Jul 17, 2014

இன்றைய பிரச்சினைகளுக்கான மாற்றீடு இஸ்லாமிய சித்தாந்தம் ஒன்றே

 

BY நஹ்தா காலித் .

உலக ரவுடிகளான அமெரிக்க சார் முதலாளித்துவ வல்லரசுகள் இந்த உலகை பினக்காடாக மாற்றிவருவதையும் அது மாத்திரமே தம் ஏக போக வல்லாதிக்கத்திட்கான வழிமுறை என்பதால் இதைப் பார்த்து கொஞ்சமாவது மனிதம் உள்ள மனிதர்கள் கூட தம்மை தட்டிக்கேக்கக் கூடாது என்ற ஒரே காரண்த்திட்காய் தாம் செய்யும் அட்டூழியங்களை மூடி மறைப்பதற்கும், தாம் செய்யும் எந்தவிதமான மனித இனம் முழுவதற்குமான துரோகச் செயல்களையும் நியாயம் கட்பிப்பதட்குமே இன்றைய அவர்களின் "புதிய உலக ஒழுங்கு" எனும் மாயையை அமுல்படுத்தி வருவதற்கான அடிப்படை காரணமாகும் .இவ் விடயத்தில் உண்மையாளர்களாக அவர்கள் இருந்திருந்தால் இந்த உலகின் இன்றைய மனித இனத்தை அழிக்கும் நியாயமற்ற நிகழ்வுகளையும் குறிப்பாக முஸ்லிம் உலகுக்கு எதிரான கொடுமைகளையும் ,அட்டூளியங்களையும் கண்டும் கையாலாகாதவர்களாக இருந்திருக்க மாட்டார்கள் . 

*எனவே இவ்விடயத்தில் அவர்களது UNHR எங்கே ??????
*அமெரிக்க மற்றும் நேசநாடுகளின் அயோக்கியத்தநங்களுக்கு மௌன அங்கீகாரம் வழங்கும் ஐக்கிய நாடுகள் சபை எங்கே ?????
*அவர்களது மனிதத்தை அளிப்பதை மௌனித்து வேடிக்கை பார்க்கும் மானம்கெட்ட மனித உரிமைகள் அமைப்புக்கள் எங்கே?????? *சிறுவர்கள் பெண்கள் போன்றோரின் உரிமைகளுக்கான அமைப்பு என்று உலகம் முழுவதும் அவர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக கோஷம் எழுப்பும் வெட்கம் கெட்ட மனித வேடம் தரித்த குள்ள நரிகள் எங்கே?????? 

அனைவருமே சேர்ந்துதான் இத்தகைய மகாபாதகச் செயல்களை முழு மனித இனத்துக்கும் எதிராகச் செய்கின்றார்கள் ,அதனால் தான் இன்றைய உலகில்.... இராக்கிலும் ,சிரியாவிலும் ,காஷ்மீரிலும்,மியன்மாரிலும் ,எகிப்திலும் ,மத்திய ஆபிரிக்காவிலும் ,சைனாவின் சிங்க்சியான் மாநிலத்திலும் ,இத்தனை மனித இனத்தை துவம்சம் செய்யும் பாரிய இனவொழிப்புப் பேரழிவுகளுக்கு மத்தியிலும் அசைவற்ற ஜடங்களைப் போல் அசைவற்று மௌனிகளாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளார்கள் .இதனையும் மீறி தாமே உலகப் போலீஸ்காரன் சாட்ட்டான்பிள்ளை என்றெல்லாம் மார்தட்டும் இவர்கள் அவற்றுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளும் எடுக்காதது ஒருபுறமிருக்க, கால்பந்து மைதான நேர்முக வர்ணனை போன்று அத்தகைய அபாயகரமான சூழலில் அழிவுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மற்றும் சேதங்களை அறிவிக்கும் வர்ணனையாளர்களாக தமது வெகுளித்தனத்தை காட்டுவதோடு அந்நிகழ்வுகளை தடுக்காமல் நிகழ்வுகளில் பின்னர் அவர்களுக்கான நிவாரணம் எவ்வாறு வழங்குவது போன்ற இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் பற்றி பெசுபவர்களாகவுமே உள்ளார்கள். 

இவர்கள் உலகுக்கு வகுக்கும் சட்டங்களும் ,ஒழுங்குகளும் சாத்தியமற்றவை ,மட்டுமல்லாமல் வெறுமனே மனித இனத்தை ஏமாற்றி தம் கோரப்பிடியின் அதிகாரத்தை விட்டும் இந்த உலகம் வெளியில் செல்லாமல் கட்டி வைப்பதற்கான தந்திரோபாயங்களே தவிர வேறில்லை .
எனவே இத்தகைய போலிகளில் மனித இனத்திற்கான விடிவை எதிர்பார்த்தல் தாகித்தவன் காணும் "கானல் நீரே ".என்பதை இப்பொழுது புரியலாம்.இன்னும் இந்த ஜனநாயகத்தின் இருமுகங்களில் வெளிப்படையாக உள்ள முரட்டுத்தனத்தையும் ,அதன் மறுபுறம் உள்ள அரக்கக் குணத்தையும்கூட கண்டுகொள்ளலாம் .

இனியாவது நாம்,நம் இயல்பாக்கங்களையும், இயல் பண்புக்கூருகளையும் ,மதித்து அவை எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளினதும் ,தேவைகளினதும் தரம் அறிந்து அதற்கான தீர்வை அறிவார்ந்த முறையிலும் முழு மனித இனத்தினதும் ஈடேற்றத்துக்கும் பொருத்தமான வாழ்வியல் வழிமுறைகளிலும் நேர்த்தியாகவே வழங்கும் பொருத்தமான மாற்றீடு இஸ்லாம் எனும் அறிவார்ந்த சித்தாந்தம் ஒன்றை தவிர வேறு எதுவுமே இல்லை என்பதை அறிந்துகொள்ளலாம் .

இனியும் நாம் இத்தனை தசாப்தங்களாக இந்த மனித சிந்தனைகளால் புனையப்பட்ட மனிதத்துவத்தை மதிக்காது அதன் இயல் பண்புக்கூறுகளை மதிக்காது , வேருமனே மனிதன் என்பவன் ஒரு மெட்டர்,அல்லது அவன் ஒரு பேசும் விலங்கு ,அல்லது அவன் ஒரு உழைக்கும் இயந்திரம் என்று மனித வர்கத்தையே இழிவான கண்கொண்டு பார்க்கும் தரமற்ற குறைநிரைந்த ,அரைகுறை சித்தாந்தங்களான கொம்நியுஷிய (சமத்துவவாதம்),மற்றும் கெபிடலிச(முதலாளித்துவவாதம் ) சித்தாந்தங்களின் அடிமைத்துவத்தை களைந்து ,மனிதம் போற்றும் ,மனிதன் இப்புவியில் எந்த மனிதனுக்கும் அடிமை அல்ல ,மாற்றமாக மனிதர்கள் சமமானவர்களே ,மனிதர்கள் சகல வல்லமையும் பொருந்திய ஏக எஜமானன் அல்லாஹ் ஒருவனுக்கே அடிமை என்றும் ,அவர்களில் ஏற்றத்தாழ்வு என்பது தம் எஜமானனுக்கு அடிபணிவதில் அவர்களிடம் உள்ள வேறுபாட்டின் அளவு ஒன்றே என்றும், மனிதனின் இயல்போடும், அவனுடையபகுத்தறிவோடும் ஒத்துப்போகும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் பக்கம் மீள்வோமாக .

இதனையே இறைத் தூதர் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உலகில் பிறக்கின்ற அனைத்து பிறப்புக்களு (குழநதைகளு) மே அவற்றின் (கட்டுப்படல் எனும் இஸ்லாத்தின் அடிப்படை பண்புடன் ) இயல்தன்மையுடனேயே பிறக்கின்றன ,அவற்றை அவர்களது பெற்றோரே யூதர்களாகவும், கிறிஸ்துவர்களாகவும், மஜூசிகளாகவும் (நெருப்பை வணங்கி வழிபடுபவர்கள்) மாற்றி விடுகின்றனர் "என்று கூறிக்காட்டினார்கள் .
அல்லாஹ்வே நமமனைவரையும் அவனது இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில் உறுதி உள்ளவர்களாகவும், நம் வாழ்வின் சகல விடயங்களுக்கும் அந்த இஸ்லாத்தை கொண்டே தீர்வு தேடுபவர்களாகவும் ஆக்கி நம் இம்மை ,மறுமையின் வெற்றிகளைத் தந்தருள்புரிவானாக . ஆமீன் .
அல்லாஹ் குறிப்பிடுகின்றான் “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தீன் (வாழ்வியல் முறைமை ) என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது (இந்த) இஸ்லாம் (எனும் வாழ்வியல் முறை மட்டும் ) தான் . (அல்குர்ஆன் 3:19). 

இன்னும் அந்த இறைவன் நம்மை அழைகிறான் “ஓ (அல்லாஹ்வை) விசுவாசம் கொண்டவர்களே ! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு வாழ்வளிக்கும் விடயத் (இஸ்லாத்)தின் பால் அழைத்தால் அவர்களுக்கு (அவ்வழைப்புக்கு) பதில் அளியுங்கள் “ .அல்குர்ஆன் (08:24).

No comments:

Post a Comment