Apr 9, 2013

எம் முன்னோர்கள் பெற்ற துன்பங்களை அடையாமல் சுவனம் செல்ல இலகு வழி என்ன?


Abdur Raheem
எம் முன்னோர்கள் பெற்ற துன்பங்களை அடையாமல் சுவனம் செல்ல இலகு வழி என்ன?

சிறுபான்மை வாழ்விட்கான ஃபிக்ஹ் பற்றிய வாதங்களும், நியாயங்களும் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்துக்கு மத்தியில் இப்போது அதிகம் பேசப் படுகிறது. இந்த 'ஃபிக்ஹுல்' அகல்லியாத் ' எனும் விடயம் நேரடியாக அதன் விளக்கங்களுடன் மக்கள் மத்தியில் முன்வைக்கப் படாத நிலையிலும் அதன் பரீட்சார்த்த பிரயோக வடிவங்கள் சிறுபான்மை நிலங்களில் பிரயோகிக்கப் படுவதையும் எம்மால் அவதானிக்க முடிகிறது.

இஸ்லாத்தில் ஃபிக்ஹ் துறை என்பது ஒரு பாரிய துறை அதன் வளர்ச்சிப் படிகள் , அதன் நன்மைகள் என்பன மறுக்க முடியாத உண்மைகள். ஆனால் ஃபிக்ஹ் துறை தொடர்பான நிகழ்கால நடத்தை மாற்றங்கள் இஸ்லாமிய சமூகத்தை எவ்வாறான நடத்தை
நோக்கி இட்டுச் செல்கின்றது ? என்ற வகையில் நவீன இமாம்களின் தீர்வுகளை உள்ளடக்கிய
இந்த ஃபிக்ஹுல் அகல்லியாத் ஆழமான பல கோணங்களில் ஆரயப் படவேண்டியது.

முதலில் இந்த பிக்ஹுல் அகல்லியாத் என்ற விடயத்தின் பிரயோக வடிவம் இஸ்லாமிய
வரலாற்றில் எந்த காலப்பகுதியில் யாருக்காக இமாம்கள் முன் மொழிந்தார்கள்? என்ற வினாவில் இருந்து விடயத்தை நாம் ஆராய முட்படுவோமானால்அது இஸ்லாமிய அதிகார அரசியலின் கீழ் இஸ்லாமிய சிவில் , கிரிமீனள் சட்டங்களை ஏற்றவர்களாக வாழ்ந்த இஸ்லாத்தை ஏட்காத திம்மிகள் விடயத்தில் முன்மொழியப்பட்டு பிரயோகிக்கப் பட்டதாகும்.
எனும் ஒரு அடிப்படை உண்மையை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்

சிறுபான்மைக்கான பிக்ஹ் எனும் சிந்தனா வாத மூலவேர் இஸ்லாம் பலம் பொருந்திய
அரசியல் இராஜ தந்திர சக்தி மிக்க நிலையில் , வஹி காட்டிய வாழ்க்கைப் பாதையை
சுதந்திரமாகவும் எவ்வித தொந்தரவும் இன்றி பிரயோகிக்கக் கூடிய சூழலில் அதன்
ஆதிக்கப் பிடியின் கீழ் விரும்பி அல்லது விரும்பாத நிலையில் உள் நுழைந்து தாமும் இஸ்லாமிய சரீயாவின் நிழலில் வாழ தவிர்க்க முடியாமல் தமது முரண்பாடான வாழ்வியலை கைவிட்டு , சிலதை தளர்த்தி , சிலதை மாற்றி , தமது முரண்பாடற்ற புதிய
நடத்தை மூலம் இஸ்லாத்தின் சுதந்திரமான இயங்கியலுக்கு தடையாக அமைய மாட்டோம்
என்ற எடுகோளை அடிப்படையாகக் கொண்ட வரைபு தான் இந்த பிக்ஹுல் அகல்லியாத் சொல்லும் பிரயோக வடிவமாகும்

எனவே ஏதோ ஒரு ஆதிக்க அதிகாரத்தின் கீழ் அதன் நாகரீக ,பண்பாடு ,வழிமுறை என்பவைகளோடு முரண்பாடான நிலையில் தனது வாழ்வியலுக்கான நடத்தை தொடர்பாக அந்த அதிகாரம் அங்கீகரிக்கும் ஒரு வழிமுறை தொடர்பாக பலவீனமான ஒரு சிறுபான்மை மட்டுமல்ல ஆட்கள் தொகையில் அதிகமாக இருந்த இந்தியா அந்தாலூசியா , போன்ற பகுதிகளிலும் ,இன்னும் இஸ்லாம் தனது ஆதிக்கப் பகுதியாய்
அதிகாரம் செலுத்திய எல்லாப் பகுதிகளிலும் ஒரு இஜ்திஹாதை அடிப்படையாக கொண்ட
ஒரு பிக்ஹ் தேவைப்பாடுடையததாக இருந்ததை மறுக்க முடியாது.

இந்த நியாயங்களை மனதில் கொண்டவர்களாக இன்று பேசப்படும் பிக்ஹுல் அகல்லியாத் சொல்லும் எடுகோள்கலை ஒப்பீடு செய்யும் போது 1. குப்ரின் மேலாதிக்க நிலையை முஸ்லீம் விரும்பி அல்லது விரும்பாத நிலையில் அங்கீகரிக்க வேண்டும். 2. குப்ர்
அங்கீகரிக்கக் கூடிய ஒரு மாற்றீடு இஸ்லாத்தில் செய்யப்படவேண்டும். 3. குப்ரின் கலாச்சார நாகரீக நடத்தைகளில் சில அடையாளங்களோடு ஒன்றிய வாழ்வு. இதுதானா நவீன இமாம்கள் சொல்லும் பிக்ஹுல் அகல்லியாத் !?

அதாவது இன்று அரசியல் இராஜ தந்திர ரீதியில் பலவீனமாவர்கள். என்ற நியாயத்தின் கீழ்
முஸ்லீம் தவிர்க்க முடியாத ஒரு சரணாடைவு அரசியலை நோக்கி தள்ளப் படுகிறான்!
ஏட்கனவே உள்ள நிலையும் அதுதானே! குப்ரிய அரசியல் மேலாதிக்கத்தின் கீழ் முஸ்லீம்
இஸ்லாத்தை ஒரு மதமாக்கி அதன் மார்க்க தரத்தை மலை ஏற்றிய பின் அதட்கு மாலை
போட்டு புதுச் சடங்கு செய்வதா!? எனும் கேள்வியை கேட்கச் சொல்கிறது இந்த பிக்ஹுல் அகல்லியாத்!

No comments:

Post a Comment