Oct 30, 2015

நானும் ஒரு பொருளாதார அடியாள் பகுதி-1

“பொருளாதார அடியாட்கள் (Economic Hit Man) என்று அழைக்கப்படுவார் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபாடு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். இந்த கொள்ளையடிக்கும் பணிக்காக அவர்களுக்கு பெரும்பணம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பொருளாதார நிபுணர்கள். உலக வங்கி (World Bank), சர்வதேச வளர்ச்சிக்கான அமரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனம் (US Agency for international Development USAID), மற்றும் இவற்றைப் போன்ற பன்னாட்டு நிதி “உதவி” அமைப்புகளில் குவிந்திருக்கும் பணத்தை மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் பணப்பெட்டிகளுக்கும், இப்பூமியின் இயற்கை வளங்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் சில பணம் படைத்த குடும்பங்களின் சட்டைப் பைகளுக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் வேலை.

மோசடியான நிதி அறிக்கைகள், தேர்தல் முறைகேடுகள், லஞ்சம், மிரட்டிப்பணம் பறிப்பது, பாலியல், கொலை முதலியன இவர்களுடைய கருவிகள் ஆகும். பேராரசு எவ்வளவு பழமையானதோ அதேயளவுக்கு இவர்களது தந்திரங்களும் பழமையானவைதான். ஆனால் உலகமயமாக்கல் முழுவிச்சில் நடைபெற்றுவரும் இன்றைய உலகில் பொருளாதார அடியாட்களின் தந்திரங்கள் புதிய, பயங்கரமான பரிணாமங்களை எட்டியுள்ளன.

நானும் ஒரு பொருளாதார அடியாளாக இருந்தவன்தான்.

- ஜான் பெர்கின்ஸ் - 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்'

உங்களுக்கு உலகை வலம் வர விருப்பமிருந்தால், கரடு முரடான பயணங்களுக்கு நீங்கள் தயாராக இருந்தால், உலக நாடுகளின் இயக்கத்தை எக்ஸ்ரே' கண் கொண்டு காணத் துடித்தால், ஏகாதிபத்தியத்தின் புற முதுகைக் காண ஆவலிருந்தால் - இந்தக் கட்டுரை தொடருந்து வாசிங்கள்.



"நாட்டினை சீரமைப்பதற்கு கடன் கொடுக்கிறோம். அதன் மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்றினால் உங்கள் நாட்டின் பொருளாதாரம் இத்தனை சதவிகிதம் உயரும்.." என்று புள்ளிவிவரங்களின் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்களை சம்மதிக்கச் செய்வதே இந்த பொருளாதார அடியாட்களின் வேலை. அவ்வாறு சம்மதிக்காத அதிகாரிகளையும், அரசாங்கத்தையும் மற்றவர்களை கலகம் மற்றும் புரட்சி செய்ய தூண்டி விட்டு அந்த இடத்தில் தனக்கு சாதகமானவர்களை அமர்த்தி தான் நினைத்தை அமெரிக்கா அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ளும். இந்த பொருளாதார அடியாட்கள் தனியார் நிறுவனங்களுக்காகவே பணிபுரிவார்கள். ஆனால் அந்த தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறைமுக கூலிகள். ஒரு நாட்டியில் பொருளாதார அடியாட்கள் தோல்வியடைந்தால் சி.ஐ.ஏ ( C.I.A ) வால் இயக்கப்படும் இன்னொரு வகையான அடியாட்கள் “குள்ளநரி” களை கொண்டு அமெரிக்க செய்து முடிக்கும்.

ஈக்வடார், பனாமா, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், கொலம்பியா, வெனிசுலா என்று எண்ணெய் வள நாடுகளை கொள்ளை அடிக்க அமெரிக்கா செய்த குள்ளநரி வேலைகளைலும் அவர்களுக்கு ஒத்துழைக்காத பனாமாவின் ஜெனரல் டோரிஜோஸ், ஈக்வடாரின் பிரசிடெண்ட் ரோல்டோஸ் போன்றவர்கள் விமான விபத்தில் இறந்தார்கள். நிற்க. கொல்லபட்டார்கள். இது போன்ற வளைகுடா நாடுகளில் நடக்கும் போர்களும்,ஆட்சி மாற்றும்கலும் அமெரிக்காவின் எண்ணெய் அரசியல் பற்றிய புரியதலை ஏற்படுத்துகிறது.

நாசிக். S
DXB

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Oct 29, 2015

எதிர்காலம் கிலாஃபத்திற்கே!

நாகரீகங்கள் எழுவதும், வீழ்வதும் வரலாற்றில் என்றும் மெய்ப்படுத்தப்பட்டு வரும் உண்மை. அறியப்பட்ட முழு உலகையும் தனத ஆளுகைக்குள்




கொண்டுவரலாம் என நினைத்த எத்தனையோ நாகரீகங்கள் உலகில் எத்தவொருதடயத்தையும் விட்டுவைக்காமல் அழிந்து மண்ணோடு மக்கிப்போன காட்சிகள்,வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் புதைந்த கதைகள் ஏராளம். இவ்வாறான ஒருதீர்க்கமான வரலாற்றுத் திருப்பத்தை இன்றும் நாம் கடந்து கொண்டிருக்கிறோம். உலகில்தோன்றிய அசிங்கமான நாகரீகங்களின் ஒட்டுமொத்த வடிவமான மேற்குலக நாகரீகமும்தற்போது அந்த திருப்பத்தை அனுபவிக்கிறது. அதன் இறுதி மூச்சுக்களின் தணலை உலகம்உணர ஆரம்பித்திருக்கிறது. எனினும் உலகின் அதிகார வெற்றிடம் இன்றோ, நாளையோஇடறி விழவிருக்கும் முதலாளித்துவ மேற்குலகின் எச்சங்களான அரசுகளால்நிரப்பப்பட்டிருப்பது நிகழ்வுகளை ஊடுருவிப்பார்க்கும் ஆற்றலை எம்மில் இழக்கச்செய்துவிடக்கூடாது. அதிவேகமாக சரிந்து விழும் இன்றைய உலகத்தலைமைஉருவாக்கும் அதிகார வெற்றிடத்தை ஒரேயொரு அசுர பலம்தான் நிரப்ப இருக்கிறது.அதனை தடுக்க எந்தவொரு வல்லரசும் இனி சக்தி பெற மாட்டாது. முதலில் முதுகில்குத்தப்பட்ட காயங்களுடனும், பின்னர் மார்பில் ஏவப்பட்ட அம்புகளுடனும் வீழ்ந்துசாய்ந்து கிடந்த அந்த அசுர பலம் சட்டென செங்குத்தாக எழுந்து நிற்கிறது. அந்த பலம்வேறொன்றுமில்லை. அது இஸ்லாம் எனும் சத்திய பலம்.


80 களின் இறுதியில் கம்யூனிச சோவியத் யூனியன் சுக்குநூறாக இடிந்துவிழுந்துகொண்டிருந்த போது 'இது வெறும் பனிப்போரின் முடிவல்ல@ இது வரலாறின்முடிவு" என கூறிய அமெரிக்க அரசியல் விஞ்ஞானி பிரான்ஸிஸ் புகயாமா மேற்குலகின்தாராண்மைவாத முதலாளித்துவ ஜனநாயகமே உலக சமூகத்திற்கான ஒரேவிமோசனமும், இறுதி தீர்வுமாகும் என வாதிட்டதை நாம் அறிவோம். எனினும் 2008 இல்முதலாளித்துவ உலகம் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது 'ஒரு அசுரன்சரிந்து விழுவதை நாம் சான்று பகிர்ந்துகொண்டிருக்கிறோம்" என முதலாளித்துவத்தின்இயலாமையை அவர் ஒப்புக்கொண்டபோது அல்லாஹ்(சுபு) தனது திருமறையில்சிலந்தியின் வீட்டை குப்ரின் கோட்டைக்கு உவமைப்படுத்திய கூற்றே மனத்திரையில்விழுந்தது.


அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது. அது(தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது. ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும்பலகீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்துகொள்ளவேண்டுமே! ( ஸ_ரத்துல் அன்கபூத்:41)


மேற்குலகு கட்டிய முதலாளித்துவக்கோட்டை வெறும் மணற்குதிரை என்பதை அதன்நிர்மாணிகளே அடிக்கடி நிரூபிக்கிறார்கள். பலகோடி மக்களை நரபலி கொடுத்து, மனிதவிழுமியங்களை குழிதோண்டிப்புதைத்து, முழுப்புவியையும் கூவக்கிடங்காக்கி அதில்வீசும் நாற்றத்திற்கு மாத்திரம் நறுமணம் தெளிக்கவே இவர்களுக்கு தெரிந்திருக்கிறது.எனினும் மனிதகுல எதிரிகளான இவர்களை நீதி முன் நிறுத்த எவராலும் முடியவில்லை.எவரையும் அவர்கள் அதற்கு அனுமதிக்கவுமில்லை. எனினும் அவர்கள் மனதின்ஆழத்தில் ஒரேயொரு நெருடல்தான் அடிக்கடி கிலியைக் கிளப்பியது. அது இஸ்லாம்என்ற சித்தாந்தத்தின் ஆன்ம பலம் பற்றியது. பல நூற்றாண்டுகள் உலக ஒழுங்கைத்தீர்மானித்த இஸ்லாத்தை வெறும் புரோகித இஸ்லாமாக தரக்குறைப்பு செய்ய அவர்கள்மேற்கொண்ட அத்தனை பிரயத்தனங்களுக்கும் இதுவே அடிப்படைக் காரணமாகும்.எனினும் அவர்கள் எதிர்பாராதவிதமாக காலச்சக்கரம் அவர்களுக்கு எதிராக மிகவிரைவாக சுற்றியது.


2012 இல் அரபுலகில் அரசியற் காலநிலை மாறியது. அது அரபு வசந்தமாகவீசத்தொடங்கியபோது முதலாளித்துவ சக்திகள் ஒரு பூகம்பமே புறப்பட்டு வருவதைக்கண்டார்கள். வாசிங்டனினும், லண்டனிலும், பரிசிலும் குந்தியிருந்த அவர்களின்வயிற்றில் இது புளியைக் கரைத்தது. டினூசியா தொடங்கி சிரியா வரை தொடரும்முஸ்லிம்களின் எழுச்சியை வெறும் ஆட்சி மாற்றக் கோஷங்களாக அவர்கள்பார்க்கவில்லை. நூற்றாண்டு காலமாக தாம் பதித்த இரும்புக் காலணியை எட்டி உதைத்தசம்பவங்களாகவே பார்க்கிறார்கள். இரட்டைக்கோபுர தாக்குதல்களுக்கு பின்பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போலிமுகத்துடன் இஸ்லாத்திற்கு எதிராகதாம் விரித்த வளைக்குள் தாமே சிக்குண்ட மேற்குலகு, உலக பொருளாதார நெருக்கடி,அரபுப் புரட்சி எனத் தொடரும் அரசியல் நெருக்கடியால் மூச்சுத்திணறி நிற்கிறது.


இவ்வாறு விருட்சமாய் நிமிர்ந்து நின்ற மேற்குலகை முழந்தாழிட செய்ய உலகமுஸ்லிம்கள் செலுத்திய விலையோ மிக அதிகம். விலை பெரிதாக இருந்தாலும்விளைச்சல் எமக்குச் சாதகமாக அமைய வேண்டும். அது சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்றுதான் இன்;றும் தமது அடியை நக்கி ஆட்சிபுரியும்; முகவர்களைபயன்படுத்தி முஸ்லிம் உலகில் தனது இறுதி ஜீவமரணப்போராட்டத்தை மேற்குலகுதொடர்கிறது. உருவான அரபுப்புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக மாற விடாது செய்துஅதனை திசைதிருப்பியதன் ஊடாக டினூசியாவிலும், லிபியாவிலும், யெமனினும்,எகிப்திலும் அவர்களின் எதிர்பார்ப்பு வீண்போகாதது, இன்னும் மூச்சுவிட அவர்களுக்குஅவகாசத்தை தந்திருக்கிறது. எனினும் சிரியப்புரட்சி அவர்களுக்கு செருப்படி கொடுத்துவரும் நிலையில் பிராந்தியத்தில் தோன்றியிருக்கும் அரசியற் காலநிலையைகட்டுப்படுத்தாது விட்டால் அதற்குள் தாம் தொலைந்து போய்விடுவோம் என்றஅச்சத்துடன் மேற்குலகும் அவர்களது அடிவருடிகளும் தூக்கம் தொலைத்துசிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.


மறுபக்கத்தில் உலக முஸ்லிம்கள் தமது உண்மை எதிரிகள் யார் என்பதை உணரஆரம்பித்திருக்கிறார்கள். தமது தலைவிதியை தாமே எழுத வேண்டும் என்பற்காகவீதிக்கிறங்கி யுத்த டாங்கிகளுக்கு முன் வெற்று மார்புடன் நிற்கத் துணிந்திருக்கிறார்கள்.அநியாயக்கார ஆட்சியானுக்கு முன்னால் சத்தியத்தை உரைக்கும் முஸ்லிம் உம்மத்தின்உண்மை அடையாளம் தற்போது அவர்களில் தென்பட தொடங்கியிருக்கிறது. அரபுப்புரட்சிமக்கள் கருத்தின் பலத்தை அவர்களுக்குள் மீண்டுமொருமுறை உணர்த்தியிருக்கிறது.முஸ்லிம் உம்மாஹ் தனது புகழ்பெற்ற சொந்த வரலாற்றை திரும்பிப்பார்க்கதொடங்கியுள்ளது. சிலுவை யுத்தக்காரர்களையும், தாத்தாரியர்களையம் எவ்வாறுஈமானிய பலம் கொண்டு தாம் எதிர்கொண்டோம் என்பதை முஸ்லிம்கள் உணரஆரம்பித்திருக்கிறார்கள். தனது அடிப்படை அடையாளமான இஸ்லாமிய அகீதாவுக்குள்நின்று தமது பிரச்சனை அனைத்துக்கும் தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கைஅவர்களுக்குள் புத்துயிர் பெற்றிருக்கிறது. தமக்குள் தேசங்களாக பிரிந்து தேசியவாதம்பேசி பிளவுபட்டு நிற்பது மாபெரும் தவறு என்பதை அவர்கள் உணர தலைப்பட்டுள்ளார்கள்.மாறாக ஒரே உம்மாஹ் என்ற எண்ணக்கரு அவர்களுள் வேறூன்றி வளர்ந்து வருகின்றது.உலக பொருளாதார நெருக்கடி தொடக்கம் பூகோள அமைதி வரை இஸ்லாத்திடம்மாத்திரம்தான் தீர்வு இருக்கிறது என்பதை அவர்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள்.எவையெல்லாம் நடந்து விடக்கூடாது என்று மேற்குலகு தமது விரல்களைக்கடித்துக்கொண்டிருந்ததோ அவை எல்லாம் தற்போது அவர்களின் கண்ணெதிரேநடக்கிறது.


முதலாம் உலகப்போரைத் தொடர்ந்து கிலாஃபத்தை அழித்ததன் பின்னால் அந்நாள்பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லோர்ட் கேர்சன் 'நாம் இஸ்லாத்தின்முதுகெலும்பை உடைத்து விட்டோம்@ எனினும் முஸ்லிம்கள் எக்காரணம் கொண்டும்அரசியல், பொருளாதார, கலாசார ரீதியில் மீண்டும் ஐக்கியப்படுவதை அனுமதிக்கக்கூடாது." எனக்கூறிய கூற்று அவர்களின் உண்மை மனநிலையை எமக்கு கோடிட்டுக்காட்டுகிறது. அதாவது முஸ்லிம்கள் இஸ்லாமிய அடையாளத்துடன் ஐக்கியப்பட்டு ஒருஉம்மத்தாக எழுந்து நின்றால் அவர்களை உலகின் எந்த நாகரீகமும், எந்த வல்லரசும்வெற்றி கொள்ள முடியாது என்ற அவர்களின் உறுதியான நம்பிக்கையே அது.


எனினும் எவ்வாறு அல்லாஹ்(சுபு) இந்த உலகில் நிரந்தரமான பௌதீக விதிகளைவைத்திருக்கிறானோ அதேபோன்று ஒரு சமூகவியல் விதியையும் நிரந்தரமாகவைத்திருக்கிறான். அதுதான் அசத்தியத்தை அழித்து சத்தியம் இறுதியில் வெல்லும் என்றபொதுவிதி. அந்த விதி மீண்டுமொருமுறை உயிர்பெற தற்போது களம்அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுதான் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் இதுவரை நயவஞ்சகத்தனமாக எதிர்த்த முதலாளித்துவ மேற்குலகுதமது பழைய பாணியில் நேரடியாகவே எதிர்ப்பதில் களமிறங்கியிருக்கிறது. அதிகரித்துவரும் இஸ்லாத்திற்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்கள், முஸ்லிம் பிராந்தியங்களைகுறிவைத்து நிலைகொண்டுள்ள மேற்குலக துருப்புக்கள் என்பன புதிய உலகஒழுங்கொன்று இஸ்லாத்தின் பெயரால் உருவாக இருப்பதை மிக விரைவில் அவர்கள்எதிர்பார்ப்பதையே காட்டுகிறது. கிலாஃபத் பற்றிய பேச்சுக்கள் மேற்குலக அதிகாரஅரண்மனைகள் எங்கும் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. உலகின் முக்கிய ஊடகங்களும்,சிந்தனை மையங்களும் கிலாஃபத் குறித்து பேசாவிட்டால் நடைமுறையை பேசாதுவிடுவதுபோல் கருதுகிறார்கள். மேற்குலக அரசியல் அவதானிகள் சிலர் கிலாஃபத் என்பதுஇனிமேல் அரசியல் யதார்த்தம். எனவே கிலாஃபத் உருவாகுமா? உருவாகாதா? என்றவாதங்களில் எமது காலத்தை விரயமாக்காமல் அதனுடன் முதலாளித்துவ உலகுஎவ்வாறு உறவாடப்போகிறது பற்றி சிந்திப்பதே சிறந்தது என்ற கருத்தைக்கூறிவருகிறார்கள். இவ்வாறு முஸ்லிம்கள் மத்தியிலும், அரசியல் அவதானிகள்மத்தியிலும் கிலாஃபத் பற்றிய சிந்தனை வளர்வதை சகித்துக்கொள்ள முடியாதமேற்குலகிற்கு கிலாஃபத்தை கொச்சைப்படுத்த ஐஎஸ்ஐஸின் கொடிய செயற்பாடுகள்மாத்திரமே கடைசி புகழிடமாக மாறியிருக்கிறது. பக்தாதியின் இஸ்லாமியஅடிப்படையற்ற கிலாஃபா அறிவிப்பின் சாயம் தற்போது வெளுத்துக்கொண்டு வரும்நிலையில் தற்போது முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் அந்த உயரிய கிலாஃபததுர் ராஷிதா எதுஎன்பது குறித்த தெளிவு பிராந்தியத்திலும், உலக முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டுவருகிறது.


இவ்வாறு உலகில் மிக வேகமாக மாறிவரும் அரசியல் காலநிலை எமக்கு ஒன்றையேசுட்டிக்காட்டுகிறது. அதுதான் இன்று உலகு கிலாஃபத்தை வரவேற்ற தயாராகிவிட்டது.முதலாளித்துவம் அதன் முன்னால் மூக்குடைபட்டு விழப்போகிறது. தலைகீழாய்உருமாறவிருக்கும் உலக அரங்கில் நாம் எப்பக்கம் நிற்கப்போகிறோம் என்பதேஎம்முன்னால் இருக்கும் பிரதான கேள்வி. நாம் இஸ்லாத்தின் வெற்றியின் பங்காளி ஆகஉண்மையில் விரும்பினால் கிலாஃபத்தை நோக்கிய உம்மத்தின் நீண்ட பயணத்தின்இறுதித் தருணத்திலாவது எமது பாதங்களையும் பதித்துக் கொள்வோம்! இன்றுடன் (மார்ச்3ஆம் திகதி) கிலாஃபத் அழிக்கப்பட்டு 91 இருண்ட ஆண்டுகளை கடந்து வந்த நாம் அது பற்றிதீவிரமாக சிந்திப்பதற்கு இந்நாள் ஒரு சிறப்பான தரணம் என நாம் கருதுகின்றோம்.


அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான் (ஸ_ரத்துஸ் ஸஃப்ஃபு: 8)


darulaman.net

Oct 28, 2015

பாகிஸ்தான், ஆப்கன் நிலநடுக்க பலி 300 ஆக அதிகரிப்பு

சேதமடைந்த தங்களது வீட்டை சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: ஏஎப்பி.  

சேதமடைந்த தங்களது வீட்டை சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: ஏஎப்பி.
 
வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
 
இதனால் பாகிஸ்தானின் ஸ்வாட், பெஷாவர், கசூர், கல்லார் கஹார், பைஜார் பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
 
நிலநடுக்கத்துக்கு ஆப்கானிஸ்தானில் 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
இதேபோல பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் உள்ளிட்ட பல நகரங்களிலும் 237 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தரப்பில் பலி மற்றும் காயமடைந்தவர்களின் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
The Hindu

தெற்கு சீன கடற்பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல் நிறுத்தம்



சர்ச்சைக்குரிய தீவு அருகே அமெரிக்க கடற்படை போர் கப்பல். | படம்: ராய்ட்டர்ஸ்.


தெற்கு சீன கடற்பகுதியில் உள்ள சீனாவின் செயற்கை தீவு அருகே அமெரிக்காவின் போர்க் கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதை பெய்ஜிங் மாகாணம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறும்போது, "செவ்வாய்க்கிழமை காலை யு.எஸ்.எஸ் லாசன் போர் கப்பல் ஸ்பார்ட்லி தீவு அருகே 12 நாட்டிகல் மைல் தூரத்தில் ரோந்து சென்றது. அந்தப் பகுதி சீனாவுக்கு உட்பட்ட பகுதி அல்ல. அது சீனாவால் அறிவிக்கப்பட்ட செயற்கை தீவு தான். அதிபர் ஒபாமாவின் ஒப்புதலின் பேரில் இந்த ரோந்துப் பணி நடைபெற்றது" என்றார்.

இதனிடையே அமெரிக்காவின் பதிலை சீன தரப்பு கண்டித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அமெரிக்கா எதையும் செய்யும் முன் 2 முறை யோசிப்பது நல்லது." என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் சீனக் கடல் பகுதியில் புதிதாகப் பெரும் தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. விமான தளம் அமைக்கும் விதத்தில் இந்த தீவு உருவாக்கப்படுகிறதாக அமெரிக்கா ஏற்கெனவே தகவல் வெளியிட்டது.

தென் சீன கடலில் இருக்கும் குறிப்பிட்ட தீவால் ஜப்பான் - சீனா இடையே மோதல் நிலவிவருவதால் சர்ச்சைக்குரிய தீவாக இது அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.



The Hindu Tamil

பாலத்தீனர்களுக்கு "அநீதி" : இஸ்ரேலைப் புறக்கணிக்கும் பிரிட்டிஷ் கல்வியாளர்கள்





பாலத்தீனர்களுக்கு "அநீதி" - பிரிட்டிஷ் கல்வியாளர்கள் இஸ்ரேல் உயர்கல்வி நிறுவனங்களைப் புறக்கணிக்கிறார்கள்

பாலத்தீனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் "சகித்துக்கொள்ள முடியாத அநீதிகளுக்கு" எதிராக இஸ்ரேலிய உயர்கல்விக் கூடங்களை தாங்கள் புறக்கணிக்கப்போவதாக பிரிட்டனில் உள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.


பிரிட்டனிலிருந்து வெளியாகும் "கார்டியன்" பத்திரிகையில் அவர்கள் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில், இந்தப் பிரகடனம் வெளியாகியிருக்கிறது. இதில் 343 கல்வியாளர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

இஸ்ரேலை கலாசார ரீதியாக புறக்கணிக்கும் நடவடிக்கைகள் பிளவுபடுத்துபவை என்றும் அவை பாரபட்சமானவை என்றும் கூறி ஹாரி பாட்டர் நாவலை எழுதிய ஜே.கே.ரௌலிங் உட்பட 150 பிரிட்டிஷ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் கடிதம் ஒன்றை எழுதி ஒரு வாரத்துக்குப் பின் இந்த அறிக்கை வருகிறது.
 
 
BBC TAMIL

Oct 27, 2015

'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 06

5. முஸ்லிம் உலகில் நேரடியாக மேற்கொள்ளப்படும் கிலாஃபத்திற்கான போராட்டத்திற்கு நாம் பூரண ஆதரவினை வழங்க வேண்டும். ஏனெனில் அது இஸ்லாத்தின் அதியுயர் கட்டளைகளில் ஒன்றாகும்.


“எனக்கு பிறகு ஒரு நபி வரமாட்டார். எனினும் குலபாஃக்கள் தோன்றுவார்கள். அவர்கள் பலராக இருப்பார்கள் என ரசூல்(ஸல்) சொல்ல...ஸஹாபாக்கள் அதன்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என வினவ, ரசூல்(ஸல்) சொன்னார்கள் “அவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக பைஆவை நிறைவேற்றுங்கள். அவர்களுக்குரியதை அவர்களுக்கு வழங்குங்கள். அவர்களுக்கு அல்லாஹ்(சுபு) வழங்கியது பற்றி அவர்களை விசாரித்துக்கொள்வான்.” என பதிலளித்தார்கள்.
 
மேலும்  “எவரொருவர் தனது கழுத்தில் பைஆ(ஒரு கலீஃபாவுக்கு) இல்லாத நிலையில் மரணிக்கிறாரோ அவரது மரணம் ஜாஹிலிய மரணமாகும் என்ற ரசூல்(ஸல்) நபிமொழி அந்த பைஆவை வழங்குவதற்கு தேவையான கலீஃபா இல்லாத நிலையில் அவரை மீண்டும் நிறுவுவதற்கு முயற்சிக்காமல் இருப்பதன் விபரீதத்தை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறான பல ஆதாரங்கள் கலீஃபா ஒருவரை ஏற்படுத்துவதற்கு நாம் ஏன் பாடுபட வேண்டும் என்பதை எமக்கு உணர்த்தி நிற்கின்றன. அதேபோன்று இப்பணியில் கிலாஃபா என்றால் என்ன என்பதை சரியாகப்புரிந்து கொண்டு கிலாஃபத்தின் பெயரால் சிந்தரிக்கப்படும் போலித் தோற்றங்களை உலகின் வெளிச்சத்திற்கு கொண்டுவருவதும் மிகவும் அவசியப்படுகிறது.

எனவே முஸ்லிம்கள் முஸ்லிம் உலகில் நிலவும் சர்வாதிகார, மேற்குலக முகவர் ஆட்சிகளை வீழ்த்தி கடப்பாடும், மக்களின் நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் பிரதிபளிக்கக்கூடிய உண்மையான இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காக இரவு பகலாக உழைக்க வேண்டும். இந்த கிலாஃபா என்ற அரசியல் மாற்றீடு மாத்திரமே முஸ்லிம் உலகை ஸ்திரத்தன்மையும், பலமுமிக்க ஒரு பிராந்தியமாக மாற்றும். மேலும் உலகின் ஏனைய பிராந்தியங்களில் வாழும் முஸ்லிம்களையும் அனைத்து மட்டங்களிலும் ஓரணியில் திரட்டி உலகை தலைமை தாங்கக்கூடிய ஹைரு உம்மத்தாக எம்மை மாற்றும் கருவியாகத் திகழும்.
 
எனவே குப்ரிய அரசுகளும், எமது தாஹூத்திய தலைமைகளும், உலகளாவிய ஊடகங்களும் கிலாஃபா என்ற சிந்தனைக்கு எதிராக ஓய்வின்றி சதி செய்தாலும், முஸ்லிம்கள் - அவர்கள் உலகில் எங்கு வாழ்தாலும் சரி கிலாஃபா – தமது அதிமுக்கிய மார்க்கக் கடமை என்பதையும், அதுதான் தமது மறுமலர்ச்சிக்கான ஒரே வழி என்பதையும் நன்குணர்ந்து கிலாஃபாவிற்கான போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபடவேண்டும்.
 

பகுதி - 05 /

(முற்றும்.)

Sources From
Darul Aman.Net

 
 

'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 05

4. கிலாஃபத் முஸ்லிம் உலகின் குழப்பங்களுக்கு காரணமானதாக அமையாது அதன் ஸ்திரத்தன்மைக்கும், முழு உலகின் விமோசனத்திற்கும் காரணமாக அமையும் என புரிந்து கொண்டு முஸ்லிம்கள் கிலாஃபாத்திற்காக குரல் கொடுப்பவர்களாக மாற வேண்டும்.

 

 

 
இன்றைய ஊடகங்களின் சித்தரிப்புகளுக்கும், சிரியா, ஈராக் பிராந்தியத்திலிருந்து வெளிப்படும் அச்சுறுத்தலான காட்சிகளுக்கும் மாற்றமாக உண்மையான கிலாஃபத்தின் மீள் வருகை குறிப்பாக மத்திய கிழக்கின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் முஸ்லிம்களின் உண்மையான விமோசனத்திற்கும் அத்திவாரமாக அமையும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அந்த பிராந்தியத்தில் காலங்காலமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நம்பிக்கைகள், விழுமியங்கள், அவர்களின் விருப்பு வெறுப்புக்கள் அனைத்தையும் அது இயல்பாய் பிரதிபலிக்கக் கூடியதால் கிலாஃபத் அதனைச் சாதிப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. கிலாஃபத் அந்த மக்களின் உணர்வுகளையும், அபிலாசைகளையும் துல்லியமாக புரிந்து கொண்டு அவர்களுடன் வாஞ்சையான கூட்டுறவுடன் இயங்கும் அரசியல் அலகாக நிச்சயம் செயற்படும். ஏனெனில் அரசியல் முதல் ஆன்மீக அம்சங்கள் வரை இம்மக்களுக்கிடையே நிலவும் பொதுவான நம்பிக்கைகளையும், உணர்ச்சிகளையும் ஒன்றுகுவிக்கும் காந்தமாக இஸ்லாம் எனும் தூய சிந்தாந்தமே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

 
கிலாஃபத் வீழ்த்தப்பட்ட நிகழ்வு இஸ்லாமிய உலகின் அதிகாரமும், தலைமைத்துவமும் முழுமையாக முஸ்லிம்களின் கைகளிலிருந்து பறிபோனதிற்கு ஒப்பானது. அது உருவாக்கிய வெற்றிடம் காலணித்துவத்துக்கும், சர்வாதிகாரங்களுக்கும் எதிராக எழுந்து நிற்கும் திராணியை உம்மத்திடமிருந்து பறித்தது. விளைவு, சுயநலமும், நயவஞ்சகமும் நிறைந்த கொடிய தலைமைத்துவங்களின் கைகளில் முஸ்லிம் உலகும், அவர்களின் விவகாரமும் மாட்டிக்கொண்டு அழிவுகளுக்கு மேல் அழிவு, பலகீனத்திற்கு மேல் பலகீனமென எமது நிலை மாறிப்போனது.
 

இன்று உலகு எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளிலிருந்து உலகை மீட்டு உலகை ஆரோக்கியமானதோரு திசையில் வழிநடாத்துவதற்கு கிலாஃபாவால் மாத்திரம்தான் முடியும். ஏனெனில் நபி வழியில் உருவாகும் அந்த கிலாஃபத் மனித மூளைகளின் பலகீனங்களாலும், குறித்த நபர்களின் சுயநலன்களாலும் மக்களை வழிநடத்தாமல் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் இறைவனின் வழிகாட்டல்களாலும், சட்டங்களாலும் வழிநடாத்தும். மேலும் அல்லாஹ்(சுபு) அருளியுள்ள இறைத்தூது அனைத்து காலங்களுக்கும், அனைத்து சமூகப்பின்னணிகளுக்கும் தீர்வு சொல்லக்கூடிய ஆளுமையுடன் காணப்படுவதால் அதனால் மாத்திரம் தான் மனிதகுலத்தை நேர்மையாகவும், நீதியாகவும் வழிநடாத்த முடியும்.
 

இத்தகைய ஆட்சி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டதாக அமையாது மக்களால் தேர்ந்தெடுக்கபட்டதாய் அமைவதுடன் கலந்தாலோசை ஊடாகவும், உறுதியான நீதித்துறையின் ஊடாகவும் கலீஃபா உட்பட அனைத்துத் தரப்புக்களையும் சட்டத்தின் முன் சமமாக நடாத்தும். அது இன, குல வாதங்களின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவர் மீது அத்துமீறாத பிரஜா உரிமை என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் யாவருக்கும் பொதுவாய் அமைந்த ஆட்சியாக விளங்கும்.
 
பகுதி - 04 / பகுதி - 06

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Sources From
Darul Aman.Net

'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 04

3. ஒட்டுமொத்த உம்மத்தின் அவலங்களுக்கும், முழு மனித குல நாசத்திற்கு காரணமான மேற்குலக கொள்கைகளுக்கும் எதிராக நாம் உரத்துக்குரல் கொடுக்க வேண்டும்.
 

முஸ்லிம் நாடுகளை நேரடியாக ஆக்கிரமிப்புச் செய்வது தொடக்கம் அப்பாவிப் பொதுமக்கள் மீது Drones (ஆளில்லா விமானங்கள்) மூலம் தாக்குதல் நடத்துவது, இன, குழு ரீதியாக பதற்றத்தை தூண்டி விடுவது, முஸ்லிம்களின் அவலங்களுக்கு முக்கிய காரணமான கொடுங்கோல் கங்கானிகளை ஆட்சியில் அமர்த்தி ஆதரவளிப்பது, ஒரு முஸ்லிம் தரப்பிற்கு எதிராக இன்னுமொரு தரப்பிற்கு ஆயுதம் வழங்கி வன்முறைக்குள் தள்ளுவது என இவர்கள் எமக்கு செய்து வரும் அநியாயங்கள் சொல்லிடங்கா. 
 
 
2003 இல் அமெரிக்க, பிரித்தானிய கூட்டுப்டையினர் ஈராக்கை ஆக்கிரமிப்புச் செய்த நாளிலிருந்து ஏற்கனவே பல நெருக்கடிகளை முகங்கொடுத்து வந்த மத்திய கிழக்கின் அழிவுப்பாதை மிகத்தீவிரமடைந்தது. மேற்குலகு பல போலிச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும் மேற்குலகின் தலையீடு எக்காலத்திலும் மத்திய கிழக்கின் அமைதிக்கும் சுபீட்சத்திற்கும் ஏதுவாய் அமைந்ததில்லை. மாறாக பாரிய அழிவுகளும், அவலங்களும், கொடுமைகளும், கொடூரங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விதத்தில் அந்தப் பிராந்தியத்தை எப்போதும் பதட்ட நிலையில் பேணுவதிலேயே இவர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கிறார்கள். எனவே உலகளாவிய முஸ்லிம்கள் இது மத்திய கிழக்கில் தானே நடக்கிறது என வாழாவிருந்து விடாமல் எம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் மத்திய கிழக்கில் மேற்குலக காலணித்துவ தலையீட்டுக்கு எதிராகவும், அவர்கள் அங்கு கடைப்பிடிக்கும் வெளிநாட்டுக்கொள்கை தொடர்பாகவும் தோலுரித்துக் காட்ட வேண்டும். அதனூடாக அவர்களின் அவலட்சண முகத்தை உலக அரங்கில் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். மேலும் முடிந்த அனைத்து வழிகளிலும் உம்மத் மீண்டும் சரியான திசையில் எழுச்சி பெறுவதற்காக உதவ வேண்டும். குரல் கொடுக்க வேண்டும்.
 

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும்இ ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (9:71)
 
 
பகுதி - 03 / பகுதி - 05

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Sources From
Darul Aman.Net

'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 03

2. முஸ்லிம்களை இன ரீதியாகவும், குழு ரீதியாகவும் பிளவுபடுத்துவதையும், அதன் பால் அழைப்பதையும் நாம் முற்றாக நிராகரிக்க வேண்டும்.
இன்று இன ரீதியாகவும், குழு ரீதியாகவும் முஸ்லிம்களிடையே காணப்படும் முரண்பாடுகள் பாரிய வன்முறைகளாக வெடித்து விஷ்வரூபம் எடுத்துள்ளதைப்போல் முஸ்லிம்களின் நெடிய வரலாற்றில் எங்கும் நாம் காணமுடியாது. எமது வரலாற்றில் கருத்து முரண்பாடுகளும், வீரியமான அரசியல் முரண்பாடுகளும் நிலவிய காலங்களில் கூட இன்றைய சூழலைப்போல் அது தலைவிரித்தாட வில்லை. இந்நிலை மிக அண்மிய காலத்தில் தான் உருவாகியிருக்கிறது என்பது முஸ்லிம் அல்லாத ஆய்வாளர்களின் கருத்தும்கூட.
 

பேராசிரியர் பிரட் ஹாலிடே இது பற்றி பின்வருமாறு சொல்கிறார், “சுன்னிகளுக்கும், ஷியாக்களுக்கும் இடையிலான உண்மையான நேரடியான முரண்பாடுகள்(வன்முறைகள்) மிக அண்மித்த காலத்திலேயே குறிப்பிடத்தக்கவையாக மாறியுள்ளன.” எனவே இன்று எமக்கிடையே தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இந்த வன்முறைக்கலாசாரம் திட்டமிட்ட புறக்காரணிகளால் உருவானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 

கிலாஃபா என்பது இன, குழு வாதங்களை கடந்தது. அது குறித்த ஒரு மத்ஹப்புக்கு அல்லது சட்ட நிலைப்பாட்டுக்கு மாத்திரம் கட்டுப்பட்டதோ அல்லது சொந்தமானதோ அல்ல. மாறாக அது அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது. எனினும் தற்காலத்தில் கருத்தாளர்களாலும், அரசியல்வாதிகளாலும் எம்மிடையே ஆழமான வெறுப்புணர்வும், பிளவும் வேறூண்றச்செய்யும் முயற்சி  பல மட்டங்களில் மேற்கோள்ளப்படுவது குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும். எமக்கு மத்தியில் அகீதாவின் கிளைகளிலும், பிக்ஹ் நிலைப்பாடுகளிலும் காணப்படும் வேறுபாடுகள் இவர்கள் சொல்வதைப்போல் மிகத் தெளிவான பரிகோடுகள் கிடையாது. மாறாக அவை மிக நிதானமாகவும், ஆழமாகவும் கையாளப்பட வேண்டிய பல்பரிமாணங்கள் கொண்டவை என்பதை நாம் ஜீரணித்துக்கொள்ள வேண்டும்.
 

இந்த நிதானப்போக்கு எம்மிடைய அண்மைக்காலம் வரை இருந்தது என்பதற்கு அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த ஆரம்ப காலப்பகுதியில் இன, குழு ரீதியான வேறுபாடுகளை கடந்து இணைந்த ஜும்ஆக்களும், மாநாடுகளும், கூட்டுவேலைத்திட்டங்களும், ஆர்பாட்டங்களும் இயல்பாக இடம்பெற்றமை மிகச் சிறந்த சான்றாகும். இன்றும் ஓரிரு ஈராக்கிய குடும்பங்களுடன் பழகிப்பார்த்தால் அல்லது விசாரித்துப்பார்த்தால் இந்த இன மற்றும் குழுக்களிடையே காணப்படும் சாதாரண உறவுகளையும், இன்னும் சொல்லப்போனால் அதிகளவான திருமண பந்தங்கங்களைக்கூட புரிந்து கொள்ளலாம். பின்னர் பல காலனித்துவ சதிவேலைகளால் நிலைமை தலை கீழாக மாறிமை நாம் அறிந்ததே.
 

எனவே இஸ்லாத்திற்கு மாத்திரம்தான் அரபிகள், குர்திஷ்கள், துருக்கியர்கள், சுன்னிகள், ஷியாக்கள் என அனைவரையும் ஓர் அணியில் தலைமை தாங்கும் தகுதி இதுவரையில் இருந்திருக்கிறது. இனிமேலும் அதனால் மாத்திரம்தான் ஐக்கியம் சாத்தியப்படும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
பகுதி - 02 / பகுதி - 04

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Sources From
Darul Aman.Net

'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 02

 
 
1. கிலாஃபா என்பது இஸ்லாத்தின் அதிமுக்கிய கடமைகளில் ஒன்று. அதற்கு தீவிரவாதச் சாயம் பூசும் முயற்சியை நாம் முற்றாக நிராகரிக்க வேண்டும்.

ஒருபுறம் கிலாஃபா என்பது ஒரு சில தரப்பினர் மாத்திரம் தூக்கிப்பிடிக்கும் கோட்பாடு, இஸ்லாம் என்ற ஒரு பெரிய பரப்பில் அது சிறு கூறு, இன்றைய களநிலவரத்திற்கு பொருந்தாத ஒரு பழைய வேலைத்திட்டம் என்ற ஒரு கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. மறுபுறம் கிலாஃபா என்ற வேலைத்திட்டம் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் அடைக்களம் புகுந்திருக்கும் ஒரு சிந்தனை, கனவு அல்லது இலட்சியம் என்ற ஒரு கருத்து உலகெங்கும் பரப்புரை செய்யப்படுகிறது. இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல.

எனினும் இஸ்லாத்தை பொருத்தவரையில் கிலாஃபா என்பது எமது தீனை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் அதனை உலகெங்கும் காவிச்செல்வதற்கும் இஸ்லாம் வரையறுத்துள்ள நிறைவேற்று அலகு என்பதை நாம் சந்தேகமறப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அலகு இல்லாத நிலையில் இஸ்லாம் எமது அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் முற்றாக ஆளுமையிழந்து வெறும் ஆன்மீக கிரிகைகளுக்கும், ஒழுக்க வழிகாட்டலுக்குமான வெறும் போதனைகளின் தொகுப்பாக மாறிவிடும். கிலாஃபா என்ற இந்த அதிகார அலகுதான் இஸ்லாமிய பூமியின் எல்லைக்குள் வாழும் முஸ்லிம்களினதும், முஸ்லிம் அல்லாதோர்களினதும் அனைத்து விவகாரங்களையும் மேற்பார்வை செய்வதிலும், பாதுகாப்பு வழங்குவதிலும் பொறுப்பு வகிப்பதால் அதனை மீள நிறுவுவதை விட எமக்கு வேறு வழி கிடையாது.

நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (அல் மாயிதா 5:44)


எனவே இஸ்லாமிய ஆட்சியியலில் கிலாஃபா என்ற கோட்பாடு தொன்றுதொட்டு வந்த அனைத்து (ஏற்றுக்கொள்ளப்பட்ட) சிந்தனை வட்டங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாகும். கிலாஃபா என்பது எத்தகைய சவால்களை முஸ்லிம் உம்மத் சந்தித்த போதிலும் தொடர்ந்தேர்ச்சையாக நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு விடயம் என்பதற்கு எமது வரலாறு சான்று பகர்கிறது.

எனவே எம்மில் பலர் தற்போது நினைப்பதைப்போல் அது வெகு சாதாரணமான விடயம் கிடையாது. அதனால் தான் இமாம் அபு ஹனீபா (ரஹ்) கிலாஃபாவை உம்முல் பராயித் - கடமைகளுக்கெல்லாம் தாய் என அழைத்தார்கள். அதனால்தான் இமாம் ஷாபி அதனை – பர்ள் அஸாஸி – கடமைகளுக்கெல்லாம் அடிப்படைக்கடமை என சொன்னார்கள்.

எனவே கிலாஃபா நோக்கிய பணியை அல்லது சிந்தனையை யாரும் தீவிரவாதமாக சித்தரிக்க நினைத்தால் அதனை முற்றாக நாம் நிராகரிக்க வேண்டும். அத்தகைய தீய சிந்தனை எம்மையும் தொற்றிக்கொண்டால் அது ஒரு அபாயக்குறி என்பதில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.


பகுதி - 01 / பகுதி - 03

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Sources From
Darul Aman.Net

'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 01

 
 
IS இயக்கத்துடன் இணைந்து அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட சப்ராஸ் நிலாம் முஹ்சினின் செய்தி இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கனம் முதல் நாடெங்கும்  ஒரு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டதை நாம் அறிவோம். பிரதான ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கிலாஃபா, இஸ்லாமிக் ஸ்டேட், ஷரீயா, ஜிஹாத், டெரரிஸம் போன்ற பதங்கள் அதிகம் பந்தாடப்பட்டதையும் அறிவோம்.

அல்-கய்தா, தலிபான் போன்ற இயக்கங்கள் இலங்கையில் இயங்குவதற்கான எந்தவொரு சான்றுகளும் இல்லாத நிலையில் கூட அவற்றை இலங்கையில் தடைசெய்ய வேண்டும் என்ற  கோரிக்கையை சில வருடங்களுக்கு முன்னர் பொதுபலசேனா போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் முன்வைத்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். எவ்வாறேனும் உலகளாவிய முஸ்லிம் தீவிரவாதத்துடன் இலங்கை முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி அதனை வைத்து அரசியல் செய்ய எதிர்பார்த்திருக்கும் சக்திகளுக்கு வாயில் அவள் கிடைத்ததைப்போல் முஹ்சினின் விவகாரம் மாறும் என்பது வியப்புக்குரிய விடயமல்ல.
இலங்கையில் மாத்திரமல்லாது அரபுலகில் கடந்த இரு தசாப்த காலமாக தீவிரமாக வளர்ந்து வந்த இஸ்லாமிய எழுச்சியின் விளைவு, செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னான கொந்தளிப்பான நிலை, ஆப்கான், ஈராக் ஆக்கிரமிப்பிற்கு எதிராக இடம்பெற்ற முஜாஹிதீன்களின் தொடர் போராட்டங்கள், இடையிடையே 'இஸ்லாமிய அரசை' எமது கட்டுப்பாட்டு பகுதிகளில் பிரகடனப்படுத்துகிறோம் என்ற அறிவிப்புக்கள், இவ்வியக்கங்கள் ஹூதூத் தண்டனைகளை ஆங்காங்கே வழங்கிய பரபரப்புக்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து ஷரீயா, இஸ்லாமிக் ஸ்டெட் போன்ற பதங்கள் உலகின் அனைத்து மட்டங்களிலும் அவதானத்தை ஈர்த்தன. இது தொடர்பாக எழுதுவதும், பேசுவதும் தமக்கு கிடைத்த மிகப்பெரும் ஊட்டச்சத்தாக கருதிய உலக ஊடக முதலைகள் அதனை ஊதிப்பெருப்பித்தன. மேலும் கிலாஃபா, இஸ்லாமிக் ஸ்டேட் போன்ற சொற்கள் மீது முஸ்லிம் உம்மத்திடம், குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களிடம் இருக்கும் ஈர்ப்பைப் புரிந்து கொள்ளும் எவரும் ஆளுக்கோர்  தலைப்பாகையை கட்டிக்கொண்டு தம்மை அமீருல் முஃமீனீன்களாக, அல்லது கலீஃபாக அறிவிக்கும்  போக்கும் எதிர்வுகூறப்பட்டதுதான்.

இத்தகைய ஒரு சூழலில் தான் திடீரென ஈராக்கிலும், சிரியாவிலும் கணிசமான பிராந்தியத்தை தமது ஆயுதப்பிடிக்குள் கொண்டுவந்த ISIS இயக்கம் தனது தலைவரான அபு பக்ர் அல் பக்தாதியை        தன்னிச்சையாக கலீஃபாவாக அறிவித்தது.  இந்த அறிவிப்பு கிலாஃபத்தை தமது கனவாகக்கொண்டு இயங்கிய பல துடிப்புள்ள முஸ்லிம் இளைஞர்களை அதன் பக்கம் கவர்ந்திழுத்தது. இந்த அறிவிப்பை வழமைபோல் தமது நவ காலனித்துவ நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாக பயன்படுத்துவது எவ்வாறு என்ற தீவிர இலக்குடன் மேற்குலகு இயங்க ஆரம்பிக்க, மறுபுறம் தமது புலமையை காட்ட முண்டியடிக்கும் அவதானிகள் இந்த மாற்றம் குறித்து பல்வேறு  ஆய்வுகளையும், ஊகங்களையும் எழுதிக்குவிக்கித்தனர். இஸ்லாமிய சிந்தனையாளர்களும், இயக்கங்களும் தம் மீதும் யாராவது தீவிரவாத சேறு பூசிவிடுவார்களோ என்ற விழிப்புடன் அதிகமாக இது குறித்து பேச ஆரப்பித்துள்ளனர். இவ்வாறு இன்று முஸ்லிம் உலகிலும், அதற்கு வெளியிலும் கிலாஃபா, கலீஃபா, இஸ்லாமிய அரசு பற்றிய எதிரும் புதிருமான தகவல்கள் மக்களை வந்தடைகின்றன. இவை கிலாஃபா பற்றிய ஒரு வாதத்தை ஏற்படுத்தி அது குறித்த ஒரு அலையை ஏற்படுத்தியிருந்தாலும், 'கிலாஃபா' என்ற கோட்பாடு பற்றிய புரிதலில் மிக அதிமான குழப்பத்தை ஏற்படுத்தி வருவது கவலையான விடயம்.

ஊடகங்களும், உலகளாவிய கருத்தாளர்களும் இந்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு 'கிலாஃபா' என்ற எண்ணக்கருவை ஒரு தீவிரவாத சிந்தனையாக பரப்புரை செய்ய முனைகின்றனர். முஸ்லிம்களே தமக்குள்ளால் இஸ்லாமிய ஆட்சி என்ற சிந்தனையையே கேள்விக்குட்படுத்தும் அல்லது முற்றாகவே மறுதளிக்கும் அளவிற்கு அவர்களின் மனோபாவத்தை கொண்டுவருவதற்கு மிகவும் அதிகளவான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவது வெளிப்படையாகத் தெரிகின்றன. இந்த சூழலில் உள்ளீடு எதும் இல்லாத, பெயரளவிலான, வெற்றுக் கிலாஃபா பிரகடனங்களை எதிர்ப்பதும், மறுப்பதும் எவ்வாறு முக்கியமோ, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் குப்ரிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலை தோலுரிப்பது எவ்வாறு முக்கியமோ, அதனைவிடவும் 'கிலாஃபா' என்ற கோட்பாட்டையும் அது இஸ்லாத்தில் வகிக்கும் உயரிய வகிபாகத்தையும் முஸ்லிம்களின் மனதில் ஆழமாக நிலைகொள்ளச் செய்வது மிகவும் முக்கியமாகும். கிலாஃபா இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாட்டுடன் தொடர்பானது. அதனை புரக்கணிப்பதும், எதிர்த்து நிற்பதும் எக்காரணத்தைக் கொண்டும் தாண்டக்கூடாத விளிம்பு.

இவ்வுண்மை இஸ்லாமிய மூலாதாரங்களிலும், முஸ்லிம்களின் நெடிய வரலாற்றிலும் ஆழப்பதிந்துள்ளமை கண்கூடு. முஸ்தபா கமாலின் தீய கரங்களால் கிலாஃபாவிற்கு சமாதிகட்டப்பட்டது முதல் கிலாஃபா என்ற மந்திரச் சொல்லுக்கு உலகளாவிய முஸ்லிம்களிடம் இருக்கும் அரசியல், ஆன்மீக அந்தஸ்தத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த எகிப்த்தின் மன்னர் பாரூக், மக்காவின் ஷெரீப் ஹூசைன், ஜோர்தானின் மன்னர் ஹூசைன் மேலும் ஈரானில், சூடானில் என பலர் இதற்கு முன்னரும் முனைந்ததை நாம் அறிவோம். தம்மை உய்விக்க ஏதேனும் வராதா என ஏங்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு இவ்வறிவிப்புக்கள் ஆரம்பத்தில் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தாலும் அதன் சாயம் வெளுக்க வெளுக்க கிலாஃபத்தை எதிர்பார்த்து ஏமாறுவதே  எமது வழக்காகிவிட்டது என முஸ்லிம்கள் மத்தியில் மனச்சோர்வையும், கிலாஃபா தொடர்பான ஆழமான சிந்தனைக் குழப்பத்தை இவை ஏற்படுத்தி விடுகின்றன.

உண்மையான கிலாஃபாவின் மீள்வருகையை எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க முடியாது என தம் கண்களில் எண்ணெய் ஊற்றி காவல்காக்கும் உலக வல்லரசுகள் இத்தகைய போலி இஸ்லாமிய ஆட்சிகள் இடைக்கிடையே வந்து போவதை அனுமதிக்கும்  சூட்சுமத்தை இதற்கு முன்னரும் செய்திருக்கிறார்கள். அதனூடாக இந்த இஸ்லாமிய ஆட்சிகளின் இயலாமையையும், அநீதிகளையும் முஸ்லிம்களின் மனதில் ஆழமாக வேறூண்றச் செய்வதினூடாக  கிலாஃபா நோக்கிய பயணங்களும், வேலைத்திட்டங்கள் நடைமுறைக்குதவாத விடயங்களாக  காட்டுவதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.

எனவே இந்த நயவஞ்சக சதுரங்கத்தில் எமது சிந்தனைகள் பலியாக முன்னர் கிலாஃபா என்ற எண்ணக்கரு தொடர்பாக நாம் சில முக்கிய நிலைப்பாடுகளை எடுத்தாக வேண்டும்.

பகுதி - 02 /

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Sources From
Darul Aman.Net

நவயுக பிர்அவ்ன்களின் பித்தலாட்டம்....!!!

 
இந்த முஹர்ரம் புத்தாண்டில் எம்மில் பலர் ஆசுரா நோன்பினை நோற்கும் பேற்றினைப்பெற்றிருப்போம். அத்தினம் பிர்அவ்வின் கொடுங்கோண்மையின் கீழ் அடிமை ஊழியம் செய்து வாழ்ந்த பனீ இஸ்ரேயில் சமூகம் தமது அடிமை விலங்கொடித்து முன்னேறிய தினம்.
 
அத்தினம் அண்ட சராசரங்களை கட்டிக்காக்கும் அல்லாஹ்(சுபு) வழங்கிய வாக்குறுதியை உண்மையாக எதிர்பார்த்து, அதன் மீது தூய்மையாக நம்பிக்கை கொள்வதின் விளைவை நிலைநிறுத்திய தினம்.
 
அத்தினம் இறைவனை நிராகரிக்கும் வலிமைமிக்க, ஈவிரக்கமற்ற, சர்வாதிகாரி ஒருவன், வரலாற்றில் மிகவும் அடிமட்டத்திலிருந்த, ஈமான் கொண்ட அடிமைச் சமூகத்தின் காலில் சரிந்து விழுந்த உயரிய சம்பவத்தை நினைவூட்டும் தினம்.
 
அல்லாஹ்(சுபு) அல்குர்ஆனில் சுட்டிக்காட்டும் இந்த மகத்தான உதாரணத்தில் தமது வரலாற்றில் அதலபாதாளத்தை அடைந்திருக்கும் இன்றைய முஸ்லிம் உம்மத்திற்கும் மிகத் தெளிவான வழிகாட்டல்கள் இருக்கின்றன.
 
பிர்அவ்ன் பனீ இஸ்ரவேலர்களின் ஆண்குழந்தைகளை கொலை செய்யுங்கள் என அறிவித்த வேளையில் அல்லாஹ்(சுபு) அந்த சமூகத்தில் பிறந்த குழந்தையான முஸா(அலை) அவர்களை பிர்அவ்னின் மாளிகையில், அவன் மனைவியின் மடியிலேயே எவ்வாறு வளர்த்தெடுத்தான் என்பது எமக்குத்தெரியும். பின் தவறுதலாகச் செய்த கொலையொன்றிற்கு தண்டிக்கப்படுவேன் எனப்பயந்து எகிப்பதிலிருந்து தப்பித்தோடிய முஸா(அலை), மத்யனில் தஞ்சம் புகுந்ததையும் நாம் அறிவோம். பின் அவரை தனது இறைத்தூதராய்த் தேர்ந்தெடுத்து அவர் யாரின் தண்டனையை பயந்தாரோ அவனின் அரசவைக்கே அனுப்பி வைத்து, பிர்அவ்னை வரம்பு மீறாதே என எச்சரிக்கச் சொன்னதையும், பனீ இஸ்ரவேலர்களை விடுதலை செய் என விண்ணப்பிக்கச் சொன்னதையும் நாம் அறிவோம்.

நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான். (28:4)
 
பிர்அவ்ன் தன்னை கடவுள் என அறிவித்து ஆகப்பெரிய அத்துமீறலை செய்த வேளையிலேயே அவனை நோக்கி மூஸா(அலை) இவ்வாறு அனுப்பப்படுகிறார். அதற்கு முன்னரே தனது இராணுவமயப்பட்ட அரசின் அசுர பலத்தால் மூஸா(அலை) த்தின் சமூகத்தை முழுமையாக அடிமைப்படுத்தி, அவர்களை கொலை செய்து, சித்திரவதை செய்து, கற்பழித்து, அவர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் முதுகுகளின் மீது ஏறி நின்று தனது சுகபோக அரியாசனத்தை அவன் வடிவமைத்திருந்தான். இத்தகைய ஒரு அரசியற் பின்னணியிலேயே ஹாரூன்(அலை) அவர்களையும் அழைத்துக்கொண்டு, மூஸா(அலை) சத்தியத் தூதுடன் அவனின் அரண்மனைக்குள் நுழைகிறார்கள்.
 
“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம் (20:43-44)
 
அவர்களின் அழைப்போ எக்குழப்பமுமற்றது. மிகச் சாதாரணமானது. அவர்களின் அழைப்பு வாழ்வின் யதார்த்தைப்பற்றிப்பேசியது. அவர்களின் அழைப்பு தூய்மையின்பாலும், நன்மையின்பாலும் வரச்சொன்னது.  அவ்வழைப்பு மன்னிப்பின்பாலும், விமோசனத்தின்பாலும் பிர்அவ்னுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. அவ்வழைப்பு முழுச் சமூகத்தையும் சத்தியத்திலும், நீதியிலும், சமாதானத்திலும் கட்டியெழுப்பும்படி சிபாரிசு செய்தது. எனினும் வழமையான கோடுங்கோலர்களைப்போலவே பிர்அவ்னும் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கும், தனது அத்துமீறலிருந்து திரும்புவதற்கும் சம்மதிக்க மாட்டேன் என்றான். மூஸா(அலை)வின், ஹாரூன்(அலை)இன் தூது சாதாரணமாகத் தோன்றினாலும், தனது ஆளுகையையும், தமது அரசின் பலக்கட்டமைப்பையும், தான் ஆளும் மக்களையும் தன்கறிந்திருந்த பிர்அவ்ன் இந்த அழைப்பு தனது ஆட்சியின் நியாயாதிக்கத்தை இல்லாது செய்து மக்களை புரட்சி செய்யத் தூண்டிவிடும் என்பதை ஐயமற உணர்ந்திருந்தான்.
 
மக்களின் ஆதரவும், அடிபடிதலுக்கான தயார்நிலையும் இல்லாதுபோனால் தனது சம்ராஜ்ஜியம் தடம்புரண்டுவிடும் என உணர்ந்த பிர்அவ்ன் மூஸா(அலை) இன் தூதுக்கு மக்கள் செவிசாய்க்காத ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை புரிந்து கொண்டான். அவரையும் அவரின் இறைச்செய்தியையும் எல்லி நகையாட நினைத்தான். அவர் முன்வைத்த அறிவார்ந்த சவாலுக்கு பதிலளிக்காது அவரை ஒரு குற்றவாளியாகவும், துரோகியாகவும் மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய நினைத்தான். இதனூடாக தனது அத்துமீறலை மறைத்துவிடலாம் எனக் கற்பனை செய்தான்.
 
(ஃபிர்அவ்ன்) கூறினான்: நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.) ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்” (என்றும் கூறினான்). (26:18-19)
 
இவ்வாறு மாபாதகங்களின் முழுவடிவமாக இருந்த தனது குற்றங்களை மறைப்பதற்கு மூஸா(அலை) தவறுதலாக செய்த கொலையை திரும்பவும் விசாரணைக்கு எடுத்தான். மேலும் அவரை தனது குடும்பம் பாலகப்பருவத்திலிருந்து வளர்த்தெடுத்ததிற்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்காது தனது ஆட்சிக்கெதிராக மக்களை தூண்டிவிடும் ஓரு நன்றிகெட்ட மனிதராக மக்களிடம் அறிமுகப்படுத்தி, மூஸா(அலை) நியாயமாக வாதத்தை மழுங்கடித்து அதனை வேறொரு திசைக்கு திருப்புவதற்கு முயன்றான் என அல்குர்ஆன் அவனது சூழ்ச்சியை குறிப்பிடுகின்றது. இந்தக்கட்டத்தில் மூஸா(அலை) அவனை வாயடைக்கச்செய்யும் விதமாக எவ்வாறு ஒரு அடிப்படைத்தர்க்கத்தை முன்வைத்தார்கள் என்பதை அல்குர்ஆன் அழகாக ஞாபகமூட்டுகிறது.

“பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?” (26:22)
 
மூஸா(அலை) வாதத்தை திசை திருப்பும் பிர்அவ்னின் கைங்கரியத்திற்கு விலைபோகவில்லை. மாறாக அவன் ஏற்படுத்த விரும்பும் வாதத்திற்கான தளத்திற்கு சென்று அவர் வாதிக்க விரும்பவுமில்லை. மாறாக பிர்அவ்ன் முன்வைத்த வாதத்தையே அவனுக்கு எதிராக திருப்பும் முகமாக அவன் பனீ இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கொடுமையின் பால் அனைவரினதும் கவனத்தை திருப்பினார்கள். அதாவது நீ என்னை உன் மாளிகையில் வைத்து வளர்த்தெடுத்தாக கூறுகிறாயே, நீ பனீ இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தாது இருந்திருந்தால், உனது ஆட்சி மோகத்திற்காக அவர்களின் ஆண்குழந்தைகளை கொல்லதிருந்திருந்தால் நான் உனது மாளிகையை மிதித்திருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்காது. நான் எனது அன்னையின் மடியில் சந்தோசமாக வளர்ந்திருப்பேனே என்பதை நினைவூட்டி குற்றங்களிலெல்லாம் ஆகப்பெரிய குற்றத்தை நீதான் செய்திருக்கிறாய் என துணிச்சலாக தனது எதிர்வாதத்தை முன்வைத்தார்கள்.
 
பிர்அவ்னின் இந்த பித்தலாட்டத்திற்கும் இன்றைய நவயுக பிர்அவ்ன்களான சடவாத முதலாளித்துவ அரசுகளின் தலைவர்களின் கையாலாகாத்தனத்திற்கும் எந்தவொரு வேறுபாடுமில்லை. இஸ்லாம் முன்வைக்கும் நேர்மையான கேள்விகளுக்கு பதிலளிக்காது மக்களின் திசையை வேறுபக்கம் திருப்ப முயல்வதும் இஸ்லாத்தின் கீர்த்தியை கேவலப்படுத்த நினைப்பதுமே அவர்களிடம் காணப்படும் பெரும் ஆயுதமாக அவர்கள் கருதுகின்றார்கள். எவ்வாறு பிர்அவ்ன் தன்னை அனைவரினதும் இரட்சகனாக நிறுவ முற்பட்டானோ அதேபோல இந்த உலகில் எது சரி, எது பிழை என்ற தீர்மானத்தை நிர்ணயிக்க தமக்குத்தான் முழு அதிகாரம் இருப்தாக இந்த சடவாத தலைவர்களும் வாதிடுகின்றனர். பிரபஞ்சம், மனிதன் அவனது வாழ்வு தொடர்பான் உண்மையான யதார்த்தங்களை மூடி மறைத்து இறைவனின் இறைமையை மறுதளித்து, அவனுக்கு இருக்கும் சட்டமியற்றும் அதிகாரத்தை மறுதளித்து தம்மால் இறைச்சட்டங்களின் தலையீடின்றி இந்த உலகை நிர்வகிக்க முடியும் என்ற அசட்டுத்துணிவுடன் பிர்அவ்னின் முன்மாதிரியை இவர்களும் பின்பற்றுகின்றனர்.
 
எவ்வாறு பிர்அவ்ன் பனீ இஸ்ரவேலர்களை தனது அடிமைகளாக நடாத்தினானோ, அதேபோலவே தமது ஏகாதிபத்திய சுரண்டல் நிகழ்ச்சித்திட்டத்துடன் முஸ்லிம் உலகிலும் புகுந்திருக்கும் அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ காலனித்துவ நாடுகள் அதனை காலனிகளாக அடிமைப்படுத்தியுள்ளன. தமது நேரடி, மறைமுக ஆக்கிமிப்பை நிறுவுவதற்கு நேரடியாகவும், தமது முஸ்லிம் பெயர்தாங்கி கங்காணிகளினது கரங்களினாலும் மில்லியன் கணக்கான மக்களை கொன்றொழித்துள்ளனர். வளைகுடா யுத்தத்ததை தொடர்ந்து ஈராக்கிற்கு எதிராக விதிக்கப்பட்ட மருத்துவ, பொருளாதார தடைகளினால் மாத்திரம் அரை மில்லியன் குழந்தைகள் இறந்தன. இது தொடர்பாக அந்நாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மெடலின் அல்பிரைட் என்ற பெண்பேயிடம் கேட்கப்பட்டபோது அது தமது இலக்கிற்காக செலுத்தக்கூடிய ஒரு விலைதான் என ஈவிரக்கமற்று பதில் சொன்னதை நாம் மறந்திருக்க மாட்டோம். பின்பு 2003இல் சதாம் ஹ}சைனை வீழ்த்துவதற்காக இடம்பெற்ற  அமெரிக்க-பிரித்தானிய கூட்டுப்படையெடுப்பு மாத்திரம் குறைந்தது ஒரு மில்லியன் உயிர்களை பலியெடுத்தது என 'The Lancet' என்ற பிரித்தானிய மருத்துவச் சஞ்சிகை தெரிவித்தது.
 
எனினும் ஒரு முஸ்லிம் இந்த உலகில் ஒரு குற்றத்தை இழைத்து விட்டால் மாத்திரம் அதனை பெரும் பூதமாக பூதாகரப்படுத்தி அதற்கெதிராக முழு உலகையும் அணிதிரட்டும் முயற்சியை இவர்கள் செய்வதற்கு பின்நிற்பதில்லை. எவ்வாறு பிர்அவ்ன் மூஸா(அலை) அவர்கள் தவறுதலாகச்  செய்த கொலைக்குற்றத்தை பூதாகரப்படுத்தி பேசி தனது கொடுங்கோலை நியாயப்படுத்த நினைத்தானோ அது போலவே இவர்களும் ஒரு முஸ்லிம் எதிர்விளைவாகச் செய்யும் செயலை மாத்திரம் அதன் காரணிகளைக்கூட ஆராயாது, அதனை தனிமைப்படுத்தி, பெரிதாக்கிக்காட்டி அதற்குள் தாம் செய்யும் அட்டூழியங்களை அனைத்தையும் மறைக்க நினைக்கின்றனர்.
 
மறுபக்கத்தில் பிர்அவ்ன் எவ்வாறு தான் மூஸா(அலை)க்கு செய்த உபகாரத்தை சொல்லிக்காட்டினானோ அதற்கு ஒப்பாக, இந்த முதலாளித்து அரசுகளும், முஸ்லிம்கள் அவர்களின் தேசங்களில் அடைக்கலம் புகுந்து வாழும்போது செய்த உபகாரத்தையும், முஸ்லிம் உலகிற்கு தாம் வழங்கும் உதவிகளையும் இலஞ்சமாகப்பெற்றுக்கொண்டு தம்மை அனுசரித்துப்போகுமாறு வெட்கம் கெட்டுக் கோருகின்றனர்.
 
எவ்வாறு பனீ இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தாது, அவர்களின் குழந்தைகளை கொல்லும் கொள்கைளை பிர்அவ்ன் பின்பற்றாது இருந்திருந்தால் மூஸா(அலை) பிர்அவ்னின் மாளிகைக்குள் வளரவேண்டி ஏற்பட்டிருக்காதோ அதேபோல, உண்மையில் இந்த காலனித்துவ மேற்குலகின் தலையீடு முஸ்லிம் உலகில் இல்லாதிருந்திருந்தால் மேற்குலகின் (IMF, World Bank, etc.) பிச்சைக்காசுக்காக காத்திர வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்காது. பொருளாதார மீட்சிக்காக மேற்குலகில் அடைக்கலம் புக வேண்டிய கேவலமும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. எமது தேசங்களை ஆக்கிரமித்து, காலனித்துவப்படுத்தி, மக்களை அடிமைப்படுத்தி, வளங்களை கொள்ளையடித்து, எமது அரசான கிலாஃபத்தை நிர்மூலமாக்கி, எம்மீது தமது முகவர்களை ஆட்சியாளர்களாக நியமிக்காது இருந்ததிருந்தால் மேற்குலகின் பக்கம் கூட நாம் தலை வைத்து படுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
 
பின்பு பிர்அவ்ன் சதித்திட்டம் தீட்டினான்...அல்லாஹ்(சுபு)வும் தனது திட்டத்தை பூர்த்தியாக்கினான்...
 
ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம். இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).(28:5-6)
 
அல்குர்ஆனின் நிழலில் இன்றைய முஸ்லிம் உம்மத்திற்கெதிரான முதலாளித்துவ உலகின் சதித்திட்டங்களை ஆய்வு செய்யும் போது, மூஸா(அலை) அவர்களின் வரலாறு எமது போராட்டத்தில் நாம் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்கிறது. உண்மையான, நேர்மையான போராட்டத்தை எதிர்கொள்ள சக்தியற்ற கொடுங்கோலர்கள் எப்போதும் தீட்டும் சதித்திட்டங்களின் பாரதூரங்கள் பற்றியும், மக்களின் கவனத்தை சத்தியத்திலிருந்து திசை திருப்பும் முயற்சிகளையும் நாம் நன்குணர வேண்டும் என்ற பாடத்தையும் இந்த வரலாறு எமக்கு கற்றுத்தருகிறது.
 
மிக நுணுக்கமான திட்டங்களாக, எதிர்கொள்ளவே முடியாத அபாரமான முயற்சிகளாக இஸ்லாத்தின் எதிரிகளின் திட்டங்கள் விதம் விதமாகத் தென்பட்டாலும், அவை  அனைத்தும் பல்லாயிரம் வருடங்களாக திரும்பத்திரும்ப முயற்சிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட முயற்சிகள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இறுதியில் ஈமானில் புடம்போடப்பட்ட இறைவிசுவாசிகளுக்கு முன்னால் அவை அனைத்தும் தடம்புரண்டு  அல்லாஹ்(சுபு) திட்டமே வெல்லும் என்ற உண்;மையையே மூஸா(அலை) அவர்களின் வரலாறும், ஆசுரா தினமும் எமக்கு ஒரு சிறந்த போராட்டப்பாடமாக முன்வைக்கிறது.
 
அல்லாஹ(சுபு) அல்குர்ஆனின் வெளிச்சத்தில் எமது போராட்டப்பாதைகளை நிர்ணயிக்க எமக்கு  என்றென்றும் வழிகாட்டுவானாக!

Oct 26, 2015

ஹிஜ்ரி 1437 ! அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா !? இன்னாலில்லாஹ் சொல்வதா !?

 
ஹிஜ்ரி 1437 ! அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா !? இன்னாலில்லாஹ் சொல்வதா !?

ஒரு சுயநலமிக்க கொடூரமான குப்ரிய சித்தாந்த அதிகாரத்தின் கீழ் அந்த அசத்திய (அ)நாகரீகத்தின் அடிப்படையில் மாதங்களையும் வருடங்களையும் கணிப்பிட்டு ஏதோ பெயருக்காக ஹிஜ்ராவை கல்குலேட் பண்ணுவது முஸ்லீம்களுக்கு இன்று ஒரு சம்பிரதாயம் !

அந்தவகையில் இன்னொரு முஹர்ரமும் பிறந்துள்ளது .

அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா 1? இன்னாலில்லாஹ் சொல்வதா !? என்பதே இப்போதுள்ள கேள்வி !

ஹிஜ்ரி 1437 அவலத்தின் அரவணைப்புடன் முஸ்லீம் உம்மத்துக்கு வந்தனம் கூறுகிறது ! சந்தி சிரிக்கும் சகோதர சண்டை ! எதிரிக்கு எடுபிடி ஆகிய கேவல அரசியல் ! உசூலிய விவாதத்துக்குள் உம்மத்தை அமரவைத்தல்!அசுர ஆதிக்கத்தில் அடிவாங்கும் வழமை என விழி பிதிங்கி விடிவை தேடும் நிலையில் முஸ்லீம் உம்மத்துக்கு ஹிஜ்ரா என்ற வரலாற்று விடிவு இன்று புலப்படாத ஒரு ஆன்மீக இதிகாசமே!

அதிலும் தேசம் ,தேசியம் ,சர்வதேசம் என இருக்கின்ற பிறையையும் எட்டாக வேறு பிரித்து விட்டார்கள் ! அதோடு சில மதப் பூசாரிகளிடம் இருக்கும் பஞ்சாங்கம் போல ஆளுக்கொரு கணிப்பு சொல்லும் கண்றாவி ஆகிவிட்டது இஸ்லாத்தின் கலண்டர் என்பதுதான் இன்று கவலையாக இருக்கிறது ! பக்காவான பன்றியின் தொழுவத்தில் பசுக்கன்று தான் தானாக வாழ நினைத்தால் சாத்தியமா!?

மலத்தை மரமாக்கி கழிவை இலை ஆக்கி உண்ணும் பக்குவத்தில் மாறுவது தவிர மாற்று வழி இருக்குமா !? நடந்துள்ளது அதுதான் .இஸ்லாம் என்பது ஒரு தனித்துவமான சித்தாந்தம் ,முதலாளித்துவம் என்பது இன்னொரு சித்தாந்தம் இங்கு உடன்பாடு என்பதற்கு வழியே இல்லை . ஒரு சித்தாந்தம் அதன் விழுமியங்களையும் அதன் நாகரீகத்தையும் சுமந்த வாழ்வியலை கொண்டிருக்கும்.

அந்தவகையில் கிரிகேரியன் (சூரிய ) கலண்டர் கணிப்பு என்பது குப்ரின் நாகரீகம் அதில் இஸ்லாத்துக்கோ ,முஸ்லீமுக்கோ பங்கில்லை என்பதை முஸ்லீம் உம்மத் உணர வேண்டும் . இன்னும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட அது ஒரு பலம்மிக்க அரசியல் அதிகாரமாக உருவாக வேண்டும் அதன் மூலம் மாத்திரமே முஸ்லீம்களின் இம்மை ,மறுமை வாழ்வு வெற்றி அடையும் என்பதையும் பிறையை அடிப்படையாக கொண்ட சந்திரக்கலண்டரை அந்த ஒரே தலைமையிலான கிலாபா அரசு மாத்திரமே மிக சிறப்பாக அமுல் படுத்தும் என்பதும் தீர்க்க தரிசனமான வரலாற்று உண்மையாகும் .

நன்றி
ஹந்தக் களம்

அமெரிக்க ஈரானிய உறவு! (ஒரு எக்ஸ்ரே பார்வை)

போலி வேசங்களால் முஸ்லீம் உம்மா நிறையவே ஏமாற்றப் படுகிறது . முஸ்லீம் உம்மா ஆதிக்கப்படுத்தப் படுவதட்கும் ,அதன் வளங்களை சுரண்டுவதட்கும் ஆளும் குப்ரிய தாகூத்கள் எப்படியெல்லாம் திட்டம் போடுகிறார்கள் ? என்பதை உணர்ந்து கொள்ள பல்வேறு பட்ட தளங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களே கீழே வருகின்றது . இஸ்லாத்தின் பெயரால் முன்வைக்கப்படும் இந்த நயவஞ்சக அரசியலில் சத்தியத்தின் குரல்வளை நவகாலனித்துவ பூர்சுவா பூட்சுகளால் மிதிக்கப்பட ,அந்த பூட்சுகளை முஸ்லீம் உம்மத் தமது விடுதலை சின்னங்களாக கருத வேண்டும் ! இதுதான் எதிரியின் எதிர்பார்ப்பு.

சவூதி என்ற சாலப் மாயை, ஈரான் என்ற சண்டித்தனம் மிக்க வீரன் , துருக்கி எனும் நவ இஸ்லாமியப் போலி !!! இவைகளைத் தாண்டி இந்த முஸ்லீம் உம்மாஹ் தனது சுயமானதும் ,சுன்னாஹ் வரையருத்ததுமான கிலாபா அரசியலை நோக்கி அடிவைக்கக் கூடாது என்பதே அல்லாஹ்வின் எதிரிகளின் ஒரே எதிர்பார்ப்பாகும் .அப்படி சிந்தித்தால் அதை தடுக்க ,தவிர்க்க ,தவிடு பொடியாக்க ,அதெல்லாம் முடியாதபோது உள் முரண்பாடுகளை தூண்டி தாமதப் படுத்தி ,தமது எதிர்காலத்தை திட்டமிடுவதே அல்லாஹ்வின் எதிரிகளின் நிலைப்பாடாகும் .அதற்காக அரசியல் ,பொருளாதார ,இராணுவ ரீதியான திட்டங்களை தாராளமாகவே இன்று உலகில் பரவலாக்கி உள்ளார்கள் .இருந்தும்.....

 "இவர்கள் தங்களது வாய்களைக் கொண்டே (ஊதி அல்லாஹ்வின் ஒளியை ) அணைத்துவிட விரும்புகின்றனர் .எனினும் இந்த நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்தியாக்காமல் இருக்கப் போவதில்லை.

"அவனே தன்னுடைய தூதரை நேர்வழி உடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் இனைவைப்பாளர்கள் வெறுத்த போதிலும் எல்லா மார்க்கங்களையும் இது மிகைத்து விடும் ".(அல் குர் ஆன் 9:32-33)


"எனவே தைரியத்தை இழந்து விடவும் வேண்டாம் துக்கப்படவும் வேண்டாம் .நீங்கள் மூமீன்களாக இருந்தால் நீங்கள் தாம் (இம்மையிலும் ,மறுமையிலும் ) உயர்ந்தவர்கள் ". (அல் குர் ஆன் 3:139)


"......நிச்சயமாக முமீன்களுக்கு வெற்றியை கொடுப்பது எம்மீது கடமையாக இருக்கிறது " (அல் குர் ஆன் 30:47) என அல்லாஹ் தன்மீது கடமையாக்கியுள்ள வெற்றியின் முன்னறிவிப்பு முஸ்லீம் உம்மாவாகிய எமக்கு நிச்சயமாக இருக்கிறது .இந்த எண்ணத்துடன் கீழ்வரும் பதிவை படியுங்கள்.

இவண் சத்திய விடியலை தேடி போராடும் உங்களில் ஒருவன் அபூ ருக்சான்

மத்திய கிழக்குத் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் கொள்கையில் உலக எரிபொருள் விநியோகம், இஸ்ரேலின் பாதுகாப்பு, பயங்கரவாத அமைப்புகளிற்கு எதிரான நடவடிக்கைகள், பயங்கர வாதத்திற்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை, பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களின் பரம்பலைத் தடுத்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

அண்மைக் காலங்களாக அமெரிக்காவின் நட்புநாடுகளான இஸ்ரேல், சவுதி அரேபியா, எகிப்து ஆகியவை அமெரிக்காவின் மத்திய கிழக்கு தொடர்பான கொள்கை தமக்குப் பாதகமாக மாறுவதாக உணர்கின்றன. இந்த நாடுகளின் ஊடகங்கள் இதை அடிக்கடி சுட்டிக் காட்டுகின்றன.சவுதியும் எகிப்தும் இரசியாவுடன் தமது நட்பை வளர்க்க முயல்கின்றன.

சிரியப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை அங்கு இருக்கும் வேதியியல் படைக்கலன்களை அழிப்பது மட்டுமே. அங்கு நடக்கும் மோதல்கள் பற்றியோ அங்கு ஒரு இலட்சத்தையும் தாண்டிப் போயுள்ள உயிரழப்புக்களைப்பற்றியோ அமெரிக்கா கவலைப்படவில்லை.

ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் தற்போது ஒன்றிற்கு ஒன்று அதிகம் தேவைப்படுகின்றது. ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடை ஈரானைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையால் 2013இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் சிதறும் ஆபத்து உள்ளது என பல பொருளாதார நிபுணர்கள் 2012இல் எச்சரித்திருந்தனர். ஆனால் 2013 இன் பிற்பகுதி வரை ஈரான் பொருளாதரத் தடைக்கு எதிராகத்தாக்குப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் இந்தப் பொருளாதாரத் தடையில் இருந்து விடுபட்டால் ஈரானிய மக்கள் பெரிய சுமையில் இருந்து விடுபடுவார்கள். ஈரானியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதற்காக சில விட்டுக் கொட்டுப்புக்களைச் செய்து ஈரான் அமெரிக்காவுடன் உறவை வளர்க்க ஈரான் விரும்புகிறது.

ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டால் உலகில் எரிபொருள் விலை குறைந்து உலகப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதாலும் ஈரானிற்கு அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவு ஏற்றுமதியைச் செய்ய முடியுமமென்பதாலும் அமெரிக்காவிற்கு ஈரான் தேவைப்படுகின்றது. மேலும் அமெரிக்காவும் ஈரானும் உறவில் நெருங்கி வந்தால் அது பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளாக மேற்கு குறிப்பிடும் அமைப்புக்களைப் பலவீனப் படுத்துவதுடன் இஸ்ரேலின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

அமெரிக்காவும் ஈரானும் தம் நிலைப்பாட்டில் செய்துள்ள மாற்றங்கள் நாளடைவில் மேம்பட்டு ஒரு கேர்ந்திரோபாய பங்காண்மையாக மாறும் சாத்தியம் உண்டு. இதற்கு பாலஸ்தீனப் பிரச்சனை தடையாக இப்போது இருகின்றது. இத் தடையை நீக்க பாலஸ்த்தீனத்தில் இரு அரசுத் தீர்வை அமெரிக்கா கொண்டுவர வேண்டும்.

1970களில் அமெரிக்காவும் ஈரானும் சவுதி அரேபியாவும் கேந்திரோபாயப் பங்காளிகளாக இருந்து கொண்டு சோவியத் ஒன்றியத்திற்கும் அதன் நட்பு நாடுகளாக இருந்த சிரியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளிற்கும் எதிராக ஒரு கேர்திரோபாய சமநிலையைப் பேணிக்கொண்டிருதன. ஈரான் மன்னாராக இருந்த ஷா மோசமான சுரண்டல் ஆட்சியைச் செய்து கொண்டிருந்த படியால் அங்கு மதவாதிகள் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றி ஈரானை அமெரிக்காவின் மோசமான எதிரி நாடாக வெளிப்படையாக மாற்றினர். பின்னர் காம்ப் டேவிட் உடன்படிக்கையின் பின்னர் எகிப்து அமெரிக்காவின் கேர்ந்திரோபாய நட்பு நாடாக மாற்றப்பட்டது.

இப்போது ஜெனிவாவில் நடக்கும் பேச்சு வார்த்தையின் பின்னர் அமெரிக்காவின் பங்காளியாக ஈரான் மாறினால் அமெரிக்காவால் இலகுவாக ஹோமஸ் நீரிணையைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் மற்ற மூலப் பொருள் விநியோகத்தையும் ஆபிரிக்காவிற்க்கான சீன ஏற்றுமதியையு்ம் நினைத்த நேரத்தில் இலகுவாகத் துண்டிக்க முடியும். தற்போது அமெரிக்கா பாஹ்ரெய்னில் இருக்கும் தனது கடற்படைத் தளத்தின் மூலம் ஹோமஸ் நீரிணையைப் பாதுகாத்து வருகின்றது.


சீனா பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தை தனது நிர்வாகத்தின் கீழ் வைத்திருக்கின்றது. அதில் இருந்து கொண்டு ஹோமஸ் நீரிணையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரானுடன் சீனா இணைய வேண்டும். ஆனால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களைசீனா இரத்துச் (வீட்டோ) செய்யாதது கடும் அதிருப்தியை அளித்தது. இதனால் சீன ஈரானிய உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்க ஈரானிய கேந்திரோபாய இணைவு சீனாவிற்கு ஆபத்தாக முடியும்.

ஈரான் அமெரிக்காவின் எதிரியா ?

ஈரான் எப்போதுமே அமெரிக்காவை எதிர்க்கக் கூடிய ஒரு தன்மானமுள்ள நாடு என்ற சிந்தனை முஸ்லிம்களிடம் பரவலாக இருப்பதை மறுக்க இயலாது. ஈரான் அமெரிக்காவை பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்த்து பேசுவதே இவ்வாறு நம்புவதற்கான காரணம் என்பதை அவதானிக்க முடிகிறது. உண்மையில் ஒரு நாட்டுடன் மற்றொரு நாடு கொண்டுள்ள வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் அளவுகோல் இது கிடையாது. ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் கொண்டுள்ள உறவை, அந்த இரு நாடுகளுக்குமிடையேயான தூதரக உறவு, ஒப்பந்தங்கள் போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்காமல், வெறுமனே அந்த நாட்டை எதிர்த்து அறிக்கை விடுவதைக் கொண்டு மாத்திரம் தீர்மானிக்க இயலாது. ஈரானில் 1979 இல் ஏற்பட்ட புரட்சிக்கு பிறகு, ஈரான் அமெரிக்காவின் எதிரி என்பதாக பரவலாக முஸ்லிம்களை ஏமாற்றி வருவதால், ஈரானிய புரட்சியிலிருந்து நாம் ஆராய்வோம்.

ஈரானிய புரட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரின் அருகிலுள்ள Neauphle-le-Château என்ற ஊரில் கொமைனி தங்கியிருந்தார். அப்போது அவரை வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் சந்தித்து அவரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தினர். பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவாக அமெரிக்க அரசோடு இணக்கமாக நடந்து கொள்வது என்பதாக கொமைனி முழு சம்மதம் தெரிவித்தார். அப்போது அமெரிக்க பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன.

இதை புரட்சிக்குப்பின் ஈரானிய குடியரசின் முதல் அதிபராயிருந்த அபுல் ஹசன் பனு சதர் 2000 ஆம் ஆண்டு அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். வெள்ளை மாளிகை தரப்பினருக்கும் கொமைனி தரப்பினருக்கும் மத்தியில் ஏற்பட்ட பலவேறு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ஈரானின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதாக உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் ஈரானின் வெளிவிவகாரக் கொள்கையில் கொமைனி அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுத்து சமரசம் செய்துகொண்டார். இதன் பின்னர் கொமைனி பிரெஞ்சு விமானம் மூலம் ஈரான் வந்து சேர முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கொமைனிக்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவேண்டுமென்று ஷா அரசால் பிரதமராக நியமிக்கப்பட்ட ஷஹ்புர் பக்தியாருக்கு அமெரிக்காவிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதோடு கொமைனியோடு இணங்கி போகுமாறு ராணுவத்திற்கும் அச்சுறுத்தல் விடப்பட்டது.

ஈரானின் அரசியல் சாசன விதிமுறைகள், முஸ்லிம் நாடுகள் மேற்கத்திய முதலாளித்துவ அரசியல் சாசனத்தை மையமாகக் கொண்டு தொகுத்துள்ளதைப் போன்றே வரையறுக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஆட்சியமைப்பானது குடியரசு முறை, அமைச்சர்களுக்கு தனியதிகாரம், பாராளுமன்ற முறை, அதிகாரப் பகிர்வு போன்ற மேற்கத்திய ஆட்சியமைப்பு முறையை பின்பற்றியே இன்றும் உள்ளது. சில முஸ்லிம் நாடுகள் இஸ்லாத்தை அரசு மதமாக அறிவித்துள்ளது போன்றே ஈரானும் இஸ்லாத்தை அரசு மதமாக அங்கீகரித்துள்ளது. இதை வைத்து அதை இஸ்லாமிய அரசு என்றோ, இஸ்லாமிய சட்டங்கள் ஈரானை ஆட்சி செய்வதாகவோ ஒருபோதும் கருதிவிடக்கூடாது.

ஏனெனில் அந்த நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் செயலாக்க அமைப்புகள் (Systems) இஸ்லாத்திற்கு முரணானவை. ஈரானுடைய அரசியல் சாசனம் இஸ்லாமிய அகீதாவைக் கொண்டு வகுக்கப்பட்டதல்ல. மாறாக தேசியவாத அடிப்படையில் மேற்கத்திய அரசியல் சாசன அமைப்பை தழுவி, பெரும்பாலான முதலாளித்துவ கோட்பாடுகளுடன் சில இஸ்லாமிய சட்டங்களை இணைத்து வகுக்கப்பட்டதாகும். மேலும் ஈரானிய புரட்சி ஏற்படுவதற்கு முன்னர், இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் கொமைனியை சந்தித்து அமெரிக்காவிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று கூறியதோடு இஸ்லாமிய அரசியல் சாசனத்தை முன்மாதிரியாகக் கொள்ளுமாறும் விடுத்த வேண்டுகோளை கொமைனி முற்றிலும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இமாம் ஜஃபர் சாதிக் அவர்களின் மத்ஹபான ஜஃபரி மத்ஹபை தழுவியே ஈரானின் சட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படுவதாக கூறுவது உண்மையல்ல. ஜஃபரி ஃபிக்ஹை, ஈரான் தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காக புறந்தள்ளிவிட்டு முதலாளித்துவ சட்டங்களையே முன்னெடுத்து செல்கின்றது. சவூதி அரேபியா இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை மட்டும் பின்பற்றிவிட்டு, பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, இஸ்லாமிய ஆட்சியமைப்பு போன்ற விடயங்களில் இஸ்லாத்தை புறந்தள்ளி ஆட்சி நடத்துவது போன்றே ஈரானும் செயல்பட்டு வருகிறது. ஈரான் மேற்கொண்டுவரும் நேரடியான அல்லது மறைமுகமான அரசியல் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு எதிரானதாக இருந்ததில்லை. மாறாக அவை அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இணங்கி போகின்றதாகவும் அமெரிக்காவின் திட்டங்களை அங்கீகரிப்பதாகவும் உள்ளது. இதற்கு ஏராளமான உதாரணங்களை கூறமுடியும்.

உதாரணமாக, லெபனானில் ஈரானால் உருவாக்கப்பட்டு ஈரானுடைய வழிகாட்டுதலில் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவை லெபனான் அரசு சிறப்பு ராணுவ பிரிவாக அங்கீகரித்துள்ளது. லெபனான் அரசாங்கம் மதச்சார்பற்ற கொள்கைகைகளையும் அமெரிக்க நலன்களை பேணி பாதுகாத்துவருவதையும், லெபனானில் வேறு எந்த பிரிவினருக்கும் இப்படிப்பட்ட இராணு பிரிவை வைத்திருக்க அனுமதியில்லை என்பதையும் நாம் அறிந்தே வைத்துள்ளோம். அமெரிக்க நலன்களை பேணி பாதுகாத்துக்கொண்டு சிரியாவில் மக்களை கொன்றுகுவித்து வரும் கொடுங்கோலன் பசர் அல் அசாதை காப்பாற்ற சிரியாவிற்கு ஹிஸ்புல்லாவை ஈரான் அனுபபிய செயல் மூலம் அமெரிக்க நலன்களை பாதுகாக்க ஈரான் உதவியுள்ளதை அறிந்துகொள்ளலாம்.

கொடுங்கோலன் பசர் அல் அசாத் ஷியா பிரிவைச் சார்ந்தவன் என்பதால் ஈரான் இவ்வாறு நடந்து கொள்கிறது என்று சிலர் கூறுவது உண்மையில்லை. ஈரானுடைய இந்த செயல்பாடு, இஸ்லாத்தை பாதுகாக்கவோ அல்லது ஷியா கொள்கைகளை பரப்புவதற்கோ ஒருபோதும் உதவாது. மாறாக அமெரிக்க நலன்களையே பாதுகாக்க உறுதுணையாக அமையும். பசர் அல் அசாத் பின்பற்றி வரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்ட பிரிவான அலவிஷியா கோட்பாட்டிற்கும் ஈரானியஅரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவானஇஸ்னா அஸரிய்யா பிரிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோதும், அங்குள்ள மக்கள் உணவு, மருந்து இல்லாமல் மடிந்தபோதும் ஈரான் என்ன செய்தது? ஈரான் நினைத்திருந்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியிருக்கலாமே. அமெரிக்காவிற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் அறிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்துக்கொண்டிருக்கும் ஈரான், எப்போதாவது அதை செயலில் காண்பித்தது உண்டா? ஈரானின் நடவடிக்கைகள், அமெரிக்க நலன்கள் ஈராக்கில் பாதுகாக்கப்பட உதவியுள்ளன என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கூறமுடியும். 2005 ஆம் ஆண்டு ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்புகளை சார்ந்த இப்ராஹீம் அல் ஜஃபரிமற்றும் அல் மாலிகி ஆகியோரை அமெரிக்கா அதிகாரத்தில் அமர்த்தியது. ஆக்கிரமிப்பிற்கு பிறகு இராக்கில் தூதரகத்தை மீண்டும் ஈரான் திறந்து கொண்டது. அல் மாலிகி ஈரானுக்கு விஜயம் செய்ததோடு பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 2008 ஆம் ஆண்டு அஹ்மது நிஜாத் ஈராக்கிற்கு இருமுறை விஜயம் செய்து அமெரிக்க பொம்மையான அல் மாலிகியை சந்தித்து அரசின் திட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

மேலும் அஹ்மது நிஜாத் 2010 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்து அமெரிக்க ஆக்கிரமிப்பின் பாதுகாவலனான ஹமீது கர்சாயை சந்தித்து அமெரிக்காவுடனான நல்லுறவை வெளிப்படுத்தினார். ஈரானின் இத்தகைய செயல்பாடுகள் அமெரிக்க நலன்களை பேணி பாதுகாக்கவே உதவுகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகும். அமெரிக்காவிற்கு எதிராக கண்டன அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கும் ஈரான் ஒருபோதும் செயலில் இறங்காது என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். எமனில் பிரிட்டனின் ஏஜெண்டாக ஆட்சி புரிந்த அலி சாலிஹுக்கு எதிராக அல் ஹவுதி மக்களை தூண்டிவிட்டு உதவி செய்த ஈரான், தெற்கு எமனின் பிரிவினைவாத மதச்சார்பற்ற குழுவிற்கும் உதவி செய்தது. அமெரிக்காவின் மறைமுக ஆதரவு பெற்ற குழுக்களுக்கு ஈரான் உதவுவதன் மூலம் அமெரிக்க நலன்களே பாதுகாக்கப்படுகிறது.

ஈரான் சிரியாவிற்கு பக்கபலமாக இருப்பது ஒன்றும் புதிய விசயமல்ல. பசர் அல் அசாதின் தந்தை ஹஃபிஸ் அல் அசாத் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி ஆட்சியைப் பிடித்த காலகட்டத்திலிருந்தே இது தொடர்கிறது. அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக விளங்கும். அசாத் குடும்பத்தினரின் மதச்சார்பற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரபு தேசியவாதக் கட்சியான பாத் கட்சி, சதாம் ஹுசைனின் பாத் கட்சியோடு தொடர்பு கொண்டிருந்தது குறித்து ஈரான் நன்கு தெரிந்துகொண்டே அசாத் குடும்பத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளது. ஈரான் அரசாங்கம் சிரியாவுடன் ராணுவம், வர்த்தகம், அரசியல் நடவடிக்கை போன்ற விசயங்களில் எப்போதும் உறுதுணையாகவே இருந்துள்ளது. நெருக்கடி நேரங்களில் சிரிய அதிபரைக் காப்பாற்ற ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது. முஸ்லிம்களை கொன்று குவிக்கும் பசர் அல் அசாதிற்கு ஈரான் பக்க பலமாக இருந்தது முதல் சமீபத்திய இரசாயன விசா வாயு படுகொலை சம்பவம் வரை உற்று நோக்குவோமானால், சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் அரசியல் ஆக்கிரமிப்பிற்கு ஈரான் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியுள்ளது நன்கு விளங்கும்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஈரானும் சேவை செய்துள்ளது. வடக்கு பிராந்தியத்தில் ஈரானின் செயல்பாடுகளால் தாலிபான்களை அமெரிக்கா வீழ்த்த இலகுவாக முடிந்தது.“எங்களுடைய படைகள் தாலிபான்களுடன் போரிட்டிருக்காவிட்டால் அமெரிக்கா புதைகுழியில் சிக்கியிருக்கும்” என்று முன்னாள் ஈரான் அதிபர் ரப்சஞ்சானி கூறியிருந்தார் ((al-Sharq al-Awsat newspaper, 9/2/2002). அதே போன்று ஈரானிய துணை அதிபராயிருந்த முஹம்மது அலி அப்தஹி:- “எங்களுடைய ஒத்துழைப்பு கிடைத்திருக்காவிட்டால் பாக்தாதும் காபூலும் அமெரிக்காவின் கைகளில் வீழ்ந்திருக்காது” என்று கூறியிருந்தார். (Islam Online Net, 1/13/2004) ..

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் பங்கெடுக்க அமெரிக்கா சென்றிருந்த அஹ்மத் நிஜாத்:- “ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு ஈரான் உதவிக்கரம் நீட்டியது. எனினும் எங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை குறித்த அமெரிக்காவின் நேரடி எச்சரிக்கையே எங்களுக்கு பலனாக கிடைத்தது .. மேலும் ஈராக்கில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட எங்கள் நாடு ஏற்கனவே உதவியுள்ளது” என்று கூறியிருந்தார் (The New York Times on 26/9/2008).

ஈரானின் அணு சக்தி திட்டத்தை பொறுத்தவரை, இஸ்ரேல் பலமுறை ஈரானை அச்சுறுத்தியது நாம் அறிந்த விசயமே. இஸ்ரேலுக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு இருந்தும் அமெரிக்கா குறுக்கே நின்று இஸ்ரேலை தடுத்து வருகிறது. அமெரிக்கா 1981 ஆம் ஆண்டு இராக்கில் சதாம் ஆட்சியின்போது, கட்டுமான நிலையில் இருந்த அணுசக்தி நிலைகளை தாக்க இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கியது. ஆனால் 20% யுரேனியம் செறிவூட்டப்பட்ட நிலையில் உள்ள ஈரானின் அணு சக்தி நிலைகளை தாக்க இஸ்ரேலுக்கு அனுமதி மறுத்து வருகிறது. அமெரிக்காவின் சொந்த நலன்களுக்கு ஈரான் ஒத்துழைப்பு கொடுத்துவருவதற்காக, ஈரானுடன் சுமூகமாகவே இருக்க அமெரிக்கா விரும்புகிறது.

ஈரானை ஒரு எதிர் சக்தியாக உருவகப்படுத்துவதன் மூலம் மத்திய கிழக்கில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா விரும்புகிறது. ஈரானை ஒரு கருவியாக உபயோகித்து முஸ்லிம் நாடுகளின் மீது ஆதிக்கத்தை அமெரிக்கா நிலை நாட்டிவருகிறது. அணு ஆயுதம் குறித்த பேச்சு வார்த்தை 2003 ஆண்டு துவங்கிய காலம் முதல் பேச்சுவார்த்தை நடைபெறும்போதெல்லாம், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை குறித்து பேசாமல் தடை – sanction பற்றியே பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

இது ஐரோப்பிய யூனியனுக்கும் இஸ்ரேலுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின்போதும் தடை - sanction குறித்தே அமெரிக்கா வலியுறுத்தியது. ஒவ்வொருமுறை இந்த பிரச்சனை தோன்றும்போதெல்லாம் ஈரானைக் குறித்த அச்சத்தை அமெரிக்கா போக்கிவந்தது. அணு ஆயுத பிரச்சினையை தீர்க்கப்படாத ஒன்றாக வைத்துக் கொண்டு, ஈரானை ஒரு தாதாவாக சித்தரித்து மத்திய கிழக்கில் எப்போதும் பதட்டத்தை ஏற்படுத்த அமெரிக்கா முனைந்து வருகிறது.

இதற்காகவே அமெரிக்கா ஈரானுக்கு மறைமுகமாக உதவி வருகிறது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சில விசயங்களில் பிரச்சனைகள் இருப்பது உண்மையே. இதை வைத்து ஈரான் அமெரிக்காவின் கடும் எதிரி என்று தீர்மானிக்க கூடாது. கொமைனி பாரீஸ் நகரின் அருகிலுள்ள Neauphle-le-Château என்ற இடத்தில் தங்கியிருந்தபோது வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து நடந்த பேச்சுவார்த்தை போன்று பல்வேறு சமரச பேச்சுவார்த்தைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் பொம்மையாக இருந்து ஆட்சிபுரிந்த ஷா வீழ்வது நிச்சயம் என்று விளங்கிகொண்ட அமெரிக்கா ஈரானிய புரட்சியின் பலனை தனக்கு இணக்கமாக மாற்ற சில வேலைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டது. ஈரானை அச்சுறுத்துவது போன்ற வெகுஜனக் கருத்தை உருவாக்கி, அமெரிக்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னுடைய நலனை பாதுகாத்து வறுகிறது என்பதே உண்மையாகும் . எனவே ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சுமூகமான உறவே நிலவி வருகிறது என்பதையும். ஈரானின் கடுமையான எதிரி அமெரிக்கா என்ற கூற்றில் உண்மையில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

நன்றி
ஹந்தக் களம்