகளை எம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இலங்கை முஸ்லீம்கள் மீது நிகழும் நெருக்கடிகள் தொடர்பாகவும் இந்த விடயங்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த இராணுவத் தளபதியின் கூற்று ஒரு தனிப்பட்ட கருத்து
அல்ல அதை அரசின் நிலைப்பாடாகவும்கருத முடியும் .

ஏன் அவ்வாறு கருத முடியும் என்றால் கடந்த மாத முதல் வாரம் அரசின் ஊடகத் துறை பின்வரும் தகவல்களை வெளியிட்திருந்தது 1. அல் கயிதா தொடர்பான இறுக்கமான கொள்கை மற்றும் சட்டங்கள் .2. ஆப்கானுக்கு அமெரிக்க சேவைக்காக இலங்கை படை அனுப்புவது தொடர்பில் சிந்திப்போம் .எனும் முடிவுகளை கூறலாம் .

அமெரிக்க பிராந்திய ஆதிக்க சிந்தனையை எதிர்த்து இலங்கை முரண்டு பிடிக்க முடியாது என்பதை சிலேடை மூலம் விளக்கும் விசுவாச முடிவுகளாகவே இவைகளை கருதமுடியும் . மேலும் பொது பல சேனா போன்ற அமைப்புகளின் திடீர் வீக்கமும் பலவீனமான
ஒரு அரசியலை நோக்கி ஆளும் தரப்பை தள்ளி விடலாம் எனும் நிலையில் இரண்டுக்கும் பொதுவான முஸ்லீம் எதிர்ப்பு அரசுக்கு அவசியமாக இருந்திருக்க முடியும்.

எனவே தாம் ஆட்சியில் நிலைக்க வேண்டும் எனும் ஒரே முடிவு இதுவரை நாளும் மறைமுக சார்பு அரசியலை பேணி வந்ததை கைவிட்டு , வெளிப்படையான சார்பு நிலையை
பேணும் முஸ்லீம் எதிர்ப்புக்கு உதவுதல் எனும் அரசியலாக்கி ஆட்சியில் நிலைக்க அரசு நினைக்கிறது .

மேலும் முன்னால் பழுத்த முஸ்லீம் எதிர்ப்பு இனவாதியாக இருந்த இந்நாள் அமைச்சாரான ஒருவர் ஹலால் விவகாரத்தில் உளமா சபையின் முடிவு பற்றி விளக்கம் தேவை எனக் கேட்டிருப்பதும் , பாதுகாப்பு செயலாளரின் தளமையில் நடந்த ஒன்று கூடளின்பின்னே ஹலால் விவகாரத்தின் பின் வாங்கும் முடிவை எடுத்ததை அறியாதது போல் பேசுவதும் அரசு மேட்கின் விருப்புகளுக்கு அமைய 'பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டும் 'அரசியல் தகுதிக்கு வந்துள்ளோம் , என்பதை உலகுக்கு தெரியப் படுத்தவே ஆகும். அதாவது மேட்கு எதிர்பார்க்கும்ஜனநாயகத் தகுதி இலங்கைக்கும் இருக்கிறதாம்.

Sources from Bro..Abdur Raheem via Facebook
on April 09, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Sri Lanka

Apr 4, 2013

உலகமா ? சுவனமா ?

உலகமா ? சுவனமா ?


சதி விதியாய் விளக்கம் பெற ஹராமிகளின் சாம்ராஜியத்தில் 'FREE HALAL' மிசனில் சர்வதேச இலாப அறுவடை செய்து குப்பார் குளிர் காய ! முஸ்லீம் அவமானத் தீயில் வெந்த வாறு வாழ வேண்டுமா!? ஓ முஸ்லீம் உம்மாவே நாளை 'ஹிஜாப்' தடையானால் எம் தளமைகள்அதை வீட்டுக்குள் பேணு போதும் என சொல்லுமா!?

பொது பல சேனைகள் இனி ஒவ்வொன்றாய் சொல்வது தான் பாக்கி ! இந்த உலக மாக்கள்இந்த உம்மாவின் மிச்ச சொச்சத்தையும் அவீழ்த்து நிர்வாண இஸ்லாம் தான் இனி இலங்கையில் 'HALAL ' என 'BOOK' அடித்து முஸ்லீம் வீடுகளுக்கு ' FREE ISSUE ' செய்வார்கள் ; அதோடு கருத்தடை வழிமுறைகளும் 'FREE' ஆக கிடைக்கும் 3 க்கு மேல் முஸ்லீம் பிள்ளை பெறக் கூடாதாம் !?


ஓ என் உம்மாவே எதிரி எம்மை இனம் காண்பது சில இஸ்லாமிய அடையாளங்களில் தாம் அவை இல்லாமல் போனால் நாம் யார்!? எதிரியின் திருப்தியில் வாழ்வை தேடுகிறோம் ! இறைவனின் திருப்தியில் சுவனத்தை தேடுவதை விட . கருத்தால்போராட நிர்ப்பந்தம் ஒரு தடையல்ல. அதில் கொல்லப் பட்டாலும் இறைவனிடம் உயர்ந்த நிலைதான் . அவமானமான அடிமை நிலையை விட வீரமான சில வார்த்தைகளுக்காக கொல்லப்படுதல் சுதந்திரமானது , சுவையானது 'ALLAAHU AKBAR' .
on April 04, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Sri Lanka

ஹலால் இலவச விநியோகம் யாருக்காக!!?

ஹலால் இலவச விநியோகம் யாருக்காக!!?


இலங்கையின் ஹலால் விவகாரத்தில் முழு முஸ்லீம் உம்மத்தையும் அடகு வைத்து உலமா சபை சில முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது இலங்கையருக்கு இனி ஹாலால் தர நிர்ணயம் இல்லை .ஆனால் ஏற்றுமதி பெருள்கள் மீது இலவசமாக ஹலால் தர நிர்ணயம் செய்யும்!? எனும் வினோதமான முடிவை வெளியிட்ட விடயம் பற்றித்தான் நான் சொல்ல வருகிறேன் .

உண்மையில் ஹலால் யாருக்கு தேவை ? முஸ்லீம்களுக்கா? குப்பார்ககளின் பொருளாதார வளர்ச்சிக்கா ? இனி இலவசமாக சான்றிதழ் கிடைக்கும் என்பதால் ஏற்றுமதி வியாபாரிகள் கூட ஒரு ஒப்புக்காக தானும் இது விடாயமாக பேசப் போவதில்லை. அப்படி யானால் நடந்த கதை ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!! ஆகா சிங்களத் தீவின் பாலிடிக்ஸ்
அது ஹிட்லரிசம் பிளஸ் கபிதலிஸம் சமன் திமோக்கிரசி என்பதை வாய் திறக்க முடியாமல் இந்த உளமா கூட்டம் இருக்கிறது.


இஸ்லாம் அதிகாரம் செலுத்தாத 'தாருள் குபிரில்' முஸ்லிமீன் வாழ்வு பற்றி சுன்னவை தேடாமல் மனோ இச்சை படி இஸ்லாத்தை பிக்குஹுல் அகல்லியாத் பிரகாரம் பிரயோகிக்க நினைத்தால் விளைவு இது தான் . இப்போது முஸ்லீம்கள் தெளிவான அரசியல்
அனாதைகள் . ஒட்டு மொத்த முஸ்லீம் உம்மாவும் துப்பினால் அந்த எச்சிலில் இஸ்ரேல் மூழ்கும்!! ஆனால் அந்த யூதன் முஸ்லீம் உலகில் தான் விரும்பும் இடத்தில் யூரின் பாஸ்
பண்ணி விட்டு செல்வானாம்!! எனும் போது இந்த சிலை வணங்கிகளின் அடம் பிடிப்பு
ஒன்றும் புதிய செய்தி இல்லைதான் . இந்த உளமாக்கள் வேண்டுவது ஒரு தெளிவான அரசியல்
சரணாடைவே தவிர தீர்வல்ல . தன் மானத்தை விட்டு உயிரை காத்துக் கொள் இலங்கை முஸ்லீமே( முஹம்மது பின் காசிம் படையோடு வர கிலாபாவா இருக்கிறது?) 
on April 04, 2013 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Sri Lanka
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

About Me

My photo
Islamic Uprising
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com
View my complete profile

Blog Archive

  • ▼  2018 (4)
    • November (1)
    • February (2)
    • January (1)
  • ►  2016 (98)
    • September (10)
    • August (3)
    • July (34)
    • June (18)
    • May (3)
    • April (6)
    • March (12)
    • February (2)
    • January (10)
  • ►  2015 (123)
    • December (4)
    • November (12)
    • October (28)
    • September (69)
    • August (9)
    • July (1)
  • ►  2014 (185)
    • July (85)
    • June (15)
    • May (27)
    • April (11)
    • March (46)
    • February (1)
  • ►  2013 (401)
    • October (75)
    • September (69)
    • August (77)
    • July (17)
    • June (5)
    • May (10)
    • April (54)
    • March (10)
    • February (18)
    • January (66)
  • ►  2012 (5)
    • July (5)
  • ►  2011 (374)
    • December (2)
    • November (6)
    • October (5)
    • September (8)
    • August (19)
    • July (34)
    • June (67)
    • May (65)
    • April (41)
    • March (70)
    • February (54)
    • January (3)
  • ►  2010 (24)
    • December (2)
    • November (1)
    • October (2)
    • September (3)
    • July (1)
    • June (1)
    • May (5)
    • April (1)
    • March (8)

Labels

  • கிலாபத்
  • 'அஷ் ஷாமில்' (சிரியா)
  • abortion
  • Aqeeda (belief)
  • Assam
  • Blackwater Worldwide
  • Brunei
  • Burma
  • Central African மத்திய ஆபிரிக்க
  • china
  • Concepts
  • Dangerous Concepts
  • Documentaries
  • Dr. ஜாகிர் நாயிக்
  • Economic System
  • English
  • Eye in the Sky
  • GDP
  • GNP
  • hadees
  • HIV
  • Hizb ut tahrir
  • HT
  • ISIS
  • Islamic Dawah (தஃவா)
  • Islamic Khilafah
  • Islamic leader
  • Islamic Revival
  • Media
  • MH-17
  • Monsoon
  • Mossad
  • Muslim Ummah
  • NATO
  • Picture
  • Political Analysis
  • Sri Lanka
  • Tamil Bayan
  • U.N
  • Uprising
  • Usul And Fiqh
  • அகதிகள்
  • அபார்ஷன்
  • அபூபக்ர் (ரழி)
  • அமெரிக்கப் போர்கள்
  • அமெரிக்கா
  • அரபா
  • அர்துகான்
  • அல்-அக்ஸா
  • அல்அக்ஸா
  • அல்ஹு கும் ஷரியா
  • ஆட்சியாளர்கள்
  • ஆபியா சித்தீக்கா
  • ஆப்கானியர்கள்
  • ஆப்கான்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆல்கஹால்
  • ஆறு நோன்புகள்
  • இங்கிலாந்து
  • இந்தியா
  • இந்தோனேசியா
  • இரசாயன படுகொலை
  • இறையில்லம்
  • இஜ்திஹாத்
  • இஸ்ரேல்
  • இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம்
  • இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு
  • இஸ்லாமிய அரசியல்
  • இஸ்லாமிய அழைப்புப் பணி
  • இஸ்லாமிய ஆட்சி
  • இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்
  • இஸ்லாமிய எழுச்சி
  • இஸ்லாமிய கல்வி
  • இஸ்லாமிய நாகரீகம்
  • இஸ்லாமிய மாதம்
  • இஸ்லாமிய வரலாறு
  • இஸ்லாம்
  • இஹ்வான்கள்
  • ஈதுல் அழ்ஹா
  • ஈதுல் பித்ர்
  • ஈராக்
  • ஈரான்
  • உ.பி. படுகொலை
  • உக்ரேன்
  • உடல் உறுப்புகளை தானம் செய்வது
  • உமர்((ரழி)
  • உம்மத்
  • உருவம்
  • உலமாக்கள்
  • உவைஸ் அல்கரனி(ரஹ்)
  • உளவு அமைப்பு
  • எகிப்து(Egypt)
  • எதிர்ப்புக்கள்
  • எமது போராட்டம் எது?
  • எயிட்ஸ்
  • ஏமன்
  • ஐ.நா
  • ஐரோப்பா
  • ஒசாமா
  • ஒபாமா
  • ஒற்றுமை (Unity)
  • ஓமன்
  • ஓரின சேர்க்கை
  • ஓர் முஸ்லிமின் இரத்தம்
  • ஃபித்னா
  • கடார்
  • கட்டார்
  • கண்டியர்
  • கருக்கலைப்பு
  • கருத்து வேறுபாடு
  • கலிஃபாக்கள் வரலாறு
  • கவிதை
  • காசா
  • காலண்டர்
  • காலித் பின் வலீத் (ரலி)
  • காவிகள்
  • காஷ்மீர்
  • கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும்
  • கிலாபத்
  • குடியேறிகள்
  • குண்டு வெடிப்பு
  • குண்டுவெடிப்பு
  • குரங்கு
  • குரேஷியா
  • குவைத்
  • குழந்தைகள்
  • கென்யா
  • கொலம்பஸ்
  • சவுதி
  • சவூதி (Saudi Arabia)
  • சஹாபாக்கள்
  • சார்ல்ஸ் டாவின்
  • சித்திரங்கள்
  • சியாட்டல்
  • சியோனிசம்
  • சிவசேனை
  • சிறப்புக் கட்டுரைகள்
  • சீனா
  • சீனா(Xinjiang)
  • செய்திகள்
  • செர்பியா
  • செவ்விந்திய தலைவன்
  • சோமாலிய
  • தமிழ் நாடு
  • தமிழ்நாடு
  • தலைவர்கள்
  • திர்ஹம்
  • தீ விபத்து
  • தீவிரவாத முஸ்லிம்
  • தீனார்
  • துருக்கி
  • துருக்கி (Turkey)
  • தெஹ்ரான்
  • தேசியவாதச் சிந்தனை
  • நபி தோழர்கள்
  • நவீன பிரச்சனைகள்
  • நாட்காட்டி
  • நியமனம்
  • நீதி கதை.
  • நைஜீரிய பெண்மணிகள்
  • பங்களாதேஷ்(Bangladesh)
  • பங்குச்சந்தை
  • பத்ஹுல்லாஹ்
  • பர்மா
  • பன்றி
  • பஹ்ரைன்
  • பாகிஸ்தான்
  • பாலஸ்தீன்
  • பாஜக
  • பி.ஜே.பி
  • பிரசவ மரணம்
  • பிரஸல்ஸ்
  • பிரிட்டிஷ்
  • புது ஃபிர்அவ்ன்
  • பெண்கள் மீதான வன்முறைகள்
  • பெண்ணியம்
  • பொதுவனவை
  • பொருளாதார அடியாள்
  • பொருளாதார நெருக்கடி
  • பொருளாதாரம்
  • மதீனா
  • மத்திய கிழக்கு
  • மரபணு
  • மலாலா
  • மனித உரிமைகள் அமைப்பு
  • மாட்டு இறைச்சி
  • மாதிரி அரசியலமைப்பு
  • மிதவாத முஸ்லிம்
  • மியன்மார்
  • முதலாம் கலிஃபா
  • முதல் உலகப்போர்
  • முறைமைகள்
  • முஸ்லிம் இராணுவங்கள்
  • முஸ்லிம் உம்மாஹ்
  • மேற்பார்வை
  • மொஸாட்
  • மோதல்கள்
  • யார் இந்த சிசி?
  • யூத படுகொலை
  • யூதர்கள்
  • யேமன்
  • ரமழான்
  • ரஷ்யா
  • ரோமல்
  • லண்டன்
  • லிபியா
  • லெபனான்( Lebanon)
  • வழிமுறை
  • வாசிங்டன்
  • வியட்நாம்
  • வெளிநாட்டு உறவுகள்
  • வெள்ளம்
  • வெள்ளரி
  • ஜப்பான்
  • ஜனநாயகம்
  • ஜிஹாத்
  • ஜூம்ஆ
  • ஜெர்மன்
  • ஜெனரல்
  • ஜெனீவா
  • ஷரீ’ஆ
  • ஷவ்வால்
  • ஹங்கேரி
  • ஹசன் அல் பன்னா
  • ஹமாஸ்
  • ஹஜ்
  • ஹஜ்ஜுப் பெருநாள்
  • ஹிட்லர்
  • ஹிரோஷிமா
  • ஹிஜ்ரா
  • ஹிஜ்ரி
  • ஹோலோகோஸ்ட்

வாசித்தவர்கள்

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

Loading...

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

Sub To Me

Feed Count

Search This Blog

  • Home

ஈடிணையற்ற இறைவா!

Popular Posts

  • அகபா ஒப்பந்தம்
    ஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...
  • முஸைலமா என்ற பொய்யன்
    முஸைலமா என்ற பொய்யன்  அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 18 பொய்த்தூதர்களை முறியடிப்பதற்காக புறப்பட்ட இஸ்லாமியப் படைகள் மிகவும் கடுமையானதொ...
  • சுவாரஸ்யமான சம்பவங்கள்
    காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்..! இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...
Awesome Inc. theme. Powered by Blogger.