Jul 20, 2014

இஸ்ரேலின் தரைநகர்வுகள் பற்றிய யூதக்குறிப்புகள் !!

 

 By:Abu Sayyaf

“ஓர் இராணுவ கொமாண்டரிற்கு தாக்குதலை ஆரம்பியுங்கள் என கட்டளை இடுவது இலகுவானது. ஆனால் அந்த தாக்குதலை ஆரம்பித்து முன்னகரும் சிப்பாய்க்கு மட்டுமே தெரியும் அது எவ்வளவு சிரமமானது என்று” . இஸ்ரேலிய படையினர் (I.D.F.) காஸா மீதான தரை சண்டைகளை இப்போது ஆரம்பித்துள்ளனர். காஸாவினுள் ஊடுருவி தாக்குதல்களை மேற்கொள்ளும் அவர்களிற்கு இரண்டு பணிகள் முன்னெழுந்து நிற்கின்றன. பலஸ்தீன போராளிகளை எதிர்கொண்டு அவர்களை அழித்தொழிப்பது அல்லது பின்வாங்க வைப்பது. காஸாவில் இருந்து இஸ்ரேலிய எல்லைகள் ஊடாக தோண்டப்பட்டுள்ள “டனல்ஸ்” எனும் சுரங்கப்பாதைகளை கண்டறிந்து அவற்றை அழித்து நிர்மூலமாக்குவது.

பெஞ்சமின் நெதன்யாகூ 2005-ல் இஸ்ரேலினால் திட்டமிடப்பட்ட காஸாவின் கரையோரங்களையும், வடக்கு காஸாவையும் முழுமையாக கைப்பற்றும் திட்டத்தின் அடிப்படையிலேயே மீண்டும் 2014-ல் ரமழான் மாதத்தை இலக்காக கொண்டு தனது தாக்குதல்களை ஆரம்பிக்குமாறு இஸ்ரேலிய வான்படைக்கு உத்தரவிட்டார். தொடரான வான் தாக்குதல்கள் ஊடாக காஸாவின் மாமூல் நிலையை சீர்குலைத்த பின்னர் தரை தாக்குதலை ஆரம்பித்து காஸாவை விழுங்குவது அவரது திட்டம். எல்லாமே அவர் திட்டப்படி நடந்தது. அவரது பாதுகாப்பு அமைச்சு வழங்கிய வோர் அஸஸ்மன்ட் ரிப்போர்ட் படி எதிர்பார்த்த ரொக்கெட் தாக்குதல்களை விடவும் பல மடங்கு அதிகரித்த ரொக்கெட் தாக்குதல்கள் அவரை யுத்தம் தொடர்பான மீளாய்விற்கு இட்டுச் சென்றது.

யுத்தம் ஆரம்பிக்க முன்னர் கூட்டப்பட்ட உயர் அமைச்சரவை கூட்டம் யுத்தம் ஆரம்பித்து ஒரு வாரகாலத்தினுள் மீண்டும் கூட்டப்பட வேண்டிய சந்தர்ப்பம் எழுந்தது இஸ்ரேலிற்கு. காஸாவிற்குள் இருந்து வந்து விழும் ரொக்கெட்களை தடுத்து விடலாம், அவற்றின் இலக்குகளும் அவ்வளது துல்லியம் இல்லை. ஆனால் சுரங்கப்பாதைகள் ஊடாக இஸ்ரேலிய எல்லைகளில் நுழைந்து ஏவப்படும் ரொக்கெட்களை அவர்களால் தடுக்க முடியாமல் போனது. கூடவே அவை இலக்கை சரியாக சென்றடைந்து தாக்கும் திறனையும் தடுக்க முடியாமல் போனது. பலஸ்தீனர்கள் உபயோகம் செய்யும் சுரங்கப்பாதைகள் ரஃபாவில் தான் இருக்கிறது என நினைத்த இஸ்ரேலிற்கு அது தங்கள் எல்லை வரை நீளும் எதிர்பார்க்கவில்லை.

1600 இற்கும் அதிகமான ரொக்கெட்கள் இஸ்ரேல் முழுதும் மழை போல பொழிந்தமை இஸ்ரேலை யுத்தம் தொடர்பான தந்திரோபாய மாற்றங்களை நோக்கி தள்ளியுள்ளது. பலஸ்தீன போராளிகளை பொருத்த அளவில் அவர்களின் இலக்கு எதிரியை உள்வாங்கி தாக்கியழிப்பது, முடிந்தால் அவர்களை உயிருடன் பிடிப்பது. யூத ஊடகங்கள் இதுவரை Beit Lahia மற்றும் Beit Hanoun போன்றவற்றின் எல்லைகளில் 13 சுரங்கப்பாதைகளை தாம் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளன.

கடல் வான் தரை என மூன்று நிலைகளில் இருந்தும் குண்டுத்தாக்குதல்களை சமகாலத்தில் நிகழ்த்திய பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் காஸாவினுள் மெல்ல கவனமாக நுழைந்துள்ளனர். இந்த நகர்வில் இதுவரை இஸ்ரேல் 01 டேங்கையும், 03 துருப்பு காவி வாகனங்களையும், 01 தாக்குதல் கவச வாகனத்தையும் இழந்துள்ளது. பலஸ்தீன போராளிகள் தங்கள் சொந்த திட்டமிடல்களின் படி எதிரியை உள்வாங்கி தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர்.

தரையுத்தம் என்றால் இரு தரப்பினரும் நேரடியாகவே மோதிக்கொள்வர். காஸாவின் நுழைவாயில்கள் ஊடாக முன்னேற முயலும் இஸ்ரேலிய இராணுவம் சில மணித்தியாலங்கள் கடும் மோதல் பின்னர் எதுவும் இல்லாத நிலை. மீண்டும் மோதல் என பலஸ்தீன போராளிகள் விட்டு விட்டு அடிக்கும் சண்டைகளினால் தங்கள் வேகமான முன்னேற்றங்களை தவிர்த்து வருகின்றனர். அவர்களது முதன்நிலை இலக்காக சுரங்கப்பாதைகளை கைப்பற்றுவதே உள்ளது.

இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் “பாதுகாப்பு படையினரிற்கு எதையும் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் காஸா முழுவதையும் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்” எனக் கூறியுள்ள அதே வேளை இஸ்ரேலிய முன்னால் இராணுவ ஜெனரல்கள் இந்த யுத்தத்தை பிரதமர் நினைப்பது போல முடிக்க முடியாது என அறிவித்துள்ளனர்.

காஸாவில் இஸ்ரேலிய படையணியினர் “கெரில்லா யுத்தத்தை” எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பலஸ்தீன போராளிகள் அதற்காகவே காத்திருக்கின்றனர். அவர்கள் ஒரு எர்பன் வோன் எனும் நகர்புற சண்டைகளை நிகழ்த்த தயாராகி விட்டனர். அதனை அவர்கள் தங்கள் அகதி முகாம்கள் வரை நகர்த்தி செல்லவுள்ளனர். இந்த சண்டைகளில் எதிரிகள் நேரடியாக சண்டையிடத போது எமது பலமிக்க டாங்கிகளால் ஒன்றும் செய்ய இயலாது. மேலும் அவர்கள் எமது டாங்கிகளை அழிப்பதனை முதல் இலக்காக கொண்டு தங்கள் தாக்குதல்களை வடிவமைத்துள்ளதை உணர முடிகின்றது” என தெரிவித்துள்ளனர்.

Brigadier-General Yousef al-Sharqawi இது பற்றி கூறுகையில் “இஸ்ரேலிய அரசு எதிர்பார்க்கும் 365 சதுர கிலோ மீட்டர் பரப்பை கைப்பற்றுவது என்பது இரண்டு மில்லியன் மக்களுடன் சம்மந்தம் உடையது. இதில் எல்லோருமே ஹமாஸ் அங்கத்தவர்களாக அல்லது ஆதரவாளர்களக இருக்கும் போது இதனை இஸ்ரேலிய அரசினால் செய்து முடிக்க முடியாது. தவறான இலக்கை மீண்டும் தவறான வழியில் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முட்டாள்த்தனமாக செயற்பாடுகளில் நெதன்யாகூ இறங்கியுள்ளார்” எனச்சாடியுள்ளார்.

ஜுவிஸ் டிபென்ஸ் ஸ்டடீஸ் எனும் அமைப்பு காஸா தரைச்சமர் பற்றி வெளியிட்டுள்ள அறிவிப்வில் “கடந்த காலங்கள் போலல்லாது ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் என்பன நாம் எதிர்பார்க்காத புதிய யுக்திகள் , ஆயுதங்கள் என்பனவற்றை இந்தச் சண்டைகளில் அறிமுகம் செய்துள்ள நிலையில், தரைச் சண்டைகளில் அதன் யுக்திகள் என்ன, ஆயுதங்கள் என்ன என்பது எமக்கு தெரியாது. இது எமது படையினரை வலிதாக காவு கொடுக்கும் ஒரு முயற்ச்சியாகவே கணிக்க கூடியதாக உள்ளது எனவும் இதன் வலி இஸ்ரேலை பலவீனப்படுத்துமேயல்லாது பலப்படுத்தாது” எனவும் தெரிவித்துள்ளது. “கட்டிடங்களை தரைமட்டமாக்குவதும், உயிர்களை கொல்வதும், சிறுவர்களை கைது செய்வதும் தான் யுத்தம் என நினைக்கின்றார் நெதன்யாகூ. ஆனால் இதன் பின்விளைவுகளும் இழப்புக்களும் இஸ்ரேலிற்கு கடுமையாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment