அஹிம்சை தொடர்பான பார்வைகளில் அதன் வெளிப்பாடுகள் சில நியாயங்களை மறந்த வன்முறைத் தூண்டல்கள் மூலம் சமூக ஆதரவு மற்றும் ,அரசியல் எதிர்பார்ப்புகள ை நோக்கியதாகவே காணப்படுவதை எவராலும் மறுக்க முடியாது . அனேகமாக அஹிம்சை
சுய சுத்தப்படுத்தலு டன் கூடிய இலக்கு நோக்கிய தற்காலிக கருவியாகவே அநேகமான அரசியல், இராணுவ இயக்கங்களால் இன்று பயன்படுத்தப் படுகின்றன .
ஒரு தனிமனிதன் அல்லது குழு தனது இலட்சியத்துக்கா க ,கோரிக்கைகளுக்க ாக முரண் சக்திகளுக்கு முன் ,முரண் கருத்தியலுக்கு முன் கடுமையான எதிர்ப்பையும் தாங்கி தற்காப்பு அல்லது தாக்குதல் நோக்கமற்று போராடும் வழிமுறையே அஹிம்சை ஆகும் .
உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் இப்படி பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் ,சுய அழிப்புடன் கூடிய கொடூரமான தற்கொலைகளும் இன்று கோரிக்கை அரசியல் வழி அஹிம்சா வழிமுறையாக நடைமுறைப் படுத்தப் படுகின்றன . அனுதாபப் பார்வையின் மூலம் தனது கோரிக்கை சார் ஆதரவு வட்டத்தை அதிகரித்தல் எனும் முதற் கோணம் காரணமாக இங்கு பின்னூட்டல்கள் மூலமான வன்முறை அரசியலை தூண்டும் என்ற இன்னொரு கோணம் நுணுக்கமாக அவதானிக்கப் படுவதில்லை .
அதாவது ஒரு இராணுவ வழி தற்கொலைப் படையாளியின் தாக்குதலின் மூலம் ஏற்படும் சேதத்தை விட, ஒரு குறிப்பிட்ட விடயம் சார் கருத்தியலில் ஆழமான வன்முறை நோக்கு விதைப்பை இத்தகு (அஹிம்சா ரீதியான) சுய அழிப்பு ஏற்படுத்தலாம் . அந்த வகையில் இத்தகு நடவடிக்கைகள் தண்டனைக்குரிய கருத்தியல் வன்முறைத் தூண்டலாகவே பார்க்கப் பட வேண்டும் .
சுய சுத்தப்படுத்தலு
ஒரு தனிமனிதன் அல்லது குழு தனது இலட்சியத்துக்கா
உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம்
அதாவது ஒரு இராணுவ வழி தற்கொலைப் படையாளியின் தாக்குதலின் மூலம் ஏற்படும் சேதத்தை விட, ஒரு குறிப்பிட்ட விடயம் சார் கருத்தியலில் ஆழமான வன்முறை நோக்கு விதைப்பை இத்தகு (அஹிம்சா ரீதியான) சுய அழிப்பு ஏற்படுத்தலாம் . அந்த வகையில் இத்தகு நடவடிக்கைகள் தண்டனைக்குரிய கருத்தியல் வன்முறைத் தூண்டலாகவே பார்க்கப் பட வேண்டும் .
No comments:
Post a Comment