ஆயிரக்கணக்கான சிரியா மக்கள் - பெரும்பாலும் சிரியாவின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிவந்துள்ள அகதிகள்- ஹங்கேரியை கடந்து ஆஸ்திரியாவை சென்றடைந்துள்ளனர்.
சிரியா மக்கள்களின் பயணம் தொடர்பில் இருந்த கட்டுப்பாடுகளை ஹங்கேரி அரசு தளர்த்தியுள்ள நிலையில், அந்நாட்டு பேருந்துகள் அவர்களை எல்லை வரை கொண்டுசென்று விட்டன.
மறுபுறத்தில் நின்ற ஆஸ்திரிய தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் சிரியா மக்கள்களுக்கு உணவும் சூடான பானங்களும் கொடுத்து வரவேற்றனர்.
அங்கு வந்துள்ள சிரியா மக்கள்கள் விரும்பினால் தங்கள் நாட்டிலேயே தஞ்சம் கோரலாம் அல்லது ஜெர்மனிக்கு செல்லலாம் என்று ஆஸ்திரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக பேருந்துகளோ ரயில்களோ சிரியா மக்கள்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று ஹங்கேரி கூறியுள்ளது.
எல்லை வரை நடந்தே செல்ல முயன்ற சிரியா மக்கள்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாகவே அவர்களுக்கு உதவி வழங்கப்பட்டதாகவும், தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்துவருவதாகவும் ஹங்கேரி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நன்றி BBC
No comments:
Post a Comment