Mar 20, 2011

முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடி பகுதி 01

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنْكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنْكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَ

அல்லாஹ் அல்லாதவர்களை (தங்களுக்கு) பாதுகவலர்களாக எடுத்துக்கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியின் உதாரணத்தைப் போன்றதாகும், அது (தனக்காக) வீடு ஒன்றைக் கட்டடிக்கொண்டது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடாகும் இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே. ( 29 : 41 )

அல்லாஹ்(சுபு) இந்த வசனத்தில் சிலந்திப்பூச்சியின் வீட்டைப்பற்றிக் கூறும்போது அது வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமான வீடு என்று கூறுகிறான், அதுபோலவே வெளித்தோற்றத்தில் முதாலாளித்துவக்கொள்கை (capitalistic system) மிகவும் வளர்ச்சியடைந்த நவீனமான கொள்கை போன்று தோன்றினாலும் அல்லாஹ்(சுபு) கூறிக்காட்டுவதுபோல அது கொள்கைகளிலெல்லாம் மிகவும் பலவீனமான பிற்போக்குத்தனமான கொள்கையாகும், 

கடந்தசில நாட்களாக மேற்கத்திய நாடுகளிலுள்ள பழம்பெரும் வங்கிகளில் முன்னோடியான வங்கிகள் பலவும் நொறுங்கி வீழ்ந்து கொண்டிருக்கின்றன, முதன்முதலில் அமெரிக்காவின் AIG வங்கியின் திவால் (bankrupt) செய்தித்தாள்களில் அறிவிக்கப்பட்டது, அதன்பின்னர் அமெரிக்க அரசு அந்த வங்கியை விலைகொடுத்து வாங்கியது, பின்னர் லெஹ்மேன் பிரதர்ஸ் (Lehman Brothers) என்ற அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியும் அதன்பின்னர் மெரில் லைன்ச் (Meryl Lynch) என்ற வங்கியும் *பென்னீமி (Fenni Mae) மற்றும் *பிரடீமாக் (Freddie Mac) ஆகிய நிதிநிறுவனங்களும் தங்களது திவாலை (bankrupt) அறிவித்தன, இந்த வங்கிகளை விலைகொடுத்து வாங்குவதற்கோ அல்லது அவற்றில் முதலீடு செய்வதற்கோ எவரும் முன்வராத காரணத்தால் அவை நொறுங்கி வீழ்ந்துவிட்டன, இதன்விளைவாக உலகபொருளாதாரத்தில் ஒருவிதமான தேக்கநிலை ஏற்பட்டு விலைவாசிகள் உயர்ந்து உச்சத்தை அடைந்ததோடு பலர் தங்களது வேலையையும் இழந்துவிட்டனர்,

மேற்கத்திய நாடுகளிலிருந்து சிலஆயிரம் மைல் தூரத்திற்கு அப்பாலுள்ள இந்தியாவில் நாம் வசித்து வந்தபோதிலும் உலகளாவிய இந்த நிகழ்வின் தீயவிளைவிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்களாக நாம் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும், நடப்பு செய்தித்தாள்களில் மும்பை பங்குச்சந்தையும் தேசிய பங்குச்சந்தையும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தியை நாம் காண்கிறோம், கடந்த ஒரு வாரகாலத்தில் மும்பை பங்குச்சந்தை (BSE- Bombay stock exchange) 16% வீழ்ச்சியடைந்து கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகமோசமான பின்னடைவை சந்தித்துள்ளது, முன்பு ஒருபோதும் காணாத வகையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது ( ரூ 49,50), அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கின்ற வங்கிகளின் வீழ்ச்சியும் நிதிநிறுவனங்களின் (financial institutions) திவாலாவும் உலகமுழுவதிலும் கணிசமான அளவுக்கு பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது, இதன் விளைவுகள் சமீபத்தில் மும்பை பங்குச்சந்தையிலும் தேசிய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது,
இந்தோனீஸியாவின் பங்குச்சந்தை கடந்த சிலநாட்களாக திறக்கப்படவில்லை, சென்ற வாரத்தில் அது 20% விழ்ச்சியையும் கடந்த ஒருவருடத்தில் அது மொத்தமாக 47% வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது, வளைகுடா நாடான சவுதிஅரபியாவின் பங்குச்சந்தை 43% வீழ்ச்சியை சந்தித்துள்ளது,

இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது õ இந்த வீழ்ச்சிக்கு பின்னனியில் இருக்கும் காரணங்கள் என்ன? இந்த விவகாரத்தை முறையாக ஆய்வுசெய்தால் கிரடிட் கிரன்ச் credit crunch) என்று கூறப்படும் ஒரேயொரு விஷயம்தான் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம், இந்த விவகாரத்தைப் பற்றி நாம் விளக்கமாக அறிந்துகொள்ள வேண்டும் ஏனெனில் உலக பொருளாதாரம் தேக்கநிலைக்குச் சென்றிருப்பதற்கும் நிதிச்சந்தையில்(financial market) நெருக்கடிநிலை ஏற்பட்டிருப்பதற்கும் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட உலகின் முன்னேற்றம் இப்போது சருக்குதலை அடைந்திருப்பதற்கும் பலநபர்கள் வேலையிழப்பை சந்தித்ததற்கும் மேற்குலகின் பொருளாதாரச் செழிப்பு வரண்டுபோய் உலக பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பணம் தொலைந்து போனதற்கும் கிரடிட் கிரன்ச்(credit crunch) என்று சொல்லப்படும் இந்த விவகாரம்தான் பின்னனி காரணமாக இருந்திருக்கிறது,
கிரடிட் கிரன்ச் (credit crunch) என்றால் என்ன? அதனால் ஏற்பட்ட விளைவகள் என்ன?

இந்த விவகாரம் எளிதாக புரிந்துகொள்ளக் கூடியதுதான், இன்றைய காலகட்டத்தில் முதலாளித்துவ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு வாங்கவேண்டும் என்று எண்ணும்போது தங்கள் கையில் அதற்குரிய பணம் இல்லாதநிலையில் கடனுக்கு பணம் பெற்று வீடு வாங்,குகிறார்க்ள், அவ்வாறு கடன் வாங்கும்போது ஒரு வங்கியோ அல்லது ஒரு நிதிநிறுவனமோ வட்டி அடிப்படையில் அதற்கு நிநியுதவி செய்கிறது, கடனைப்பெற்றவர் அசல்தொகையையும் வட்டித்தொகையையும் பின்னர் அவர் பல தவணைகளில் திருப்பிச் செலுத்தியாகவேண்டும், இதுதான் நிதியுதவி அளிக்கும் வங்கிகளின் நிபந்தனையாகும், தங்களது கையில் பணமில்லாத நிலையில் வீடு வாங்குபவர்களுக்கு இது எளிமையான வழியாகத் தோன்றுகிறது அதேவேளையில் நிதியுதவி செய்வதன் மூலம் வட்டித்தொகை கிடைப்பதால் வங்கிகள் இதை லாபம் ஈட்டும் நடவடிக்கையாக கருதுகின்றன, இந்த முறையில் வீடு வாங்குவதற்கு அடமானமுறை (mortgaging) என்று கூறப்படுகிறது,
அடமானமுறையில் வீடு வாங்குகிறவர்கள் நிதியுதவி அளித்த வங்கிகளுக்கு அசல் மற்றும் வட்டித்தொகையை திருப்பிச் செலுத்திய பின்புதான் அதை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளமுடியும், அவ்வாறு கடனை திருப்பிச் செலுத்தாதவிட்டால் வீடு பறிமுதல் செய்யப்பட்டு வேறொரு நபருக்கு விற்பனை செய்யப்படும்,

1940 ஆம் ஆண்டு கணக்கின்படி அமெரிக்க மக்களில் 40 சதவீதத்தினர் சொந்தமாக வீடு வைத்திருந்தார்கள், 1960 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 60 வதவீதத்தினர் சொந்தமாக வீடு வைத்திருந்தார்கள், தற்போதை நிலவரப்படி கிட்டத்தட்ட 70 சதவீதத்தினர் தங்களுக்கு சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்ளகள், வங்கியில் கடன்பெற்று வீடு வாங்கிய பின்பு அந்தக்கடனை அடைக்காத நிலையில் குடியிருப்பவர்களும் இதில் அடங்குவார்கள், அதாவது இன்றையநிலையில் வாடகை செலுத்தாமல் குடியிருப்பவர்கள் 70 சதவீதத்தினர் ஆவார்கள்,

தங்கள் கையில் பணமில்லாத காரணத்தாலும் வங்கியில் கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்தவதற்கு போதிய வருமானம் இல்லை என்பதாலும் சுமார் 25 சதவீதத்திலிருந்து 30 சதவீத மக்கள் வீடு இல்லாதநிலையில் அமெரிக்காவில் இருந்துவருகிறார்கள், வீடு வாங்குவதற்கு வழங்கப்படும் நிதியுதவி (housing loan) தொடர்பான சட்டங்களிலுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கும் கொள்கையை 1980 ஆம் ஆண்டு அமெரிக்கஅரசு கொண்டுவந்தது, இதன்காரணமாக அடமானமுறையில் கடனுக்கு வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது, அடமானமுறையில் நிதியுதவி வழங்கும் நிதிநிறுவனங்களின் நடவடிக்கைகள் அதிகரித்து உச்சகட்டமான லாபத்தை அவைகள் தங்கள் கணக்கு பதிவேடுகளில் பதியவைத்துக் கொண்டன,

இந்தவகை அடமானத்திற்கு சப்பிரைம் மார்ட்கேஜ் (subprime mortgage) என்று கூறுகிறார்கள், சாதாரணமான சூழலில் கடன் பெறமுடியாதவர்கள் கூட இந்தமுறையில் கடன் பெற்றுவிடலாம், அதேவேளையில் இந்தமுறையில் கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வட்டித்தொகை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது,
அமெரிக்காவில் வீடு இல்லாமல் இருக்கும் 25 சதவீத மக்களுக்காக அடமானமுறையில் வீடு வாங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது, 2007 ஆம் ஆண்டு துவக்கத்தில் அடமானமுறை கடன் திட்டத்தில் வங்கிகள் முதலீடு செய்த மொத்த தொகை சுமார் 1,3 டிரில்லியன் டாலராகும் அதாவது ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி அமெரிக்க டாலர் பணத்தை இந்த திட்டத்தில் நிதிநிறுவனங்களும் வங்கிகளும் வட்டி ஈட்டும் நோக்கத்தோடு முதலீடு செய்தன,

அமெரிக்க மக்கள் சொந்தமாக வீடு வாங்கும் ஆசையில் கண்மூடித்தனமாக செயல்பட்டதால் சொந்தமாக வீடு வாங்குகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது, கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டியதால் சமாளிக்கமுடியாத அளவுக்கு நிதிநெருக்கடியை சந்தித்த அமெரிக்காவின் மிகப்பெரிய நிதிநிறுவனமான நியூசெஞ்சுரி இன்க்(New Century Inc) 2007 ஆம் ஆண்டு தனது திவாலாவை அறிவித்தது, இதுதான் அமெரிக்காவில் முதன்முதலில் ஏற்பட்ட வீழ்ச்சியின் அறிகுறியாகும்,

தங்கள் பொருளாதாரக் கொள்கையின் மீது வைத்த அதீதமான நம்பிக்கையின் காரணமாக கடன் பெற்றவாகளில் பெரும்பான்மையானவர்கள் கடனை திருப்பிச் செலுத்தவில்லையென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டார்கள், அதிகமாக பணம் ஈட்டவேண்டும் என்ற பேராசையில் அவர்கள் தங்களைத் தாங்களே அழிவுக்கு இட்டுச்சென்றதோடு உலக பொருளாதாரத்தையும் அழிவுக்கு இட்டுச்சென்று விட்டார்கள் 

இத்தகையை மனிதர்ளைப்பற்றி அல்லாஹ்(சுபு) இவ்வாறு கூறுகின்றான்.

أَلْهَاكُمُ التَّكَاثُرُ

ஒருவரைவிட ஒருவர் அதிகமாக பொருளைப் பெருக்கவேண்டும் என்ற பேராசை உங்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிவிட்டது...... (102 : 1 )

அமெரிக்கா நிதிச்சந்தையின் மாபெரும் ஜாம்பவான்களான *பிரடீமேக் (Freddie Mac) மற்றும் *பென்னிமி (Fenni Mae) ஆகிய நிதிநிறுவனங்கள் தாங்கள் திவாலான செய்தியை அறிவித்து விட்டன மேலும் தங்கள் நிதிநிறுவன நடவடிக்கைகளை அனைத்தையும் மூடிவிட்டன, பின்னர் அவைகள் கையில் அகப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பொருளாதாரநிலை பற்றியோ அல்லது கடனை திருப்பிச்செலுத்தும் திறன் மற்றும் நாணயம் ஆகியவை பற்றியோ ஆய்வுசெய்யாமல் தங்களிடமுள்ள வீடுகளை கடனுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டன, ஆரம்பத்தில் 7% விலையை உயர்த்தி விற்பனை செய்தவர்கள் பிறகு 9,5% விலையை உயர்த்தி விற்பனை செய்தார்கள், வீட்டை வாங்களிவர்கள் திருப்பிச் செலுத்தவேண்டிய மாதத்தவணை இரட்டிப்பாக ஆனதால் அவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை, முதலாளித்துவ ரியல் எஸ்டேட் சட்டத்தின்படி சொத்தை அடமானத்தில் வாங்கியவர் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்தாதவரை சொத்தை விற்கமுடியாது, இந்நிலையில் அவர்கள் திருப்பிச் செலுத்தவேண்டிய தொகை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்து விட்டன, இந்த சட்டத்தின் அடிப்படையில் கடன்பெற்றவர்கள் தங்களிடம் மொத்தபணம் இருந்தாலும் ஒரேதவணையில் திருப்பிச் செலுத்த முடியாது, கடன் பெற்றபோது ஏற்றுக்கொண்ட தவணைக் காலத்திற்குரிய வட்டி முழுவதையும் திருப்பிக் கொடுக்காமல் கடனை அடைக்கமுடியாது அதாவது கடன் பெற்ற தொகையைப்போல இருமடங்கு தொகையை அவர் செலுத்தவேண்டும் , உதாரணமாக பத்துவருட தவணைக்கு கடன் வாங்கியவர் ஒரேமாதத்தில் மொத்த பணத்தையும் திருப்பிச் செலுத்த தயாராக இருந்தாலும் பத்துவருட காலத்திற்குரிய வட்டியை அவர் செலுத்தியே ஆகவேண்டும், இவ்வாறாக ஒவ்வொரு ஆயிரம் டாலர் கடனுக்கும் வட்டித்தொகை நீங்கலாக அவர் 350 டாலர் அதிகமாக செலுத்தவேண்டும், எனவே கடன் பெற்றவர்களால் கடன்தொகையை திருப்பிச் செலுத்த முடியவில்லை, இதனடிப்படையில் பல்லாயிரக் கணக்கானவர்கள் தவணை தவறிய கடன்காரர்களாக ஆகிவிட்டார்கள், ஒரு புள்ளிவிபரத்தின்படி இத்தகையவர்களின் எண்ணிக்கை சுமார் முப்பது லட்சமாகும்,

தவணை தவறிய கடன்காரர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த உதவிபுரியும் நோக்கத்தோடு புஷ் நிர்வாகம் ஐந்துவருட வட்டித்தொகை வசூலிப்பதை நிறுத்திவைத்தது, இந்நிலையில் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு மறுவிற்பனைக்கு தயாராக இருந்த வீடுகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் கொண்டே சென்றது ஆனால் வாங்குவதற்கு எவரும் முன்வரவில்லை, காலதாமதம் ஏற்பட்டதால் வீடுகளின் விலைமதிப்பு உயர்ந்துகொண்டே சென்றது இருந்தபோதிலும் அவற்றை வாங்குவதற்கு எவரும் தயாராக இல்லை, மேற்கூறிய அமெரிக்காவின் இரண்டு நிதிநிறுவனமும் இத்தகைய நெருக்கடியை சந்தித்தது, சமீபத்தில் அமெரிக்காவின் மற்றொரு மிகப்பெரிய வங்கியான லெஹ்மேன் பிரதர்ஸ் (Lehman Brothers) என்ற நிறுவனமும் இதுபோன்ற நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்று செய்திகள் கூறுகின்றன,


No comments:

Post a Comment