உன் ஊடகத் தாலாட்டில் உலகம் பூரிக்க
நான் பொய்ப்பிக்கப் பட்டு விட்டேன் !
ஓலங்களை இராகமாயும் குருதியை பாணமாயும்
அழகாய் நீ மாற்றிப் பருக்கிய போது உன்
ஏகாதிபத்திய மாயத் தொட்டிலில்
பூகோளமே உறங்கி விட்டதே !
உன் கசாப்புக் கடைக்கு எம்மை அடிமாடுகளாக்கி விட்டு
முதலைக் கண்ணீரோடு நீ பூசும் சமாதானச் சாயம்
உன் வழமையான வியாபாரம் தான் !
சதிகளின் மீது நீ சரித்திரம் எழுதுவது எமக்கு
முதற் தடவை அல்லதான் ! அதை
விதியாக்கிக் கொள்ளும் முட்டாள் தனத்தில்
நாமிருக்கும் வரை உன் பாடு கொண்டாட்டம் தான் !
No comments:
Post a Comment