Sep 3, 2015

கைகளில் எண்களிடும் முறையை நிறுத்தியது செக் குடியரசு

குடியேறிகள் கையில் எண்களை எழுதும் முறையை நிறுத்துவதாக செக் குடியரசின் காவல்துறை தெரிவித்துள்ளது.


குடியேறிகளின் கைகளில் எண்களை எழுதும் முறை உலகம் முழுவதும் விமர்சனத்திற்குள்ளானது.

மனித உரிமை குழுக்களிடமிருந்து எழுந்த பரவலான விமர்சனத்தையடுத்து அந்நாடு இந்த முடிவுக்கு வந்துள்ளது.
காவல்துறை அதிகாரி ஒருவர் பேனா மூலமாக குடியே ஒருவரின் கையில் எண்களை எழுதும் படம் சர்வதேச ஊடகங்களில் பரவலாக வெளியானது.
நாஜிக்கள் காலத்தில் யூதர்கள் அவுஸ்விட்ச் முகாமுக்குக் கொண்டுவரப்பட்டதும் அவர்களுக்கு பச்சை குத்தப்பட்ட நடவடிக்கையுடன் இந்த நடவடிக்கை ஒப்பிடப்பட்டது.
இதையடுத்து, இது ஒரு வழக்கமான நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்த செக் நாட்டின் உள்துறை அமைச்சர் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரியாமல் இருக்கவே இந்த முறை பின்பற்றப்பட்டதாகக் கூறினார்.
மறுபடியும் இந்த முறையைப் பின்பற்றப்போவதில்லை என்று அவர் கூறினார்.
நன்றி BBC
தொடர்புடையவை

No comments:

Post a Comment