“லஷ்கர்-ஏ-தொய்பா” - பற்றிய அமெரிக்க இந்திய எச்சரிக்கைகளின் அடிப்படைகள் என்ன?
by: Salahudeen Iyoobi

“லஷ்கர் ஏ-தொய்பா“. இந்த உருது மொழியின் தமிழ் மூலம் என்ன தெரியுமா?, “இறைவனின் இராணுவம்”. இந்திய கட்டுபாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை இராணுவ மற்றும் அங்குள்ள மக்கள் வலுவை கொண்டு பிரித்து ஆஸாத் காஷ்மீருடன் இணைத்து அதனை பாகிஸ்தானிடம் தாரை வார்க்கும் புரொக்ஜெட்டின் பெயர் என்றும் சொல்லலாம். காஷ்மீரின் பள்ளத்தாக்கு கிராமமான சிட்டிசிங்புரா தாக்குதலில் ஆரம்பித்து இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வரை அது தன்னை தெளிவாகவே இந்தியாவிற்கு அடையாளப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 12 காஷ்மீரிய இளைஞர்களை பயிற்றுவித்ததில் ஆரம்பமான அதன் இராணுவ பலம் இன்று “ஆசியாவின் ஹிஸ்புல்லாஹ்” என குறிப்பிடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஏனைய காஷ்மீரிய விடுதலை அமைப்புக்கள் போலல்லாது இது நீண்டகால திட்டமிடல்களுடனும் இஸ்லாமிய சாம்ராஜ்ய கனவுகளுடனும் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளது. ஆப்கானில் உள்ள தலிபான்களுடனும் அல்-காயிதாவுடனும் நேரடி உறவுகளை கொண்ட அமைப்பு.

இங்கே நாம் லஷ்கரின் வராலாறு பற்றியோ அதன் காஷ்மீரிய செயற்பாடுகள் பற்றியோ குறிப்பிடுவதல்ல நோக்கம். லஷ்கரிற்கு இரண்டு கொள்கைள் உள்ளன.

காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் இருந்து கைப்பற்றி ஆஸாத் காஷ்மீருடன் இணைந்த காஷ்மீர் மாநிலத்தை (தனி நாட்டையல்ல) உருவாக்கி அதனை பாகிஸ்தானின் ஐந்தாவது மாகாணமாக இணைப்பது. (இதற்கு பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ.யின் பரிபூரண உதவிகள் இவர்களிற்கு உண்டு)

உலகில் குறிப்பாக ஆசியா கண்டத்தில் உள்ள முஸ்லிம் உம்மாவிற்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்துவதும் அதற்கான பதில் நடவடிக்கைகளை உருவாக்குவதும். (இதற்கு அல்-காயிதா போன்ற பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் பரிபூரண உதவிகள் இவர்களிற்கு உண்டு)இவர்களது இரண்டாவது கோட்பாடே அமெரிக்கா, மேற்குலகு, முஸ்லிம்களை நசுக்க விரும்பும் தேசங்கள் போன்றவற்றிற்கு பிரச்சனைக்குரிய விடயமாக உள்ளது.

லஷ்கர்-ஏ-தொய்பா தனது எல்லைகளிற்கு அப்பால் உள்ள தேசங்களில் முஸ்லிம் ஆயுத போராட்ட அமைப்புக்களை உருவாக்குவதில் பல வெற்றிகளை கண்டுள்ளது. அங்குள்ள இளைஞர்களிற்கு பயிற்ச்சியளித்தல், அவர்களிற்கான நேரடி களப்பயிற்ச்சிகளிற்கான பிரயாணங்களை ஒழுங்கு செய்தல், அவர்களது நேரடி களப்பயிற்ச்சிகள் முடிந்த பின்னர் அவர்களை அவர்களது தாயகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தல், அவர்களிற்கான ஆயுத விநியோகங்களிற்கான ஒழுங்குகளை செய்தல் போன்ற ஒரு போராட்டத்தின் பல மிக முக்கியமான தயாரிப்புக்களை செய்து கொடுக்கும் ஸ்பொன்சராக செயற்படுகிறது.

தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரோகீங்கியா, தாய்லாந்து, மிண்டானோ, ஷின்ஷியாங், டுபாய் என அது தனது செயற்களங்களை விரிவாக்கி வருகிறது. பம்பாய், குஜாராத், மற்றும் கேரள மாநிலம் போன்றவற்றிலும் அவர்களின் நிழல் செயற்பாடுகள் உள்ளன.

நேரடியாக போராளிகளிற்கிடையிலான தொடர்பாடல்கள், உறவுகள், இணைந்த செயற்பாடுகள் என்பவற்றிற்கும் அப்பால் சர்வதேச முஸ்லிம் வர்த்தக மாபியாக்களுடனும் இவர்களிற்கு தொடர்புகள் உள்ளன. இந்த நெட்வோர்க் தடுத்து நிறுத்த முடியாத சிவில் பிரச்சனைகாகவே இன்றும் உள்ளது.

இலங்கையில் லஷ்கர்-ஏ-தொய்பா செயற்படுகிறது என முதலில் அமெரிக்கா சொன்னது. பின்னர் இந்தியா சொன்னது. இப்போது இலங்கை அது பற்றி கருத்து வெளியிட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இதன் செயற்பாடுகள் உள்ளன என்பது எக்ஸ்ட்ரா மெசேஜ். இந்த தகவலின் உண்மைகள் பற்றிய அடிப்படைகள் ஆராயப்படல் வேண்டும்.

விஞ்ஞான தகவல் தொழில் நுட்ப தொழிற்பாட்டின் மகோன்னத வளற்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் உலகம் ஒரு கிராமமாகி விட்டது என்கிறார்கள். அது பொருளாதாரம், வர்த்தகம், சமூக கலாச்சார உறவுகள், விஞ்ஞான பரிமாற்றங்கள் என்ற எல்லைகளிற்கு மட்டும் பொருந்தும் என்பது போல் அவர்கள் கருத்துக்கள் உள்ளன. இதே தகவல் தொழில் நுட்ப மற்றும் தொடர்பாடல் வளற்ச்சி என்பது இராணுவம், தீவிரவா அமைப்புக்கள், பயங்கரவாத இயக்கங்கள், மதஅடிப்படைவாத மையங்கள், விடுதலை போராட்ட அமைப்புக்கள், சுதந்திர போராளிகளின் குழுக்கள், புரட்சியாளர்கள் தளங்கள், பாசிஸ சக்திகள், நவ நாசிஸ்ட்கள் என எல்லோருக்குமே பொருந்தும்.

இதனடிப்படையில் யாருக்கும் உலகில் எந்த மூளையிலும் இரகசிய தொடர்புகள் செயற்பாடுகள் இருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை. அதே வேளை இலங்கையின் கிழக்கு பிரதேசத்தில் லஷ்கர் என்பது அடிப்படைகள் அற்ற ஊகம் என்பதற்கான வாய்ப்புக்களே நிறைய உள்ளன.

தமிழ் நாட்டில் பி.ஜே.பி.யின் செயற்களத்தின் வாசல்கள் திறக்கப்பட்ட நிலையில் தமிழ் நாட்டு முஸ்லிம்களிற்கான சமூக பாதுகாப்பு என்பதற்கான களத்தின் வாயில்களும் திறக்கப்படவேயிருக்கின்றன. அதன் திறப்பு லஷ்கராக இருக்க வாய்ப்புக்கள் நிறையவேயுள்ளன. விடயம் என்னவென்றால் லஷ்கர்-ஏ-தொய்பாவிற்கு தமிழ் நாட்டில் இயங்கு தளமமைத்து செயற்படுவது சற்று சிரமமானது. தமிழ் நாட்டு முஸ்லிம்களிற்கு போராட்டவியல் என்றால் என்ன என்றே தெரியாது.

அந்த நிலையில் லஷ்கரின் செயற்பாடுகள் அவர்களை மக்கள் மத்தியில் அந்நியப்படுத்தி விடும். இந்திய உளவமைப்பான றோ இலகுவாகவே இவர்களை மோப்பம் பிடித்தும் விடும். புலிப்பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கிலங்கை முஸ்லிகள் தங்கள் உயிர்வாழ்தல் என்ற இருப்பிற்கான போராட்டவியலில் நிறையவே பரீட்சையமானவர்கள். தமிழ் நாட்டு களத்திற்கான தளமாக கிழக்கிலங்கையை லஷ்கர் இலக்கு வைக்கிறதா என்ற கேள்வி இதிலிருந்தே பிறக்கிறது. இது இந்திய நியாயம் சார் அச்சங்கள்..

அமெரிக்கா இலங்கையில் லஷ்கர் பற்றி பிரஸ்தாபிப்பது பற்றி நோக்கின்,.. அல்-காயிதா போன்ற சர்வதேச வலைப்பின்னல் கொண்ட ஜிஹாதிய அமைப்புக்களுடன் தொடர்புடைய எந்த அமைப்பையும் அமெரிக்கா ஏற்றுகொள்ளாது. இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. தெற்காசியாவில் கிறிஸ்தவ தேசம் கிடையாது. பிலப்பைன்ஸ், கிழக்கு திமோரை தவிர. தமிழ் ஈழம் என்ற தேசத்தை உருவாக்கி அதனை கிறிஸ்தவ தேசமாக மாற்றும் பிராந்திய கனவுகளிற்கு கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இடையூறான இருப்பை இல்லாமல் பண்ணும் வில்லங்கமான திட்டமாகவும் இது இருக்கலாம்.

பொது பல சேனா போன்ற பௌத்த அடிப்படைவாத மதவாத அமைப்புக்களின் நெருக்கடிகள் இலங்கை அரசிற்கு உள்ளன. பௌத்த மதவாத சக்திகளை சரிநிகர்சமானமாக முகங்கொள்ளும் இஸ்லாமிய அமைப்புக்களை லஷ்கர் என்ற முத்திரையை குத்துவதன் ஊடாக ஊற்றி மூடிவிடாலம். அதற்கு கிழக்கிலங்கை லஷ்கர் பூச்சாண்டி பெரிதும் உதவும்.

பொது பல சேனாவின் அடாவடித்தனங்களிற்கு எதிராக நடாத்தப்பட்ட ஹர்த்தால் தெற்கிலங்கையில் தோற்றுப்போன போது அது கிழக்கிலங்கையில் வெற்றியளித்தமை இனவாத சக்திகளிற்கு கிழக்கு முஸ்லிம்களை முடக்க வேண்டும் என்ற தேவையை ஏற்படுத்தியிருந்தது. லஷ்கர் சாயம் பூசுவதன் ஊடாக அதை இலகுவாக அவர்கள் நிறைவேற்றி விடலாம் அவ்வளவுதான் .

சர்வதேச அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்டமணி ஸ்டைலில் இந்த மேட்டரை முடித்து கொள்கிறோம்.

source :- கைபர் தளம்

No comments:

Post a Comment