M.ஷாமில் முஹம்மட்
முஸ்லிம்கள் அனைவரும் இறைவன் ஒருவன் என நம்புகிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதிதூதர் என நம்புகிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் ஒரு வேத நூலை அல்குர்ஆனை முழுமையாக நம்புகிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் ஸஹிஹான ஹதீஸ்களை முழுமையாக நம்பி விசுவாசிக்கிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகைக்காக அழைகின்றார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் ஒரு இறைவனை , ஒரு திசையை நோக்கி தொழுகிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் இறைவனை தொழுகிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு வைக்கின்றார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் ஸகாத் கடமையை தமது கடமையாக கொள்கிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ்ஜை கடமையை தமது கடமையாக கொள்கிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் அல் ஜிஹாதை ஒரு கடமையாக கொள்கிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்பதை கடமையாக கொள்கிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் -அல் குதுஸ்- மீட்பதை கடமையாக கொள்கிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் ஒரு உலகளாவிய தலைமையை ஏற்படுத்த விரும்புகிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் உலகில் மீ இஸ்லாம் மாபெரும் சக்தியாக உருவாக விரும்புகிறார்கள்
முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைதான் இஸ்லாம் என்றும் நம்புகிறார்கள்
இப்படி பல விடையங்களை குறிப்பிட முடியும் இஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைகளை எடுத்துக்கொண்டால் பலமான சமூக ஒற்றுமைக்கான கட்டமைப்பு இருப்பதை காணமுடியும் நாம் ஒரே உம்மாஹ் என்ற கோட்பாட்டு ஒரு கிராமத்தில் ஒரு கோடியில் அதிலும் ஓலைகளால் ஆண ஒரு சிறிய மஸ்ஜிதில் தொடங்கி மக்காவின் கவ்பா வரை தொடர்கிறது
முஸ்லிம்களின் ஒற்றுமை ஒரு ஊரில் அல்லது ஒரு நகரத்தில் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் உணர்த்தபடுகிறது முஸ்லிம்கள் அனைவரும். தேச , பிரதே, மொழி , இன , வர்க்க ,வகுப்பு வாதங்கள் அனைத்தையும் உதறிவிட்டு தொழுகைக்காக இறைவன் முன் முஸ்லிம் என்ற ஒரு அடையாளத்துடன் மட்டும் நிற்க வேண்டும் இங்கு முஸ்லிம் என்ற அடையாளத்தை தவிர வேறு எந்த ஒரு அடையாளமும் நிராகரிக்கப்பட்ட அடையாளம்தான் அவ்வாறே பல ஊர், நகரம் அல்லது அவற்றின் பல பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகைக்காக ஒன்று சேரும் போது சமூக ஒற்றுமை பலமாக உணர்த்தபடுகிறது அவ்வாறே வருடாந்தம் இரு பெருநாள் தொழுகைகளின் போதும் பல்வேறு ஊர்களையும் , நகரங்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் ஒரு பரந்த திடலில் ஒன்று சேரும் போது பலம் பொருந்திய ஒற்றுமை அங்கு தனித்துவமாக உணர்த்தபடுகிறது. இவ்வாறு இஸ்லாம் தனது உலகளாவிய முஸ்லிம் உம்மாஹ் என்ற கோட்பாட்டை உலகின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிவரை கட்டமைத்து நிற்கிறது
உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரு உம்மாஹ் என்ற கோட்பாட்டு கட்டுமான பணி ஹஜ்ஜில் மிக பலமாக ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எழுதப்படுகிறது - அங்கு கிழக்கும், மேற்கும் , வடக்கும் தெற்கும் சந்திக்கிறது.
அங்கு சந்திப்பவர்கள் வெள்ளை மனிதனாக கருப்பு மனிதனாக நகர மனிதனாக கிராம மனிதனாக அமெரிகனாக , ரஷ்யனாக விவசாயியாக தொழிலாளியாக முதலாளியாக மத்தியதர உயர்தர கீழ்தர வர்க்கத்தவனாக இருக்கலாம் , ஆணாக அல்லது பெண்ணாக இருக்கலாம் மொழி ரீதியாக தமிழ் பேசுபவானாக, சிங்களம் பேசுபவானாக, அரபு பேசுபவானாக, சீன மொழி பேசுபவானாக இருக்கலாம் இந்த சிறிய அடையாள அடுக்குகள் அனைத்தையும் உதறிவிட்டு தொழுகைக்காக இறைவன் முன் முஸ்லிம் என்ற ஒரு அடையாளத்துடன் மட்டும் நிற்க வேண்டும் இங்கு முஸ்லிம் என்ற அடையாளத்தை தவிர வேறு எந்த ஒரு அடையாளமும் நிராகரிக்கப்பட்ட அடையாளம்தான் இங்கு மனித பாகுபாடுகளை புறக்கணித்து முஸ்லிம் என்ற அடையாள முத்திரையை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதைத்தான் இஸ்லாம் போதிக்கிறது இதுதான் நாம் ஒரு உம்மத் ,நாம் ஒரு உம்மாஹ் என்ற கோட்பாட்டுக்கு வழிகாட்டி சர்வதேச முஸ்லிம் உம்மாஹ்வின் ஒற்றுமை நிஜமாகும்
ஆகவே எமது உம்மாஹ்வின் ஒற்றுமை என்பது வெறும் கானல் நீராக இன்ஷா அல்லாஹ் இருக்காது நிஜமான போகும் உண்மை இஸ்லாம் மீண்டும் உலகை அரசோச்சும், முஸ்லிம்களும், மனிதத்தை விரும்புபவர்களும் ஒரு அணியில் இருப்பார்கள் மனித விரோதிகளும், பாசிச மேலாதிக்கசக்திகளும் பகைவன் படையில் இருப்பார்கள்
மனிதன் மனிதனை அடிமைபடுத்தும் பாசிச மேலாதிக்க நிலை ஒழிக்கபடும் மனிதன் இறைவனுக்கு மட்டும் கட்டுப்படும் சுதந்திரமான நிலை தோன்றும் ஒரு உம்மாஹ் என்ற கோட்பாட்டை நோக்கி உலகின் ஒவொரு கோடியில் இருந்து நகரவேண்டும் இந்த நகர்வுகள்தான் குறுந் தேசிய எல்லைகள் அகற்றப்பட்ட விரிந்த முஸ்லிம் தேசம் உருவாக துணைபுரியும் அதைத்தான் கிலாபாத் என்போம் அங்குதான் இஸ்லாமிய தலைமை பிறக்கும் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்த்தும் இதை அல்லாஹ் கூறும்போது
"இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;". அல்குர்ஆன் 3:103
இந்த வசனம் முஸ்லிம்கள் அனைவரும். தேச , பிரதே, மொழி , இன , வர்க்க ,வகுப்பு வாதங்கள் அனைத்தையும் உதறிவிட்டு ஒன்று பட்ட ஒரு உம்மாவாக இருக்க வேண்டும் என்பதைதான் வலியுறுத்துகின்றன. அல்லாஹ் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. 3:103 என்று தனது அல்குர்ஆனை பற்றிப்பிடிக்க கட்டளை இடுகிறான் . இங்கு அல்குர்ஆனை அல்லாஹ் கயிற்றுக்கு உவமானமாகக் கூறுவதின் நோக்கம் தனித்தனி நார்களாக இருந்ததைத்தான் ஒன்றினைத்து ஒன்றாக கயிறாக உருமாற்றுகிறோம் என்பதை எளிதான உணார்த்துவதன் மூலம் குழுக்களாக , வகுப்புகளாக வர்க்கங்களாக , இனங்களாக இருக்கும் மனிதர்கள் அனைத்தையும் உதறிவிட்டு ஒன்று பட்ட ஒரு உம்மாவாக இருக்க வேண்டும் என்பதைதான் வலியுறுத்துகின்றன .
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவினை உண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்குர்ஆன் 3:105
SOURCE FROM Lankamuslim.net
No comments:
Post a Comment