Jul 20, 2014

நோபல் பரிசு வாங்க என்ன தகுதி வேண்டும் !??

 
பெயர் மேனிகம் பிகன் (MENACHEM BEGIN). இஸ்ரேலின் முன்னாள் பிரதம மந்திரி. பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டிஷ் வெளியேறவும் அங்கு இஸ்ரேல் உருவாகவும் முக்கிய பங்கு இவரை சாரும்.பாலஸ்தீனதிலே யூத தனி நாடு அமைக்கவேண்டும் என்பதை கொள்கையாக கொண்ட தீவிரவாத அமைப்பை தலைமைதாங்கி நடத்தியவர்.(...அதாவது பிரிட்டிஷ் மோசமாக வளர்த்த பாசக் குழந்தை .)

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு அதாவது 1941 முதல் 1948 வரை 259 தீவிரவாத தாக்குதல்கள் யூத பயங்கரவாதிகளால் நடத்தப் பட்டிருக்கிறது . இதில் பல யூத தீவிரவாத அமைப்புகளின் பங்கு உண்டு அவற்றில் ஒரு அமைப்பு இக்னோ அதனின் தலைவர் தான் மேனிகம் பிகன் (MENACHEM BEGIN).

நூற்றுகனகான அப்பாவி மக்களை கொன்று குவித்திருக்கிறார். 1946 ல் ஜூலை மாதம், கிங் டேவிட் ஹோட்டலில் குண்டு வெடிப்பு நடந்தது இதை நடத்தியது இக்னோ அமைப்பு அவற்றை தலைமைதாங்கியவர் மேனிகம் பிகன். அதில் பலர் கொல்லபட்டார்கள் பிரிடிஷார் 28, அரேபியர்கள் 41, யூதர்கள் 17, மற்றவர்கள் 5 பேர் .

அந்த இக்நோவை சார்ந்தவர்கள் அரேபியர்களை போல உடை அணிந்து முஸ்லிம்களை போல் சென்று குண்டு வைத்திருக்கிறார்கள் , இன்னும் ஜெருசலேமில் 1944 பிப்ரவேரி மாதம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள் அதில் பலர் கொல்லப்பட்டார்கள்.

இக்னோ அதை. இன்னும் பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்திருகிறது தலைமைதாங்கியவர் மேனிகம் பிகன். இவர் பிரிடிஷ் காரர்களால் நம்பர் ஒன் தீவிரவாதியாக அறிவிக்கபட்டார். சில வருடங்களுக்கு பின் இஸ்ரேலின் பிரதம மந்திரியானார் பிறகு 2 வருடங்கள் கழித்து அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

                                                                                                                                                       **நூற்றுகனகான அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதி ஒரு நாட்டின் பிரதமரா?

**அவனுக்கு அமைதிக்கான நோபல் பரிசா?

அப்படியே மேலே தந்த விபரத்தை வாசித்து விட்டு சல்மான் ருஷ்டி , மலாலா யூசுப் ....... இப்படி பட்டியலை நீட்டிப் பாருங்கள் . எந்த தகுதிக்காக நோபல் பரிசு கொடுக்கப்படுகின்றது!? எனும் உண்மை தெரிந்து விடும் !!!! முதலாளித்துவத்தின் தகுதிகான் நிலை புரிந்துவிடும் !!!!

Abdur Raheem

No comments:

Post a Comment