Jul 19, 2016

ஷரீ’ஆ காலாவதி ஆகிவிட்டதா?


இஸ்லாம் மனிதர்களை உணர்வுகளை கொண்டு அமைத்திருப்பதாகவும் அந்த உணர்வுகளை பூர்த்தி செய்ய அவர்கள் தொடர்ந்து பல பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளதாகவும் பார்க்கிறது. இஸ்லாமிய சட்டங்கள் ஆண்களையும் பெண்களையும் ஏழாம் நூற்றாண்டில் அரேபிய பாலைவனத்தில் வசித்த தனி மனிதர்களாக கருதாமல் ஒட்டுமொத்த மனித இனமாகவே கருதி இறக்கி அருளப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தை அல்லது இடத்தை சார்ந்த மனித குலத்திற்கு அனுப்பப்பட்டது அல்ல. இன்றைய மனிதன் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே இருக்கின்றான் மேலும் 1400 வருடங்களுக்கு பிறகும் அவ்வாறே இருப்பான். 1

இஸ்லாம் உதித்து மேலோங்கிய காலத்தை விட இன்றைய உலகம் முற்றிலும் மாறுபட்டது என்பதில் சந்தேகம் துளி கூட கிடையாது. இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனை விட மாறுபட்டது. அன்றைய காலத்தில் மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர் இன்று நம்மிடம் வின்னை தொடும் கட்டிடங்கள் உள்ளது, ஆனால் அன்று போல் இன்றும் நமக்கு வீடுகளும் நமது தலைகளுக்கு மேல் கூறைகளும் தேவை படுகின்றது. அன்றைய காலகட்டத்தில் ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் தூதர்களை வேற்று நாட்டு அரசர்களுக்கு செய்தி அனுப்ப குதிரைகள் மீது அனுப்பி வைத்தார்கள் ஆனால் இன்று ஒரு தகவலை இமெயில், துரித செய்தி(IM) அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்ப முடிகறது. முஹம்மது(ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் குதிரைகள், வில் மற்றும் அம்பு போன்றவற்றை உபயோகித்து பல போர்கள் புரிந்திருக்கிறார்கள், அதேபோல் இன்றும் போர்கள் பல நடத்தப்படுகின்றன ஆனால் அதிநவீன தொழல்நுட்பம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகள் மற்றும் செயற்கைக்கோள் மூலம் புலனாய்வு மேற்கொள்ளுதல் ஆகியவைகளை கொண்டு. முந்தய காலத்தில் முஸ்லிம்கள் வானவியலை பற்றி கற்றறிந்ததால் அவர்கள் எங்கு சென்றாலும் கிப்லாவை நோக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர் மாறாக இன்று அதை ஒரு மின்னனு கடிகாரம் செய்து விடுகிறது. இது மனிதர்கள் அவர்களுடைய தேவைகள் முன்பிருந்ததை போன்று தான் உள்ளது என்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் மாறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது. நம் பார்வைக்கு புலப்படும் மாற்றம் என்பது வெறும் கருவிகளின் மாற்றம் அல்லது மனிதர்கள் அந்த பிரச்சினைகளை சரிசெய்யும் போது உபயோகிக்கும் சாதனங்களின் மாற்றம் மட்டுமே.

ஒரு சிந்தனை பொறுத்தமில்லாததாக ஆக்க காலத்தை மட்டுமே அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் சிந்தனை என்பது கால வரையறைகள் அற்றது. பண்டைய கிரேக்க தத்துவம், கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டு 16 ம் நூற்றாண்டில் அடைந்த மறுமலர்ச்சியை ஐரோப்பாவின் மறுமலர்ச்சி என குறிப்பிடப்பட்டது. உலகளவில் இன்று நமக்கு கிடைக்கும் சட்டங்கள் மூன்று நூற்றாண்டுகள் முன்னர் எழுதப்பட்ட பாரம்பரியம் கொண்டது.

- உதாரணத்திற்கு:

-1791 ல், அமெரிக்காவில் உரிமைகள் சம்மந்தமாக நிறைவேற்றப்பட்ட சட்டம், 1215 ன் உரிமையை உறுதி செய்யும் மகாசாசனத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

- நவீன கால சிவில் சட்டம் பொறுப்புகள் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும், இது முதன் முதலில் ரோமானிய சட்டத்தில் இடம்பெற்றதாகும்.

- பொதுச்சட்டம், இது அடிப்படையில் முந்தய நீதிமன்றத்தீ்ர்ப்பிலிருந்து குறிப்பெடுத்து தீர்ப்பளிக்கும் முறையானது முதன்முதலில் மத்திய கால ரோமானிய சட்டத்தில் இடம்பெற்றிருந்தது மற்றும் நார்மன் ஸாக்ஸனிய பழக்கவழக்கத்தால் ஈர்க்கப்பட்டதாகும் இன்றும் அது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவின் சட்டமியற்றுதலுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது.

இதனடிப்படையில் உற்று நோக்கினால் பழங்காலத்திய பூர்வீகம் கொண்டிருப்பதால் ஜனநாயகம் தற்காலத்திற்கு உகந்த நிலையில் இல்லாமல் இருந்திருக்கும். ஆகையால் இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டு அரேபியாவில் உதயமான காரணத்தை கொண்டு தற்காலத்திற்கு பொருத்தமானதல்ல என்ற வாதம் சரியானதல்ல. இஸ்லாமிய சட்டம் மனிதர்கள் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்புடையதாகவும் அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் கருவிகளை தொடர்புபடுத்தி இல்லாத காரணத்தால், இஸ்லாமிய ஷரீ’ஆ அன்று அரபு மக்களின் நிலையை உயர்த்தியது போன்று இன்றைய மனிதகுலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.


Sources: sindhanai.org

No comments:

Post a Comment