May 2, 2013

இந்தியா ,பாகிஸ்தான் , பங்களாதேஷ் காட்டும் அரசியல் முதலாளித்துவ பொய் முகங்களா!??


முக நூலில் சில பதிவுகளை நான் பார்த்தேன். இன்றைய தூய்மை கெட்ட அரசியல் அதிகாரங்களின் போலி நியாய சதிப் பொறியில் பக்குவமாக சிக்கிய முஸ்லீம் உம்மாவின் குரலாகவே இந்த விடயத்தை கருதவேண்டியுள்ளது. அந்த விபரம் இதுதான்.

பாகிஸ்தான் அரசியலில் இந்துக்களுக்கு விகிதாசார இட ஒதுக்கீடு கொடுக்கப் பட்டுள்ளது தொடர்பில் பாகிஸ்தானின் நடத்தையை ஒரு பெருந்தன்மையாக காட்டி இந்திய அரசியலை விமர்சித்து அந்த விபரம் அமைந்திருந்தது.

இந்தியா , பாகிஸ்தான், பங்களாதேஷ் என்பனவற்றின் நிகழ்கால அரசியல் வடிவத்தின் அத்திவாரமே முரண்பாட்டு அரசியல் அல்லது முரண்பாட்டு அரசியலுக்கான சந்தர்ப்பவாத கூட்டு என்பதாகவே காணப்படுவதை வரலாறு தெரியாதவர்களே மறுக்க முடியும்.

அந்த வகையில் கொலை வெறித்தனம் , சந்தர்ப்பவாதம் , காடைத்தனம், ஏமாற்று என்பவற்றின் சர்வதேச மொத்த உருவங்களின் பிராந்தியப் பிரதிகளாக முதலாளித்துவ காலானித்துவம் சுயலாபம் கருதி இந்த தேசியங்களை உருவாக்கியுள்ளது.

இத்தகு தவறான அரசியல் வடிவத்தின் போலி நியாயங்களை அந்த முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் சேவகர்களாக பணியாற்றும் பொம்மை ஆட்சியாளர்கள் அவ்வப்போது வெளியிடும் போது இந்த கொடூர வைரஸ் சிந்தனையை ஒருமாற்று மருந்தாக மக்கள்
கருதிக் கொள்கிறார்கள். சில நேரம் தூரத்துப் பச்சையாக தெரியும் சில விடயங்கள் அக்கரைக்கு செல்லும் போது கானல் நீராகி இல்லாமல் போய்விடும். அதுதான் 'தீமோ கிரஸி' காட்டும் தெளிவான 'மாஜிக்'!

உலகம் ஒரு தவறான சித்தாந்த வழிமுறையை இன்று தனது வாழ்வியலாக எடுத்துக் கொண்டுள்ளது. இதிலிருந்து தான் மனித சிந்தனை தனது தீர்வுகளையும் ,ஆதாரங்களையும் எடுக்கப் பழகி விட்டது. இதில் முஸ்லிமும் விதிவிலக்கல்ல. இஸ்லாத்தின் அரசியலும் அதன் இறந்த கால பிரயோகம் , நிகழ்கால நிலை , அதன் எதிர்கால மீள்வருகை தொடர்பில் சுன்னாவை முன்னிறுத்தி சிந்திப்பதில் முஸ்லீம் பாமரர் முதல் மாக்கம் படித்த இஸ்லாமிய
இயக்கங்கள் வரை ஒரு 'தியறியாக' கருதி 'பிரேக்டிகல் வே' ஆக சொல்வது ஜெர்மனியின் ஜனநாயகத்தையும் , பாகிஸ்தான் அரசியலில் இந்துக்களுக்கானஇட ஒதுக்கீடு பற்றியும் தான் என்றால் அது தவறான முடிவு.

அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கிய இந்தியா சிலநேரம் சில பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு உள்நாட்டுக் கொடுமை காரணமாக சிறந்த அரசியல் முன்மாதிரியாக தெரியலாம்!? எது எப்படியோ ஒரு சாக்கடை சித்தாந்தம் சந்தனமாக உலா விடப் படுகிறது. 'ஆலையில்லாத ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரையாம் !? '

(தொடரும்)

No comments:

Post a Comment