May 23, 2011

O Muslims For how much longer


இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - இறுதிப்பகுதி (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

இஸ்லாமிய சித்தாந்தத்தின் வெற்றியை குறிக்கும் இரண்டாவது விஷயம் என்னவெனில், அக்கால கட்டத்தில் இஸ்லாமிய உம்மாதான் அறிவியலிலும், கலாச்சாரத்திலும், பொருளாதார முன்னேற்றத்திலும், நாகரீகத்திலும் உலகின் முன்னணி சமுதாயத்தினராக விளங்கினார்கள் என்பதுதான். கி.பி.ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பன்னிரெண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய அரசு உலகின் முன்னணி தேசமாகவும், மகா வல்லரசாகவும் விளங்கியது. இந்த காலகட்டம் முழுவதும் அது உலகின் பூஞ்சோலையாகவும், தேசங்களுக்கிடையில் உதய தாரகையாகவும் விளங்கிய உண்மை இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையின் வெற்றியையும், மக்களிடம் இஸ்லாமிய ஆட்சி முறையும் அதன் அகீதாவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதையும் உறுதி செய்கிறது. இஸ்லாமிய அரசும் இஸ்லாமிய உம்மாவும் அதன் அறிவார்ந்த தலைமையை எடுத்துச் செல்லும் மகத்தான பணியினை கைவிட்டதன் காரணமாகவும், இஸ்லாத்தை புரிந்து கொள்ளவும், செயல்படுத்தவும் முனைப்பு காட்டாததன் காரணமாகவும், அது பலவீனம் அடைந்து மற்ற தேசங்களுக்கடையில் வீழ்ச்சியுற்றது.

ஆகவே நாம் கூற வருவது என்னவென்றால் இஸ்லாமிய அறிவார்ந்த தலைமைதான் சரியானது. உலகம் முழுவதற்கும் அதை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தலைமைத்துவத்தை எடுத்துச் செல்லும் இஸ்லாமிய அரசு நிறுவப்படும் போது கடந்த காலத்தில் கண்டது போலவே அதன் வெற்றியை இன்றைய நாட்களிலும் காணலாம்.

இஸ்லாத்தின் அகீதாவும், அதிலிருந்து பிறக்கும் அதன் வழிமுறையும் மனிதனுடைய இயற்கை தன்மையோடு ஒத்துப் போகிறது என்பதை நாம் நிரூபித்து இருக்கிறோம். இஸ்லாத்தைப் பொருத்தவரை மனிதனை துல்லியமாக செயல்படும் இயந்திரமாக அது பார்ப்பதில்லை. மேலும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் அதன் வழிமுறையை நுட்பமான கணித அளவுகோளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தும்படியும் அது கோருவதில்லை. இதற்கு மாறாக, இஸ்லாமிய கண்ணோட்டத்தின்படி மனிதன் என்பவன் ஒரு சமூகப்பிராணி. அவன் வழிமுறைகளை மாறுபட்ட திறனிலும் வேறுபட்ட தன்மையிலும் செயல்படுத்தக் கூடியவன். ஆகவே, ஒருபக்கம் இஸ்லாம் மனிதர்கள் அனைவரையும் சம தரத்தினர்கள்; எனக்கொள்ளாத அதேசமயம், மனிதர்களுக்கிடையில் உள்ள இடைவெளியை இயல்பாக குறைத்து அனைவருக்கும் மன அமைதி தரும் சூழலுக்கு அது உத்தரவாதம் அளிக்கிறது. மறுபக்கம் சில தனிநபர்கள்; இஸ்லாமிய (முறைமையிலிருந்து) வழிமுறைகளிலிருந்து விலகி செல்வதையும், அதற்கு கட்டுப்படாது நடப்பதையும், மேலும் சிலர் அதனை உதாசீனம் செய்வதையும், அல்லது அதன் வழிமுறையை புறக்கணிப்பதையும் நாம் அங்கே அவதானிக்கலாம். தவிர்க்க முடியாத வகையில் சமூகத்தில் தீய செயல்புரிபவர்கள் (Fussaq) குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் (Fujjar), இறைநிராகரிப்பவர்கள், நயவஞ்சகர்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் (Murtaddun) மற்றும் நாத்திகர்கள் (Mulhidoon) போன்றோர் இருந்து வருவார்கள். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்லாத்தின் பார்வையில் அதன் சிந்தனைகள், உணர்ச்சிகள், செயலாக்க அமைப்புகள் (முறைமைகள்) (System) மற்றும் அதனை ஏற்றுக் கொண்ட மனிதர்கள் ஆகிய அனைத்தும் மொத்தமாகக் கருதப்படும்போது அது இஸ்லாமிய சமூகமாக கருதப்படுகிறது. அந்த சமூகம், மேற்கண்ட காரணிகள் தன்னுள் இஸ்லாத்தை கொண்டிருக்கும்போது இஸ்லாத்தை அமூல்படுத்துகிறது.

முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாமிய வழிமுறைகளை செயல்படுத்திய அளவிற்கு வேறு எவராலும் செயல்படுத்த இயலவில்லை என்பதுதான் இதற்குரிய ஆதாரமாகும். எனினும்;, அவர்கள்(ஸல்) காலத்திலும் நிராகரிப்பவர்களும், நயவஞ்சகர்களும், இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களும், தீயசெயல் புரிபவர்களும், நாத்திகர்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஆகவே, இதன்மூலம் இஸ்லாம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று எவரும் கோர முடியாது. மேலும் இஸ்லாம் சமூகப்பிராணியான மனிதன் மீதே தன்னை நடைமுறைப்படுத்தப்படுகிறதே தவிர இயந்திரத்தின் மீதல்ல.

இறைதூதர்(ஸல்) அவர்கள் மதினாவில் குடியமர்ந்த நாளிலிருந்து காலனி ஆதிக்க சக்திகள் இஸ்லாமிய பூமியை ஆக்கிரமித்து, இஸ்லாத்திற்கு பதிலாக முதலாளித்துவ வழிமுறையை (ஊயிவையடளைஅ) அதனுள் கொண்டுவரும் வரை, அரபு மற்றும் அரபு அல்லாத அனைத்து இஸ்லாமிய உம்மா மீதும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆகவே, ஹிஜ்ரி முதல் ஆண்டிலிருந்து ஹிஜ்ரி 1336 வரை (கி.பி.1918) இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் இஸ்லாமிய உம்மா அந்த காலகட்டம் நெடுகிலும் இஸ்லாமிய ஆட்சிமுறையைத் தவிர வேறு எந்த ஆட்சிமுறையையும் நடைமுறைப்படுத்தவில்லை.

முஸ்லிம்கள் தத்துவம், அறிவியல் மற்றும் பல்வேறு அந்நிய கலாச்சாரம் தொடர்பான நூல்களை அரபியில் மொழியாக்கம் செய்த போதிலும், ஒரு காலத்திலும் அந்நிய சட்டங்கள், அல்லது ஆட்சிமுறை, அல்லது அரசாணை ஆகியவற்றை மொழியாக்கம் செய்ததில்லை. அவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவுமில்லை. நடைமுறைப்படுத்த சிந்தித்ததுமில்லை. இஸ்லாத்தை ஒரு வழிமுறையாக எடுத்துக் கொண்டு சிலர் அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்கள். இன்னும் சிலர் தவறாக நடைமுறைப்படுத்தினார்கள். இது இஸ்லாமிய அரசின் பலம் மற்றும் பலவீனத்தை பொருத்ததாகவோ, இஸ்லாத்தை புரிந்து கொண்ட பரிமாணத்தைப் பொருத்தும் அல்லது அது குறித்த குறைபுரிதல்களை பொருத்தும் இஸ்லாமிய அறிவார்ந்த தலைமைத்துவம் பலமாகவும், திருப்த்திகரமாகவும் காவிச்செல்லப்பட்ட முறையைப்பொருத்தும் அமைந்தது. முடிவாக சில கால கட்டங்களில் இஸ்லாம் தவறாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இஸ்லாமிய சமூகத்தில் ஒருவகை வீழ்ச்சியைக் கொண்டு வந்தது. ஆனால் இந்நிலையானது எந்த ஒரு ஆட்சிமுறையும் தவிர்த்துக் கொள்ள இயலாத விஷயமாகும். ஏனெனில் இந்நிலை ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தும் மனிதர்களைப் பொருத்திருக்கிறது. இருந்த போதிலும், இஸ்லாத்தை தவறாக நடைமுறைப்படுத்தியதை வைத்து இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூற முடியாது. நிச்சயமாக இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இஸ்லாம் அல்லாத வேறொரு வழிமுறையோ அல்லது சித்தாந்தமோ செயல்படுத்தப்படவேயில்லை. இது ஏனெனில் இஸ்லாமிய அரசு அமூல்படுத்திய ஆட்சிமுறை மற்றும் அரசாணை என்பவை இதனை வலியுறுத்தும் சான்றாகும். இந்த வகையில் இஸ்லாமிய அரசு இஸ்லாத்திற்கு அந்நியமான அரசாணைகளையோ அல்லது ஆட்சி முறையையோ ஒருபோதும் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தியதில்லை. என்ன நடந்தது என்றால் சில ஆட்சியாளர்கள் சில வழிமுறைகளை தவறாக நடைமுறைப்படுத்தினார்கள். எனினும் இதற்கு மேல் ஆழமாக பார்க்க வேண்டுமானால், வரலாறு முழுவதும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டதை ஆய்வு செய்யும் போது இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலாவதாக, இஸ்லாத்தைப் பொருத்து தங்கள் நெஞ்சங்களில் வெறுப்பை சுமந்து கொண்டிருக்கின்ற இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து வரலாற்றை நாம் எடுக்கக்கூடாது. இதற்கு மாற்றமாக, திரிக்கப்பட்ட கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதிருக்கும் பொருட்டு, விரிவான ஆய்வுக்குப் பிறகு முஸ்லிம்களிடமிருந்தே வரலாறு எடுக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, சமூகத்தை ஆய்வு செய்யும் பொது விதியை, தனி மனிதர்களின் வரலாற்றிலிருந்தோ அல்லது சமூகத்தின் ஏதேனும் ஒரு அம்சத்தை வைத்தோ முடிவு செய்யக்கூடாது. உதாரணமாக உமையாக்களின் வரலாற்றை தீர்மானிப்பதற்காக யெஸீதின் (Yazid) வரலாற்றை மட்டும் ஆய்வு செய்யக்கூடாது. அல்லது அப்பாஸியாக்களின் (Abbassid) வரலாற்றை தீர்மானிப்பதற்காக, அவர்களின் சில கலீஃபாக்கள் காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை மட்டும் கவனிக்கக் கூடாது. அதுபோலவே சங்கீத நூல்களை வைத்து அப்பாஸியா காலத்து இஸ்லாமிய சமூகத்தை தீர்மானிக்கக்கூடாது. பொறுப்பற்ற ஊதாரித்தனமான மனிதர்களையும், கவிஞர்களையும் நூல் ஆசிரியர்களையும் பற்றி விவரிப்பதற்காக அவைகள் எழுதப்பட்டவை. அல்லது துறவறம் பற்றிய நூல்களையும் அதைப்போன்ற இதர நூல்கiளுயும் பயின்றதன் விளைவாக ஒட்டுமொத்த சமூகமும் ஊதாரித்தனமாகவும் பாவத்திலும் இருப்பதாகவும் அல்லது துறவறத்திலும் தனிமையிலும் இருப்பதாகவும் கற்பனை செய்து கொண்டு எழுதப்பட்டவை அவை. மாறாக, நாம் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். எனினும், இஸ்லாமிய சமூகத்தின் முழு வரலாற்றிலும் எந்தவொரு கால கட்டத்திலும் சமூகம் என்ற பார்வையில் வரலாறு எழுதப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மாறாக, சில ஆட்சியாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பற்றிய சில விஷயங்கள்தான் எழுதப்பட்டன. இத்தகைய வரலாற்று ஆசிரியர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்லர். அவர்கள் ஒன்று அவதூறு செய்பவர்களாகவோ அல்லது முகஸ்துதி செய்பவர்களாகவோதான் இருக்க வேண்டும். எனவே அவர்களின் கூற்றுக்களை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ள இயலாது.


இந்த அடிப்படையில் இஸ்லாமிய சமூகத்தை ஆய்வு செய்மோமானால், அதாவது அதன் அனைத்து அம்சங்களையும் விரிவான மற்றும் முறையான சோதனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்யும்பட்சத்தில் அதுதான் மிகச்சிறந்த சமூகம் என்பதை அறிந்து கொள்ளலாம். ஹிஜ்ரி முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளிலும், உண்மையாக கூறுவதென்றால் ஹிஜ்ரி பன்னிரெண்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை (கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு) இவ்வாறே இருந்து வந்தது. இஸ்லாமிய அரசு என்ற வகையில் உதுமானிய அரசின் இறுதிக் காலம் வரையில் வரலாற்றின் நெடிய கால ஓட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் இஸ்லாமிய சமூகத்தில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை நிச்சயமாக காணலாம். இஸ்லாமிய சட்டங்களையும், ஆட்சிமுறையையும் ஆய்வு செய்வதற்கு ஆதாரமாக வரலாற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது. மாறாக, நீதித்துறையின் மூலங்களிலிந்து பெற வேண்டும்;. ஏனெனில் நீதித்துறையின் சான்றாக வரலாறு இருக்க முடியாது. இந்த அடிப்படையில் கம்ய+னிஸ ஆட்சி முறையை விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் ரஷ்யாவின் வரலாற்றை வைத்து தீர்மானிக்க இயலாது. மாறாக கம்ய+னிஸ சித்தாந்தத்தை விவரிக்கும் நூலிலிருந்துதான் தீர்மானிக்க வேண்டும். இதுபோலவே இங்கிலாந்து நாட்டின் நீதி நெறியியலை விளங்கிக் கொள்ள வேண்டுமெனில், இங்கிலாந்தின் வரலாற்றைப் பார்க்கக் கூடாது. மாறாக இங்கிலாந்தின் நீதிநெறி அடிப்படைடையை (Jurieprednece) பார்க்க வேண்டும். இது எந்தஒரு ஆட்சி முறைக்கும் அல்லது அரசாணைகளுக்கும் (Canons) பொருந்தும்.

தனக்கு உரித்தான அகீதாவையும் ஆட்சிமுறையையும் கொண்ட சித்தாந்தம்தான் இஸ்லாம். அதை விளங்கிக் கொள்ள விரும்பும் ஒருவர், இஸ்லாத்தைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்திற்காகவும், இஸ்லாமிய சட்டங்களான அஹ்காமை ஏற்படுத்துவதற்கும் இஸ்லாத்தின் வரலாற்றை ஆதார மூலமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்கு இஸ்லாமிய சட்டங்களை விளக்கும் நூல்களும் இஸ்லாத்தின் சட்டங்களை யாப்பதற்கு அதற்கு அடிப்படையாகவுள்ள ஆதாரங்களுமே உரிய மூலங்களாக இருக்கின்றன. ஆகவே இஸ்லாமிய ஆட்சிமுறையை ஆய்வு செய்வதற்கோ அல்லது இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்கோ, அல்லது இஸ்லாமிய சட்டங்களை ஆய்வு செய்வதற்கோ வரலாறு சரியான ஆதார மூலமாக கொள்ளப்படமாட்டாது.

எனவே, அஹ்காம் ஷரிஆவிற்கு ஆதார மூலமாக உமர் இப்னு கத்தாப்(ரழி) அல்லது உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அல்லது ஹாரூன் அல் ரஷீத் (ரஹ்) ஆகியவர்களின் வரலாறுகளை எடுத்துக் கொள்வது தவறான முறையாகும். அது அவர்கள் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று சம்பவங்களாக இருந்தாலும் அல்லது அவர்கள் காலத்தில் எழதப்பட்ட நூல்களாக இருந்தாலும் சரியே. ஒரு விஷயத்தில் உமர்(ரழி) அவர்களுடைய கருத்து பின்பற்றப்பட்டிருக்குமேயானால் அது யாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஹக்கும் ஷரிஆ என்ற அந்தஸ்த்தில் மட்டும்தான் பின்பற்றப்பட்டிருக்கிறது. இது எவ்வாறு இமாம் அப ஹனிஃபா (ரஹ்), இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் ஜாஃபர் (ரஹ்) ஆகியோர் ஹக்கும் ஷரிஆவை யாத்து அளித்தார்களோ அதுபோன்றதுதான். ஏனெனில் அது ஒரு வரலாற்று நிகழ்வாக பின்பற்றப்படவில்லை. இதன் அடிப்படையில் இஸ்லாமிய (முறைமையை) செயலாக்க அமைப்பை (System of Islam) நிதாம் அல் இஸ்லாமை ஏற்றுக் கொள்வது மற்றும் அதை அறிந்து கொள்வது ஆகியவற்றுடன் வரலாற்றுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. மேலும், ஆட்சிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை உறுதி செய்வதற்கு வரலாற்றைவிட இஸ்லாமிய சட்டங்கள்தான் பொருத்தமான சிறந்த சான்றாக இருக்கும். இது ஏனெனில், ஒவ்வொரு கால கட்டமும் ஒவ்வொரு பிரச்சினைகளை தன்னகத்தே கொண்டதாக இருக்கிறது. அவைகள் ஒரு செயலாக்க அமைப்பைக் கொண்டே கையாளப்பட்டுள்ளன. ஆகவே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட செயலாக்க அமைப்பை அறிந்து கொள்ள வேண்டுமானால், ஒருவர் இஸ்லாமிய சட்டங்களைப் பார்க்க வேண்டுமே தவிர வரலாற்று சம்பவங்களை அல்ல. ஏனெனில் அவை எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றிய செய்தியைத்தான் வரலாறு நமக்கு அறிவிக்கிறது. இஸ்லாமிய சட்டங்களைப் புரட்டிப் பார்க்கும் ஒருவரால் இஸ்லாமிய நிதாமைத் தவிர வேறொன்றையும் காண முடிவதில்லை என்பதுடன். முஸ்லிம்கள் தாங்களாகவே வேறொரு நிதாமை தேர்ந்தெடுத்துக் கொள்ளவுமில்லை என்பது புலனாகும். இதற்கு மாற்றமாக, அங்கே ஷரிஆ ஆதாரங்களிலிருந்து யாக்கப்பட்ட அஹ்காம் ஷரிஆவையே முழுக்க முழுக்க காண நேரிடுகிறது. குறையுள்ள (பலகீனமான) இஜ்திஹாத்தை நீக்கியது மூலமாக முஸ்லிம்கள் நீதி நெறியை (Juripredence) மிக எச்சரிக்கையாகக் கையாண்டார்கள். முஜ்தஹித் முத்தலக்குடைய இஜ்திஹாத் என்ற போதிலும் அது குறையுள்ள இஜ்திஹாதாக இருக்கும்பட்சத்தில் அதை பின்பற்றக்கூடாது என்று முஸ்லிம்கள் தடை செய்தார்கள்.

இதன் விளைவாக இஸ்லாமிய உலகின் அனைத்துக் காலகட்டத்திலும், இஸ்லாமிய சட்டங்களைத் தவிர இஸ்லாம் அல்லாத அரசாணை (Canon) ஒன்றைக் கூட காண முடியவில்லை. ஒரு சமுதாயத்தில் ஒரேயொரு நீதி நெறி அடிப்படை மட்டுமே இருந்தது என்பதும் அங்கே வேறு அந்நிய அம்சம் எதுவும் இருக்கவில்லை என்பதும், அந்த சமுதாயம் அதன் அரசாணைகளில் வேறொரு நீதி நெறியை பயன்படுத்தவில்லை என்பதற்கு அடையாளமாக (ஆதாரமாக) திகழ்கின்றன.

வரலாற்றில் கவனம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டால், முறைமையை (நிதாம்) எவ்வாறு செயல்படுத்துவது என்பதை ஆய்வு செய்வதோடு மட்டும் அது குறுகிவிடும். வரலாறு அரசியல் நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டதாக இருக்கலாம், அதிலிருந்து நடைமுறைப் படுத்தப்பட்ட நிதாம் (செயலாக்க அமைப்பு) தெரிய வரலாம். என்றாலும் கூட முஸ்லிம்களிடமிருந்து வரலாறு எடுக்கப்படாத வரை, அது முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வரை, அது வரலாறாக அது எடுத்துக்கொள்ளப்படாது. வரலாறு மூன்று மூலங்களிலிருந்து கிடைக்கிறது: அவை வரலாற்று நூல்கள், தொல்பொருள் படிவங்கள் மற்றும் அறிவிப்புகள்(Narration). வரலாற்று நூல்கள் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது, ஏனெனில் அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் சூழலின் செல்வாக்கு அதனைப் பாதித்திருக்கலாம். அல்லது அவைகளில் பொய்கள் நிறைந்திருக்கலாம். அல்லது எந்த காலகட்டத்தில் இந்த நூல்கள் எழுதப்பட்டனவோ அந்த காலகட்ட மனிதர்களுக்கு சாதகமாக எழுதப்பட்டிருக்கலாம். அல்லது இந்த நூல்கள் எழுதப்படுவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் இருந்தவர்களை சாடும் வகையில் எழுதப்பட்டிருக்கலாம். இதற்கு சமீபத்திய உதாரணம் எகிப்து நாட்டின் அல்லாவைது(Allawide) குடும்பத்தின் வரலாறு ஆகும். கி.பி.1952-க்கு முன்பு உள்ள வரலாற்று நூல்களில் அந்த குடும்பத்திற்கு பிரகாசமான நற்பெயர் இருந்தது. ஆனால் கி.பி.1952க்கு பிறகு அந்த குடும்பத்தின் பெயர் வரலாற்றில் மங்கிப் போனது. கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் அரசியல் நிகழ்வுகளின் வரலாற்றில் இதே நிலைதான் இருந்து வருகிறது. இந்த காரணத்தால் சுய சரிதங்கள் அதன் மக்களால் எழுதப்பட்ட போதிலும் மெய்யான வரலாற்றை கணிப்பதற்கு வரலாற்று நூல்களை அதற்கு மூலமாகக் கொள்ளக்கூடாது.

தொல்பொருள் படிவங்கள் (Archaeological Objects) நேர்மையான முறையில் ஆய்வு செய்யப்பட்டால் அதிலிருந்து வரலாற்று தகவல்கள் கிடைக்கக்கூடும். அவைகள் வரலாற்றுக் காலக்கட்டத்தைப் பற்றியக் குறிப்பை அளிக்க முடியாவிட்டாலும் நிகழ்வுகள் நடந்த குறிப்பை அளிக்கக்கூடும். இஸ்லாமிய நாடுகளில் காணப்படும் பழங்காலத்து படிவங்களை அது கட்டிடமாக இருந்தாலும், கருவிகளாக இருந்தாலும் அல்லது வேறு எந்த வகையான பொருட்களாக இருந்தாலும் சரி, ஒருவர் ஆய்வு செய்தால் இஸ்லாமிய ஆட்சிமுறை இஸ்லாமிய சட்டங்கள் என்பவற்றைத் தவிர இஸ்லாமிய பூமியில் வேறு எதையும் அவர் காணமாட்டார். மேலும் அவர் இஸ்லாமிய வழிமுறையின்படியே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ளலாம்.

மூன்றாவது ஆதார மூலமான அறிவிப்புகளை (Narration) பொருத்தவரை அது ஒரு சரியான ஆதார மூலமாக இருக்கிறது. அந்த அறிவிப்பு சரியானதாக இருக்கும்பட்சத்தில் நாம் அதை நம்பலாம். மேலும் ஹதீஸ்கள் எந்த வழிமுறையில் திரட்டப்பட்டதோ அதே வழிமுறையில் தான் இவைகளும் திரட்டப்பட்டன. வரலாற்றை இந்த முறையில்தான் தொகுக்க வேண்டும். முஸ்லிம்கள் எழுதுவதற்கு ஆரம்பித்தவுடன் இந்த முறையைதான் பின்பற்றினார்கள். அத்தபரியின் (At - Tabari) வரலாறு, இப்னு ஹிஷாமின் (Ibn Hishem) சீறா போன்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறந்த வரலாற்று நூல்கள் யாவும் இந்த முறைப்படியே எழுதப்பட்டன. முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு வரலாற்று நூல்களிலிருந்து போதிக்கக்கூடாது. ஏனெனில் அவைகளுக்கு இஸ்லாமிய ஆதார மூலம் எதுவும் இல்லை. எக்காரணம் கொண்டும் இஸ்லாமிய நிதாம் நடைமுறைப்படுத்தப்பட்டதை பற்றிய அனைத்துக் கண்ணோட்டத்தையும் இந்த நூல்களிலிருந்து எடுக்கக்கூடாது. முடிவாக, இஸ்லாமிய அரசின் முழு காலகட்டத்திலும் இஸ்லாம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. வேறு எந்த அந்நிய செயலாக்க அமைப்பும் Nidam - System) நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனினும் முதல் உலகப்போரில் இறுதிகட்டம் கூட்டணி படைகளின் வெற்றியில் முடிவடைந்தது. அந்த போரின் தளபதி பொறுப்பை ஏற்றிருந்த லார்டு ஆலன்பி (Lord Allenby) ஜெருசலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது, இப்போது சிலுவை யுத்தம் முடிவடைந்து விட்டது என்று அறிவிப்பு செய்யும் அளவிற்கு அவர்களின் வெற்றி நிலை உட்சத்தில் இருந்தது. அதன் பின்னர், காலனி ஆதிக்க குஃப்பார்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் முதலாளித்துவ ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தி நமக்கு எதிராக பெற்ற வெற்றியை தொடரும்படி செய்தார்கள். ஆகவே இந்த அழிகிப்போன ஊழல் மிகுந்த ஆட்சிமுறையை நிச்சயமாக நாம் புறக்கணித்து விட வேண்டும். ஏனெனில் அதனைக் கொண்டு தான் நமது தேசங்களை அவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இத்தகைய மோசமான, சீர்கேடான முறைமையை வேரோடும் வேரடி மண்ணோடும் நாம் பிடிங்கி எறிய வேண்டும்.

நமது இஸ்லாமிய ஆட்சிமுறைக்கு பதிலாக அந்நிய ஆட்சிமுறையை கொண்டு வரலாம் என்ற சிந்தனை வீழ்ச்சியினால் ஏற்படும் மேம்போக்கான எண்ணமாகும். மேலும், அதன் அகீதாவை விட்டுவிட்டு ஆட்சிமுறையை நடைமுறைபடுத்தினால் அது உம்மாவை பாதுகாக்கும் என்று கருதுவதும் கருத்தாழம் இல்லாத சிந்தனையாகும். எனவே இஸ்லாமிய உம்மா முதலில் அகீதாவை தழுவ வேண்டும். பிறகு அந்த அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து (அகீதா) பிறந்த ஆட்சிமுறையை அமூல்படுத்த வேண்டும். ஆட்சிமுறையை அமல்படுத்துவதும் அகீதாவை தழுவிக் கொள்வதும் தான் நம்மைக் காப்பாற்றும். இது உம்மாவின் மீது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய உம்மா என்பது இஸ்லாமிய சித்தாந்தத்தின் மீதும், இஸ்லாமிய அரசு மீதும் நிலைக் கொண்டிருக்கிறது. அதன் அரசு அகீதா என்னும் அடிப்படை மீது தான் நிறுவப்பட்டிருக்கிறது. மற்ற மக்களையும், நாடுகளையும் பொருத்தவரை, அவர்கள் மீது இந்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தில் முன்னேற்பாடாக இதை அவர்கள் தழுவ வேண்டிய அவசியமில்லை. இந்த சித்தாந்தத்தை தழுவி அதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு சமுதாயம், மற்றவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்ற போதும் அதை அவர்கள் மீது நடைமுறைப்படுத்த முடியும். இது ஏனெனில் இந்த சித்தாந்தத்தின் விளைவாக அதை தழுவியுள்ள சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் போது மற்றவர்களையும் கவர்ந்திழுத்து நம்பிக்கைக் கொள்ளச் செய்யும். ஆகவே, சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மற்றவர்கள் அதை தழுவ வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. மாறாக அதை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு அது ஒரு மிக முக்கிய நிபந்தனையாகும்.

பொதுவுடமை கோட்பாட்டோடு இணைத்து தேசிய வாதத்தை ஏற்றுக்கொள்வது ஆபத்தான செயலாகும். பொதுவுடமை கோட்பாடு அதன் இயற்பொருள்வாத சிந்தனையிலிருந்து (Meterialistic thought) பிரிக்கப்பட முடியாதது. ஏனெனில் அந்நிலையில் அது ஆக்கப்ப+ர்வமானதாகவோ அல்லது ஆதிக்கம் செலுத்த ஆற்றல் பெற்றதாகவோ இருக்காது. இயற்பொருள்வாத சிந்தனையோடு பொதுவுடமை கோட்பாட்டை சேர்த்து அமூல்படுத்த இயலாது. ஏனெனில் அது எதிர்மறையான சிந்தனையாகவும் (Negative thought) மனித இயல்புக்கு (Fitrah) முரண்பாடானதாகவும் இருக்கிறது. மேலும் இதை ஏற்றுக் கொள்வது என்பதன் பொருள் என்னவென்றால் இஸ்லாமிய சமுதாயம் இஸ்லாமிய அகீதாவை கைவிட்டு விட வேண்டும் என்பதுதான். ஒரே நேரத்தில் பொதுவுடமை கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய ஆன்மீக அம்சங்களை தக்கவைத்துக் கொள்வதென்பது நம்மால் இயலாது. அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்படுகிறது என்ற உண்மையின் அடிப்படையில் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை, பொதுவுடமை கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற நிலையில் இது முடிந்து விடும். பின்பு நாம் ஏற்றுக் கொண்டவைகள் முழுமையற்றதாக ஆகிவிடும். அது போலவே இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு அதன் அகீதாவிலிருந்து பிறப்பதினால் அகீதா இல்லாத நிலையில் செயலாக்க அமைப்பான நிதாமை மட்டும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி செய்தால் ஆன்மீக அடிப்படை இல்லாத அதிகாரப் போக்குடைய நிதாமை ஏற்றுக் கொள்வதாக ஆகிவிடும். இதற்கு மாற்றமாக இஸ்லாத்தை முழுமையாக அதன் அகீதாவோடும், செயலாக்க அமைப்பான நிதாமோடும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை (Da’awa) மேற்கொள்ளும் போது அதன் அறிவார்ந்த தலைமையை நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில் நாம் மறுமலர்ச்சி எய்துவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. முழுமையாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதுதான் அந்த வழியாகும். மேலும் இஸ்லாமிய அரசு ஒன்றை நிர்மானிப்பதைத் தவிர இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கு வேறு எந்த வழியும் எமக்கில்லை. அகீதா என்றளவிலும் (முறைமை) செயலாக்க அமைப்பு (Nidam) என்ற அளவிலும் இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் ஒழிய இதை நம்மால் செய்து முடிக்க இயலாது. அகீதா என்றளவில் அது மனிதனின் மிகப்பெரிய பிரச்சினைக்கு தீர்வைக் கொடுக்கிறது. அதன் மீது தான் மனிதனின் இந்த வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டம் குவிந்து கிடக்கிறது. ஆட்சிமுறைப் போன்ற அனைத்து செயலாக்க அமைப்புகளும் அதன் அகீதாவிலிருந்தே பிறக்கின்றன. இந்த செயலாக்க அமைப்பின் (Nidam) அடிப்படை அல்லாஹ்(சுபு)வின் வேதநூலும், அவனுடைய திருத்தூதர்(ஸல்) அவர்களின் சுன்னாவும் தான். இஸ்லாமிய சட்டங்கள், ஹதீஸ்கள், குர்ஆன் விரிவுரை (tafseer), அரபு மொழி ஆகியவைகளும் மற்றவைகளும் அதன் கலாச்சார புதையலாக இருக்கின்றன. இஸ்லாத்திற்காக அதன் அறிவார்ந்தத் தலைமையை அழைப்புப் பணி (Da’awa) மூலம் எடுத்துச் சென்று உலகெங்கிலும் இஸ்லாத்தை நிர்மானிப்பதற்கு இஸ்லாமிய வழிமுறையைத் தவிர வேறொரு வழிமுறையும் பயன்படாது. ஒருமுறை முழுமையாக இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை இஸ்லாமிய சமுதாயத்திற்கும், மற்ற சமுதாயத்திற்கும் எடுத்துச் சென்றுவிட்டால் உலகிற்கு இந்த அறிவார்ந்தத் தலைமையை எடுத்துச் செல்லும் முயற்சியை துவங்கி விட்டவர்களாக நாம் ஆகிவிடுவோம். மறுமலர்ச்சியைக் கொண்டு வருவதற்கு இதுதான் ஒரே வழி. முஸ்லிம்கள் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்பும் விதத்தில், இஸ்லாமிய அறிவார்ந்தத் தலைமையை முஸ்லிம்களிடம் எடுத்து செல்ல வேண்டும். பிறகு இஸ்லாமிய அரசு ஒன்றை நிறுவி அந்த அரசு மூலமாக முழுமனித சமுதாயத்திற்கும் இஸ்லாத்தை எடுத்து இயம்பிடவும் வேண்டும்.

Warmcall.blogspot.com

உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் (Striving for Unity in Ummah)

உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-1



உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-2



உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-3



உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-4



உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-5



உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-6



உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-7





May 22, 2011

Global Ummah- Challenges And Opportunities

Global Ummah- Challenges And Opportunities Part-1 (ENGLISH)

http://vimeo.com/24069826

Global Ummah- Challenges And Opportunities Part-2 (ENGLISH)



Global Ummah- Challenges And Opportunities Part-3 (ENGLISH)



Global Ummah- Challenges And Opportunities Part-4 (ENGLISH)

உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் (Striving for Unity in Ummah)

உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-1

http://vimeo.com/24056106

உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-2


http://vimeo.com/24056652

உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-3


http://vimeo.com/24057463

உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-4


http://vimeo.com/24057717

உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-5


http://vimeo.com/24057764

உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் PART-6

http://vimeo.com/24057797


Islamic Uprising

Khilafah The Way Of Forward





khilafah A Final Word To Muslims


May 21, 2011

Obama's New Colonial Vision for the Middle East





US President Barack Obama's speech on US policy towards the Middle East was trailed as a landmark speech.

To most Muslims Obama's speech will have seemed like the same deceitful American rhetoric, which does not match the reality of their killing of innocent people, support for dictators and exploitation of resources.

Obama's speech was surely for a domestic audience. The latest Pew Public Opinion poll in Jordan, Turkey, Egypt + Palestine - after the uprisings in the Middle East - shows only 20%, or less of people are favourable to the United States. Obama cannot have believed he would affect this with such a speech.

Instead, he addressed his domestic audience explaining why America needed to stay engaged in the Middle East, and justifying why the US tax payer would be paying for aid in the region.

He was unashamed that the US policy for the region was for US interests first and foremost - and these interests were securing Israel, securing Oil supplies and preventing the rise of Islam [using the lies about preventing ‘terrorism'.]

He said: For decades, the United States has pursued a set of core interests in the region: countering terrorism and stopping the spread of nuclear weapons; securing the free flow of commerce and safe-guarding the security of the region; standing up for Israel's security and pursuing Arab-Israeli peace. We will continue to do these things...We believe that no one benefits from a nuclear arms race in the region, or al Qaeda's brutal attacks. We believe people everywhere would see their economies crippled by a cut-off in energy supplies.
He highlighted Egypt and Tunisia saying:

First, it will be the policy of the United States to promote reform across the region, and to support transitions to democracy. That effort begins in Egypt and Tunisia, where the stakes are high -- as Tunisia was at the vanguard of this democratic wave, and Egypt is both a longstanding partner and the Arab world's largest nation.

He seemed to be implying America wanted to try to steal Tunisia away from its traditional British and European colonial subjugation for its own interests.

Regarding Egypt, he stressed the importance of staying engaged and helping with funding. However, Stratfor the US analytical think tank confirmed on the same day the cosmetic nature of the changes: "It bears repeating that what happened in Egypt in January and February did not constitute a revolution. There was no regime change; there was regime preservation, through a carefully orchestrated military coup that used the 19 days of popular demonstrations against Mubarak as a smokescreen for achieving its objective....What changed was that for the first time since the 1960s, Egypt's military found itself not just ruling, but actually governing, despite the existence of an interim government (which the SCAF itself appointed)."

Obama raised the spectre of sectarianism and religious conflict whilst ignoring the fact that under Khilafah people of different religions lived side by side in the region with justice and security,

Obama talked about the change sweeping the region but then threatened to ‘support' the region with loans from the IMF and World Bank - something that has been disastrous for other regions of the world.

The speech strongly suggested the US wanted to engage in these countries for economic opportunities, liberalising the markets and thus maintaining their exploitation. Crucially he said

...it's important to focus on trade, not just aid; on investment, not just assistance. The goal must be a model in which protectionism gives way to openness.... America's support for democracy will therefore be based on ensuring financial stability, promoting reform, and integrating competitive markets with each other and the global economy. And we're going to start with Tunisia and Egypt

First, we've asked the World Bank and the International Monetary Fund to present a plan at next week's G8 summit for what needs to be done to stabilize and modernize the economies of Tunisia and Egypt....

Second....we will relieve a democratic Egypt of up to $1 billion in debt, and work with our Egyptian partners to invest these resources to foster growth and entrepreneurship. We will help Egypt regain access to markets by guaranteeing $1 billion in borrowing that is needed to finance infrastructure and job creation. ...

Third, we're working with Congress to create Enterprise Funds to invest in Tunisia and Egypt. ...

Many people have talked about a Marshal Plan for the Middle East without recalling that the post world war II plan for Europe and Japan left these nations indebted to America for half a century.

He hypocritically ignored US support for Mubarak, Assad, al-Khalifa and others for decades, whilst pleading that he was on the side of the people!

He also repeated the same proposal for occupied Palestine - a so-called ‘two-state solution' - on condition the Palestinians recognise Israel - also mentioning Israel had a right to maintain its own security but the future Palestine should be demilitarised.

The lies of Obama's speech can be exposed by looking at US policy towards Pakistan - where the US still bombs, immerses its security forces, and maintains corrupt politicians for its own ends. It can be exposed by the US support for the fascist Hassina government in Bangladesh.

The people of the Muslim world should see Obama's solutions for the region as threats - because surely that is what they are. That is the United States intervening to maintain its control and exploitation for its own ends.

We should not allow this, and instead look to real change under the Khilafah state - that would replace these tyrants and dictators, remove the occupation of Muslim land, and rule in the interests of the people - by the Kitab and Sunnah.

sources khilafah.com

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 07 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

ஆட்சிமுறையைப் பொருத்தவரை இஸ்லாமிய அரசின் அமைப்பு எட்டு தூண்களில் அமைக்கப்பட்டதாக இருந்தது. ஆட்சித்தலைவராக கலீஃபா விளங்கினார். கலீஃபாவின் ஆட்சித்துறை உதவியாளர் (Delecated Assistant-Mo’aawen Tafweedh), கலீஃபாவின் நிர்வாகத்துறை உதவியாளர் (Executive Assistant-Mo’aawen Tanfeedh) ஜிஹாதின் தலைவர் (Ameer of Jihad), ஆளுநர்கள் (Wulah), நீதிபதிகள் (QuDah), அரசுத்துறைகள் (State Departments) மற்றும் மக்கள் மன்றம் (Majlis al Ummah) ஆகியவை அவையாகும். முஸ்தபா கமால் என்ற காலனி ஆதிக்க காஃபிர் 1342 A.H. (கி.பி.1924) இஸ்லாமிய கிலாஃபா அரசை கலைக்கும் வரை முஸ்லிம்கள் கலீஃபா இன்றி இருந்ததில்லை. கிலாஃபா அரசு நீக்கப்படும் வரை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு கலீஃபா இருந்துகொண்டுதான் இருந்தார். ஒரு கலீஃபா மரணமடையும்போதோ அல்லது நீக்கப்படும்போதோ மற்றொரு கலீஃபா தேர்ந்தெடுக்கப்பட்டார். கிலாஃபா ஆட்சி நலிவுற்றிருந்த இருந்த காலகட்டத்தில்கூட இவ்வாறுதான் நிலை இருந்து வந்தது. இஸ்லாமிய அரசு என்பது கிலாஃபா அரசாக இருப்பதால், கலீஃபா இருக்கும் பட்சத்தில்தான் அது இஸ்லாமிய அரசாக கருதப்படும். ஆட்சியிலும், அரசுப்பணியிலும், கலீஃபாவின் உதவியாளர்கள் இஸ்லாமிய அரசின் அனைத்து காலங்களிலும் இருந்து வந்தனர். அவர்கள் உதவியாளர்களேதவிர அமைச்சர்கள் அல்ல(Wazirs). அப்பாஸிய கிலாஃபாவில் அவர்கள் அமைச்சர்கள் என்று அழைக்கப்பட்டாலும் உதவியாளர்களாகவே இருந்து வந்தார்கள். ஜனநாயக ஆட்சி முறையிலுள்ள அமைச்சர்கள் அந்தஸ்து அவர்களுக்கு அளிக்கப்படவில்லை, மாறாக கலீஃபாவின் அங்கீகாரம் பெற்றவர்களாக ஆட்சியிலும், அரசுப்பணிகளிலும் கலீஃபாவின் உதவியாளர்களாகவே அவர்கள் இருந்து வந்தார்கள். அதே வேளையில் அனைத்து அரசு அதிகாரங்களும் கலீஃபாவின் கைகளில் இருந்து வந்தது. ஆளுநர்களும், நீதிபதிகளும், அரசுத்துறைகளும் சந்தேகமின்றி இருந்து வந்தன. குஃப்பார்கள் இஸ்லாமிய பூமியை ஆக்கிரமிப்பு செய்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் அனைத்து விவகாரங்களும் நடைபெற்று வந்தமைக்கும், ஆளுநர்கள், நீதிபதிகள், அரசுத்துறைகள் அங்கு காணப்பட்டமைக்கும் ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஜிஹாத்தின் தலைவரைப் பொருத்தவரை, வெற்றி கொள்ள முடியாதது என்று உலகெங்கிலும் புகழ்பெற்ற இஸ்லாமிய சேனையின் தலைவர் என்ற அந்தஸ்தில் இராணுவ விவகாரங்களை அவர் கவனித்து வந்தார். மக்கள் மன்றம் என்ற மஜ்லிஸ் அல் உம்மாவைப் பொருத்தவரை, நேர்வழிகாட்டப்பட்ட கலீஃபாக்களின் காலத்திற்கு பின்பு அதன் அவசியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதற்கு காரணம் அது ஆட்சி அமைப்பின் ஒரு அம்சமாக இருந்ததே தவிர அதன் ஒரு தூணாக இருக்கவில்லை. ஆலோசனை கலத்தல் (Shurah) என்பது கலீபாஃவின் மீது மக்களுக்கு இருக்கின்ற ஒரு உரிமையாகும். எனவே அதை அவர் உதாசீனப்படுத்தினால், அவர் உதாசீனத்துக்கு ஆளாக நேரிடுமே ஒழிய ஆட்சிமுறை இஸ்லாமிய ஆட்சி முறையாகவே இருந்துவரும். இது ஏனெனில் இஸ்லாத்தில் ஆலோசித்தல் என்பது கருத்துக்களை பெறுவதற்குத்தானே தவிர ஆட்சி செய்வதற்கு அல்ல. ஜனநாயகத்தின் பாராளுமன்ற முறை இதற்கு நேர்மானது. ஆகவே இஸ்லாமிய ஆட்சிமுறை; நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது இங்கே தெளிவாகிறது.

கலீஃபாவுக்கு பையத் கொடுப்பது என்பதைப் பொருத்தவரை ஒரு கேள்வி இங்கு எழக்கூடும். கிலாஃபா ஆட்சிமுறையில் பரம்பரை உரிமை வழிமுறை இல்லை என்பது நன்கு நிலை நிறுத்தப்பட்ட விஷயம். வேறு வகையில் கூறுவதெனில் மன்னராட்சி முறையில் இருப்பதைப் போன்று ஆட்சித் தலைமையை பரம்பரை உரிமை அடிப்படையில் அடைந்து கொள்ளும் வழிமுறை இஸ்லாத்தில் அமைக்கப்படவில்லை. மாறாக, முஸ்லிம் மக்களிடம் பையத் பெறுவதின் மூலம் அரசின் தலைமை பொறுப்பு பெற்றுக் கொள்ளப்படும். இந்த நிலை சில காலம் இருந்து வந்தது. அதன் பிறகு செல்வாக்கு பெற்ற மனிதர்களிடத்தில் (Ahle al Halli Wal Aqd) பையத் பெறும் முறையும், கிலாஃபத்தின் இறுதிகாலத்தில் இருந்தது போல் ஷேக் அல் இஸ்லாத்திடம் பையத் பெறும் முறையும் இருந்து வந்தது. இஸ்லாமிய கிலாஃபா அரசின் நெடிய வரலாற்றில் பையத் பெறாமல் எந்த கலீஃபாவும் நியமிக்கப்பட்டதில்லை என்ற நிலை இருந்து வந்தது. பையத் பெறாமல் பரம்பரை உரிமை மூலம் ஒரு கலீஃபா கூட நியமிக்கப்பட்டதாக எந்த ஒரு நிகழ்வும் நடந்ததாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த வழிமுறைக்கு ஆற்றல் பெறாமல், பையத் பெறும் முறை தவறாக பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக, ஒரு கலீஃபா தன் மரணத்திற்கு முன்பாக தனது மகனுக்காகவோ, சகோதரனுக்காகவோ, உடன் பிறவா சகோதரனுக்காகவோ அல்லது எந்த ஒரு குடும்ப நபருக்காகவோ மக்களிடம் பையத் பெறுபவராக இருந்தார்கள். கலீஃபாவின் மரணத்திற்கு பின்பு அந்த நபர் பையத்தை புதுபித்துக் கொண்டார். இது பையத் பெறுவதை தவறாக பயன்படுத்துவதாக இருந்தாலும் பரம்பரை ஆட்சி முறையை சார்ந்தாகவோ அல்லது ஆட்சிக்கு தானாகவே வந்துவிடும் முறையாகவோ (Succession to the throne) இருக்கவில்லை. பாராளுமன்றமுறையிலோ அல்லது ஜனநாயக ஆட்சி முறையிலோ தேர்தல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு அரசு ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றபோதும்கூட அவை தேர்தல்கள் என்றுதான் அழைக்கப்படுகிறதே தவிர நியமனம் என்று கருதப்படுவதில்லை என்பதற்கு இது நிகரானதாகும். மேற்கண்ட காரணங்களால், இஸ்லாமிய அரசின் அனைத்து கால கட்டத்திலும் இஸ்லாமிய ஆட்சி முறைதான் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை ஒருவர் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையின் செயல் ரீதியான வெற்றியைப் பொருத்தவரை, இரண்டு முக்கிய விஷயங்களின் அடிப்படையில் அது இணையற்றதாக விளங்கியது.

முதலாவதாக: மிகத் தாழ்ந்த அறிவாற்றலின் காரிருளில், தான்தோன்றித் தனமாக குலப்பெருமையும் கோத்திரப் பெருமையும் கொண்டவர்களாக, ரத்தம் சிந்தும் முரட்டுப் போர் புரியும் அறியாமையிலிருந்த அரபு மக்கள் அனைவரையும் இஸ்லாமிய சித்தாந்தம் அறிவாற்றல் எழுச்சிக்கு இட்டுச் சென்றது. இஸ்லாம் என்ற ஒளியின் பிரகாசத்தில் அவர்கள் மறுமலர்ச்சி அடைந்தார்கள். அவர்களிடம் ஏற்பட்ட இந்த உதயம் அரபு தேசத்துக்கு மட்டும் இல்லாது முழு உலகிலும் பரவியது. இஸ்லாம் என்ற ஒளியினை உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் மகத்தான பணியில் முஸ்லிம்கள் விரைந்து செயல்பட்டார்கள். பாரசீகத்தையும், ஈராக்கையும், சிரியாவின் நிலப்பரப்பையும், எகிப்து தேசத்தையும், வட ஆப்பிரிக்க நாடுகளையும் இஸ்லாமிய மயமாக்கும் செயல்பாங்கில் முஸ்லிம்கள் தங்களது கரங்களை நுழைத்தார்கள். இந்த தேசங்களிலுள்ள அனைத்து மக்களும் தங்களுக்கென்று மதத்தையும் தேசியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும், பண்பாடுகளையும், மரபுகளையும் பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்களாகவே இருந்தார்கள். பாரசீகர்களின் தேசியம், சிரியாவின் ரோமர்களிடமிருந்தும், எகிப்து தேசத்தின் கோப்ட் (ஊழிவள) தேசியத்திலிருந்தும், வட ஆப்பிரிக்க நாகரீகமற்ற பழங்குடி சமுதாயத்திலிருந்தும் வேறுபட்டதாக இருந்தது. ஒருமுறை அவர்கள் இஸ்லாத்தின் நிழலில் வாழ்ந்து அதை புரிந்து கொண்டவுடன் அவர்கள் அனைவரும் அதை தழுவிக் கொண்டு விட்டார்கள். மேலும் ஒரே தேசத்தினராக முஸ்லிம் உம்மாவாக மாற்றமடைந்து விட்டார்கள். ஆகவே, இந்த மக்களையும் அவர்கள் தேசிய தன்மைகளையும் உருக வைத்து ஒன்றிணைத்து ஒரே சமுதாயமாக மாற்றிய இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மகத்தானதும் ஈடு இணையற்றதுமாகும். அக்கால கட்டத்தின் போக்குவரத்து சாதனம் ஒட்டகமாகவும், தொலைதொடர்பு சாதனம் நாவின் பேச்சாகவும், எழுத்துக் கலை எழுதுகோளோடு மட்டும் நின்றிருந்த நிலையில்தான் இந்த மகத்தான சாதனை படைக்கப்பட்டது.

எனினும் அல்பத்ஹ்(வெற்றி) என்பது மக்களின் அறிவும் இயற்கை தன்மையும் அவர்களை எதன் பக்கம் வழிகாட்டுகிறதோ, அந்த வழியை அடைந்து கொள்வதற்கு தடைகளாக இருக்கும் பௌதீக தடைகளை அகற்றுவதாகவே இருந்தது. இதன் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தார்கள். இதற்கு மாறாக, அநீதமான முறையில் ஆக்கிரமிப்பை செய்து வெற்றி கொள்ளப்படும் நாட்டவர்கள் வெற்றி கொண்டவர்களை அந்நியர்களாகவே கருதுவார்கள். உதாரணமாக, மேற்கத்திய ஆதிக்கவாதிகளால் கீழை நாடுகளில் நிறுவப்பட்ட காலனி ஆதிக்கம் எந்தவித பயனையும் விளைவிக்காமல் பல ஆண்டுகள் நீடித்தது. வஞ்சம் நிறைந்த மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆதிக்கம் இல்லாதபட்சத்தில், வெகு சடுதியில் அழியப் போகின்ற அதன் முகவர்களின் (யுபநவெ) அடக்குமுறை இல்லாதபட்சத்தில், கண் இமைக்கும் நேரத்திற்கு முன்பாகவே சித்தாந்தத்திலும் அதன் ஆட்சி முறையிலும் இஸ்லாம் மறுபிரவேசம் செய்துவிடும். ஆகவே பல்வேறு இன மக்களை ஒருங்கிணைத்து ஒன்றாக்கி இஸ்லாமிய உம்மாவாக, மாற்றிய இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை ஒப்பற்றதாகும். காலனி ஆதிக்கவாதிகள் விளைவிக்கும் நாசம், தீமை ஆகியவற்றையும் மீறி, கொள்கையை சிதைக்கவும் சிந்தனையில் நஞ்சு கலக்கவும் அவர்கள் தீட்டும் திட்டங்களையும் மீறி, இந்நாள்வரை இந்த மக்கள் முஸ்லிம்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். நியாயத்தீர்ப்பு நாள்வரை இந்த மக்கள் ஒரே இஸ்லாமிய உம்மாவாகவே நிலைத்திருப்பார்கள். இஸ்லாத்தில் இணைந்த மக்களோ அல்லது ஏதேனும் ஒரு இனக்குழுவோ இஸ்லாத்திலிருந்து வெளியேறிய நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் ஒருபோதும் நடந்தேறியதில்லை.

அந்தலுஸ் (Andalus - ஸ்பெயின்) முஸ்லிம்களைப் பொருத்தவரை அவர்கள் ரோமின் கிருஸ்தவ திருச்சபை நீதிமன்றத்தால் (Court of Inquisition) படுகொலை செய்யப்பட்டார்கள். கில்லோட்டின் (Guillotine) என்ற தலை வெட்டும் எந்திரங்களால் பல்லாயிரம் முஸ்லிம்கள் சிரம் துண்டிக்கப்பட்டு மாண்டு போனார்கள். நெருப்பு குண்டத்தில் இட்டு பொசுக்கப்பட்டார்கள். புகாரா, காகஸஸ், துர்கிஸ்தான் ஆகிய பகுதிகளைச் சார்ந்த முஸ்லிம்களும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்கள் அடைந்த அதே நாசகார அழிவையே சந்தித்தார்கள். இந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவி ஒரே உம்மாவாக ஆகிய பிறகு தங்கள் அகீதாவை பாதுகாக்கும் விடயத்தில் சிரமத்தை சந்தித்த இந்த நிகழ்வு, இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை அடைந்த வெற்றியின் பரிமாணத்தையும், இஸ்லாமிய அரசு இஸ்லாத்தை நடைமுறைப்படுத்திய பாங்கையும் விளக்கமாக வர்ணிப்பதாக இருக்கிறது.


தொடரும்...

warmcall.blogspot.com

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 06 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

இங்கே ஒருகேள்வி எழுகிறது.

அதாவது முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துகிறார்களா? அல்லது அவர்கள் அடிப்படை கோட்பாட்டை மட்டும் தழுவிக் கொண்டு இஸ்லாத்திற்கு அந்நியமான வழிமுறைகளையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துகிறார்களா? இதற்கு இதுதான் பதில்:

இறைதூதர்(ஸல்) அவர்கள் மதினா வந்தது முதல் கி.பி.1918வரை (A.H. 1336) இஸ்லாமிய அரசு காலனி ஆதிக்க வாதிகளின் கைகளால் வீழ்த்தப்படும் வரை, அனைத்து காலங்களிலும் முஸ்லிம்கள் இஸ்லாத்தையே நடைமுறைப்படுத்தி வந்தார்கள். முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தியது மிக விரிவான விஷயமாகும். வெற்றிகரமாகவும், வெற்றி கொள்ள முடியாதவர்களாகவும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்கள்.

நடைமுறையில் இஸ்லாத்தை செயல்படுத்துவதை, ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பு வகிக்கும், இரண்டு தரப்பினர் உறுதிப்படுத்துகின்றனர். ஒருவர் நீதிபதி அவர் மக்களின் விவகாரங்களை தீர்த்து வைப்பவர். மற்றவர் ஆட்சியாளர், அவர் மக்களை ஆட்சி செய்பவர். தொடர்ச்சியான அறிவிப்புகள் (Tawatur) மூலம் கூறப்படுவது என்னவென்றால், அல்லாஹ்(சுபு)வின் தூதர்(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இஸ்லான்புல்லின் (Istanbul) இஸ்லாமிய கிலாஃபா அரசு மறையும் வரை மக்களின் விவகாரங்களை தீர்த்து வைக்கும் நீதிபதிகள் ஷரிஆ சட்டங்களின் அடிப்படையில்தான் அனைத்து விவகாரங்களையும் தீர்த்து வைத்தார்கள். இது முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் அல்லாதவருக்கும், முஸ்லிம்களும் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. உரிமை மீறல்கள், குடும்ப விவகாரம், குற்றவியல் தண்டனை ஆகிய அனைத்து விவகாரங்கள் அனைத்தையும் நீதிமன்றம் தீர்த்து வைத்தது. இந்த நீதிமன்றம் இஸ்லாமிய ஷரிஆ சட்டங்களின் அடிப்படையிலுள்ள ஒரே நீதிமன்றமாக மட்டுமே இயங்கி வந்தது. இந்த காலகட்டத்தில் எந்த ஒரு வழக்கும் இஸ்லாமிய ஷரிஆ சட்டங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் தீர்த்து வைக்கப்பட்டதாக, எந்த ஒரு அறிவிப்பும் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. இஸ்லாமிய நாடுகளிலுள்ள எந்த ஒரு நீதிமன்றமும், எந்த ஒரு வழக்கையும், இஸ்லாம் அல்லாதவைகளைக் கொண்டு தீர்ப்பு கூறவில்லை. இந்த நிலை காலனி ஆதிக்கவாதிகளின் தொடர்ச்சியான ஆதிகத்தினால் இஸ்லாமிய நீதிமன்றம் ஷரிஆ நீதிமன்றம் (Shariah Court) நிஸாம் நீதிமன்றம் (Nizam Court) என இரண்டு வகை நீதிமன்றங்களாக பிரிக்கப்படும்வரை இருந்து வந்தது. பழம்பெரும் நகரங்களான ஜெருசலம், பாக்தாத், டமாஸ்கஸ், கெய்ரோ மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களில் அமைந்த ஷரிஆ நீதிமன்றங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் இதற்கான தெளிவான ஆதாரம் அடங்கியிருக்கிறது. இந்த ஆவணங்கள் நீதிபதிகள் ஷரிஆவை நடைமுறைப்படுத்தினார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்களாக திகழ்கின்றன.

சலிம் அல்பஸ் (Saleem al Baz) போன்ற முஸ்லிம் அல்லாதவர்கள் கூட இஸ்லாமிய ஃபிக்ஹ் சட்டங்களை (Islamic Fiqh) பயிலவும் எழுதவும் செய்தார்கள். அவர் அல்மஜல்லாஹ் (Al - Majallah) என்ற மாத இதழில் இதற்கு வர்ணனைகளை (Commetary) எழுதினார். இஸ்லாமிய அரசின் இறுதி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களைப் பொருத்தவரை அவைகள் இஸ்லாமிய அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்பு (Fatwa) அடிப்படையில் கொண்டு வரப்பட்டவை. அவைகள் அஹ்காம் ஷரிஆவிற்கு முரண்பாடாக இருக்க வில்லை. முடிவாக, 1275ல் (கி.பி.1857) உத்மானிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் உரிமையியல் சட்டங்களும் வணிக சட்டங்களும் (Law of Rights and Trade) 1276A.H. ல் (கி.பி. 1858) அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1288A.H.ல் (கி.பி.1870) நீதிமன்றம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பின்னர் ஷரிஆ நீதிமன்றம் (Shariah Court) மற்றும் அலுவலக சட்ட நீதிமன்றம் (Official Law Court) ஆகிய நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1295A.H.ல் (கி.பி. 1877) அபராத தண்டனை விதிக்கும் நீதிமன்றங்களை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 1296A.H.ல் (கி.பி. 1878) உரிமையியல் மற்றும் அபராத நடைமுறைகள் வெளியிடப்பட்டன. இதன்போது உரிமையியல் சட்டங்களை பயன்படுத்துவதற்கு எந்த முகாந்திரத்தையும் உலமாக்கள் அறியாததினால் அவைகளை கிடப்பில் போட்டு விட்டார்கள். 1286A.H.ல் (கி.பி.1868) கொடுக்கல் வாங்கல் விவகாரங்களுக்கு (Muamlat - Transactions) அரசாணையாக அல் மஜல்லாஹ் என்ற ஷரிஆ மாத இதழ் வெளியிடப்பட்டது. இவை அனைத்தும் இஸ்லாம் அனுமதித்த சட்டங்கள் என்ற வகையில்தான் அரசாணைகளாக (Canons) வெளியிடப்பட்டன. இவை ஷேக் அல் இஸ்லாமினால் முறையாக தீர்ப்பு செய்யப்பட்டு, அவைகளை அவர் அனுமதித்த பிறகுதான் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. எனினும் கி.பி.1918 முதல் இஸ்லாமிய நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்து வந்த காலனி ஆதிக்க அதிகாரிகள் சில உரிமையியல் வழக்குகளை இஸ்லாம் அல்லாத சட்டங்களைக் கொண்டு தீர்த்து வைத்தார்கள். ஆனால், காலனி ஆதிக்க இராணுவம் ஆக்கிரமிப்பு செய்யாத நாடுகளின் ஆட்சியாளர்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தாத போதிலும், சமீபகாலம் வரை நீதித்துறை தொடர்ந்தும் இஸ்லாத்தின் சட்டங்களின் படிதான் செயல்பட்டு வந்தது. உதாரணமாக, ஆப்கானிஸ்தான், ஹிஜாஸ், நஜ்து (ஆகிய அரபிய தீபகற்பம்) மற்றும் குவைத் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இதிலிருந்து எமக்கு விளங்குவது என்னவென்றால் நீதித்துறையில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததுடன்;, இஸ்லாமிய அரசின் நெடிய காலம் முழுவதும் நீதித்துறையில் இஸ்லாம் அல்லாத சட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதேயாகும்.

ஆட்சியாளர்களால் ஐந்து துறைகளில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படுவது அஹ்காம் ஷரிஆவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை சமூகத்துறை, பொருளாதாரத்துறை, கல்வித்துறை, வெளிநாட்டு விவகாரத்துறை மற்றும் ஆட்சித்துறை ஆகியன. இந்த துறைகள் தொடர்பான அஹ்காம் ஷரிஆ அனைத்தும் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமூகவியல் வழிமுறை (Social System) ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள உறவையும், இந்த உறவின் விளைவாக எழும் விஷயங்கள் (தனிநபர் அந்தஸ்து) அனைத்தையும் விளக்குகிறது. இஸ்லாமிய நாடுகளில் காலனி ஆதிக்க சக்திகள் நிலைத்திருந்த போதிலும், குஃப்ர் ஆட்சிமுறை இருந்தபோதிலும், சமூகத்துறையில் ஷரிஆ மட்டுமே செயல்படுத்தப்பட்டது. மேலும் நிச்சயமாக வேறு எந்த வழிமுறையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொருளாதாரத் துறையைப் பொருத்தவரை, அது இரண்டு வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவதாக, மக்களின் விவகாரங்களை கவனித்துக் கொள்வதற்காக அரசு பொது மக்களிடம் வருவாய் வசூலிக்கும் முறை, இரண்டாவதாக வருவாய்களை செலவிடும் முறை. வருவாய்களை வசூலிக்கும் விஷயத்தைப் பொருத்தவரை, அரசு ஸகாத்தை ரொக்கமாகவும், நிலமாகவும், கால் நடைகளை பெற்றுக் கொள்வதைக் கொண்டும் வசூலித்து வந்தது. இதை முஸ்லிம்கள் கடமையாகவும், வணக்கமாகவும் கருதி செலுத்தி வந்தார்கள். இந்த பணம்; திருமறை குர்ஆன் குறிப்பிடப்பட்டள்ள எட்டு பிரிவினருக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டது. தனது செலவினங்களுக்காக ஒருபோதும் அரசு ஸகாத் தொகையை பயன்படுத்தியதில்லை. ஷரிஆவின் கட்டளைப்படி தனது செலவினங்களுக்கு தேவையான பணத்தை அரசு வசூலித்தது.

ஆகவே, விளை நிலங்களுக்கு வரி(கரஜ்) வசூலிக்கப்பட்டது. முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து ஜிஸ்யா வசூலிக்கப்பட்டது. உள்நாட்டு வெளிநாட்டு வணிகத்தின் மேற்பார்வையாளர் என்ற முறையில் சுங்க வரியை அரசு வசூலித்தது. ஷரிஆவின் கட்டளைகளுக்கு முரண்பாடாக அரசு நிதி வசூலித்தது கிடையாது. ஊனமுற்றவர்களின் நிதி விநியோகத்தைப் பொருத்தவரை அரசு நஃபகாஹ் (Nafeqah - நிதியுதவி) வழிமுறையை செயல்படுத்தியது. இயலாமையிலுள்ளவர்களையும், (Safeeh) ஹராமான வழியில்; செலவு செய்பவர்களையும் (Mubaddin) காப்பாளராக இருந்து அரசு கவனித்து வந்தது. ஒவ்வொரு நகரங்களிலும் யாத்திரீயர்களுக்காகவும், ஆதரவற்றவர்களுக்காகவும், பயணிகளுக்காகவும் சாலை நெடுகிலும் விடுதிகளை அரசு நிர்மாணித்திருந்தது. இதன் நினைவுச்சின்னங்கள் பிரதான இஸ்லாமிய நகரங்களில் இன்றளவும் காணப்படுகின்றன. அரசின் செலவினங்கள் முற்றிலும் ஷரிஆவின் வழிமுறைப்படி கட்டுப்படுத்தப்பட்டதுடன் வேறு எந்த வழிமுறைகளின்படியும் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்த துறைகளில் ஏற்பட்ட எந்த ஒரு குறைபாடும் கவனக்குறைவினாலும், தவறான நடைமுறைப்படுத்தலின் காரணமாகவும் ஏற்பட்டதே தவிர ஷரிஆ நடைமுறைகள் இல்லாத காரணத்தினால் அல்ல.

கல்விக்கொள்கையின் அடித்தளமாக இஸ்லாமே இருந்தது. பாடத்திட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய கலாச்சாரத்தைக் கொண்டதாக இருந்தது. இஸ்லாத்தோடு முரண்படும் அந்நிய கலாச்சாரம் எதுவும் பின்பற்றப்படாமல் இருப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. உதுமானிய கிலாஃபா அரசின் இறுதி காலகட்டத்தில் புதிய கல்விக்கூடங்களை திறப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவு அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் அக்காலத்தில் காணப்பட்ட குறிப்பான பிற்போக்கு அம்சமாக இருந்தது. அக்காலகட்டத்தில் முஸ்லிம்களின் அறிவுத்திறனில் ஏற்பட்ட வீழ்ச்சி உச்சகட்டத்தை அடைந்திருந்தமை இதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கியது. இஸ்லாமிய அரசின் அனைத்து காலகட்டத்திலும், இஸ்லாமிய பூமிதான் அறிஞர்களுக்கும், கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கிப்லாவாக இருந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். கார்ட்டோபா (Cortoba), டமாஸ்கஸ், அலக்ஸாண்டிரியா, கெய்ரோ, பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்து பல்கலைக்கழகங்கள் உலகெங்கிலுமுள்ள கல்வித்துறை நடவடிக்கைகளில் மகத்தான விளைவை ஏற்படுத்தியிருந்தன.

இஸ்லாமிய அரசின் வெளியுறவுக் கொள்கை இஸ்லாத்தின் மீது அமைக்கப்பட்டிருந்தது. இஸ்லாத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளுடன் உறவுகளை இஸ்லாமிய அரசு நிர்ணயித்தது. மற்ற நாடுகள் அதனுடன் இஸ்லாமிய அரசு என்ற முறையில் நடந்து கொண்டன. அதனுடைய அனைத்து வெளிநாட்டு உறவுகளும் இஸ்லாத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களின் நலனின் அடிப்படையிலும் இருந்து வந்தது. இஸ்லாமிய அரசின் வெளியுறவுக் கொள்கை இஸ்லாமிய கொள்கையாகவே இருந்து வந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் தேவையில்லை என்ற அளவுக்கு உலகெங்கிலும் நன்கு அறியப்பட்டதாக இருந்தது.

தொடரும்...

warmcall.blogspot.com

May 20, 2011

A New Economy for the Muslim World



With the revolutions in the Muslim world in full swing and now spreading from North Africa to the Middle East Western nations are attempting to hijack the Ummah's demand for change and labelling the protests as demands for democracy, freedom and Western values. It should be remembered that those informing us of what the ummah demand are the very same countries that constructed the architecture the ummah is working to remove.

David Fromkin, Professor and expert on Economic History at the University of Chicago explained in his 2009 book ‘A peace to end of peace: the fall of the Ottoman empire and the creation of the modern middle east,' how the West constructed the Middle East: "Massive amounts of the wealth of the old Ottoman Empire were now claimed by the victors. But one must remember that the Islamic empire had tried for centuries to conquer Christian Europe and the power brokers deciding the fate of those defeated people were naturally determined that these countries should never be able to organize and threaten Western interests again. With centuries of mercantilist experience, Britain and France created small, unstable states whose rulers needed their support to stay in power. The development and trade of these states were controlled and they were meant never again to be a threat to the West. These external powers then made contracts with their puppets to buy Arab resources cheaply, making the feudal elite enormously wealthy while leaving most citizens in poverty."

Whilst we are all familiar with problems across the Muslim world, be they economic, social or legal, the Muslim world does not lack the building blocks for economic development and prosperity. British Prime Minister Henry Bannerman in 1906 confirmed that "There are people (the Muslims) who control spacious territories teeming with manifest and hidden resources. They dominate the intersections of world routes. Their lands were the cradles of human civilizations and religions. These people have one faith, one language, one history and the same aspirations. No natural barriers can isolate these people from one another ... if, per chance, this nation were to be unified into one state; it would then take the fate of the world into its hands and would separate Europe from the rest of the world.

Many from the Ummah have braved the brutal crackdown by their rulers and came onto the streets in the hope of a new dawn. The removal of the rulers is the first aspect of this struggle, the second aspect would be the construction of a new order that placed the ummah at the centre rather then a ruling family or foreign power. Central to this is establishing an economic system that changes the current status quo where the majority languish in poverty and the minority treat the regions wealth as their personal wealth. In order to achieve this we would need to ascertain our strengths and advantages, whilst those elements considered necessary but absent would need the development of policies so they can be overcome.

An example of this is China, after a number of failures to develop the nation, beginning in 1979 Chinese technocrats led by reformers created various economic zones to attract foreign technology to deal with the lack of advanced industry. The use of Foreign Direct Investment (FDI), although greatly aided economic activity and job creation, it also allowed for foreign technical and managerial knowledge into China. This is why to this day all foreign companies in China are forced to transfer technical knowledge to China for access to the Chinese domestic market. In this way China has been able to achieve phenomenal economic growth, develop its military and created jobs for millions of its citizens.

Similarly Japan by the turn of the 20th century had managed to develop its industries, however the rapid growth of the economy had made Japan painfully aware of its limited natural resources. Japan overcome such disadvantages through a programme of aggressive territorial expansion through conquering the Korean peninsula and surging deep into China in order to exploit labour and resources. In a similar manner the British Empire conquered foreign territories for export markets and utilised slave labour to overcome small workforce.

These examples show that all nations need some very basic ingredients to emerge as powerful nations and ones that can very quickly establish prosperous standards of living for its people with secure borders. When we look at the Muslim world we find whilst it is blessed with the worlds energy sources - oil and natural gas, this has not been used to develop industry, which would allow it to create millions of jobs and secure its borders. The development of infrastructure, defence industries and energy are fundamental for any nation, the possession of mineral resources would place any nation in a strategic position to develop. The examples of Japan and Britain are examples of societies - rightly or wrongly, who overcame the absence of energy sources in order to develop.

When one looks at the potential of the Muslim world, the Muslim lands do not just posses the key building blocks for a new nation, but over and beyond this reality the Khilafah would emerge a very powerful state due to the many strengths it will inherit that are present in the Muslim lands.

The Muslim Ummah collectively possesses over 700 billion barrels of oil and half of the world's gas. Both the worlds key energy sources. The Ummah globally number 1.6 billion, more importantly over 60% of the Ummah is below the age of 28. The importance of a large population is critical for domestic economic development. The absence of a large pool of labour means a nation cannot be constructed or in many cases would take decades before it was able to become self sufficient. On the emergence of the Khilafah for the defence of its borders the Khaleef will have the capability to deploy armed forces of over 4 million personnel.

The Khilafah would use its immense energy as a tool to bring technology and expertise to the Muslim lands. Rather than making the priority to provide to the international markets as the current rulers do, the Khilafah would make bilateral treaties with energy consumers around the world based on the benefit they can provide to the Muslim lands. Countries such as Japan and Germany could be provided with oil in return for technology.

A cursory glance across the Muslim world shows that the current Muslim nations fall into two camps regarding manufacturing, there are those nations which already have the characteristics of an industrial base, which are the minority of nations and then there is the majority of the Muslim world that lack heavy industry. This can be overcome through expanding manufacturing with the nations that have some industrial base and then linking the nations that do not have much industry with specific types of industry to the nations which have an industrial advantage.

The creation of heavy industry and its supportive industries will bring with it a massive injection of investment from the state and from industrialists. The State will oversee the creation and conversion of many factories which will brings opportunities not heralded before. This will be coupled with private investment from entrepreneurs keen to capitalize on the returns that will be generated. This policy will create jobs for those previously unemployed. The creation of jobs will naturally increase consumption as people will possess greater amounts of income. This in turn will increase demand for goods from the general masses. Such an increase in aggregate demand will push the development of other sectors of the economy such as the consumer goods sector. This demand will push people to supply these goods further creating more jobs and more wealth in the economy

The Islamic economic system when implemented focuses on wealth distribution, Islam views wealth creation as a technical matter, hence where an oil refinery should be constructed, whether manual labour or an automated process using robots should be used to make automobiles are seen as technical issues which can be concluded by understanding their reality. How such cars or a nations wealth should be distributed, should it go to the orphans or aristocracy is something that the reality cannot explain, hence for this area Islam has laid down a system.

Through the application of Islam's economic rules sustainable economic growth can be achieved that all can share in. Islam's taxation policy which focuses on wealth rather than income will leave citizens with much more disposable income. Islam does not have complex rules for taxation and has only seven revenue sources for the state, in this way the rules for taxation are much simpler, cheaper to administer and all citizens know where they stand.

This is just an insight on what Islam offers the Muslim world. There is only reason for why the Ummah remains in its current state and this is due to the rulers over the Muslim lands, who have never had any intention of making the right use of the huge wealth in the Muslim lands. The West have attempted to integrate the Muslim lands into their own domestic markets though policies such as the free market and globalisation and whilst they receive cheap oil and cheap labour the Muslim lands have gained nothing in terms of economic development. Countries such as Egypt went from being self sufficient in agriculture to today being a net importer. The Muslim lands posses all the necessary ingredients to take its own destiny into its own hands, it also possesses a way of life that will guide it in using such resources, it now just needs to fulfil its destiny and throw its rulers into the dustbin of history.

ADNAN KHAN

khilafah.com

May 19, 2011

Letters of Prophet Muhammad (SAW)

Letter from Prophet Muhammad (SAW) to king heraclius of Rome











Letter from Prophet Muhammad (SAW) to maqaquis coptic king of Egypt





Letter from Prophet Muhammad (SAW) to Mundhir Governor of Bahrain















Letter from Prophet Muhammad (SAW) to khusroe parvez emperor of Persia






Transcript of Letter to Khosroe Pervez Emperor of Persia





Letter from Prophet Muhammad (SAW) to najashi of Habsha











இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 05 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

அகீதாவை பொருத்தவரை கம்யூனிஸ(communism) சித்தாந்தத்தின் கருத்து யாதெனில், அனைத்து பொருட்களுக்கும் உயிரினங்களுக்கும் மூலம் இயற்பொருள்தான் (Matter), இயற்பொருளின் பரிணாம வளர்ச்சி மூலமாக அனைத்துப் பொருட்களும், உயிரினங்களும் தோன்றி இருக்கின்றன என்பதாகும். முதலாளித்துவ சித்தாந்தத்தின் கருத்து யாதெனில்: மனிதர்களின் உலகியல் வாழ்க்கை விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிப்பதாகும். இதன் விளைவாக அரசுக்கும் மதத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. ஆகவே, முதலாளித்துவாதிகள், படைப்பாளன் பற்றிய கருத்தை விவாதிக்க முன்வருவதில்லை. மேலும் அவர்களின் விவாதம் என்னவென்றால், படைப்பாளனுக்கு மனிதர்களின் விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்தவித உரிமையும் இல்லை, அவனுடைய உள்ளமையை (Existence) ஏற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரியே என்பதுதான். முடிவாக, படைப்பாளனின் உள்ளமையை ஏற்றுக்கொண்டவர்களும் அதை மறுப்பவர்களும் முதலாளித்துவ சித்தாந்தத்தில் சமமானவர்களே. அதுதான் மதசார்பின்மை (Secularism) என்ற வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிப்பது என்பதாகும்.

இஸ்லாம், அல்லாஹ்(சுபு)வின் உள்ளமையையும், அவன்தான் படைப்பாளன் என்பதையும் நம்புகிறது. மனித இனத்தின்பால் அவனுடைய தூதர்களையும் தீர்க்கத்தரிசிகளையும் அவனுடைய தீனுடன் அவன்(சுபு) அனுப்புகிறான். மேலும், மனிதர்கள் தங்கள் செயல்களுக்காக நியாயத்தீர்ப்பு நாளில் கேள்வி கணக்கிற்கு உட்படுவார்கள். ஆகவே இஸ்லாத்தின் அகீதா என்பது அல்லாஹ்(சுபு)மீதும், வானவர்கள் மீதும், அவனது வேதங்கள் மீதும், அவனுடைய தூதர்கள் மீதும், இறுதிநாளின் மீதும், களாகத்ர் மீதும், நன்மைதீமை இவை இரண்டும் அல்லாஹ்(சுபு)விடமிருந்துதான் வருகிறது என்பதன் மீதும் நம்பிக்கை கொள்வதாகும்.

எனினும், அகீதாவிலிருந்து (அடிப்படைக்கொள்கை) வழிமுறை (முறைமை) பிறக்கும் முறையைப் பொருத்தவரை கம்யூனிஸமானது, உற்பத்திக்குரிய கருவிகளிலிருந்து வழிமுறை உருவாகிறது என்கிறது. எனவே, பிரபுத்துவ சமூகத்தில் ஆதிக்கம் பெற்ற உற்பத்தி முறையினால் (கோடாரி) (Axe) விளைந்த பலன்தான் (Product) பிரபுத்துவ முறைமையாகும். சமூகம் முதலாளித்துவ சமூகமாக பரிணாம வளர்ச்சி அடையும்போது இயந்திரங்களை உற்பத்திக் கருவியாக அது மாற்றியது. எனவே, இயற்பொருள்வாத பரிணாம வளர்ச்சி (Meterialistic Evolution) யின் மூலம் மேற்கண்ட உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ வழிமுறை (முறைமை) உருவாகியது. வாழ்வியலிலிருந்து மதத்தை பிரித்ததன் காரணமாக வாழ்க்கை வழிமுறைகளை மனிதனே உருவாக்கிக் கொள்ள வேண்டும என முதலாளித்துவம் கோருகிறது. எனவே, மனிதன் அவனது எதார்த்த நிலையிலிருந்து அவனது வழிமுறையை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து அதை அவனே விதிமுறை செய்து கொண்டான். எனினும் வாழ்க்கையின் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு அல்லாஹ்(சுபு) மனிதனுக்கு ஒரு வழிமுறையை நிர்ணயித்து இருக்கிறான் என்று இஸ்லாம் கருதுகிறது. அவன்(சுபு) இந்த வழிமுறையுடன் முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பியிருக்கிறான். மனிதர்கள் அதை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்லாஹ்(சுபு) தனது அருள் வெளிப்பாடு (Revealation) மூலம் அவருக்கு(ஸல்) அதை அருளியிருக்கிறான். ஆகவே, ஒரு முஸ்லிம் தனது பிரச்சினையை ஆய்வு செய்து அதற்குரிய தீர்வை குர்ஆனிலிருந்து சுன்னாவிலிருந்தும் முடிவு செய்து கொள்கிறான்.

எமது செயல்பாட்டின் அளவுகோளாக இயற்பொருள் வாதத்தை (Meterialism), அதாவது இயற்பொருள்வாத வழிமுறைகளை இந்த உலக வாழ்வியலின் அளவுகோளாக கம்ய+னிஸம் கருதுகிறது. ஆகவே, இயற்பொருள் பரிணமிப்பது போல அளவுகோளும் பரிணமிக்கும் என அது குறிப்பிடுகிறது. அதேபோல முதலாளித்துவம் செயல்களுக்கான அளவுகோளாக உலகப் பயன்களை கருதுகிறது. இதனடிப்படையில், செயல்பாடுகளின் மதிப்பீடுகள் வரையப்பட்டு செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இஸ்லாமோ, செயல்பாடுகளின் அளவுகோளாக ஹராம், ஹலாலை கருதுகிறது. அதாவது அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் பற்றிய கட்டளைகளை செயல்பாட்டின் அளவுகோளாக இஸ்லாம் கருதுகிறது. இதனடிப்படையில் ஹலாலான செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹராமான செயல்கள் விலக்கப்படுகின்றன. இஸ்லாத்தில் அளவுகோள் பரிணமிப்பதுமில்லை, மாற்றமடைவதுமில்லை, உலக பயன்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதுமில்லை. மாறாக, ஷரிஆவே அவற்றை தீர்மானிக்கின்றது.

சமூகம் தொடர்பான கண்ணோட்டத்தைப் பொருத்தவரை இயற்பொருளாக கருதப்படும் உற்பத்தி முறை, இயற்கை, மனிதன் ஆகியவை அடங்கிய பொதுவான ஒரு தொகுப்பே சமூகம் என்று கம்யூனிஸம் (communism) கருதுகிறது. இயற்கையும் அதில் அடங்கியிருப்பவைகளும் பரிணமிக்கும் போது மனிதனும் அதனோடு சேர்ந்து பரிணமிக்கின்றான். இவ்வாறு முழு சமூகமும் பரிணமிக்கின்றது என்கிறது. இறுதியாக சமூகம் இயற்பொருள்வாத பரிணாம வளர்ச்சியை (Meterialistic Evolution) பின்பற்றுகிறது. ஆகவே பரிணாம வளர்ச்சியின் செயற்பாங்கை (Process) ஊக்குவிப்பதற்கு முரண்பாடுகளை உருவாக்க வேண்டும். சமூகம் பரிணமிக்கும் போது தனிமனிதனும் அதோடு சேர்ந்து பரிணமிக்கின்றான். இவ்வாறு மனிதன் ஒரு சக்கரத்தில் அதன் ஆரம் சுழல்வதைப் போல சமூகத்தோடு சேர்ந்து சுழன்ற வண்ணம் இருக்கின்றான் என்கிறது.

முதலாளித்துவம், தனிமனிதர்களின் தொகுப்புதான் சமூகம் என்று கருதுகிறது. ஆகவே, தனிமனிதர்களின் விவகாரங்கள் மேலாண்மை செய்யப்பட்டு விட்டால், சமூகத்தின் விவகாரங்கள் மேலாண்மை செய்யப்பட்டுவிடும் என்று அது கருதுகிறது. ஆகவே, முதலாளித்துவ சமூகத்தில் தனிமனிதன் மீது மட்டும்தான் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அரசு தனிமனித நலனுக்காக மட்டுமே செயலாற்றுகிறது. இதன் முடிவாக, இந்த சித்தாந்தம் சுயநல போக்கு கொண்டதாக திகழ்கிறது.

இஸ்லாத்தைப்பொருத்தவரை சமூகத்தின் அடித்தளமாக அகீதா இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. அதில் அதன் சிந்தனைகள், உணர்ச்சிகள் (Mashaair) மற்றும் அதிலிருந்து பிறக்கும் சமுதாய வழிமுறைகள் (முறைமைகள்) (System of life) ஆகியவைகள் அடங்கும். ஆகவே இஸ்லாமிய சிந்தனைகளும் இஸ்லாமிய உணர்ச்சிகளும் மிகைக்கும் போதும் அதன் மீது இஸ்லாமிய ஆட்சிமுறை செயல்படுத்தப்படும்போதும் இஸ்லாமிய சமூகம் உருவாகின்றது. ஆகவே சமூகம் என்பது மனிதன், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் சமூக வழிமுறைகள் (முறைமைகள்) ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கிறது. ஒரு நபர் மற்றொரு நபருடன் இணைந்து செயல்படும்போது ஒரு குழுவாக மாத்திரமே இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே விதமாக சிந்தனை மேற்கொள்ளாதவரை, ஒரே விதமான உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளாதவரை, ஒரே விதமான ஆட்சி அமைப்புக்கு கீழ் வராதவரை ஒரு சமூகமாக அவர்கள் ஆக மாட்டார்கள். இது ஏனெனில், தத்தமது நலனே (Maslaha) இரு மனிதர்களுக்கிடையில் உறவை ஏற்படுத்தும் காரணியாக இருக்கின்றது. எனவே, தமது நலன்கள் குறித்த அவர்களின் சிந்தனைகளும், அதனுடன் கூடிய உணர்ச்சியும் ஒத்த அடிப்படையில் இருக்கும்போதே அவர்களுக்கு மத்தியில் உறவு நிலைக்கின்றது. இதன்விளைவாக அவர்களின் ஏற்பும் (Acceptance - Ridah மறுப்பும் (Rejection - Ghadah) ஒரே விதமாகவும், அவர்களின் வாழ்வியல் விவகாரங்களை தீர்க்கும் வழிமுறையும் ஒரே விதமாகவும் இருக்கும். தமது நலன் தொடர்பான சிந்தனைகளும் உணர்ச்சிகளும் மாறுபாடாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் ஏற்பும் மறுப்பும் ஒன்றுபடாது. அல்லது அவர்களின் சமூக வழிமுறைகள் வேறுபாடாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குள் உறவு என்பது இல்லாது போய்விடும். பிறகு சமூகம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது.

ஆகவே சமூகம் என்பது மனிதன், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் வழிமுறைகள் (systems) ஆகியவற்றை உள்ளடக்கியது. ஏனெனில் இந்த விஷயங்கள்தான் மக்களிடையே உறவை ஏற்படுத்துவதற்கும். அவர்கள் ஒரு தனித்தன்மை வாய்ந்த சமூகமாக விளங்குவதற்கும் காரணமாக இருப்பவைகள்.

இவ்வாறாக ஒரு சமூகத்தின்; அனைத்து மக்களும் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில், அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள சிந்தனைகள் ஜனநாயகமாகவும், முதலாளித்துவமாகவும் இருந்து, அவர்களுடைய உணர்ச்சிகள் புரோகித தன்மையுடன் கூடிய ஆன்மீகமாகவும் அல்லது தேசப்பற்றாகவும் அல்லது தேசிய வாதமாகவும் இருந்து அவர்கள் மீது அமைந்துள்ள ஆட்சிமுறை முதலாளித்துவ ஜனநாயகமாகவும் இருக்கும்பட்சத்தில் அந்த சமூகத்திலுள்ள மக்கள் அனைவரும் முஸ்லிமாக இருந்தபோதிலும் அல்லது அவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிமாக இருந்த போதிலும் அந்த சமூகம் இஸ்லாமிய சமூகமாக கருதப்படமாட்டாது.

ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கம்யூனிஸம் (communism) கருதுவது என்னவென்றால், கடுமையான சட்டங்கள் மூலமாகவும், காவல்துறையின் ஆற்றல் மூலமாகவும் அரசு மட்டுமே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைத்தான். அதன் அரசானது, ஆட்சி அமைப்பை உருவாக்கி சமூகத்தின் சார்பாகவும், தனிமனிதன் சார்பாகவும் அவற்றை செயல்படுத்தும். முதலாளித்துவத்திலோ அரசானது சுதந்திர உரிமைகளை (விடுதலையை) பாதுகாக்கும். ஒரு மனிதனின் சுதந்திரத்தின் மீது மற்றொரு மனிதன் வரம்பு மீறினால் அரசு அதில் தலையிட்டு அதை தடுத்துவிடும். எனினும், ஒரு நபர், மற்றொரு நபரின் சுதந்திரத்தில் தலையிடாமல் அவரை சுயநலத்திற்காக பயன்படுத்தினாலும், அவரது சம்மதத்தோடு அவரது உரிமையை எடுத்துக் கொண்டாலும் அரசு அதில் தலையீடு செய்யாது. ஏனெனில் அவரது சுதந்திரத்தில் வரம்பு மீறியதாக அச்செயல் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் இங்கு சுதந்திர உரிமைகளை பாதுகாப்பதற்குத்தான் அரசு செயல்படுகிறது.

தனிமனிதனின் இறையச்ச உணர்வின் அடிப்படையில் (முறைமைகள்) ஆட்சிமுறை நடைமுறைப்படுத்துவதாக இஸ்லாம் கருதுகிறது. மேலும் நீதி நிர்வாகம் குறித்த சமூகத்தின் உணர்வின் அடிப்படையிலும், ஆட்சியாளரோடு இஸ்லாமிய உம்மா வழங்கும் ஒத்துழைப்போடும், நன்மையை ஏவி தீமையை தடுப்பதின் மூலமும், அரசினாலும் அரசு அதிகாரத்தின் மூலமாகவும் ஆட்சிமுறை நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதன்படி சமூகத்தின் விவகாரங்களை அரசு கவனித்துக் கொள்ளும் அதேசமயம் தனிமனிதர் தன்னுடைய விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஆற்றல் பெறாதவரை அரசு அந்த விவகாரங்களில் கவனம் செலுத்தாது. இங்கு ஆட்சி அமைப்பு ஒருபோதும் பரிணமிப்புக்கு உட்படாது. எனினும் ஒரு விவகாரத்தில் இஜ்திஹாத் மூலம் பல அபிப்ராயங்கள் இருக்கும்பட்சத்தில், எதை சட்டமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தீர்மானிப்பதில் அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமை மனிதனின் இயல்போடு ஒத்துப்போவதாக இருக்கிறது. ஆழமான சிந்தனைகளைக் கொண்டதாக அது இருந்த போதிலும் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒருவருடைய அறிவும் உள்ளமும் அதற்காக துரிதமாக திறந்து விடுகிறது. ஆவலோடு அதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. மேலும் அதன் விளக்கமான கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்து பாராட்டுகிறது. இது ஏனெனில் மனிதனிடம் இயல்பாகவே சன்மார்க்க உள் உணர்வு (Religious Instinct) அமைந்திருப்பதுதான்;. ஒவ்வொரு மனிதனும் தன் இயல்பினால் ஒரு மதவாதியாகவே இருக்கின்றான். ஏனெனில் அவனிடம் மத உணர்வு ஆழமாக இடம்பெற்றிருக்கின்றது. எந்த சக்தியாலும் இந்த இயற்கை தன்மையிலிருந்து அவனை பிரிக்க முடியாது. தன்னுடைய இயல்பான இயற்கை தன்மையின் காரணமாக மனிதன் தான் முழுமையற்றவன் என்பதையும் வணங்கி வழிபட வேண்டிய மகத்தான ஆற்றலுடைய ஒன்று இருக்கிறது என்பதையும் மனிதன் உண்மையாக உணர்கின்றான். மனிதனின் சன்மார்க்க உள்உணர்வு என்பது, அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் ஒரு படைப்பாளன் அவனுக்கு தேவைப்படுவதை உணர்த்தக் கூடியதாகவே இருக்கிறது. மேலும் மனிதனின் இயல்பான பலவீனத்திலிருந்து தோன்றும் இந்த சன்மார்க்க உள்உணர்வு மனிதனிடம் நிலையாக இடம் பெற்றிருக்கக் கூடியது. அது மனிதனிடம் குறிப்பிட்ட சில வழிகளில் வெளிப்படுகிறது. அதுதான் மனிதனின் வணங்கி வழிபடும் தன்மையாகும் (ஸஜ்தா செய்யும் தன்மை taqdees). முடிவாக, மனித இனம் மதவாத தன்மையுடன் வரலாற்றின் நெடிய பாதை முழுவதிலும் ஏதாவது ஒன்றை வணங்கி வழிபட்டே வந்திருக்கிறது. மனித சமூகம், விண்கோள், கற்கள், விலங்குகள், நெருப்பு ஆகியவற்றையும் இன்னும் பலவற்றையும் வணங்கி வழிபட்டுக்கொண்டே வந்திருக்கிறது. எனினும், இஸ்லாம் தனது உன்னத கோட்பாட்டின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மனிதனை படைக்கப்பட்ட பொருட்களை வணங்கும் இழிநிலையிலிருந்து மீட்டு அனைத்தையும் படைத்த அல்லாஹ்(சுபு)வை வணங்குவதற்கு வழிகாட்டுகிறது. அல்லாஹ்(சுபு)வையும் அவனுடன்(சுபு) நமக்குள்ள உறவையும் மறுத்தலிக்கும் இயற்பொருள்வாத சித்தாந்தம் (Meterialistic Ideology) தோன்றிய பிறகும் மனிதனின் இந்த உள்ளார்ந்த மதவாத தன்மையினை மாற்றியமைக்க இயலவில்லை. மாறாக அதிகாரம் தொடர்பான மனிதனின் எண்ணக்கருவை இது மாற்றியமைத்து மனிதன் தன்னை விட தனது ஆற்றலை பெரிதாகக்கருதும் அளவுக்கும் அதனை வணங்கி வழிபடும் அளவுக்கும் இந்த சிpத்தாந்தம் வழிவகுத்துவிட்டது. மேலும் அது இந்த ஆற்றலை மனிதனுக்குள் உருவாக்குவதிலும், அதற்கு மட்டுமே அவன் வழிபடச் செய்வதிலும் அனைத்தையும் மாற்றியமைத்தது. பின்நோக்கி செல்வது போல் ஒரு நிலை ஏற்பட்டு மனிதர்கள் அல்லாஹ்(சுபு)வை வணங்குவதற்கு பதிலாக அவனது(சுபு) அடியார்களை (மனிதர்களை) வணங்கினார்கள். அவனது(சுபு) வசனங்களை கனம் செய்வதற்கு பதிலாக படைப்பினங்களின் வார்த்தைகளை கனம் செய்தார்கள். இந்த வகையில் இது ஒரு பிற்போக்கேயாகும். இந்த நிராகரிப்பு கொள்கையினால் மனிதனின் சன்மார்க்க உள்உணர்வை அவனிடமிருந்து நீக்க முடியவில்லை. மாறாக, ஏமாற்றும் விதத்தில் அவனை பின்நோக்கி செல்லும்படி ஆக்கிவிட்டது. ஆகவே, இயற்பொருள்வாத சித்தாந்தத்தின் கம்யூனிஸம் (communism) அறிவார்ந்த தலைமை எதிர்மறையானதாகும் (Negative). மனிதனின் இயற்கை தன்மைக்கு முரண்பட்டதாகும் (Controdictive). எனவே இந்த கண்ணோட்டத்தில் இது ஒரு தோல்வியே ஆகும். மனிதர்களை தங்களின் இறைப்பை தேவையை நிறைவு செய்யும் காரியத்தின் பக்கம் மட்டும் சிறப்பாக கவனம் செலுத்தும்படி அது அவர்களுக்கு வழிகாட்டியது. ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும், வாழ்வில் தோல்வியடைந்தவர்களையும் அது சிறப்பாக கவர்ந்தது. சிந்தனைத்தரம் குறைந்தவர்களும், வாழ்க்கையை கோட்டை விட்டவர்களும், வாழ்க்கையை வெறுத்தவர்களும், இயல்பான மனநிலையிலிருந்து மாறி தம்மை ஞானிகள்; என்று அழைக்கப்படுவதை விரும்பியவர்களும் இதை பின்பற்றினார்கள். அவர்கள் இந்த இயற்பொருள்வாத தத்துவத்தை பிரசங்கிக்கும் போதே அதன் தவறான அடிப்படையும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் சேதமும், உண்மையாகவும் தெளிவாகவும் வெளிப்படுகிறது. மனிதர்களை இந்த சித்தாந்த்திற்கு அடிமைப்படுத்தவும், கட்டாயப்படுத்தவும் அது முயற்சிக்கிறது. ஆகவே, அடக்குமுறை, அநீதி, வன்முறை, குழப்பம் மற்றும் நிலையற்ற தன்மை ஆகியவை அதன் முக்கிய சாதனங்களாக இருக்கின்றன.

முதலாளித்துவ அறிவார்ந்த தலைமையும் மனிதனின் இயற்கை தன்மைக்கு அதாவது சன்மார்க்க உள்உணர்வுக்கு முரண்பாடாகவே இருக்கிறது. இது ஏனெனில் சன்மார்க்க உள்உணர்வு மனிதனின் வணங்கி வழிபடும் உணர்விலும், வாழ்க்கை விவகாரங்களை மேலாண்மை செய்வதிலும் வெளிப்படுகிறது. இந்த மேலாண்மையை மனிதன் கையில் எடுக்கும் நிலையானது இந்த சித்தாந்த வழிமுறையின் பொருந்தாத தன்மையும் அதன் வழிமுறையின் ஆற்றல் இன்மைக்கு சாட்சியளிக்கின்றன. முடிவாக, மதம் என்பது மனிதர்களின் வாழ்வியல் விவகாரங்களை சரியான முறையில் மேலாண்மை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். ஆகவே, மனித வாழ்க்கை விவகாரங்களிலிருந்து மதத்தைப் பிரிப்பது என்பது மனிதர்களின் இயற்கை தன்மைக்கு முரண்பாடாக இருக்கிறது. மனித வாழ்க்கையில் மதம் இடம் பெற்றிருப்பது என்பதன் பொருள். வாழ்க்கையின் செயல்பாடுகள் வெறும் மத சடங்குகளாக இருப்பது என்பதல்ல. மாறாக, மதம் இடம் பெற்றிருப்பதன் பொருள் அல்லாஹ்(சுபு) விதித்த விதிமுறைகளைக் கொண்டு மனிதனின் வாழ்வியல் விவகாரங்கள் தீர்க்கப்படுவதுதான். மனிதனின் இயற்கை தன்மையோடு பொருந்திப் போகின்ற அகீதாவிலிருந்து இந்த வழிமுறை பிறக்கின்றது. இந்த வழிமுறையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறொரு (கோட்பாட்டிலிருந்து) அகீதாவிலிருந்து பிறந்த வழிமுறையைக் கொண்டு வந்தால் அது மனித இயல்புக்கு பொருந்திப் போவதாக இருக்காது. ஆகவே, முதலாளித்துவத்தின் அறிவார்ந்த தலைமை மனித உள் உணர்வு அடிப்படையில் தோல்வியுற்ற ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில், அது எதிர்மறையானதாக இருக்கிறது. மனித வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை அது பிரிக்கிறது. மனித வாழ்வில் இயல்பாக உள்ள மத உணர்வினை போக்கி விடுகிறது. மேலும் அதை தனிமனித விவகாரம் என்று கூறுவதோடு, அல்லாஹ்(சுபு) மனித வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வாக விதித்துள்ள வழிமுறையை போக்கிவிடுகிறது.

இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை உடன்பாடானது. ஏனெனில், அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை பற்றிய நம்பிக்கைக்கு அறிவை அது அடிப்படையாக அமைத்திருக்கிறது. மனிதனின் கவனத்தை மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் என்பவற்றின் மீது திருப்பி படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வின் உள்ளமையை உறுதியாகவும், தீர்மானமாகவும் நிலைநிறுத்துகிறது. மனிதன் உச்சமான நிறைவை (Utmost Perfection) தனக்குள்ளே தேடுகின்றான். ஆனால் அது அவனிடத்திலோ அல்லது அவனுடைய வாழ்விலோ அல்லது பிரபஞ்சத்திலோ காணப்படாத நிலையில், இஸ்லாம் அதைப்பற்றி அவனுக்கு விளக்கக் கூறுகிறது. அந்த உச்சமான நிறைவை பெற்றுள்ள ஆற்றலை (அல்லாஹ்(சுபு)வை) அவன் அறிவு ரீதியாக உணர்ந்து கொள்வதற்கும, அதன் (அல்லாஹ்(சுபு)வை) உள்ளமை மீதும், அதன் (அல்லாஹ்(சுபு)வை) மீதும் நம்பிக்கை கொள்வதற்கும் வழிகாட்டுகிறது.

கம்ய+னிஸத்தின் அறிவார்ந்த தலைமை இயற்பொருள்வாத கோட்பாட்டின்மீது நிறுவப்பட்டிருக்கிறதே ஒழிய, அறிவார்ந்த அடிப்படையில் மனித அறிவின் தீர்மானத்தின் மீது நிறுவப்படவில்லை. அது சிந்தனைக்கு (Thought) முன்பாகவே இயற்பொருள் இருந்து வருவதாக கருதுகிறது. மேலும் அனைத்திற்கும் மூலமாக இயற்பொருள் இருக்கிறது என்று கருதுவதனால் இயற்பொருள்வாத (Meterialistic) அடிப்படையில் அது இருக்கிறது. இவ்வாறிருக்க, பல நூற்றாண்டுகளாக அறிஞர்களுக்கும், கிருஸ்தவ மத குருமார்களுக்கும் மத்தியில் நடந்து வந்த ரத்தம் சிந்தும் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் கொண்டு வரப்பட்ட சமரச பேரத்தின் அடிப்படையில் முதலாளித்துவ அறிவார்ந்த தலைமை அமைக்கப்பட்டது. இந்த சமரசத் தீர்வுதான் மனித வாழ்வியல் நடைமுறை விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிக்கும் சிந்தனையாகும்.

ஆகவே, கம்ய+னிஸம், முதலாளித்துவம் ஆகிய இரண்டின் அறிவார்ந்த தலைமையும் தோற்றுப்போய் விட்டன. ஏனெனில் அவை மனிதனின் இயல்புக்கு முரண்பட்டதாக இருப்பதோடு அவை மனித அறிவின் மீது நிறுவப்பட்டவைகள் அல்ல.

முடிவாக, இந்த மூன்று அறிவார்ந்த தலைமைகளில் இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மட்டும்தான் சரியானது. ஏனெனில் இது மனித அறிவின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. மனிதனின் இயற்கை தன்மையோடு ஒத்துப் போவதாக இருக்கிறது. அதனால் அதற்கு உடன்பாடான முறையில் பதிலளிப்பவனாக மனிதன் இருக்கின்றான். அதே வேளையில் மற்ற அறிவார்ந்த தலைமை தவறானதாக இருக்கின்றன. ஏனெனில் அவைகள் மனித அறிவின் மீது கட்டமைக்கப்படவுமில்லை. அவை மனித இயல்புக்கு பொருந்துவதும் இல்லை. அதாவது கம்ய+னிஸ அறிவார்ந்த தலைமை இயற்பொருள்வாத கோட்பாட்டின் மீது கட்டமைப்பட்டிருக்கிறதே தவிர அறிவின் மீது கட்டமைக்கப்படவில்லை. இது ஏனெனில் சிந்தனைக்கு முந்தியதாக இயற்பொருள் இருக்கிறது என்று அது கருதுகிறது. அதாவது அறிவுக்கு முந்தியதாக இயற்பொருள் இருக்கிறது என்று கருதுகிறது. மனிதனின் சிந்தனை (Thought) ) குறித்த இதன் கருத்து என்னவெனில், இயற்பொருள் மூளையில் (brain) பிரதிபலிக்கப்படும்போது சிந்தனை தொடங்குகிறது. ஆகவே தன்னுள் பிரதிபலிக்கப்படும் இயற்பொருளைப் பற்றி மூளை சிந்திக்கிறது. மூளையில் இயற்பொருள் பிரதிபலிக்கப்படுவதற்கு முன்பாக எந்த சிந்தனையும் அதில் இருப்பதில்லை. இதனடிப்படையில், அனைத்தும் இயற்பொருள் மீதுதான் கட்டமைக்கப்படுகின்றன. ஆகவே கம்ய+னியஸத்தின் அறிவார்ந்த தலைமை பிறந்த மூலம் இயற்பொருளே தவிர சிந்தனை (Thought) அல்ல.

கம்ய+னிஸத்தின் இந்த கருத்துக் கண்ணோட்டம் இருவகையில் தவறானதாகும். முதலாவதாக, இயற்பொருளுக்கும் மனித மூளைக்கும் இடையில் எந்தவிதமான பிரதிபலிப்பும் நடைபெறுவதில்லை. இயற்பொருளில் மூளை பிரதிபலிப்பு அடைவதுமில்லை. மூளையில் இயற்பொருள் பிரதிபலிப்பு அடைவதுமில்லை. ஏனெனில் பிரதிபலிப்பு ஏற்பட வேண்டுமெனில் கண்ணாடியைப் போல பிரதிபலிக்கும் தன்மையுள்ள ஒரு பொருள் அங்கு அவசியமாகிறது. இந்த பிரதிபலிக்கும் தன்மையினை மூளையும் பெற்றிருக்கவில்லை. இயற்பொருளும் பெற்றிருக்கவில்லை. ஆகவே, மூளைக்கும் இயற்பொருளுக்கும் மத்தியில் எந்தவிதமான பிரதிபலிப்பும் ஏற்படுவதேயில்லை. ஏனெனில் இயற்பொருள் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுவதுமில்லை. மூளையில் பிரதிபலிப்புக்கு உள்ளாவதுமில்லை. மாறாக, புலன்களில் ஏற்படும் புலன் உணர்வு (Sensation), புலன்கள் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் இயற்பொருளின் புலன் உணர்வு, மூளையில் ஏற்படும் இயற்பொருளின் பிரதிபலிப்பும் அல்ல, இயற்பொருளில் ஏற்படும் மூளையின் பிரதிபளிப்பும் அல்ல, மாறாக அது இயற்பொருளினால் ஏற்படும் புலன் உணர்வே ஆகும் (Sensation). இந்த வகையில் பார்வைக்கும் மற்ற புலன் உணர்வுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. எனவே, பார்ப்பதைப் போலவே நுகர்தல், கேட்டல், தொடுதல், சுவைத்தல் ஆகியவற்றின் மூலம் புலன் உணர்வுகள் ஏற்படுகின்றன. ஆகவே, நிகழ்வது என்னவென்றால் புலன் உணர்வே ஒழிய பிரதிபலிப்பு அல்ல. இதனடிப்படையில் மனிதன் தன் ஐம்புலன்களினால் புலன் உணர்வுகளை பெறுகிறானே தவிர பொருட்கள் மூளையில் பிரதிபலிப்பு அடைவதில்லை.

இரண்டாவதாக, புலன் உணர்வு மட்டுமே சிந்தனை ஏற்படுவதற்கு போதுமானதாக இருக்காது. மாறாக அது புலன் உணர்வை மட்டுமே ஏற்படுத்தும். அதாவது தொட்டுணரும் உண்மை பொருளின் (Tangible Objects) புலன் உணர்வை மட்டுமே அது ஏற்படுத்தும். புலன் உணர்வுகள் பல சேர்ந்து பல இலட்சம் புலன் உணர்வுகள் ஏற்பட்ட போதிலும் அது சிந்தனையை ஒருபோதும் ஏற்படுத்தவே செய்யாது. அது வெறும் புலன் உணர்வாக மட்டுமே இருக்கும். எனவே மனிதன் சிந்திக்க வேண்டுமெனில், முந்தய தகவல்களை அவன் மூளையில் கொண்டிருத்தல் வேண்டும். இதன் மூலமாக அவன் புலன் உணர்வால் அறிந்த பொருட்களை விளங்கிக் கொள்ளலாம். உதாரணமாக, சிரியாக் மொழியைப் (Syriac language) பற்றி முந்தய தகவல்கள் ஏதும் அறியாத ஒருவரிடம் சிரியாக் மொழியிலுள்ள ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டு, தொடுதல், பார்த்தல் ஆகிய அவருடைய அனைத்து புலன்களும் அந்த புத்தகத்தின் மீது படிந்தாலும், பல இலட்சம் முறை இந்த செயல் திரும்ப திரும்ப நிகழ்ந்தாலும் கூட சிரியாக் மொழி சம்பந்தமான தகவல்கள் அவருக்கு கொடுக்கப்பட்டால் ஒழிய ஒரு வார்த்தையைக் கூட அந்த புத்தகத்திலிருந்து அவரால் விளங்கிக் கொள்ள இயலாது. இதன் பிறகு அந்த தகவல் அவருக்கு கொடுக்கப்பட்டால் சிந்திக்கவும் விளங்கிக் கொள்ளவும் அவரால் இயலும். நாம் மற்றொரு உதாரணத்தை இங்கு காண்போம். வலிமையான புலன் ஆற்றலைக் கொண்டு ஒரு குழந்தை இருக்கிறது. அதனிடம் முந்தைய தகவல்கள் ஏதும் இல்லை. அந்த குழந்தையின் முன் ஒரு சிறு துண்டு தங்கம், ஒரு சிறு துண்டு பித்தளை, ஒரு சிறு கல் ஆகியவற்றை வைத்து, அந்த குழந்தையின் அனைத்து புலன்களும் அவற்றின் மீது முழுமையாக படிந்தாலும், பல்வேறு கோணங்களில் இந்த செயல் திரும்ப திரும்ப நிகழ்த்தப்பட்டாலும், அந்த குழந்தையால் அவற்றை அறிந்து கொள்ள இயலாது. எனினும், இந்த பொருட்களைப் பற்றிய முந்தய தகவல்கள் அந்தக் குழந்தையிடம் இருக்குமானால் அதைக் கொண்டு இந்த பொருட்களை அது அறிந்து கொள்ளும். இருபது ஆண்டுகள் அந்த குழந்தை வளர்ந்து வாலிபம் எய்தினாலும், அதன் மூளையில் சிறப்பான உயிரியல் வளர்ச்சி (Biological growth) ஏற்பட்டு இருந்தாலும் கூட, முந்தய தகவல்கள் இல்லாத பட்சத்தில் தான் பிறந்த முதல் நாளில் காணப்பட்ட நிலையிலேயேதான் இருக்கும். ஏனெனில், மனிதன் ஒன்றை அறிந்து கொள்வதற்கு மூளை மட்டும் போதாது. மாறாக, மூளையில் இருக்கும் முந்தய தகவல்களோடு, பொருட்களின் புலன் உணர்வும் சேர்ந்து மூளையோடு இணைய வேண்டும். அப்போதுதான் சிந்தனை ஏற்பட்டு ஒன்றை விளங்கிக் கொள்ள முடியும்.
உள்ளார்ந்த உணர்வு (Instinctual Behaviour) தொடர்பான நடத்தைகளைப் பொருத்தவரை மனிதனின் அறிவுத்திறன் செயல்பாங்கிற்கு (Intellectual Process) முற்றிலும் நேர்மாறானது. இத்தகைய நடத்தைகள் உள்ளார்ந்த உணர்வு அல்லது உடல் சார்ந்த தேவை ஆகியவற்றின் தூண்டுதலால் ஏற்படுகின்றன. உதாரணமாக, ஒரு ஆப்பிள் பழத்தையும், ஒரு சிறு கல்லையும் ஒரு குழந்தையிடம் பலமுறை கொடுப்பதின் மூலம் ஆப்பிள் உண்ணக் கூடியது என்றும் கல் உண்ண முடியாதது என்றும் அந்த குழந்தை அறிந்து கொள்கிறது. அதுபோலவே ஒரு கழுதை பார்லி அரிசி உண்ணக்கூடியது என்றும் மண் உண்ண முடியாதது என்றும் அறிந்து கொள்கிறது. இந்த வேறுபடுத்தும் திறன் சிந்தனையின் காரணமாகவோ அறிவுத்திறன் காரணமாகவோ ஏற்படுவதில்லை. மாறாக, உள்ளார்ந்த உணர்வு (Instinct) மூலமாகவோ, உடல் சார்ந்த தேவை உணர்வு (Organic Needs) மூலமாகவோ ஏற்படுகிறது. இத்தகைய விஷயங்கள் மனிதரிலும், விலங்குகளிலும் காணப்படுகின்றன. எனவே, பொருட்களின் புலன் உணர்வு மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள முந்தய தகவல்களோடு அது இணையாமல் சிந்தனை (Thought) உருவாக முடியாது.

இதனடிப்படையில், அறிவு, அறிவுத்திறன், அறிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றின் பொருள் என்னவெனில், புலன்கள் மூலமாக பொருட்களின் புலன் உணர்வு மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள முந்தய தகவல்களோடு இணைந்து மூளையில் நடைபெறும் செயல்பாங்கினால் (Process) பொருட்களின் உண்மை நிலை விளங்கிக் கொள்ளப்படுகிறது என்பதே.

ஆகவே, கம்ய+னிஸ்டுகளின் அறிவார்ந்த தலைமை தவறானதும் குறையுடையதுமாகும். ஏனெனில் அது அறிவின் மீது கட்டமைக்கப்படவில்லை. மேலும், அறிவைப் பற்றியும் சிந்தனையை பற்றியும் அது கூறும் விளக்கம் தவறானதாகும்.

முதலாளித்துவத்தின் அறிவார்ந்த தலைமையைப் பொருத்தவரை, பல நூற்றாண்டுகளாக கிருஸ்தவ புரோகிதர்களுக்கும், ஐரோப்பிய அறிவு ஜீவிகளுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரத்தம் சிந்தும் போராட்டத்திற்கு தீர்வாக ஏற்படுத்தப்பட்ட சமரச பேரத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதாகும். இந்த சமரச பேரம்தான் மனித வாழ்விலிருந்து மதத்தை பிரிப்பது என்பதாகும். அதாவது, மறைமுகமாக மதத்தை ஏற்றுக் கொண்டு பின்பு அதை வாழ்வியலிலிருந்து பிரித்து விடுவது. எனவே, முதலாளித்துவத்தின் அறிவார்ந்த தலைமை அறிவின் மீது நிறுவப்பட்டதல்ல. மாறாக ஒரு சமரசத்தீர்வின் அடித்தளத்தில் நிறுவப்பட்டது. உண்மையாக, முதலாளித்துவவாதிகளிடம் சமரச எண்ணம் ஆழமாக இடம் பெற்றிருக்கிறது. அவர்கள் அசத்தியத்தை சத்தியத்திற்கு நெருக்கமாகவும், நிராகரிப்பை விசுவாசத்திற்கு நெருக்கமாகவும், காரிருளை பிரகாசத்திற்கு நெருக்கமாகவும் கொண்டு வந்தார்கள். இந்த சமரசபேரம் ஒருபோதும் நிலைபெறாது என்பது உண்மையாகும். ஏனெனில் ஒரு விஷயம் ஒன்றேல் உண்மையாக (Haqq) இருக்க வேண்டும் அல்லது பொய்யாக (Baatil) இருக்க வேண்டும். விசுவாசமாக (Iman) இருக்க வேண்டும் அல்லது நிராகரிப்பாக (Kufr) இருக்க வேண்டும். பிரகாசமாக (டுiபாவ) இருக்க வேண்டும் அல்லது இருளாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் அடிப்படை கோட்பாட்டையும் (Aqeedah) அறிவார்ந்த தலைமையையும் கட்டமைத்துள்ள சமரசம் என்ற அடிப்படை அவர்களை சத்தியத்தை விட்டும், விசுவாசத்தை விட்டும், பிரகாசத்தை விட்டும் திசைமாறி செல்லுமாறு ஆக்கிவிட்டது. ஆகவே அவர்களுடைய அறிவார்ந்த தலைமை அறிவின் மீது கட்டமைக்கப்படவில்லை என்பதால் அது தவறானதாகும்.

இஸ்லாமிய அடிப்படை கோட்பாடு அறிவின் மீது நிறுவப்பட்டுள்ளது. ஏனெனில் அது முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு)வின் உள்ளமையையும், முஹம்மது(ஸல்) அவர்கள் தூதுவத்தையும், அருள்மறை குர்ஆனையும் அறிவை பயன்படுத்தி சிந்தித்து நம்பிக்கை கொள்ளுமாறு கட்டளையிடுகிறது. மேலும் அறிவார்ந்த முறையிலும், திட்டவட்டமான முறையில் இருக்கின்ற குர்ஆன், முத்தவாதிர் ஹதீஸ் போன்ற நம்பத்தகுந்த மூல ஆதாரங்களிலிருந்து உறுதியாக நிறுவப்பட்டவைகளையும் நம்ப வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் புலன் அறிவுக்கும் அப்பாற்பட்ட மறைவானவற்றை (Ghaib) நம்ப வேண்டும் எனவும் கட்டளையிடுகிறது. ஆகவே, இஸ்லாமிய அடிப்படை கோட்பாடு அறிவின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.

அறிவார்ந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் உள்ளதாக இந்த கோட்பாடு இருக்கிறது. மேலும், மனிதனின் இயற்கை தன்மையை (Fitra) பொருத்தவரையிலும், இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை அவனுடைய இயல்புக்கு ஒத்துப் போவதாக இருக்கிறது. ஏனெனில் அது சன்மார்க்கத்தையும், மனித வாழ்க்கையில் அதன் தேவை அவசியம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறது. மேலும் அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக வாழ்வியல் விவகாரங்களை மேலாண்மை செய்ய வேண்டும் என்பதையும் அது ஏற்றுக் கொள்கிறது. மத உள்உணர்வு மனிதனிடம் இயற்கையாக உள்ளார்ந்த வகையில் அமைந்திருக்கிறது. ஏனெனில், மனிதனிடம் அமைந்துள்ள உள்ளார்ந்த உணர்வுகளில் (Instincts) ஒன்றாக அது திகழ்கிறது. அதன் காரணமாக மனிதன் வணங்கி வழிபடும் தன்மையினை கொண்டவனாக இருக்கிறான். மனிதனிடம் காணப்படும் ஏனைய உள்ளார்ந்த உணர்வுகளிலிருந்து (Response of Instincts) மாறுபட்ட, தனித்துவமான உள்ளார்ந்த உணர்வின் துலங்களாக இது இருக்கிறது. ஆகவே, மார்க்கத்தில் நம்பிக்கை கொள்வதும், அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்வதும் மனிதனின் இயற்கையான உள்ளார்ந்த உணர்வைச் சேர்ந்ததாகும். அது மனிதனின் இயற்கை தன்மையோடு ஒத்துப் போவதாக இருப்பதால், மனிதனுக்கு உடன்பாடான முறையில் அது துலங்கல்களை காட்டுகிறது.

கம்ய+னிஸ மற்றும் முதலாளித்துவ அறிவார்ந்த தலைமையில் இது மாறுபட்டதாக இருக்கிறது. மனிதனின் இயற்கை நிலைக்கு இவை முரண்பட்டதாக இருக்கின்றன. கம்யூனிஸ்டுகளின் அறிவார்ந்த தலைமை மார்க்கம் இருப்பதை அடியோடு மறுக்கிறது. அதை ஏற்றுக் கொள்வதை எதிர்க்கிறது. இதனடிப்படையில், மனிதனின் இயற்கை தன்மைக்கு அது முரண்படுகிறது. முதலாளித்துவ அறிவார்ந்த தலைமை மார்க்கத்தை அங்கீகரிப்பதுமில்லை, நிராகரிப்பதுமில்லை. மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதையோ அல்லது நிராகரிப்பதையோ ஒரு விவகாரமாக அது விவாதிப்பதுமில்லை. எனினும், வாழ்வியலிலிருந்து மதத்தை பிரிப்பதை அது வலியுறுத்துகிறது. மேலும், வாழ்வியலிலே மார்க்கத்துக்கு தொடர்பு இல்லாத வகையில் உலக பயன்களின் அடிப்படையில் விவகாரங்கள் மேலாண்மை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை அது ஆதரிக்கிறது. ஆகவே, மனிதனின் இயற்கை தன்மையுடன் அது முரண்படுகின்றதுடன், இந்த சித்தாந்தம் மனித இயல்புடன் ஒத்துப்போகாது வெகு தூரத்தில் நிற்கிறது.

ஆகவே இஸ்லாமிய அறிவார்ந்த தலைமைத்துவம்தான் சரியான ஒரே ஒரு அறிவார்ந்த தலைமைத்துவமாக இருக்கிறது. ஏனெனில் அது மனிதனின் இயற்கை தன்மைக்கும் அறிவுக்கும் ஒத்துப் போவதாக இருக்கிறது. மற்ற அனைத்து அறிவார்ந்த தலைமைத்துவங்களும் தவறானவையாகும். இதனடிப்படையில் இஸ்லாமிய அறிவார்ந்த தலைமைத்துவம் ஒன்றுதான் சரியானதும் வெற்றிகரமான ஒன்றாகவும் திகழ்கிறது எனலாம்.


தொடரும்...

 warmcall.blogspot.com