Oct 3, 2013

முதலாளித்துவம் கூறும் மனித உரிமையும் இஸ்லாத்தில் அதன் நிலைப்பாடும்?

முதலாளித்துவக்கொள்கையில் ஒரு குறிப்பிடப்படும்படியான அம்சம் மனிதஉரிமை மற்றும் அதனை பாதுகாத்தல் ஆகும்.

அவ்வுரிமைகளாவன, வழிபாட்டு உரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை மற்றும் தனிமனித உரிமைகளாகும்.

சொத்துரிமையானது இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவக் கொள்கையின் வழித்தோன்றலேயாகும். இதன் மூலம் தனியுடமைக்கம்பெனிகள் தோன்றி மக்களை காலனிகளாக்கி அவர்களின் வளங்களை அபகரிக்கத் தூண்டுகின்றன.

மேற்கண்ட உரிமைகள் இஸ்லாத்திற்கு முற்றிலும் மாறுபட்டவையாகும். ஒரு முஸ்லிமிற்கு அல்லாஹ்வை தவிர வேறொரு கடவுளை வணங்க அனுமதியில்லை.

இஸ்லாத்தின் கருத்துக்களைத்தவிர வேறு எந்தக்கருத்துக்களையும்; ஏற்றுக்கொள்ள ஒரு முஸ்லிமிற்கு அனுமதியில்லை.

சொத்துரிமை என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைவதேயாகும். முதலாளித்துவக் கொள்கையான “முடிந்தால் எந்தவகையான சொத்துக்களையும்எப்படிவேண்டுமானாலும் அடையலாம்" என்பது இஸ்லாத்தில் இல்லை.

இஸ்லாத்தில் தனி மனிதனுக்கு தடுக்கப்பட்டவையான சொத்துக்களை அடைய முடியாது. வட்டி கொடுத்தல் வாங்குதல் மூலம் சம்பாதிப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானம், விற்றல், பன்றி இறைச்சி மூலம் சம்பாதித்தல் போன்றவை தடுக்கப்பட்டுள்ளன.

எனவே எவ்வழிகளில் சொத்துக்களை சம்பாதிக்க முடியும் என்பதை இஸ்லாம் வரையறைசெய்துள்ளது.

தனிமனித சுதந்திரம் என்பது. இஸ்லாத்தில் இல்லை. எந்த மனிதனும் இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு உட்பட்டே நடக்கவேண்டும்.

எனவே சுதந்திரம் என முதலாளித்துவக்கொள்கையில் வரையறுக்கப்பட்ட எவையும் சுதந்திரம் அல்ல. மேலும் அவை இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளாகும்.

No comments:

Post a Comment