Oct 3, 2015

உ.பி. படுகொலை: பின்னணி தகவல்கள்

ஜனநாயகத்தின் பெயரில் காவு கொடுக்கப்படும் இந்திய முஸ்லிம் சமுகம்

உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டு மாமிசத்தை சாப்பிடதாகக் கூறப்பட்டு இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் நீடித்துவருகிறது.

மாட்டின் மாமிசத்தை வைத்திருந்ததாகக் கூறப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட முஹம்மது அக்லாக்.
அக்லாக்கின் குடும்பத்தினர் திங்கட்கிழமையன்று இரவு நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

அன்று இரவு அதாவது, அக்டோபர் 28ஆம் தேதி முஹம்மது அக்லாக் என்ற அந்த ஐம்பது வயது நபரின் வீட்டில் மாட்டின் மாமிசம் இருந்தது என்று ஒரு கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்துக் கொன்றது.

அன்று இரவு பத்தரை மணியளவில், விவசாயக் கூலியான முஹம்மது அக்லாக்கின் குடும்பம் வழக்கம்போலவே, சாப்பிட்டுவிட்டு படுக்கச் செல்லும்போதுதான் அந்த தாக்குதல் நடந்தது.

முஹம்மது அக்லா தனது மகன் படுத்திருந்த அறைக்கு பக்கத்து அறையில் அப்போது தூங்கிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் பெரும் ஆவேசத்துடன் ஓடிவந்த கும்பல் ஒன்று கம்பு, கத்தி, நாட்டுத் துப்பாக்கிகளுடன் அவர்களுடைய வீட்டில் நுழைந்தது.




இந்துக்களுக்கு நடுவில் வாழும் அக்லாக்கின் குடும்பத்தினர் இப்படி ஒரு தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.

அக்லாவின் குடும்பம் ஒரு பசுவைக் கொன்று சாப்பிட்டுவிட்டதாக கும்பலைச் சேர்ந்தவர்கள் கூச்சலிட்டனர்.

"எல்லாப் பக்கமிருந்தும் அவர்கள் வந்தார்கள். சுவரின் மீது ஏறினார்கள். வாசல் வழியாக வந்தார்கள். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து நாங்கள் பசுவைக் கொன்றதாகக் குற்றம்சாட்டினார்கள் என்கிறார் அக்லாக்கின் 75 வயதுத் தாயான அஷ்கரி அக்லாக்.

"அந்தப் பகுதியில் இருக்கும் யாரும் பார்க்காமல் நாங்கள் எப்படி வீட்டிற்குள் பசுவைக் கொண்டுவர முடியும். இந்தப் பகுதியில் நாங்கள் மட்டும்தான் இஸ்லாமியக் குடும்பம்" என்கிறார் அவர்.

வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கும்பல், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாமிசத்தை காட்டி கேள்வியெழுப்பியது. ஆனால், அது ஆட்டின் மாமிசம் என்று அக்லாக்கின் கூடும்பத்தினர் கூறினர். ஆனால், அந்தக் கும்பல் அதனை ஏற்கவில்லை.

அக்லாக்கின் குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சியும் பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிக்க ஆரம்பித்தது அந்தக் கும்பல்.

சிலர் அக்லாக் தூங்கிக்கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தனர்.




யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் மாட்டை எப்படி அழைத்துவர முடியும் என்கிறார் அக்லாக்கின் 75 வயது தாயார்.

அவருக்கு அருகில் இருந்த தையல் எந்திரத்தைத் தூக்கி அவர் தலையில் போட்டனர். பக்கத்து அறையில் இருந்த அவரது மகனையும் வெளியில் இழுத்துவந்தனர். அதற்குப் பிறகு கொடூரமாக இருவரையும் கும்பல் தாக்கியது.

அந்தக் குடும்பத்திற்கு அருகில் இருந்த இந்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதனைத் தடுக்க முயன்று முடியாமல் போகவே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து காவல்துறை அங்கு வந்தபோது, அக்லாக் இறந்துபோயிருந்தார். அக்லாக்கின் மகனான தானிஷ் மிக மோசமாக காயமடைந்திருந்தார்.


நன்றி  BBC

No comments:

Post a Comment