Mar 26, 2016

ஈராக்கிய – சிரியப் புதிர்

 

ஈரான் - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய முகவர் பாகம் – 2

இந்த பேச்சுக்களும், உடன்படிக்கைகளும் ஈராக்கிய யுத்தத்தின் பின்னர் இடம்பெறுகின்றன என்பது இங்கே கவனிக்கத்தக்கது. 2003 இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தபோது, அது கையில் வைத்திருந்த இராணுவத் தேர்வுகள்; எதுவும், ஈராக்கில் தாம் நீண்ட நெடிய காலம் நிலைகொள்ளவேண்டிவரும் என்பதை எதிர்வு கூறவில்லை. தன்னிடம் ஈராக்கிய இராணுவம் ஆயுதங்கள் சகிதம் முழுமையாக சரணடைந்துவிடும், ஈராக்கிய மக்கள் சதாமிடமிருந்து தம்மை மீட்டதற்காக ரோஜா கொத்துக்;களுடன் வரவேற்பார்கள் என்றே அமெரிக்கா எதிர்பார்த்தது. எனினும் ஆக்கிரமிப்பு ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு மாதகாலத்துக்குள் ஈராக்கிய இராணுவம் துடைத்தெறியப்பட்டாலும், அமெரிக்கா எதிர்பார்த்த தடல்புடலான வரவேற்புகள் மாத்திரம் கிட்டாமல் போனது. கிளர்ச்சிப்போராட்டங்களே பதிலுக்கு வெடித்தன. நாளுக்கு நாள் இந்தப்போராட்டங்கள் திகிழையூட்டக்கூடியதாகவும், வீரியமாகவும் வளர்ந்தன. 2005ஆம் ஆண்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம்; கிளர்ச்சிப்படைகளின் தொடர் தாக்குதல்களை முகம்கொடுக்கமுடியாது அமெரிக்கா மூச்சுத்திணர தொடங்கியது. இந்தப்போரிலிருந்து மீட்சி பெறமுடியாது என்பதை நன்கு உணரத்தொடங்கிய அமெரிக்கா, தமது இயலாமையை மூடிமறைப்பதற்கு ஈராக்கை சுரண்டும் திட்டங்களை ஏதோவொரு வழியில் நிறுவிவிட்டு, ஈராக்கிலிருந்து மெதுவாக வெளியேறும் திட்டத்தை வகுக்க தலையைக்குடைந்து கொண்டது. அமெரிக்கா எதிர்பாராமல் சந்தித்; இந்த அதிர்ச்சியை மூன்று விதமாக எதிர்கொண்டது.

முதலாவது, அது ஈராக்கை சுற்றியுள்ள தனது முகவர் நாடுகளை தன்னை மீட்கும்படி உதவிக்கு அழைத்தது. குறிப்பாக, துருக்கி, சிரியா மற்றும் ஈரானை கூப்பிட்டது. இரண்டாவது, அது கிளர்ச்சிக் குழுக்களிடையே இன மற்றும் குழு(ஷியா-சுன்னி) வாதங்களை தூண்டிவிட்டு மோதவிட்டது. மூன்றாவது, ஈராக்கில் இயங்கிய சந்தர்பவாதிகளையும், மோசடிக்குழுக்களையும் பயன்படுத்தி ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கியது.

பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க காலமாக தனது இராணுவப் பிரசன்னத்தை குறைத்து, தான் உருவாக்கிய அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் உண்மையான விருப்பம். அதுதான் அதற்கு இலாபகரமானது என்பதால் அத்திசையிலேயே பயணிக்க அமெரிக்கா முயன்று வந்தது. எனினும் பிராந்தியத்தில் அரபுப் புரட்சிகள் ஏற்படுத்திய சூறாவளியும், குறிப்பாக சிரியப் புரட்சியின் கொந்தளிப்புகளும் அத்திசை நோக்கி வேகமாக முன்னேறி சில அடைவுகளை உடனடியாக அடையவேண்டிய நிர்ப்பந்தத்தை தோற்றுவித்தன. அரபுப்புரட்சிகள் மத்தியகிழக்கின் அமெரிக்க வியூகத்திற்கு பாரிய சவால் விட்டுள்ளதாக அது காண்கிறது. எனவே வேறு வழியில்லாமல் தாராண்மைவாத லிபரல் இஸ்லாமிய குழுக்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டிருக்கிறது. எகிப்த்திலே அடிவருடி சீசியினை வைத்து புரட்சியின் விளைவை கட்டுப்படுத்த முடிந்த அமெரிக்காவுக்கு சிரியாவிலே போராடும் இஸ்லாமிய போராளிகளும், இயக்கங்களும் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளனர். அங்கே போராளிகளின் கரங்கள் பலப்பட்டு வருவதை அது துல்லியமாக உணரத்தொடங்கிவிட்டது. அதனால் தனது தி;ட்டம் முற்றாக தவிடுபொடியாகமுன், தனக்கு இசைவான ஒரு சூழல் மீண்டும் உருவாகும்வரை பஸார் அல் அஸதை பதவியில் பாதுகாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடுதான் ஜெனிவா ஒன்று, இரண்டு, மூன்று பத்து என்று அமெரிக்கா தனது சாகாக்களுடனும்;, சில பொழுதுகளில் தனது எதிரிகளுடன் கூட பொது இலக்கிற்காக கூட்டுச்சேர்ந்துகொண்டு மாநாடு மாநாடுகளாக நடத்தி வருகிறது.
 
இந்த அரசியற் களத்தின் பின்னணியிலிருந்துதான் அமெரிக்க திட்டங்களின் அமூலாக்கத்திற்கு ஈரான் முக்கிய கருவியாக தொழிற்படுவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஈரானுடைய உதவி மாத்திரம் அமெரிக்காவுக்கு கிட்டாமல் இருந்திருந்தால் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அரசியல் மேலாதிக்கம் சரிந்து சல்லடையாகிவிடும். மேலும் ஈரானின் உதவி கிட்டாதிருந்திருந்தால் பஸாரின் கதையும் என்றோ முடிந்திருக்கும். இந்த உண்மையை ஹிஸ்புல்லாஹ்க்களும் பல முறை தமது அறிக்கைகளில் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே பிராந்திய இலக்குகளுக்காக ஈரானுடன் நல்லுறவை பேணுவதும், வளர்ப்பதும் அமெரிக்காவுக்கு தவிர்க்கப்படமுடியாதது என்பதால் அல்லும்பகலும் தமது உறவுகளை சுமூகமாக வைத்திருக்க அமெரிக்கா முயன்று வருகின்றது.

ஈரான் - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய முகவர் பாகம் – 1

No comments:

Post a Comment