இஸ்லாம் என்ற அரபுச் சொல்லுக்கு கட்டுப்படுதல் என்ற பொருளும் உண்டு . அதே போல முஸ்லிம் என்ற சொல்லுக்கு கட்டுப்படுபவன் என்ற பொருளும் உண்டு. அதாவது இறைவனுக்கு முற்று முழுதாக கட்டுப்படும் வாழ்வியல் ஒழுங்கு எனும் தெளிவான அரசியலில் இருந்தே முஸ்லிம் என்ற சொல்லின் சரியான அர்த்தம் நிரூபிக்கப்படுகிறது. இந்த நிலையில் சுதந்திரமான இஸ்லாமிய அமுல்படுத்தல் நோக்கிய போராட்ட ஒழுங்கே அவனது ஒரே தெரிவாகவும் பாதையாகவும் மாறிவிடுகிறது இஸ்லாம் பூரணமாக அமுல் படுத்தப்படும் நிலையில் அதன் பாதுகாப்பு ,மற்றும் விரிவாக்கம் தொடர்பான புரட்சியாளனாகவும் முஸ்லிம் இருக்க வேண்டும் . அதே போல இஸ்லாம் ஆதிக்கம் செலுத்தாத ஒரு சூழலில் ,சூழ்நிலையில் இஸ்லாத்தை சுதந்திரமாக அமுல் படுத்த தன்னை அர்ப்பணித்து போராடும் புரட்சியாளனாகவும் முஸ்லிம் மாறி விட வேண்டும் . தவ்வா ,ஜிஹாத் என்ற கோட்பாட்டு வடிவங்கள் இத்தகு தெளிவான கட்டளையையை போதிக்கும் விடயங்களாகும்.
ஒரு முஸ்லிமை பொறுத்தவரை 'இறை நிராகரிப்பையும் (குப்ர் ) அது சார் வாழ்வியல் ஒழுங்கு ,மற்றும் அது சார் சட்டதிட்டங்களை விரும்பியோ , வெறுத்தோ அங்கீகரித்த ஒரு வாழ்வியல் இடைக்காலம் உண்டா !? எனும் கேள்வியை இங்கு கேட்பது மிகப் பொருத்தமானது .காரணம் இன்று உலகின் ஆதிக்க அரசியலாக விளங்கும் குப்ரிய நாகரீகம் இப்படி ஒரு வாழ்வியல் இடைக்காலம் பற்றி உலமாக்களை பேச வைத்துள்ளது .
அதிலும் குறிப்பாக தேச ,தேசிய பிரிகோட்டு எல்லைக்குள் சிறுபான்மை எனும் செயற்கை பலவீனத்தில் ,சிந்திக்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ள முஸ்லீம் உம்மாவுக்கு (பிக்ஹுள் அகல்லியாத் ) சிறுபான்மை பிக்ஹ் என்ற அடையாள நாடகம் தீர்வாக பேசப்படுகிறது .
முதலில் சிறுபான்மை என்ற அரசியல் பார்வை ஊடான சுன்னாவின் நடத்தை என்ன ? என ஆராய்வது மிகப்பொருத்தமானது .ஏனென்றால் முஸ்லிமின் நடத்தை வடிவத்தை தீர்மானிப்பது சுன்னா தவிர வேறு ஒன்றாக இருக்க முடியாது . அந்த வகையில் அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) இஸ்லாத்தை நிலைநாட்டுவதட்கான போராட்டம் மக்காவில் ஆரம்பித்த போதே எண்ணப்பட்ட சில தொகை மனிதர்களால் ,ஜாஹீலிய யதார்த்தம் பேசிய பெரும்பான்மை சமூகத்தை எதிர்த்த அரசியலாகவே அந்தப் புரட்சி ஆரம்பித்தது . இந்த உண்மையை முஸ்லீம்கள் உணர வேண்டும் .
இன்று இஸ்லாதிட்காக இஸ்லாத்தில் இருந்து முஸ்லீம்கள் போராட முற்படவில்லை ! என்ற யதார்த்தத்தில் இருந்தே சிறுபான்மை பிக்ஹ் என்ற மதத்துவ அடையாள அரசியல் வடிவம் பெறுகிறது . வாழ்வியல் ரீதியாக தவிர்க்க முடியாத மதச் சார்பின்மை அரசியலை பயன்படுத்திய அதன் அதியுச்ச அங்கீகார எல்லையை பாவித்த சரணடைவு குப்ர் அரசியலில் இருந்தே பிக்ஹுள் அகல்லியாத் தனது உத்தியோகபூர்வ வடிவத்தை எடுக்கிறது .
ஆனால் இது தொடர்பாக சொல்லப்படும் காரணம் வேடிக்கையானது !
அதாவது குப்ரோடு ஒன்றிப்போய் அதன் தாக்கங்களால் பலவீனப்பட்டுள்ள முஸ்லீம் உம்மத்தை இஸ்லாத்தின் வட்டவரைக்குள் கொண்டுவர ஒரு தவிர்க்க முடியாத முயற்சி என்பதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது . ஆனால் இதன் தொழிற்பாட்டு வடிவம் குப்ரை அங்கீகரித்தல் எனும் மகா தவறில் இருந்தே தன்னை நிமிர்த்துகிறது .
அதாவது இதை இப்படி சொல்லலாம். இந்த பிக்ஹுள் அகல்லியாதை ஏற்ற நிலையில் ஒரு முஸ்லிம் இலங்கையிலும் வாழலாம் ,இஸ்ரேலிலும் வாழலாம் !! நிலைமை இப்படி இருக்கும் போது இது எப்படி சரியாகும் !? வாழ்வுக்கு மனோ இச்சை வானத்தில் வழிபட இறைவன் !! எனும் அகீதாவை முதற்கண் தழுவிக் கொண்டவர்களாக அந்த குப்ரிய நாகரீகத்தை சகித்துப் போகும் அரசியல் தரத்தை அது கண்டிப்பாக வேண்டி நிற்கிறது . காரணம் இந்த பிக்ஹுள் அகல்லியாத் எனும் கோட்பாடே இஸ்லாம் பலமாக இருந்த கிலாபா அரசியலில் வாழ்ந்த முஸ்லீம் அல்லாதோருக்காக அன்றைய இமாம்களால் ஏற்படுத்தப்பட்டது. இன்று தலைகீழாக புரட்டி முஸ்லீம்களாகிய எம்மை பிச்சைப் பாத்திரம் போல அதை கையில் எடுக்க சொல்கிறார்கள் .
ஏறத்தாழ பலம் வாய்ந்த கிலாபா அரசை இழந்து ஒரு நூற்றாண்டை அண்மித்து விட்டுள்ள முஸ்லீம் உம்மத் ,தனது குறிப்பிட்ட சில அடையாளங்களை தவிர குப்ரிய பிரிகோட்டு அரசியலில் (பெரும்பான்மை நிலையில் இருந்தாலும் சிறு பான்மை நிலையில் இருந்தாலும் )குப்ரின் நாகரீக சட்ட திட்ட ஒழுங்கை ஜீரனித்தே வாழப் பழகி உள்ளது . அதற்கு ஒரு பிக்ஹ் வடிவம் கொடுக்க நவீன உலமாக்கள் முயற்சி செய்கிறார்கள் !!! சுதந்திர இஸ்லாமிய வாழ்வு நோக்கிய உம்மத்தின் தேடலை 'டைவேர்ட் 'பண்ண குப்ருக்கும் இத்தகு நிலை அவசியமாகி உள்ளது .
No comments:
Post a Comment