May 4, 2014

கைகளால் வரையப்படும் சித்திரங்கள் குறித்த இஸ்லாமிய தீர்ப்பு

கேள்வி:-
 கைகளால் வரையப்படும் சித்திரங்கள் மற்றும் உயிருள்ள ஜீவன்களான மனிதன், மிருகங்களை சித்திரமாக வரைந்து வீடுகளில் வைத்திருத்தல், அதை தொங்கவிடுவது பற்றிய ஷரியா விதிமுறை என்ன?
மனிதர்களையும் மிருகங்களையும் சித்திரமாக தீட்டுவதென்பது இப்போது நடைபெற்று வரும் வழக்கமான விடயங்களில் ஒன்றாகிவிட்டது.மனிதனின் முயற்சியில், அதாவது எழுதுகோல் மூலமாகவோ அல்லது கணினியின் உபகரணம் கொண்டோ சித்திரம் தீட்டுவதென்பது, உயிருள்ள ஒன்றிற்கு பொய்யான தோற்றத்தை அளிப்பது போன்றதாகும். ஆகையால் தடுக்கப்பட்டவை என்னும் அளவுகோல் இதற்கு பொருந்தும்.
 நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்:-
مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا
“எவரொருவர் ஓர் உருவத்தை வரைந்தால், அதற்கு உயிர் கொடுக்கப்படும் வரை அல்லாஹ் அவருக்கு தண்டனை அளிப்பான். மேலும் அவர்களால் ஒருபோதும் அதற்கு உயிரளிக்க முடியாது”.                     (இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி)
நபிصلى الله عليه وسلمஅவர்கள்  கூறினார்கள்:-
إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ
“உருவத்தை சித்திரமாக தீட்டுபவர்கள் மறுமை நாளில் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்; மேலும் அவர்களிடம் ‘நீங்கள் உருவாக்கிய ஓவியத்திற்கு உயிரளியுங்கள்’ என்று கூறப்படும்”.       (இப்னு உமர்(ரலி), புகாரி)
சித்திரங்களை வைத்திருப்பது, வீட்டில் வைத்திருப்பது, அதை தொங்கவிடுவது பற்றிய சட்டங்களை காண்போம்.
அ) தொழுகை விரிப்புகள், மஸ்ஜிதுகளின் திரைகள் அல்லது மஸ்ஜிதுகளுக்கான விளம்பரங்கள் மற்றும் இது போன்ற இடங்களில் தடுக்கப்பட்டதாகும். இதற்கு அனுமதியில்லை.
 நபிصلى الله عليه وسلمஅவர்கள் கஃபாவினுள் இருந்த சித்திரங்கள் அழிக்கப்படும் வரை உள்ளே வர மறுத்தார்கள் என்று கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபிصلى الله عليه وسلمஅவர்கள் அவர்கள் சித்திரங்கள் அழிக்கப்படும் வரை உள்ளே நுழைய மாட்டேன் என்று கூறியது வழிபாட்டு தலங்களில் சித்திரங்கள் வைப்பதற்கு தடை என்பதற்கான கரீனா(قَرِينَة) ஆகும்.எனவே மஸ்ஜிதுகளில் சித்திரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
أَنَّ النَّبِيَّ صبى الله عليه وسلم لَمَّا رَأَى الصُّوَرَ فِي الْبَيْتِ يَعْنِي الْكَعْبَةَ لَمْ يَدْخُلْ وَأَمَرَ بِهَا فَمُحِيَتْ
“நபிصلى الله عليه وسلمஅவர்கள் அவர்கள் இல்லத்தில், அஃதாவது கஃபாவினுள் சித்திரத்தை கண்டதால் நுழையவில்லை;மேலும் அதை அழிக்க உத்தரவிட்டார்கள்.”
                                                                                                  (இப்னு அப்பாஸ்(ரலி),முஸ்லிம்)
ஆ) வழிபாடு அல்லாத வேறு இடங்களில் வைப்பதற்குரிய அனுமதி
மரியாதைக்குரியதாகவும், பெருமைக்காகவும் அவைகளை வைத்திருப்பது; அஃதாவது வணக்கத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாமல் வீடுகளில் திரையாக, கல்விக்கூடங்களில் செயல் விளக்கத்திற்காக, ஆடைகளில் அல்லது துணிகளில் வரையப்படுவது…அல்லது பள்ளிக்கூடங்களில், அலுவலகங்களில், அல்லது விளம்பரங்களில் அல்லது பொருட்களின் தோற்றத்தை மேம்படுத்துவதற்காக நாடி உபயோகிப்பது அல்லது இது போன்ற விஷயங்கள்…. இவை அனைத்தும் விரும்பத்தகாத (مَكْرُوه)  செயலாகும்.
மிதியடிகள், படுத்து உறங்க பயன்படுத்தும் பாய்கள், தலையணைகள், மிதிக்கும் தரைகள் போன்றவை; வணக்கத்துக்குரிய அல்லது மதிப்பிற்குரிய இடங்களைத்தவிர மற்ற இடங்களில் இவற்றை வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சில ஆதாரங்கள்:-
நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்:-
لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ
                     ” நாய் மற்றும் சித்திரங்கள் உள்ள வீட்டினுள் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள்”.
                                                                                     (அபூ தல்ஹா(ரலி), முஸ்லிம்)
நபிصلى الله عليه وسلمஅவர்களிடமிருந்து கேட்டதாக  அபூ தல்ஹா(ரலி) மற்றொரு அறிவிப்பில் கூறுகிறார்கள்:-
إِلَّا رَقْمًا فِي ثَوْبٍ
                                  “துணிகளில் உள்ள சித்திரங்களை அச்சிடுதல் தவிர”  (புகாரி,முஸ்லிம்)
இது துணிகளில் சித்திரங்கள் அச்சிடுவதற்கான விதிவிலக்கு இருப்பதற்கு ஆதாரமாக திகழ்கிறது. அஃதாவது மலக்குகள் சித்திரம் உடைய துணிகளைக் கொண்ட வீடுகளில் நுழைவார்கள்;அஃதாவது கைகளால் தீட்டப்பட்ட சித்திரம்,தட்டையான சித்திரம் “துணிகளில் அச்சிடப்பட்டவை” ஆகுமானதாகும். ஏனென்றால் மலக்குகள் தட்டை வடிவிலான சித்திரம் கொண்ட வீடுகளில் நுழைவார்கள் என்பதாக அர்த்தம் கொள்கிறது. இருப்பினும், இது எவ்வகையில் அனுமதிக்கப்படுகிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள மற்ற அறிவிப்புகள் கீழே குறிப்பிடப்படுகிறது:
ஆயிஷா(ரலி)  அறிவிக்கிறார்கள்:-
دَخَلَ عَلَيَّ النَّبِيُّ وَفِي الْبَيْتِ قِرَامٌ فِيهِ صُوَرٌ فَتَلَوَّنَ وَجْهُهُ ثُمَّ تَنَاوَلَ السِّتْرَ فَهَتَكَهُ
“நபிصلى الله عليه وسلمஅவர்கள் வீட்டில் நுழையும்போது அங்கு சித்திரங்கள்(மிருகங்கள்) உடைய திரைகள் தொங்குவதை கண்டு கோபத்தால் முகம் சிவக்க, அதை தன் கைகளால் பிடித்து பின்பு அதை துண்டு துண்டாக கிழித்து எறிந்தார்கள். (புகாரி)
அல்-கிராம் “القرام” என்பது ஒரு வகையான துணியை குறிக்கும். இது கதவுகளில் திரையாக உபயோகிக்க கூடியது. நபிصلى الله عليه وسلم அவர்களின் முகம் சிவந்து அதை தங்களது கைகளால் பிடித்தது என்பது, கதவுகளின் திரைகளில் உருவம் பதியப்பட்டவைகளை உபயோகிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது, எனவே இது மலக்குகள் உருவம் பதியப்பட்ட வீடுகளில் நுழைவது குறித்த அனுமதித்தலை பொறுத்தமட்டில், இதை விளக்குவதற்கான ஆதாரமானது இதற்கு ஆதரவாக இல்லை, அதாவது இது வெறுக்கப்பட்ட செயலாக உள்ளது. ஏனெனில் இந்த உருவம் பதியப்பட்ட திரைகளானது கதவுகளில் தொங்கவிடப்பட்ட இடமாக உள்ளது; இது மதிக்கப்படும் இடமாகும்.ஆகையால் மதிக்கப்படும் இடங்களில் உருவம் பதியப்பட்டதை தொங்கவிடுவது வெறுக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிصلى الله عليه وسلمஅவர்களிடம் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளதாவது;-
وَمُرْ بِالسِّتْرِ يُقْطَعْ فَيُجْعَلَ مِنْهُ وِسَادَتَانِ تُوطَآَنِ
“திரையை கிழித்து அதிலிருந்து இரண்டு மெத்தைகளை அதன் மீது புரளுவதற்காக செய்யுங்கள் என்று  (ஜிப்ரீல்(அலை) அவர்கள் எனக்கு) கட்டளையிட்டார்கள்.”
                                                                                                             (அபூ ஹுரைரா(ரலி),  அஹ்மது)
ஆகவே ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிصلى الله عليه وسلمஅவர்கள் அவர்களுக்கு மதிப்பிற்குரிய இடத்திலிருந்து திரையை அகற்றி மக்கள் அதன் மீது புரளுவதற்குரிய இரண்டு மெத்தைகளாக ஆக்கிக்கொள்ள ஆணையிட்டுள்ளார்கள்.
இதிலிருந்து உருவம் பதியப்பட்டவைகளை மதிப்பிற்குரிய இடங்களில் அல்லாமல் வேறு இடங்களில் உபயோகிக்க அனுமதி உண்டு  என்பதை அறிய முடிகிறது.

Sources sindhanai.org

No comments:

Post a Comment