பைத்துல் முகத்தஸைப்பற்றியும் பலஸ்தீனைப்பற்றியும் முதலில் நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
கி.மு.13ம் நூற்றாண்டில் தான் அங்கு முதன்முதலில் யூதர்கள் குடியேறினார்கள். தொடர்ந்து அங்கு இரண்டு நூற்றாண்டுகளாக போரிட்டே அங்கு வாழ்ந்து வந்தனர். பலங்காலந்தொட்டு அவர்கள் அங்கு வசித்துவரவில்லை. அவர்கள் அப்பகுதியின் பூர்வீக குடிகளும் அல்லர். அங்கு வசித்து வந்த பூர்வீக குடிகள் பற்றி பைபிளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழ்ந்துவந்த #செவ்விந்தியர்களை, அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த #அபோரிஜின்களை எப்படி வெள்ளையினம் முற்றாக அழித்து குடியேறினார்களோ அதேபோன்று தான் யூதர்கள் பலஸ்தீன் பகுதியில் வசித்துவந்த பூர்வீக குடிகளை அழித்து அங்கே குடியேறினர்.
அதன் பின்பு யூதர்களின் கலகத்தை அடக்க ஆசிரியர்கள் கி.மு.8ம் நூற்றாண்டு வட பலஸ்தீன் பகுதி நோக்கி படையெடுத்து யூதர்களை முற்றாக அழித்து அப்பகுதியை விட்டு விரட்டியடித்துவிட்டு அண்மித்த பகுதிகளில் வசித்துவந்த அரபினத்தவர்களை குடியமர்த்திவிட்டு சென்றனர்.
அதன்பின்பு கி.மு.6ம் நூற்றாண்டில் பாபிலோனிய சக்கரவர்த்தி பஃக்து நஸர் தென்பலஸ்தீனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அங்கு வசித்துவந்த யூதர்களை முற்றாக வெளியேற்றினார். அத்துடன் பைத்துல் முகத்திஸையும் சின்னாபின்னமாக்கி சுவடே இல்லா அளவுக்கு அழித்தார்.
கி.மு.10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹைஹலுஸ் ஸுலைமானி எனப்படும் Temple of Solomon ஐயும் முற்றாக சுவடே இல்லாத அளவுக்கு அழித்தார்.
கி.மு.10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹைஹலுஸ் ஸுலைமானி எனப்படும் Temple of Solomon ஐயும் முற்றாக சுவடே இல்லாத அளவுக்கு அழித்தார்.
பல ஆண்டுகளாக நாடோடிகளாக சுற்றித்திரிந்த யூதர்கள் ஈரானிய பேரரசின் ஆட்சிக்காலத்தில் மறுபடியும் பலஸ்தீன் மண்ணில் குடியேறினர். அப்போது பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் மறுபடியும் ஹைஹலுஸ் ஸுலைமானை நிறுவினர்.
ஆனால் இந்த குடியேற்றம் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கவில்லை. கி.பி.70ம்ஆண்டளவில் யூதர்கள் ரோம பேரரசை எதிர்த்து கலகம் செய்தார்கள். இந்த கலகத்தை அடக்கும் முயற்சியில் அப்பிரதேசமும் Temple of Solomonஉம் சின்னாபின்னப்படுத்தப்பட்டன. அதன்பின்பும் கி.பி.135ம் ஆண்டில் மறுபடியும் ஏற்பட்ட கலகத்தை அடக்கும் முயற்சியில் யூதர்கள் ரோம படையினால் பலஸ்தீன் பகுதியிலிருந்தே விரட்டியடிக்கப்பட்டனர். இதன் போது இப்பகுதியில் அரபினத்தவர்கள் மறுபடி குடியேற்றப்பட்டனர்.
இன்சா அல்லாஹ்...
தொடரும் ....
தொடரும் ....
(இவ்வாக்கம் சையத் அபுல் அஃலா மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் "யஹூதியொ உன் கா மன்ஷூபாஹ்" என்ற மூல நூலின் தமிழாக்கத்தின் பகுதிகளாக வெளிவருகிறது.)
No comments:
Post a Comment