Mar 6, 2014

கிலாஃபத்தின் மீள் வருகையை தடுக்கும் ரஷியா மற்றும் உலக நாடுகள்

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரொவ் இரண்டாவது ஜெனீவா மாநாடு  முடிவுற்றதும்  NTV தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
“சிரியாவின் அரசியல் நிகழ்வானது தன் தாய்நாட்டின் சிந்தனை கொண்ட ஆரோக்கியமான சக்திகளுக்கிடையே ஒருங்கிணைந்ததாக அமைய வேண்டுமே தவிர, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் கிலாஃபத்தினை மீண்டும் நிறுவுவதற்காக  அமையக்கூடாது. தாய்நாட்டின் சிந்தனை கொண்ட சக்திகளை ஒருங்கிணைத்து பல வழிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும். இதுவே அனைத்து பிராந்தியத்திற்கும்  அனைத்து உலகிற்குமான குறிக்கோளாகும்”.
 
2014 ஆம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி லாவ்ரொவ் இவ்வாறு  கூறினார், ” பேச்சுவார்த்தையின் முதற்கட்டத்தில், அங்குள்ள குழுக்கள் ஒருங்கிணைந்து தற்போது நிலவும் பன்முக நம்பிக்கை மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கும்  சிரியாவை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்துவதே   முக்கியம் வாய்ந்த சமிக்ஞையாக அமையும் என கருதுகிறேன்.”
 
2013 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம் தேதி VESTI 24க்கு அளித்த பேட்டியில் செர்ஜி லாவ்ரொவ் கூறியதாவது:-
 
 ”சிரிய தேசப்பற்றுடையவர்கள் எது மிகவும் முக்கியமானது என புரிந்து கொள்ளும் நிர்பந்தத்தில் உள்ளார்கள்! சிரியாவில் கிலாஃபா ஏற்பட போராடுபவர்களுடன் சேர்ந்து சண்டையிடுவதா?  அல்லது  நூற்றாண்டு காலமாக புகழ்பெற்ற பன்முக கலாச்சாரம் மற்றும் பன்முக நம்பிக்கை கொண்ட மதச்சார்பற்ற, அனைத்து மக்களும் சுகபோகமாக வாழும் நிலைக்காக ஒன்றினைந்து போராடுவதா?  என்பதாகும்.” இந்த விஷயமே இரண்டாவது  ஜெனீவா மாநாட்டின் முதன்மையானதாக இருக்கும் என்பதை பேட்டியில் இறுதியாக சுட்டிக்காட்டினார்.
 
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் இவ்வனைத்து கூற்றுகளும் பின் வருவனவற்றை சட்டிக்காட்டுகிறது.
 
1. ரஷ்யாவும் மற்ற மேற்கு நாடுகளும் மத்திய கிழக்கில் உலகளாவிய அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான தருணம் வந்து விட்டதை உணர்ந்துள்ளனர். மேலும் சிரியாவில் கிலாஃபா  மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளையும் அவர்கள் மறைக்கவில்லை. மேற்குலகும் அதன் தோழமை நாடுகளும் தங்களால் இயன்ற அளவு முஸ்லிம்  நாடுகளில் இஸ்லாத்தின் அடிப்படியிலான நீதி மீண்டும் நிலைநாட்டப்படும் நாளை தள்ளிப்போட முயற்சி செய்கிறார்கள்.அந்நாளானது முஸ்லிம்களுக்கு தங்கள் மீது அடக்குமுறை செலுத்திவரும் பொய்யான  ஆட்சியாளர்களின் சகாப்தம், அநீதி மற்றும் அடக்குமுறைகளில் இருந்து முடிவு பெறும் நாளாக அமையும்.கிலாஃபத்தை மீண்டும் நிறுவி முஸ்லிம் உம்மத்தை ஒருங்கிணைத்து, முஸ்லிம்கள் தாங்கள் இழந்த பெருமையை மீண்டும் ஏற்படுத்தும் ஓர் அமீரை பெறுவார்கள் என்பதை இஸ்லாத்தின் எதிரிகளும் உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து இரண்டாம் ஜெனீவா மாநாடு நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை அமைத்து, கிலாஃபா மீண்டும் வருவதை தடுக்க விரும்புகிறார்கள். மதச்சார்பற்ற குழுக்களை தங்கள் பால் வென்றெடுத்து போராட்டக்காரர்களை அவர்களிலிருந்து தனித்து வெளிப்படுத்தவும், கொலைகார பஷாருல் அசாதிற்கு மாற்றான ஒன்றை  கண்டெடுத்து சிரியாவில் மதச்சார்பற்ற அரசை தக்கவைத்துக்கொள்ளவும் முயல்கிறார்கள்.
2.  கிலாஃபா  மீண்டும் உருவாகுவதினால் ஏற்படும் புவியரசியல் மாற்றங்கள் குறித்து ரஷ்யா மிகவும் அச்சம் கொண்டுள்ளதை லாவ்ரொவின் வாக்குமூலம் சுட்டிக்காட்டுகிறது; ஏனெனில் அது எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தக தொடர்புக்கு இடையூறாக இருக்கும்.அதைவிட தன் சித்தாந்தம் வரவிருக்கின்ற இஸ்லாமிய அரசிற்குமுன் பலவீனமாக உள்ளதாக ரஷ்யா கருதுகிறது, ஆகவே அது தன் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்தை மீடியாக்கள் மூலமாகவும் வெளியுறவு அமைச்சகத்தின் வாயிலாகவும் செய்து வருகிறது. இஸ்லாத்தை முழுவதுமாக நிலைநாட்டுவதன் மூலம் கிலாஃபத்தானது தன் சித்தாந்தத்தை வெற்றிகரமாக பரவச்செய்து மக்களையும் அவர்களது கலாச்சாரங்களையும் கரைத்து அவர்களை ஒரே  முஸ்லிம் உம்மத்தாக  மாற்றியமைப்பதை வரலாறு நமக்கு காட்டியுள்ளது. ரஷ்யாவின் உண்மை நிலையை எடுத்துக்கொள்வோமேயானால், தற்போது அங்கு 2 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள்  வசிக்கின்றனர். மேலும் முந்தைய சோவியத்தின் நாடுகளிடையேயும் இஸ்லாம் வேகமாக பரவி வருவதைக் கண்டு அரசு அதிகாரிகள் மிகவும் அச்சம் கொண்டுள்ளனர்.
 
3. ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் தன்னுடைய குறிக்கோளை மறைத்து வைக்கவில்லை. மேலும் சிரிய அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ரஷிய வெளியுறவு அமைச்சகம் தடுக்க விருப்பம் கொண்டுள்ளதாக அவர் கூறவில்லை. மாறாக  இரண்டாம்  ஜெனீவா மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக, மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பஷாருல்  அசாத் அரசுடன் இனைந்து இஸ்லாத்தினை நிலைநாட்ட போராடுபவர்களை எதிர்கொள்வதே தங்களின் குறிக்கோளாகும்  என்று  வெளிப்படையாக கூறினார். கொலைகாரன் பஷாருல் அசாத்  தொடர்ந்து அப்பாவி முதியோர்களையும், குழந்தைகளையும் கொல்வதற்கு  லாவ்ரொவ் ஆதரவு அளித்து வருகிறார்.மேலும்  சிரியாவின்  விஷயம்  ரஷ்யாவிற்கு கவலை அளிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று  வெளிப்படையாக கூறினார்.
 
4. சிரியாவில் ஆயுத தாக்குதலை முதன் முதலில் பஷாருல்  அசாத்  ஆரம்பித்து குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களை கொன்றொழித்துக் கொண்டிருப்பதை ரஷிய வெளியுறவுத்துறை நன்கு அறிந்துள்ளது.தொடர்ச்சியான இந்த கொலைகள்தான், பஷாருல் அசாத்   அரசிற்கு எதிராக மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதம் தாங்கி போராட வைத்ததோடு  பிறநாடுகளை சார்ந்த முஜாஹிதீன்களும்  இதற்காக  சிரியா  சென்று அவர்களுடன் இணைந்து போராடி வருவதையும் லாவ்ரொவ் நன்கு அறிந்திருந்தார். மேலும் பஷாருல் அசாதின்  இத்தனை அட்டூழியங்களினாலும் மற்றும் அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் உயிர்களை காப்பாற்றுகிறோம் என்ற நயவஞ்சகத்தன்மை கொண்ட பேச்சுக்கள் மூலம் மேலும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாலும், சிரிய மக்கள் இது போன்ற மதச்சார்பற்ற அரசை அகற்றி கிலாஃபத்தை ஏற்படுத்த விரும்புவதை லாவ்ரொவ் புரிந்துள்ளார். அப்படி இருந்தும் லாவ்ரொவ் கிலாஃபத்தை ஏற்படுத்தி சிரியாவை பாதுகாக்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுகிறான். மாறாக பஷார் தான் சிரியாவில் மிக முக்கிய பயங்கரவாதியாக உள்ளான். அவன் முதியோர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களையும் ரஷிய ஆயுதங்கள் மூலம்  கொன்று குவித்து வருகிறான். இவையனைத்தும் குஃப்ஃபார் நாடுகள் எப்படி தங்களது விருப்பங்கள் மீது கவலை கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. சிரிய மக்களின் நலனுக்காக பாடுபடுகிறோம் என்ற நயவஞ்சகத்தன்மை கொண்ட பேச்சு,அவர்கள் கிலாஃபத் மீண்டும் வராமல் தடுக்க ஒன்று சேர்ந்துள்ளதை காட்டுகிறது. சிரியா ஒரு நூற்றாண்டு காலமாகத்தான் மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதையும், இஸ்லாம் கடைப்பிடிக்கப்பட்டதற்கான ஒரு நெடிய வரலாறு இருப்பதையும் லாவ்ரொவ் தெரிந்து கொள்ள வேண்டும். ஷாம் தேசத்து முஸ்லிம்கள் தான் இந்த மண்ணை மகிமைப்படுத்தியுள்ளனர் மாறாக சாபத்திற்குரிய பஷாருல் அசாதின் குடும்பத்தினர் அல்ல, மேலும் வெகுவிரைவில் இறைவனின் நாட்டப்படி எதிரிகளின் அனைத்து சூழ்ச்சிகளையும் தாண்டி ஷாம் தேசமானது இரண்டாம் முறையாக தூய வடிவிலான கிலாஃபத்தின் தொட்டிலாக மாறும்.
அல்லாஹ்(சுப) கூறுகிறான்:-
 
يُرِيدُونَ أَن يُطْفِؤُواْ نُورَ اللّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللّهُ إِلاَّ أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
 
“அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாயால் ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!” (அத்தவ்பா 9:32)
 
இன்று ரஷியா மற்ற மேற்குலக நாடுகளுடன் சேர்ந்து அல்லாஹ்வின் சத்தியத்தை தடுக்க நாடுவதை நாம் கண் கூடாக காண்கிறோம்.தங்களுடைய விடிவுகாலம் என்பது, பஷாரை தூக்கி ஏறிவதன் மூலம் மட்டுமில்லை என்பதையும்  இஸ்லாத்தை  நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே என்பதையும் உணர்ந்தே  சிரிய முஸ்லிம்கள் தங்களின் பார்வைகளை மார்க்கத்தின் பால் நோக்கி இருக்கின்றார்கள்.  “இஸ்லாத்தின் மூலம் மட்டுமே உங்களது கவுரவம் மற்றும் சந்தோஷம்உறுதிப்படும் “ என்ற  உமர்(ரலி)அவர்களின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தவாறு முஸ்லிம்கள் இந்த முதலாளித்துவ அமைப்பை பிடுங்கியெறிந்து இஸ்லாத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். ஷாம் தேசத்து மக்கள், மேற்குலகின்  கீழ்த்தரமான வாழ்வுமுறையும் கலாச்சாரத்தையும்  இறைத்தொடர்பற்ற மதச்சார்பற்ற அமைப்பையும் மேற்குலகு  தங்களின் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் தான் லாவ்ரொவும், கெர்ரியும் ஷாம் தேசத்து மக்களின் உண்மையான முன்னேற்றத்திலிருந்து அவர்களை திசைதிருப்ப முடியவில்லை.
 
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُم فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْفَاسِقُونَ “
 
 உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அந்நூர் 24:55)
 
நபி (ஸல்)அவர்கள் மீண்டும் கிலாஃபா வரும் என்று நற்செய்தி கூறியுள்ளார்கள்:-
 
تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ اللَّهُ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا، فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيَّةً، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ نُبُوَّةٍ» ثُمَّ سَكَتَ
 
     “அல்லாஹ் நாடியவரையிலும் உங்களிடையே நபித்துவம் இருக்கும், அதன்பின் அவன் நாடும்போது அதை நீக்கிவிடுவான்..பிறகு நபித்துவத்தின் வழியிலான   கிலாஃபா அரசு அல்லாஹ் நாடியவரையிலும் இருக்கும். அதன் பிறகு அல்லாஹ் நாடும்போது அதை உயர்த்திவிடுவான் அதன்பின் வம்சாவழி ஆட்சி அல்லாஹ் நாடியவரை இருக்கும். அதன்பின் அவன் நாடும்போது  அதை நீக்கிவிடுவான்.அதன்பின் அடக்குமுறை ஆட்சி அல்லாஹ் நாடியவரையிலும் இருக்கும்.அதன்பின் அவன் நாடும்போது  அதை நீக்கிவிடுவான். அதன்பிறகு நபித்துவத்தின் வழியிலான  கிலாஃபா தோன்றும் என்றுகூறி அமைதிகாத்தார்கள்”                                                                   (முஸ்னத் அஹ்மத்)
 
வரவிருக்கின்ற கிலாபா ஆட்சி என்பது  மக்களை நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தின் அடிப்படையில் ஆட்சி புரியும். மேலும் இஸ்லாத்தை  அண்டை நாடுகளில் பரவச்செய்யும். சுவனம் மற்றும் பூமியில் உள்ள ஜீவராசிகள் இதனால் மகிழ்ச்சியடையும், சுவனம் அதிகமான தண்ணீரை கொட்டும், மற்றும் பூமி அதனுடைய பலன்கள் அனைத்தையும் காணச்செய்யும்.
யா அல்லாஹ்! உன்னிடமே வேண்டுகிறோம்!
 
கொலைகாரன் பஷாரும் அவனுக்கு ஷாமின் முஸ்லிம்களை கொல்ல உதவுபவர்களும் உன்னுடைய தண்டனைக்கு தகுதியானவர்களே… அவர்களை தண்டிப்பாயாக!  அவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஏற்கெனவே உள்ள இவ்வுலகின் அழிவுகளை இறக்குவாயாக. உன்னிடமே கேட்கிறோம்! அடக்குமுறைக்கு ஆளானவர்களுக்கு உதவுபவனே! உண்மையானவனே! ஞானம் மிக்கவனே! ஷாமில் நிலை பெற்றுவரும் புனித புரட்சிக்கு எதிராக மேற்குலகு செய்யும் சதிகளை அழித்து அருள் புரிவாயாக! எல்லாவற்றையும் கேட்கக்கூடியவனே! அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பவனே! இந்த கொடுங்கோல் ஆட்சியை விரைவில் கவிழச்செய்து உம்மத்தின் இழந்த பெருமையை மீண்டும் கொண்டு வரும் இரண்டாவது தூய கிலாபத்தை ஏற்படுத்த அருள் புரியுமாறு உன்னிடமே உதவி  கேட்கிறோம்! ஆமீன்.

No comments:

Post a Comment