பயங்கரவாதம் (அல் இர்ஹாப்) என்ற பண்புப்பெயர்சொல்லானது மொழியியல் ரிதியில் ஆராயும்போது அது பயமுறுத்துதல் (அர்ஹபா) என்ற வினைச்சொல்லிலிருந்தே தோன்றுகின்றது. எனினும் 1979-ம் ஆண்டு அமெரிக்காவினதும், இங்கிலாந்தினதும் உளவுத்துறையினர் மாநாடொன்றினை நடத்தி “அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக சமூகத்தின் பொது விருப்பத்திற்கு எதிராக வன்முறையை பிரயோகித்தல்” என்பதே பயங்கரவாதம் என்று அதன் அர்த்தத்தை அரசியல் ரிதியில் மாற்றின. இதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பல கருத்தரங்குகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், சட்டங்கள் இயற்றப்பட்டும் எந்த இயக்கங்கள், சங்கங்கள், கழகங்ககள், நாடுகள் (அவர்களின் வரைவிலக்கணப்படி) பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன என்பன போன்ற பல தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்த சட்டங்களும், பாகுபாடுகளும், எந்நாடுகள் இவற்றை இயற்றினவோ, அந்நாடுளின் அரசியல் சுயலாபத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி கொல்லப்பட்டதை “பயங்கரவாதம்"; என அமெரிக்கா கொள்கிறது. மன்னர் ஃபைசல் கொல்லப்பட்டதையும், ஜோன் கென்னடி கொல்லப்பட்டதையும் அது பயங்கரவாதம் என ஏற்றுக்கொள்ளவில்லை. FBI எனப்படும் அமெரிக்காவின் புலனாய்வுத்துறையின் கட்டிடம் தகர்க்கப்பட்ட பொழுது, அச்செயல் பயங்கரவாதத்தின் சதி வேலை என்று கூறிய அமெரிக்கா தன் நாட்டின் ஒரு குழுவே அதை செய்தது என்று தெரிந்த பின், அச்செயலை பயங்கரவாதம்; என சொல்வதை விடுத்து, சாதாரணக் குற்றம் என்ற அடிப்படையில் அப்பிரச்சனையை அணுகியது.
இவ்வாறு 1979 ற்குப்பின் பயங்கரவாதத்திற்கு தன் விருப்பப்படி பொருள் புணைந்து அதை உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பிரகடனப்படுத்திற்று அமெரிக்கா. 1980இல் பெய்ரூட்டில் TWA என்னும் அமெரிக்க விமானம் கடத்தப்பட்டதையும், அமெரிக்காவிற்கு சொந்தமான அல் கூபார் படைத்தளம் சவூதி அரேபியாவில் தகர்க்கப்பட்டதையும் அது காரணம் காட்டி 1996 ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) நாடுகளின் கூட்டமைப்பில், பயங்கரவாதத்தை எதிர்க்கும் 40 கோரிக்கைகளை கொண்டு வந்தது. நியுயோர்க்கிலுள்ள உலக வர்த்தக மையம் தகர்;க்கப்பட்டதையும் காரணம் காட்டி அமெரிக்கா, பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களை இயற்றியது. இதற்கு 1997- ம் ஆண்டு அமெரிக்க மேல் சபை ஒப்புதலும் வழங்கிற்று. இதன் விளைவாக பயங்கரவாதத்தின் பெயரில் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் அந்நாடு கண்டித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தில் வாதிட்டு வெற்றி பெற இயலாதபடி அவரை கைது செய்யவோ, நாடு கடத்தவோ, அந்த நபருக்கு குடியுரிமை மறுக்கப்படுவது அல்லது அதிகபட்ச தண்டனை வழங்குவது போன்ற அனைத்தையும் செய்யத் துணிந்தது அமெரிக்கா.
அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளான வடகொரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இஸ்லாமிக் ஜிஹாத், ஹமாஸ், எகிப்தில் இயங்கி வரும் ஜமாஹ் இஸ்லாமிய்யாஹ், லிபியாவின் FIS போன்ற இயக்கங்களுக்கும், தமது பூர்வீக பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டத்தையும் அமெரிக்கா பயங்கரவாதச் சாயம் பூசி தண்டிக்க முனைகிறது.
தான் இயற்றிய சட்டங்களைக் கூறி எந்த ஒரு நாட்டின் (ஈராக், லிபியா) மீதும் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் முன்னாள் வெளி உறவுச் செயலாளர் ஜோர்ஜ் சல்ட்ஷ் பின்வருமாறு ஒரு முறை கூறியிருந்தார். “தீவிரவாதிகள் முயன்று தப்பி செல்ல முடியுமேயன்றி, அவர்கள் ஒளியவோ, மறையவோ முடியாது". இவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை வகுத்து முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறது அமெரிக்கா.
கம்யூனிச உலகின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்காவின் பிரதான எதிரியாக இஸ்லாம் விளங்குவதாக அமெரிக்கா கருதுகிறது. இஸ்லாமிய உலகில் மீண்டும் இஸ்லாமிய அரசை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பல இயக்கங்களும், முஸ்லிம் சமூகமும் செயற்படுகின்ற வேளையில் அவர்களை உடனடியாக அடக்கி தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. எனவே இஸ்லாமிய சிந்தனையை அடிப்படையாகக்கொண்ட ஒரு துய இஸ்லாமிய உலகு (கிலாபா ராஷிதா) தோற்றம் பெறுவது குறித்து அமெரிக்கா பயப்படுகிறது. இதன் விளைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான தனது வியூகங்களை செயற்படுத்தும் முக்கிய பிராந்தியமாக முஸ்லிம் மற்றும் அரபுலகை அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. இதன் விளைவாக முஸ்லிம் உலகெங்கும் போராட்டங்களையும், வன்முறைகளையும் து}ண்டி நிலையற்ற அரசியல் பொருளாதார நிலையை தோற்றுவிப்பதில் அமெரிக்கா பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி பல இஸ்லாமிய இயக்கங்களை அமெரிக்கா “பயங்கரவாத இயக்கங்கள்" எனக் கூறி இஸ்லாமிய ஆட்சி நோக்கி அழைக்கும் எந்த ஒரு அமைப்பையும் அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதன் மூலமாக அவற்றுக்கு எதிராக அதியுச்ச தடைகளை ஏற்படுத்த முனைந்துள்ளது. இதற்காக அமெரிக்கா ஏனைய நாடுகளையும், வற்புறுத்தியும், அவற்றை ஒன்று திரட்டியும் இந்த இயக்கங்களை ஒடுக்க முற்படுகிறது. இதில் பலிகடாவாக ஆக்கப்படுவது கிலாபா ஆட்சியைக் கொண்டு வர முயலும் முஸ்லீம்களே ஆவர்.
எது எவ்வாறெனினும் முஸ்லீம்கள் முற்றுமுழுதாக இஸ்லாமியர்களாக வாழ வேண்டும் என்பது அவர்கள் மீது அல்லாஹ்வால் சுமத்தப்பட்ட மார்க்கக்கடமையாகும். எனவே இது முழுமையாக சாத்தியப்படுவதற்கு கிலாஃபா ஆட்சி முறையைக் கொண்டு முஸ்லிம்கள் ஆழப்பட வேண்டியது அவசியமாகும். இதையே ஷரியா வலியுறுத்துகிறது.
எனவே இஸ்லாத்திற்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளையும், முஸ்லிம்களின் எழுச்சியையும் அமெரிக்கா பயங்கரவாதம் என்ற சாயம் பூசி தண்டிக்க நினைத்தால் நீதி செலுத்துவதற்காக அனுப்பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அதற்கெதிராக அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி போராட வேண்டியது முஸ்லிம் உம்மத்தின் தார்மீகக் கடமையாகும்.

No comments:
Post a Comment