Oct 26, 2013

ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை


ஒற்றுமை என்பது குர்ஆன் சுன்னா அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும்! 

அந்த ஒற்றுமையை ஏற்படுத்தத் தேவையான இஸ்லாம் இழந்துள்ள தலைமை உருவாக்கப்பட்டால் மாத்திரமே நிரந்தரமாக உம்மத் ஒன்றுபடுத்தப்படும்! காரணம் மேற்கினது சிந்தனைத் தாக்கத்திற்குற்பட்டதாக இன்று உம்மத் காணப்படுகிறது.

முஸ்லிம் நாட்டுத் தலைமைகள் மேற்கினது பிரித்தாளும் யுக்தியினது அடிவருடிகளாக மாறி அவர்களது சுயநலன்களுக்காக உம்மத்தை சுரண்டிவாழ்வதுடன் தீனுள் இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைப்பதனை நாம் காணலாம்.

எனவே உம்மத் ஒற்றுமைப்படவேண்டுமாயின் இஸ்லாத்திற்கு அன்னியமான மேற்கினது சிந்தனைகளான “தேசியவாதம் களையப்பட்டு” “உம்மத் மற்றும் சகோதரத்துவ சிந்தனை” ஊட்டப்படவேண்டும்!

மேற்கினது பிரித்தாளும் ஆட்சிமுறையினது கருவியான “மனிதன் சட்டத்தை ஆக்கும் ஜனனாயகப் பாராளுமன்ற முறை” மூலமான ஆட்சிமுறை மாறி “கிலாபா ஆட்சி” வரவேண்டும்!

“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்” (ஆல-இம்ரான்:103)

''முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.'' (ஸுரா : அர்ரூம் :32)

''எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை.'' (அல் அன்ஆம் :159)

No comments:

Post a Comment