Jun 21, 2013

அந்நாள் வெகு தூரமில்லை .........


அறியாமையை அகற்றி சத்திய ஒளி கொடுத்தது தாருல் இஸ்லாம். இருளை வெளிச்சமாக்கி சூனியத்தை பூரணமாய் காட்டும் அசத்திய எதிரி அவன் சாக்கடை அகீதாவை சிந்தனாயுதம் கொண்டு சந்தனமாய் ஏவிய போது அதன் கீழ் ஒரு கொத்தடிமை போல வாழ்ந்தான் முஸ்லிம் ! காலத்தால் அந்த அநாகரீகம் நாகரீகமாய் வாழ்வை ஆக்கிரமிக்க அதில் நியாயம் கண்டான் !

'ஜாஹிலியா ' வரைந்த சித்தாந்த வரிகளில் சுதந்திரம் எனும் சிறைச்சாலை தேசிய வேலியோடு பக்குவமாய் சகோதரத்துவத்தை சிதறடித்து முஸ்லிமை சிறைப்படுத்தியது . மறுபக்கம் இறுமாப்போடு இஸ்ரேலை பலப்படுத்தியது .

எடுபிடிகள் ,கங்கானிகள் என ஏகாதிபத்தியங்களுக்கு தொண்டர் அரசியலை உள்வீட்டு குண்டர்கள் சிலர் பொறுப்பெடுக்க இரத்தம் குடிக்கும் அதிகாரங்கள் முகமூடி போட்டு அடக்குமுறைக்கு ஆட்சி என பெயரிட்டனர் .

செங்கரடியின் நிழலில் 'பச்சைப் புத்தகமும் ' சியோனிச தயவில் சந்தர்ப்ப பொலிடிக்ஸ் என பிர் அவுன்களும் ,நும்ரூத்களும் மீண்டும் தொடராக அரியணை ஏறினர் .நவ காலனித்துவம் விழாக்கோலம் பூண்டது ! சுரண்டல் தத்துவங்கள் 'பொரின் பொலிசியாக ' கொள்ளை இலாபங்களுக்காக அவலக் கொடூரங்கள் முஸ்லீம் பூமிகளில் சாதாரண நிகழ்வாகியது .

காமப் பந்தியில் கண்ணுக்கு விருந்தாக முஸ்லீம் மாதர் நடைபோட வெட்கமும் ,தூய்மையும் பெண்ணுரிமை என்ற மேடையில் தூக்கிலேற்ற தீர்ப்பளிக்கப் பட்டது .கிரெம்ளின் மந்திரமும் வைட் ஹவுஸ் தந்திரமும் என தாகூதிய தாண்டவத்தில் முஸ்லிமில் ஒரு தரப்பு விசுவாசமான பங்காளிகள் ! இன்னும் சிலர் சந்தர்ப்ப கூத்தாடிகள் !

முன்னே தெரியும் 'சத்துருவை ' சந்திக்க பின்னால் நிற்கும் பிசாசை பற்றி அலட்டிக் கொள்ளாமல் தொடரும் களங்களில் நடக்கும் கதைகளில் வஹி சுமந்த உம்மத் பரிதாபமான பலிக்கடாக்கள் தானா ?

மொஸ்கோ சித்தாந்தம் மூச்சடங்கிப் போக வாசிங்டன் வைத்ததுதான் உலக மயமாக்கல் இஸ்லாத்தின் பூமியில் என்ன அது மயான மயமாக்கலா !? ஒத்து வராததால் ஓரம் கட்டும் முயற்சியா ?இன்று நீ ஓதும் மரண வேதங்கள் நிரந்தர வரலாறாகும் எனும் நப்பாசை நிராசையாகும் நாள் வெகு தூரமில்லை இன்ஷா அல்லாஹ் ........

அல்லாஹ்வின் மார்க்கம் போராட்டம் ,இறப்புக்கள் ,இழப்புக்கள் ,சிதைவுகள் என்பவற்றை சந்திக்காமல் மேலோங்கும் என நினைப்பவர்கள் வெறும் கற்பனா வாதிகளே ! 'அல்லாஹு அக்பர் '

No comments:

Post a Comment