Jan 30, 2018

பதிவுகள் தொடரும்...!!

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே...!!!


முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்டுரைகள், ஆய்வுகள், கண்ணோட்டம் என்று அனைத்து பதிவுகளும் ஒரே தளத்தில்
விரைவில் தொடர இருக்கிறது. தொடர்ந்து வந்து வசித்து செல்லும் அன்பு சகோதர்களே உங்கள் ஆதர்வுகளே தந்து இங்கு நீங்கள் படிக்கும் செய்திகளை மற்றவர்க்கும் பகிருங்கள்.

இன்ஷா அல்லாஹ்
என்றும் அன்புடன்
அபு நுஸைபா

Sep 10, 2016

எனது ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்கினிய சகோதரர்களே!

நமது இஸ்லாமிய மறுமலர்ச்சி இணையதளம் 7 ஆண்டு பணியை நிறைவு செய்து, 8 ஆம் ஆண்டு இணையப் பணியில் கால் எடுத்து வைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.


இன்ஷா அல்லாஹ்... விரைவில் islamicuprising.blogspot.com என்ற முகவரியில் செயல்படும் இந்த இணையதளம் www.islamicuprising.com என்று செயல்பட இருக்கிறது.

ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாளை கொண்டாட இருக்கும் உறவுகளை ISLAMIC UPRISING BLOG வாழ்த்துகிறது: ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் இறைத் தூதர்களான இப்றாஹிம் (அலை), அவரது மனைவி ஹாஜரா (அலை), இவர்களது மகனான இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் நாளாகும். அதேவேளை ஹஜ் கடமையானது ஒரு சர்வதேச மாநாடாகவும் அமைந்திருக்கின்றது.

ஹஜ் என்ற சர்வதேச மாநாட்டில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் முஸ்லிம் உம்மாவின் உறுப்பினர்கள் மக்காவில் ஒன்றுகூடி ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றனர். இன , மொழி, நிற , பிரதேச , தேச வேறுபாடுகள் புறக்கணித்து ஒரே விதமாக ஒரேநேர காலத்தில் வெள்ளை நிற ஆடை அணிந்தபடி தம் கடமையை நிறைவேற்றுகின்றார்கள். இவைகள் முஸ்லிம் உம்மாவிற்கு ஒன்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் கற்றுகொடுக்கின்றது. இவற்றை நினைவில் கொண்டு ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட உங்கள் அனைவரையும் Islamicuprising.blogspot.com
வாழ்த்துகின்றது.

Sep 7, 2016

10 லட்சத்திற்கும் மேலான பெல்லட் குண்டுகள் கஷ்மீர் மக்கள் மீ்து பிரியோகித்துள்ளது

கஷ்மீரில் 10 லட்சத்திற்கும் மேலான பெல்லட் குண்டுகளை மக்கள் மீ்து பிரியோகித்துள்ளதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
 
உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு ஆறு லட்சம் ராணுவ படையை இரக்கி இந்திய அரசு கஷ்மீரை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அது மட்டுமின்றி கஷ்மீர் மக்களின் மீது ஆயுதங்கள் பிரயோகிப்பதும் எப்போதையும் வீட கடந்த மாதங்களில் அதிகரித்துள்ளது (பாகிஸ்தான் செய்தி நிறுவனம் – தி நியூஸ்)
 
கடந்த 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட் குண்டுகளை சாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரயோகப்படுத்தியதாக இந்திய துணை ராணுவம் ஜம்மு-கஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன் ஒப்புக் கொண்டுள்ளது.
 
மேலும் அந்த அறிக்கையில் 8000 கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் 2000 பிளாஸ்டிக் பெல்லட் குண்டுகளும் பிரயோகித்துள்ளதாக  குறிப்பிடபட்டுள்ளது.
 
சாமானிய முஸ்லிம்கள் உலகெங்கிலும் பல நாடுகளில் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் பலபயங்கர இன்னல்களையும், அச்சுருத்தல்களையும் சந்தித்து வரிகின்றனர் எனினும் முஸ்லீம் நாடுகளின் ராணுவம் தங்களது இருப்பிடங்களைவிட்டு  நகருவதில்லை..
 
 
 
செய்தி பார்வை 20.08.16

ஏமன் மீதான போர்

ஏமன் மீதான போரில், சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைப்பதாக அறிவித்துள்ளது.
 
ஒபாமாவின் யுக்தியை அமெரிக்கா தொடர்கிறது, தொலைவிலிருந்து போர்களை இயக்கும் அந்த யுக்தியின் அடிப்படையில் சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களை அமெரிக்கா குறைத்துள்ளது. (செய்தி – ரியுடர்ஸ்)
 
கூட்டுப்படை போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புதல், உளவு செயதிகள் பரிமாற்றம் போன்றவற்றை சவுதி அரேபியாவோடு ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்காக அமெரிக்கா கடந்த ஆண்டு “ஜாயின்ட் கம்பைன்ட் பிளானிங் செல்” என்ற செயல்திட்டதை தொடங்கியது, இதில் தற்போது ஐந்திற்கும் குறைவானவர்களே பனியமர்த்தபட்டுள்ளார்கள் என்று அமெரிக்காவின் கடற்படையின் செயதிதொடர்பாளர் லெஃப்டினன்ட்  இயன் மேக் கன்னகெய் பஹ்ரைனில் ரியுடர்ஸ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
இந்த பணிக்காக சவூதி தலைநகர் ரியாத் உட்பட பல இடங்களில் ஆமாரத்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 45 லிருந்து 5 ஆகா குறைக்கப்படுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இவ்வாறு அமெரிக்க ராணுவத்தினர்களின்ண் எண்ணிக்கை குறைக்கப்பட்டும் ஏமனில் தொடுக்கப்படும் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. இது தொடர்பாக குவைத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தீர்வின்றி முறிவுற்றதால் ஏமன் மீதான சவுதியின் தாக்குதல் தீவிரமடயக்கூடும்.
 
முஸ்லீம் நாடுகளில் அமெரிக்கா நேரடியாக் இறங்கி போர் புரியும் நம்பிக்கையை இழந்துவிட்டது, அதனால் மற்ற தோழமை நாடுகளின் உதவியின் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்று வருகிறது. அமெரிக்காவின் இந்த நிலமையை எப்போது உலகம் கண்டறிந்து புரிந்துகொள்ளும்?
 
 
செய்தி பார்வை 20.08.16

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பு

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பை அமெரிக்கா வழங்குகிறது.
 
இஸ்லாம் மற்றும் முஸ்லிம் மகளுக்கு எதிராக சிரியாவில் நடந்துவரும் போரில் அமெரிக்கா தனது திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது, ஏதாவது ஒரு வகையில் தனது அதிகார வரம்பை மீறி செயல்கள் போகும் பட்சத்தில் அமெரிக்கா தனது படையை உபயோகிக்க தயராகவுள்ளது. ( செய்தி – 19/8/2016  தி நியூயார்க் டைம்ஸ்)
 
குர்து போராளிகள் சிரியாவின் வடகிழக்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இவர்கள் அமெரிக்காவுடன் இனைந்து ISIS ஐ எதிர்த்துவருகிறார்கள். சிரியாவின் பஷார் அல் அசாத் அரசின் விமானம் குர்து போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தாக்கியதை கண்டித்து அமெரிக்கா உடனடியாக தனது விமானத்தை அந்த நிலப்பரப்பின் மேல் பரக்க செய்து குர்துகள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பென்டகன் செய்தி தெரிவித்துள்ளது. சிரியாவின் பஷார் அரசுக்கும், குர்து போராளிகளுக்கும் இடையே அவ்வப்போது சில சிறிய மோதல்கள் நடந்துள்ளதே தவிர இவ்விருவருக்கும் இடையே பெரிய அளவிலான போர் நடைபெறாத நிலையில் இந்த விமான தாக்குதலை சிரியா அரசு குர்துகள் மேல் தொடுத்துள்ளது.
 
அமெரிக்கா இது போன்ற உதவிகளை சிரியாவில் உள்ள மற்ற எந்த போராட்ட குழூக்களுக்கும் வழங்கவில்லை, இஸ்லாமிய போராட்ட குழூக்கள் அமெரிக்காவின் செயல் திட்டங்களை ஏற்கமருப்பதாலும் இஸ்லாத்தைமையமாக வைத்து செயல்படுவதாலும் அந்த போராட்ட குழுக்களுக்கு எதிராகவே அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
 
 
செய்தி பார்வை 20.08.16

சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வி

 
சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வியை அடுத்து  ரஷ்யா, முஸ்லிம்களுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது .
 
 ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிரியா மற்றும் ரஷ்ய ராணுவதாள் அலெப்போவில் ஏற்படுத்தப்பட்ட முற்றுகையை அங்குள்ள பல இஸ்லாமிய போராட்ட குழுக்கள் இனைந்து உடைத்தார்கள். இதில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து ரஷ்யா மதியதரைகடலில் நிறுதிவைத்துள்ள போர்க்கப்பல் மூலமாகவும், ஈரனிலுள்ள விமானதளத்தை பயன்படுத்தி  விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும் தனது தாக்குதலை சிரியாவிலுள்ள முஸ்லிம்கள் மீது தீவிரப்படுத்தியுள்ளது.
 
சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்காக போராடும் முஸ்லிம்களை எதிர்த்து முதல் முறையாக ரஷ்யா போற்கப்பல் மூலம் ஏவுகணை தாக்குதலை தெடுத்துள்ளது.
 
இது போன்ற பலமுனை தாக்குதல் நடவடிக்கையை  மேற்கொள்வதன் மூலம் ரஷ்யா தனது ராணுவ திறனை நிரூபித்து சிரியாவில் தனது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்த முயல்கிறது. இதற்கு முன் சிரியாவில் லடாகியவில் உள்ள தனது ராணுவதளத்திலிருந்தும், காஸ்பியன் கடலில் நிறுத்தி வைத்துள்ள போர்க் கப்பல்கள் மூலமும் சிரியாவின் கொடுங்கோல் அரசுக்கு ஆதரவாக அங்குள்ள முஸ்லிம்கள் மீது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது கூடுதலாக மத்திய தரைகடலில் நிறுதிவைத்துள்ள  போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகள் மூலமும், ஈரானின் விமான தளங்கலில் இருந்து போர் விமானங்களை பயன்படுத்தி குண்டுமலைகலை பொழிந்தும் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவின் முழு அனுமதியின் பெயரில் நடந்துவருகிறது, சிரியாவில் இஸ்லாத்திற்கு ஆதரவான போராட்டத்தை ஒடுக்க ஈரானின் ராணுவதளத்தை ரஷ்யா பயன்படுத்தும் அளவிற்கான ஒரு சுமூக போக்கையும் அமெரிக்கா அனுமதித்துள்ளது.
 
சிரியாவில் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யா ஒருபுறம் அமெரிக்காவின் கொள்கைக்கு இணங்க செயல்படுவதால். கிரிமியா தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு வழிவிட்டுள்ளது
 
 உக்ரைனுடைய எல்லைகளுக்கு அருகில் பத்தாயிரம் வீரர்களை உள்ளடக்கிய ரஷ்யபடை நகர்த்தப்பட்டிருப்பதை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை, மேலும் பென்டகனோரஷ்யாவின் இந்த நகர்வை வழக்கமான பயிற்சி நடவடிக்கை தான், அதனால் உக்ரைனின் இறையாண்மைக்கும், எல்லைக்கும் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளது.
 
 
செய்தி பார்வை 20.08.16

Sep 6, 2016

கிலாஃபத் ஜனநாயக அமைப்பையோ அல்லது சர்வாதிகார அமைப்பையோ கொண்டதாக இருக்குமா?

இஸ்லாமிய அரசு இவை இரண்டையும் கொண்டிருக்காது.  மேற்கத்திய காலனியாதிக்க சக்திகள் தேர்தல் முறைதான் ஜனநாயகம் என்று தொடர்பு படுத்திவிட்டார்கள், ஆனால் இந்த விஷயத்தின் உண்மை நிலை அதுவல்ல. கிலாஃபத்தில் கலீஃபா உட்பட பல்வேறு பதவிகளுக்கு நபர்களை தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெறும், ஆனால் இவர்களில் ஒருவருக்கு கூட ஜனநாயகத்தில் இருப்பது போன்று தனி நபராகவோ அல்லது ஓரு கூட்டாகவோ சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்காது. அஃதாவது இது மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அதே சமயம் அவர்களால் ஷரீ’ஆவிற்கு மாறுபட்டு ஆட்சியாளர்கள் எவ்வித விசாரணைக்கும் தண்டனைக்கும் ஆளாவதிலருந்து விடுவிப்பது போன்ற கறைபடிந்த சட்டங்களை அவர்களால் இயற்ற முடியாது என்பதை விளக்குகின்றது. 6
நடைமுறை உபயோகத்தில், சர்வாதிகார ஆட்சி அமைப்பு என்பது அதன் தலைமையை சட்டமோ, அரசியல் அமைப்போ அல்லது இதர உள்நாட்டிலுள்ள சமூக மற்றும் அரசியல் காரணங்களும் அதன் வரையறைக்கு  கட்டுப்படுத்தாத ஒரு ஏகாதிபத்திய தன்மையுடையதை குறிக்கின்றது. இது இஸ்லாமிய சட்டத்திற்கு மாற்றமானதாக இருக்கின்றது ஏனெனில் கலீஃபா தனது செயல்பாடுகளை சில வரையறைக்குள் அமைத்து கொள்ளும்படியும் அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதை சரிகாணும் செயல்பாட்டை கொண்டிருக்கும் அது அவரின் அதிகாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும். கலீஃபா சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார், அவரும் மற்ற எல்லா குடிமக்களை போன்று அதற்கு கட்டுப்பட்டவராகவே இருப்பார்.
 
http://sindhanai.org/

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குறை கூறியதால் பாகிஸ்தான் அதிர்ப்தி

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குற்றம் சாட்டியதால் பாகிஸ்தான் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய அரசை நிலைபெரச்செய்வது குறித்த பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த குற்றச்சாட்டால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் உள்ள அதிகாரிகள் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தனது அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை மற்றும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொல்வதாகவும், மற்ற தீவிரவாத அமைப்புகளான ஹக்கானி குழு உட்பட பல குழுக்களுக்கு அது அடைக்கலம் அளிப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. (செய்தி – வாய்ஸ் ஆப் அமெரிக்கா)
ஒபாமா அரசு, மாணிய அடிப்படையில் பாகிஸ்தானுக்கு விற்கவிருந்த F 16 போர் விமான ஒப்பந்தத்திற்கும் அமெரிக்க பாராளுமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
அண்மையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் “பாகிஸ்தான் நட்பு நாடா அல்லது எதிரி நாடா” என்ற தலைப்பில் நடந்த விவாதம் பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசுகையில், அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய ஆப்கனிஸ்தான் அரசுக்கு எதிராக இயங்கிவரும் ஹாக்கணி, தாலிபான் போன்ற குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. ஆகையால் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்துவரும் பொருளாதாரம் மற்றும் இராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை பதிவுசெய்தனர்.
ஆப்கனிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதரான ஸல்மே கலில்ஜாத் அமெரிக்கா, வட கொரியாவை கையாளுவதை போல் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் ஆப்கனிஸ்தானில் தனக்கு சாதகமான நாடவடிக்கைகளை சாதித்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
எனினும் பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த பாகிஸ்தானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிறிய பிரிவினரால் எழுப்பப்பட்ட அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறிவிட்டனர். (செய்தி – பிஸ்னஸ் ரேகார்டர்)
செய்தி கண்ணோட்டம்:
அமெரிக்காவின் குற்றச்சாட்டால் பாகிஸ்தான் ஆச்சரியபடவோ, அதிருப்தி அடையவோ ஒன்றும் இல்லை. அமெரிக்காவை பொறுத்தவரை, ஆசியாவில் தனது முதன்மை ஏஜென்டாக இந்தியாவை நிலைநிறுத்த பாகிஸ்தானை பணயமாகவே பயன்படுத்துகிறது. மேலும் பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் நாடு என்பதால் அங்கு எப்போது வேண்டுமானாலும் இஸ்லாமிய அரசான கிலாபா நிறுவப்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டவாறே அமெரிக்கா செயல்படுகிறது.
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்

“மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்”
மாட்டு இறைச்சி வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தால் இரண்டு முஸ்லிம் பெண்கள் மத்திய பிரதேசத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அப்பெண்களிடம் அதிக அளவிலான மாட்டு இறைச்சி இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பெண்களை கைது செய்யும் தருணத்தில் ஒரு கும்பல் அவ்விரு பெண்களையும் “கோமாதா வாழ்க” என்ற குரலோடு காவல் துறை முன்னிலையில் தாக்கினார்கள் (NDTV செய்தி அறிக்கை).
மத்திய பிரதேசத்தில் உள்ள மண்ட்ஸுர் ரயில் நிலையத்தில் முஸ்லீம் பெண்கள் தாக்கப்பட்ட வீடியோ காட்சி உள்ளூர் தொலைக்காட்சியிலும், NDTV செய்தியிலும் ஒளிபரப்பானது . காவல் துறையினர் அந்த பெண்களிடம் பறிமுதல் செய்த இறைச்சியை சோதனை செய்ததில் அது பசு இறைச்சி அல்ல எருமை மாட்டின் இறைச்சி என்றும் தெரிய வந்தது . ( இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி)
ஆனாலும் அப்பெண்களிடம் தகுந்த உரிமம் இல்லாததால் அவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் இந்து மக்கள் பசு மாட்டை புனிதமாக கருதுகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் பசுவை அறுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
சென்ற மாதம் பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் பசுவை அறுத்ததாக கூறி 4 தலித் இனத்தை சேர்ந்தவர்களை ஆடைகளை அவிழ்த்து காரில் கட்டிவைத்து ஒரு இந்து கும்பல் கடுமையாக தாக்கியதால் தலித் மக்கள் போராட்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி கண்ணோட்டம்:
இந்திய அரசியல் வாதிகள் இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறி பெருமை கொள்கின்றனர். ஆனால் உண்மையோ இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மூன்றாம் தர குடிமக்களாக தான் கருத படுகின்றனர். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்து வெறியர்களால் தாக்கப்படுவது மட்டுமின்றி, அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கையால் முஸ்லிம்கள் வரிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் 14.4% சதவிகிதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் இருகின்றனர், ஸச்சார் அறிக்கை படி 31% சதவிகித முஸ்லிம்கள் அதாவது மூன்று முஸ்லிம்களில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக கூறுகின்றது..
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர் வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக் கூடாது

“ஐரோப்பாவிற்கு முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர்வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக்கூடாது என்று டச்சு (நெதர்லாண்டு) வலதுசாரி தலைவர் கீர்ட் வில்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்”.

சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்த அகதிகளின் ஒருவர் ISISயின் பெயரால்- அண்மையில் ஜெர்மனியிலுள்ள அன்ஸ்பாக் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலையொட்டி, நெதர்லாண்டின் சுதந்திர கட்சியின் தலைவரான கீர்ட் வில்டர்ஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருப்பது தீவிரவாதிகள் நுழைவதற்கு வழிவகுக்கக் கூடியதாக இருக்கிறது என்று கூறி நெதர்லாண்டின் பிரதமர் மார்க் ரூட் மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சென்ற மாதம் அமெரிக்க ஊடகத்தில் (Breitbart) வெளிவந்த கட்டுரை ஒன்றில் வில்டர்ஸ் கூறுகையில், முஸ்லிம்கள் இஸ்லாத்தை புறம் தள்ளுமாறும், மேற்குலகின் சுதந்திரப்போக்கை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவர் அக்கட்டுரையில் குறிப்பிடுகையில் ‘இஸ்லாம் சர்வாதிகார போக்கை கொண்ட மார்க்கம், அதன் தாக்கத்தால் பாதிப்பிற்குள்ளானவர்கள் தான் முஸ்லிம்கள்.

மேலும் அக்கட்டுரையில் அவர் எழுதுகையில், முஸ்லிம் குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரின சேர்க்கையாளராக மாறுவதை பற்றி சிந்திக்க வேண்டும். முஸ்லிம் பெண், முஸ்லிம் அல்லாத ஆண்களை திருமணம் செய்ய முன் வருவதற்கு கற்பனை செய்ய வேண்டும். முஸ்லிம்கள், கிறிஸ்துவத்திற்கோ, வேறு மதத்திற்கோ அல்லது இறைமறுப்பாளராகவோ மாற முன் வர வேண்டும்.

இது போன்று முஸ்லிம்கள் சிந்திக்க தொடங்கினால் அது அவர்களுக்கு மட்டுமன்றி மேற்கத்திய கலாச்சாரத்தின் நலனிற்கும் உகந்ததாகும்.

முஸ்லிம்கள் தங்களது இஸ்லாமிய மார்க்கத்திற்கு புறமுதுகு காட்டி விட்டு, கிறிஸ்துவராகவோ, இறை மறுப்பாளராகவோ அல்லது வேறு கொள்கைகளை நோக்கி விரைய வலியுறுத்துகிறோம்.

முஸ்லிம்கள் தங்களை இஸ்லாம் மற்றும் முஹம்மதின் கடிவாளத்திலிருந்து விடுவித்து கொள்வதே அவர்களுக்கு சிறந்ததாகும். இவ்வாறு வில்டர்ஸ் தனது கட்டுரையில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான கருத்தை பதிவு செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு நெதர்லாண்டில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான தேர்தலுக்கான கருத்து கணிப்பில் இவர் முன்னிலையில் உள்ளார். இவர் வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி மற்றும் வலதுசாரிகளின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான போக்கை கையாளுபவர் என்பது பலரும் அறிந்ததே.

வில்டர்ஸ்யின் எழுத்தில் 2008 ஆம் ஆண்டு ‘பித்னா” எனும் ஆவணப்படம் வெளிவந்தது அதில் இஸ்லாத்தையும், குர்ஆனையும் தவறான கண்ணோட்டத்தில் சித்தரித்தது முஸ்லிம்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

செய்தி கண்ணோட்டம்:

முஸ்லிம்கள் இஸ்லாத்தை முழுமையாக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்ற முயல்வதும், அதை நிலைநிறுத்தும் உண்மையான இஸ்லாமிய அரசான கிலாபாவை நோக்கி முயற்சிகள் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாததால் இஸ்லாத்திற்கெதிரான இவர்களது கருத்துக்களும், செயல்பாடுகளும் அப்பட்டமாக வெளிபடுவதை காணமுடிகிறது. போர் காரணமாக முஸ்லிம்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதை தடுக்கும் வகையிலான இவரது கருத்துக்கு ஐரோப்பியர்களிடையே ஆதரவு கிடைத்து வருகிறது.

http://sindhanai.org

செய்தி பார்வை 29.07.16



அலெப்போவின் விளக்கம் தரும் தருணம்

2012 ல் சிரியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக நகரத்தை புரடசி படைகள் வெற்றி பெற்று கைப்பற்றியது, இத்தருணத்தில் அது ஒரு தூரத்து கனவாக இருக்கின்றது. அலெப்போ மாகானத்தின் பெரும் பகுதியையும் அதே பெயரை கொண்ட அதன் தலைநகரத்தையும் கைப்பற்றியது அசாதிற்கு மாற்று சக்தியாக விளங்கும் ஒரு எதிர்ப்பை நிறுவ எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இது மேலும் அரசாங்கத்தின் பின்னடைவை வேகப்படுத்தியுள்ளதோடு அதன் வசமிருந்த பகுதிகளை இழக்க செய்துள்ளது இதன் காரணத்தா் அல்-அசாத் சிரியாவின் வட பகுதியை மீளும் முயற்சியை கைவிடும் நிலையை ஏற்படுத்தியது. ஆனால் இன்று இந்நாட்டில் நடைபெற்று வரும் போர்களில், அலெப்போவிற்கான போரே மிகப்பெரியதும் மற்றும் வெற்றியை முடிவு செய்யும் ஆற்றலுடைய உறுதியான போராகும் அது இப்போது விளக்கும் தருணத்தை அடையும் நிலையை எட்டியுள்ளது. அசாத் மற்றும் புரட்சியாளர்கள் இவ்விரு தரப்பினரும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர் ஒரு தீர்க்கமான ராணுவ வெற்றியின் மூலம் அசாத் தனது நிலையை உறுதி படுத்த விழைகிறார். அதே வேளையில் புரட்சியாளர்கள் தங்களது நோக்கம் நிலைத்திருக்க போராடுகிறார்கள். ஒரு வேளை அலெப்போவை இழந்து விட்டால் அதன் பிறகு அல்-அசாதிற்கு எதிராக எந்தவொரு ராணுவ வெற்றியை பெறுவது என்பது புரட்சியாளர்களுக்கும் சிரிய மக்களுக்கும் ஒரு நெடிய கனவாக ஆக்கிவிடும். அதே சமயம் அல்-அசாதிற்கு 10 மாதத்திற்கு முன்பு கவிழும் நிலையிலிருந்த தனது ஆட்சிக்கு புத்துயிர் ஊட்டியது போல் ஆகிவிடும்.


2016 ஜூலை 17ம் நாள் அன்று அசாதின் படைகள், ஈரானிய படைகள், ஹிஸ்புல்லாவின் வீரர்கள் ரஷ்ய விமானப்படை மற்றும் இதர புரட்சிப்படைகளின் உதவியோடு புரட்சியாளர்களின் கட்டுப்படாட்டில் இருந்த அலெப்போவின் கிழக்கு பகுதியில் இருக்கும் கடைசி தொடர்பு சாலையான கேஸ்டெலோ சாலையை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் இச்சாலை 2012ம் ஆண்டு முதல் புரட்சியீளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதுவே ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை கொண்டு செல்ல மீதமிருந்த ஒரூ பாதையாகும்.[1] அல்-அசாதின் படைகள் இப்போது புரட்சியாளர்கள் கடைசியாக தங்கள் கைவசம் வைத்திருந்த பலம் பொருந்திய பகுதயான அலெப்போ நகரத்தின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டு சுற்றி வளைத்துள்ளனர், அந்த மக்களுக்கு உணவு கிடைக்காமல் செய்தும் அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் செயலை செய்து அவர்களை தண்டிக்க ஆரம்பித்துள்ளனர். அலெப்போ நகரத்ரிற்கு எதிரான அல்-அசாதின் ராணுவ நடவடிக்கை 2015 அக்டோபர் மாதம் தொடங்கியது இது ரஷ்ய தலையீடு நிறுத்தப்பட்ட பின்னரும் லட்டாக்கியா மற்றும் இத்லிபிலிருந்து புரட்சியாளர்களை பின்னோக்கி செலுத்தியதை அடுத்து நிகழ்ந்தது. ரஷ்ய ஆகாய சக்தி மற்றும் ஈரானிய தலைமை மற்றும் ஷிஆ புரட்சிப்படைகளின் உதவியை கொண்டு அலெப்போ மற்றும் இத்லிப் மாகாணங்களில் பன்முனை தாக்குதல் நடத்தியதில் எதிரணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியதோடு அவர்களை அளவுக்கு அதிகமாக தங்களது எல்லைகளுக்கு அப்பால் இழுக்க முடிந்தது. எதிர் படையினரை நகரப்பகுதிகளில் இருந்து வெளியேற்றி ஒரு தீர்க்கமான முடிவு தரக்கூடிய நடவடிக்கையை மேற்கொண்டு அந்நகரை சுற்றி வளைக்க சூழ்நிலைகளை தோதுவாக அமைக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கில் உள்ள அலெப்போ நகரத்தில் உள்ள கிராம பகுதிகளில் நடைபெற்றது. ரஷ்ய விமானப்படையும் ஈரானின் மனித வளமும் பஷார் அல்-அசாத் அலெப்போ நகரத்தை அனைத்து புரத்திலும் முழுமையாக சுற்றி வளைக்க வைத்தது.

சர்வதேச சக்திகள், இவர்கள் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல, இவர்களும் புரட்சியாளர்களை பணிய வைக்க அதே போன்று தாக்குதல் நடத்தி படுகொலைகள் செய்தனர். ஜூலை 18ம் நாள் அமெரிக்க போர் விமானங்கள் மன்பிஜ் நகரத்தை அடுத்து ரத்தம் வழியச்செய்யும் ஒரு படுகொலையை நிகழ்த்தியது, இதில் 20 அப்பாவி குடிமக்கள் உயிரிழந்தனர் மேலும் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் காயம் அடைந்தனர்.[2] அதற்கு அடுத்த நாள் பிரஞ்சு போர் விமானங்கள் நீஸில் நடந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக மன்பிஜ் நகரின் வடக்கே உள்ள டவ்கான் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தியது, இந்த உதிரம் வழியும் படுகொலை தாக்குதலில் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர் சில இடங்களில் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர்.[3] ஜூலை 23ம் நாள் ரஷ்யாவும் அலெப்போவை சுற்றி பல இடங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்தி குழந்தைகள் உட்பட 70 நபர்களை கொன்று குவித்தது. அனைத்து பயங்கர தாக்குதல்களும் பல உயிர்களை பலி கொண்டும், பெருமளவிலான உடமைகள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தியும் இதன் காரணமாக இடர்பாடுகளுக்கு மத்தியில் சிக்கி இருந்த பிரேதங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டெடுக்கும் பணியை சிரமமாக்கியது. புரட்சி்ப்படையினரின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அலெப்போவின் கிழக்கு பகுதியில் அவர்களை சுற்றி வளைத்து அவர்களின் மீது தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

பலதரப்பட்ட எதிராளிகள் மற்றும் புரட்சிப்படையினருடன் அரசு கொண்ட அமைதி ஒப்பந்தம் அலெப்போவில் துவம்சம் செய்வதற்கான ஒரு முன் ஏற்பாடாக அரசு சரியாக பயன்படுத்தி கொண்டது. அனைத்து போர் நிறுத்த ஒப்பந்தங்களும் சிரிய பிரட்சியின் ஆரம்பத்திலிருந்து அரசு அதை பயன்படுத்தி தனது ஆதிக்கத்தை விரிவாக்க செய்தது பின்பு அந்த ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை முழுமையாக உதாசீனப்படுத்தியது. ஏப்ரல் 2012ல் நடைபெற்ற கோஃபி அன்னன் போர் நிறுத்த ஒப்பந்தம், அக்டோபர் 2012ல் ஈத் அல்-அழ்ஹாவில் நடைபெற்ற லக்தார் பிராஹிமி போர் நிறுத்த ஒப்பந்தம், ஜனவரி 2014ல் நடைபெற்ற பர்ஃஜா சுற்றுவட்டார போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் செப்டம்பர் 2014ல் நடைபெற்ற காபூன் சுற்றுவட்டார போர் நிறுத்த ஒப்பந்தம் போன்று 2011லிருந்து அல்-அசாத் பல்வேறு போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பின்பு அதை மீறி உள்ளார். ஜபாதானி போர் நிறுத்த ஒப்பந்தமானது அதில் கையொப்பமிட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி இத்லிபிற்கு செல்ல வேண்டும் என்று நிபந்தனை கொண்டிருந்தது மற்றும் அல்-வார் போர் நிறுத்த ஒப்பந்தமும் அவர்களை இத்லிபிற்கு செல்ல வேண்டும் என்கிற நிபந்தனை கொண்டிருந்தது. இதேபோல் ஃஜபாதானி மற்றும் மதாயா போர் நிறுத்த ஒப்பந்தங்களின் படி மக்கள் இத்லிபிற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. டிசாம்பர் 2015ல் நடைபெற்ற அல்-வார் போர் நிறுத்த ஒப்பந்தம், எதிர்ப்பாளர்களின் துப்பாக்கி ஏந்திய வீரர்களை அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேறி இத்லிப் நோக்கி செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதக்கப்பட்டது, இதன் மூலம் ஹோம்சில் சண்டையிடுவதை நிறுத்தி புரட்சியின் தொட்டிலை முழுமையாக மீண்டும் அசாதிடம் ஒப்படைக்கும் விதமாக இருந்தது. எதிர்ப்பாளர்கள் மற்றும் பல அமைப்புகள் இத்லிபில் இருந்த காரணத்தினால் இந்த பகுதியில் ரஷ்ய விமானப்படைகளால் பலமாக தாக்கப்பட்டு அல்-அசாத் அரசு அந்த புரட்சியாளர்களுக்கு மரண அடி கொடுக்கவும் அலெப்பாவிற்கான பாதையை திறந்து வைக்கவும் வழிவகை செய்தது, இதன் மூலம் அரசை அந்த மக்களை சுற்றி வளைக்க செய்தது. இந்த அமைதி ஒப்பந்தம் என்பது புரட்சியாளர்கள் தரப்பிலிருந்து நிகழ்ந்தப்பட்ட ஒரு பெரிய தவறாகும் இது இறுதியில் அரசுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது.

ஜூலை 31ம் தேதி கிட்டத்தட்ட 20 பெரிய புரடசி குழுவினர், அலெப்போவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முற்றுகையை முறிக்கும் எண்ணத்தில் தாக்குதலை தொடங்கினார்கள். அது அதன் நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றாலும், இந்த தாக்குதல் ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது மேலும் இதன் மூலம் போராட்டக்குழுவினர் இடையே உள்ளுக்குள் ஒற்றுமையாக இருப்பது இன்றியமையாதது என்ற கண்ணோட்டத்தை உறுதிபடுத்தும். அனால் வெளிப்புற உதவி இல்லாதது கூடுதல் படைகள் இல்லாதது அலெப்போவில் தங்கள் உயிருக்காக போராடுபவர்கள் அந்த கணக்கிடும் தருணத்தை அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது. சில அமைப்புகள் துருக்கி, சவூதி அரேபியா, கத்தர் மற்றும் அமெரிக்காவிடம் இருந்தும் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகள் பெற்றிருந்தாலும் இந்த உதவிகள் அரசுக்கு எதிரான போரில் ஒரு நல்ல மாற்றத்தை தரக்கூடிய அளவிலான ஆயுத உதவி அவர்களுக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை. புரட்சியாளர்களின் தற்காப்பை பலவீனப்படுத்துவதிலும் அலெப்போவில் தற்பொதைய சுற்றி வளைப்பிற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ. ம் முக்கிய பங்கு வகித்தது. புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அலெப்போவை கைப்பற்றவும் இத்லிபில் முன்னேற்றம் அடையவும் ஐ.எஸ்.ஐ.எஸ். பலமுறை முயன்றது. அதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்ந்து தோற்றிருந்தாலும் புரட்சியாளர்களுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது, 7000 வீரர்களை அது இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.[4] சிரியாவின் வட பகுதியில் உள்ள போராட்ட குழுவினர் கிழக்கிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் தாக்குதலையும், தெற்கிலருந்து நடத்தப்படும் அரசின் தாக்குதல்களையும் மற்றும் நாட்டின் அனைத்து திசையிலிருந்து ஈரானிய புரட்சிப்படையினருடன் சேர்ந்து ரஷ்யா தொடுக்கும் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது இங்கு நடத்தப்பட்ட முற்றுகையின் காரணமாக ஒரு மாதம் காலம் தொடர்ந்து நடந்த போரினால் அவர்களின் தாக்குதல் திறனில் பலவீனத்தை ஏற்படுத்தியது.

அலெப்போவிற்கான போராட்டம் மற்றும் அதன் விளைவு சிரிய புரட்சியில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். அல்-அசாதின் படைகள் கடந்த 5 ஆண்டுகளில் பல நகரங்களை கைப்பற்றியுள்ளது, ஆனால் அதற்கு அந்நகரங்களை தக்க வைத்துக்கொள்ளவதை விட அதற்கு அந்நகரங்களை கைப்படுத்துவது எளிதாக இருந்தது மேலும் அது கைப்பற்றிய அலெப்போ நகரை தக்கவைத்துக் கொள்ள அதற்கு ஒரு நகரத்தில் பிரச்சினை இருப்பது அதற்கு தேவை படுகிறது, அது புரட்சியாளர்களை வலுப்படுத்துவதற்காக வேண்டி பாடுபடும. இந்த புரட்சி ரஷ்யாவில் நடந்தது போன்று ஸ்டாலின்கார்ட் stalinguard தருணத்தை அடைந்துள்ள காரணத்தால் அலெப்போவிற்கான போராட்டம் நிச்சயமாக சிரியாவிலுள்ள மக்கள் ஒரு உண்மையான மாற்றத்தை கோரும் வண்ணம் நிச்சயமாக ஒரு தீர்வை தரும் வண்ணம் அமைந்திருக்கும்.

Reference : http://www.revolutionobserver.com/2016/08/aleppos-moment-of-reckoning.html



http://sindhanai.org/

Aug 8, 2016

இஜ்திஹாத்தின் பெயரால் இஸ்லாத்தை புதிதாக பொதி செய்ய முயற்சி!


இஜ்திஹாதின் பொருளை சிதைப்பதற்கான முயற்சிகள் இன்று நிறையவே நடக்கின்றன. மார்க்கத் தீர்ப்பளிக்கின்ற உரிமையை ஒரு சில அரச அங்கீகாரம் பெற்ற அறிஞர்களிடமும், நிலையங்களிடமும் மாத்திரம் சுருக்கி மக்களின் அறிவு தேடும் வழிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் அத்ல் (நீதி) ஆனது எல்லாம் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்களே (தீர்ப்புக்களே) என இறைச்சட்டங்களுக்கு மீள வரைவிலக்கணம் வழங்குதல் என்பன இந்த முயற்சியில் முக்கியமான கைங்கரியங்களாகும்.

இந்த தீய முனைப்பில் சில இயல்புகள் அடிக்கடி பளிச்சிடுகின்றன:

1. அறிவு தேடுதலை கட்டுப்படுத்தல். (பெரும்பாலும் அரசுகளால்) அங்கீகாரம் பெற்ற அறிஞர்கள் சிலரைக் கொண்டு அல்குர்ஆன், அஸ்ஸுன்ஆவை நேரடியாக அணுகுவது ஆபத்தானது என்ற மனப்பதிவை முஸ்லிம்களின் மனதில் ஏற்படுத்தல். இந்த அழுத்தம் எந்தளவிற்கு பிரயோகிக்கபடுகிறது என்றால் சில சமயங்களில் ஒரு மார்க்கத் தீர்ப்பு மிகத் தெளிவான இஸ்லாமிய ஆதாரங்களுடன் முரண்படுவதாகத் தெரிந்தாலும், முஸ்லிம்கள் அது சம்பந்தமாக மௌனம் காத்து அவ்விடயத்தை அறிஞர்களின் கைகளில் மாத்திரம் விட்டுவிட வேண்டும் என்ற சிந்தனை வளர்க்கப்படுகிறது. இந்நிலை முன்னைய யூத, கிருஸ்தவ சமூகங்கள் அறிவை மத அறிஞர்களின் ஏகபோக உரிமையாக சுருக்கிவிட்டதன் விளைவால், மார்க்க அறிஞர்கள் வழி பிறழ்ந்த மக்களினதும், ஆட்சியாளர்களினதும் மனோ இச்சையை திருப்திப்படுத்தும் வண்ணம் வேத வெளிப்பாடுகளுக்கு வியாக்கியானம் செய்ததையொத்த கவலைக்கிடமான நிலையாகும்.

2. இஜ்திஹாத், என்ற தூய வழிமுறை இன்று “மார்க்கம் மௌனம் காக்கின்ற” விடயங்களில் “மனிதன் இயற்றுகின்ற சட்டங்கள்” என்ற பொருளை எட்டியிருக்கிறது.சில விடயங்களில் மார்க்கம் மௌனம் சாதிக்கிறது என்ற மிகப்பிழையான எடுகோளின் படி, தவறாகப் பயன்படுத்தப்படும் இஜ்திஹாத் வழிமுறை இன்றைய உலகை ஆள்கின்ற மனிதச் சட்டவாக்க பொறிமுறையுடன் நன்றாகவே ஒத்துப் போகின்றது. “எங்கெல்லாம் நீதி(அத்ல்) நிலைத்திருக்கிறதோ அதுதான் அல்லாஹ்(சுபு)வின் சட்டமாகும்” என்ற ஒரு புதுமையான வரைவிலக்கணத்தை அண்மையில் ஒரு ஷரீஆ துறை அறிஞர் என்னிடம் சொன்னது இங்கே ஞாபகத்திற்கு வருகிறது. இஸ்லாமல்லாத குப்ர் தேசங்களில் மில்லியன் கணக்கான இஸ்லாமியச் சட்டங்கள் அமூல்படுத்தப்படுகின்றன என அவர் கூறிய பொழுது, அதிர்ச்சியோடு இல்லை...அவையெல்லாம் குப்ர் தேசங்களல்லவா... என்று நான் சுட்டிக்காட்ட, அவர் என்னை வியந்து பார்த்து “இத்தக்கில்லாஹ்” (அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்) என்று எச்சரித்ததையும் இங்கே நினைவு கூறுகின்றேன்.

3. இஜ்திஹாத் என்பது “அத்தரூரா - இன்றியமையாத நிலை” மற்றும் “ஹஃபத் தரரைன் - தீயதில் சிறியது” என்ற இரு அடிப்படைகளை மாத்திரம் சுற்றிச் சுழலும் ஒரு பொறிமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது. நவீன கால பிரச்சனைகள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்வாக்களில் ஏறத்தாழ அனைத்துமே நலன்களையும் (மஸ்லஹா), தீங்குகளையும் ஆராய்வதை மையம் கொண்டு தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அத்தீர்ப்புகளுக்குள் ஒரு திருமறை வசனமோ அல்லது நபிமொழியோ சொல்லப்பட்டால் அது இந்த நலன் VS தீங்கு கணக்கை தீர்க்க முன்வைக்கப்படும் ஆதாரமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தை மறுபொதி பண்ண எடுக்கப்பட்ட முயற்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை இலகுவாக காலணித்துவம் செய்வதற்காக அவர்களை அமைதிப்படுத்தி, இயங்காது வைத்துக்கொள்ள கடுமையான பிரயத்தனம் எடுத்தனர். குலாம் அஹ்மத் போன்றோர்களை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை அமைதிகாக்க கற்றுக்கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அதில் படு தோல்வியடைந்தனர். இதே நிகழ்ச்சி நிரலை “இஸ்மாயீலி” களைப் பயன்படுத்தி நிறைவேற்ற நினைத்தனர். அங்கேயும் மூக்குடைபட்டனர். காந்தியை பயன்படுத்தி அகிம்சையை போதித்த போது சில காலம் அது கைகூடினாலும் மேற்குலக மேலாதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் உம்மத்தை இயங்காது வைத்திருப்பதற்கு, எதிர்வினையாற்றாது அமைதி காக்கச் செய்வதற்கு அதுவும் நீண்ட காலம் வெற்றியளிக்கவில்லை. மேலும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும், பொருள் கொள்ளலுக்கும் ஏற்ப அல்குர்ஆனை மொழியாக்கம் செய்து முஸ்லிம்களின் கைகளில் தவழவிட்டுப் பார்த்தனர். எனினும் மூல அரபு மொழி குர்ஆனுடன் உம்மத்திற்கு இருந்த தொடர்பால் அவர்களின் சூழ்ச்சி பழிக்கவில்லை. ஹதீத்களை இஸ்லாத்திலிருந்து தொடர்பறுத்து இஸ்லாத்தை நடைமுறை ரீதியாக அமூலாக்கம் செய்வதை தடுக்க முயன்றனர். ஹதீத் கலையின் ஏற்புடமை பற்றி மக்களின் மனதில் ஐயப்பாடுகளை விதைக்கும் வண்ணம் தமது பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளை ஏற்படுத்தி அதனைச் சாதிக்க நினைத்தனர். எனினும் ஒரு சிலரைத்தவிர ஏனையோரை அந்த முயற்சி வழிகெடுக்கவில்லை. இன்றும் பாகிஸ்தானிலே அல் கம்தி போன்ற தனிநபர்கள் இந்த நிகழ்ச்சி நிரலில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தகைய ஆழமான முயற்சிகள் எல்லாம் பயனளிக்காத நிலையில் அவர்கள் பாவிக்கும் அண்மைக்கால யுக்திகளை இவ்வாறு சுருங்கக் கூறலாம்.

1) அறிவை குறித்த “அங்கீகாரம் பெற்ற அறிஞர்” களுக்கு மாத்திரம் மொத்தமாக குத்தகைக்கு வழங்குதல். அந்த அறிஞர்கள் கைமாறாக அரசாங்கங்களுக்கு கட்டுப்படும்படியும், தற்போதுள்ள (குஃப்ரான) வாழ்வொழுங்குடன் இரண்டரறக் கலந்து வாழும்படியும் மக்களுக்கு போதனை செய்தல்.

2) இஜ்திஹாத்தின் பொருளை “பலன்களையும், தீங்குகளையும் நிறுத்துப்பாக்கும் மனித மதிப்பீடு” என்பதாக மாற்றுதல்

3) “ஹுக்ம் ஷரீய்” இன் பொருளை அனைத்து “நீதி” ஆன சட்டங்களும் ஹுக்ம் ஷரீய்தான் என்பதாக மறுவிளக்கம் அளித்தல். அதன்படி மனிதன் இயற்றுகின்ற எத்தகைய நீதியான சட்டங்களும் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்கள்தான் என்ற நிலைப்பாட்டுக்கு வருதல்.

எனவே இன்றைய சூழலில் உலகில் எந்த எல்லையில் ஒருவர் அழைப்புப் பணியில் ஈடுபட்டாலும் அவர் இத்தகையதொரு ஆபத்தான திசை நோக்கி உம்மத்தை தள்ளுகின்ற முயற்சி இடம்பெற்று வருவதை கருத்தில் கொள்ள வேண்டும். உம்மத்தை சரியான சிந்தனை நோக்கி தொடர்ந்து விழிப்பூட்ட வேண்டும்.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில் கல்வி என்பது அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அது முன்னமே அங்கீகாரம் பெற்ற அறிஞர்களுக்கு மாத்திரம் தனியுரிமையாக வழங்கப்பட்டதல்ல. அதேபோல சத்தியத்தை உரைப்பதும், ஆட்சியாளர்களை தட்டிக்கேட்பதும் இஸ்லாத்தின் முக்கிய அங்கங்களாகும். அதன்படி குப்ர் சிந்தனைகள் அனைத்தையும், அதனை கட்டிப்பாதுகாக்கின்ற அரசுகள், முறைமைகள் அனைத்தையும் நாங்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும். மேலும் நாங்கள் எங்களை நோக்கி வருகின்ற அனைத்து பத்வாக்களையும் கண்மூடிப் பின்பற்றக்கூடாது. அவற்றிலிருக்கும் குறைகளை, தவறுகளை கண்டு மௌனம் காக்கக் கூடாது. குறிப்பாக இன்றைய உலகை வழிநடாத்துகின்ற குப்ர் முறைமைகளுக்குள் இரண்டரறக் கலந்துவிடுவதற்காக அரசியல் நோக்கங்களுடன் வெளிவருகின்ற பத்வாக்களை ஒன்றுக்கு பலமுறை அவதானமாக அணுக வேண்டும்.

அல்குர்ஆனும், அஸ்ஸுன்ஆவும் சொல்கின்ற மிக நெருக்கமான பொருள் அல்லது சட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும் என்பதை புரிந்து கொள்வதற்காக எடுக்கப்படும் அதிகூடிய முயற்சியே இஜ்திஹாத் ஆகும். மாறாக முதலாளித்துவ, சடவாத, தாராண்மைவாத சட்டவாக்கப் பொறிமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சில பரிதாபமான இலாப – நஷ்ட ஆராய்ச்சி அல்ல. இஜ்திஹாத்திலிருந்து எட்டப்படுகின்ற தீர்ப்புக்கள் அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்புக்கு மிக அண்மித்த தீர்ப்புகளாகும். மாறாக மனித மூளையை நீதிபதியாக்கி “நன்மை, தீமைகளை தர்க்க ரீதியாக அளந்து பார்த்து” எடுக்கப்படும் தீர்ப்புகளல்ல. இத்தீய முயற்சி இன்னொரு வடிவில் “மனோ இச்சையை” பின்பற்றுவது கூடும் என சொல்வதை ஒத்ததே.

அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்பு என்பது அல்லது சட்டம் என்பது குர்ஆன், ஸுன்ஆவிலிருந்து மாத்திரம் யாக்கப்படுவதாகும். அதுதவிர வேறு எங்கேனும் இருந்து எட்டப்படும் முடிவுகள் - அது அல்லாஹ்வின் முடிவுக்கு ஒத்ததாக தெரிந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நபி(ஸல்) நவின்ற இந்த நபிமொழியை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் கூட அது இதற்கு சான்று பகரப் போதுமானதாகும்.

“எமது கட்டளையில் இல்லாத ஒரு செயலை ஒருவர் செய்வாரானால் அது நிராகரிக்கப்பட்டதாகும்.”

எனவே உலகை நீதியின் நிழலில் வழிநடாத்த இருக்கின்ற உம்மத்தின் எழுச்சியில் தாமதத்தை ஏற்படுத்த ஏவப்படும் இத்தகைய தீய அம்புகளிலிருந்து அல்லாஹ்(சுபு) எம்மைப் பாதுகாப்பானாக. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாது, சித்தாந்தத்தை சித்தாந்தத்தால் முறியடிக்க முடியாது அற்பத்தனமான காரியங்களினூடாக உம்மத்தை குழப்பத்தில் ஆழ்த்த நினைக்கின்ற குப்பார்களினதும், முனாபிக்களினதும் முகத்தில் அவன் முன்புபோலவே இம்முறையும் கறியைப் பூசுவானாக!

DARUL AMAN

துருக்கி அரசை கவிழ்க்க நடந்த ராணுவ சதிப்புரட்சியின் அரசியல்


ஜூலை 17 ஞாயிறு அன்று ராணுவ சதிப்புரட்சியானது அதிகாரப்பூர்வமாக துருக்கி நேரப்படி மாலை 4.30 மணிக்கு முடிவுற்றது என துருக்கி ராணுவப்படை ஒரு செய்தி வெளியிட்டது. இந்த ராணுவ சதிப்புரட்சியை செயலிழக்க செய்ய உதவி புரிந்த மக்களின் ஒத்துழைப்பிற்கு இந்த செய்தி குறிப்பின் மூலம் நன்றியையும் தெரிவித்தது. 

ரெசெப் தாய்யிப் எர்துகான் அரசை கவிழ்க்கும் முயற்சியில் இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில் ராணுவ பீரங்கிகள் மற்றும் ராணுவ விமானங்கள் சீறி பாய்ந்ததை பார்த்து பெருவாரியான உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. தங்களின் தரப்பிலிருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ராணுவ சதிப்புரட்சியை மேற்கொண்டவர்கள் முக்கிய நகரங்களில் படையெடுப்பு நடத்தி அதை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றனர். 

ஆனால் எர்துகான் கைப்பேசி மூலம் தனது ஆதரவாளர்களை நோக்கி தெருக்களில் இறங்கி நாட்டை மீட்டெடுங்கள் என்று செய்தி அனுப்பிய உடன் பெருங்கூட்டத்தினர் வீதிகளில் பொங்கி எழுந்ததால் இந்த புரட்சியாளர்களை தடுத்து நிறுத்த முடிந்தது எர்துகான் அதிலிருந்து போர் புரியும் வண்ணமாக வெளிவந்து ராணுவ சதிப்புரட்சியாளர்களை நோக்கி தெளிவாக குறிப்பிட்டார் “இவ்விஷயத்திற்காக அவர்கள் பெரும் விலை கொடுக்கப்போகிறார்கள்” [1] என்று நேரடியாக ஒரு பெரும் தேடுதல் வேட்டை நடத்த தொடங்கியது, 34 ஜெனரல்கள் மற்றும் இன்சிர்லிக் விமானத்தளத்தின் கமான்டர் உட்பட பல்வேறுபட்ட நிலையிலுள்ள 6000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர், 
ஆனால் இதன் களையெடுப்பு இதைவிட மிக ஆழமானது: 

 இந்த ராணுவ புரட்சியை தொடர்ந்து 2,745 துருக்கிய நீதிபதிகள் தங்களது கடமைநிலருந்து நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளனர்.[2] இந்த ராணுவ புரட்சி தோல்வி அடைந்த உடன் எர்துகான் அவரது ஆதரவாளர்களை கொண்ட ஒரு பெரும் கூட்டத்தாருக்கு தனது செயற்திட்டம் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் போக்கு குறித்து விளக்குகையில் இவ்வாறு கூறினார்: “இந்த புரட்சி நமக்கு இறைவனிடமிருந்து வந்த அன்பளிப்பாகும் ஏனெனில் இது நமது ராணுவத்தை தூய்மையாக்க காரணமாக விளங்கும். [3]

1923 ல் துருக்கிய குடியரசு உண்டான போது ராணுவ அதிகாரியான முஸ்தஃபா கமால் உண்மையான ஆட்சியாளராக செயல்பட்டார் அவர் கிலாஃபத்தை நிர்மூலமாக்கிய பின்னர் ராணுவ படையிலிருந்த இஸ்லாமிய ஆதரவாளர்களை அப்புறப்படுத்த தொடங்கினார். முஸ்தஃபா கமாலின் காலத்தில் துருக்கிய ராணுவம் தனது துப்பாக்கிகளை ஐரோப்பிய எதிரிகளை நோக்கி இருந்த நிலையை மாற்றி சொந்த மக்களை நோக்கி திருப்பியது, அவர்களை அவர் அடிப்படைவாதிகளாக நாட்டின் மதசார்பின்மையை எதிர்ப்பவர்களாக கருதினார்.

ராணுவத்தினரை மதசார்பின்மையை முன்னெடுத்து செல்பவர்களாக ஆக்குவதே அவரது நோக்கமாகும். அவரது மரணத்திற்கு பின்னர், ராணுவம் அரசாங்கம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறையிலுள்ள இதர மதசார்பின்மை வாதிகள் எந்த விலை கொடுத்தேனும் மதசார்மையை பாதுகாப்பது தங்களது தலையாய பொறுப்பாக கருதினர். மிக குறிப்பாக ராணுவம் மதசார்பற்ற துருக்கியின் பாதுகாவலராக தன்னை கருதியது. 

மதசார்பின்மை அல்லது ராணுவத்தின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் எழுந்த அச்சமயங்களில் உதாரணமாக 1960, 1971 மற்றும் 1980 களில் அவர்கள் ராணுவ சதிப்புரட்சி மேற்கொண்டு அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்து கொண்டனர். 1997 ல் ராணுவம் அரசிடம் ஒரு நீண்ட கோரிக்கை வைத்தது அந்த கோரிக்கைகளை ஏற்று கொள்வதை தவிர அரசிற்கு வேறு வழி இல்லாமல் இருந்தது. அதன் பிரதம மந்திரி, நெக்மெட்டின் எர்பாகன், பல்கலைகழகங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பதற்கு சம்மதித்தார் பின்னர் அது தளர்த்தப்பட்டது, அவரது கட்சி 1998ல் முடக்கப்பட்டது, மேலும் எர்பாகன் அரசியலில் ஈடுபடவதிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. துருக்கி அரசியல் நிலப்பரப்பில் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வந்தது மேலும் அது உருவாகிய மதசார்பின்மை அடித்தளத்திற்கும் நாட்டில் அது கொண்டிருக்கும் அதிகப்படியான நிலைக்கும் எந்தவொரு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பார்த்து கொள்கிறது.

1998ல் தடைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், எர்பாகனின் வெல்ஃபேர் கட்சியின் முன்னால் உறுப்பினர்கள் ஏ.கே.பி கட்சியை உருவாக்கினர் அதன் பின்னர் 2002 பொது தேர்தலில் இஸ்தான்புல்லின் முன்னால் மேயரான ரெசெப் தாய்யிப் எர்துகான் தலைமை ஏற்று பெறும் வெற்றிக்கு இட்டு சென்றார். 

21ம் நூற்றாண்டில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஏ.கே.பி பெரும்பான்மை வாக்கு பெற்று வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து எர்துகானிற்கு ராணுவம் துருக்கியில் வழக்கமாக கொண்டிருக்கும் பங்கை எதிர்க்கும் தைரியத்தை அளித்தது. (2015 ஜூன் மாதம் நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெறுவதில் ஏற்பட்ட இழப்பு 2015 நவம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஏ.கே.பி மீண்டும் வெற்றி பெற்றது). 

பனிப்போரில் துருக்கி ஈடுபட்டிருந்த போதும், அதன் ராணுவம் பிரித்தானியருடன் நெருங்கிய உறவை மேற்கொண்டு வந்தது மேலும் ஐரோப்பிய கண்டத்துடன் நெருங்கிய உறவை மேற்கொண்டு அது எதிர்காலத்தில் தன்னை ஒரு ஐரோப்பிய நாடாக அடையாளம் காண விரும்பியது, ஆனால் எர்துகான் அமெரிக்காவுடன் உறவை மேற்கொள்ள ஆரம்பித்தார் அது ‘Shared Vision Document’ என்ற பெயரில் துருக்கி மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு இடையே அப்துல்லாஹ் குல் மற்றும் கான்டொலீசா ரைஸ் ஆகிய இருவரும் 2006 ல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம் உச்ச நிலையை அடைந்தது. 

இந்த ஒப்பந்தம் ஒரு பரந்த உலகளாவிய, பிராந்திய, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கிய விஷயங்களில் அமெரிக்காவும் துருக்கியும் ஒத்துழைப்பு நல்கும் விதத்தில் அமைந்தது. [4] எர்துகானின் ஆட்சி காலத்தில் அவர் அமெரிக்கா மற்றும் துருக்கி இடையேயான உறவை பலப்படுத்தினார் அது ஈராக்கை நிலைபெற செய்வதாக இருப்பினும், குர்திஸ்தான் பிராந்திய அரசுக்கு (KRG) நிதியுதவி அளிப்பதாக இருப்பினும், இரண்டு நாடுகள் அமைத்து தீர்வு காண்பது எனும் அடிப்படையில் பாலஸ்தீன குழுக்களை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாகினும் மற்றும் சிரிய எதிர்ப்பு படைகளில் ஊடுருவது போன்று எர்துகான் அமெரிக்காவின் திட்டங்களுக்கு அடிமட்ட அளவிற்கு உதவி புரிந்துள்ளார். 

ஏ.கே.பி யின் ஒரு குழு ஒன்று கூடுதலில் அமெரிக்காவுடனான தனது செயலை சுட்டிக்காட்டினார்: “உலகெங்கும் உள்ள நாடுகளில் இன்று அமெரிக்கா கொண்டிருக்கும் விருப்பங்களில் துருக்கியும் அதன் பெரும்பாலான விஷயங்களில் விருப்பம் கொண்டுள்ளது. நாம் அப்கானிஸ்தானிலிருந்து ஈராக், பாலஸ்தீனம் மற்றும் பால்கன் நாடுகள் போன்று பரந்த விஷயங்களில் பொதுவான பார்வையை கொண்டுள்ளோம். ஆனால் மிக முக்கியமாக ஒரு வலுவான ஒத்துழைப்பில் நாம் இருக்கின்றோம். மிஸ்டர் ஒபாமா இங்கு வருகை தந்த போது கூறியது போன்று நாம் ஒரு மாதிரி பங்கு கொள்ளும் படி நிலையில் நுழைந்திருக்கிறோம் மேலும் நாம் அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இதில் சில விஷயங்கள் நாம் வெளியே கூறும் வண்ணமும் சில விஷயங்கள் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாததாகவும் இருக்கின்றது.

துருக்கி மற்றும் அமெரிக்க உறவை துண்டாட நினைப்பவர்கள் இந்த உறவின் பல்முனை தரம் மற்றும் ஆழத்தை உதாசீன படுத்துகிறார்கள்.” எர்துகானின் தேர்தல் வெற்றி மற்றும் பிரித்தானிய வட்ட பாதையிலிருந்து துருக்கியை நீக்குவதற்கான துணிவான நகர்த்தல்கள் ராணுவத்தை கவலைக்குள்ளாக்கியது ஏனெனில் அவர்கள் அதுவரை எப்போதும் ஒரு ராணுவத்தை சாராத ஒரு ஆட்சியாளர் இவ்வளவு பொது ஜன ஆதரவை பெற்றிருந்த நிலையை எதிர் கொண்டதில்லை. குர்திய பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக எர்துகான் தொடங்கிய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் குர்திய பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ராணுவம் முன்வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கியின் அதிகார பலத்தை மாற்றும் முயற்சியில் எர்துகான் ஈடுபட்டார். அவர் அரசில் தலையிடும் உச்ச ராணுவ மன்றத்தின் சட்ட அதிகாரத்தை சுருக்கலானார். இந்த மன்றத்தின் அமைப்பில் ராணுவத்தினர் அல்லாதவரும் பங்கு பெறும் வகையில் எரதுகான் மாற்றி அமைத்தார். உச்ச ராணுவ மன்றம் ராணுவ தளபதி, அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் மற்றும் குடியரசின் ஜனாதிபதி – இவரே ராணுவ தளபதியும் ஆவார் போன்றவர்களை உள்ளடக்கியதாக உள்ளது. 

இந்த மன்றம் ஒரு பாதுகாப்பு மன்றம் என்பதிலிருந்து வெறுமெனே அலோசனை மன்றமாக மாறியது. அதன் வருடாந்திர கூட்டம் பணி உயர்வு, பணி நியமனம், பணி காலத்தை நீன்டிப்பது மற்றும் ராணுவ வீரர்களை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்வது போன்றவற்றிற்காக ஒப்புதல் பெறுவதற்காக வேண்டி சமர்பிக்க படுகிறது. மூத்த படைத்தளபதிகளை ஓய்வில் அனுப்பவும் மற்றும் சிறையில் அடைக்கவும் 2007ல் அரசை ராணுவத்தை கொண்டு வெளியேற்றும் ’எர்கெனெகான்’ எனும் சூழ்ச்சியை எர்துகான் பயன் படுத்தி கொண்டார். 

அதேபோல் 2010ல் ’Sledgehammer’ எனும் சூழ்ச்சியை பணியிலிருக்கும் மூத்த ராணுவ அதிகாரிகளை ஒய்வு பெற்ற அதிகாரிகளுடன் சேர்த்து வழக்குகளில் சிக்க வைக்க உபயோகப்படுத்தப்பட்டது. துருக்கி வரலாற்றில் முதன் முறையாக ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படுவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் மேலும் இது நாட்டில் ராணுவத்தின் பிடி பெருமளவில் தளர்ந்திருப்பதை காட்டுகிறது. இறுதியில் இரு விசாரணைகளிலும் அனைத்து பிரதிவாதிகளும் விடுவிக்கப்பட்டனர் இருப்பினும் அதற்கு சேதம் ஏற்படுத்தியாகிவிட்டது. 

எர்துகான் வெற்றிகரமாக ராணுவத்திலுள்ள மதசார்பின்மை அடிப்படைகளை நலிவடைய செய்து தனக்கு விசுவாசமாக உள்ளவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினார். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அதாவது 2015 நவம்பர் மாதத்தில் விமானப்படை தன்னிச்சையாக சிரியாவில் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது, ராணுவத்தின் விசுவாசம் எர்துகான் நம்பிக்கை கொள்ள முடியாத வேறு எங்கோ இருப்பதை உணர்த்துகிறது. இது சிரயாவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் துருக்கி உள்ளிட்ட அனைவரும் ஒரே குறிக்கோளை கொண்டிருக்கும் வேலையில் நடந்தேரியுள்ளது.

ஆகஸ்து மாதம் 1ம் தேதி உச்ச ராணுவ மன்றத்தின் வருடாந்திர ஒன்று கூடல் நடக்க வேண்டியுள்ளது இதனூடே இராணுவத்தின் ஒரு பிரிவினருக்கும் எர்துகானுக்கும் இடையே பதற்றம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் இருப்பதை காண முடிகிறது. இதன் காரணமாக மூத்த ராணுவ வீரர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்களின் பணிக்காலம் விரைவில் முடித்து வைக்கக்கூடும் என்ற காரணத்தால் எர்துகானை எதிர்கொள்ள தன்னிச்சையாக இந்த ராணுவ புரட்சியை மேற்கொண்டுள்ளனர்.

கேனி டோருன் எனும் ஏ.கே.பி எம.பி கூறுகையில், இந்த குழுவினர் மீது தேச துரோகம் மற்றும் ஸ்லெட்ஜ் ஹேமர் வழக்குகளின் தொடர்ச்சியாக விசாரணை தொடங்கப்பட்டது. ராணுவ புரட்சி மேற்கொள்வதற்கு சற்று முன்னர் தான் குற்றவாளிகள் பிராசிக்யூடர்களால் அழைக்கப்பட்டு நீதிமன்றத்தால் கைது செய்யப்படுவதாக இருந்தது,“ என டோருன் அல் ஜசீராவிடம் கூறனார்.[6] “அவர்கள் இந்த முன்னேற்றத்தை அறிந்த காரணத்தால் வழக்கமாக இது போன்ற ராணுவ புரட்சியை நடத்தும் நேரத்திற்கு மாற்றமாக இரவு 10 மணிக்கு மேற்கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம். அவர்கள் திட்டமிட்டதை போன்று அதை காலை பொழுதி்ல் செயல்படுத்தி இருப்பார்களேயானால் அவர்கள் பெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும்”. ராணுவத்திற்குள் ராணுவ புரட்சி மேற்கொள்ள திட்டமிடும் நபர்களை கடந்த பல மாதங்களாக துருக்கி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர் என மற்றுமொரு ஏ.கே.பி அதிகாரி குறிப்பிட்டார். “தாங்கள் புலனாய்வுக்கு உட்பட்டு இருக்கிறோம் என உணர்ந்ததன் காரணமாகவே இந்த குழு ஒரு அவசரத்தில் செயல்பட்டதாகவே கருதுகிறோம்.”[7]

விமானப்படை, ராணுவ புலனாய்வுத்துறை மற்றும் தளவாடப்படையில் உள்ள சிறு குழு ஈடுபட்டது. இந்த ராணுவ சதிப்புரட்சியை ஒரு சிறு குழுவினரே மேற்கொண்டுள்ளனர் இதில் ராணுவ தளபதியின் பங்கு சற்றும் இல்லாமல் இருந்தது, ராணுவ தளபதி சூழ்ச்சியாளர்களால் சிறை பிடிக்கப்பட்டார் மற்றும் சிலர் ஊடகத்தின் வாயிலாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ராணுவ தலைமையிடத்தில் இருந்து ஆதரவு கிடைக்காதது தான் இந்த ராணுவ சதிப்பரட்சி தோற்று போனதற்கான முக்கிய காரணமாகும்.

இந்த தோல்வியுற்ற ராணுவ சதிப்புரட்சி குறிப்பாக இந்த ராணுவ சதிப்புரட்சியில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மக்கள் திரண்டு வந்தது எர்துகானை மேலும் வலுவடைய செய்துள்ளது, இப்போது எர்துகான் ஒரு ஆழமான சுத்தகரிப்பை செய்ய போகிறார் இது நம்பகத்தன்மையை இழந்த தங்களது விசுவாசத்தை வேறு இடத்தில் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை பலவீனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் இந்த தோல்வியுற்ற ராணுவ புரட்சியை காரணம் காட்டி எர்துகான் சர்வாதிகார போக்குடையவராக மாறி வருகிறார் என குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்து வருவதை காண முடிகிறது. அவரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதும், ஐரோப்பா தங்களுடைய நிலையை எர்துகான் மற்றும் அவருடைய செயல்களை நோக்கியே கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கு இன்னொரு பக்கம் அமெரிக்காவுடைய நிலையானது இந்த ராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் சட்டத்தின் விதிகளை மதிக்குமாறு கோரிக்கை விடும் வண்ணம் இருந்தது, இது கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எர்துகானுக்கு ஆதரவான நிலையாகும்.

Reference: http://www.revolutionobserver.com/2016/07/the-politics-of-turkeys-coup.html


[1] http://www.nytimes.com/live/turkey-coup-erdogan/erdogan-they-will-pay-a-heavy-price-for-their-treason-to-turkey/

[2] http://in.reuters.com/article/turkey-security-judges-idINKCN0ZW0OZ

[3] https://www.rt.com/news/351630-erdogan-turkish-military-relationships/

[4] http://www.hurriyetdailynews.com/turkey-us-invest-hopes-in-shared-vision-document.aspx?pageID=438&n=turkey-us-invest-hopes-in-shared-vision-document-2006–07-07

[5] AK Party Group Meet­ing, Jus­tice and Devel­op­ment Party web­site, June 29 2010,http://www.akparti.org.tr/english/haberler/ak-party-group-meeting-june-29–2010/25721

[6] http://www.aljazeera.com/news/2016/07/turkish-putschists-acted-early-fear-arrests-160718131344577.html

[7] http://www.aljazeera.com/news/2016/07/turkish-putschists-acted-early-fear-arrests-160718131344577.html
http://sindhanai.org/