சம்பிரதாய பூர்வமான சில ஏற்பாடுகளோடு சூழலின் ஆதிக்க அதிகாரத்தை அங்கீகரித்த ஒரு வாழ்வின் மீது முஸ்லீம் உம்மத் இன்று பழக்கப்பட்டுள்ளது . அதாவது முஸ்லீம் உம்மாவின் தெளிவான இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் பார்வை முற்றாக கைவிடப்பட்டு குப்ரோடு ஒன்றிய வாழ்வுக்கான அரசியல் களம் இஸ்லாமிய இயக்கங்களால் முன் மொழியப்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது .
இப்போது நடைமுறை ரீதியாக குப்ரின் விருப்பு வெறுப்புகளை ,ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு தக்கன பிழைத்தல் வாழ்வை நோக்கி இஸ்லாத்தின் பெயரோடு முஸ்லீம் உம்மத்தை அழைப்பது மட்டும்தான் 'தவ்வா ' என்பதாக மூத்த 'தாயிகள் 'வெளிப்படையாக பேசி நிற்கின்றனர் .இந்த சரணடைவு பாதை தான் காலத்தின் தேவையாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது .
இங்கு 'ஹராத்தோடு' கலந்த விடயங்கள் 'ஹலால் 'என்ற பெயரில் மிகச் சுலபமாக ஜீரணிக்கப்படும்! சில பாரிய ஹராம்களின் பாரதூரங்கள் ஏதோ சிறு பாவம் போல சித்தரிக்கப்படுவதும் இன்று அன்றாட நிகழ்வு . மிக அண்மையில் ஒரு பொலிஸ்மா அதிபர் ஒரு பிரசித்தமான இயக்கத்தின் 'இஜ்திமாவிட்கு' சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் . அவர் அங்கு பௌத்த சிந்தனையை சிறப்பாக 'பிரித்' ஓதி! பேசிவிட்டு விட்டு போயுள்ளார் ! கேட்டால் மத நல்லிணக்கம் என அதற்கு ஒரு நியாயம் சொல்கிறார்கள் !!!இதை 'சிர்க்கோடு ' நல்லிணக்கம் என அழகாக மொழி பெயர்க்கலாமே!!!
இன்னொரு பிரசித்தமான இயக்கம் ஜெனீவாவுக்கு எதிராக ,இலங்கை அரசுக்கு ஆதரவாக பகிரங்கப் போராட்டத்தில் இன்றைய தினம் இறங்கியுள்ளார்கள் !! இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்ந்த எத்தனையோ அநீதிகளுக்கு முன் பெயரளவு பெறுமானத்தோடு அடக்கி வாசித்த அரசியலை . ஜெனீவாவுக்கு எதிராக முடுக்கி விட்டிருப்பது யாரை திருப்திப் படுத்தவாம் !? இதை சரியாக புரிந்து கொண்டால் 'பிர் அவ்னுக்கு' பிடில் வாசிக்கும் இவர்களது அரசியல் தரம் புரிந்து போகும் .
தவ்ஹீதை கப்ரு வணக்கத்தில் கண்டு பிடித்த இவர்களுக்கு ,தமது தூய அகீதாவுக்கு மண்ணள்ளிப் போடும் இத்தகு மடத்தனம் புரியாதது அதிசயமே
No comments:
Post a Comment