Apr 7, 2014

ஜனநாயகம் அதன் முகமூடி கிழியட்டும் !


 
 
தமது வாழ்வியலுக்கான வழிமுறைகளை பெரும்பான்மை எனும் பிரமாண்டமான மக்கள் தொகையின் உருவத்தில் சட்டங்களையும் , யாப்புகளையும் மக்களே உருவாக்கி (அல்லது கிடைப்பதை அங்கீகரித்து) அதே பிரமாண்டமான வாக்குத் தெரிவின் அடிப்படையில் மக்களே தீர்மானிக்கும் அதிகாரிகளிடம் அவர்கள் தீர்மானித்த சட்டங்களையும் , யாப்புகளையும் தம்மை நோக்கியே பிரயோகிக்கும் அதிகாரத்தை கொடுப்பதே ஜனநாயகமாகும் .

இதை கூர்ந்து அவதானியுங்கள் ஒரு உண்மை புலப்படும் . அதுதான் இங்கு கடவுள் வடிவத்தில் பெரும்பான்மை மக்கள் அமர்ந்திருக்க அவர்களின் வரத்தின் மூலம் அவர்களுக்கே பணிவிடை செய்ய பூசாரிகளாக அரசு இயங்க வேண்டும் என்பதே அந்த கோட்பாட்டுச் சுருக்கமாகும் .அதாவது இந்த ஜனநாயக அரசியல் பொறியின் மூல மந்திரமே மக்களின் விருப்பு எனும் மேற்போக்கான கருத்தியலை கொண்டதல்ல மாற்றமாக சட்டங்களை,யாப்புக்களை ஆக்கும் உரிமையும், அங்கீகரிக்கும் உரிமையும் கொண்ட 'சுப்பர் பவர் ' மக்களிடமே உள்ளது என்பதாகும் .

இந்த கருத்தியலின் ஆழ்ந்த முடிவானது ஒவ்வொரு தனி மனிதனும் குட்டிக் கடவுள்கள். ஆனால் அவர்களின் ஆதிக்க திறன் தம்மோடு கூட்டுச் சேர்க்கின்ற பெரும்பான்மை விகிதா சாரத்தின் அடிப்படையிலேயே என்பதிலேயாகும் . சரி இப்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விடயம் இருக்கின்றது . அது அல் குர் ஆனிய பரிபாசையில் ' தாகூத் ' எனும் சொற்பதம் விளக்குவது என்ன ? என்பது பற்றியதாகும் .

'தாகூத் ' எனும் அரபுச் சொல்லுக்கு வரம்பு மீறுதல் என்பது பொருளாகும் 'வஹியின் ' மொழி மரபில் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டில் தன்னை இணைக்காமல் ,அதற்கு கட்டுப் படாமல் தான்தோன்றித் தனமாக மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் ஒவ்வொருவரையும் குறிக்கும் .


இன்னும் சற்று இது பற்றி விரிவாக சொன்னால் ;
1. இச்சைகளின் பால் இட்டுச் செல்லும் மனம் .
2.பொய்மையின் பக்கம் அழைப்புக் கொடுக்கும் அழைப்பாளன் .
3.அல்லாஹ்வின் (சுப ) சட்டங்களுக்கு எதிராக , அல்லது மாற்றமாக (சாணாக்கியம் ,காலத்தின் தேவை போன்ற நியாயங்களை காட்டிய நிலையிலோ ,அல்லது அல்லாமலோ ) வேறு சட்டங்களை ,யாப்புகளை பிரயோகிக்க நிணைக்கும் தனி மனிதன் ,சமூகம் ,அல்லது இயக்கம் ஆகிய அனைத்துமே இந்த தாகூத் எனும் பதத்தில் உள்ளடங்கி விடும் .

இதனடிப்படையில் இன்று ஒவ்வொரு முஸ்லிமும் தம்மை மறு பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது . இந்த 'தாகூதியத்தின் ' பின்னால் அணி திறலும் தவறை முஸ்லீம்கள் கைவிட வேண்டும்.

http://khandaqkalam.blogspot.ae/2014/03/blog-post_9323.html

No comments:

Post a Comment