"ஒரு நாட்டை வெற்றி கொண்டு அடிமை படுத்த இரண்டு வழிகள் உண்டு ஒன்று வாளினைக்கொண்டு மற்றையது கடனைக்கொண்டு” – ஜான் ஆடம்ஸ்.
ஆனால் கடந்த அரசாங்கத்தை விட தமது அரசு பல நாடுகளில் அதிலும் IMF போன்ற நிதி நிறுவனங்களின் இருந்து கடனை பெற்று கொண்டதை பாரிய வெற்றியாக மார்பு தட்டி கொள்கிறது இந்த நல்லாட்சி.
அபிவிருத்திக்கு கடன் தேவை தானே என்று நினைக்கலாம் ஆனல் நான் சொல்லப்போகின்ற விடயம் எவ்வாறு இந்த அபிவிருத்திக் கடன் இந்தோனேசியாவை கடனில் மூழ்கடித்தது என்பதே!
இந்த விடயம் 1960களில் இருந்து ஆரம்பமாகின்றது. எண்ணெய் , தங்கம் , திறமையான மனித வளம் , என்பன இருந்தும் 70 மில்லியன் மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டிருந்தனர் .வருமான இடைவெளி பாரிய அளவில் அதிகரித்தது அதாவது சாதரணமான ஊதியம் பார்க்கும் ஒருவர் அங்குள்ள செல்வந்தர் போல திருமணம் செய்ய வேண்டுமாயின் 400 வருடங்கள் ஊதியம் பார்க்க வேண்டும் “ரிசப்ஷன் கோல்” செலவை மாத்திரம் ஈடு செய்ய!
GAP,NIKE,ADIDAS போன்ற நிறுவனங்களின் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்களான பெரும்பாலான பெண்கள் அதிக உஷ்ணம் உள்ள அதாவது 42 செல்சியத்திலும் அதிக வெப்பமான தொழிற்சாலையில் சில நேரங்களில் 24 மணித்தியாலங்களிற்கு அதிகமாக வேலை செய்து பெரும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? அவர்கள் உற்பத்தி செய்யும் பாதணி எட்டு பவுண்ட்ஸ் எனின் அவர்களுக்கு கிடைப்பது வெறும் நான்கு சதமே! ஆனால் கம்பனியின் இலாபமோ 138 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியது.
இது இவ்வாறு இருக்க அமெரிக்க மற்றும் பிரித்தானியா தங்களது வணிகத்திற்கு சிறந்த சந்தையாக இதனை கண்டது இதனால் இவர்கள் நலன் பேணும் ஊழல் மிக்க அரசை ஆட்சிக்கு அமர்த்தி IMF மற்றும் World Bank மூலம் வெளிநாட்டு உதவி என்ற பேரில் பல பில்லியன் அமரிக்க டாலர்களை கடனாக வழங்கி ஆட்சியாளனின் பையை நிறைத்தது.ஆனல் தங்களுக்கு எந்த நலனுமே கிடைக்காத இந்த பணத்திற்கு இன்றும் மக்கள் வரிச்சுமயை தாங்கி கொண்டுதான் இருகின்றனர் .ஜனநாயகம் பேசும் நாடுகள் இவர்களின் கடன் விலக்களிப்பை சிந்திப்பதே கிடையாது ஆனால் வங்கொரோத்து அடையும் வங்கிகளுக்கு பல டிரில்லியன் டாலர்களை உதவிக்கரமாக நீட்டுகிறது. இந்த ஜனநாயகத்தை வாங்க இந்தோனேசியாவிடம் வசதி இல்லை என்றே கூறவேண்டும்.
இந்த கடனை பெற்றுக்கொள்ள கட்டமைப்பு மாற்றம் என்ற பேரில் வறிய மக்களுக்கான சமூக செலவினை குறைத்தது. இது வறியோர்களை மேலும் வறியோராக்கியது எந்தளவுக்கு என்றால் மூன்று வேலை உணவை உண்ணும் சிலர் இரண்டு வேலை உணவைதான் பூர்த்திய செய்ய முடிந்தது ஆனால் இதனை தனது வணிகத்திற்கான வாய்ப்பாக குறைந்த ஊதியம் வழங்கி ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது.
இதுமட்டுமா ஒரே நாளில் நிதி சந்தையினை ஊழல் செய்து ஒரு டாலர் 2500 ரூபியா இருந்தததை ஒரு டாலர் 10000 ரூபியா என்றளவுக்கு நாணய மதிப்பிறக்கம் செய்ததது இது உலகமயமாக்கலின் திறந்த நிதிச் சந்தை என்ற அடிப்படையில் செய்யப்பட்டது. இது மேற்கு கம்பனிகளின் ஏழை பணியாலர்களின் ஊதியத்தை ஒரே நாளில் 25% ஆள் குறைத்தது . இதன் தாக்கம் இன்றும் இந்தோனேசியாவில் -மேற்கு சுமாத்திராவில் மாத்திரம் 32000 சிறுவர்கள் போதிய சத்து இன்மை குறைபாட்டினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்தோ
இவ்வாறு கடன் மூலம் அடிமைப்படுத்தப்பட்ட பல நாடுகள் இன்றும் நிமிர முடியாத நிலையிலேயே காணப்படுகிறது .
இலாபத்தை மாத்திரம் நலன் என்ற அடிப்படைடியில் கட்டப்பட்ட முதலாளித்துவ ஒழுங்கில் இது ஒன்றும் வியத்தகு விடயமல்ல தனது பை பல பில்லியன்களால் நிரம்ப வேண்டுமானால் இதற்காக பலர் பட்டணியில் கிடப்பது ஒன்றும் பெரிதல்ல என்ற இவர்களது கொள்கை எத்தகைய ஜாகிலியம்.
From Mohamed Imran
No comments:
Post a Comment