Jun 22, 2016

இந்திய தளங்களைில் காலூன்ற முயலும் அமெரிக்க இராணுவம்....!! பகுதி - 02



இந்திய மூலோபாய பகுப்பாய்வாளர் சி. ராஜமோகன் இந்தியன் எக்ஸ்பிரஸில் பிரசுரித்த ஒரு கருத்துரையில், இந்து மேலாதிக்க பிஜேபி தலைமையிலான அரசாங்கம் “அமெரிக்காவுடன் வெளிப்படையாக சர்ச்சைக்குரிய உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடும் தன்னம்பிக்கை" கொண்டிருப்பதற்காக அதை பாராட்டினார், அதேவேளையில் "அமெரிக்காவுடன் ஒரு நியாயமான ஒளிவுமறைவற்ற உடன்படிக்கையைக் 'கோட்பாட்டுரீதியில்' முடிவெடுக்க" இந்தியா "ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம்" எடுத்ததற்காக அவர் வருத்தப்பட்டார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் போலவே, மோகனும் இந்தியா தன்னைத்தானே இந்தியப் பெருங்கடல் சக்தியாக நிறுவிக் கொள்வதற்கான முக்கியத்துவம் மீது கவனத்தைக் குவித்திருந்தார்—இந்த நோக்கத்திற்கு, ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் ஒபாமா இருவரின் கீழ், வாஷிங்டன் மீண்டும் மீண்டும் அமெரிக்க ஆதரவை அறிவித்துள்ளது. இந்திய படைகளும் அமெரிக்க இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்குப் பரஸ்பர உரிமைகளை வழங்கும் LEMOA உடன்படிக்கை, “இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் புது டெல்லி அதன் பரந்து விரிந்த நலன்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கும் போது அத்தருணத்தில் துணைகண்டத்தின் கடல்களிலிருந்து வெகுதூரத்தில் செயல்பட வேண்டியிருந்தால், இந்திய இராணுவப் படைகளுக்கு, குறிப்பாக கடற்படைக்கு உதவியாக இருக்கும்" என்று மோகன் குறிப்பிட்டார். இந்த உடன்படிக்கை படிப்படியாக அமெரிக்கா-தலைமையிலான இராணுவ அணிக்குள் இந்தியா இணைவதில் போய் முடியுமென்று அவர் எச்சரிக்கிறார்.

பாதுகாப்பு மந்திரியாக அவரது நீண்ட பதவி காலத்தின் போது அந்தோணி இந்த தளவாட பரிவர்த்தனை ஒத்துழைப்பு உடன்படிக்கை மீது அமெரிக்காவுடன் நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவராவார், பின்னர் இறுதியில் அவற்றை புறக்கணித்தார், ஏனென்றால் அவரும் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் முக்கிய பிரிவுகளும் அது இந்தியாவை வாஷிங்டனின் மூலோபாய நிகழ்ச்சிநிரலுக்குப் பின்னால் அணிதிரட்டுமென்ற தீர்மானித்திற்கு வந்தனர்.

அவ்விதத்தில் LEMOA இன் தாக்கங்களைக் குறித்தும், அதை பிரயோகித்து இந்தியாவை சீனாவிற்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான இராணுவ கூட்டணிக்குள் இழுக்கும் வாஷிங்டனின் திட்டங்கள் குறித்தும் அந்தோணிக்கு நன்கு பரிச்சயம் உண்டு. ஸ்ராலினிச சிபிஎம், ஏப்ரல் 13 இல் பிரசுரித்த ஒரு பொலிஸ்பீரோ அறிக்கையில் குறிப்பிடுகையில், “இந்திய கடற்படை மற்றும் விமானப்படை தளங்களின் அடிப்படை வசதிகளை அமெரிக்க இராணுவப் படைகள் பயன்படுத்த அனுமதிக்க ஒப்புக் கொண்டதன் மூலமாக மோடி அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ கூட்டுறவை ஆழப்படுத்தும் அபாயகரமான படியை எடுத்துள்ளது,” என்று குறிப்பிட்டது.

“பாதுகாப்பு அமைச்சர் கூறுவதைப் போல கிடையாது, அமெரிக்க கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான மீள்எரிபொருள் நிரப்புவதற்கும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வசதிகளுக்கும் இந்திய மண்ணில் வழமையாக அமெரிக்க இராணுவப் படை சிப்பாய்களை நிலைநிறுத்த வேண்டியிருக்கும்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது. “தொலைதொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை (CISMOA) மற்றும் அடிப்படை பரிவர்த்தனை மற்றும் கூட்டுறவு உடன்படிக்கை (BECA) ஆகிய ஏனைய இரண்டு உடன்படிக்கைகள்" பரிசீலனையில் இருப்பதாக இந்திய பாதுகாப்பு மந்திரி பாரிக்கர் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, சிபிஎம் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இவை இந்திய ஆயுத படைகளின் கட்டளையகம் மற்றும் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பை அமெரிக்க இராணுவப் படைகளுடன் ஒருங்கிணைக்கும்.

இவ்வாறு செய்வதன் மூலமாக, பிஜேபி அரசாங்கம் கோட்டைக் கடந்து செல்கிறது, இது சுதந்திரத்திற்குப் பின்னர் வேறெந்த அரசாங்கமும் செய்திராததது—இந்தியாவை முழுமையாக அமெரிக்காவின் முழு அளவிலான இராணுவக் கூட்டாளியாக மாற்றுகிறது,” என்றது. LEMOA ஐ எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சியும் ஸ்ராலினிஸ்டுகளும், இந்திய உயரடுக்கினது பிரிவுகளின் கவலைகளுக்குக் குரல் கொடுக்கின்றனர். ஷிங்டனுடன் மிகவும் நெருக்கமான ஒரு மூலோபாய கூட்டணி இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் புவிசார் மூலோபாய நலன்களுக்குக் குழிபறிக்குமென இவர்கள் கருதுகிறார்கள்.

இவர்களது எதிர்ப்புக்கும் உண்மையான ஏகாதிபத்திய-எதிர்ப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போருக்கும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நடவடிக்கைகளுக்கும் ஆழ்ந்த எதிர்ப்பைக் கொண்டுள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களிம் மீது எப்படி அரசியல் கட்டுப்பாட்டைப் பேணுவது என்பது உட்பட, முழுமையாக அவர்களது எதிர்ப்பு, இந்திய முதலாளித்துவ வர்க்க நலன்களை எவ்வாறு சிறப்பாக முன்னெடுப்பது என்பதை சுற்றியே சுழல்கிறது.

காங்கிரஸ் கட்சி மற்றும் ஸ்ராலினிசவாதிகள் இப்போது அமெரிக்காவின் "ஒரு முழுமையான இராணுவ கூட்டாளியாக" இந்தியா மாறி வருவதற்கு அவர்களின் எதிர்ப்பை தம்பட்டமடித்தாலும், அவை இரண்டுமே புது டெல்லி மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான முன்பினும் விரிவான இராணுவ-பாதுகாப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதில் ஒரு முன்னிலை பாத்திரம் வகித்துள்ளன. பத்தாண்டு கால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் போது தான், இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு “உலகளாவிய மூலோபாய பங்காண்மையை” முழுமைப்படுத்தியது, அத்துடன் புதிய இந்திய ஆயுத தளவாட ஒப்பந்தங்களுக்கு அமெரிக்கா மிக முக்கிய விற்பனையாளராக மாறியது.

ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் அதன் இடது முன்னணி, 2004 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்க உதவியதுடன், முழுமையாக நான்காண்டுகளுக்கு அதன் நாடாளுமன்ற பெரும்பான்மைக்காக ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவு வழங்கியது. இதே காலகட்டத்தின் போது தான் காங்கிரஸ் இந்தோ-அமெரிக்க அணுஆயுதத்திற்கு அல்லாத அணுசக்தி உடன்படிக்கைக்குப் பேரம்பேசியது, இந்த உடன்படிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய முதலாளித்துவத்திற்கு இடையிலான கூட்டணி வளர்ச்சியைப் பலப்படுத்தியது.

ஐயத்திற்கிடமின்றி ஸ்ராலினிசவாதிகள் இப்போது, மோடி அரசாங்கத்திற்கு அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்குப் பின்னால் திருப்பிவிடுவதன் மூலமாக அரசியல்ரீதியில் அதை ஒடுக்கும் அவர்களது முயற்சிகளை நியாயப்படுத்துவதற்காக, வாஷிங்டனுடன் இன்னும் நெருக்கமான இராணுவ-மூலோபாய உறவுகளுக்கு பிஜேபி அரசாங்கம் திரும்பியிருப்பதைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். ஏற்கனவே ஸ்ராலினிஸ்டுகள் மேற்கு வங்க மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டணி அமைத்துள்ளனர்.

மிக முக்கியமாக LEMOA உடன்படிக்கையை எதிர்ப்பதில் சிபிஎம் பொலிட்பீரோ அறிக்கை, இந்தியாவின் "தேசிய இறையாண்மையை" மற்றும் "மூலோபாய சுயஅதிகாரத்தை" மோடி அரசாங்கம் சமரசப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி, முற்றிலுமாக முதலாளித்துவ வர்க்கத்தின் தேசிய நலன்களது நிலைப்பாட்டிலிருந்து அந்த உடன்படிக்கையைக் கண்டிப்பதுடன், இந்த அடிப்படையிலேயே ஆளும் வர்க்கத்திற்குள் ஆதரவைத் திரட்ட முயல்கின்றனர். “சகல அரசியல் கட்சிகளும் மற்றும் தேசப்பற்றுமிக்க பிரஜைகளும்" “அமெரிக்காவுக்கு அடிபணிவதை எதிர்க்க" வேண்டும் என்று ஸ்ராலினிஸ்டுகள் அறிவிக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிசவாதிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அஇஅதிமுக மற்றும் திமுக, ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெலுங்கு தேச கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற மாநில அளவிலான மற்றும் இந்தியாவில் தேசியளவிலான ஏனைய சகல அரசியல் கட்சிகளும் LEMOA உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிஜேபி அரசாங்கத்தின் திட்டங்களைக் குறித்து மவுனமாக உள்ளன.


இது ஆளும் வர்க்கத்தின் அனைத்து தரப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான மூலோபாய உறவுகளை ஆதரிப்பதையும் மற்றும் இந்தியாவின் சொந்த வல்லரசாகும் அபிலாஷைகளை இன்னும் ஆக்ரோஷமாக வலியுறுத்துவதையும் சுட்டிக்காட்டுகிறது.

khaibarthalam.blogspot.ae

No comments:

Post a Comment