Sep 6, 2016

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குறை கூறியதால் பாகிஸ்தான் அதிர்ப்தி

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குற்றம் சாட்டியதால் பாகிஸ்தான் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய அரசை நிலைபெரச்செய்வது குறித்த பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த குற்றச்சாட்டால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் உள்ள அதிகாரிகள் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தனது அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை மற்றும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொல்வதாகவும், மற்ற தீவிரவாத அமைப்புகளான ஹக்கானி குழு உட்பட பல குழுக்களுக்கு அது அடைக்கலம் அளிப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. (செய்தி – வாய்ஸ் ஆப் அமெரிக்கா)
ஒபாமா அரசு, மாணிய அடிப்படையில் பாகிஸ்தானுக்கு விற்கவிருந்த F 16 போர் விமான ஒப்பந்தத்திற்கும் அமெரிக்க பாராளுமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
அண்மையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் “பாகிஸ்தான் நட்பு நாடா அல்லது எதிரி நாடா” என்ற தலைப்பில் நடந்த விவாதம் பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசுகையில், அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய ஆப்கனிஸ்தான் அரசுக்கு எதிராக இயங்கிவரும் ஹாக்கணி, தாலிபான் போன்ற குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. ஆகையால் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்துவரும் பொருளாதாரம் மற்றும் இராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை பதிவுசெய்தனர்.
ஆப்கனிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதரான ஸல்மே கலில்ஜாத் அமெரிக்கா, வட கொரியாவை கையாளுவதை போல் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் ஆப்கனிஸ்தானில் தனக்கு சாதகமான நாடவடிக்கைகளை சாதித்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
எனினும் பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த பாகிஸ்தானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிறிய பிரிவினரால் எழுப்பப்பட்ட அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறிவிட்டனர். (செய்தி – பிஸ்னஸ் ரேகார்டர்)
செய்தி கண்ணோட்டம்:
அமெரிக்காவின் குற்றச்சாட்டால் பாகிஸ்தான் ஆச்சரியபடவோ, அதிருப்தி அடையவோ ஒன்றும் இல்லை. அமெரிக்காவை பொறுத்தவரை, ஆசியாவில் தனது முதன்மை ஏஜென்டாக இந்தியாவை நிலைநிறுத்த பாகிஸ்தானை பணயமாகவே பயன்படுத்துகிறது. மேலும் பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் நாடு என்பதால் அங்கு எப்போது வேண்டுமானாலும் இஸ்லாமிய அரசான கிலாபா நிறுவப்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டவாறே அமெரிக்கா செயல்படுகிறது.
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

No comments:

Post a Comment