மீண்டும் ஒருமுறை பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரயீல் போரை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது!

நமது பொறுப்பு என்ன?
 
 
 

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
 
 நிச்சயமாக நாம் நம்முடைய தூதருக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் உதவி செய்வோம் சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்! (அல்மூஃமின் : 51)

 
 அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
 
உண்ணுதல் நிமித்தம் மக்கள் ஒன்றுகூடுவது போலவே (பல்வேறு) சமுதாயத்து மக்கள் உங்களுக்கு எதிராக வெகுவிரைவில் ஒன்றுகூடுவார்கள்!  ‘அந்நாட்களில் நாங்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதின் காரணமாகவா?’ என்று வினவப்பட்டது. ‘இல்லை! அந்நாட்களில் நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பீர்கள்! எனினும் கடல் நுரையை போன்று (பலவீனமாக) இருப்பீர்கள்! அல்லாஹ்(சுபு) உங்களை பற்றிய அச்சத்தை உங்கள் எதிரிகளிடமிருந்து அகற்றிவிட்டு உங்கள் இதயங்களில் வஹ்னை போட்டு விடுவான்!’ என்று கூறினார்கள். ‘அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களே! வஹ்ன் என்றால் என்ன?’ என்று வினவப்பட்டது. ‘உலக வாழ்க்கையின் மீதுள்ள (ஆழமான) விருப்பம் மற்றும் மரணத்தின் மீதுள்ள (கடுமையான) வெறுப்பு!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (நூல் : அஹ்மது, அபூதாவூது)
 
பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு எதிராக பல வாரங்கள் நிகழ்த்தப்பட்டுவரும் போரில் இஸ்ரேலிய படைகள் ஆண்களையும் பெண்களையும் முதியவர்களையும் இளைஞர்களையும் குழந்தை களையும் எத்தகைய வேறுபாடுகளுமின்றி பட்டப்பகலில் கொன்று குவித்துவருகிறது! கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக புனித மண்ணை ஆக்கிரமித்துள்ள நிலையில் முஸ்லிம்களை மிருகத்தனமான கொடுமைகளுக்கு உள்ளாக்குவதில் இஸ்ரேலிய அரசு எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை!
 
முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் ஒன்றபின் ஒன்றாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன! குறிப்பாக பாலஸ்தீன மக்களின் நிலை குறித்து ரசூலுல்லாஹ்வின் இந்த சமுதாயம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளது!
 
 பாலஸ்தீனம் என்றால் என்ன? இஸ்லாத்தில் அதற்கு என்ன முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது?
பாலஸ்தீனம் என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகவும் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் வின்வெளி பயணத்திற்கு உயர்ந்துசென்ற புனித பூமியாகவும் திகழ்கிறது!
 
 அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
(அல்லாஹ்) மிகவும் பரிசுத்தமானவன்! அவன் (முஹம்மது ஸல் எனும்) தனது அடியாரை (கஃபா எனும்) மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து (தொலைதூரத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் எனும்) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓர்இரவில் அழைத்துச்சென்றான்! நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிக்கும் பொருட்டு அதனை சூழவுள்ள பகுதிகளை நாம் செழிபுற்று அபிவிருத்தி அடையச்செய்துள்ளோம். நிச்சயமாக அவன் நன்கு செவியுறு பவனாகவும் (அடியார்களை) உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்  (அல்இஸ்ரா : 1)                                                  

 
அன்றியும் பாலஸ்தீன பூமி முஸ்லிம்களின் மூன்றாது புனித ஸ்தலமாகவும் விளங்குகிறது!

 
 நபி(ஸல்) அவர்கள் கூறியதை செவியுற்றதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது,
மூன்று மஸ்ஜிதுகளை தவிர்த்து வேறெதற்கும் (புனித)பயணம் மேற்கொள்ள வேண்டாம்! அவையாவன : எனது மஸ்ஜித் (மஸ்ஜித் அந்நபவி); மஸ்ஜிதுல் ஹரம் (கஃபா); மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) ஆகியவையாகும் (நூல் : முஸ்லிம் # 007 ஹதீஸ் எண் #  3218)
 
முஸ்லிம்களின் இத்தகைய புனித பூமியில்தான் இஸ்ரேலிய படைகள் அட்டூழியம் புரிந்து வருகின்றன! மிருகங்கள் புரிந்திடாத கொடிய செயல்களை யூதவெறியர்கள் நிகழ்த்தி வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் இளம் சிறுமிகளை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை! கல்விகற்க செல்லும் அவர்களை சோதணையிடுதல் என்ற சாக்கில் இடைமறித்து இஸ்ரேலிய இராணுவம் இழிவுபடுத்துவதோடு பகிரங்கமாக சுட்டிக்கொல்கிறது. இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன!

 
முஹம்மது(ஸல்) அவர்களின் சமுதாயத்தின் அங்கமாக இருப்பவர்கள் என்ற முறையில் நமது சகோர சகோரிகளுக்கு எதிராக இழைக்கப்படும் இந்த வன்கொடுமை குறித்து கவலை கொள்ள வேண்டியதும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியதும் அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதும் நம்மீது கட்டாயக்கடமையாக இருக்கிறது.

 
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ஒருவருக்கொருவர் பேணவேண்டிய நேசத்திலும் இரக்கத்திலும் கருணையிலும் மூஃமின்கள் (மனித) உடலுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்!‎காலில் ஒருகாயம் ஏற்பட்டால் முழு உடலும் காய்ச்சலுக்கு உட்பட்டு உறக்கமின்மை ஏற்படுகிறது (நூல் : முஸ்லிம்)

 
இக்காலகட்டத்தின் குறிப்பிட்ட வரலாற்று பாங்கின் பின்னணியில் தோன்றியுள்ள முஸ்லிம் உலகத்தின் இன்றைய தலைவர்கள் அப்பாவி முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற தங்கள் கடமையை பற்றிய எத்தகைய தார்மீக உணர்வையும் பெற்றிருக்கவில்லை! போஸ்னியா, மியான்மர், சிரியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் இதுதான் எதார்த்த நிலையாக இருக்கிறது. முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக மேற்கத்திய அரசுகள் கட்டவிழ்த்துவிடும் அக்கிரம செயல்களை தடுப்பதற்குரிய அரசியல் துணிவு இல்லாத அவர்களின் நிலை மேற்கத்தியர்களுக்கு அவர்கள் அடிமைப்பட்டுள்ளதை பறைசாற்றுகிறது! சர்வதேச முஸ்லிம்களை பொறுத்த சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் அவர்கள் ஆழமாக பிளவுபட்டிருக்கிறார்கள் என்பதையும் முஸ்லிம் நிலப்பரப்புகளை ஆட்சிசெய்து கொண்டிருக்கும் கொடுங்கோலர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கு துணிவில்லை என்பதையும் அது பறைசாற்றுகிறது!

 
 முஸ்லிம் சகோதர சகோதரிகளே!
முஸ்லிம் உலகம் ஆபத்தான பெருந்துயரத்தில் வீழ்ந்துகிடக்கும் இவ்வேளையில் உங்கள் இல்லங்களில் அமர்ந்துகொண்டு தொலைக்காட்சிகளை பார்த்து முஸ்லிம்களின் நிலை குறித்து வருந்திக்கொண்டிருப்பதில் எத்தகைய பயனும் விளையப்போவதில்லை! மாறாக, நாம் எந்த நிலப்பரப்பில் இருந்தபோதும் ஒன்றிணைந்து இந்த பாதகமான நிலையை மாற்றுவதற்கு வழிவகை காணவேண்டும்!

 
ஒரு தலைமைக்கும் மனித இனம் முழுமைக்கும் நீதி வழங்குவதற்கு திறன்பெற்ற ஓர் அரசியல் கட்டமைப்பிற்கும் கீழ் முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபடுவது மட்டுமே இதற்குரிய தீர்வாகும். மேற்கத்தியர்களின் அத்துமீறல்களுக்கும், நமது சகோதர சகோதரிகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், மாண்புமிக்க இஸ்லாமிய மண்ணில் காலனியாதிக்கவாதிகள் ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்புகளுக்கும், நமது வாழ்க்கை முறையில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கும், நமது அனைத்து பிரச்சினைகளுக்கும் இதுமட்டுமே ஒரே தீர்வாக இருக்கும்! நமது கரங்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய அரசியல் கட்டமைப்பு என்ற கிலாஃபா ராஷிதாவை மீண்டும் மறுநிர்மாணம் செய்வதற்கு அழைப்புவிடுப்பது மட்டுமே முஸ்லிம்களின் இந்த அவலநிலையை போக்குவதற்குரிய ஒரே வழியாக இருக்கிறது! கிலாஃபா அரசால் மட்டுமே முஸ்லிம்கள் இரத்தம் சிந்துவதையும் திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாவதையும் தடுத்துநிறுத்த இயலும்!

 
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
இமாம் என்பவர் கேடயமாவார்! (முஸ்லிம்களாகிய நீங்கள்) அவருக்கு பின்நின்று போரிடுகிறீர்கள், அவரை கொண்டே பாதுகாப்பு அடைகிறீர்கள் (நூல் : முஸ்லிம்)

 
சுதந்திரமாகவும் நீதமாகவும் மேற்கத்திய ஆதிக்கத்தின் அடிமைத்தளைக்கு உட்படாமலும் செயலாற்றுவதற்கு திறன் பெற்றுள்ள கிலாஃபா ராஷிதாவின் தலைவரான கலீஃபாவின் இராணுவம் முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்படும் நிலையில் செயலற்று நின்றிருக்காது!‎‎‎‎‎ கலீஃபா உஸ்மானின்(ரளி) ஆட்சிக்காலத்தில் இவ்வாறுதான் நிகழ்ந்தது. பைசாந்திய (ரோமானிய) சஸானிய (பாரசீக) வல்லரசுகளின் அடிமைத்தளையில் சிக்குண்டு பெரும் கொடுமைகளுக்கு உட்பட்டிருந்த வடஆப்பிரிக்க நிலப்பரப்புகளை விடுவிப்பதற்கு முஸ்லிம் உலகத்தின் மாபெரும் வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி உஸ்மான்(ரளி) போரிட்டார்! முஸ்லிம் உலகத்தில் கிலாஃபா ராஷிதாவை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும், அது ஒட்டுமொத்த உலகத்திலும் அடக்குமுறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் உட்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சரணாலயமாக விளங்கும்!

 
இதை சாத்தியமாக்க வேண்டுமெனில் நம்மை பாதிக்கும் விவகாரங்கள் பற்றிய அறிவை நாம் அதிகரித்துக்கொள்ள வேண்டும், நம்மைச்சுற்றி நிகழும் சம்பவங்கள் பற்றிய விழிப்புணர்வை பெற்றுக்கொள்ளவேண்டும், இஸ்லாத்தின் எதிரிகள் முன்வைக்கும் தர்க்க வாதங்கள் பற்றியும் அவற்றிற்குரிய மறுப்புரைகள் பற்றியும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். தீனுடைய அனைத்து விஷயங்களின் கருத்தாக்கங்கள் மற்றும் அவற்றை நடைமுறையில் பின்பற்றுவது குறித்த தெளிவான விளங்கிக்கொள்ளுதல் ஆகியவற்றை நாம் பெற்றிருக்க வேண்டும்.

 
இந்த நோக்கத்தை நிறைவுசெய்வதற்குரிய திறன்கள் அனைத்தையும் நாம் பிரயோகிக்க வேண்டும். இதன்பொருட்டு வன்முறையற்ற ஆர்பாட்டங்களை மேற்கொள்ளவேண்டும், முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சம்பவங்கள் குறித்து ஊடகங்களுக்கு விபரமாக எழுதவேண்டும், நமது குரல்களை பதிவுசெய்வதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். இஸ்லாத்தை இழிவுபடுத்தும் அவர்களுடைய தீய செயல்பாடுகளை தடுக்கும் வண்ணம் அரசுகளின் மீது நாம் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்! இஸ்லாத்தின் தூதுவர்கள் என்ற முறையில் நாம் நமது நிலை குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும்! ஷரீஆ சட்டங்களுக்கு முரண்படாத வகையில் நாம் நமது செயல்பாடுகளை வன்முறையற்ற வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும்.

 
எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அல்லாஹ்(சுபு)விடம் துஆ மேற்கொள்ளவேண்டும், அவனுடைய நேசத்திற்குரிய தூதர்(ஸல்) அவர்களின் சமுதாயத்தின் மீது கருணையையும் சாந்தியையும் நல்கவேண்டும் என்று எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு)விடம் பிரார்த்திக்க வேண்டும். இந்த உலகவாழ்க்கையில் இஸ்லாமிய தீனை நிலைநிறுத்துவதற்கு அவன் முஸ்லிம் உம்மாவிற்கு பலத்தையும் கண்ணியத்தையும் அளிப்பானாக!

 
இந்த பிரச்சாரம் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கும் முஸ்லிம்களுக்கு எதிராக கொடுங்கோண்மை மிக்க இஸ்ரேலிய யூதவெறியர்கள் மேற்கொண்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிராக உங்கள் குரல்களை பதிவுசெய்வதற்கும் கீழ்க்கண்ட இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்,


 
Facebook  : https://www.facebook.com/vaomuslims
Twitter : https://twitter.com/vaomuslims
உங்கள் கருத்துக்களை மின்னஞ்கல் மூலம் பதிவுசெய்யவும்‎‎ ‎‎‎‎‎  – mif.sindhanai@gmail.com