Aug 21, 2015

இஸ்லாம் தொடர்ந்து எழுச்சி பெறுதல்

வாஷங்டனில் இருந்து செயல்படும் ஒரு புகழ் பெற்ற ஆய்வு நிறுவனம் (Pew Research Centre) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று 2050-ல் “உலகின் கிறித்தவர்களுக்கு இணையாக அதிக மக்கள் தொகை முஸ்லிம்களாக இருப்பார்கள்” என கூறுகிறது. நாத்திகர்கள், இயற்கை வணங்கிகளின் எண்ணிக்கை அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகரித்தாலும் உலகள அளவில் அவர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்படும். ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 10% ஆக இருக்கும். இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும், உலகிலேயே அதிகமான முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா ஆகும். அமெரிக்காவில் கிறித்தவர்களின் எண்ணிக்கை 75% லிருந்து 50%ஆக குறையும். மேலும் கிறித்தவத்தை அடுத்த இரண்டாவது பெரிய மதம் என்ற அந்தஸ்து யூத மதத்திற்கு பதில் இஸ்லாம் பெறும்.
இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரம் பலவகையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இஸ்லாத்தை தழுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் உள்ளது.
இஸ்லாத்தின் தனித்தன்மை என்னவெனில் அது அரபு மக்களிடையே வந்த மார்க்கம் என்றாலும் இன்று அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தோனேசியா உள்ளது. அங்குள்ள முஸ்லிம் மக்கள்தொகை 20 கோடி. இங்கே வியாபாரக் கூட்டங்களின் மூலம் இஸ்லாம் வந்தடைந்தது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தையும் இஸ்லாம் இவ்வாறே வந்தடைந்தது. இவற்றில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 கோடிக்கும் மேல்.
இஸ்லாம் தோன்றிய மத்திய கிழக்கு நாடுகளில் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 20% தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 60% வாழும் அளவினை பார்க்கும் போது இஸ்லாமின் வளர்ச்சி தனித்தன்மை கொண்டது.

No comments:

Post a Comment