Jun 4, 2014

காவல்துறை ..... ஓடியும் பிடிக்கவில்லை ! ஆடியும் பிடிக்கவில்லை !!


அல் - உம்மா இயக்கத்தை சார்ந்தவர் ஹைதர் அலி கேரளா மாநிலம் பாலக்காட்டில் கைது,,, சுமார் 15-ஆண்டுகளாக தேடப்படும் நபராம்,,
1993-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் வழக்கில் முக்கிய குற்றவாளி
- சில ஊடகங்களில் தலைப்பு செய்திகள் !
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி
- சில ஊடகங்களில் தலைப்பு செய்திகள் !
சென்னையில் சமிபத்தில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு
வழக்கில் முக்கிய குற்றவாளி என
- சில ஊடகங்களில் தலைப்பு செய்திகள் ! இவருக்கு
தொடர்பாம் 15 ஆண்டுகளாக காவல்துறை இவரை வலைவீசி
தேடி வந்துள்ளதாக இன்றை தமிழக ஊடகங்களில் எல்லாம் தலைப்பு செய்திகள் ?
அட பாவி ஊடகங்களே உண்மையை சொல்லுகின்றோம்
என முஸ்லீம்களை பாவிகளாக சித்தரிப்பது தான் உங்கள்
தொழிளா ? அதைவிட எத்தனையோ தொழில் இருக்கு
அதை பாருங்கள் ....
யார் இந்த ஹைதர் அலி கோவை கோட்டை மேடு பகுதியை
சேர்ந்தவர் வயது சுமார் 43 இருக்கும் ஆரம்பகாலத்தில் அல்-உம்மா இயக்கத்தில் இருக்கும் சில நபர்களுடன் லேசான தொடர்பு இருந்தது ஆனால் அல்-உம்மா அமைப்பில் இவர் இல்லை கோவை காவல்துறையில் IPC - 307 / Cr.no 1886/93 வழக்கில் இவரை குற்றவாளியாக சேர்த்தது கோவை காவல்துறை . ஹைதர் அலி பிணையில் (ஜாமினில்) வெளியே
வந்தவர் கேரளாவில் திருமணம் செய்துக்கொண்டார் அங்கேயே குடும்ப வாழ்க்கையை நடத்திவருகின்றார் .
IPC - 307 / Cr.no 1886/93 இந்த வழக்கு கோவை நீதிமன்றம்
காவல்துறையின் தவறான நடவடிக்கை என வழக்கை
தள்ளுப்படி செய்தது என்பது குறிப்பிட தக்கது .
வழக்கு தள்ளுப்படி செய்யப்பட்டதை அறிந்த ஹைதர் அலி
நீதி மன்றம் வருவதை நிருத்திக்கொண்டார் .
அந்த வழக்கில் வந்து ஆஜராகி விடுதலை பத்திரத்தில் கையெழுத்து செலுத்தி இருந்தால் இன்று ஊடகத்துறையின்
பித்தல்லாட்டங்களுக்கு வழி இருக்காது .
குறிப்பு :- வழக்கு நிலுவையில் இருப்பதை காவல்துறை
அவரது வீட்டில் சென்று ஹைதர் அலியை காவல்துறையில்
சரண்டர் செய்யுங்கள் உடனே வழக்கை முடித்து அவரை
விடுதலை செய்கின்றோம் என சொன்னவுடன் ஹைதர் அலி
குடும்பத்தார் கேரளாவில் இருந்த ஹைதர் அலியை
அழைத்துவந்து காவல்துறையிடம் ஓப்படைத்தது என்பது
குறிப்பிடதக்கது .
காவல்துறை .....
ஓடியும் பிடிக்கவில்லை !
ஆடியும் பிடிக்கவில்லை !!
ஊடகத்துறையே உண்மையை சொல்லுங்க அல்லது
ஒதுங்கிகொள்ளுங்கள் ...
By இந்திய தேசிய லீக் கட்சி

No comments:

Post a Comment