Sep 3, 2015

பூடாபெஸ்ட் ரயில் நிலையத்துக்கு அனுமதிக்கப்பட்ட குடியேறிகள்

ஆயிரக்கணக்கான குடியேறிகள் மற்றும் அகதிகளை ஹங்கேரிய அதிகாரிகள், பூடாபெஸ்ட் ரயில் நிலையத்துக்குள் அனுமதித்திருக்கிறார்கள்.

பூடாபெஸ்ட் ரயில் நிலையத்துக்கு அனுமதிக்கப்பட்ட குடியேறிகள்
Image captionபூடாபெஸ்ட் ரயில் நிலையத்துக்கு அனுமதிக்கப்பட்ட குடியேறிகள்
செவ்வாயன்று இவர்களை ரயில் நிலையத்துக்குள் நுழைவதில் இருந்து போலிஸார் தடுத்ததில் இருந்து உருவான இழுபறிநிலை இதனால் முடிவுக்கு வந்தது.
குடியேறிகள் முண்டியடித்துக்கொண்டு கெலெட்டி ரயில் நிலையத்துக்குள் நுழைந்தார்கள், ஆனால், மேற்கு ஐரோப்பாவுக்கான நேரடி ரயில் சேவைகள் தற்போதைக்கு கிடையாது என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
ஐரோப்பாவின் சுதந்திரமான நடமாட்டம் என்ற கொள்கை இவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதால், ஹங்கேரி தமது எல்லைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் விக்டர் ஓர்பன் கூறியுள்ளார்.
ஜேர்மனிக்கு செல்வதற்கான குடியேறிகளின் ஆர்வமே இந்த பிரச்சினைக்கு காரணம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தப் பிரச்சினைக்கு ஒரு பொதுவான தீர்வைக் காண்பதற்காக ஹங்கேரி தனது ஏனைய ஐரோப்பிய கூட்டாளி கூட்டாளிகளுடன் சேர்ந்து செயற்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் மார்ட்டின் சூலுஸ் கூறியுள்ளார்.
நன்றி BBC

No comments:

Post a Comment