Sep 16, 2015

குடியேறிகள் விவகாரம்: ஹங்கேரியில் நெருக்கடி நிலை அறிவிப்பு

செர்பிய எல்லையை ஒட்டி அமைந்துள்ள தென் மாவட்டங்களில் ஹங்கேரி நெருக்கடி நிலையை   அறிவித்துள்ளது.
 
 
 
தடுப்பை மீறி நுழைய முயன்ற 60 பேரை கைதுசெய்திருப்பதாக ஹங்கேரி காவல்துறை தெரிவித்துள்ளது.
 

செர்பியா வழியாக குடியேறிகள் பெரிய அளவில் தங்களது எல்லைக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் ஹங்கேரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புகளை மீறி உள்ள வர முயன்ற அறுபது பேரை கைதுசெய்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இருநூறுக்கும் மேற்பட்ட குடியேறிகள், இரு நாட்டு எல்லையில் அமர்ந்து போராட்டம் நடத்திவருவதாக அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

செர்பியாவின் ஹோர்கோ பகுதியில் அமர்ந்திருக்கும் அவர்கள், தங்களை உள்ளே அனுமதிக்கும்படி கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.

தாங்களை எல்லை கடக்க அனுமதிக்கும்வரை சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ போவதில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

 
BBC News

No comments:

Post a Comment