Apr 13, 2013

வரலாற்று ஒளியில் தாயிப் சம்பவம்.(பகுதி 2)

மக்காவுக்கு வெளியில் (நுஸ்ரா) இஸ்லாத்தை தங்கு தடை இன்றி அமுல் படுத்த உதவி தேடிய முதல் நடவடிக்கையாக அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) தாயிப் நோக்கிய பயணம் அமைந்துள்ளது இது நபித்துவத்தின் 10 ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவமாகும். தாயிப் மக்காவில் இருந்து 60 மைல் தொலைவில் இருக்கும் ஒரு பலம் பொருந்திய நகரமாக அன்று திகழ்ந்தது .

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தனது அடிமையான ஜைத் இப்னு ஹாரிசாவுடன் கால்நடையாகவே தாயிப் நோக்கி சென்றார்கள். அங்கு 10 நாட்கள் தங்கி இருந்து முக்கியமான சமூகத் தலைவர்களை ,பிரமுகர்களை சந்தித்து இஸ்லாம் தொடர்பான அறிமுகத்தையும்
(இஸ்லாத்தை பிரயோகிக்க ஒரு செயல் நிலத்தையும் வேண்டி) உதவியையும் வேண்டினார்கள்.
ஆனால் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிவடைந்தது.

புறக்கணிப்பு , அவமதிப்பு , ஏளனம் , இறுதியாக வன்முறை என்ற சராசரி பதிலே இஸ்லாம்
எனும் தூய கொள்கை வாத அழைப்புக்கு பதிலாக கிடைத்தது. இறுதியாக தாயிபில் இருந்து
ஏறத்தாழ 3 மைல் தூரம் வரை வன்முறைக் கரங்களோடு தாயிப் சமூகம் அந்த இருவரையும்
தூரத்தியது. உத்பா , சைபா என்ற இருவருக்கு சொந்தமான திராட்சை தோட்டம் வரை இந்த
கொடூரம் தொடர்ந்தது.

திராட்சை கொடிகளின் நிழலில் இரத்தச் சகதி படிந்தவர்களாக அந்த இருவரும் அமர்ந்திருந்த
போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பிரபபல்யாமான பிரார்த்தனையை புரிந்தார்கள்.
அதில் நடந்த நிகழ்வுகளின் கவலையை விட அவர்களது நிலை குலையாமை மிகத் தெளிவாகவே வெளிப்படுத்தப் படுகின்றது. அந்தப் பிரார்த்தனை பற்றியும் அதன் பின்னால்
நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் பற்றியும் இன்ஷா அல்லாஹ் மறுமுறை தருகிறேன்.

(தொடரும்)

Apr 12, 2013

அஹ்லாக் இல்லாததால் இஸ்லாம் இல்லையா ? இஸ்லாம் இல்லாததால் அஹ்லாக் வரவில்லையா ?


Sources
http://www.facebook.com/DarulAmanForHumanity
http://www.darulaman.net/

அஹ்லாக் இல்லாததால் இஸ்லாம் இல்லையா ? இஸ்லாம் இல்லாததால் அஹ்லாக் வரவில்லையா ?


"முஸ்லீம்கள் எழுச்சி அடையாமல் இருப்பதற்கு காரணம் அஹ்லாகின்மையே " எனும் கருத்து இன்று பலராலும் முன்வைக்கபடுகிறது. வழமை போலவே வரைவிலக்கணத்தில் இருந்து விளைவை பார்ப்பதை விட்டு விளைவில் இருந்து வரைவிலக்கணத்தை நோக்கும் தவறு இங்கும் பிரயோகிக்கப்படுகின்றது .

' டெஸ்ட் டியுப் பேபி 'எனும் கருத்தை இதற்கு உதாரணமாக எடுத்து ஆராயும்போது, ' டெஸ்ட் டியுப் பேபி ' மூலம் பிறந்த குழந்தைக்கு ஏதோ பிறந்து விட்டது என்பதற்காக சட்டம் சொல்வதிலும் , நியாயம் காட்டுவதிலும் உள்ள வேகமும் உற்சாகமும் அதன் உருவாக்கம் தொடர்பில் கண்டும் காணாதது போல இருப்பதில் எப்படி தவறுள்ளதோ அதே போல் தான் இந்த அஹ்லாக் விடயமும் ஆகும் .

'அஹ்லாக்' என்றால் நற்பண்பு என பொருள் கொள்ள முடியும் . அதனை வரைவிலக்கணப் படுத்தும் போது ஒரு சமுதாயம் ஒரு சிந்தனையை ஏற்று அச்சிந்தனையால் இணைக்கப்பட்டு அதனால் வழிநடாத்தப்படும் போது வெளிப்படுத்தப்படும் பண்புக்கூறுகள் 'அஹ்லாக் என குறிப்பிடலாம் . இது இன, மத ,சமுதாய ரீதியில் வேறுபட்டு இருப்பதோடு முரண்பாடுகளையும் கொண்டிருக்கும் . அந்த வகையில் இஸ்லாத்தின் அஹ்லாக் என்பது அதன் அகீதாவை ஏற்று அதன் வழிமுறைகளை
நடைமுறைப்படுத்தளின் மூலம் முஸ்லீம்களுக்கிடையில் நடத்தை ரீதியில் வெளிப்படும் பண்புக்கூறு ஆகும் . எனவே உண்மையான இஸ்லாமிய அஹ்லாகின் வெளிப்பாடு இஸ்லாம் பூரணமாக பிரயோகிக்கப்படும் நிலையிலேயே உருவாகும் . தவிர அஹ்லாக்குகளால் இஸ்லாம் முன்மாதிரிப் படுத்தப்படும் எனும் அளவுகோல் தவறானது .

எனவே இஸ்லாம் கூறும் அஹ்லாக் என்பது இன்னொரு மதத்திற்கோ , இனத்திற்கோ ,சமூகத்திற்கோ அநீதியாக ,குற்றமாக ,தவறாக இருக்க முடியும் . அந்தப்பார்வை அவர்களுக்கு முஸ்லீம்கள் அஹ்லாக் இல்லாதவர்கள் எனும் கருத்தையும் வலுப்படுத்திவிடும் . இப்போது நாம் அவர்களை கவர அவர்கள் எதிர்பார்க்கும்அஹ்லாகின் வரையறைக்குள் இஸ்லாத்தின் கட்டளைகளை மீறி செல்லவும் முற்படுவோம் . இது இன்று நடந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய தவறு .

உண்மை பேசுதல் ,வாய்மை , நேர்மை போன்ற சில பொதுவான பண்புக்கூறுகள் மட்டும் அஹ்லாக் என்ற அளவுகோலும் எம்மில் சிலரிடம் இருக்கின்றது . இந்த பண்புக்கூறுகள் இஸ்லாத்தை பின்பற்றாத பலரிடமும் இருக்கின்றது என்பதால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றது என்று கூற முடியுமா ? பின்வரும் கருத்தைப் பாருங்கள் .


"அரபுலகத்தில் நான் முஸ்லீம்களை கண்டேன் ஆனால் இஸ்லாத்தைக் காணவில்லை !ஆனால் மேற்குலகில் முஸ்லீம்களை காணவில்லை ஆனால் இஸ்லாத்தை கண்டேன் " என ஒரு அறிஞர் கருத்துரைத்துள்ளார் !!?? அதாவது அவர்களில் வெளிப்படும் சில பண்புக்கூறுகள் அது எந்த அடிப்படை வரைவிலக்கணத்தில் இருந்து வந்தது என்பதை கணிக்கத் தவறுகின்றது . விளைவு இஸ்லாம் நடைமுறையில் இல்லை என்ற ஒரே காரணம் முஸ்லீம் உம்மாவை தரக்குறைவாக்கும் மனோநிலைக்கு இட்டுச்சென்றுள்ளது .


உண்மையில் நடந்துள்ளது என்னவென்றால் முஸ்லீம் உம்மா ,மேலாதிக்கத்தில் இருக்கும் குப்ரியத்தின் பண்புக்கூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளது .எனவே அதிலிருந்து இஸ்லாத்தின் அஹ்லாக்கை வரையறுப்பதில் நியாயம் காண்கின்றது . அதற்காக சில/பல விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாராக உள்ளது.

மேற்கின் சிந்தனை, பெண்ணை ஒரு கவர்ச்சிப் பொருளாகவும் கலை அம்சம் மிகுந்த மகிழ்ச்சிப் பொருளாகவும் நோக்குகின்றது . ஆனால் இஸ்லாத்தின் கருதுகோள் பெண் என்பவள் இஸ்லாமிய சமூக கட்டமைப்பின் முதுகெலும்பு , இஸ்லாமிய குடும்ப அமைப்பின் உயிர் நாடி , எனவே அவள் தரக்குறைவான எல்லா பார்வைகளில் இருந்தும் பாதுகாக்கப் பட வேண்டும் எனவே அவள் தொடர்பாக சில இறுக்கமான கட்டுப்பாடுகளை இட்டு நோக்கும். இந்த அஹ்லாக் அவர்களின் பெண்கள் தொடபான அஹ்லாக்கோடு மோதும் நிலையில் பெண்ணுரிமை எனும் பெயரில் இஸ்லாத்தின் கருத்தை ஒரு இறுக்கமான அடிமைத்துவ பார்வையிலேயே நோக்கச் சொல்கிறது .

இறுதியாக, அஹ்லாக்கினால் இஸ்லாம் முன்மாதிரிப்படுத்தப் படுவது என்பது ஒரு பிழையான நோக்கு . அத்தோடு உண்மை, நேர்மை ,வாய்மை ...போன்ற சில பொதுப்பண்புகளை பின்பற்றுவதால் மட்டும் அது முன்மாதிரியாகியும் விடாது . அது உண்மையாக இருந்தால் அல்லாஹ்வின் தூதரை (ஸல் ) விட இந்த முன்மாதிரிகளில்சிறந்தவரை முஸ்லீம்களாகிய எம்மால் காண முடியாது .(இது மிகைப்படுத்திய கருத்து அல்ல அபு ஜஹலே ' ஏற்றுக்கொண்ட விடயம்).

எனவே இஸ்லாம் எதிர்பார்க்கும் அஹ்லாக் இஸ்லாம் சம்பூர்ணமாக அமுல் நடத்தப் படும் போதே உருவாகும் தவிர அஹ்லாக்குகளால் இஸ்லாமிய எழுச்சி உருவாகாது.

http://www.facebook.com/DarulAmanForHumanity
http://www.darulaman.net/

வரலாற்று ஒளியில் தாய்ப் சம்பவம்.

அல்லாஹவின் தூதரின் (ஸல்) மிக முக்கியமான அரசியல் நகர்வுகளில் ஒன்றுதான் தாயிப்
சம்பவமாகும். இந்த நிகழ்வு கூட முஸ்லீம் உம்மாவின் கருத்தறையில் வெறும் சோகத்துடன்
கூடிய வரலாற்று நிகழ்வாகவே பதியப்பட்டுள்ளது. இஸ்லாத்தை ஒரு நடைமுறை செயல் நிலமாக்க வேண்டி (நுஸ்ரா) உதவி தேடிய ஒரு சித்தாந்த மயமாக்களுக்கான பயணமே இந்த
தாய்ப் சம்பவமாகும்.

மக்காவில் அல்லாஹவின் தூதரும் (ஸல்) அவரை சார்ந்திருந்த மிகச் சிறுபான்மையான அந்த
பலவீனமான இலட்சியக் கூட்டமும் குப்ரியத்தின் மிகக் கொடூரமான வன்முறைத் தாக்குதல்
களுக்கு முகம் கொடுத்த தொடரில் தாய்பின் குப்ரியத் தரப்பின் ஏளனம் , நக்கல் , நையாண்டி
புறக்கணிப்பு , அவமதிப்பு , இறுதியான கல்லெறித் தாக்குதல் என்பன ஒப்பீட்டளவில் இரு
வேறு பட்ட நிலைகள் அல்ல.

குப்ரியத்தின் மேலாதிக்கம் சமூக வாழ்வியலில் எல்லாத் துறைகளிலும் மேலோங்கி நின்ற அந்தப் பொழுதுகளில் ஏதோ ஒரு மாற்றுத் தெரிவாக இஸ்லாத்தை அல்லாஹவின் தூதர்
(ஸல்) முன்வைத்து பேசவில்லை. ஒரு தலைகீழ் மாற்றம் பற்றிய உதவி தேடலே அவரின்
இலக்காக இருந்தது. அதன் பிரதி விளைவே தாயிப் சம்பவமாகும்.

அந்த குப்ரிய கூட்டம் சிலைகளின் மீதான கடவுள் நம்பிக்கையை கொண்டிருந்தாலும் யூத,
கிறிஸ்தவ , மத நிலைப்பாடுகளை புரிந்தவர்களாகவும் அவைகள் சார் சமூகங்களின்
கூட்டு வாழ்வையும் தமக்கு மத்தியில் அனுமதித்தவர்களாகவும் இருந்தார்கள் என்பது அப்பட்டமான உண்மை. இது ஏன் என்றால் அந்த மதங்கள் வாழ்வியலை தீர்மானிக்கும் , தரத்தில் இருந்து ஒதுங்கி நின்று தமக்கான ஒரு இனக்குழு வடிவத்தை கட்டமைப்பதோடு
தம்மை தக்க வைத்தன. பாவம் , தீமை , அநீதி, போன்ற நிகழ்வுகளில் இந்த மதம் சார்
மனிதர்களும் பங்காளிகளாக அந்தக் குட்டையில் ஊறிய மட்டைகளாகவே காணப் பட்டார்கள்.

இப்படி அகம்பாவம் , தான் தோன்றித்தனம், சுயநலம் , என்பன சிந்தனா வாதமாகி உலகை ஆட்டிய போதுதான் இஸ்லாம் தனது ஒட்டு மொத்த மாற்றம் வேண்டிய தீர்வோடு வந்தது.
அல்லாஹவின் தூதரின் (ஸல்) (நுஸ்ரா) உதவி தேடல் குப்ரிய சிந்தனா வாதத்தில் ஊறிய
சமூகத் தளமைகளை இலக்கு வைப்பதாகவே ஆரம்பம் தொட்டு அமைந்திருந்தது. அந்த தளமைகளின் மாற்றம் இஸ்லாம் தடையின்றி பிரயோகிக்க வசதியாக ஒரு செயல் நிலத்தையும்
ஒரு மனிதக் கூட்டத்தையும் அமைத்துத் தரும் என்ற ஒரு தெளிவான எதிர் பார்ப்பே. அந்த வகையில் தாயிப் சம்பவம் வரலாற்று தெளிவோடு சற்று ஆழமாக அலசப் பட வேண்டியது.

எனவே தாய்ப் நிகழ்வையும் அதன் மூலம் எமக்கு கிடைக்கும் படிப்பினைகள் தொடர்பாகவும்
இன்ஷா அல்லாஹ் மறுமுறை எழுதுகிறேன். (தொடரும்)

Apr 11, 2013

ஷாமில் இரத்த சரித்திரத்தில் இருந்து வரையப்படும் சுத்த சரித்திரம் .


'சஹாதத்தின்' வேட்கையில் பகைவனை எதிர்த்து
சிதறி வீழ்வதிலும் எமக்கு வாழ்வுள்ளது .
சந்தன சுகந்தமாய் இங்கு சூழ்ந்துள்ள கந்தக வாசங்கள்
சத்திய ஒளியில் சுவனத்தையல்லவா திசை காட்டுகின்றன !

எதிரியின் தடைகளை தகர்த்து பாரில் உண்மையான
ஏகனின் மார்க்கத்தை தொடுப்பதில் ஓரணி நிற்க வாரீர் .
பிரித்து மேய்வதால் 'தாகூத்திய' சில் வண்டுகளும்
சிறுத்தைகளாகி எம்மீது சீறியல்லவா பாய்கின்றன !

பதவியின் வெறியில் மக்களை மாக்களாக்கி எம்
வாழ்க்கையை வேட்டைக் காடாக்கிய வேதாளங்களுக்கு
எமது பிரிவினை நிலத்தில் நாமே முருங்கை மரம்
வைத்துக் கொடுத்து தேசியப் பசலை வேறு
போட்டோம் !

பிணம் திண்ணும் சாத்திரங்களை அவை தந்தபோது
எமது வரலாற்று வரிகள் அநீத காட்சிகளை காட்டி
இரத்த சரித்திரங்களை உதாரணப் படுத்தியது .
இந்த இறந்த காலம் இன்னும் உணரப்படவில்லையா !

எமது தேசம்' தாருல் இஸ்லாம் இன்ஷா அல்லாஹ் '
எமது தேடல் இஸ்லாத்தின் கீழ் வாழ்வு இன்ஷா அல்லாஹ் '.எமது பயணம் இறைவனை நோக்கி இன்ஷா அல்லாஹ் '.எமது முயற்சி இறைவனின் திருப்தி இன்ஷா அல்லாஹ் '

வஹியை' ம (மி)தித்து ஜனநாயக பெண்ணுரிமை பேசும் வீர மங்கை 'லம்யா கடோல்'(இஸ்லாமியஅறிஞர் !?

"முக்காடிடுவது காலாவதியான வழக்காகும் .ஜெர்மனியில் வாழும் முஸ்லீம் பெண்
என்ற வகையில் நான் என்னையே கேட்டுக்கொள்வது என்னவென்றால் ,குர் ஆனில் (அத்தியாயம் 33 வசனம் 59)இல் சொல்லப்பட்டிருப்பது போன்று நான் மேலதிக துண்டு ஒன்றினால் முக்காடிட்டு தலையை மூடிக்கொள்ள வேண்டுமா? முக்காடிடுவது ஆண்களின் இச்சைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு என்ற அதன் மூல நோக்கம் இன்றும் நிறைவேற்றப்படுகின்றதா ? என்பதே . அதற்கு எனது பதில் இல்லை என்பதாகும் . இன்றைய ஜெர்மனியில் அத்தகைய தலையை மறைத்தல் ,அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை” என்று கூறுகின்றார் ஜெர்மனியில் குடியேறியுள்ள சிரியன் வம்சாவளி இஸ்லாமிய பெண் அறிஞரான ? 'லம்யா கடோல் ' மேலும் கூறும்போது "அது கடவுள் எதிர்பார்த்ததற்கு மாறாக பெண்களுக்கு எதிரான பாகுபாட்டையே கொண்டு வந்துள்ளது . "

மேலும் தொடர்கிறார் " இன்று கடந்த கால
சமூக விதிகளை பின்பற்றாமல் , பெண்களுக்கெதிரான தொந்தரவுகளில் இருந்து
பாதுகாத்துக்கொள்ள நன்கு செயல்படும் (குப்ரிய)சட்ட முறைமை இருக்கின்றது .(ஜெர்மனி ) சட்டவாட்சியை அடிப்படையாக கொண்ட சுதந்திர நாடு ,பெண்களுக்கெதிரான தாக்குதல்களில் இருந்து அவர்களை பாதுகாக்கின்றது . ஒரு சிறிய துண்டுத்துணியின் மூலம் என்னை நான் மறைத்துக்கொள்ள முடியாது ! ஒரு சுதந்திரமான ஜனநாயக நாடு உரிமைகளை வழங்கி கடமைகளையும் சுமத்துகின்றது . அத்தகைய சூழ்நிலையை முக்காடுடனோ முக்காடின்றியோ நான் நேர்மையாக நடந்து கொள்ள முடியும் " எனக்கூறுகின்றார்.
.
இங்கு வஹியின் கட்டளை ஓன்று மிக
தத்ரூபமாக புறக்கணிக்கப் படுகின்றது !ஆனால் முஸ்லீம் உம்மத்தின் ஒரு தொகை
மனிதர்கள் நவீனம் காலத்தின் தேவை என்ற நிலைப்பாட்டை வைத்து இவரை சரி
காண்கின்றனர் ! இந்தப்போக்கில் சென்றால் நிறைய விடயங்களை இந்த வரையறைக்குள் கொண்டு வர முடியும் (உதாரணம் தலாக் ,இத்தா,அவுரத் ........)
ஜனநாயகம் இந்த முஸ்லீம் உம்மாவை
எங்கே இட்டுச்செல்கின்றது ? கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாததால் கெட்டு
'குப்றிய' குட்டிச்சுவரின் கீழ் சொகுசாக வாழ ஒரு வரைவிலக்கணம் வேறு ஒரு கேடா ? தஸ்லீமா நஸ்ரின் போல் இங்கு தவறில் இருந்து தவறு சரிகாணப்படவில்லை ; மாறாக (அத்தியாயம் 33 வசனம் 59 ) காலம், சூழ்நிலை ,(அது சரியா பிழையா என்பது ஆராயப்பட வேண்டிய இன்னொரு தலைப்பு ) ஜாஹிலிய சட்டத்தின் பாதுகாப்பு என்பன காரணம் காட்டப்பட்டு குறித்த அல்குர் ஆன் வசனம்( 'மன்ஸுஹ் ') மாற்றப்படுகின்றது !!! ஏனென்றால் இவர் இஸ்லாமிய அறிஞர் !?

அரேபிய வசந்தம் யாரால் ? யாருக்காக?

வேலியை மேயும் பயிர்களின்
விழலுக்கு நீர் இறைப்பில்
அரேபிய வசந்தத்தில் ஓர்
ஹோலிவூட் காவியம்!
பென்டகனின் சிறப்பான திரைக்கதை !
சகோதரர்களின் அசத்தலான நடிப்பு !
அதுதான் இன்றைய அரபுலகு !!!
தயாரிப்பு நெறியாள்கை மொசாட் & சி.ஐ .எ!!
இது யூதர் வழி நின்று தூதர் மொழி பேசும்
எம்மவரின் ஓர் நவீன வெளியீடு ?!
இதுதான் இஸ்லாமிய அரசியல் என்றால் ;
அல்லாஹ்வின் தூதருக்கு (ஸல் )
அபுஜஹல் அல்லவா அடைக்கலம்
கொடுத்திருப்பான் !!!!!
அபுலஹபின் மணைவி விறகு
சுமந்து வந்து அவருக்கு
விருந்தல்லவா சமைத்திருப்பாள் !!!!!
மக்காவில் இஸ்லாமிய தேசியம்
புரட்சிகரமாய் எழுந்திருக்கும் !!!!!
அகிலத்தின் அருட்கொடை
ஒரு மன்னராய் முடிசூட்டி
சிலவேளை மதீனாவை எதிர்த்திருப்பார் !!!!!
ஒரு குருந்த்தேசமாய்!!!!!
ரோமருக்கு கப்பம் கட்டி சமரசமாகி !!!!!
சிலுவையில் தொங்கும் தஸ்பீ மணி போல
இஸ்லாம் ஆகியிருக்கும் !!!!!

தாகூத்' ஒரு பார்வை .

"ஒவ்வொரு சமூகத்திலும் அல்லாஹ்வையே வணங்குங்கள் ;தாகூத்திற்கு அடிபணிவதை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ;என்று (எச்சரிக்குமாறு ) நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம் " (TMQ அத்தியாயம் 16 : வசனம் 36)


' தாகூத் ' என்பது இறைவனை எதிர்த்து சவால் விட்டு சதி செய்பவனை குறிக்கும் ! அல்லாஹ்வை தவிர்த்து வேறு எவரை வழிபடப்படுகிறதோ அவரைக் குறிக்கும் ! வழிபட்டு நடப்பவன் கட்டாயத்தின் காரணத்தினால் வழிபட்டாலும் சரியே ! அல்லது தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வழிபட்டாலும் சரியே !அது 'தாகூத் ' ஆகும் .அது மனிதனாக இருக்கலாம் ,அல்லது ஒரு சைத்தானாக இருக்கலாம் ,அல்லது சிலை ,அல்லது அல்லாஹ் அருளாத சிந்தனை, அல்லது அல்லாஹ் அருளாத வழிமுறை ,அல்லது ஏதேனும் ஒரு பொருளாக இருக்கலாம் .
(இப்னு ஜரீர் அத்தபரி ஜாமியுள் பயான் பீ தப்சீரில் குர் ஆன் பாகம் 3, பக்கம் 13)
தவறான இலக்குகளால் இறைவனின் விதிகளை மீறும் தவறின் மீதுதான் 'தாகூத் ' தோன்றுகிறான் !
ஒரு முஸ்லீம் தன் ஈமானியத்தை விலைபேசி அதனிடம் சரணடைவதை விட அவன் கொல்லப்படுவது சுகமானது .

இஸ்லாமிய இயக்கங்கள் மறுக்க முடியாத இன்னும் சில கோணங்களில் ......(இது காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு.)


Apr 10, 2013

ஹிஜாப் அணிவதை தடை செய்வோம்- இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் பாசிச பொதுபல சேனா!



இன மத ரீதியான கடும்போக்குபாசிச பாணியில் இலங்கையில்பெளத்த மேலாதிக்கத்தை நிறுவமுற்படும் பொதுபல சேனா இயக்கம்கடந்த 17ம் திகதி கண்டியில்இடம்பெற்ற தனது பேரணியில், தாம்முஸ்லிம் பெண்கள் ஜில்பாப்அணிவதை தடை செய்யும்பிரச்சாரத்தை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது. கடந்தசில காலமாக முஸ்லிம் பெண்கள்ஜில்பாப் (ஹபாயா) அணிவதைகொச்சைப்படுத்தி வரும்இவ்வமைப்பு, அதை அணியும்முஸ்லிம் பெண்களை பௌதீக ரீதியாக தாக்கும் செயல்களிலும்ஈடுபட்டு வருகிறது.இஸ்லாத்திற்கெதிராகவெறுப்பையும் விரோதத்தையும்தப்பான எண்ணத்தையும் ஏற்படுத்தும்இவர்களின் பல நடவடிக்கைபட்டியலில் தற்போது இந்தவிவகாரம் இணைக்கப்பட்டுள்ளது..
இந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் சில நகரங்களில் முஸ்லிம் பெண்களை வீதிகளில் தடுத்து நிறுத்தி அவர்கள் அணிந்துள்ள ஜில்பாபை கழட்டுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்கள்.திக்வள்ள நகரில் இஸ்லாமிய உடை அணிந்த மூன்று முஸ்லிம் பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அண்மைக்காலமாக பொதுபல சேனா சிங்கள பௌத்தர்களுக்கு முஸ்லிம்களின் வியாபாரங்களை புறக்கணிப்பு செய்யும் படியும் இலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதல் வழங்கும் முறையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் பாரியளவில் பிரசாரம் மேற்கொண்டது. இந்த அமைப்பு இலங்கையின் சிங்கள இனவாத கொள்கை கொண்ட மகிந்த ராஜபக்சாவின் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவைக் கொண்டிருப்பதால், முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை எவ்விதக் கட்டுபாடுமில்லாமல் இவர்களால் மேற்கொள்ள முடிகிறது.
இவர்கள் இதுவரை காலமும்மேற்கொண்டு வரும்முஸ்லிம்களுக்கு எதிரானநடவடிக்கைகளை கண்டனம்செய்யவோ தடுத்து நிறுத்தவோஇலங்கை அரசு முயலவில்லை.மாறாக மார்ச் 9ம் திகதி பொதுபலசேனாவின் பெளத்த தலைமைத்துவபாசறையின் தலைமையகத்தைதிறந்து வைப்பதற்கு பிரதமஅதிதியாக பாதுகாப்புச் செயலாளர்கோதபாய ராஜபக்ச கலந்துகொண்டு தனது ஆசிர்வாதத்தைதெரிவித்துள்ளார். அங்கே உரையாற்றும்போது " காலத்தின்தேவை” கருதியே தான் இந்தநிகழ்வில் கலந்து கொள்வதாகவும்,பொதுபல சேனாவின் பிக்குமார்கள்நாட்டின் “தேசிய முக்கியத்துவம்”மிக்க செயற்பாடொன்றில் ஈடுபட்டுவருவதாகவும், அது குறித்துஎவரும் பீதியடையவோ, சந்தேகம்கொள்ளவோ தேவையில்லைஎன்றும் குறிப்பிடிருந்தார்.
முஸ்லிம் பெண்களைகொச்சைப்படுத்தும், முஸ்லிம்சமூகத்தை ஓரம்கட்டும் பொதுபலசேனாவின் இந்த " தேசியமுக்கியத்துவம் வாய்ந்த பணிக்குஇலங்கை அரசு ஆதரவுநல்குவதனூடாக ராஜபக்ச அரசு,பொதுபல சேனாவின் பாசிச இனவாத கொள்கையை தனதுகொள்கையாக்கியுள்ளது. இலங்கை அரசு பர்மா போன்ற சர்வாதிகார தேசங்களைப் போல் இனவாதத்தை தூண்டி சிறுபான்மையை ஒடுக்குவதன் மூலம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயல்கிறது. வேறுபாடு, பிரிவு மற்றும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் தேசிய வாத சிந்தனையிலிருந்து பிறக்கும் இனவாத அரசியல் இன்று இலங்கை முஸ்லிம் பெண்களை பலிக்கடாவாக்கியுள்ளது. நீதியற்ற இந்த சாக்கடை அரசியலுக்கு மாற்றமாக இஸ்லாமிய கிலாபா அரசு தனது சிறுபான்மை குடிமக்களை இன, மத வேறுபாடின்றி அவர்களின் நம்பிக்கை, கண்ணியம், உயிர், உடமை அனைத்தையும் பாதுகாக்கும் அரணாக செயற்படும்.

ஹிஸ்ப உத் தஹ்ரிரின் பெண்கள் பிரிவு இலங்கையின் பொதுபல சேனாவிற்கும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கும் பின்வரும் அறிக்கையை விடுக்க விரும்புகிறது.
இலங்கையில் முஸ்லிம் பெண்களுக்கும் இஸ்லாமிய கொள்கைகளுக்கும் எதிரான உங்கள் நடவடிக்கைகள் உலக அரங்கில் கவனிக்கப்படாது போய் விடும் என்று நீங்கள் எண்ண வேண்டாம்! நாம் முஸ்லிம் பெண்களுக்கெதிரான இந்த அநீதி குறித்து பரந்த அளவில் விழிப்புணர்ச்சியை சர்வதேச ரீதியாகவும் ஊடகங்கள் மூலமாகவும் ஏற்படுத்தி உலகில் நீதியின் பால் சாரும் அணைத்து மக்களையும் உங்களுக்கு எதிராக திரட்டி உலகில் கொடுங்கோலர்களின் பட்டியலில் உங்களையும் சேர்க்கச்செய்வோம்.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்கள் 1.5 பில்லியன் தொகை பலம் மிக்க உம்மாஹ்வின் ஒரு அங்கத்தவர் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். இந்த பலம்மிக்க உம்மாஹ் உங்கள் இனவாத பாசிச நடவடிக்கைகளை பார்த்துகொண்டு மௌனமாக இருக்கும் என்று என்ன வேண்டாம்!. உலகம் பூராகவும் உள்ள முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் கிலாபத் வெகுவிரைவில் வருவது நிச்சயம் என்பதை பதிவுசெய்து கொள்ளுங்கள்! இன்ஷா அல்லாஹ்! யார் யாரெல்லாம் முஸ்லிம்களைத் துன்புறுத்தி அநியாயம் செய்திருக்கிறார்களோ அவர்களுக்கெதிராக மிகக் கடுமையான நடவடிக்கையை அந்த கிலாஃபத் எடுக்கும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது.

இலங்கை முஸ்லிம் சகோதரிகளே!
இந்த இனவாத மிரட்டல்களுக்கும்சூழ்ச்சிகலுக்கும் அஞ்சி உங்கள்தீனையும் அல்லாஹ்வுக்கு அடிபணிவதிலும் சமரசம்செய்துவிடாதீர்கள். உலகங்களைபடைத்த வல்ல நாயன்அல்லாஹவின் துணையும் முழுஉலக முஸ்லிம் உம்மத்தின் ஆதரவும்உங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் ஈமானிய பலத்தால்,அல்லாஹ் உங்களுக்குகட்டளையிட்ட இஸ்லாமிய உடைநெறியை உறுதியாகபற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.கிலாபா வெகு தொலைவிலில்லை .அது உங்களுக்கு நிச்சயம் புகலிடம்அளிக்கும். எனவே உங்களது உடைகுறித்து குறித்து கேள்விஎழுப்புவர்களுக்கு இப்ராஹிம்(அலை) அவர்கள் சிலைவணங்குபவர்களுக்கு எவ்வாறுபதிலளித்தர்களோ அவ்வாறுபதிலளியுங்கள்.

وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا ۚ فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ
உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை - அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்)  (md; Mk;: 81)


Dr. நஸ்ரின் நவாஸ்
த்திய ஊடகத்துறை அலுவலக இயக்குநர்
ஹிஸ்புத் தஹ்ரீர்

உங்கள் கருத்தை இணைக்க

சிங்கத்தின் வாலாய் இருப்பதை விட கட்டெறும்பின் தலையாய் இருப்பதே மேல்!!


சிங்கத்தின் வாலாய் இருப்பதை விட கட்டெறும்பின் தலையாய் இருப்பதே மேல்!!


இப்போது இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !

ஜனநாயக விலாசத்தில் முதலாளித்துவ இஸ்லாம் !
மூக்கை நுழைத்து நவ காலனித்துவத்திட்கு
'வெல் கம் 'சொன்னபோதே !
இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !

சிலுவை நிழலில் 'பெப்சி ' பருகி
'ஷரீஆ ' வழியில் 'டிபென்ஸ் லைன் 'போட்டு
பரம்பரை முடி காக்க 'Salaf' பெயர் சொன்னபோதே !
இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !

சண்டாளன் யூதனிடம் சமரசம் பேசி
'சரண்டர் ' பொலிசியில் வாழச்சொன்னபோதே !
இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !

பாலஸ்தீன் முதல் பர்மா வரை
சிரியா முதல் சீனா வரை
கொலைக்களம் தொடர்ந்த போதும் !
காஸ்மீரின் கண்ணீரில் இந்துத்துவம்
பெருமிதம் கொண்ட போதும்.....

வளம் பலம் இருந்தும் என் உம்மாவே !
இஸ்லாத்தில் தீர்வை தேடாமல்
யூ .என் .இடம் சொல்யூசன் கேட்கும்
உன் தலைவர்கள் இருக்கும் வரை
இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !

பயணங்கள் முடிவதில்லை !!


பயணங்கள் முடிவதில்லை !!

அவசியமும் அவசரமும் வேகத்தை அதிகரிக்க
ஆரம்பமானது ஓட்டம் ! சில கோஷங்களாலும் வசனங்களாலும்
கண்கள் கட்டப்பட அசையாத நம்பிக்கையில்
ஒரு பந்தயக்குதிரை போல !

கொடுத்த விலைகள் அதிகம்தான்
இன்னும் கொடுப்பேன் என் இறைவனுக்காக .
இலக்கை தெளிவாய் சொன்னார்கள் .
பாதையினை தான் அடிக்கடி மாற்றினார்கள்
நேற்று பிழை என்றது இன்று சரியாகும் !
குப்ரிய கொல்லைப்புரங்களிலும்
'ஹிக்மத் ' மேச்சல்கள் !!!

பன்றிக்கு ஒட்டகத் தோல் போர்த்தி
குர்பான் கொடுத்தால் ஹலாலாம் !!!
ரகீப் ,அதீதே குழம்பி போய் விடுவார்கள்
நான் என்ன செய்ய ?! இந்த புதிய
இஜிதிஹாத் எனக்கும் புரியவில்லை !!
செக்கில் இருந்தாலும் சிலையில் இருந்தாலும்
நக்கித்தான் ஆகவேண்டுமாம் !!??

ஆர்வம் மட்டும்தான்
இலக்கை நோக்கி பாதை தெளிவற்று
'குப்ரை ' குளிப்பாட்டி
சத்திய ஆடை கொடுத்து !!
அந்த சாக்கடைக்கு சந்தனம் பூசி
தொடரும் எம் இலக்கு நோக்கிய
பயணங்கள் தான் முடிவதில்லை !!

உஸ் ! இது நவீன இஸ்லாமிய எழுச்சியின் காலம்!

உஸ் ! இது நவீன இஸ்லாமிய எழுச்சியின் காலம்!

நெளிவு சுளிவு நேர்கோடாம்!!நேற்றைய
விடுதலை பயணங்கள் இன்று விழல் நீர் !
கொடுத்த விலைகள் ஆறிய கஞ்சி !
கண்றாவி பத்துவாக்களில் குப்ர் தொப்பி போட்டு
கத்னா செய்து ஜனநாயக விலாசத்தில்
இஸ்லாமாகிப்போக !! இறைவன் தந்த 'சரிஆ'காலத்தால் 'எக்ஸ் பயாட்' ஆகி ! இனி என்ன
ஓர் ஏட்டுச்சுரக்காய் வரலாறா ??!!
நேற்று கலங்கரை விளக்காய் விலாசம் தந்தவர்கள் தேசிய குட்டிச் சுவர்களுக்குள் 'தீமோகிரஸி' சுமக்கும்
கழுதையாகிப் போனதால்
சத்தியத்தை தம் ஜனநாயக கால்களால்
புரட்டி எடுப்பது புதுமை அல்லதான்.

நாங்கள் யார்!?

நாங்கள் யார்!?

இன்று உலகை ஆள்வது முதலாளித்துவம் அது சிலரின் நலனில் பலரின் வாழ்கையினை பனையம் வைத்து பயணம் செய்யும் ஒரு சுயநல அரசியல். அது இன்று தனக்கான மாற்று அரசியல் இல்லாதநிலையில் தனிப்பெரும் சக்தியாக தன்னை நிலைநாட்டி வாழ்ந்து கொண்டு இருக்கின்றது .

இயல்பிலேயே சுயநலப்பார்வை உள்ள மனித குலமும் அதன் தாக்கத்தினால் அது அழைக்கும் இலக்கு நோக்கியே பயணிக்கின்றது. உலகின் ஒவ்வொரு பொருளிலும் விடையத்திலும் அதன் தாக்கத்தை நாம் காண முடியும் . குடும்ப உறவுகள் ,சமூகஉறவுகள் , சர்வதேசஉறவுகள்,கல்வி , தொழில் ,நட்பு ,இப்படிஎல்லா விடயங்களும் அதன் கட்டுப்பாட்டில்தான் என்றால் அது மிகையான கருத்து அல்ல .

ஆனால் இந்த முதலாளித்துவம் காலனி ஆதிக்கமாய் பல நூற்றாண்டுகள் உலகை ஆண்டு தமது மூல தேசம் நோக்கி ஆளும் தேச வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டி சென்ற போது அதற்கு எதிராக சுதந்திரப்போராட்டத்தை மேற்கொண்ட மனித குலம் இன்று மௌனமாகவோ அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே தான் தமது எதிர் கருத்தை, போராட்டத்தை முன்வைக்கின்றது.காரணம் முதலாளித்துவ சித்தாந்தத்தை தனது வாழ்க்கை வழி முறையாக ஏற்றுக்கொண்டுவிட்டு அதனால் வரும் விளைவு களுக்கு எதிராக மட்டுமே தமது எதிர்ப்பை காட்டுகின்றது ! அதுவும் அந்த சித்தாந்தத்தின் இன்னொரு தீர்வின் ஊடாகவே அந்த எதிர்ப்பும் காட்டப்படுகின்றது .

தமது காலனி ஆதிக்கத்தை விட்டு முதலாளித்துவம் மற்றைய நாடுகளுக்கு உண்மையில் சுதந்திரம் கொடுத்தது என்பது ஒரு வேடிக்கையான கருத்து !! இங்கு நடந்தது என்னவென்றல் ஒரு பறந்த நவ காலனித்துவ சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டத
தான் !! இங்கு அவர்கள் வைத்திருந்த நேரடி மனித அடிமைத்துவம் உரிமை சீட்டு எழுதப்பட்ட அடிமைத்துவமாக மாற்றப்பட்டது மட்டும்தான்!!! உண்மையில் மனிதர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுளோம் ! ஏமாற்றப்படுகின்றோம்!! இனியும் மிகச்சரியாக சிந்திக்காதவரை ஏமாற்றப்படுவோம் !!

குட்டக் குட்ட குனிபவன் மடையன் என்பார்கள் குனியக் குனிய குட்டுபவன் மடையன் என்பார்கள் ; இங்கு இப்போது யாரும் எம்மை குட்டுவதில்லை ; மாறாக நாமே எமது தலைக்கு குட்டிக்கொள்கின்றோம்.அதன் கட்டளைகளை முதலாளித்துவம் இடுகின்றது ! அவ்வளவுதான் .