கொந்தளிக்கும் பங்குச்சந்தைகள் ( காரணங்களும், ஷரியா விதிமுறைகளும்) The Turbulence of the Stock Markets என்ற புத்தகத்திலிருந்து, பகுதி 1
உலக பொருளாதாரமும் பங்குச்சந்தைகளும் :
கடந்த சில நூற்றாண்டுகளாக உலக நாடுகளில் ஆதிக்கம் பெற்றுள்ள முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை உலக பொருளாதாரத்தில் பல தீய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது, இத்தீய விளைவுகள் ஏற்படுத்தியிருக்கும் துயரங்கள் அவற்றின் சீற்றத்தை வெளிப்படுத்தத் துவங்கிவிட்டன, சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் அதாவது 1929ல் அமெரிக்காவில் ஏற்பட்ட ‘மாபெரும் வீழ்ச்சி’ (the great depression) என்ற பொருளாதார சரிவைத் தொடர்ந்து 1987 லும் அதுபோன்ற பொருளாதார சிரிவு அமெரிக்காவில் ஏற்பட்டது, இதன் பின்னர் 1997ல் உலக நாடுகள் அனைத்திலும் பெரும் பொருளாதார வீழ்ச்சியும் நிதிநிலை நெருக்கடிகளும் ஏற்பட்டன, அதுபோலவே இப்போது அமெரிக்காவின் முன்னணி வங்கிகளும் நிதிநிறுவனங்களும் காப்பீட்டு நிறுவனங்களும் (insurance companies) நிதி நெருக்கடியில் சிக்கி நொறுங்கி வீழ்ந்து கொண்டிருக்கின்றன, AIG எனப்படும் அமெரிக்காவின் காப்பீட்டு நிறுவனம் (Lehman Brothers) லேமென் பிரதர்ஸ் (Freddie Mac) *பிரட்டீ மாக் பென்னிமே (Fenni Mae) ஆகிய நிதிநிறுவனங்கள் தங்கள் திவாலை அறிவித்து விட்டன மேலும் பல முன்னனி வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றன, இதுபோன்ற வீழ்ச்சிகளும் நிதி நெருக்கடிகளும் முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும், ஏனெனில் தவறான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப் பட்டுள்ள எந்த பொருளாதாரமும் இத்தகைய அழிவுகளை சந்திப்பது இயல்பான விஷயமாகும், இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது உலக நாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டி தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியை மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் மேற்கொள்கின்றன, 1929 ல் ஏற்பட்ட ‘பெரும் வீழ்ச்சி’ யை இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்டு ஆயுத விற்பனை செய்து பெரும் லாபத்தை ஈட்டியதின் மூலம் அமெரிக்கா தன்னைக் காப்பாற்றிக் கொண்டது.
பங்குச்சந்தைகளிலும் உலக பொருளாதாரத்திலும் இப்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை ஆய்வு செய்ய வேண்டுமானால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இத்தகைய வீழ்ச்சிகளை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும், 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் உலக பங்குச்சந்தைகளில் பங்குகளின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டதின் காரணமாக நிதிச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன, இந்த சரிவு முதன்முதலில் ஹாங்காங்கில் உருவாகி பின்னர் ஜப்பானுக்கு பரவியது, அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் ஆக்கிரமித்தது, ஒவ்வொரு நாள் தொடங்கிய போதும் இந்த வீழ்ச்சி ஒன்றன்பின் ஒன்றாக உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியது, 1987ல் நியூயார்க் நகரின் டோஜோன்ஸ்(Dow-Jones) பங்குச் சந்தையின் குறியீடு 22% சரிவடைந்தது, அதற்கு முன்பாக 1929ல் அமெரிக்காவில் பங்குகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் பெரும் சரிவை சந்தித்தன வரலாற்று ஆய்வாளர்கள் அதை ‘மாபெரும் வீழ்ச்சி’ (the great depression) என்று அழைக்கிறார்கள், கடந்த காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் மேற்கத்தியர்கள் எதிர்கொண்ட பெரும் நெருக்கடியை இன்றும் எதிர்கொள்ள நேரிட்டுவிடுமோ என்ற அச்சம் ஆழமாக எழும்பி முதலாளித்துவவாதிகளை நடுங்க வைத்திருக்கிறது, ஏனெனில் இப்பெரும் வீழ்ச்சி உருவாக்கிய தீய விளைவுகளால் பத்து வருடங்களுக்கு மேலாக பரவலான வறுமையும் பட்டினியும் பெரும் துயரங்களும் அமெரிக்காவில் தலைவிரித்தாடின, அன்றைய அமெரிக்க அதிபர் *ப்ராங்கிளின் ரூஸ்வெல்ட்(Franklin Roosevelt) இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கு கொண்டு பெருமளவில் ஆயுத விற்பனை மேற்கொண்டு அமெரிக்க பொருளாதாரத்தை மறுநிர்மாணம் செய்த பின்னர்தான் நிலைமை சீரடைந்தது,
1998 ல் ஐரோப்பாவில் ஏற்பட்ட நிதிநெருக்கடிக்கு முன்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் கோடைக் காலத்தின் துவக்கத்தில் நாணயங்களின் செலாவணி மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டதோடு அவற்றின் பங்குச் சந்தைகளிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது, இதன் காரணமாக பல வங்கிகளும் நிதிநிறுவனங்களும் நொறுங்கிப் போயின, இந்த வீழ்ச்சி முதலில் தாய்லாந்தில் துவங்கி பின்னர் *பிலிப்பைன்ஸ். மலேசியா. இந்தோனீசியா என்று பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது, பிறகு அது தொற்றுநோய் போல பரவி தென்கொரியா. தைவான் போன்ற பல வடஆசிய நாடுகளுக்கும் பரவியது, அதுமட்டுமல்ல இந்த வீழ்ச்சி மேற்கு ஆசியாவின் மிகப்பெரும் நிதிச்சந்தையான ஹாங்காங்கையும் உலுக்கியது, இந்த வீழ்ச்சியின் அதிர்வை மேற்குலகம் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே அதன் தாக்கம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவிவிட்டது,
1987ல் அமெரிக்காவில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கும் 1997ல் உலக நாடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் தவறான அடிப்படைதான் காரணம் என்றபோதும் அவை இரண்டின் தாக்கங்களும் தன்மைகளும் வெவ்வேறானவை என்பதை நாம் கவனிக்க வேண்டும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் பலவீனமான சிறிய சந்தைகளாகும் இவற்றில் வர்த்தகம் செய்து வந்தவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாகவும் அனுபவமற்ற வர்த்தகர்களாகவும் இருந்தார்கள், தாய்லாந்திலும் இந்தோனீசியாவிலும் நிகழ்ந்ததைப் போல இந்த நாடுகளிலுள்ள பங்குச்சந்தைகள் மூலம் லாபம் அடைந்தவர்கள் உண்மையாக அந்த நாடுகளிலுள்ள ஊழல் பேர்வழிகளான ஆட்சியாளர்கள்தான், இந்த நாடுகளிலுள்ள பங்குச்சந்தைகளின் சூத்திரதாரிகளாக விளங்கிய அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் மேற்கத்திய பணமுதலைகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பங்குச்சந்தைகளில் அவர்கள் ஈடுபட்டு தந்திரமான முறையில் பெரும் லாபத்தை குறுகிய காலத்தில் ஈட்டிக்கொள்ள அனுமதித்தார்கள், இந்த பங்குச்சந்தைகளில் மேற்கத்திய முதலாளிகள் ஈடுபட்டு பெரும் பணத்தை லாபமாக அள்ளிக் கொண்டு செல்லும் வண்ணம் அந்நாடுகளில் மேற்கத்திய பங்குச்சந்தை முறைகளை அமெரிக்கா வடிவமைத்து இருந்தது, உலகில் புதிய பொருளாதார அமைப்பை (New World Economy) உருவாக்குவதற்கு மிக அவசியமானது என்று மேற்கத்தியர்கள் கூறிவரும் ‘அந்நிய முதலீடு’ என்ற போர்வையில் இத்தகைய பொருளாதார சுரண்டல்களை அமெரிக்காவும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளும் அரங்கேற்றி வருகின்றன. இந்த சுரண்டலுக்கு பின்னணியில் அந்தந்த நாடுகளின் பொம்மை ஆட்சியாளர்கள் மேற்கத்தியர்களுக்கு உதவியாக செயல்படுகிறார்கள்,
இந்த முதலீடுகள் மறைமுக முதலீடுகள் (indirect investment) என்று அழைக்கப்பட்டாலும் அவை அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் போடப்படும் உண்மையான முதலீடுகளாக இருப்பதில்லை ஏனெனில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் அமைந்துள்ள கனரக தொழிற் சாலைகளையும் (heavy industries) வர்த்தக நிறுவனங்களையும் (trading companies) அமெரிக்கா விலைக்கு வாங்கி அவற்றை தங்கள் தாய் நிறுவனங்களுடன் இணைத்து அவற்றில் முதலீடு செய்தது, இத்தகைய முதலீடுகளை உண்மையான முதலீடு என்று கூறலாம் ஆனால் குறுகிய காலத்தில் பெரும் லாபத்தை ஈட்டும் நோக்கத்தோடு வளரும் நாடுகளின் பங்குச்சந்தைகளில் மேற்கத்திய முதலாளிகள் போடும் பணம் உண்மையான முதலீடு அல்ல, ஒரு நாட்டின் அரசோ அல்லது மற்றவர்களோ பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும்போது அவற்றின் பங்குகளில் முதலீடு செய்வது மறைமுக முதலீடு என்று கூறப்படுகிறது, இந்த பங்குகளை ஒரு முதலீட்டாளர் வாங்கும்போது அந்த நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற நோக்கமோ அல்லது அதை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற நோக்கமோ அல்லது அதன் லாபத்தில் பங்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமோ அவருக்கு இருப்பதில்லை, மாறாக அவர் வாங்குகின்ற பங்குகளின் விலையில் உயர்வு ஏற்படும்போது அவற்றை விற்பனை செய்து துரிதமான பெரும் லாபத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவர் அவற்றை வாங்குகிறார்,
மேற்கத்திய முதலாளிகளின் பேராசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு சாதகமான சந்தையாக வளரும் நாடுகளின் நிதிச்சந்தைகள் விளங்குகின்றன ஏனெனில் பெரும் பணத்தை முதலீடு செய்பவர்களால் பங்குகளின் விலையேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அங்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன, இந்த நாடுகளின் நிதிச்சந்தைகள் சிறிய அளவில் இருப்பதால் மேற்கத்திய முதலீட்டாளர்களால் விலையேற்றங்களை செயற்கையாக உருவாக்க முடிகிறது, மேலும் மேற்கத்திய முதலீட்டாளர்களிடம் காணப்படும் முதலீடுவலிமை. சந்தையின் நுட்பங்கள் பற்றிய அறிவு. துணிச்சல் ஆகிய திறன்கள் உள்ளூர் முதலீட்டாளர்களிடம் காணப்படுவதில்லை,
யூகவணிகத்தில் நிபுணர்களாக விளங்கும் மேற்கத்திய முதலாளிகள் ஒரு நாட்டில் நுழையும்போது பலநூறு மில்லியன் டாலர்களை அந்நிய முதலீடாக நாட்டிற்குள் கொண்டு வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள், இவ்வாறு கொண்டுவரும் பணம் ஒன்று மேற்கத்திய நாடுகளிலுள்ள பெரும் செல்வந்தர்களின் பணமாக இருக்கும் அல்லது வங்கிகளில் கடன் பெற்று வந்த பணமாக இருக்கும், இந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் வளரும் நாடுகளிலுள்ள உள்ளூர் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விலைக்கு வாங்குகிறார்கள், தாங்கள் விலைக்கு வாங்கிய பங்குகளின் விலைகள் உயரும்வரை அவர்கள் காத்திருப்பதில்லை மாறாக அவர்கள் கையில் வைத்திருக்கும் குறிப்பிட்ட பங்குகளின் விலையில் ஏற்றத்தைக் கொண்டு வருவதற்கு பல்வேறு யுக்திகளையும் தந்திரங்களையும் கையாண்டு விலையேற்றத்தை உண்டாக்குவார்கள், உதாரணமாக; குறிப்பிட்ட பங்குகளில் மிக்பெரும் தொகையை அவர்கள் முதலீடு செய்துள்ளதாக வதந்தியை கிளப்பி விடுவார்கள் அல்லது அவர்கள் பங்கு வாங்கியுள்ள நிறுவனம் பெரும் லாபத்தை ஈட்டப்போகிறது என்ற வதந்தியை கிளப்பி விடுவார்கள், இதனால் உள்ளூர் பங்கு வர்த்தகர்கள் பங்குகளை வாங்குவதற்கு குவிந்து விடுவார்கள் பின்னர் அந்த குறிப்பிட்ட பங்குகளின் விலை உயர்வு அடைந்து கொண்டே செல்லும் விலையேற்றம் உச்சத்தை அடைந்திருக்கும் தருணத்தில் தங்களிடமுள்ள அனைத்து பங்குகளையும் உள்ளூர் முதலீட்டாளர்களிடம் துரிதமாக விற்று பெரும் லாபத்தை அள்ளிக் கொண்டு வேறொரு நிறுவனத்தை நோக்கியோ அல்லது வேறொரு நாட்டை நோக்கியோ சென்று விடுவார்கள், இவ்வாறுதான் மலேசியர்களும் தாய்லாந்து நாட்டினரும் இந்தோனீசியர்களும் தங்கள் நாட்டில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட மேற்கத்தியர்களின் தந்திரத்தை அறிந்து கொள்ள தவறிவிட்டதால் தங்கள் நாட்டின் பெரும் செல்வத்தை அவர்கள் சுரண்டிக் கொண்டு செல்லும்படி விட்டுவிட்டார்கள், மேற்கத்திய வர்த்தகர்களின் தந்திரங்களால் தாங்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பதை உள்ளூர் முதலீட்டாளர்கள் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்து முடிந்து விடுகின்றன, சில நேரங்களில் மேற்கத்திய நாடுகளிலுள்ள பல்வேறு முதலீட்டாளர்கள் இணைந்து ஒன்றாக இத்தகைய பங்குச்சந்தை சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் ஏனெனில் அவர்கள் அனைவரின் நோக்கமும் வளரும் நாடுகளிலுள்ள அப்பாவி முதலீட்டாளர்களின் பணத்தை வர்த்தகம் என்ற பெயரில் சுரண்டிக் கொண்டு செல்வதுதான்õ இவ்வாறாக இந்த அந்நிய முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள குறிப்பிட்ட பங்குகள் அனைத்தையும் விற்றுவிடும்போது உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதால் பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஏற்படுகிறது, பங்குச் சந்தையின் சரிவைத் தொடர்ந்து அந்த நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்நாட்டு நாணயத்தின் செலாவணி மதிப்பில் வீழ்ச்சி ஏற்படுகிறது மேலும் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு கடன் வழங்கிய வங்கிகள் கடன்தொகை வசூலாகாத காரணத்தால் பல நேரங்களில் திவாலாகி விடுகின்றன,
சோவியத் ரஷ்யா வீழ்ந்த பின்னர் சர்வதேச அரங்கில் இருக்கும் ஒரே ஆதிக்க சக்தியாக அமெரிக்கா உருவான காலம் முதற்கொண்டு அது ஆதரித்து வருவதும் அந்நிய நாடுகளின் மீது திணித்து வருவதுமான ‘மறைமுக முதலீடு’ (indirect investment) என்ற கோஷத்தின் உண்மைநிலை இதுதான், இதன் மூலமாக உலக நாடுகளின் பொருளாதாரத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது மேலும் இத்தகைய மறைமுக முதலீடு என்பது நேரடி முதலீடு ஏற்படுத்தும் ஆபத்துக்களை விட பலமடங்கு ஆபத்துக்களை உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடியது, இதன்மூலமாக வளரும் நாடுகளின் வளங்களும் பொருளாதாரமும் தவறான முறையில் விரயத்திற்கு உள்ளாவதோடு அந்நாடுகள் அடைந்து வரும் பொரளாதார நெருக்கடிகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் இதுவே பிரதான காரணமாக இருக்கிறது, மேலும் இதன் காரணமாக அந்நாட்டு குடிமக்கள் பல இழிவான துயரங்களையும் வறுமையின் கொடுமைகளையும் அனுபவித்து வருகிறார்கள், மெக்ஸிகோ. பிரேஸில். அர்ஜென்டினா போன்ற லத்தீன்அமெரிக்க நாடுகளும் துருக்கி. எகிப்து. ஜோர்டன் போன்ற மத்தியகிழக்கு ஆசிய நாடுகளும் இதுபோன்ற துயரமான பொருளாதார வீழ்ச்சியை எதிர் கொண்டுள்ளன, மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா. இந்தோனீசியா போன்ற நாடுகளில் கடந்த காலங்களில் பங்குச்சந்தை மூலமாக நிகழ்ந்த பொருளாதார சீரழிவுகளுக்கும் தற்காலத்தில் காணப்படும் பொருளாதார வீழ்ச்சிகளுக்கும் இதுவே நேரடி காரணமாகவும் இருக்கிறது,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றின் நிதிச்சந்தைகளைப் பொறுத்தவரை அவற்றின் நிலை வளரும் நாடுகளின் நிதிச்சந்தைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, மேற்கு நாடுகளின் பங்குச் சந்தைகள் உறுதியான முறையில் நிர்மாணிக்கப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன, இந்த பங்குச்சந்தைகளில் பங்கு வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் இருப்பதால் இவை மிப்பெரும் நிதிச்சந்தைகளாக இருந்து வருகின்றன, லண்டன் மற்றும் நியூயார்க் ஆகியவற்றின் பங்குச்சந்தைகளில் மில்லியன் கணக்கான வர்த்தகர்கள் பங்குவர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள், இந்த சந்தைகளில் மிக்பெரும் தொகைகள் பங்குகள் (Shares) பங்குப்பத்திரங்கள் (Bonds) ஆகியவற்றின் வர்த்தகத்தில் கொட்டப்படுகின்றன, இந்த சந்தைகளில் கொட்டப்படும் பணத்தின் மதிப்பு அந்த நாடுகளின் ரியல் எஸ்டேட். கனரக ஆலைகள். வர்த்தகப் பொருட்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பை விட பலமடங்கு அதிகமானதுõ மேலும் பங்குகள் மற்றும் பங்குப்பத்திரங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளும் வர்த்தகத்தின் மதிப்பு உண்மைப் பொருட்களில் மேற்கொள்ளும் வர்த்தகத்தின் மதிப்பைவிட பலமடங்கு அதிகமானது என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, இந்த நிதிச்சந்தைகளில் அதிகமான வர்த்தகர்களும் வேண்டுமளவு பண முதலீடுகளும் இருக்கிறது என்பதையும் வர்த்தகர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது என்பதையும் இது காட்டுகிறது, வர்த்தகர்களிடையே நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக எந்தவொரு தனிப்பட்ட வர்த்தகரும் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியாது ஆகவே மேற்கத்திய பணக்கார முதலைகள் இந்தப்போட்டியை பயன்படுத்தி தந்திரமான முறையில் துரிதமான பெரும் லாபத்தை ஈட்டிவருகிறார்கள்,
இவ்வாறு இருந்தபோதிலும் பல சாதாரண வர்த்தகர்கள் இந்த சந்தைகளில் தங்கள் முழுநேர கவனத்தை செலுத்தி பெரும் தொகைகளை லாபமாக ஈட்டி அதிகமான சொத்துக்களை பெற்றிருக்கிறார்கள், அவர்கள் பல்வேறு தந்திர முறைகளை உருவாக்கி செயல் படுத்துகிறார்கள் மேலும் பல்வேறு திட்டங்களையும் ஒப்பந்தங்களையும் உருவாக்கி பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரங்கள் மற்றும் பங்குகளின் விலைகள் ஆகியவற்றில் தாங்கள் விரும்பியபடி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள், பங்குச்சந்தைகளில் நடந்து கொண்டிருக்கும் இத்தகைய செயல்பாடுகளுக்கும் அந்த பங்குகளை வினயோகம் செய்த நிறுவனங்களின் செயல்பாடுகள். அந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் லாபநஷ்டங்கள் மற்றும் அவற்றில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஆகியவற்றிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை, பங்குச்சந்தைகளில் பிரயோகிக்கப்படும் வர்த்தக யுக்திகள். வர்த்தக ஒப்பந்தங்கள். விலையேற்றங்களில் ஆதிக்கம் செலுத்தும் முறைகள் போன்ற பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக பல பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான கல்வி போதிக்கப்படுகிறது, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை (PLC Shares) விற்பனை செய்யும் நிதிச்சந்தையாக இருந்தாலும் அல்லது கருவூலக நிதிப்பத்திரங்களை (Exchequer Bill) விற்பனை செய்யும் நிதிச்சந்தையாக இருந்தாலும் அல்லது நிறுவனங்களின் ஒப்பந்தப் பத்திரங்களை (companies bonds) விற்பனை செய்யும் நிதிச்சந்தையாக இருந்தாலும் அவை அனைத்தும் சிலந்திவலை போன்ற பலவீனமான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டவையாகும் ஏனெனில் தங்கள் கையிலுள்ள காகித பத்திரத்தின் மதிப்பில் உயர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையும் பெரும் பணத்தை எளிதான முறையில் லாபமாக ஈட்டிவிடலாம் என்ற மனிதர்களின் பேராசையும் இவற்றின் கவர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்றன, காலையில் சூரியன் உதயமானவுடன் எழுந்து நிதிச்சந்தையின் வர்த்தக அரங்குகளில் நடைபெறும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு கொள்ளை லாபம் ஈட்டவேண்டும் என்ற பேராசை கொண்ட மேற்கத்தியர்களின் சூதாட்ட மோகத்தை அடித்தளமாகக் கொண்டதுதான் இந்த நிதிச்சந்தைகள், அமெரிக்காவின் அடமானமுறை வீட்டுக் கடன் திட்டத்தில் முதலீடு செய்திருந்த வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் விற்பனை செய்யப்பட்ட நிதிச்சந்தைகளில் இத்தகை நிலைதான் காணப்பட்டது, இந்த சந்தைகளில் ஈடுபட்டிருக்கும் இடைத்தரகர்கள் (brokers) பொதுமக்களின் சார்பாக வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு பெரும் தொகையை தரகுப் பணமாக பெற்றுக் கொள்கிறார்கள்,
இயல்பான காரணத்தினாலோ அல்லது எதிர்பாராத காரணத்தினாலோ நிறுவனங்கள் மீதுள்ள நம்பிக்கையில் சந்தேகம் ஏற்படும்போது பங்குச்சந்தைகளில் குளறுபடிகள் ஏற்படத் துவங்கி விடுகின்றன, இத்தகைய தருணங்களில் பங்குகளை வைத்திருப்பவர்கள் அதுவரை ஈட்டிய லாபம் தங்கள் கையை விட்டுச் சென்று விடக் கூடாது என்பதற்காக தங்களிடம் உள்ள பங்குகளை விரைவாக விற்பனை செய்து விடுவதற்கு முற்படுகிறார்கள், பங்குகளை கையில் வைத்திருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் பங்குகளை விற்பதற்கு முற்படும்போது பங்குகளை விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை ஆச்சரியப்படும் வகையில் அதிகரித்து விடுகிறது, இதன் விளைவாக பங்குகளின் விலையில் தொடர்ந்து சரிவுகள் ஏற்படுகின்றன, இதுபோன்ற சூழல் ஏற்படும்போது 1929ல் ஏற்பட்டது போன்றோ அல்லது 1987ல் ஏற்பட்டது போன்றோ அல்லது 1997ல் ஏற்பட்டது போன்றோ பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று மக்கள் அச்சம் கொள்கிறார்கள், இதன் காரணமாக துரிதமாக பங்குகளை விற்று நஷ்டத்திலிருந்து தங்களை பாதகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தங்களிடமுள்ள பங்குகள் அனைத்தையும் விற்பதற்கு முனையும் போது பங்குகளின் விலை உச்சகட்டமான வீழ்ச்சியை சந்திக்கிறது, இதன் முடிவாக குறிபிட்ட பங்குகளை வாங்கியவர்களும் அந்த பங்குகளை வாங்குவதற்கு கடன் கொடுத்த வங்கிகளும் பெரும் நஷ்டத்தை அடைகின்றன, இதன் விளைவாக உள்ளூர் நாணயங்களின் செலாவணி மதிப்பில் (exchange rate of local currency) வீழ்ச்சி ஏற்பட்டு பொருளாதார பின்னடைவும் நிதி நெருக்கடிகளும் தவிர்க்க இயலாத முறையில் ஏற்பட்டு விடுகின்றன,
முதலாளித்துவக் கொள்கையும் மேற்கத்திய சமுதாயமும் இன்று எதிர் கொண்டுள்ள பொருளாதார அதிர்வுகளை அறிந்துகொள்ளும் விழிப்புணர்வு கொண்ட முஸ்லிம்கள் எவரும் அதுபற்றி வருத்தம் அடைய மாட்டார்கள், ஏனெனில் தவறான அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரம் ஒருநாள் இடிந்து விழ்ந்துவிடும் என்பதை அவர்கள் அறிவார்கள், ஆனால் மலேசியா. இந்தோனீசியா மற்றும் இதர நாடுகளிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து வருத்தம் கொள்ளாமல் இருக்க முடியாது, இந்த முஸ்லிம்கள் மேற்கத்திய முதலாளித்துவக் கொள்கை மீதும் அதன் கலாச்சாரத்தின் மீதும் மோகம் கொண்டவர்களாக அதை பின்பற்றி செயல் படுவதோடு முழுமையான பொருளாதார முன்னேற்றம் என்ற போர்வையில் அது எழுப்பிக் கொண்டிருக்கும் தாராள வர்த்தக கொள்கை என்ற கோஷத்தின் மீதும் அது வாக்குறுதி அளிக்கும் பொரளாதார முன்னேற்றத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள், இதனால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவிற்கும் பெருந்துயரத்திற்கும் உள்ளாக்கி இருக்கும் மேற்கத்தியர்களின் கைகளில் தங்கள் முதலீடுகள் சென்றடைகின்றன என்பதையும் அதன் மூலமாக இந்த முஸ்லிம்ள் அவர்களின் பொருளாதாரக் கொள்கையிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் பங்கு கொள்கிறார்கள் என்பதையும் இதனால் மேற்கத்தியர்களின் கனரக ஆலைகள் முஸ்லிம் உலகத்தில் நிர்மாணிக்கப் படுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது என்பதையும் அங்கு மலிவான ஊதியம் கொடுக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் மேற்கத்தியர்களின் ஆடம்பர வாழ்க்கைக்குரிய பொருட்களும் அத்யாவசிய தேவைக்குரிய பொருட்களும் தயாரிக்கப் படுகின்றன என்பதையும் இந்த முஸ்லிம்கள் ஒருபோதும் உணர்ந்து கொள்வதில்லை, பங்குச்சந்தைகள் போன்ற முதலாளித்துவ பொருளாதார சிந்தனைகளை தழுவி இருக்கும் முஸ்லிம்களைக் குறித்து விழிப்புணர்வு கொண்ட முஸ்லிம்கள் கவலை அடைந்துள்ளனர், சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் செய்தி ஊடகங்களின் துணையுடன் திட்டமிட்ட திடமான பிரச்சாரங்களை மேற்கொண்டு முதலாளித்துவ சிந்தனைக்கு மாற்றாக இன்றைய உலகில் எந்த சிந்தனையும் இல்லை என்று கூறுவதின் மூலமும் இன்றைய காலகட்டம் முதலாளித்துவத்தின் பொற்காலம் (ஞ்ர்ப்க்ங்ய் ங்ழ்ஹ) என்று கோஷமிடுவதின் மூலமும் அமெரிக்கா உலக மக்களை ஏமாற்றி வருகிறது என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்,
மேற்குலகின் பிரதான பங்குச்சந்தைகளில் திரும்பத்திரும்ப ஏற்பட்டு வரும் அதிர்வுகள் அவர்களின் பொருளாதாரக் கொள்கை பலவீனமான சிலந்திவலை போன்றது என்பதையும். அதன் தவறான அடித்தளத்தை இன்றைய சூழல் வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது என்பதையும். அது ஒளிர்கிறது என்பது அப்பட்டமான பொய் என்பதையும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன, முதலாளித்துவ பொருளாதார சிந்தனை என்பது குறுகிய சுயநல நோக்கம் கொண்டதாகும், அது மனிதனை படுபாதாளத்திற்கு இட்டுச் சென்றுவிடும் ஏனெனில் அது மனிதனின் கீழ்த்தரமான நோக்கங்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது, இந்த சிந்தனையை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் செயல்படும் சமுதாயத்தின் உண்மைநிலை எவ்வாறு இருக்கும் என்றால் உலக லாபத்தையும் உடல் இன்பத்தையும் பிரதான இலட்சியமாகக் கொண்டு வாழ்க்கை வசதிகளை அடைந்து கொள்வதற்காக மூச்சுத்திணறும் கடும் போட்டியை மேற்கொண்டு உற்பத்தியையும் அதை நுகர்வதையும் தவிர வேறெந்த சமூக மாண்புகளுக்கும் இடமில்லாத மிருகநிலையில சுற்றித்திரியும் மானிட கூட்டமாக அந்த சமுதாயம் மாறிவிடும், இத்தகை சமுதாயத்தில் வாழம் மக்களில் ஒருசிலர் மட்டும் பெரும் செல்வத்தைப் பெற்று ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் எஞ்சியுள்ள பெரும்பான்மை மக்கள் கஷ்டமான உழைப்பிலும் வறுமையான வாழ்க்கையிலும் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பார்கள், வறுமையின் கோரப்பிடியில் சிக்கி துயரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதால் ஓயாத மனப்போராட்டத்திற்கு ஆளாகியிருப்பார்கள், முதலாளித்துவக் கொள்கையால் மக்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கும் அது உண்மையில் பலவீனமான சிலந்திவலை போன்றது என்பதை உணர்ந்து கொள்வதற்கும் போதுமான ஆதாரங்கள் வெளிப்பட்டு விட்டன, இதை உணர்ந்து கொள்வதற்கு மேற்கத்திய பொருளாதாரக் கொள்கையிலிருந்து உருவான பங்குச்சந்தையின் மூலமாக மாபெரும் பொருளாதார சீரழிவு ஏற்படும்வரை காத்திருக்க வேண்டும் என்று எண்ணினால் அது தவறானதாகும், மேற்கத்தியர்களின் சிந்தனைகளையும் அவர்களின் செயல்பாடுகளில் பலவற்றையும் இஸ்லாம் தடை செய்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதும் அவர்களின் ஊழலை வெட்டவெளிச்சம் ஆக்குவதற்காக அவர்களின் சிந்தனையை விரிவான முறையில் ஆய்வு செய்வதும் முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய பணியாகும்,
முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் கீழ்கண்ட மூன்று அமைப்புகளை அடித்தளமாகக் கொண்டுதான் மேற்கு நாடுகளின் பங்குச்சந்தைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, இந்த மூன்று அமைப்புகள் இல்லையெனும் பட்சத்தில் அவைகள் இருக்கவே முடியாது. அவையாவன:
1) பொதுத்துறை நிறுவன அமைப்பு (Public limited company system - PLC)
2) வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகள் அமைப்பு (Usurious banking system) 3)மாற்றிக் கொள்ள முடியாத காகித நாணயமுறை (inconvertible paper money standard)
இந்த மூன்று அமைப்புகள் இயங்கிக் கொண்டிருப்பதால் முதலாளித்துவ பொருளாதாரத்தில் இரண்டுவகை பொருளாதாரங்கள் அல்லது இரண்டுவகை சந்தைகள் இருந்து வருகின்றன, முதல்வகை பொருளாதாரம் உண்மையான பொருளாதாரமாக (real economy) இருக்கிறது அதில் உண்மையான பொருட்களை உற்பத்தி செய்தல் அவற்றில் உண்மையான வர்த்தகத்தை மேற்கொள்ளுதல் உண்மையான பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய செயல்பாடுகள் நடந்து வருகின்றன, இரண்டாவதுவகை பொருளாதாரம் நிதிச்சந்தை பொருôதாரம் (financial economy or financial markets) இதை ஒட்டுண்ணி பொருளாதாரம் (parasite economy) என்றும் அழைக்கிறார்கள், இதில் நிதியியல் சார்ந்த ஆவணப்பத்திரங்களின் (financial documents) வர்த்தகம் நடைபெறுகின்றன, இந்த சந்தைகளில் மாற்றக்கூடிய பிணை ஒப்பந்தங்கள் (transferable binding certificates) காசோலைகள் (cheques) நிதிப்பத்திரங்கள் securities) ரொக்கப்பத்திரங்கள் (cash certificates) பங்குகள் (shares) பங்குப்பத்திரங்கள் (bonds) ஆகியவற்றை வாங்குவதிலும் விற்பனை செய்வதிலும் மக்கள் ஈடுபடுகிறார்கள், ஒவ்வொரு நாளும் நிலவும் விலையேற்றத்தின் அடிப்படையில் லாபம் ஈட்டும் நோக்கத்தோடு இவற்றை வாங்குவதிலும் விற்பதிலும் மக்கள் ஈடுபடுகிறார்கள், உண்மையான பொருட்களில் மேற்கொள்ளப்படும் வர்த்தகங்களின் மதிப்பை விட பன்மடங்கு மதிப்புள்ள வர்த்தகம் இந்த நிதிச்சந்தைகளில் மேற்கொள்ளப்படுவதாக கணக்கிடப் பட்டுள்ளது,
TO BE CONTINUE.....
No comments:
Post a Comment