இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று 
ஆட்சியாளர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான் 
என்பதால், இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஆட்சியாளர்கள் முழுமையான முறையிலும் 
எவ்வாறு அருளப்பட்டுள்ளதோ அதேமுறையிலும் நடைமுறைப்படுத்தவேண்டியது கட்டாயமாகும். 
ஏனெனில்
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
وَمَا آَتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا 
نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ 
الْعِقَابِ
அல்லாஹ்வின்தூதர்எவற்றைகொண்டுவந்துள்ளாரோஅவற்றைஎடுத்துக்கொள்ளுங்கள், 
அவர்எவற்றைவிட்டும்உங்களைதடுக்கிறாரோஅவற்றைவிட்டும்தவிர்ந்துகொள்ளுங்கள்இன்னும்அல்லாஹ்வைஅஞ்சிஹக்கொள்ளுங்கள், 
நிச்சயமாகஅல்லாஹ்தண்டனைஅளிப்பதில்கடுமையானவனாகஇருக்கிறான்ஹ   
(அல்ஹஷ்ர் : 7) 
இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘مَا’ என்ற அரபி 
வார்த்தை பொதுவான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே நபி(ஸல்) ஏவியுள்ள 
அனைத்து கட்டளைகளையும் ஏற்று செயல்படுத்தவேண்டும் என்பதும் அவர்கள்(ஸல்) 
தடைசெய்துள்ள அனைத்திலிருந்தும் விலகிக் கொள்ளவேண்டும் என்பதும் 
கட்டாயமாகும்(வாஜிபாகும்). இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ஏவல் மற்றும் விலக்கல் 
தொடர்பான வேண்டுகோள் திட்டவட்டமான கட்டளையாக உள்ளது ஏனெனில், இந்த வசனத்தின் 
இறுதியில் இடம்பெற்றுள்ள ‘அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுவந்துள்ளவற்றை 
ஏற்று செயல்படாதவர்களுக்கும் அவர்கள் (ஸல்) தடைசெய்துள்ள விஷயங்களிலிருந்து 
தவிர்ந்து கொள்ளாதவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு’ என்ற சொற்றொடர் இந்த கட்டளை 
திட்டவட்டமானது என்பதற்குரிய கரீனாவாக விளங்குகிறது.
மேலும் அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு 
தீர்ப்பளிக்கவேண்டும் என்று தனது தூதர்(ஸல்) அவர்களுக்கு அவன்(சுபு) 
கட்டளையிட்டுள்ளான்,
وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ 
اللَّهُ
      
               
அன்றியும்அல்லாஹ்அருளியவற்றைகொண்டுஅவர்கள்மத்தியில்தீர்ப்பளிப்பீராக 
(அல்மாயிதா : 49)
அல்லாஹ்(சுபு) அருளியுள்ளவை ஏவல்கள் என்றாலும் 
விலக்கல்கள் என்றாலும் அவை தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் மட்டுமே 
ஆட்சிசெய்யவேண்டும் என்ற இந்த கட்டளை அல்லாஹ்(சுபு) அவனுடைய தூதர்(ஸல்) 
அவர்களுக்கும் அவர்களுக்கு பின்னர் வருகின்ற அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் 
அளிக்கப்பட்ட திட்டவட்டமான கட்டளையாக உள்ளது, ஏனெனில் ‘مَا’ என்ற இந்த வார்த்தை 
பொதுவான அர்த்தம் கொண்டது என்பதால் அதில் அல்லாஹ்(சுபு) அருளிய அனைத்து சட்டங்களும் 
அடங்கும்.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களுக்கு 
பின்னர் ஆட்சியதிகாரத்தை பெற்றுள்ள அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களும் மக்களின் 
மனஇச்சைகளை பின்பற்று வதிலிருந்தும் அவர்களுடைய அபிலாஷைகளுக்கு 
கட்டுப்படுவதிலிருந்தும் தடைசெய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏனெனில் அல்லாஹ்(சுபு) 
கூறுகிறான்,
وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ 
أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ
அவர்களுடையமனஇச்சைகளைநீர்பின்பற்றாதிருப்பீராக!  
அல்லாஹ்அருளியசிலவற்றிலிருந்துஉம்மைதிருப்பிவிடாதவகையில்அவர்களிடம்ஹஎச்சரிக்கையுடன்இருந்துகொள்வீராக!   
(அல்மாயிதா : 49)
அல்லாஹ்(சுபு) அருளியவற்றில் சிலவற்றை 
நடைமுறைப்படுத்தும்போது மக்களின் களங்கமுற்ற கருத்தாக்கங்களுக்கு ஏற்ப 
நடந்துகொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களையும் அவர்களுக்கு பின்னர் வரும் முஸ்லிம் 
ஆட்சியாளர்களையும் அல்லாஹ்(சுபு) எச்சரிக்கை செய்கிறான். அல்லாஹ்(சுபு) 
அருளியவற்றுக்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்வது கூடும் என்றோ அல்லது 
அல்லாஹ்(சுபு) அருளியவை சட்டரீதியானதல்ல என்றோ ஒருவர் கருதினால் அவர் நிச்சயமாக 
காஃபிர் என்று அல்லாஹ்(சுபு) விவரித்துள்ளான்!
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ 
فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ
எவர்கள்அல்லாஹ்அருளியவற்றைகொண்டுதீர்ப்பளிக்கவில்லையோநிச்சயமாகஅவர்கள்காஃபிர்கள்ஆவார்கள் 
(அல்மாயிதா : 44)
அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை 
கொண்டு ஆட்சிசெய்வது கூடும்  என்று நம்பிக்கை கொள்ளாத நிலையில் ஒருவர் 
அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நிய மானவற்றை கொண்டு ஆட்சி செய்தால் அவர் ஃபாஸிக் 
(வெளிப்படையாக பாவம் செய்பவர்) என்றும் ழாளிம் (அநீதம் இழைப்பபவர்) என்றும் 
அல்லாஹ்(சுபு) விவரித்துள்ளான்.
இஸ்லாத்தின் சட்டங்களை 
நடைமுறைப்படுத்துவதை முழுமையாகவும் விரிவாகவும் ஒரே சமயத்திலும் 
மேற்கொள்ளவேண்டுமே ஒழிய படிப்படியாக மேற்கொள்ளக்கூடாது ஏனெனில் படிப்படியான 
நடைமுறைப்படுத்துதல் என்பது இஸ்லாமிய சட்டங்களுக்கு வெளிப்படையான முறையில் 
முரண்பாடாக இருக்கிறது. இஸ்லாமிய சட்டங்களின் சட்டரீதியான மதிப்பில் 
நம்பிக்கை கொள்ளாத நிலையில் அல்லது இஸ்லாமிய சட்டங்களில் குறிப்பிட்ட சிலவற்றின் 
சட்டரீதியான மதிப்பில் நம்பிக்கை கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ்(சுபு) அருளிய 
அனைத்து சட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அல்லது சில சட்டங்களை 
நடைமுறைப்படுத்திவிட்டு மற்ற சில சட்டங்களை புறக்கணித்துவிட்டார் என்றால் அவர் 
காஃபிர் என்றே கருதப்படுவார். இஸ்லாத்தின் சட்டங்களில் நம்பிக்கை கொண்டிருக்கும் 
நிலையில் அவற்றை ஒருவர் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அவர் பாவியாகவும் மாறு 
செய்தவராகவும் கருதப்படுவார்.
எனவே ஷரீஆ சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் 
அலட்சியம்காட்டவும் கூடாது, சட்டங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்தவும் கூடாது, 
ஏனெனில் குறிப்பிட்ட ஒரு வாஜிபிற்கும் மற்றொரு வாஜிபிற்கும் இடையிலும், குறிப்பிட்ட 
ஒரு விலக்கலுக்கும் மற்றொரு விலக்கலுக்கும் இடையிலும், குறிப்பிட்ட ஒரு 
சட்டத்திற்கும் மற்றொரு சட்டத்திற்கும் இடையிலும் எத்தகைய வேறுபாடுகளும் கிடையாது! 
அல்லாஹ்(சுபு)வின் சட்டங்கள் அனைத்தும் சமமானவையாகும், எத்தகைய தாமதமோ அல்லது 
தள்ளிப்போடுதலோ அல்லது படிப்படியான நடைமுறைப்படுத்துதலோ எதுவுமின்றி அவையனைத்தையும் 
ஒரேநேரத்தில் முழுமையாகவும் விரிவாகவும் உடனடியாகவும் நடைமுறைப்படுத்தவேண்டும், 
இதற்கு மாறுபாடான முறையில் செயல்படுபவர் கீழ்க்கண்ட அல்லாஹ்(சுபு)வின் வார்த்தையின் 
அடிப்படையில் தண்டனைக்குரியவராகவே கருதப்படுவார்!
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ 
وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ 
فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ 
الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
ஆகவேவேதத்தில்சிலவற்றில்ஈமான்கொண்டுசிலவற்றைநீங்கள்நிராகரிக்கிறீர்களா! 
இவ்வாறுசெய்பவர்களுக்குஇம்மையில்இழிவைதவிரவேறொன்றுமில்லை. 
அன்றியும்மறுமையிலோகொடியவேதனையின்பால்அவர்கள்திருப்பப்படுவார்கள்! 
நிச்சயமாகநீங்கள்செய்பவைகுறித்துஅல்லாஹ்பாராமுகமாகஇல்லை 
(அல்பகரா : 85)
ஆகவே இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 
ஆற்றலில்லை அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சூழல் ஏற்படவில்லை அல்லது 
ஷரீஆவை நடை முறைப்படுத்துவதற்கு உலகமக்களின் வெகுஜனக்கருத்து எதிராக உள்ளது அல்லது 
இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வல்லரசு நாடுகள் அனுமதிக்காது அல்லது 
இது போன்ற அற்பமான மதிப்பற்ற சாக்குப்போக்குகள் அடிப்படையில் இஸ்லாத்தின் சட்டங்களை 
நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இஸ்லாமிய அரசு மனிதர்களை கொண்டுள்ள அரசாக உள்ளதே 
ஒழிய (தெய்வீகம் பொருந்திய) புனிதமான அரசல்ல; அதை நடத்திச்செல்லும் கலீஃபா அல்லது 
இமாம் மனிதராக இருக்கிறார் என்பதால் அவர் புனிதமானவராகவோ அல்லது மாசற்றவராகவோ 
(மஃஸும்) இருப்பதற்கு சாத்தியமில்லை. அவரை உம்மா நியமனம் செய்கிறதே ஒழிய அல்லாஹ் 
(சுபு) நியமனம் செய்வதில்லை ஏனெனில் ஆட்சியதிகாரத்தை அவன்(சுபு) உம்மாவுக்கு 
அளித்திருக்கிறான், எனவே உம்மாவின் சார்பில் கலீஃபா ஆட்சிசெய்யும் பொருட்டு பைஆ 
மூலமாக அவரை நியமனம் செய்யும் அதிகாரத்தை அல்லாஹ்(சுபு) உம்மாவிற்கேஹ அளித்து 
உள்ளான். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்(ரளி) அறிவித்திருப்பதாவது : 
நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன், ‘கைகளால் கைலாகு அளிப்பதின் 
மூலமும் இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதின் மூலமும் எவரேனும் ஒருவர் ஓர் இமாமுக்கு 
பைஆ அளித்தால் பிறகு இயன்றவரையில் அவர் அவருக்கு கட்டுப்பட்டு 
நடக்கவேண்டும்’ அப்துல்லாஹ் இப்னு உமர்(ரளி) அறிவித்திருப்பதாவது : 
‘நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிற்றுள்ளேன், ‘எவரேனும் தமது கழுத்தில் 
கலீஃபாவின் பைஆ இல்லாத நிலையில் மரண மடைந்தால் பிறகு அவருடைய மரணம் ஜாஹிலிய்யா 
(அறியாமை காலத்து) மரணமாகும்’ உம்மாவின் சார்பாக கலீஃபா ஷரீஆ சட்டங்களை 
நடைமுறைப்படுத்துகிறார், எனவே கலீஃபா பதவிக்கு நியமிக்கப்படும் நபரிடம் அவருக்குரிய 
ஆட்சியதிகாரம் தொடர்பான சட்டரீதியான அதிகாரங்களை அளிக்கவேண்டியது கட்டாயமாகும், 
தனது அபிப்ராயத்தின் அடிப்படையில் செயலாக்க அமைப்புகள், சட்டங்கள், விதிமுறைகள் 
ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதற்கு அவருக்கு உரிமையுண்டு. கலீஃபா பதவியை 
ஏற்றுக்கொள்ளும் நபர் மனிதராகவே இருக்கிறார், எனவே அவர் தவறிழைப்பதற்கும் 
ஞாபகமறதிக்கு உட்படுவதற்கும் பொய்யுரைப்பதற்கும் துரேகம் இழைப்பதற்கும் அல்லது 
மக்களுக்கு எதிராக கலகம் செய்வதற்கும் சாத்தியம் இருக்கிறது, அவர் பாவம் 
செய்வதிலிருந்து பாதுகாக்கப்படும் வகையில் மாசற்றவராக இல்லை ஏனெனில் மாசற்ற நிலை 
என்பது முற்றிலும் நபிமார்களுக்கும் இறைத்தூதர்களுக்கும் மட்டுமே உரியதாகும்.
கலீஃபாவாக இருக்கும் இமாம் தவறு செய்யக்கூடும் 
என்றும் அவர் அநீதம் இழைப் பராகவோ அல்லது பாவம் செய்பவராகவோ இருக்கக்கூடும் என்றும் 
அதன்காரணமாக மக்கள் அவரை வெறுக்கவும் சபிக்கவும் கூடும் என்றும் 
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நமக்கு அறிவித்து கொடுத்துள்ளார்கள். மேலும் கலீஃபா 
வெளிப்படையான குஃப்ர் செயல்பாடுகளை மேற் கொள்ளக்கூடும் என்பதையும் அவர்கள்(ஸல்) 
நமக்கு அறிவித்துள்ளார்கள். இந்த தகவல்கள் அனைத்தும் இமாம் அல்லது கலீஃபா மாசற்ற 
நிலையில் தூய்மையானவராக இருக்கிறார் என்பதுடன் முரண்படுகின்றன என்பதோடு அவர் பாவம் 
செய்வதிலிருந்து பரிசுத்தமானவராக இருக்கிறார் என்பதையும் மறுக்கின்றன. நபி(ஸல்) 
அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்துள்ள ஹதீஸ் முஸ்லிமில் 
பதிவுசெய்யப்பட்டுள்ளது, அதில் கூறப்பட்டிருப்பதாவது ‘அறிந்துகொள்ளுங்கள்! 
இமாம் என்பவர் கேடமாகும், அவருக்கு பின்னால் நின்று மக்கள் போரிடுவார்கள், அவரை 
கொண்டே தங்களை பாதுகாத்து கொள்வார்கள்’ நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ஃப் 
இப்னு மாலிக்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸ் முஸ்லிமில் பதிவு செய்யப் பட்டுள்ளது, அதில் 
கூறப்பட்டிருப்பதாவது : ‘உங்களுடைய இமாம்களில் சிறந்தவர் யார் எனில் 
நீங்கள் அவரை நேசிப்பீர்கள் அவரும் உங்களை நேசிப்பார்; நீங்கள் அவருக்காக துஆ 
செய்வீர்கள் அவரும் உங்களுக்காக துஆ செய்வார். உங்களுடைய இமாம்களில் மோசமானவர் யார் 
எனில் நீங்கள் அவரை வெறுப்பீர்கள் அவரும் உங்களை வெறுப்பார்; நீங்கள் அவரை 
சபிப்பீர்கள் அவரும் உங்களை சபிப்பார்’ உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) 
அறிவித்ததாக புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது : 
‘நபி(ஸல்) அவர்கள் எங்களை (பைஆ செய்வதற்கு) அழைத்தார்கள் எனவே நாங்கள் 
அவர்களிடம் பைஆ செய்தோம். ‘இன்பத்திலும் துன்பத்திலும் இலகுவிலும் கஷ்டத்திலும் 
நாங்கள் முழுமையாக கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரத்தை பெற்றுள்ளவர்களுடன் 
சர்ச்சை செய்ய மாட்டோம் என்றும் ‘அல்லாஹ்(சுபு)விடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் 
அடிப்படையில் வெளிப்படையான குஃப்ரை கண்டால் ஒழிய’ என்று நபி(ஸல்) 
அவர்கள் கூறினார்கள்  பைஆ செய்தோம்’ இமாம் அல்லது கலீஃபா தவறு 
செய்யக்கூடும் என்பதற்கும் பாவம் செய்யக்கூடும் என்பதற்கும் இந்த ஹதீஸ்கள் தெளிவான 
ஆதாரங்களாக விளங்குகின்றன என்ற முறையில் இமாம் அல்லது கலீஃபா மாசற்றவராக 
(infallible) இல்லை என்பதை அவை சுட்டிக்காட்டுகின்றன.
ஆகவே முஸ்லிம்கள் ஆட்சியாளரை தட்டிக்கேட்கவேண்டும் 
என்று அல்லாஹ்(சுபு) ஹகட்டளையிட்டுள்ளான் என்பதால் இது அவர்களுடைய உரிமையாக 
இருக்கிறது ஏனெனில் ஆட்சியாளர் ஆட்சியதிகாரத்தில் மக்களின் பிரதிநிதியாகவும் 
அதிகாரம் பெற்றவராகவும் இருந்தபோதும், மக்கள் அவரை பதவியில் அமர்த்துகிறார்கள் 
என்றபோதும் அவர் தவறு செய்யக்கூடும் என்பதாலும் பாவம் செய்பவராகவும் குஃப்ர் 
செயல்பாடுகளை மேற்கொள்ப வராகவும் இருக்கக்கூடும் என்பதாலும் அவர் புனிதமானவராக 
இருப்பதற்கோ அல்லது பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படும் வகையில் மாசற்றவராக 
இருப்பதற்கோ சாத்தியமில்லை.
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى 
الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ 
هُمُ الْمُفْلِحُونَ                           
(ஈமான்கொண்டவர்களே!) 
உங்களிலிருந்துஒருகூட்டத்தினர்சிறந்தவற்றின்பால்அழைப்பவர்களாகவும்நன்மையைஏவிதீமையைதடுப்பவர்களாகவும்இருக்கவேண்டும், 
நிச்சயமாகஅவர்கள்தான்வெற்றியாளர்கள்  
(ஆலஇம்ரான் : 104)
 ‘சிறந்த ஜிஹாது எது’ 
என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, 
‘கொடுங்கோல்ஆட்சியாளரிடம்சத்தியத்தைஉரைப்பதுதான்சிறந்தஜிஹாதாகும்!’ 
என்று கூறினார்கள். மேலும் அவர்கள்(ஸல்) கூறியதாவது, ‘ஹம்ஸா இப்னு அப்துல் 
முத்தலிபும்(ரளி) கொடுங்கோல் இமாம் முன்பாக நின்றுகொண்டு நன்மையை ஏவி தீமையை 
தடுத்து அதன்காரணமாக கொலை செய்யப்பட்ட மனிதரும் ஷுஹாதாவின் தலைவர் 
ஆவார்கள்’ அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரளி) அறிவித்து ஸுனன் அபூதாவூதில் 
பதிவுசெய்யப்பட்ட ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது : நபி(ஸல்) அவர்கள் 
கூறினார்கள், ‘அல்லாஹ்வின்மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்கவேண்டும். 
அன்றியும் அநீதம் இழைப்பவரின் கைகளை நீங்கள் தடுத்து நிறுத்தவேண்டும்; (தீமை 
செய்வதிலிருந்து) அவரை தடுத்து சத்தியத்தின்பால் செலுத்தவேண்டும்’ இப்னு 
மஸ்வூது(ரளி) அறிவித்துள்ள மற்றொரு ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக 
அறிவிக்கப்பட்டிருப்பதாவது : ‘இல்லாவிடில் (பரஸ்ப்பர) பகைமையை கொண்டு 
அல்லாஹ் உங்களுடைய இதயங்களில் அடிப்பான்; அவர்களை சபித்ததுபோல் உங்களையும் 
சபிப்பான்!’
சில தருணங்களில் நாவைக்கொண்டு ஆட்சியாளர்களை 
தடுப்பதற்கு அப்பாற்பட்டு ஆயுத போராட்டம் மேற்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் நமக்கு 
கட்டளையிட்டுள்ளது, கலீஃபா வெளிப்படையான குஃப்ர் செயல்பாடுகளை மேற்கொள்ளும் 
பட்சத்தில் பின்வரும் ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது போல் அவருக்கு எதிராக 
ஆயுதமேந்தி போர் செய்யவேண்டும் என்று அது நமக்கு கட்டளையிட்டுள்ளது, 
உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) அறிவித்திருப்பதாவது : 
அல்லாஹ்விடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படையான 
குஃப்ரை அவர் மேற்கொள்ளாத வரையில் அதிகாரம் பெற்றுள்ளவர்களிடம் நாங்கள் சர்ச்சை 
செய்யமாட்டோம் (என்று பைஆ செய்தோம்)’
முஸ்லிம் சகோதரர்களே!
இதுதான் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து 
நிறுவவேண்டும் என்று அல்லாஹ் (சுபு) கட்டளையிட்டுள்ள இஸ்லாமிய அரசாகும்! 
நபித்துவத்தின் அடிச்சுவட்டின்மீது ‘கிலாஃபா ராஷிதாவை’ நிறுவும் 
பொருட்டும், ‘அதன்பின்னர் நபித்துவத்தின் வழிமுறையில் மீண்டும் கிலாஃபா 
ராஷிதா ஏற்படும்’ என்ற அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களின் நற்செய்தியை 
உண்மைப்படுத்தும் பொருட்டும் எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு உங்களுக்கு அழைப்பு 
விடுக்கிறோம்!
No comments:
Post a Comment