Jul 13, 2014

போராட்டத்தின் கவிதை சாகாது ! (ஒரு புனித நிலத்தின் புதல்வன் உங்களோடு பேசுகிறான். )


நாங்கள் ஒலிவ் மரங்களின் 
மண்ணில் பிறந்தவர்கள் .
நாங்கள் வேறொரு தாயை அறியோம் .
தாய் மொழியையும் அறியோம் .
இது எங்கள் தேசம் 
புராணக் கற்பனையில் பிறந்ததல்ல .
எங்கள் பிறப்புரிமை நிகழ்ந்த நிலம் .

இந்த ஒலிவ் தேசத்தின் ஓலங்களை ஒழித்து
மித மிஞ்சிய அழிவை அகற்ற ஒரே வழிதான் எமக்குள்ளது .
அதுதான் ஆக்கிரமிப்பின் கரங்களை அகற்றுவது.
ஜைத்தூன் தேசத்தை மீட்டெடுப்பது .

இந்த விடுதலை பற்றிய ஒரு தீராத நோய் எமக்குள்ளது .
அதன் பெயர் நம்பிக்கை .குண்டுகள் ஆயுதங்கள் பேசாத
ஒரு வாழ்வின் மீதான நம்பிக்கை ! அங்கு
எம் கவிஞர்கள் செந்நிறத்தின் அழகை
இரத்தத்தில் தேடாமல் ரோஜாக்களில்
காண்பார்கள் என்ற நம்பிக்கை !

இந்த மண் பாலஸ்தீனம் என்ற பெயரை
சமாதான பூமி என்ற தன் சொந்தப்பெயரை
மீண்டும் சூடும் என்ற நம்பிக்கை.
இந்த நம்பிக்கையின் சுமையை தாங்குவதற்கு
எங்களோடு இணைந்திருக்கும்
உங்கள் அனைவருக்கும் நன்றி .

- மஹ்மூத் தர்வீஸ் -

No comments:

Post a Comment