Jul 21, 2014

இதுவரை நடக்கும் காஸா யுத்தம் பற்றிய மீளாய்வு ...!!


காஸாவின் ஆக்கிரமிப்பு பொக்ஸிங் போன்றது. இதில் இஸ்ரேல் பொயின்ட்ஸ்களை பெறலாம். ஆனால் ஒரு போதும் ஹமாஸை நொக்- அவுட் பண்ண முடியாது.

ஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால் அதற்கு ஏற்பட்ட நல்ல மற்றும் கெட்ட அறுவடைகள் என்ன என்பது பற்றிய ஓர் ஆய்வு (இன்றைய திகதி வரை மட்டும்), சுருக்கப் பார்வையில்....  இஸ்ரேல் 2006-ல் இருந்து 04 சண்டைகளை நிகழ்த்தியுள்ளது. லெபனான் மீது ஒரு முறையும், காஸா மீது 03 முறையும் ஆக்கிரமிப்புக்களை நடாத்த முற்பட்டு தோல்விகளை சந்தித்து எதிர்பார்க்கப்பட்ட யுத்தத்திற்கான காலவரையறைகள் நீட்சி பெற்று சென்றதனால் தனது இராணுவத்தை பின்வாங்கியுள்ளது. 

ஸ்ரேல் எதிர்கொண்ட சாதக நிலைமைகள் (1)
  • 900-இற்கும் மேல் ஹமாஸ் போராளிகள் ரொக்கெட்களை ஏவினாலும் அவற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மிக சொற்பமானவையே. இது எதிரியின் ஏவுகணைகளின் தாக்கம் பற்றிய அச்சத்தை மதிப்பீடு செய்ய உதவுகிறது. 
  • இஸ்ரேலினுள் வந்து வீழ்ந்த காஸாவின் ரொக்கெட்களினால் பாரிய பொருளாதார சேதங்கள் ஏற்படாமை.
  • 2012-இற்கு பின்னர்  Iron Dome anti-missile system-த்தின் செயற்பாடானது மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளதுடன் எதிர்காலத்தில் இதனை மேலும் சிறப்பாக செயற்படதக்கதாக மாற்ற வேண்டிய தொழில்நுட்ப அளவீடுகளை பெற முடிந்தமை.
  • அல்-கஸ்ஸாம் படையணியால் மேற்கொள்ளப்பட்ட கடல் மற்றும் வான் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டமையும், அவர்களின் தாக்குல்கள் தோல்வியில் முடிந்தமையும்.
  • ஹமாஸிற்கு அரபு நாடுகளின் நேரடி உதவிகள் கிடைக்கப்பெறாமை.
  • ஹமாஸிற்கு ஆதரவாக வெளிநாட்டு முஸ்லிம் போராளிகள் களம் இறங்காமை.
  • மேற்குக்கரையில் காஸாவிற்கு ஆதரவாக அல்-பதாஃ செயற்படாமை.
  • மேற்குக்கரையில் ஹமாஸிற்கு ஆதரவாக அல்-அக்ஸா பிரிக்கேட் தாக்குதல்களை நடாத்தாமை.
  • இஸ்ரேலிய அராபியர்களின் கலவரங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமையும் அவர்கள் மேலும் எந்த செயற்பாடுகளிலும் இறங்காமல் முடக்கப்பட்டமையும்.


ஸ்ரேல் எதிர்கொண்ட எதிர்மறை நிகழ்வுகள் (2)
  • காஸா தாக்குதல் பற்றிய இஸ்ரேலிய அமைச்சரவையில் ஏற்பட்ட முரண்பாடுகள்.
  • இஸ்ரேலிய கம்யூனிச மற்றும் மனித நேய அமைப்புக்களின் அரசு மீதான கடுமையான குற்றச்சாட்டுகளும், காஸா தாக்கதல்கள் மீதான எதிர்ப்பும்.
  • ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக பொது மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம்.
  • எதிர்காலங்கள் ஹமாஸ் பெரிய தாக்கம் விளைவிக்கும் ஏவுகணைகளை ஏவுமோ என்ற பொதுமக்களின் அச்சம். 
  • அயன் டோம் எம்மை பாதுகாக்காது என்ற இஸ்ரேலிய பொதுமக்களின் உளநம்பிக்கையின்மை.
  • விமான தாக்குதல்களிற்கு முகம் கொடுத்த காஸா மக்கள் தாக்குதல்களை நிறுத்துமாறு ஹமாஸை எதிர்க்க முன்வராமை.
  • விமானங்களில் காஸாவில் போடப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும், குண்டுகளையும் கண்டு காஸா மக்கள் கலக்கமடையாமை.
  • தொடரான பல நாட்கள் சண்டைகளை மக்கள் விரும்பான்மை.
  • தொடரான பல நாட்கள் சண்டையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பீடுகள்.
  • எதிர்பார்க்கப்பட்ட மேற்கு நாடுகளின் ஆதரவில் ஏற்பட்ட தளற்ச்சி.
  • மேற்குநாடுகளின் 2006 சண்டைகளில் (Operation Pillar of Defense) கிடைத்த ஆதரவு இம்முறை கிடைக்கப்பெறாமை.
  • சிரியா, சினாய் போன்ற பிரதேசங்களில் உள்ள போராளிகள் இஸ்ரெலிற்கு எதிரான தாக்குதல் மனோபாவத்திற்கு மாறியமை.
  • ஹமாஸின் தாக்குதல் திறனை மட்டுப்படுத்த முடியாமை.



ஸ்ரேல் எதிர்கொண்ட பாதக நிலைமைகள் (3)

  • இஸ்ரேலிய உளவமைப்புக்களின் ஹமாஸ் பற்றிய தவறான மதிப்பீடு.
  • இஸ்ரேலிய உளவமைப்புக்களின் இஸ்லாமிக் ஜிஹாத் பற்றிய தவறான மதிப்பீடு
  • இஸ்ரேலிய உளவமைப்புக்களால் பலஸ்தீன போராட்ட அமைப்புக்களின் அதி உட்ச இலக்குகள் (ஹைலி டார்கெட்டட் பிப்ஸ்) பற்றிய தகவல்களை திரட்ட முடியாதனால் பல தாக்குதல் இலக்குகள் தப்பித்தமையும், சந்தர்ப்பங்கள் வீணாக்கப்பட்டமையும்.
  • அல்-கஸ்ஸாமின் தாக்குதல் திறன்களினால் அது தனது அரசியல் தலைமைகளை கட்டுப்படுத்தும் பிரிவாக உருவாவதனால் ஏற்படும் இஸ்ரெலிற்கு எதிரான நிலைமைகள்.
  • ஹமாஸின் அரசியல் பிரிவை விட காஸாவின் பொதுமக்கள் அல்-கஸ்ஸாமில் இணைந்து செயற்பட விளையும் சந்தர்ப்பங்களை இந்த சண்டைகள் உருவாக்கியமை.
  • ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படையணி பல சண்டைகளில் தங்களை மரபு இராணுவமாக வெளிப்படுத்திய நிலையில் தாக்குதல்களை எதிர்கொண்டமையானது அவர்கள் மரபு இராணுவமாக மாறுவதற்கான பல சாத்தியக்கூறுகளை அவர்களிற்கு வழங்கியுள்ளமை. 
  • இஸ்ஸத்தீன் எல்-கஸ்ஸாம் படையணி மரபு இராணுவ தன்மைகளை பெறுவதானல் இஸ்ரேலிய இராணுவம் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள பாதகமான சவால்கள்.
  • அல்-கஸ்ஸாமின் ரொக்கெட் தாக்குதல் தளங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாத இஸ்ரேலிய தாக்குதல்களின் இயலாமைகள்.
  • இஸ்ரேலிய தாக்குதல் விமானங்கள் கடந்த காலங்களைப் போல தாழப்பறக்க முடியாத நிலைமை. 
  • இஸ்ரேலிய கடற்கலங்கள் காஸாவின் கடற்கரை வந்து நின்று தாக்குதல் செய்ய முடியாமல் ஹமாஸினால் தடுக்கப்பட்டமை. 
  • இஸ்லாமிக் அல்-ஜிஹாத் அணியினர் மேற்கொண்ட நெடுந்தூர ஏவுகணை வீச்சும் அவற்றின் லோஞ்சிங் பேட்களை மொபைல் அமைப்பில் இடம்மாற்றும் செய்பாடுகளின் வேகமும் இஸ்ரேலிய விமானங்களாலும் ஆட்டிலறிகளினாலும் அவற்றை அழிக்க முடியாமல் போன நிலைமைகளும். 
  • இஸ்ரேல் சண்டைகளில் பெரிதுமும் தங்கியிருந்த மர்கவா டாங்கிகளின் பின்னடைவுகள். அவற்றை தாக்கியழிக்கும் ரஸ்ய தொழில் நுட்ப அன்டி டேங் லோஞ்சர்கள் அல்-கஸ்ஸாம், இஸ்லாமிக் ஜிஹாத் போராளிகளின் வசம் வந்தடைந்தமை.
  • ஹமாஸின் சுரங்கங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாமை. 
  • ஹமாஸின் வெடிகுண்டு தயாரிப்பு நிலையங்களை பூரணமாக அழிக்க முடியாமை.
  • காஸாவில் ஹமாஸின் வெற்றியினால் பலவீனப்படுத்தப்படும் மேற்குக்கரையின் மஹ்மூத் அப்பாஸ் அணியினர். 
  • காஸாவின் வெற்றியினால் ஹமாஸ் மீதான மேற்குக்கரை இளைஞர்களின் ஆத்மார்த்த மோககும் அல்-பதாஃ மீதான நம்பிக்கை இழப்பும். இது ஹமாஸை மீண்டும் அங்கு காலூன்ற வழி வகுப்பது. 
  • காஸாவின் சண்டைகளை லிமிட்டர் வோர் ஸ்ட்டர்ஜியில் முடிக்க முடியாமல் போனமையினால் அதனை லோங் வோர் ஸ்ட்டர்ஜிக்கு மாற்ற வேண்டிய கள நிலைமைகளும் உலக கோப்பையில் லயித்த உலகம் இப்போது காஸாவை பார்க்க ஆரம்பித்த கால அவகாசத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள். 

No comments:

Post a Comment