May 22, 2016

அமெரிக்கா சிரியாவிற்கென கொண்டிருக்கும் செயற்திட்டத்தை அடையாளம் காணுதல்

 

கடந்த வருடம் நடந்த “பாரீஸ் தாக்குதல்” மிகவும் துர்அதிர்ஷ்டமானது ஏனெனில் அது 130 அப்பாவி உயிர்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் இந்த சிரியாவில் நடைபெற்று வரும் புரட்சிக்கு எதிராக உலக சக்திகளை ஒன்று சேர்த்திருக்கின்றது. மேலும்  ஐ.எஸ்.ஐ.எஸ், அதன் செயல்கள் மூலம், இந்த புரட்சிக்கு இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துவது இது முதன்முறை கிடையாது.
 
 
சிரிய புரட்சி 2011 ல் அரபு புரட்சியின் ஒரு கிளையாக தொடங்கியது. இது அந்த ஆண்டின் மார்ச் மாதம் பல தரப்பட்ட சிரிய சமுதாயத்தினர் தங்களுக்கு நாட்டின் அரசியல் இயந்திரத்தில் அடிப்படை மாற்றங்கள் வேண்டி சாலையில் இறங்கி போராடியதன் மூலம் தொடங்கியது. போராட்டக்காரர்கள் அதிபரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை, ஆனால் அவர்கள் கோரியது அதிகாரத்தின் தூன்களாக இருக்கும் அனைத்தையும் பிடுங்கி பொது ஜனங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும் என்பதே.
 
 
இந்த நிகழ்வு நடப்பது பற்றி எதுவம் தங்களுக்கு தெரியாது என்றே மேற்குலகு அரசுகளின் ஆரம்பகால விளக்கங்களாக இருந்து வந்தன. அல்-அசாதின் குடும்பம் சிரியாவை பல ஆண்டுகளாக கொடூரமான, இரும்பு கரங்களை கொண்டு ஆட்சி செய்து வருகின்றது. முதலில் ஹாஃபிஸ் அல் அசாதிற்கு கீழ் அதன் பின்னர் அவருடைய மகன் பஷார் அல்- அசாதிற்கு கீழ், சிறிய சந்தேகத்திற்குரிய செயல்கள் செய்தவதால் கூட கைது செய்யப்பட்டும், சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டும்   (விடுவித்துக்கொள்ள முடியாத அளவில் சிரியாவில் சிறையில் அடைக்கப்பட்டும்) மேலும் பெரும்பாலும் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. ஆகையால், மேற்குலகின் அரசியல்வாதிகளின் எண்ணம் என்னவென்றால் துனீசியா மற்றும் எகிப்தில் செய்ததை போன்று சிரியாவில் செய்வதற்கு எவரும் துனிய மாட்டார்கள் என்பதே. உதாரணத்திற்கு, 2015 ம் ஆண்டு மார்ச் 7 ம் தேதி, சிரியாவில் போராட்டம் வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஃபாரீன் அஃப்பையர்ஸ் (Foreign Affairs) எனும் பத்திரிக்கை மைக்கேல் ப்ரோனிங் என்பவர் எழுதிய ” The Sturdy House that Asad Built: Why Damascus is not Cairo”. என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியிட்டது.[1] எனினும், இரண்டு மாதங்கள் கழித்து 2015 ம் ஆண்டு மே 19ம் தேதி, ப்ரோனிங்  ”Cracks in the House of Asad: Why a Supposedly Stable Regime Is Looking Fragile”. [2]என்ற தலைப்பில் மற்றொரு தலையெங்கம் எழுத நிர்பந்திங்கப்பட்டார்.
 
 
இதற்கு அடுத்தபடியாக ஆச்சரியத்தில் இருந்த அமெரிக்காவும் சிரியாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை விரும்பவில்லை. திரைமறைவில் அது சிரிய அரசுக்கு மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது, அதாவது 2000ம் ஆண்டில் ஹாஃபிஸ் அல் அசாத் இறந்தவுடன், அமெரிக்கா அவருடைய மகன் பஷாரை பதவியேற்க தூண்டியது. அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் மேடலின் ஆல்பிரைட், இது விஷயமாக இவ்வாறு கூறினார்: “டாக்டர். பஷார் அசாத் பொறுப்பேற்று கொண்டு ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகளை செய்வதை நான் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறேன்”. [3] அது முதற்கொண்டு பஷார் அல் அசாதை ஜான் கெர்ரியும் அமெரிக்க அரசை சார்ந்த மற்ற முன்னனி உறுப்பினர்களும் பலமுறை சந்தித்த நிகழ்வுகள் நடைபெற்றன[4] மேலும் இச்சந்திப்புகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 70% விஷயங்களுக்கு பஷார் அல் அசாத் ஒப்புக்கொண்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. [5] இதன் விளைவாக அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சிரியா மிகுந்த ஆதரவை அளித்து வருகிறது, எந்த அளவிற்கு என்றால் தனிநபர்களை அமெரிக்காவின் சார்பாக கொடுமை படுத்தும் அளவிற்கு இருந்து வருகிறது. [6]
 
 
ஆச்சர்யத்திற்கு இடமளிக்காத வகையில், இதன் காரணமாக, அமெரிக்கா சிரியாவில் நடைபெற்று வரும் புரட்சிக்கு ஒரு ” அரசியல் தீர்வை” மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது. இந்த விஷயத்திற்காக ஆதரவை திரட்ட ஒரு சர்வதேச செயற்திட்ட குழுவை அமைக்க அது ஏற்பாடு செய்தது மேலும் ஜெனீவாவில் கருத்தரங்கம் முடிந்தவுடன் இந்த செயற்திட்ட குழு ஒரு “இறுதி செய்தியை” வெளியிட்டது அது அரசியல் தீர்வு” என்பதற்கான உண்மையான அர்த்தத்தை விளக்கியது: “அரசு மற்றும் எதிரணி உறுப்பினர்களை கொண்டு ஒரு அரசு மாற்றத்தை செயல்படுத்தும் ஒரு மேலான்மை குழுவை முழு செயலாற்றும் சக்திகளை உள்ளடக்கிவாறு உருவாக்க வேண்டும், மேலும் அரசு நிர்வாகங்கள் மற்றும் கைதேர்ந்த ஊழியர்கள் ராணுவப்படை மற்றும் பாதுகாப்புப்படை போன்றவை உள்ளடக்கிய  தொடர்ந்து செயல்படும் வண்ணம் அதை பரஸ்பர சம்மதத்துடன் அமைக்க வேண்டும்”. [7] வேறு வார்த்தையில் கூற வேண்டும் என்றால், அரசின் தலை விழுவது தான் அமெரிக்காவின் திட்டம், எந்த வகையில் என்றால் அரசின் மற்ற தூண்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை போன்றவற்றை முன்னிருந்தவாரே தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
 
 
ஆகையால், சிரிய புரட்சியாளர்களுக்கு உதவப்போவதில்லை என அமெரிக்கா முடிவெடுத்தது மேலும் ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என ஹிலாரி கிளிண்டன் விவரித்தார். ” நீங்கள் ஒரு ராணுவ திட்டத்தை தீட்டக்கூடியவராகவோ அல்லது வெளியுறவு அமைச்சராகவோ இருந்து உங்களது கண்ணுக்கு புலப்படாத  நீங்கள் தொடர்பு வைத்துக்கொள்ள கூடிய ஒரு எதிரணி இருக்கின்றதா என்று கண்டு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கையில்”, இதன் அர்த்தம் என்னவெனில் அமெரிக்காவிற்காக தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி அதற்காக வேலை செய்யக்கூடிய எந்தவொரு எதிரணியையும் கண்டுகொள்ள முடியாமல் போனது. [8] கார்னெகீ என்டோவ்மெண்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் என்னும் நிறுவனத்தில் பணிபுரியும் ஆரோன் லண்டு எனும் சிரியா ஆய்வாளர், கிளிண்டனின் கணக்கை ஊர்ஜிதப்படுத்தினார். “நீங்கள் மனித உரிமையை மதிக்கும் தூய்மையான, சுத்தமான, மதசார்பற்ற போராட்டக்குழுவை காணப்போவதில்லை ஏனெனில் அதுபோன்ற ஒன்று அங்கு இல்லவே இல்லை”, என்று கூறினார், மேலும் இதன் காரணமாகத்தான் அமெரிக்கா ஒரு” மிதவாத எதிரணியை” உருவாக்க முயலும் முயற்சிகள் முழுமையான தோல்வி அடைந்துள்ளது – சிரியன் நேஷனல் கவுன்சிலின் (SNC) ஆதிக்கமானது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களின் வரவேற்பு அறை வரை தான் உள்ளது [9], அதே சமயம் அமெரிக்காவால் பயில்விக்கப்பட்ட சிறிய அளவிளான சிரிய வீரர்களில் பெரும்பாலோர் சுதந்திர போராட்டக்குழுவினருடன் மறுபடியும் சேருகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. [10]
 
 
இந்த சூழ்நிலையில் சிரியாவினுல் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் வருகை அமெரிக்காவிற்கு பேருதவியாக அமைந்தது. 2013 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி முதல் 2014 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி வரை ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியாவில் நடத்திய தாக்குதல்களில் 64% மற்ற போராட்டக்குழுக்களின் மீது நடத்தப்பட்டதாகும் வெறும் 13% தாக்குதல்கள் தான் அரசின் மீது நடத்தப்பட்டது என ஜேன்ஸ் இன்டெலிஜென்ஸின் ஆய்வு தெரிவிக்கின்றது. அதேபோல் அல்-அசாதின் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ பெரும் அளவில் தொடாமல் விட்டுள்ளது. அதே காலத்தில் அது நடத்திய 982 தாக்குதல்களில் வெறும் 6% தாக்குதல்களை மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது நடத்தியுள்ளது. [11] ஆகையால் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் ன் வருகை சிரிய புரட்சியாளர்களுக்கு இரண்டாவது எதிரியை கொண்டு வந்துள்ளது மேலும் இதன் காரணமாக அவர்களுக்கு இரண்டாவது முனையை எதிர்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியுள்ளது, அவர்களை நோக்கி அல்-அசாத் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கும் வேளையில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிழக்கிலிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
 
அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக பெரும் காரியம் செய்யும் என ஒருவரும் எதிர்பார்க்க முடியாது, ஆகையால், சிரியாவின் மேடையில் அவர்கள் தோன்றியதிலிருந்து அமெரிக்காவின் நோக்கமான அரசை தக்கவைக்கும் செயலுக்கு உதவியாக அமைந்தது அதாவது போராட்டக்குழுக்கள் அல்-அசாதை தோற்கடிப்பதிலிருந்து தடுத்து நிறுத்துவது. மேலும் நிச்சயமாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக அமெரிக்கா 2014 ல்  நடத்திய தாக்குதல்களில் மிகவும் அரிதாகவே அதன் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் இலக்கை சென்றடைந்தது – இது தன்னிச்சையாக செயல்படும் போராட்டக்குழுக்களை தாக்க வேண்டும் என திட்டமிட்டு நடத்தப்பட்ட மறைமுக தாக்குதல்களாகும். [12]
 
 
ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ துடைத்தெறிவது ஒருபோதும் எங்களது நோக்கமாக இருந்தது அல்ல என ஒபாமா சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். “முதலில் அவர்களை கட்டுப்படுத்துவதே  ஆரம்பத்திலிருந்து எங்களுடைய நோக்கமாக இருந்து வந்தது, அவர்களை நாங்கள் கட்டுப்படுத்திவிட்டோம். அவர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் சிரியாவில் எந்தவொரு அடித்தளத்தையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஆனால் இந்த பகுதியல் ஐ.எஸ்.ஐ.எல் ன்  இந்த படிப்படையான முன்னேற்றத்தை உங்களால் பார்க்க முடியாது”. [13] என அவர் கூறினார்.
 
 
இவை அனைத்தையும் காட்டிலும், 2015 கோடையில் சிரிய அரசு கவிழ்ந்து விடுமோ என அமெரிக்கா அச்சமுற தொடங்கியது. குறைந்த இடைவெளியில் அரசு தன் கட்டுப்பாட்டிலுள்ள  லட்டாக்கியா மற்றும் டமாஸ்கஸ் ஆகிய பகுதிகளை தவிர இத்லிப், ஹோம்ஸ், அலெப்போ மற்றும் தெய்ர் அல்-ஜோர் ஆகிய பகுதிகளில் புரட்சியாளர்களிடம் தோற்றது. ஆனால் புரட்சியாளர்கள் இவ்விரு பகுதிகளையும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்த ஒன்று கூடினர். [15] அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்த சூழ்நிலை பற்றி கலந்தாலோசிக்க  அதிகாரபூர்வமாக சந்திப்புகளை மேற்கொண்டனர். இந்த சந்திப்புகளின் வெளிப்பாடாக ரஷ்யா சிரிய அரசுக்கு ராணுவ ஒத்துழைப்பை வழங்க ஆரம்பித்தது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இவ்வாறு கூறினார்: நாங்கள் அனைவரும் ஒரு ஜனநாயக, ஒருங்கிணைந்த, மதசார்பற்ற சிரியாவை விரும்புகிறோம், அதை எப்படி அடைய போகிறோம் என்பது பற்றி சில விஷயங்களில் நாங்கள் கருத்து வேறுபாடு கொட்டுள்ளோம் (அமெரிக்காவுடன்). ஆனால் உடனடியாக எடுக்கப்போகும் சில நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்”. [16]
 
 
லாவ்ரோவ் தெரிவித்த கருத்து வேற்றுமை என்னவென்றால் அமெரிக்காவின் “அரசியல் தீர்வில்” பஷார் அல் அசாதின் பங்கு என்ன என்பது தான், ஆனால் இந்த விஷயத்திலும்  இவ்விரு தரப்பினரும் வெகு விரைவில் ஒரு தீர்வை ஏற்படுத்தி கொண்டனர். 4 வருட காலமாக அசாத் வெளியேற வேண்டும் என நிர்பந்தித்து வந்த அமெரிக்கா 2015 அக்டோபர் மாதத்தில் திடீரென அவர் வெளியேற வேண்டும் ஆனால் உடனடியாக வெளியேற வேண்டும் என்பது அவசியமில்லை என திடீரென அறிவித்தது. வேறு வார்த்தையில் கூற வேண்டும் எனில், ரஷ்யாவின் நிலையில் அமெரிக்கா தன்னை நிலைநிறுத்தி தங்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேற்றுமையை சரி செய்தது. [16] கடந்த அக்டோபர் மாதம் மாஸ்கோ பயணம் மேற்கொண்ட அசாதிடம் கண்டிப்பாக தாங்கள் வெளியேற வேண்டும் என ரஷ்யா கூறியதாக இஸ்ரேலிலிருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. [17]
 
 
ஆகையால், 2015 அக்டோபர் தொடக்கத்தில் ரஷ்யா சிரியாவில் ராணுவ தாக்குதல்களை தொடங்கியது, இது அந்த நாட்டில் அமெரிக்காவின் நலன்களை பாதிக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி அல்ல. ஏனெனில் இது அமெரிக்காவின் நலன்களுக்கு ஆதராவாக, ரஷ்யா  அமெரிக்காவின் ஒப்புதலோடு தான் இதுபோன்று செயல்பட்டது. 2014 செப்டம்பரில் அமெரிக்கா எதை செய்ததோ அதே போன்று  ரஷ்யா சிரியாவில் தான் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த வேண்டியே ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ  காரணம் காட்டியது ஏனெனில் அது ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தன்னுடைய தாக்குதல்களை தொடங்கவில்லை. மாறாக, அதன் தாக்குதல் சிரிய அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்த மற்றும் அரசின் மீது தாக்குதல்களை மேற்கொண்ட  மற்ற புரட்சிக்குழுக்களின் மீது தான் இருந்தது. [18] லாவ்ரோவ் இதை விவரித்து இவ்வாறு கூறினார்: “நாங்கள்  இவ்விஷயத்தில் இந்த கூட்டணியுடன் ஒரே பார்வையை தான் கொண்டுள்ளோம். நாங்கள் ஒரே அனுகுமுறையை தான் கொண்டுள்ளோம்: அது ஐ.எஸ்.ஐ.எல், அல்-நுஸ்ரா அல்லது வேறு தீவிரவாத குழுக்களாக இருந்தாலும் சரி.” [19]
 
 
அத்தருணத்தில், லாவ்ரோவ் குறிப்பிட்ட கூட்டணியில் பிரான்ஸ் சேராமல் இருந்தது. உண்மையில், சிரியாவில் பிரான்ஸ் எப்போதும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின்  திட்டங்களுக்கு மாற்றமாகவே செயல்படும் வரலாறை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, 2013 ல்,அசாத் டமாஸ்கஸிற்கு அருகில் கவ்ட்டா எனும் இடத்தில் ரசாயன ஆயுதங்களை உபயோகித்து 1,400 பேரை கொன்ற போது, பிரான்ஸ் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள கடின முயற்சி மேற்கொண்டது ஆனால் அதன்படி செயல்பட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மறுத்துவிட்டார். மிக சமீபத்தில்,  அமெரிக்கா அல்-அசாத் வெளியேற வேண்டும் என்ற  தனது முந்தய கோரிக்கையிலிருந்து அரசு மாற்றத்தை செயல்படுத்தும் காலம்வரை சில மாதங்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்று பின்வாங்கிய போது, அல்-அசாதை வெளியேற்ற வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து உறுதியாக இருந்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அல்-அசாத் பிரச்சினை பற்றி விவாதித்து கொண்டிருந்த சமயம், அசாத் அரசின் மீது போர் குற்றத்திற்கான விசாரணையை திடீரென பிரான்ஸ் தொடங்கியது. [20]
 
 
2015 செப்டம்பர் மாதம் சிரியாவில் பிரான்ஸ் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளும் அமெரிக்காவுடன் ஒன்றிணையாமல் நடத்தப்படவை ஆகும். [21] இதன் விளைவாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அடங்கிய ஐந்து கண்கள் புலணாய்வு கூட்டணி எனப்படும் கூட்டணியில் பிரான்ஸ் இடம் பெறவில்லை. இந்த கூட்டணியில் மேற்கூறப்பட்ட ஐந்து நாடுகள் அத்தருணத்தில், லாவ்ரோவ் குறிப்பிட்ட கூட்டணியில் பிரான்ஸ் சேராமல் இருந்தது. உண்மையில், சிரியாவில் பிரான்ஸ் எப்போதும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின்  திட்டங்களுக்கு மாற்றமாகவே செயல்படும் வரலாறை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, 2013 ல்,அசாத் டமாஸ்கஸிற்கு அருகில் கவ்ட்டா எனும் இடத்தில் ரசாயன ஆயுதங்களை உபயோகித்து 1,400 பேரை கொன்ற போது, ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பிரான்ஸ் மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டது ஆனால் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இதை செயல்படுத்த மறுத்துவிட்டார். மிக சமீபத்தில், அமெரிக்கா அல்-அசாத் வெளியேற வேண்டும் என்ற தன்னுடைய முந்தய கோரிக்கையை தளர்த்தி ஆட்சி மாற்றம் நடைபெறும் காலம் வரை சில மாத காலம் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்று பின்வாங்கிய போது, பிரான்ஸ்  தொடர்ந்து அல்-அசாதை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் தொடர்ந்து திடமாக இருந்து வந்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அல்-அசாத் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த சமயம், பிரான்ஸ் திடீரென அசாத் அரசின் மீது போர் குற்றத்திற்கான விணாரணையை தொடங்கியது. [22]
 
 
நவம்பர் மாதம் 13ம் தேதி மாலை பாரீஸில் நடந்த தாக்குதல்கள் அமெரிக்காவுக்கு இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள  பெருமளவில் உதவி புரிந்தது.
 
 
அச்சமயம் அமெரிக்கா சிரியாவுக்கான தன் திட்டத்திற்காக உலகை ஒன்றிணைப்பதற்காக சர்வதேச சமூகத்துடன் வியன்னாவில் கலந்தாய்வில் இருந்தது. அதிகாரபூர்வமாக, இந்த கலந்தாய்வு “ஒரு தீர்வை காணவேண்டும்” என்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்டது, ஆனால் அங்கு நடந்த நிகழ்வுகளில் அது போன்ற ஒரு நிலை இருந்ததாக தெரியவில்லை. சிரியாவுக்கான வெளியுறவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஸ்டாஃபன் டி மிஸ்டுரா அமைத்த செயற்குழுவின் அனைத்து தலைமை பொறுப்பையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான செயற்திட்டம் குறித்து வரையறுத்தது. உலகின் இதர முன்னனி நாடுகளான ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு தலைமை பொறுப்பு கொடுக்கப்படவில்லை இவர்கள் அனைவரும் அமெரிக்கா தயாரித்த செயற்திட்டத்தின் அடிப்படையிலான கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தான்  அனுமதி அளிக்கப்பட்டது. வேறு வார்த்தையில் கூற வேண்டும் என்றால், அமெரிக்கா சர்வதேச சமூகங்கள் தான் முன்வைக்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறது, இந்த விஷயத்தில் ரஷ்யாவும் உடன்பட்டது. [23]
 
 
இது அந்த கலந்தாய்வின் முன்னேற்றத்தை தடுத்தது. அதாவது, பாரீஸ் தாக்கப்படும் வரை. நவம்பர் 14ம் தேதி, இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் திடீரென ஒரு ஒப்பதலுக்கு வந்தனர். சர்வதேச ஊடகங்கள்  வெளியிடப்பட்ட செய்தியாவது: “பாரீஸில் நடந்த தாக்குதலால் தூண்டப்பட்டு பதினேழு நாடுகள் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடித்து வைக்க தங்களுக்கிடையே இருந்து வேற்றுமைகளை களைந்து ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து கொண்டனர்”. [24] “பாரீஸ் நகரி்ல் நடந்த தாக்குதல் தூதர்களை ஒன்று சேர்த்திருக்கின்றது, இவர்கள் தங்கள் அளவிலான முந்தய பேச்சுவார்த்தைகளில்  ஏற்பட்ட வேற்றுமைகளை களைய முடியாமல் இருந்தனர். இந்த பாரீஸ தாக்குதல் ‘நீங்கள் அசாதிற்கு ஆதரவாக இருக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமில்லை என்பதை காட்டுகின்றது’, என்று லாவ்ரோவ் கூறினார், ‘ஐ.எஸ்.ஐ.எஸ் தான் உங்களது எதிரி’. [25]
 
 
சிரியாவிற்கான அமெரிக்காவின் திட்டங்களின் விவரங்கள் வரிமாறு:
 
. 2015 டிசம்பர் 14ம் தேதி: தூதர்கள் மறுபடியும் கூடி செயல்பாடுகளை சரிபார்க்க வேண்டும்.
 
. 2016 ஜனவரி 1ம் தேதி: சிரியா அரசையும் எதிரணியினரையும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா சபையிடம் கோரிக்கை வைக்க வேண்டும்
. 6 மாதங்களில் அல்லது 2016 மே மாதம் 14 ம் தேதி: சிரயா அரசுக்கும் எதிரணியினருக்கும் இடையே போர் நிறுத்தம் செய்து; புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியை தொடங்க வேண்டும்.
. 18 மாதங்களில், அல்லது 2017 ம் ஆண்டு மே 14 ம் தேதி: ஐ.நா மேற்பார்வையில் புதிய அரசியல் அமைப்பின் கீழ் தேர்தல் நடத்த வேண்டும். [26]
 
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அதனுடன் அல்-கய்தாவின் அங்கமான நுஸ்ரா ஃபிரண்ட் தீவிரவாத அமைப்பையும், போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டில்  இருக்கும் நிலையிலும் ராணுவ தாக்குதல்கள் தொடுக்கும் பட்டியலில் இவர்களை வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஜோர்டானிய அரசால் நிர்வகிக்கப்படும் இந்த பட்டியலில், பிற்காலத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் திட்டங்களுக்கு உடன்பட மறுக்கும் சிரியாவின் இதர குழுக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். [27]
 
 
இந்த ஒப்பந்தத்திற்கு பிரான்சும் ஆதரவு தெரிவித்தது. அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் கார்டருக்கும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஜான்-வேஸ் லா டிரியானுக்கும் இடையே பாரீஸ் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து அந்த வார இறுதி நாட்களில் நடந்து தொலைபேசி உரையாடல்கள் மூலம் இரு நாடுகளுக்கு மத்தியில் உள்ள வேற்றுமைகள் களையப்பட்டது, இதன் விளைவாக சிரயாவில் அமெரிக்காவின் தலைமையில் செயல்பட பிரான்ஸ் சம்மதித்தது. இதன் பின்னர் அமெரிக்கா பிரான்சுடன் உளவுத்துறை தகவல்களை பரிமாற தொடங்கியது, மேலும் இவ்வாறு இரு நாடுகளும் சிரியாவில் ராணுவ தாக்குதல்களை ஒன்றினைந்து நடத்த தொடங்கியது. அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிகளை நோக்கி பிரெஞ்சு போர் விமானங்கள் தாக்குதல் நடத்த தொடங்கியது. [28]
 
 
முடிவுறையாக, சிரியாவினுள் ஐ.எஸ்.ஐ.எஸ் ன் வருகை அல்-அசாத் அரசின் ஆட்சி நீடித்து இருக்க பெரும் உதவி புரிந்தது, மேலும் உண்மையில் அல்-அசாத் அரசுக்கு ஆதரவாக இருக்கும் சிரியாவின் மீதான அமெரிக்க, ரஷ்ய மற்றும் பிரெஞ்சு (மேலும் மற்றவர்கள்) நடத்தும் ராணுவ தாக்குதல்களை நியாயப்படுத்தும் வண்ணம் அமைந்தது, மேலும் இது உலகை சிரியாவிற்கான அமெரிக்காவில் திட்டத்தின் பால் ஒன்றிணைத்தது.
 
 
[1] “The Sturdy House that Asad Built: Why Dam­as­cus is not Cairo”, www.foreignaffairs.com/articles/syria/2011–03-07/sturdy-house-assad-built
[2] “Cracks in the House of Asad: Why a Sup­pos­edly Sta­ble Regime Is Look­ing Frag­ile”, www.foreignaffairs.com/articles/syria/2011–05-19/cracks-house-assad
[3] “Albright press brief­ing prior to depar­ture for Al-Asad funeral”, www.usembassy-israel.org.il/publish/peace/archives/2000/june/me0612d.html
[4] “Kerry dis­cov­ers Assad is no reformer”,
[5] www.enduringamerica.com/home/2010/12/1/wikileaks-document-syrias-assad-gives-the-ultimate-response.html
[6] “Syria: The Not So Long Ago Cher­ished US Part­ner in Intel­li­gence, Ren­di­tion & Tor­ture Oper­a­tions”, www.boilingfrogspost.com/2011/12/10/syria-the-not-so-long-ago-cherished-us-partner-in-intelligence-rendition-torture-operations/
[7] “Action Group for Syria: Final Com­mu­nique”, www.un.org/News/dh/infocus/Syria/FinalCommuniqueActionGroupforSyria.pdf
[8] “Clin­ton: Arm­ing rebels could help Al-Qaeda”, www.cbsnews.com/news/clinton-arming-syrian-rebels-could-help-al-qaeda/
[9] “Syr­ian Oppo­si­tion Groups Stop Pre­tend­ing”, www.newyorker.com/news/news-desk/syrian-opposition-groups-stop-pretending
[10] “Obama Admin­is­tra­tion Ends Effort to Train Syr­i­ans to Com­bat ISIS”, www.nytimes.com/2015/10/10/world/middleeast/pentagon-program-islamic-state-syria.html?_r=0
[11] “Is ISIS a US Proxy?”, www.revolutionobserver.com/2014/12/isis-a-us-proxy.html
[12] “Syria rebels dis­mayed by US air attacks on non-ISIS groups”, www.ft.com/intl/cms/s/0/12cd016e-4328-11e4-8a43-00144feabdc0.html#slide0 See also: www.revolutionobserver.com/2014/09/operation-saving-bashar-al-assad.html
[13] “Obama on ISIS: ‘We have Con­tained Them’ ”, www.realclearpolitics.com/video/2015/11/13/obama_on_isis_we_have_contained_them.html
[14] “String of losses in Syria leaves Asad regime increas­ingly pre­car­i­ous”, www.theguardian.com/world/2015/jun/11/syria-losses-east-assad-regime-precarious
[15] “Remarks with Russ­ian For­eign Min­is­ter Lavrov”, www.state.gov/secretary/remarks/2015/09/247662.htm
[16] “US says Asad must go, tim­ing down to nego­ti­a­tion”, www.reuters.com/article/2015/09/19/us-mideastcrisis-kerrytalks-idUSKCN0RJ0FX20150919
[17] “Putin told Assad ‘go or you’ll be made to go,’ Israeli offi­cials say”, www.timesofisrael.com/putin-told-assad-to-go-or-be-made-to-go-israeli-officials-say/
[18] “Rus­sians Strike Tar­gets in Syria, but not ISIS Areas”, www.nytimes.com/2015/10/01/world/europe/russia-airstrikes-syria.html
[19] “Rus­sia is strik­ing same tar­gets in Syria as US: Lavrov”, http://news.yahoo.com/russia-not-planning-air-strikes-iraq-lavrov-160921744.html
[20] “France more active than rest of the west in tack­ling Syria”, www.theguardian.com/world/2015/nov/14/france-active-policy-syria-assad-isis-paris-attacks-air-strikes
[21] “France launches its first airstrikes against ISIS in Syria”, http://edition.cnn.com/2015/09/27/middleeast/syria-france-isis-bombing/
[22] “France Launches Airstrikes Against Islamic State Strong­hold in Syria”, www.wsj.com/articles/u-s-providing-targeting-intelligence-to-france-for-strikes-on-islamic-state-after-paris-attacks-1447618522
[23] “Rus­sia accuses US of hijack­ing meet­ings to pre­pare for Syria talks, US says Moscow didn’t show”, www.usnews.com/news/world/articles/2015/11/12/russia-accuses-us-of-hijacking-preparations-for-syria-talks
[24] “Paris attacks: Syr­ian tran­si­tion plan reached by US, Rus­sia in Vienna talks”, www.smh.com.au/world/paris-attacks-syrian-transition-plan-reached-by-us-russia-in-vienna-talks-20151115-gkz9qa.html#ixzz3rqvYg8Vx
[25] “Syr­ian Tran­si­tion Plan Reached by U.S., Rus­sia in Vienna”, www.bloomberg.com/news/articles/2015–11-14/syrian-transition-plan-achieved-by-u-s-allies-kerry-says
[26] “Syr­ian Tran­si­tion Plan Reached by U.S., Rus­sia in Vienna”, www.bloomberg.com/news/articles/2015–11-14/syrian-transition-plan-achieved-by-u-s-allies-kerry-says
[27] “Syr­ian Tran­si­tion Plan Reached by U.S., Rus­sia in Vienna”, www.bloomberg.com/news/articles/2015–11-14/syrian-transition-plan-achieved-by-u-s-allies-kerry-says
[28] “France Launches Airstrikes Against Islamic State Strong­hold in Syria”, www.wsj.com/articles/u-s-providing-targeting-intelligence-to-france-for-strikes-on-islamic-state-after-paris-attacks-1447618522

http://sindhanai.org/

No comments:

Post a Comment