Jan 27, 2016

இஸ்லாமியத் தலைமைத்துவத்திலிருந்து ஜனநாயகம் முரண்படுகிறது – பாகம் – 1

மனிதன் கலிமண்ணிலிருந்து படைக்கப்பட்டான், கலிமண்ணிலிருந்து அவனை படைத்து அவனுடைய உடலில் அல்லாஹ்(சுபு) ரூஹை ஊதுவதற்கு முன்னர் அவன் இந்த பிரபஞ்சத்தில் நிலைத்திருக்கவில்லை! பிறப்பின் எதார்த்த நிலையை பொருத்தவரை அது வெறுமையிலிருந்து ஏற்படுகிறதே ஒழிய வாழ்விலிருந்து ஏற்படுவதில்லை. வாழ்வு என்பது மனிதன் மீது விதிக்கப் பட்டுள்ளது, ஆரம்பம் முதற்கொண்டே இந்த விஷயத்தில் அவனுக்கு எத்தகைய தேர்வுரிமையும் அளிக்கப்படவில்லை. அவனுடைய வாழ்க்கை தவணையும் அவன் மீது விதிக்கப்பட்டுள்ளது, அது வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, அதன்மீது மனிதன் எத்தகைய விளைவையும் ஏற்படுத்தவும் முடியாது தவணை முடிந்தபின்னர் கனப்பொழுது கூட இவ்வுலகைவிட்டு வெளியேறுவதிலிருந்து தாமதிக்கவும் முடியாது. துல்லியமாக நிர்ணயிக்கப் பட்ட ஒழுங்குமுறை அடிப்படையில் மரணம் அவனை எதிர்கொள்கிறது. மரணத்திற்கு முன்னர் நிர்பந்தமாகவும் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்ட முறையிலும் வாழ்வு அவனில் தோன்றுகிறது. துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட இதே ஒழுங்குமுறை அடிப்படையில் நிர்பந்தமாகவும் மனிதனின் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்ட முறையிலும் வாழ்வு அவனிடமிருந்து வெளியேறும்போது மரணம் அவனை வந்தடைகிறது. வாழ்விற்கு முன்னர் இருந்த வெறுமை குறித்தும் தனது உடலை உயிர்ப்பித்துள்ள வாழ்வு குறித்தும் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்டு வாழ்வு அவன்மீது தோன்றியது குறித்தும் மனிதன் சிந்திக்கிறான். வாழ்வியல் நோக்கங்கள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் அவன் எதிர்கொள்ளப்போகும் மரணம் குறித்தும் மனிதன் சிந்திக்கிறான். இந்நிலையில் அல்லாஹ்(சுபு) அவனை படைத்து இறை மார்க்கமான ஹஇஸ்லாத்தின்பால் வழிகாட்டியது ஏன் என்பதற்குரிய காரணத்தை அவன் தீர்மானிக்கலாம், அவன்மீது வாழ்வு தோன்றுவதற்கு முன்னரும் அவன்மீது மரணம் நிகழ்ந்ததற்கு பின்னரும் இறை மார்க்கமான இஸ்லாம் மட்டுமே அவனுடைய மார்க்கமாக உள்ளது என்பதை அவன் விளங்கியிருக்கலாம். எனவே அவனுடைய வாழ்வில் அவன் அல்லாஹ்(சுபு)விற்கு கீழ்ப்படியவேண்டும் என்பதை பிரகடணப்படுத்துகிறான், அன்றியும் அல்லாஹ்(சுபு)விற்கு கீழ்ப்படிதல் அல்லது அவனுக்கு(சுபு) மாறுசெய்தல் ஆகியவை தான் வாழ்விற்குரிய காரணத்தின் நிரூபனமாக இருக்கிறது என்பதையும் அவன் அறிந்து கொள்கிறான். அல்லது மரணத்தை எதிர்கொள்பவர்கள் சிலதருணங்களில் அதிலிருந்து தப்பித்து வாழ்வை பெற்றுக்கொள்கிறார்கள் என்பதால் மரணிக்கும் முறைகளில் குளறுபடிகள் நிறைந்துள்ளது என்று கருதுவதின் அடிப்படையில் பிறப்பும் வாழ்வும் வெறுமைக்கும் மரணத்திற்கும் மத்தியிலுள்ள இடைவெளி என்று நம்புவதை அவன் தேர்வுசெய்துகொள்ளலாம். எனினும் மரணத்திலிருந்து சிலர் தப்பித்துக்கொள்ளுதல் என்பது வாழ்வியலின் இயல்பான நிகழ்வாக இருக்கிறதே ஒழிய மரணம் ஏற்படும் முறைகளில் உள்ள குளறுபடியாக இல்லை, ஏனெனில் வாழ்வு என்றாலும் மரணம் என்றாலும் மனிதர்கள் அதிலிருந்து நழுவிச் சென்றுவிட முடியாது! வாழ்வு என்பது கேளிக்கைகளில் ஈடுபடுவதற்கும் விரும்பிய வகையில் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்தவதற்கும் மனஇச்சைகளையும் நிறைவு செய்து கொள்வதற்கும் வேண்டிய அளவிற்கு சுகபோகங்களை அனுபவிப்பதற்கும் விரும்பிய முறையில் இன்பங்களை துய்ப்பதற்கும் சொத்துக்களையும் பெருமைகளையும் அடைந்து கொள்வதற்கும் கிடைக்கப்பெற்ற வாய்ப்பு என்று ஒருவர் கருதலாம். திண்ணமாக இவர்தான் நிராகரிப்பாளர்! வாழ்வியலின் நோக்கம் மற்றும் இறைவன் அவரை படைத்திருப்பதற்குரிய காரணம் ஆகியவற்றிலிருந்து அவர் தன்னைத் தானே விலக்கிக்கொள்கிறார். இறைவன் எதற்காக அவரை படைத்தானோ அந்த நோக்கத்தை இவர் மறுத்துவிடுகிறார், வாழ்வு அவர்மீது ஏன் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த காரணத்தை அவர் சிந்திக்க விரும்பமாட்டார். இத்தகைய மனிதர் இயல்பிற்கு புறம்பான நோக்கத்தில் மக்களை வழிநடத்துபவராகவும் இறைவனுக்கு மாறுசெய்வதில் முன்னுதாரணமாக விளங்கும் மனிதராகவும் மனித இனத்தை இறைவன் படைத்துள்ள நோக்கத்திற்கு எதிராக போராட்டம் செய்பவராகவும் விளங்குகிறார்! அல்லது இயல்பிற்கு புறம்பான பாதையில் செல்வதில் மற்றவர்களை பின்பற்றும் மனிதராகவும் இறைவன் மனிதனை படைத்ததற்கு பின்னணியிலுள்ள காரணத்தை உணர்ந்து கொள்வதிலிருந்து மக்களை தடுப்பவராகவும் இவர் விளங்குகிறார். இயல்பிற்கு புறம்பான வழியில் செல்வதில் ஒருவர் மற்றவரை பின்பற்றுபவராக இருந்தாலும் அல்லது மற்றவர்களால் பின்பற்றப்படுபவராக இருந்தாலும் இருவரும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்! அல்குர்ஆனில் அல்லாஹ்(சுபு) வாக்களித்துள்ளது போல இந்த இருசாராரும் இறைவனிடமிருந்து இருமடங்கு தண்டனையை பெற்றுக்கொள்வார்கள் என்பது நிச்சயமாகும்!

தலைமைத்துவம் என்பது கட்டளையிடுவதற்குரிய அதிகாரமாகும், மக்களின் தலைவர் என்பவர் அவர்களை வழிநடத்தி செல்பவராக இருக்கிறார். ஏனெனில் மக்களில் ஒருவர் தலைவராக இருக்கிறார் மற்றவர்களில் பெரும்பான்மையின் அவரை பின்பற்றுபவர்களாகவே இருக்கிறார்கள்.ஹ ஜனநாயக கோட்பாட்டை பொருத்தவரை தலைமைத்துவம் என்பது அலங்காரமான விஷயங்களையும் சுயநலமிக்க குறிக்கோள்களையும் அடைந்துகொள்ளும் சாதனமாகும்! ஆனால் இஸ்லாத்தை பொருத்தவரை தலைமைத்துவம் என்பது அல்லாஹ் (சுபு)விற்கு கீழ்ப்படிவதாகவும் இறைவனின் மார்க்கத்திற்கு உதவுவதாகவும் இருக்கிறது, அதே வேளையில் இலட்சியம் என்பது கீழ்ப்படிதலை நிறைவேற்றுவதற்குரிய ஆற்றலாக விளங்குகிறது. வெற்றியை அடையவேண்டும் என்ற தீர்மானத்தின்பால் அழைப்பதற்கு இந்த ஆற்றல் பயன் படுத்தப்படுகிறது. ஏனெனில் இலட்சியத்தை போலவே, தலைமைத்துவம் மற்றும் கட்டளை யிடுதல் என்பது இஸ்லாத்தில் சட்டரீதியான நோக்கத்தை அல்லது சட்டரீதியான விதிமுறையை நிறைவேற்றுவதற்குரிய நிபந்தனையாக இருக்கிறது. இஸ்லாத்தை பொருத்தவரை தலைமைத்துவம் அல்லது கட்டளையிடும் அதிகாரம் என்பது அசலாக அல்லாஹ்(சுபு)விற்கும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கும் உரியதாகும், அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை நிலைநிறுத்துவதற்கும் அவற்றின் நோக்கங்களை நிறைவு செய்வதற்கும் அவசியமானவற்றில் தனிமனிதர் ஒருவர் தலைமைத்துவத்தின் பொறுப்பை சுமந்து கொள்கிறார். இஸ்லாத்தை பொருத்தவரை தலைவரின் அலங்கார விருப்பங்கள் அல்லது அவருடைய சுயநல குறிக்கோள்கள் தலைமைத் துவத்திற்குரிய நோக்கமாக இல்லை. மாறாக, இறைவனுக்கு கீழ்ப்படியும் செயல்பாட்டில் மக்களை முன்னின்று வழிநடத்துவதற்கும் இஸ்லாத்தின் சட்டரீதியான விதிமுறைகளை நிலை நிறுத்துவதற்கும் சட்டரீதியான பலன்களை விளைவிப்பதற்கும் உரிய சாதனம்தான் தலைமைத்துவ அதிகாரமாகும்! இஸ்லாத்தை பொருத்தவரை இஸ்லாமிய சட்டங்களை நிலை நிறுத்துவதற்காக அல்லது சட்டரீதியான நோக்கத்தை நிறைவுசெய்வதற்காக மட்டுமே தலைவருக்கு அல்லது ஆட்சியாளருக்கு மக்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். ஏனெனில் இஸ்லாத்தில் ஒவ்வொரு முஸ்லிமுடைய வாழ்க்கைப்பாதை என்பது சட்டரீதியான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுவுவதற்கு கடுமையாக முயற்சிப் பதாகவும், அதேவேளையில் தலைமைத்துவம் என்பது சட்டரீதியான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுத்துவதற்காக முஸ்லிம்களின் ஆற்றல்களை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. (தலைமையை) பின்பற்றுபவர்களின் நேசம் தலைமைத் துவத்தை பெற்றுள்ளவருக்கு அவசியமானதாக இருக்கும் நிலையில், எல்லாம்வல்ல இறைவன் அடியார்களின் நேசத்தை தனக்கு மட்டும் உரியதாக வரையறை செய்துள்ளான். அல்லாஹ் (சுபு)வின் நேசத்தையும் அவனுடைய முஸ்லிம் அடியார்களின் நேசத்தையும் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றால் இஸ்லாத்தின் சட்டங்களையும் அவற்றை கொண்டுவந்த அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களையும் பின்பற்றவேண்டும் என்பதை அல்லது சட்டரீதியான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுத்துவதற்கு நபி(ஸல்) அவர்களின் சார்பாக செயலாற்றும் ஒருவரை பின்பற்றவேண்டும் என்பதை அல்லாஹ்(சுபு) ‎நிபந்தனையாக ஆக்கியுள்ளான். அல்லாஹ்(சுபு) தன்மீதுள்ள நேசத்திற்கு ஈமானை நிபந்தனை யாக ஆக்கியுள்ளான், அல்லாஹ்(சுபு) மீதுள்ள நேசம் உறுதியானதாகவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு இஸ்லாத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாக இருக்கிறது.‎‎‎‎‎ தனிமனிதர்கள், (சட்டத்திற்கு புறம்பான) குழுக்கள், அலங்கார கோட்பாடுகள் அல்லது அல்லாஹ்(சுபு)வின் நேசத்திலிருந்து ஒருவரை வெளியேற்றிவிடும் சட்டத்திற்கு புறம்பான நோக்கங்கள், அல்லாஹ்(சுபு)வின் நேசத்தை புறக்கணிக்கும் வகையில் கூறப்படும் வார்த்தைகள் போன்ற சட்டத்திற்கு புறம்பானவற்றிற்கு கீழ்ப்படிவதை அல்லாஹ்(சுபு) இஸ்லாமிய சட்டங்களுக்கு மாறுசெய்யும் செயலாகவே ஆக்கியுள்ளான். அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றிற்கு கீழ்ப்படிவதின் மூலமும் தனிமனிதர் தலைமைத்துவம், (சட்டத்திற்கு புறம்பான)குழுக்கள் ஆகியவற்றிற்கு கீழ்ப்படிவதின் மூலமும் அல்குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் மூலமாக அருளப்பட்ட இறைசட்டங்களுக்கு அந்நியமானவற்றின் அடிப்படையில் மக்களை வழிநடத்தும் மனிதருக்கு கீழ்ப்படிவதின் மூலமும் ஒருவர் அல்லாஹ்(சுபு)வின் நேசத்தை துறந்துவிடுகிறார்!


அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,


‎‎‎‎‎‎‎‎‎قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ ‎ ‎ ‎‎


கூறுவீராக! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள்! அப்போது அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் ‎மன்னிப்பவனாகவும் மிக்க கிருபை உடையவனுமாகவும் இருக்கிறான்!


கூறுவீராக! அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளுங்கள்! எனினும் நீங்கள் இதை புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிக்க மாட்டான்! (ஆலஇம்ரான் : 31-32)



செயல்பாடுகளை மேற்கொள்ளும் முறைகள், மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகளை ஒழுங்கு படுத்தும் இஸ்லாமிய விதிமுறைகள், உறவுகள் அடிப்படையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்துதல், வாழ்வியல் சுமைகளையும் கடும்பணிகளையும் நிறைவேற்றும் வழிமுறைகள், இஸ்லாத்தின் விலக்கல்கள் ஆகியவற்றில் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றி செயலாற்றவதின் மூலமாக மட்டுமே இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுத்த முடியும். சட்டம் இல்லாத நிலையில் எத்தகைய உறவுகளும் மக்களுக்கு மத்தியில் இடம்பெறவில்லை, அது ஏவல்கள் என்றாலும் விலக்கல்கள் என்றாலும் சரியே; மேற்கொள்ளும்முறை பற்றி தெளிவு படுத்தப்படாத வகையில் எந்த செயல்பாடுகளும் இஸ்லாத்தில் இடம்பெறவில்லை. இதன் காரணமாகவே முஸ்லிம்களின் வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்தும் இஸ்லாமியசட்டங்களை நிலைநிறுத்துவதுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. பணிகளை மேற்கொள்ளும்போதும் கட்டாயக்கடமைகளை நிறைவேற்றும்போதும் இஸ்லாம் அங்கீகரித்துள்ள சட்டரீதியான முறையை பின்பற்றுவதன் மூலம் சட்டரீதியான இஸ்லாமிய நோக்கத்தை நிறைவுசெய்வதை சாத்தியமாக்க முடியும். பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பணிகள் தொடர்பான நோக்கத்தை நிறைவேற்றுதல் என்ற முறையில் இஸ்லாமிய சட்டங்களின் நோக்கம் தனிமனிதரின் நோக்கத்திலிருந்து வேறுபடுகிறது. இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றுவதின் மூலமாக மட்டுமே இஸ்லாமிய நோக்கத்தை நிறைவுசெய்துகொள்ள முடியும் ஏனெனில் அவற்றை பின்பற்றுவதில் தனிமதர்களின் வாழ்வும் மற்றவர்களின் வாழ்வும் தொடர்புடைதாக இருக்கிறது. உதாரணமாக, உண்மையை கடைபிடித்தல் என்பது இஸ்லாமிய சட்டங்களில் ஒன்றாக இருக்கிறது, எனினும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்பது உண்மையை கடைபிடிக்கும் மனிதர், மற்றவர், சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் பரவிவிடாமல் சமூகத்தை பாதுகாப்பது தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் விதிமுறைகள் அல்லது மக்கள் மத்தியில் நம்பிக்கை, மகிழ்ச்சி, நல் ஒழுக்கம் ஆகியவற்றை பரப்புதல் தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் விதிமுறைகள் ஆகியவற்றின் நோக்கத் துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இஸ்லாத்தின் சட்டங்களை கடைபிடிப்பதின் மூலம் தனிமனிதர் விளைவுகளை ஏற்படுத்திய போதிலும் இஸ்லாமிய சட்டங்களின் நோக்கத்துடன் இணைந்துள்ள விளைவுகள் என்பது தனிமனிதரின் நோக்கத்துடன் இணைந்துள்ள விளைவு களிலிருந்து வேறுபட்டது. முஸ்லிம்களிலுள்ள தனிமனிதர் ஒவ்வொருவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் நிறைவுசெய்யப்பட வேண்டிய இஸ்லாமிய நோக்கம் இடம் பெற்றுள்ளது, அதை தனிமனிதர் அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும் சரியே!‎‎

No comments:

Post a Comment