Nov 21, 2015

அரசு பற்றிய இஸ்லாத்தின் கருத்தாக்கம்– பாகம் – 1

அத்தவ்லா என்ற அரபி வார்த்தைக்கு மொழியியல் ரீதியாக கலப - மிகைத்துவிடுதல்’ என்று பொருளாகும். காலத்தின் மாறுதலை சுட்டிக்காட்டுவதற்கு இந்த வார்த்தையை பயன் படுத்துவதும் வழக்கத்தில் இருந்தது. ‘நாட்கள் மாற்றப்பட்டுள்ளன அல்லது சுழற்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன’ என்று மொழியியல் ரீதியாக கூறப்படுகிறது, இதற்கு நாட்கள் மாற்றமடைந்து விட்டன அல்லது அல்லாஹ்(சுபு) மக்களுக்கு மத்தியில் அவற்றை மாற்றுகிறான் போன்ற அர்த்தங்கள் உள்ளன.
 
 
கருத்தாக்கங்களில் (concepts) ஏற்படும் மாற்றங்கள், காலத்தால் ஏற்படும் மாற்றங்கள், மக்களுக்கு மத்தியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அரசுகள் மாற்றம் அடைகின்றன. ‘அரசு என்ற மொழிவழக்கு ரீதியான வார்த்தை குறிப்பிட்ட நிலப் பரப்பில் வாழும் மக்கள் கூட்டத்தின் மீது ஏவல் மற்றும் விலக்கல் தொடர்பான ஆணைகளை பிறப்பிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ள அமைப்பை குறிப்பிடுகிறது. எனினும் சமுதாயங்களின் எதார்த்த நிலையை பொருத்தும் அவர்களின் கண்ணோட்டங்களை பொருத்தும் ஏற்படும் வேறுபாடுகளின் காரணமாக ‘அரசு’ தொடர்பான வரையறைகள் மாறுபடுகின்றன.
 
 
 உதாரணமாக மேற்கத்திய மக்கள் அரசின் எதார்த்தநிலை குறித்தும் அரசு அமல்படுத்தும் சட்டங்கள் குறித்தும் மாறுபட்ட கண்ணோட்டங்களை கொண்டிருக்கிறார்கள். வரலாற்றின் மத்தியகால கட்டத்தில் நிகழ்ந்ததை போன்று அரசின் எதார்த்தநிலை மதச்சார்பு கொண்ட தாகவோ அல்லது சர்வாதிகாரத்தை கொண்டதாகவோ அல்லது ஜனநாயக முறையை கொண்டதாகவோ இருக்கலாம். எனினும் அரசு அதன் நிலப்பரப்பிலும் அதன் மக்கள் கூட்டத்திலும் அதன் ஆட்சியாளரிலும் எதிரொலிக்கிறது என்பதை பொருத்தும், இம்மூன்று அம்சங்களும் அரசின் அடித்தளமாக விளங்குகின்றன என்பதை பொருத்தும் மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தையே கொண்டிருந்தார்கள். மேற்கத்திய மக்களை பொருத்தவரை, அரசு என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிறுவப்படுகிறது என்றும் அதில் குறிப்பிட்ட மக்கள் கூட்டம் நிரந்தரமாக வசித்துவருகிறது என்றும் ஆட்சியதிகாரம் பெற்ற ஆட்சியாளர் ஒருவர் அவர்களுக்கு தலைமையேற்று வழிநடத்துகிறார் என்றும் கருதுகிறார்கள்.
 
 
இஸ்லாமிய அரசை பொருத்தவரை அது ஷரீஆ சட்டங்களின் அடிப்படையில் குடிமக்களின் விவகாரங்களை மேலாண்மை செய்யும் அரசியல் மையமாகவும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பாகவும் விளங்குகிறது. வேறுவகையில் கூறினால், அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்தல் மற்றும் இஸ்லாத்தின் செய்தியை உலக முழுவதற்கும் எடுத்துச்செல்லுதல் ஆகிய பணிகளை நிறைவேற்றுகின்ற அரசாக கிலாஃபா விளங்குகிறது, ஏனெனில் இஸ்லாமிய நிலப்பரப்புகளில் ஷரீஆ சட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கும், இஸ்லாம் முழு உலகிற்கும் ஒளியாகவும் நேர்வழி காட்டுகின்ற மகத்தான செய்தியாகவும் விளங்குகிறது என்பதால் அதை தஃவா மூலமாகவும் ஜிஹாது மூலமாகவும் எடுத்துச்செல்வதற்கும், உரிய வழிமுறையாக (தரீக்கா) இஸ்லாமிய அரசு திகழவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான்.
 
 
இஸ்லாமிய அரசு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிறுவப்பட்டிருந்தபோதும், தன்னுடைய குடிமக்களின் விவகாரங்களை மேலாண்மை செய்தற்குரிய பொறுப்பை சுமந்து கொண்டிருந்த போதும், அதன் நிலப்பரப்பின் அளவையோ அல்லது அதன் குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையையோ அது அடித்தளமாக கருதுவதில்லை. எனினும் எல்லா காலகட்டங்களிலும் அதன் குடிமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக்கொண்டுதான் இருந்தது!
 
இனத்திலும் நிறத்திலும் மொழியிலும் வேறுபட்ட மக்கள் அதன் குடிமக்களாக விளங்கினார்கள். நிலப் பரப்பை பொருத்தவரை குறிப்பிட்ட பகுதிக்குள் கட்டுப்பட்டிருக்கும் வகையில் அது சுருங்கிய தாகவோ குறுகிய எல்லைகளை கொண்டதாகவோ இருக்கவில்லை மாறாக எப்போதும் அதன் எல்லைகள் விரிந்துகொண்டேயிருந்தது ஏனெனில் அது உலகளாவிய மகத்தான செய்தியை தன்னிடத்தே கொண்டுள்ளது! அதை முழு உலகிற்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் உலக மக்கள் அனைவரையும் அதன்பால் அழைக்கவேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு) ஹகட்டளையிட்டுள்ளான்!
 
வெள்ளையராக அல்லது கருப்பராக இருந்தபோதும், அரபுகளாக அரபல்லாதவர்களாக இருந்தபோதும், ஐரோப்பியர்களாக அமெரிக்கர்களாக ரஷ்யர்களாக இருந்தபோதும் அல்லாஹ்(சுபு)வுடைய மார்க்கத்தை தழுவிக்கொள்ளும் வகையில் அனைவருக்கும் இஸ்லாத்தின் செய்தியை எத்திவைக்க வேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான்! ஆகவே எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் இஸ்லாத்தின் அழைப்பிற்கு செவி சாய்த்து அல்லாஹ்(சுபு)வுடைய மார்க்கத்தில் இணைந்துவிட்டால் பிறகு அவர்கள் அனைவரும் இஸ்லாமிய அரசின் குடிமக்களில் ஒருபகுதியினராக ஆகிவிடுவார்கள், அவர்களின் நிலப்பரப்புகள் இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளாக ஆகிவிடும்! இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச்செல்லும் பொருட்டு எந்த நிலப்பரப்பை ஜிஹாது மூலமாக அரசு வெற்றிகொள்கிறதோ அதுவும் இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளின் ஒருபகுதியாகவும் அதன் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டதாகவும் ஆகிவிடும், அதன் மக்கள் இஸ்லாத்தை தழுவினாலும் தழுவாவிட்டாலும் சரியே!
 
 
எந்தவொரு புதிய அரசும் அது தோன்றியுள்ள புதிய சிந்தனையின் மீதுதான் நிலை கொண்டிருக்கிறது. வெற்றி கொள்ளப்பட்ட நிலப்பரப்பின் அதிகாரம் கைப்பற்றப்பட்டு ஆட்சி யதிகாரம் மாறும்போது அரசு தொடர்பான மக்களின் சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஏனெனில் சிந்தனை கருத்தாக்கங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மாற்றமடையும்போது அவை ஒருவருடைய நடத்தை பண்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அப்போது அவர் இந்த கருத்தாக்கங்களி னால் வடிவமைக்கப்படுகிறார். எனவே வாழ்வியல் தொடர்பான அவருடைய கண்ணோட்டம் மாறிவிடுகிறது, இதன்விளைவாக மற்ற மக்களுடன் கொண்டுள்ள உறவுகள் மற்றும் சுயநலம் சார்ந்த விருப்பங்கள் ஆகியவை தொடர்பான அவருடைய கண்ணோட்டமும் மாறிவிடுகிறது. மக்களின் விவகாரங்கள், அவர்களுக்கு மத்தியிலுள்ள உறவுகள், அவர்களுடைய நலன்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் பொருட்டுதான் எந்தவொரு ஆட்சியமைப்பும் நிறுவப்படுகிறது.
 
 
இரண்டாவது அகபா உடன்படிக்கையில் அன்ஸாரிகள் பைஆ அளித்தபின்னர் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவை அடைந்தார்கள். அகாபாவில் அளிக்கப்பட்டது பாதுகாப்பு, போர் மற்றும் மதீனாவின் ஆட்சியதிகாரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்குதல் ஆகியவை தொடர்பான பைஆ என்பதால் மதீனாவை அடைந்த உடனேயே இஸ்லாமிய அரசை நிறுவும் பணியை நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். இஸ்லாமிய அரசின் தோற்றம் என்பது இஸ்லாத்தின் புதிய அகீதாவும் நபி(ஸல்) அவர்கள் மீது ஈமான்கொண்டிருந்த மக்கள் ஏற்றுக்கொண்டிருந்த பல புதிய கருத்தாக்கங்களும் ஏற்படுத்திய விளைவுகளாகவே இருந்தது. இந்த கருத்தாக்கங்கள் நபி(ஸல்) அவர்களை பின்பற்றிய மக்களிடம் வாழ்வியல் பற்றிய புதியதோர் கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இதன்விளைவாக மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகள் மற்றும் சுயநலம் சார்ந்த விருப்பங்கள் ஆகியவை பற்றிய அவர்களுடைய கண்ணோட்டம் புதிய பரிமாணத்தை அடைந்திருந்தது.
 
 
சட்டவடிவங்கள் தொடர்பான வசனங்கள் அருளப்படாத நிலையில் இந்த அகீதாவின் அடிப்படையிலும் அதிலிருந்து தோன்றிய கருத்தாக்கங்களின் அடிப்படையிலும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். எனவே இஸ்லாமிய அரசு என்பது புதிய அகீதா மற்றும் அதிலிருந்து தோன்றிய பல புதிய சிந்தனைகள், கருத்தாக்கங்கள் ஆகிய வற்றின் மீது கட்டமைக்கப்பட்ட புதிய அரசாக விளங்கியது.
 
 
அதன் இயல்பிலும் கட்டமைப்பிலும் அதன் இலட்சியத்திலும் அதன் அடித்தளத்திலும் முற்றிலும் மாறுபட்ட தனித்தன்மை கொண்ட ஓர் அரசாக இஸ்லாமிய அரசு விளங்கியது. உலகில் நிலைபெற்றிருந்த மற்ற அனைத்து அரசுகளிலிருந்து இயல்பிலும் அமைப்பிலும் முழுமை யாக வேறுபட்ட ஓர் அரசாக திகழ்ந்தது. இஸ்லாமிய அரசு ‘லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் & வணங்கிவழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹுவை தவிர வேறில்லை; முஹம்மது(ஸல்) அவனுடைய தூதராக இருக்கிறார்’ என்ற இஸ்லாமிய அகீதாவின் அடித்தளத்தை ஆதாரமாக கொண்டு தோன்றிய அரசாக இருந்தது. இஸ்லாத்தின் அகீதா என்பது வாழ்வியல் பற்றிய முழுமையான சிந்தனையாகும், அதனடிப்படையிலும் அதிலிருந்து தோன்றியுள்ள சிந்தனைகள் மற்றும் கருத்தாக்கங்கள் அடிப்படையிலும் வாழ்வியல் தொடர் பான முஸ்லிம்களின் கண்ணோட்டம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த கண்ணோட்டம், வாழ்வு என்பது படைப்பாளன் ஒருவனால் படைக்கப்பட்டுள்ளது அந்த படைப்பாளனின் ஏவல், விலக்கல் கட்டளைகள் அடிப்படையில்தான் அது நடத்திச்செல்லப்படுகிறது என்ற நம்பிக்கை யின்பால் மனிதர்களை இட்டுச்செல்கிறது. முஸ்லிம்களை பொருத்தவரை, அல்லாஹ்(சுபு) ஒருவனை தவிர்த்து சட்டம் வழங்குவதற்கு எவருக்கும் அதிகாரமில்லை என்பதும் இந்த வாழ்க்கையிலும் இஸ்லாமிய அரசிலும் அல்லாஹ்(சுபு)வின் சட்டத்தை தவிர்த்து உம்மாவிற்கும் அல்லது மக்களுக்கும் அல்லது ஆட்சியாளருக்கும் அல்லது வேறு எதற்கும் இறையாண்மை (sovereingty) கிடையாது என்பதும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய உண்மையாக இருக்கிறது.
 
 
ஆகவே எந்தவொரு சட்டத்தை இயற்றுவதற்கும் அல்லது அல்லாஹ்(சுபு)  தன்னுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றிற்கு அந்நியமான ஹஎந்தவொரு செயலாக்க அமைப்பை (system) அல்லது விதிமுறையை உருவாக்குவதற்கும் உம்மாவிற்கோ அல்லது ஆட்சியாளருக்கோ அனுமதியில்லை. இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்படுகின்ற ஏதேனும் ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு உம்மா பொதுவான முறையில் ஒப்புதல் தெரிவித்தபோதும் அந்த ஒப்புதலுக்கு எத்தகைய மதிப்பும் கிடையாது. எனவே உதாரணமாக, வட்டி அடிப்படையிலுள்ள வரவுசெலவுகள் இல்லாமல் பொருளாதாரமும் வர்த்தகமும் செழிக்காது என்ற கருத்தில் வட்டியை சட்டரீதியாக ஆக்குவதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது தனிமனித சுதந்திரம் என்ற அடிப்படையில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகளை சட்ட ரீதியாக ஆக்குவதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது மனிதஉரிமை மீறல் என்ற அடிப்படையில் மார்க்கத்தை விட்டு வெளியேறியவரை கொலை செய்வதை தடைசெய்வதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது இஸ்லாமிய அரசு என்ற முறையில் இஸ்லாமிய அகீதாவிற்கு அப்பாற்பட்டு மற்றொரு அடிப்படை கோட்பாடு இருப்பதை அனுமதிப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது ஆட்சியதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பரம்பரை வாரிசுரிமை அளிப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் மதசார்பற்ற அரசியல் கட்சிகளை அமைப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும், பொதுக்கருத்து என்ற அடிப்படையில் இதுபோன்ற எத்தகைய விவகாரங்களுக்கு ஒப்புதல் அளித்தாலும் அவையனைத்திற்கும் எத்தகைய மதிப்பும் கிடையாது அவற்றிற்கு சட்டரீதியாக எத்தகைய அங்கீகாரமும் கிடையாது, ஏனெனில் அல்லாஹ்(சுபு) மட்டுமே சட்டம் வழங்கு பவனாக (Legislator) இருக்கிறான் என்ற முறையிலும் சட்டம் வழங்குவதற்குரிய அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்ற முறையிலும் ஹஇவை இஸ்லாமிய சட்டங்களுக்கும் ஷரீஆவின் இறையாண்மைக்கும் அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள ஈமானிற்கும் முரண்பாடாக இருக்கின்றன.
 
 
இஸ்லாமிய அகீதா இஸ்லாமிய அரசின் அடித்தளமாக விளங்குகிறது என்ற முறையில் மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டத்தை இயற்று வதற்கோ அல்லது அரசியல் சாஸனம் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட செயலாக்க அமைப்பு அல்லது அரசாணை ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதற்கோ அல்லது அல்லாஹ்(சுபு) அருளியவற்றுஹக்கு அந்நியமான சட்டங்கள் எதனையும் இஸ்லாமிய அரசின் நடைமுறைப் படுத்துதலில் கொண்டுவருதற்கோ ஆட்சியாளர்களாக இருந்தாலும் நீதிபதிகள், அறிவுஜீவிகள், அரசியல் மேதைகள், ஷூரா கவுன்ஸில் உறுப்பினர்கள், மஜ்லிஸுல் உம்மா உறுப்பினர்கள், அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய எவருக்கும் சட்டரீதியான எத்தகைய அதிகாரமும் கிடையாது! மேலும் அரசு விவகாரங்களை நடத்திச்செல்லும் பொருட்டு மக்களை நிர்பந்தம் செய்வதிலிருந்தும், மனிதர்கள் உருவாக்கிய செயலாக்க அமைப்புகளையும் சட்டங்களையும் பின்பற்றுவதற்கு மக்களுக்கு தேர்வுரிமையை அளிப்பதிலிருந்தும் ஆட்சியாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளார்கள்.
 
 
கலீஃபா தனது சட்டரீதியான அதிகாரத்தின் அடிப்படையில் அரசியல் சாஸனத்தை அல்லது செயலாக்க அமைப்பை (system) அல்லது சட்டத்தை ஏற்று அமல்படுத்தும்போது அவற்றை அல்லாஹ்(சுபு)வின் வேதம் மற்றும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா ஆகியவற்றிலிருந்து தனது இஜ்திஹாத் மூலமாக எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது முஸ்லிம் களிலுள்ள சட்டயியல் நிபுணர்கள் மற்றும் கற்றறிந்த அறிஞர்கள் ஆகியவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய அரசின் அரசியல் சாஸனம், அதன் செயலாக்க அமைப்புகள், மற்றும் சட்டங்கள் ஆகியவற்றை அல்லாஹ்(சுபு) தனது தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றிலிருந்து மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவதுஹ அல்லாஹ்(சுபு)வின் வேதம், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா மற்றும் அவற்றிலிருந்து பெறப்பட்ட கியாஸ் (anology) ஆகியவற்றிலிருந்தும் ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவுகளிலிருந்தும் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.
 
 
எனவே இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றியிராத சிந்தனைகள் எதையும் பாதுகாப்ப திலிருந்தும் அல்லது அதுபோன்ற கருத்தாக்கங்கள், சட்டங்கள், அரசியல் சாஸனங்கள், விதி முறைகள் அல்லது அளவுகோல்கள் ஆகியவற்றை பரிசீலிப்பதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது. அன்றியும் அல்லாஹ்(சுபு)வின் வேதம் மற்றும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா ஆகிவற்றிலிருந்து கொண்டுவரப்படாதவை மற்றும் சட்ட ரீதியான கியாஸ் அல்லது ஸஹாபாக்களின் ஒருமித்த முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டுவரப்படாதவை ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதிலிருந்தும் அது தடைசெய்யப் பட்டுள்ளது. எனவே ஜனநாயகத்தின் அடிப்படையிலுள்ள வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்வதிலிருந்தும் பன்முக நம்பிக்கைகள், முஸ்லிம்கள் பரம்பரை அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தை பெறுதல், மதச்சார்பின்மை கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளுதல் அல்லது பல்வேறு வகையான சுதந்திரங்கள் போன்ற ஜனநாயம் அழைப்புவிடுக்கும் ஆட்சியமைப்பு அம்சங்கள் எவற்றையும் ஏற்றுக்கொள்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது ஏனெனில் இவையனைத்தும் இஸ்லாமிய ஷரீஆவிற்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் முரணாக இருக்கின்றன. மேலும் தேசியவாதம், தேசப்பற்று, சுயஆட்சி போன்ற கருத்தாக்கங்களை பரிசீலனை செய்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது ஏனெனில் இந்த கருத்தாக்கங்கள் இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றவில்லை என்பதோடு இவை ஷரீஆ சட்டங்களுக்கு முரண்பாடாக இருக்கின்றன. அன்றியும் இவற்றை இஸ்லாமிய ஷரீஆ ஆழமாக வெறுக்கிறது என்ற முறையிலும் இவற்றை ஏற்று அமல்படுத்துவது குறித்து கடுமையாக எச்சரித்திருக்கிறது என்ற முறையிலும் இவை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. மன்னராட்சி, குடியரசு ஆட்சி, சர்வாதிகார ஆட்சி மற்றும் ஏகாதிபத்திய ஆட்சி போன்ற ஆட்சியமைப்பு தொடர்பான கருத்தாக்கங்களை ஏற்றுக்கொள்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப் பட்டுள்ளது, ஏனெனில் இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றவில்லை என்பதோடு இவை ஷரீஆவிலிருந்து எடுக்கப்படவில்லை என்ற அடிப்படையில் இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்பாடாக இருக்கின்றன.
 
 

No comments:

Post a Comment