சவுதி அரேபியா காய்ந்து வருகிறது

செய்தி பார்வை 17.02.16


 
 
தலைப்பு செய்திகள்:

இங்கிலாந்தின் மத்திய கிழக்கின் தடுமாற்றம்
 
சவுதி அரேபியா காய்ந்து வருகிறது
 
சிரியாவிலுள்ள மருத்துவமனைகளை தாக்கியது ரஷ்யா
 
 
இங்கிலாந்தின் மத்திய கிழக்கின் தடுமாற்றம்
 
பிப்ரவரி 15ம் தேதி திங்கட்கிழமை, இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் பிலிப் ஹேமண்ட் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அச்சுறுத்தலை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் அல்லது அவர்களுடைய மஸ்ஜித்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சிறைகளில் நடப்பது என்ன என்பது பற்றி குருட்டுத்தனமாக இருக்கின்றனர் என இஸ்லாமிய நாடுகள் மீது குற்றம் சாட்டினார். மேலும் அவர் (மேற்கினது ஆதரவு பெற்ற) முஸ்லம் தலைவர்கள் தங்களது ஆக்ரோஷமான திட்டங்களை கொண்டு குடிமக்களை சிறை பிடிப்பதை விமர்சித்து  ”சில சமயம் மக்களை சிறை வைப்பது நல்ல விஷயம் தான், ஆனால் இவ்வாறு சிறை வைப்பது மக்களை சிந்திப்பதில் இருந்து தடுத்து நிறுத்த போவதில்லை மாறாக பல மக்களை இந்த அடிப்படைவாத சிந்தனையை நோக்கிய ஈர்ப்பை பலமடைய செய்யும்.” என கூறினார். அவருடைய பேச்சின் முடிவாக இங்கிலாந்தின் அடிப்படைவாத்த்திற்கு எதிரான கொள்கைகளை பாராட்டி பேசி மற்ற அரசியல் தலைவர்கள் இந்த கொள்கையை உதாரணமாக எடுத்து செயல்பட கோரிக்கை விடுத்து அவர் பேச்சை முடித்து கொண்டார். இஸ்லாமிய அரசியல் சிந்தனையை ஒடுக்கும் விதமான இந்த கொள்கையை சமீப காலமாக பல வழிகளில் செயல்படுத்தும் காரியங்கள் முடுக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் குழந்தைகளை அச்சுறுத்துவது, குழந்தைகளை பற்றி அரசு அதிகாரிகளிடம் புகார் அளிப்பது மற்றும் மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் பள்ளிக்குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் வேவு பார்க்க தூண்டுவது இது போன்றவை அந்த திட்டங்களில் சில. மத்திய கிழக்கு நாடுகள் அரபு வசந்தத்திற்கு பிறகு மீண்டும் சாதாரண நிலைக்கு வந்து கொண்டிருக்கும் வேலையில் அல்லது சிரியா போன்று தனது எதிர்காலத்தை தீர்மாணிக்க முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் வேலையில், இஸ்லாமிய உணர்ச்சிகள் அதிகரித்து வருவது மேற்குலக நாடுகளுக்கு தங்களது கைப்பாவைகளை அங்கு நிலை திறுத்துவதற்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.  மேற்குலகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என்றால் அழுத்தத்தை கொடுத்தால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்துள்ளன, எனவே ஒரு புதிய மதசார்பற்ற அரபுகளை உருவாக்க அரபு நாடுகளில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு இருந்தாலும் இந்த திட்டங்கள் உள்நாட்டில் தோல்வியை தழுவினதை போன்று மத்திய கிழக்கிலும் தோல்வியை கவ்வும் என்பதில் சந்தேகமில்லை.
 
சவுதி அரேபியா காய்ந்து வருகிறது
 
பிப்ரவரி 16ம் தேதி செவ்வாய் கிழமையன்று, சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் மற்ற எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் எண்ணை உற்பத்தியை நிறுத்தி கொண்டால் தாங்களும் எண்ணை உற்பத்தியை நிறுத்தி கொள்வதாக அறிவித்தன. எனினும் ஈரான் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்பது ஒரு மிகப்பெரிய பின்னடைவு, அதற்கு காரணம் ஈரான் மீதிருந்த சர்வதேச தடை சமீபத்தில் தான் நீக்கப்பட்டுள்ளது அதனால் சர்வதேச சந்தை அதற்கு திறந்து விடப்பட்ட காரணத்தால் அதன் எண்ணை உற்பத்தி அதிகரிக்க கூடும். எனினும் இந்த பேச்சுவார்த்தை ஈரான் மீதிருந்த தடை நீக்கம் செய்யப்படுவதற்கு முன் நடைபெற்று இருந்தால் சரியாக இருந்திருக்கும், இருப்பினும் ஈரானை சேர்க்காமலே தற்போதைய சர்வதேச எண்ணை விநியோகம் அதிகரித்து இருக்கின்ற காரணத்தால் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவத்தை இழந்துள்ளது. இந்த உபயோகமற்ற ஒப்பந்தம் எண்ணை விலையில் எதிரொலித்திருக்கின்றது, இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பினால் LCOcl பாரல் ஒன்று 35.55 டாலருக்கு உயர்ந்துள்ளது ஆனால், இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் விலை 34 டாலருக்கு குறைந்துள்ளது. ஈரான் தன்னுடைய உற்பத்தி திறனை விட குறைவாக தற்போது ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பாரல்கள் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது, ஆகையால் ஈரானுக்குள் எண்ணை உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது இதன் காரணமாக மேலும் விலை குறைக்கக்கூடிய நிலையை உருவாக்கும். எவ்வாறு இருப்பினும் எண்ணை விலைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் 98 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை பட்ஜெட் கொண்ட சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தின் பாதிப்பினை சரி செய்ய இது சிரிய அளவில் தான் உதவும்.
 
சிரியா மருத்துவமனைகளை தாக்கியது ரஷ்யா
 
பஷார் அல்-அசாத் அலெப்போவில் பெரும் தாக்குதலை தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தருணத்தில் ரஷ்யா சிரியாவில் கண்மூடித்தனமாக குண்டு மழை பொழிந்து வருகிறது. மரத் அல்-நு’மன் எனும் இடத்தில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்த பட்சம் 7 பேர் கொல்லப்பட்டனர், பிப்ரவரி 15 திங்கட்கிழமை ரஷ்ய போர் விமானங்களால் இத்லிப் தாக்கப்பட்டது. அருகாமையிலிள்ள அலெப்போ மாகாணத்தில் உள்ள அஸாஸ் எனும் இடத்தில் ஒரு ஏவுகணை குழந்தைகள் நல மருத்துவமனகயை தாக்கியது, இதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மேலும் பல பேர் காயப்பட்டனர். (Doctors Without Borders)எல்லையை கடந்த மருத்துவர்கள் (MSF என்னும் பிரஞ்சு அடைமொழியை கொண்டும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்) எனும் அமைப்பு இந்த மருத்துவ நிலையத்திற்கு உதவி அளித்து வருகின்றனர், இந்த மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்த்தை இவர்கள் உறுதி செய்தனர். இத்லிபில் உள்ள இந்த 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை சில மணித்துளிகளுக்கு இடையிலாக நடத்தப்பட்ட இரண்டு தொடர் தாக்குதலில் இதுவரை நான்கு முறை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. MSF ன் தலைவரான மேசிமிலியேனோ ரெபோடெங்கோ “இது மருத்துவ கட்டிடம் என தெரிந்தே வேண்டும் என்றே நடத்தப்பட்ட தாக்குதலாக தெரிகின்றது, இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நீர்மூலமாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை மீது தொடுத்த தாக்குதலால் இப்பகுதியை சுற்றி வாழ்ந்து வரும் 40,000 மக்களை எவ்வித மருத்துவ சேவையையும் பெறுவதற்கு முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.” என கூறினார். அசாதின் பக்கம் அலை வீச தொடங்கியுள்ள இப்போதைய நிலையில் மருத்துமனை என்றும் பள்ளிக்கூடம் என்றும் பார்க்காமல் ரஷ்யா சிரிய மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி கொண்டு வருகிறது. சிரியா மக்கள் உண்மையான மாற்றத்தை கோரி வருகையில் ரஷ்யா இந்த உணர்வை காலத்திற்கும் அழித்துவிட நாடுகிறது.