Apr 26, 2013

நாம் சந்தித்த வரலாறும் அனுபவிக்கும் வரலாறும்

ஹிஜ்ரி 656 ஆம் ஆண்டு சபர் மாதம் பிறை 4 அன்று மங்கோலியர்கள் (தாத்தாரியர் ) பக்தாத்தில் இருந்த இஸ்லாமிய கிலாபத்துக்கு எதிராக படை எடுத்தனர் .ஒரு இலட்சத்துக்கும்அதிகமான முஸ்லீம்களை படுகொலை செய்தனர் பக்தாதை பிணக்காடாக மாற்றினர் . முஸ்லீம்களின் அறிவுப் பொக்கிசமான நூல் நிலையத்தை சின்னா பின்னமாக்கினர் . அந்த 'பைத்துல் ஹிக்மா ' விலுள்ள நூல்களை 'யூப்பிரடீஸ் ' நதியில் வீசியபோது அந்த நதியே சில மாதங்கள் கருப்பாக ஓடியதாக வரலாறு கண்ணீரோடு சொல்கிறது . இந்த வெறியாட்டத்தின் பின் கூட இஸ்லாத்தை துடைத்தெறிய முடியவில்லை .

முஜ்தஹித்களின் பிரச்சார தொடர் முயற்சிகளும் , முஜாஹித்களின் தொடர் சமரும் மீண்டும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக தொடர்ந்தது .தடுக்க முடியாது எனக்கருதிய தாத்தாரிய வாட்பலம் 'ஜைன் ஜலூத்தில் ' ஒரு ரமலானில் முஸ்லீம்களால் தவிடு பொடியாக்கப் பட்டது . அதே நேரம் சிந்தனா தரத்தில் தாத்தாரியர் இஸ்லாத்தினால் கவரவும் பட்டார்கள் .காலம் மலர்ந்தது மீண்டும் கிலாபாவின் கீழ் இஸ்லாமிய உம்மத் அணிதிரண்டது .

ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (1924 மார்ச் 3) அதேபோல முதலாளித்துவமும் கிலாபா அரசு மீது தமது காலனித்துவ ஆதிக்க ஆட்சியை நிறுவியது . ஆனால் இம்முறை வன்முறை இராணுவத்தை மறைத்து சிந்தனை இராணுவத்தை முன் அனுப்பியது . இப்போது தேசிய சிறைகளில் இந்த முஸ்லீம் உம்மத்தை சிறைவைத்து , ஏறத்தாள ஒரு நூற்றாண்டை நெருங்கிய நிலையில் தம் இஷ்டம் போல் எதிரிகள் முஸ்லீம் உம்மத்தின் மீது அத்துமீறினார்கள் ,(கம்பியூநிசமும் தமது சிந்தனை, இராணுவத்தோடு இதில் பங்களிப்பு செய்தது )


இப்போதும் முஜ்தஹித்களின் தொடர் முயற்சிகளும் , முஜாஹித்களின் தொடர் சமரும் மீண்டும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக தொடர்ந்தது . இந்த எதிர் தாக்குதலை சந்திக்க வன்முறை இராணுவத்தை முதலாளித்துவ தாகூத்கள் நேரடியாகவும் , மறைமுகமாகவும் அனுப்பினார்கள் . அத்தோடு ஜனநாயகம் எனும் சிந்தனைக் கிருமி யுத்தத்தையும் மேட்கொண்டார்கள் .(அந்தக்கிருமியின் சிறப்பான பணி என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமின் முன்னும் தன்னை இஸ்லாமாக காட்டும் . இந்த ஆபத்தான கிருமி யுத்தம் இந்த உம்மத்தின் அதிகமானோரை 'சமரசம் 'எனும் தொற்று நோயோடு அலைய விட்டது .) இருந்தும் மறுமலர்ச்சிக்கான சரியான போராட்டமும் தொடர்கின்றது .

No comments:

Post a Comment