உதுமானிய கிலாபா முதல் உலக யுத்தத்தில் தோல்வி
அடைந்திருந்த நிலை மற்றும் 1916ல் பிரான்ஸ் இங்கிலாந்து இடையே ஏற்பட்ட சைக்ஸ்
பீகாட் ஒப்பந்தம் மூலம், இன்று சிரியா என நம்மால் அறியப்படும் பகுதியை பிரான்ஸ்
ஆக்கிரமித்தது. ஒருவருக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் எந்த அளவிற்கு
இருக்கின்றது என்றும் அசாத் அரசிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவை பற்றி
புரிந்து கொள்ள, அவர் இக்கால சிரியா உருவான வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியமாகும்.
கீழ்வரும் 10 கால வரிசையிலான முக்கிய புள்ளிகள் அதாவது சிரியாவின் மீதான மேற்கத்திய
காலனியாதிக்கம் முதல் இன்றைய நிலை வரையிலான நிகழ்வுகள் இந்நாட்டில் அமெரிக்காவின்
ஈடுபாட்டை குறிப்பிட்டு காட்டுகிறது.
1. அமெரிக்கா மற்றும் சி்.ஐ.ஏ 1949 முதல்
சிரியாவில் நடத்திய ராணுவ புரட்சிகள்:
அமெரிக்கா டமாஸ்கஸில் உள்ள அதன் தூதரகம் மற்றும்
சி்.ஐ.ஏ வாயிலாக முதன் முதலில் 1949 ல் ராணுவ புரட்சியை நடத்தியது, என மைல்ஸ்
கோப்லேண்ட் எனும் எழுத்தாளர் தனது “The game of Nations” எனும் நூலில்
விவரித்துள்ளார். இதன் மூலம் மத்திய கிழக்கின் மீதான சர்வதேச போராட்டம் புது வரவான
அமெரிக்காவிற்கும் இந்த பிராந்தியத்தில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வந்து இரண்டாம்
உலக யுத்தத்தில் பேரழிவை சந்தித்து வெளியேறிய ஐரோப்பாவிற்கும் (பிரஞ்சு மற்றும்
பிரிட்டன்) இடையே தொடங்கியது. அமெரிக்க தூதரகமும் சி.ஐ.ஏ வும் தொடர்ந்து பல
அடுத்தடுத்த ராணுவ புரட்சிகளை சிரியாவில் 50 மற்றும் 60 களில் ஐரோப்பிய
எதிரிகளுக்கு எதிராக நடத்தியது, இந்த காலம் திறத்தன்மை அற்ற நிலையில் இருந்தது
இந்நிலைமை 20 ஆண்டுகள் நீடித்தது.
2. இஸ்ரேலை பாதுகாக்க 1967ம் ஆண்டு நடந்த
போரில் ஹாஃபிஸின் பின் வாங்கல்:
முன்னால் அதிபர் அமீன் அல்-ஹாஃபிஸ், 2001 ம்ஆண்டு ஜூலை
2ம் தேதி அல்-ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஹாஃபிஸ்
அல்-அசாத், அந்த போரின் ஆரம்பத்தில் கோலன் ஹைட்ஸில் உள்ள சிரியாவின் ராணுவத்தினரை
பின் வாங்குமாறு கண்டிப்பான உத்தரவு ஒன்றை அவர்களுக்கு அனுப்பினார் இது சிரியா
தோல்வி அடையாத நிலையிலும் இஸ்ரேலிய ராணுவத்துடன் எவ்வித தாக்குதலை துவக்காத
நேரத்தில் நடைபெற்றது. இச்செயல் இந்த இடத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கும் நிலைக்கு இட்டு
சென்றது.[1] இச்செயலை செய்ததன் காரணமாக இஸ்ரேலின் வடக்கு எல்லையை பாதுகாப்பதற்கான
அமெரிக்காவின் நம்பிக்கையை அசாத் பெற்றார், அதை அவர் 30 வருடங்களாக தொடர்ந்து
செவ்வனே செய்து வருகிறார்.
3. அமெரிக்கா சிரியாவை ஐ.நா தீர்மானம்
242 மூலம் 1967 ல் ஆதரித்தது:
கோலன் ஹைட்ஸ் எனும் இடத்தை ஆக்கிரமித்த
இஸ்ரேலுக்கு எதிராக ஆறு நாள் போர் என அறியப்பட்ட 1967 போருக்கு பின் நிறைவேற்ற பட்ட
ஐ.நா தீர்மானம் 242, சிரியாவுக்கு இது நாள் வரை அந்த இடத்தின் மீதான அதன் உரிமையை
திரும்ப பெற்றுத்தந்தது.[2] அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தையும் இந்த இடத்தின் மீதான
சிரியாவின் உரிமையையும் ஆதரித்தது. ஏதோவொரு நேரத்தில் வெளிப்படும்
வெத்துவாக்காகவும் அல்லது இந்த கடல்வழி முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை
ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இஸ்ரேலின் நிலைபாட்டிற்கு முற்றிலும்
மாறுபட்டு இருந்தது,
4. 1973ம் ஆண்டின் போருக்கு பின்
அமெரிக்க – சிரியாவுடனான உறவை பலப்படுத்தல்:
1973 ல்
திடீரென நடைபெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போரை தொடர்ந்து, அமெரிக்கா சிரியாவை
கண்டித்திருக்க வேண்டும் மற்றும் அதன் மீது தடைகள் விதித்திருக்க வேண்டும். ஆனால்
அதற்கு மாற்றமாக, 1974ல், அசாதுடனான உறவை வலுப்படுத்த அதிபர் நிக்சன் டமாஸ்கஸிற்கு
விஜயம் புரிந்தார்.
5. 1976ம் ஆண்டு முதல் சிரியா மேற்கொண்ட
லெபனான் மீதான ஆக்கிரமிப்பை அங்கீகரித்தல்:
லெபனானில் நடைபெற்ற உள்நாட்டு போரின்
தொடக்கத்தில் சிரியா லெபனான் மீது ராணுவ படையெடுப்பு நடத்தியது. இது குறித்து
அமெரிக்காவின் மௌனம் என்பது ஹாஃபிஸ் அல்-அசாதின் இந்த ஆக்கிரமிப்பை தொடங்கியதற்கான
“பச்சை விளக்கு” காட்டப்பட்டது போல் இருந்தது இந்த ஆக்கிரமிப்பு 2005 வரை நீடித்து
இருந்தது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி
பிரஞ்சு தீர்மானம் கொண்டு வத்ததன் மூலம் சிரியாவை வெளியேற்றியது. அமெரிக்காவின்
ஈடுபாடு குறித்து ஒரு அரசியல் ஆய்வாளர் இவ்வாறு கூறினார்: “[அமெரிக்கா] லெபனானில்
சிரியாவின் ஆதிக்கம் நீடித்திருக்க விரும்பியது.” [3]
6. சிரியா மற்றும் அமெரிக்காவுடனான
ஒத்துழைப்பை 1989ல் நடைபெற்ற தாயிஃப் ஒப்பந்தம் மூலம்
நிறைவேற்றுதல்:
தாயிஃப் ஒப்பந்தம் சவூதி அரேபியாவில் பல லெபனானிய
குழுக்களுக்கு இடையே 1989 உள்நாட்டு போரை நிறுத்துவதற்காக போடப்பட்டது. இதன்
மத்தியஸ்த்தராக பிரான்ஸ், சவூதி அரேபியா, எகிப்து தவிர சிரியாவுடன் அமெரிக்கா
செயல்பட்டது அது “சர்வதேச ஆதரவை லெபனான் மீது சிரியாவின் – பாதுகாப்பு பொறுப்பை
நிலைநிறுத்த உதவியது. [4]
7. அமெரிக்காவின் 1991 ல் ஈராக் மீதான
படையெடுப்பில் சிரியா பங்கு கொள்ளுதல்:
(ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம்) என்னும் ஈராக் மீதான
போரில் அமெரிக்காவிற்கு சிரியா ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல் 14,500 படை வீரர்களை
அமெரிக்க படையெடுப்புக்கு உதவுவதற்காக ஈராகிற்கு அனுப்பி வைத்தது. [5]
8. அமெரிக்கா 1990 களில் சிரியாவுக்கும்
இஸ்ரேலுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக
செயல்படுதல்:
சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமெரிக்கா
மத்தியஸ்ராக செயல்பட ஹாஃபிஸ் அல்-அசாத் ஒப்புக்கொண்டார். ராணுவ தலைமை அதிகாரி Lt.
Gen. ஹிக்மத் அல்-ஷிஹாபி, தலைமையில் ஒரு குழு அமெரிக்காவுக்கு சென்று அமைதி
பேச்சுவார்த்தை சம்பந்தமாக கருத்துரையாடினர். ரஷ்யா டுடே எனும் தொலைக்காட்சிக்கான
பேட்டி ஒன்றில் சிரியாவின் முன்னால் பாதுகாப்பு அமைச்சரும் அசாத் அரசின் ஒரு தூணாக
இருந்த முஸ்தபா த்லாஸ், அல்-ஷஹாபி ஒரு அமெரிக்காவின் சி்.ஐ.ஏ ஏஜன்ட் என
குறிப்பிட்டார். [6]
9. சி.ஐ.ஏ மற்றும் சிரியாவுக்கு இடையே
2001 முதல் கைதிகளை சித்திரவதை செய்வது தொடர்பான உளவுத்துறை
உடன்பாடு:
சி.ஐ.ஏ விற்கும் சிரிய அரசுக்கும் இடையேயான உறவு
மிக நெருக்கமானதாகும், அதாவது சிரியாவை பொருக்கி நாடு என அறிவிக்கப்பட்ட காலத்தில்
கூட, சிரிய அரசு அதன் அழுக்கடைந்த சேவையை சி.ஐ.ஏ விற்கு ஆற்றி வந்தது. அந்த அரசு
உலக புகழ்பெற்ற தனது உளவுத்துறையை சி.ஐ.ஏவிற்காக கைதிகள் மற்றும் போர்
கைதிகளிடமிருந்து விவரங்களை சேகரிக்க உபயோகித்தது. இதற்கு உதாரணமாக கனடாவை சார்ந்த
மாஹெர் அரார் என்பவரது நிகழ்வு சர்வதச செய்திகளில் வலம்வந்தது. [7]
10. 2011 முதல் நடைபெரும் சிரிய
புரட்சியில் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா:
அசாத் அரசு சிரிய மக்களின் மீது 5 வருடங்களாக
நடத்திவரும் தினசரி படுகொலைகளை கண்டு வாய் மூடி மவுனமாக இருப்பதோடு மட்டுமல்லாமல்
தங்களை பாதுகாத்து கொள்ளவும் அசாதை வெளியேற்றவும் போராளிகளுக்கு தேவைப்படும்
ஆயுதங்களை கொடுக்காமல் தடுத்து வருகிறது.
சிரியாவின் நவீன கால வரலாற்றில் அமெரிக்கா
தொடக்கத்தில் அதன் கைப்பாவைகளை அதிகாரத்திற்கு கொண்டு வர ராணுவ புரட்சிகள் மூலம்
முயற்சித்து வந்தது தெளிவாக தெரிகிறது. அமெரிக்கா சிரியாவுக்கு எதிரான வார்த்தைகளை
பொது இடங்களில் உபயோகித்தாலும், அதன் கைகூலி ஹாஃபிஸ் அல்-அசாத் 1970 ல் ஆட்சிக்கு
வந்ததும் சிரியாவில் தனது முழு கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியது. அல்-அசாத் வந்தது
முதல் சிரியா அமெரிக்காவின் பிரதிநிதி நாடாக அப்பிராந்தியத்தில் அதன் நலன்களுக்கு
சேவை செய்யவும் இஸ்ரேலிய வட எல்லைகளை பாதுகாக்கும் செயலை செய்து வருகிறது, ஆனால்
வெளியே அரபு பகுதியல் நான் தான் அதை எதிர்ப்பதில் முன்னோடி என கூறி வருகிறது.
No comments:
Post a Comment