Jul 21, 2014

கொல்லப்பட்ட 13 Golani Brigade இராணுவ வீரர்களும் புதைகுழியாக மாறிய “Shijaiya” நகரும்...!




“எதிரி முன்னேறும் போது நீ பின்வாங்கு. எதிரி இளைப்பாறும் போது நீ பாய்ந்து தாக்கு. பாம்பு போன்ற அதன் வரிசையை வசதியான வளைவுகளில் வெட்டி விடு. எதிரி நெருப்பாக வரும் போது நீ நீராக மாறிவிடு” - டக்டிஸ் ஒப் வோர் - மாஓ சேதுங் (தி லிட்டில் ரெட் புக்).

இது தான் நடந்தது காஸாவின் எல்லைப்புற நகரான Shijaiyah-வுக்கு அருகில் முன்னேறிய இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரின் Golani Brigade (1st Brigade)-இற்கும். இஸ்ரேலின் முதல் பிரக்கேட் இது. 1948-ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போதே இதுவும் ஸ்தாபிக்கப்பட்டது. இஸ்ரேலின் முதன்மை தலைவர்கள் அனைவரும் இந்த பிரிக்கேட்டில் சேவையாற்றியுள்ளனர். சினாய் யுத்தம், 06 நாள் அரபு யுத்தம், அட்டிரசன் சண்டை, யோம் கிப்ர் சண்டை, உகண்டாவின் ஒப்பரேசன் என்டபே, லெபனானின் நதிக்கரையோர ஒப்பரேசன் லிடானி, முதலாம், இரண்டாம் லெபனான் யுத்தம், இரண்டு இந்திபாதாக்களிற்கு எதிரான தாக்குதல்கள் என இந்த பிரிக்கேட் மிகவும் அனுபவம் வாய்ந்தது. இதன் இரண்டு பிரிக்கேட் கொமாண்டர்கள் IDF-ன் பிரதம தளபதிகளாக கடமையாற்றியுள்ளனர். நம்பகமான வேகமாக தாக்குதல் நடாத்தி முன்னேறும் இன்பென்றி இது. 36-வது ஆர்மர் ரெஜிமண்டின் துணை பிரிக்கேட்.

“ஒப்பரேசன் புரடெக்டிவ் எட்ஜ்” (Operation protective Edge) எனும் இன்றைய காஸா மீதான தாக்குதலிற்கு இந்த அணியே முதன்மை அணியாக களமிறங்கியது. கடந்த சனிக்கிழமை பின்னிரவில் இது Shijaiyah-வின் எல்லை வரை முன்னேறி “பிளேசர் லைட்டினை” வானத்தை நோக்கி செலுத்திய போது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இந்த நகரின் எல்லைகளை நோக்கி குண்டுத்தாக்குதலை பரவலாக நிகழ்த்தியது. அதன் பின்னர் கோலானி பிரிக்கேட் தன் நகர்வை ஆரம்பித்தது. சுமார் 50 டாங்கிகள் கவச வாகனங்கள் முன்னகர்ந்த வேளையில் பலஸ்தீன போராளிகள் துப்பாக்கி தாக்குதல்களை நடாத்தினர். அதனைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் தங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியவாறு நகரத் தொடங்கியது இந்த படையணி.

09 அல்லது 10 வாகனங்கள் முன்னகர்ந்த வேளையில் குறுக்காக இருபுறமும் இடைமறித்து பலஸ்தீன போராளிகள் கோலனி அணியை நோக்கி அகோரமாக தாக்குதல் நடாத்த ஆரம்பித்தனர். நிலத்தில் சிறு குழிகள் வெட்டி புரக் மூவ் செய்திருந்த பலஸ்தீன போராளிகளின் தாக்குதல் அணியொன்று டாங்கிகளை நோக்கியும் துருப்புக்காவி வாகனங்களை நோக்கியும் தாக்குதல்களை ஆரம்பித்தது. இதில் ஒரு டாங்கியும், இரண்டு கவச வாகனங்களும் தீப்ற்றி எரிந்தன. உடனேயே நகர்ந்த இராணுவம் தன் வாகனங்களை பின்னகர்த்த ஆரம்பித்தது.

முன்னாள் சென்ற வாகன அணி தனது தொடர்பு அறுக்கப்பட்ட நிலையில் கட்டளை தலைமையினால் அபோர்ட் த மிசன் கொமாண்ட் அவர்களிற்கு வழங்கப்பட்டது. தங்கள் டாங்கிகளும் வெடித்து விடும் என நினைத்து நிலத்தில் குதித்து கவர் எடுத்த நிலையில் பெக்வேர்ட் மூவினை செய்ய முனைந்தனர். இதன் போது நடந்த கடுமையான துப்பாக்கிச் சமர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெரிவித் தகவல்களின் அடிப்படையில் தங்கள் தரப்பில் 13 கோலானி லைட் இன்பன்ட்றி சோல்ஜர்களை தாங்கள் இழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். பொதுவாகவே இஸ்ரேல் தனது இழப்புக்களினை பெரிதும் குறைத்து வெளியிடுவதே வழமை.

தாக்குதல்களிற்கு அல்-கஸ்ஸாம் போராளிகள் உரிமை கோரியுள்ளதுடன், “தாங்கள் நடாத்திய மோட்டார் தாக்குதல்கள் எதிர்பார்ததனை விடவும் அதிக இழப்புக்களை எதிரிக்கு ஏற்பட்டுள்ளதாகவும்” அறிவித்துள்ளனர். “இனி வரும் சண்டைகளிலும் குறுந்தூர மோட்டார்களின் பங்கானது முக்கியமானதாக இருக்கப்போகிறது” என்றும் கூறியுள்ளனர். அனுமானமாக 29 யஹுதி படையினரை தாம் கொன்றிருக்கலாம் என கணக்கு வெளியிட்டுள்ளனர். தங்கள் தரப்பில் ஒரு போராளி வீரமரணம் அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். “நாம் அவர்களை எச்சரித்திருந்தோம். காஸாவினுள் நுழைந்தால் அதன் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும் என்று” என்ற தங்கள் முன்னைய எச்சரிக்கையையும் ஹமாஸ் நினைவூட்டியுள்ளது.

Shijaiyah தாக்குதல்களில் 100 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் மாண்டு போயுள்ளனர். இவர்கள் அனைவரும் பொதுமக்கள். பலர் வீதிகளில் துடி துடித்து இறக்க தயாராகிய வேளையில் அம்புயுலன்ஸ்களை கூட அவர்கள் அருகில் கொண்டு சென்று நிறுத்த முடியாத அளவிற்கு படு கோரமான ஆட்டிலறி தாக்குதலை மேற்கொண்டது இஸ்ரேலிய இராணுவம். தங்கள் இழப்புக்களின் வலியை தாங்காமல் இதனை அவர்கள் நிகழ்த்தியிருந்தனர்.

எதிர்பார்க்கப்பட்ட களமுனை என்பதனால் ஹமாஸ் ஏற்கனவே அங்குள்ள மக்களை ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்திருந்த அகதி முகாம்களிற்கு நகர்த்தியிருந்தது. அதனால் பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை. அப்படியிருந்தும் கூட அநியாயமாக 100 இற்கும் மேற்பட்ட உயிர்கள் சில மணித்தியாலங்களில் காவு கொள்ளப்பட்டுள்ளன. காஸாவின் மத்தியில் உள்ளள Shifa Hospital-இற்கு காயப்பட்டவர்கள் காலதாமதமாகி கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நடந்த இந்த ஆக்ரோசமான சமரின் வெடிப்புச் சத்தங்கள் காஸாவின் மத்திய பகுதிவரை கேட்கும் அளவிற்கு துப்பாக்கிச் சமர் வெடித்திருந்தது.

khaibarthalam

No comments:

Post a Comment